|
Post by kgopalan90 on Nov 15, 2018 17:28:25 GMT 5.5
16-11-2018. கோபாஷ்டமி----கோஷ்டாஷ்டமி. ஸ்ம்ருதி கெளஸ்துபம்:---கார்திகே யாஷ்டமி சுக்லா க்ஞேயா கோபாஷ்டமீ புதை: தத்ர குர்யாத் கவாம் பூஜாம் கோ க்ராஸம் கோ ப்ரதக்ஷிணம்..
ஐப்பசி மாதம் சுக்ல பக்ஷ அஷ்டமி கோபாஷ்டமி எனப்படும். இன்று கன்று குட்டியுடன் கூடிய பசு மாட்டை பூஜை செய்து சாப்பிட அகத்திக்கீரை புல்
முதலியன கொடுத்து ஜலம் குடிக்க வைத்து பக்தியுடன் பசுவை 16 முறை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்கரிக்க வேண்டும். இதனால் தெய்வ அருள் கிட்டும் பாபங்கள் நீங்கும் என்கிறது மாத்ஸ்ய புராணம்.
|
|
|
Post by kgopalan90 on Nov 8, 2018 18:58:59 GMT 5.5
*திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..? பிரம்மிப்பூட்டும் இரகசியம்..!!*
பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும்.
கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏற்படலாம்.
அந்த நேரங்களில் பெண்ணே *ஒருபசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விஷம் இராதோ,* அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும்.
வாழைபழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அது போல் கணவனை சார்ந்து *வம்சவிருத்தியை நீ தரவேணும்* என குறிக்க பழமும் தருவர்.
மணமகனுக்கு ஏன் தருகிறார்கள் என்றால்,
ஏ ! மணமகனே *பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ* அதுபோல் இந்த பெண்ணிடமும் *அறிவும் ஆற்றலும்* உள்ளது பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யை எடுப்பாயாக பாலை கெட வைத்துவிடாதே என குறிக்க பாலும்.🥛
வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுவரோ அது போல் *இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம்* அதை பட்டுபோக விடாமல் அதை பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் *சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள்.
திருமணத்தில் பால் பழம் கொடுப்பது சும்மா ஒரு வேடிக்கையான செயல் அல்ல.
|
|
|
Post by kgopalan90 on Nov 7, 2018 1:10:47 GMT 5.5
லக்ஷ்மி குபேர பூஜை.
லக்ஷ்மி குபேர பூஜை செய்ய முதலில் 16 மாத்ரு கண பூஜையும், பிறகு நவ தான்யங்களில் நவ கிரஹங்களை ஆவாஹனம் செய்து, தர்பையினால் கூர்ச்சம் செய்து அதில் எட்டு லோக பாலகர்களை ஆவாஹனம் செய்து பிறகு லக்ஷ்மி தேவியை பூஜிக்க வேண்டும். 16 நெய் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.
விக்னேஸ்வர பூஜை, ஸங்கல்பம், கலச பூஜை, 16 மாத்ரு கண பூஜை= ஓம் கெளர்யை நம: பத்மாயை நம: ஶஸ்யை நம: மேதாயை நம: ஸாவித்ரியை நம: விஜயாயை நம: ஜயாயை நம: தேவ ஸேனாயை நம:
ஸ்வதாயை நம: ஸ்வாஹாயை நம: மாத்ருப்யோ நம:லோக மாத்ருப்யோ நம: த்ருத்யை நம: புஷ்ட்யை நம: துஷ்டியை நம: ஆத்ம தேவ்யை நம: த்யாயாமி, ஆவாஹயாமி, அர்க்கியம்,
பாத்யம், ஆசமணீயம் ஸமர்பயாமி, ஸ்நபயாமி, ஸ்நானாந்திரம் ஆசமணியம் சமர்ப்பயாமி. வஸ்த்ரம், கந்தம்,குங்குமம், புஷ்ப தூப தீபாதி ஸகல உபசாரார்த்தே அக்ஷதான் ஸமர்ப்பயாமி.
கதலி பழம் நிவேதயாமி. வாழை பழம் நிவேதனம் செய்யவும்.
நவகிரஹ பூஜை:- நவகிரஹ தான்யங்கள் மீது நவகிரகங்களை புஷ்பம் அக்ஷதை எடுத்து கொண்டு அஸ்மின் மண்டலே அதிதேவதா ப்ரதி அதி தேவதா ஸஹிதம் ஆதித்ய கிரஹம் த்யாயாமி ஆவாஹயாமி
என்று வரிசையாக ஆவாஹனம் செய்து விட்டு ஆதித்யாதி நவகிரஹ தேவதாப்யோ நம: ஆஸனம், பாத்யம், ஆசமனீயம், வஸ்த்ர யக்யோப வீத உத்தரீயார்த்தம் , ஆபரணார்த்தம் அக்ஷதான் ஸமர்பயாமி.கந்தம், குங்குமம், அக்ஷதை ஸமர்பயாமி.
புஷ்பானி பூஜயாமி வரிசையாக அர்ச்சனை செய்யவும். தூபம், தீபம், நைவேத்யம், தாம்பூலம், கற்பூரம், ப்ரதக்ஷிண நமஸ்காரம்.
லோக பால பூஜை கூர்ச்சத்தில் செய்யவும். மஹா லக்ஷ்மி பூஜாங்க பூதாம் ப்ருஹ்ம விஷ்ணு, த்ரியம்பக க்ஷேத்திர பால பூஜாம் கரிஷ்யே. என்று ஸங்கல்பித்து கொள்ளவும்.
அஸ்மின் கூர்ச்சே ப்ருஹ்மன் ஸரஸ்வத்யா ஸஹ இஹ ஆகச்ச ஆகச்ச ஸ ப்ரஸ்வதி ஸஹித ப்ருஹ்மானம் ஆவாஹயாமி ஆசனம் ஸமர்ப்பயாமி.
லக்ஷ்மி விஷ்ணுப்யோ நம: ஆவாஹயாமி, த்யாயாமி, ஆஸனம் சமர்பயாமி.
துர்கா த்ரயம்பிகாப்யாம் நம: த்யாயாமி, ஆவாஹயாமி, ஆஸனம் ஸமர்பயாமி.
க்ஷேத்திர பால பூமிப்யாம் நம: த்யாயாமி, ஆவாஹயாமி, ஆஸனம் ஸமர்பயாமி என்று அக்ஷதை சேர்த்து, அர்க்கியம், பாத்யம், ஆசமனீயம்,ஸ்நபயாமி ,ஸ்நானாந்திரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி உத்திரணி தீர்த்தம் காண்பித்து பேலாவில் சேர்க்கவும்.
ப்ருஹ்மாதீனாம் வஸ்த்ர உத்தரீய கந்த புஷ்ப தூப தீபாதி ஸமஸ்தோப சாரான் ஸமர்ப்பயாமி.அக்ஷதை சேர்க்கவும்.ப்ருஹ்மாதிப்யோ நம: கதலி பலம் நிவேதயாமி. ப்ருஹ்மாதிப்யோ கற்பூர நீராஞ்சனம் ஸமர்ப்பயாமி.
கையை கூப்பிகொண்டு விஸ்வக்ஸேனம் நமஸ்க்ருத்ய பிதாமஹம் விஷ்ணும் ருத்ரம், ஶ்ரியம், துர்காம், வந்தே பக்த்யா ஸரஸ்வதீம், க்ஷேத்ராதிபம் நமஸ்க்ருத்ய திவா நாதம் நிஶாகரம் தரணீ கர்ப ஸம்பூதம் ஶஶி புத்ரம் ப்ருஹஸ்பதிம்.
தைத்யாசார்யம் நமஸ்க்ருத்ய ஸூர்ய புத்ரம் மஹா க்ரஹம் ராஹு கேது நமஸ்க்ருத்ய யக்யாராம்பே விஶேஷத:
ஶக்ராத்யா தேவதாஸ்ஸர்வா: முனீஸ்ச ப்ரணமாம்யஹம் கர்கம் முனீம் நமஸ்க்ருத்ய நாரதம் முனி ஸத்தமம். வஸிஷ்டம் முனிஶார்தூலம் விஸ்வாமிஸர்த்ரம் ப்ருகோஸ்ஸுதம் வ்யாஸம் முனீம் நமஸ்க்ருத்ய ஆசார்யாம்ஸ்ச தபோதனாத்.
ஸர்வான் தான் ப்ரணமாம்யேவம் யக்ஞ ரக்ஷா கரான் ஸதா ஶங்க ஶக்ர கதா ஶாரங்க பத்ம பாணீர் ஜனார்தன: ஸர்வாஸு திக்ஷுரக்ஷேன் மாம் யாவத் பூஜா வஸானகம்.
பிறகு லக்ஷ்மி பூஜை 16 உபசார பூஜை; ஈசானாதி பூஜை
ஈசானாய நம: ஶஶினே நம: மருத்ப்யோ நம: ஸூர்யாய நம: விஶ்வ கர்மணே நம: குரவே நம: அதர்வாங்கிரோப்யாம் நம: ப்ரஜாபதயே நம:
விஶ்வேப்யோ தேவேப்யோ நம: அமர ராஜாய நம: அஶ்வினிப்யாம் நம: மித்ரா வருணாப்யாம் நம: விஷ்ணவே நம: ஈஶானாதிப்யோ நம: ஷோட ஶோபசார பூஜார்த்தே புஷ்பானி ஸமர்ப்பயாமி .
வடக்கு பக்கத்தில் குபேரனுக்கு 16 உபசார பூஜை .
லக்ஷ்மி தேவிக்கு நமஸ்காரம். ப்ரார்த்தனை.
விசுவ ரூபஸ்ய பார்யாஸி பத்மே பத்மாலயே சுபே மஹாலக்ஷ்மி நமஸ்துப்யம் ஸுக ராத்ரிம் குருஷ்வ மே. விஷ்ணோர் வக்ஷஸி பத்மே சகடகே சக்ரே ததாம்பரே லக்ஷ்மி நித்யா ததாஸி த்வம் மயி நித்யா ததாபவ நமஸ்தே ஸர்வ தேவானாம் வரதாஸி ஹரி ப்ரியே.யாக திஸ்த்வத் ப்ரபன்னானாம் ஸா மே பூயாத் த்வத் அர்ச்சனாத்.
இந்திரனை ப்ரார்திக்க ஸ்லோகம். விசித்ரை ராவதஸ்தாய பாஸ்வத் குலிஶ பாணயே பெளலோம் யாலி தாங்காய ஸஹஸ்ராக்ஷாய தே நம:
குபேரனை ப்ரார்திக்க ஸ்லோகம்.
தனதாய நமஸ்துப்யம் நிதி பத்மாதி பய ச பவந்து த்வத் ப்ரஸாதான் மே தன தான்யாதி ஸம்பத;
ஹேமாத்ரி புத்தகம் இம்மாதிரி பூஜை செய்பவர் வீட்டிலும் செய்பவரிடத்திலும் லக்ஷ்மி தேவியின் பரிபூர்ண கிருபை கிடைக்கும் எங்கிறது.
|
|
|
Post by kgopalan90 on Nov 5, 2018 13:11:04 GMT 5.5
ஷஷ்டி விரதம்
(08.11.18 - 13.11.18)
ஆரோக்கியம் வளர்க்கும் ஆறுநாள் !
வருடத்தில் 365 நாளும் நமது இரைப்பை இயங்கிக்கொண்டே இருக்கிறது. இதற்கு சற்று ஓய்வு கொடுத்தால் உடலின் இயக்கங்கள் சீராகும்.
நமது உடலை இயக்கும் 'உயிர்சக்தி' மூன்று சக்திகளாக பிரிந்து வேலை செய்து வருகிறது. உடல் ஒரு நேரத்தில் ஒரு வேலை தான் செய்யும், அதை துல்லியமாக செய்து முடிக்கும்.
இது தான் அந்த மூன்று சக்தி
1 - செரிமான சக்தி
2 - இயக்க சக்தி
3 - நோய் எதிர்ப்பு சக்தி
இதில் ஒவ்வொன்றாக எப்படி வேலை செய்கிறது என்று சிறிய உதாரணத்துடன் பார்க்கலாம்.
காய்ச்சலின் போது உங்களுக்கு பசிக்குமா ? பசிக்காது, உடலின் செரிமான சக்தி வேலை செய்யாது. காய்ச்சலின் போது உங்களால் வேலை செய்ய முடியுமா ? முடியாது, உடல் இயக்க சக்தியை குறைத்துக்கொள்ளும். எனவே இந்த இரண்டு சக்தியும், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றிவிடும்.
மதியம் அதிக உணவு எடுத்துக்கொண்டீர்கள், உடனடியாக வேலை செய்ய முடியுமா ? முடியாதல்லவா, உடல் இயக்கம் சக்தியை குறைத்துக்கொள்ளும், நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்யாது. இப்பொழுது செரிமானம் மட்டுமே வேலை செய்யும்.
உண்ணா நோன்பு இருக்கிறீர்கள். செரிமான சக்திக்கு வேலை இருக்கிறதா ? இல்லை. இயக்க சக்தியையும் குறைத்துக்கொள்வோம். இப்பொழுது செரிமானம் மற்றும் இயக்க சக்திகளுக்கு வேலை இல்லாததால், இதன் சக்திகள், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி நமது உடலில் உச்சி முதல் பாதம் வரை, எங்கு ? என்ன ? பிரச்சனை இருந்தாலும் குணப்படுத்திவிடும்.
இப்படி மூன்று சக்திகளும் அந்தந்த நேரத்தில், மற்ற இரண்டு சக்திகளிடம் இருந்து சக்தி பெற்று, மாறி மாறி வேலை செய்து கொண்டே இருக்கும்.
உடல் முதல் முக்கியத்துவம் செரிமானத்திற்கு கொடுப்பதால் ஒவ்வொறு முறை நாம் உணவு எடுக்கும் போது, உடல் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை விட்டுவிட்டு, சக்தி செரிமானத்திற்கு வந்துவிடும். ஏனென்றால் வெளியில் இருந்து ஒரு பொருள் வருகிறது, அது என்ன ஏது என உடல் பார்த்து சீரமைக்க வேண்டும்.
உண்ணா நோன்பு இருக்கும் போது செரிமான சக்திக்கு அதிக வேலை இருக்காது, எனவே இதன் சக்தியும், ஓய்வில் இருத்தால் இயக்க சக்தியும் நோய் எதிர்ப்பு சக்திகளாக உருமாறும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்படுகிறது.
உண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை.
இதற்காக நமது முன்னோர்கள் வருடத்தில் ஆறு நாள் தேர்வு செய்து வைத்துள்ளார்கள். அந்த ஆறு நாளும் ஆறுமுகனை மையப்படுத்தி அழகான ஒரு திருவிழாவாக வடிவமைத்து உள்ளார்கள்.
ஆம், அது தான் தீபாவளி முடிந்து வரும் மறைமதியை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படும் 'கந்த சஷ்டி விழா'. கந்த சஷ்டி விழா என்றாலே நமது நினைவிற்கு வருவது 'சஷ்டி விரதம்' தான்.
உண்ணா நோன்பு மற்றும் கந்தர் விழாவின் ஆறுநாள்.
'செரிமான சக்தி' தான் 'முருகனின் தாய்'. 'நோய் எதிர்ப்பு சக்தி' தான் 'முருகன்'. 'நோய்' தான் 'அரக்கன்'. வெளியில் நடக்கும் அதே போர் உங்கள் உடலிலும் நடக்கிறது.
இந்த விழாவில் எப்படி 'முருகப்பெருமான்' தனது தாயிடம் இருக்கு சக்தி பெற்று அசூரனை வதம் செய்கிறாறோ, அதேப்போல் நமது உடலில் உள்ள 'நோய் எதிர்ப்பு சக்தி' தனது தாயான செரிமான சக்தியிடம் இருந்து சக்தி பெற்று நோய்களை வதம் செய்கிறது.
வெளியில் முருகனுக்கும்,அரக்கனுக்கும் நடக்கும் அதே போர் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கும், நோய்க்கும் நடக்கிறது. இறுதியில் வெல்வது யார் என்று உலகிற்கே தெரியும்.
எப்படி ஒவ்வொரு நாளும் 'முருகன்' சக்தி பெற்று ஆறாவது நாள் அசூரனை வதம் செய்கிராறோ, அதேப்போல் தான் ஒவ்வொரு நாளும் நமது 'நோய் எதிர்ப்பு சக்தி' வலிமையடைந்து 'டெங்கு போன்ற எந்த வைரஸ் கிருமிகள், நோய்கள்' இருந்தாலும் வதம் செய்துவிடும்.
உடலில் நடக்கும் இந்த அறிவியல் உண்மையை நமக்கு சூட்சமமாக சொல்லவோ என்னவோ, ஆறு நாட்களையும் 'உண்ணா நோன்புடன்' அழகான விழாவாக வடிவமைத்துள்ளார்கள்.
சரி, எப்படி உண்ணா நோன்பு இருப்பது ?
-----------------------------------------------------
1 - உங்கள் ஊர் வழக்கப்படி இருக்கலாம்.
2 - சமய முறைப்படி இருக்கலாம்.
3 - ஆறு நாளும் தண்ணீர் மட்டும் குடித்து இருக்கலாம்.
4 - ஆறு நாளும் பாலும், பழமும் மட்டும் உண்டு இருக்கலாம்.
5 - ஆறு நாளும் பழங்களை மட்டும் உண்டு இருக்கலாம்.
இதில் உங்களுக்கு பழக்கம் இருக்கும் முறை எதுவோ, அந்த முறைப்படி இருக்கலாம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நான் பரிந்துரைக்கும் எளிய முறை என்னவென்றால்.
பசித்தால் தண்ணீர் மட்டும் குடித்து வாருங்கள், பசி அடங்கிவிடும். திரும்ப பசித்தால் திரும்ப தண்ணீர் குடியுங்கள், பசி அடங்கிவிடும். திரும்ப பசித்தால் திருப்ப தண்ணீர் குடியுங்கள், பசி அடங்கிவிடும்.
இது தொடரட்டும் ஒரு கட்டத்தில் பசிக்கும் போது தண்ணீரை கண்டாலே உங்களுக்கு பிடிக்காது, குடிக்கவும் முடியாது, எதாவது சாப்பிட தோன்றும் அப்பொழுது உங்களுக்கு பிடித்த பழங்களை ரசித்து ருசித்து உமிழ்நீர் கலந்து சாப்பிடுங்கள்.
திரும்ப பசிக்கும் போது பழங்களை அதேப்போல் ரசித்து ருசித்து சாப்பிடலாம். வேளை கணக்கு எல்லாம் கிடையாது. பசிக்கும் போது சாப்பிடலாம். இதேப்போல் ஆறு நாட்களும் இறைவன் சமைத்த உணவை மட்டும் சாப்பிட்டு வரலாம்.
இறைவன் சூரிய அடுப்பை கொண்டு சமைத்த உணவான பழங்களை நாம் அதிகம் சாப்பிட இந்த ஆறு நாள் நமக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைகிறது.
வேலைக்கு செல்வோருக்கு, வேறு உணவு தேவைப்பட்டால், தேங்காய், வேர்கடலை சாப்பிடலாம், இதனால் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும்.
எதையெல்லாம் நாம் சமைக்காமல் அப்படியே சாப்பிட முடியுமோ அதை எல்லாம் சாப்பிடலாம். பழங்கள், இளநீர், நாட்டு காய்கனிகள், தேங்காய், வேர்கடலை என பச்சையாக சாப்பிடக்கூடிய உணவுகளை மட்டும் ஆறு நாட்கள் எடுக்கலாம்.
உடலில் பல்வேறு பிரச்சனை உள்ளவர்கள், ஆங்கில மருந்து எடுப்பவர்கள், நோயாளிகள், ஆறு நாள் பழங்களை மட்டும் எடுக்க முடியாதவர்கள் எல்லாம் தேவைப்பட்டால் இதனுடன் பட்டை தீட்டப்படாத அரிசி கஞ்சி, நீராகாரம், அவல், நாட்டு பசும் பால் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
நோன்பின் போது என்ன நடக்கலாம் ?
--------------------------------------------
ஆண்டுக்கணக்கில் தேங்கிய நச்சுக்கழிவுகள் வெளியேறலாம்.
1 - சிறுநீர் அடர்த்தி நிறமாக வெளியேறலாம்.
2 - மலம் கருப்பாக வெளியேறலாம்.
3 - சளி வெளியேறலாம்.
4 - உடல் ஓய்வு கேட்கலாம்.
5 - காய்ச்சல் வரலாம் (காய்ச்சல் ஒரு கொடை)
6 - வலிகளை உணரலாம்.
என்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம் ?
----------------------------------------
1 - அதிக உடல் எடை சீராகும்
2 - முகம் பொழிவு பெறும்
3 - கண்ணில் ஒளி வீசும்
4 - சுறுசுறுப்பு அதிகரிக்கும்
5 - இரத்தம் தூய்மை பெறும்
6 - தோலின் நிறம் சீராகும்
7 - மன உளைச்சல் குறையும்
8 - கவலை, பயம், கோபம் குறையும்
9 - புத்துணர்வு கிடைக்கும்
10 - உடல் பலம் பெறும்
11 - மன அமைதி பெறும்
12 - ஆழ்ந்த தூக்கம் வரும்
ஆக மொத்தத்தில்
உடலில் ஆரோக்கியமும் !
எண்ணத்தில் அழகும் !
மனதில் நிம்மதியும் !
கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்காத இன்னும் பல எண்ணிலடங்கா அதிசயங்கள் நிகழலாம்.
கந்தன், அரக்கனை அழிப்பது போல்
உடல், உங்கள் அனைத்து பிரச்சனைகளை அழித்துவிடும்.
நமது பண்பாட்டையும், உடல், மன ஆரோக்கியத்தையும் பிரித்தே பார்க்க முடியாது. இவை இரண்டும் ஒன்றிற்கொண்டு பின்னிபினைந்தவை. பினைக்கப்பட்டவை.
உடலின் பேராற்றலை புரிந்து, அதன் அற்புத புதையல் கொண்ட அறிவியல் உண்மைகளை, அழகான திருவிழாவாக நமக்கு வடிவமைத்து தந்த நமது முன்னோர்களுக்கு கோடி நன்றிகளை சொல்ல நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.
உலகில் மிகச்சிறந்த மருந்துவர் - உங்கள் உடல்.
உலகில் மிகச்சிறந்த மருத்துவம் - உண்னாநோன்பு.
உண்ணாநோன்பு இருப்போம்
ஆரோக்கியமாக வாழ்வோம்
|
|
|
Post by kgopalan90 on Nov 2, 2018 5:33:14 GMT 5.5
NO RESTRICTIONS. YOU MAY DO YOUR USUAL POOJA.AFTER ONE MONTH ITSELF YOU CAN CONTINUE YOUR PUJA. NEED NOT WAIT TILL VARUSHABHDHIKAM.
|
|
|
Post by kgopalan90 on Nov 1, 2018 6:00:23 GMT 5.5
09-11-2018---யம துதியை---ப்ராத்ரு த்விதீயை .
தீபாவளிக்கு பிறகு வரும் த்விதீயை அன்று யமுனா தேவி தனது ஸஹோதரன் யமனை தனது
வீட்டிற்கு வரச்சொன்னாள்.. யமனும் தனது ஸஹோதரியின் அழைப்பை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு
நிறைய ஆபரணங்களுடநும், ஜவுளி, சீர்களுடன் யமுனையின் இல்லத்திற்கு சென்றார்.
யமுனையும் தனது கையாலேயே பல விதமான ஆஹாரங்கள் தயார் செய்து யமனை சாப்பிடச்செய்து உபசரித்தாள். யமனும் யமுனைக்கு கொண்டு சென்ற பரிசுகளை தந்தார்.
அந்த திருநாள் தான் யம த்வீதீயை எனப்பெயர் பெற்றது. “”ஸ்நேஹேந பகினி ஹஸ்தாத் போக்தவ்யம் புஷ்டி வர்த்தனம் தாநாதி ச ப்ரதேயாநி பகினீப் யோ விசேஷத:
யாது போஜயதே நாரீ ப்ராதரம் யுக்மகே திதெள அர்ச்சயேச்சாபி தாம்பூலைர் ந ஸா வைதவ்ய மாப்னுயாத்.
எந்த பெண் தனது ஸஹோதரரை த்வீதீயை அன்று சாப்பாடு முதலியவைகளால் சந்தோஷ படுத்துகிறாளோ அவள் ஒரு போதும் விதவை ஆக மாட்டாள்.
தனது ஸஹோதரி வீட்டிற்கு போக முடியாதவர்கள் தனது ஸஹோதரிக்கு பணம் , பொருட்கள் ஆகியவற்றை சீராக அனுப்பி வைக்கலாம்.
உடன் பிறந்த சஹோதரி இல்லாதவர்கள் தனது சித்தப்பா, பெரியப்பா பெண், மாமா பெண் முதலியவர்களை உடன் பிறந்த ஸஹோதரியாக பாவிக்கலாம்.
இதற்கு உபவாசம், பூஜை மந்திரம் இல்லை. இதனால் ஒற்றுமை, அன்பு வளரும். நீண்ட ஆயுள், ஆரோக்கியம், வலிமை ஐஸ்வரியம் கிடைக்கும்.
|
|
|
Post by kgopalan90 on Nov 1, 2018 5:22:41 GMT 5.5
கார்த்திகை ஸ்நானம் 08-11-2018 முதல் 07-12-2018 முடிய.
ஐப்பசி அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் கார்த்திகை சாந்திரமான மாதம் ஆவதால் இன்று முதல் தினந்தோறும் ஸூர்ய உதயத்திற்கு முன்பாக அதாவது 6 மணிக்கு முன்பாக தினமும் ஸ்னாநம் செய்ய வேண்டும்.
இதற்கு கார்த்திகை ஸ்நானம் எனப்பெயர் .இதனால் நாம் அறியாமல் செய்யும் பாபம் விலகி மனதில் சுத்தமான எண்ணங்கள் உன்டாகும். இன வேறுபாடின்றி ஆண்கள் பெண்கள் எல்லோரும் இதை செய்யலாம்.
ஸ்நானம் செய்யும் போது கூற வேண்டிய மந்திரம்.
கார்த்திகே அஹம் கரிஷ்யாமி ப்ராதஸ் ஸ்நானம் ஜநார்தன: ப்ரீத்யர்த்தம் தவ தேவேச தாமோதர மயா ஸஹ.
ஸ்நானம் செய்துவிட்டு காய்ந்த ஆடைகள் உடுத்திகொண்டு நெற்றிக்கு இட்டுகொண்டு மயா க்ருத கார்த்திக ஸ்நானாங்கம் அர்கிய
ப்ரதானம் கரிஷ்யே என சங்கல்பம் செய்துகொண்டு கையில் ஜலம் எடுத்துக்கொண்டு அர்க்கியம் விடவும் கீழ் கண்ட மந்திரம் சொல்லி.
வ்ரதிந: கார்த்திகே மாஸி ஸ்நானஸ்ய விதிவன் மம க்ருஹாணார்க்கியம் மயா தத்தம் தநுஜேந்திர நிஷூதன ஶ்ரீ க்ருஷ்ணாய நம: இதமர்க்கியம் இதமர்க்கியம் இதமர்க்கியம்.
நித்ய நைமித்திகே க்ருஷ்ண கார்திகே பாபநாசனே க்ருஹாணார்க்கியம் மயா தத்தம் ராதயா ஸஹிதோ ஹரே ; ஶ்ரீ ஹரயே நம: இதமர்க்கியம் இதமர்க்கியம் இதமர்க்கியம்.
அநேன அர்க்கிய ப்ரதாநேன ஶ்ரீ ஹரி: ப்ரீயதாம் எனச்சொல்லி கார்த்திகை மாதம் முழுவதும் செய்ய முடியா விட்டலும் முடிந்த நாட்களில் செய்யலாம்.
|
|
|
Post by kgopalan90 on Nov 1, 2018 4:29:16 GMT 5.5
Sukku- 50 gm, சுக்கு Chitharathai-50gm, சித்தரத்தை parangi pattai-25 gm, பரங்கிப்பட்டை
kanda thippili-50gm, கண்டதிப்பிலி arisi thippili-100gm, அரிசிதிப்பிலி vaayu vidangam-50gm, வாயுவிடங்கம்
krambhu-50gm, க்ராம்பு vaal milagu-50gm, வால்மிளகு sathakuppai-50 gm, சதகுப்பை
seeragam-50gm, ஜீரகம் perunjeeragam-50gm, பெருஞ்ஜீரகம் kasturi manjal-50 gm, கஸ்தூரி மஞ்சள்
athimathuram 50 gm, அதிமதுரம் virali manjal-50gm, விராளி மஞ்சள் adhi vidayam-50gm, அதிவிடயம்
kadukkai poo-50gm, கடுக்காய் sirunaagap poo-50 gm, சிறுநாகப்பூ thaalisa pathri-50 gm, தாளிசாபத்திரி
kaattaathi poo-50, காட்டத்திபூ omam-250gm, ஓமம்
ghee- நெய் தேவையான அளவு. honey enough quantity. தேன் தேவையான அளவு.
மேற் கண்ட பொருட்களை நாட்டு மருந்து கடையில் வாங்கி வறுத்து மிக்ஸியில் பொடித்து தீபாவளி லேகியம் செய்து சாப்பிடலாம்.
தீபாவளி நிர்ணய சிந்து—147:--- “”தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா தீபாவள்யாஸ் சதுர்தசீம் ப்ராத: ஸ்நாநம் து ய: குர்யாத் ஸ: யம லோகம் ந பச்யதி””.
அதிகாலை 5-30 மணிக்கு முன்பாக நல்லெண்ணை தேய்த்து வெந்நீரில் ஸ்நாநம் செய்ய வேன்டும்.. புதிய வஸ்த்ரம் தரிக்கவும். பட்டாசு வெடித்து சந்தியா வந்தனம் , பூஜை செய்து உறவினர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு சந்தோஷமாக இருக்க வேண்டும்.
ஸ்நாநம் செய்யும்போது அபாமார்கம் என்னும் நாயுருவி செடியை கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி மூன்று முறை தலையை சுற்றி தூர எறிந்து விட வேண்டும். இதனால் நரக பயம் ஏற்படாது.
நிர்ணய சிந்து-148----அபாமார்க மயே தும்பீம் ப்ரபுன்னாட மதாபரம் ப்ராமயேத் ஸ்நான மத்யே து நரகஸ்ய க்ஷயாய வை
ஸீதா லோஷ்ட ஸமாயுக்த ஸ கண்டக தளான்வித
ஹர பாபம் அபாமார்கம் ப்ராம்யமாண: புந:புந;
தீபோத்ஸவ சதுர்தஸ்யாம் கார்யம் து யமதர்பணம் என்னும்படி தீபாவளியன்று காலை 7 மணிக்குள் சந்தியாவந்தனம் முடித்துவிட்டு யம தர்ம ராஜாவுக்கு தர்பணம் செய்ய வேண்டும்.
|
|
|
Post by kgopalan90 on Nov 1, 2018 3:37:42 GMT 5.5
ஆகாச தீபம் கடனை போக்கும்: 08-11-2018 முதல் 07-12-2018 முடிய.
கார்த்திகே தில தைலேன ஸாயங்காலே ஸமாகதே ஆகாச தீபம் யோ தத்யாத் மாஸ மேகம் ஹரிம் ப்ரதி மஹதீம் ஶ்ரீய மாப்நோதி ரூப செளபாக்கியம் ஸம்பதம் ( நிர்ணய ஸிந்து- 146 ).
சாந்திரமான கார்த்திகை மாதம் முழுவதும் ஸாயங்காலம் ஸூர்யன் அஸ்தமிக்கும் வேளையில்
உங்கள் வீட்டு மொட்டை மாடியில் உயரமான இடத்திலும் ஏற்றி வைக்கலாம் இதன் ஒளியானது எட்டு திசையும் பரவ வேன்டும்.
08-11-2018 ஸூர்யன் மறைந்த பின் அஹம் ஸகல பாபக்ஷய பூர்வகம் ஶ்ரீ ராதா தாமோதர ப்ரீதயே அத்ய ஆரப்ய கார்த்திக அமாவாஸ்யா பர்யந்தம் யதா சக்தி ஆகாச தீப தாநம் கரிஷ்யே என்று ஸ்வாமி சன்னதியில்
ஸங்கல்பம் செய்துகொண்டு பெரிய , மண் அகல் விளக்கில் நல்லெண்ணைய் விட்டு எட்டு திரி போட்டு ஏற்றி அருகில் உள்ள ஆலயத்திலோ அல்லது தனது வீட்டு மாடியிலோ உயரமான இடத்தில் தாமோதராய நபஸி துலாயாம்
லோலயா ஸஹ ப்ரதீபம் தே ப்ரயச்சாமி நமோ நந்தாய வேதஸே (நிர்ணய ஸிந்து)) எனும் ஸ்லோகம் சொல்லி வைத்து நமஸ்காரம் செய்யலாம். .
எல்லா கடன்களும் அடைப்பீர்கள்.. லக்ஷிமி கடாக்ஷம் ஏற்படும்.
எல்லா தினங்களும் முடியாவிட்டாலும் முடிந்த தினங்களில் ஏற்றி வைத்தாலும் அந்த அளவிற்கு துன்பங்கள் விலகுமே. .
தடித்த துணியாலான திரி தான் மொட்டை மாடியில் எரியும். ஒரே விளக்கில் எட்டு திரி போட வேண்டும்.எட்டு திக்குகளுக்கும் ஒவ்வொரு திரியாக போட வேண்டும்.
ஆதலால் மண் பானையை மூடும் மண் தட்டு மாதிரி பெரிதாக இருக்க வேண்டும் அகல் விளக்கு. காற்றில் அணையாமல் எரிய வேண்டுமே..
|
|
|
Post by kgopalan90 on Oct 31, 2018 20:11:05 GMT 5.5
தீபாவளி ஸ்நானம் 05-11-2018 இரவு 06-11-2018 விடியற் காலை 4-30 மணி முதல் 6 மணிக்குள் நல்ல எண்ணைய் தேய்த்து கொண்டு வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும். முதலில் அபாமார்க்கம் என்னும் நாயுருவி செடியை அபாமார்க்கம் அதோ தும்பீம் ப்ரபுன்னாட மதாபராம் ப்ராமயேத் ஸ்நான மத்யே து நரகஸ்ய க்ஷயாய வை
என்றபடி ஸ்நானம் செய்யுமுன்பு நாயுருவி செடியை கையில் எடுத்து கொண்டு அபாமார்க லதே தேவி அபவர்க ப்ரதே சுபே அலக்ஷ்மீம் நாசய மே கேஹே ம்ருத்யும் வாரய வாரய போ ---ஸீதா லோஷ்ட ஸமாயுக்த
ஸ கண்டக தளான்வித ஹர பாபம் அபாமார்க்கம் ப்ராம்யமாணஹ புந;புநஹ என்று சொல்லி நாயுருவி செடி இருக்கும் வலது கையினால் தலையை மூன்று முறை சுற்றி வாசலில் தூக்கி போடவும்.
பிறகு நல்ல எண்ணய் தேய்த்து கொண்டு சுடு தண்ணீரில் ஸ்நானம் செய்ய வேண்டும்.
நெற்றிக்கு இட்டுக்கொண்டு புத்தாடை உடுத்தி பட்டாசு கொளுத்தி இனிப்புகள் உண்டு தீபாவளி மருந்து சாப்பிட்டு விட்டு ஸந்தியா வந்தனம் காயத்திரி ஜபம் செய்து விட்டு யம தர்ப்பணம் செய்யவேண்டும்.
கிழக்கு பக்கம் பார்த்து உட்காரவும். ஆசமனம் செய்யவும்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர் புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே. ப்ராணாயாமம்;
மமோ பாத்த ஸமஸ்த துரிதய க்ஷயத் வாரா ஸ்ரீ் பரமேஸ்வர ப்ரீத் யர்த்தம் ஆஸ்வயுஜ க்ருஷ்ண பக்ஷ சதுர்தசி புண்ய காலே யம தர்ப்பணம் கரிஷ்யே. என்று சொல்லி கைகளை துடைத்து க்கொண்டு
பூணல் வலம்.( உபவீதி ) கையில் மஞ்சள் கலந்த அக்ஷதை வைத்து கொண்டு கிழக்கு நோக்கி நுனி விரல்கள் மூலம் ( தேவ தர்ப்பணம் ) ஜலத்தால் அர்க்கியம் விடவும். தந்தை இருப்பவர்கள், இல்லாதவர்கள் எல்லோரும் இதை செய்யலாம்.
யமாயதர்மராஜாய ம்ருத்யவே தாந்தகாயச,வைவஸ்வதகாலாய சர்வபூத க்ஷயாய சஒளதும்பராய தக்னாய நீலாயபரமேஷ்டினே வ்ருகோதராய சித்ராயசித்ரகுப்தாயவை நம:இதயே தர்பணமாக செய்ய வேண்டும்.மூன்று தடவைகள்.ஒவ்வொன்றும்.
1.யமாயநம: யமம்தர்பயாமி. 2.தர்மராஜாயநம;தர்மராஜம்தர்பயாமி 3.ம்ருத்யவேநம:ம்ருத்யும்தர்பயாமி. 4.அந்தகாயநம:அந்தகம்தர்பயாமி.
5.வைவஸ்வதாயநம:வைவஸ்வதம்தர்பயாமி 6.காலாயநம:காலம்தர்பயாமி.
7.சர்வபூதக்ஷயாய நம:ஸர்வபூதக்ஷயம் தர்பயாமி. 8.ஒளதும்பராயநம;ஒளதும்பரம்தர்பயாமி.
9.தத்நாயநம:தத்நம்தர்பயாமி 10.நீலாயநம:நீலம்தர்பயாமி 11.பரமேஷ்டிநேநம:பரமேஷ்டிநம்தர்பயாமி.
12.வ்ருகோதராயநம:வ்ருகோதரம்தர்பயாமி. 13.சித்ராயநம:சித்ரம்தர்பயாமி
14.சித்ரகுப்தாய நம:சித்ரகுப்தம்தர்பயாமி..
தெற்கு திசைநோக்கி நின்று கொண்டு கீழ்காணும் ஸ்லோகம் சொல்லி யமதர்ம ராஜனை ப்ரார்த்தித்து கொள்ளவும்.
யமோ நிஹந்தாபித்ரு தர்ம ராஜோ வைவஸ்வதோதண்ட தரஸ்ச கால: ப்ரேதாதிபோதத்த க்ருதாந்தகாரி க்ருதாந்தஏதத் த சக்ருஜ் ஜபந்தி. ---நீலபர்வத சங்காச ருத்ரகோப ஸமுத்பவ காலதண்டதர ஸ்ரீ மந் வைவஸ்வத நமோஸ்துதே. ஆசமனம்.
|
|
|
Post by kgopalan90 on Oct 31, 2018 19:59:48 GMT 5.5
தந்வந்திரி பூஜை.05-11-2018.
பாற்கடலில் இருந்து தந்வந்திரி அவதரித்த நாள். ஆதலால் இன்று தந்வந்திரி பகவானுக்கு 16 உபசார பூஜை செய்வதால் வியாதிகள் குணமாகும். வியாதிகள் வராமலும் இருக்கும். ஆயுர்வேத மருத்துவம் இயற்றியவர்.
|
|
|
Post by kgopalan90 on Oct 31, 2018 19:12:28 GMT 5.5
யம தீபம்:-- 05-11-2018 அன்று
ஆஸ்விநஸ்யா சிதே பக்ஷே த்ரயோதஸ்யாம் நிசாமுகே யம தீபம் பஹிர் தத்யாத் அப ம்ருத்யுர் விநஸ்யதி. ----சிதே பக்ஷம்=க்ருஷ்ண பக்ஷம். ஆஸ்விநம்= சாந்திர மான மாதம்.
தீபாவளிக்கு முதல் நாள் வரும் த்ரயோதசி திதியன்று மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் வீட்டு வாசலில் அல்லது கோவிலில் மண் அகலில் நல்ல எண்ணைய் விட்டு விளக்கேற்ற வேண்டும்.
வீட்டில் வசிக்கும் ஆண், பெண், குழந்தைகள் உட்பட ஒவ்வொருவரும் தனி தனியே ஒவ்வொரு மண் அகல் விளக்கு அவரவர்களே ஏற்றி ஸ்லோகம் சொல்லி நமஸ்கரிக்க வேண்டும்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர் புஜம் ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்கின உப சாந்தயே. ப்ராணா யாமம்.
மமோ பாத்த ஸமஸ்த துருதய க்ஷயத் வார ஸ்ரீ் பர மேஸ்வர ப்ரீத்யர் த்தம் மம ஸர்வாரிஷ்ட நிவிருத்தி பூர்வகம் அப ம்ருத்யு நிவாரண த்வாரா யம ராஜ ப்ரீத்யர்த்தம் தீப தாநம் கரிஷ்யே.
ஒவ்வொருவரும் அவரவர்கள் ஏற்றி வைத்த தீபத்தை நோக்கி ம்ருத்யாநா பாச தண்டாப்ப்யாம் காலேந ஸ்யாமயா ஸஹ த்ரயோதஸ்யாம் தீப தானாத் ஸூர்யஜ; ப்ரீயதாம் மம. என்று சொல்லி நமஸ்காரம் செய்யவும்.
ஆக்ஸிடெண்ட் -வியாதி இவற்றால் அகால மரணம் ஏற்படாமல் பாது காக்கும். கந்த புரணம்..இம்மாதிரி இயம்புகிறது.
|
|
|
Post by kgopalan90 on Oct 31, 2018 15:11:07 GMT 5.5
கோவத்ச துவாதசி;_--04-11-2018.
இன்று கன்று குட்டியுடன் கூடிய பசு மாட்டை பூஜை செய்ய வேண்டும்.
ஐப்பசி மாதம் கிருஷ்ண பக்ஷ துவாதசி. 04-11-2018. இன்று பசும்பால்; பசும் தயிர். பசு மோர், பசு வெண்ணை, பசு நெய் சாப்பிட கூடாது.
பசும் பால் இன்று கறக்காமல் கன்றுக்குட்டி குடிப்பதற்கே விட்டு விட வேண்டும்.நிர்ணய சிந்து 147. இம்மாதிரி பகர்கிறது.
அகத்தி கீரை, புல் பசு மாட்டிற்கு தர வேண்டும். இந்த ஸ்லோகம் சொல்லி கொடுக்கவும்.
ஸுரபி த்வம் ஜகன் மாதர் தேவி விஷ்ணு பதே ஸ்திதா ஸர்வ தேவ மயே க்ராஸம் மயா தத்தம் இமம் கிரஸ:.
இன்று பசு மாட்டை நமஸ்காரமாவது செய்ய வேண்டும். கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி பசு மாட்டை வணங்கவும். ஸர்வ தேவ மயே தேவி; ஸர்வ தேவைஸ்ச ஸத் க்ருதா மாதர் மமா அபிலஷிதம் ஸ பலம் குரு நந்தினி
.
பாற் கடலை கடைந்த போது காமதேனு வந்தது. காமதேனுவின் மகள் நந்தினி ஆவாள். வட இந்தியாவில் தீபாவளியின் முதல் நாளாக இதை தான் கொண்டாடு கிறார்கள்.
07-11-2018. லக்ஷ்மி பூஜை; கேதார கெளரி விரதம். உல்கா தானம். 08-11-2018-கோவர்த்தன பூஜை.
13-11-2018—ஸ்கந்த சஷ்டி. சூர ஸம்ஹாரம்.
|
|
|
Post by kgopalan90 on Oct 31, 2018 14:11:49 GMT 5.5
Ashwin-Krishna Ekadasi, or Indira Ekadasi 03-11-2018.
Yudhishthira Maharaj said, Oh Lord, what is the name of the Ekadasi that occurs during the dark fortnight (Krishna paksha) of the month of Ashwin (September-October)? Please describe its glories to me.
The Supreme Lord, Lord Sri Krishna then replied, "This Holy day is called Indira Ekadasi. If a person fasts on this day, all his sins are eradicated and his forefathers who have fallen into hell are liberated. Oh best of kings, one
who simply hears about this sacred Ekadasi achieves the great merit earned by performing a horse sacrifice."
In the Satya-yuga there lived a king named Indrasena, who was so powerful that he destroyed all his enemies. His kingdom was called Mahishmati. In this way King Indrasena systematically dedicated himself to pure spiritual life and spent much time meditating on the Absolute Truth.
One day, as King Indrasena happily and peacefully presided over his assembly, the perfect orator, Sri Narada Muni, was seen descending. The king inviting him into the palace, offering him a comfortable seat, washing his feet, and spoke sweet words of welcome. Then Narada Muni said to Maharaj Indrasena, ‘Oh king, your kingdom is prospering?’
The king replied, By your kind grace, Oh greatest of sages, everything is quite well.
Sri Narada, the sage among the devas, then said, Oh king, I am astonished. When I descended from Brahmaloka to Yamaloka, I noticed your father in Yamaraja’s assembly. Though he had been very religious, because he broke an Ekadasi fast prematurely, he had to go to the Yamaloka. Your father gave me a message for you. He said, In Mahishmati lives a king named Indrasena.
Please tell him about my situation here - that because of my past sinful deeds I have somehow been forced to reside in Yamaraja’s kingdom. Please give him this message from me: ‘Oh son, kindly observe the coming Indira Ekadasi and give much in charity so I can go upward to heaven.’
When the king heard the words of Naradji he was greatly grieved and he said ‘Oh Maharishi. Please tell me specifically how to observe a fast on Indira Ekadasi, and also tell me during what month and on what day it occurs.
Narada Muni replied, Oh king, please listen as I describe to you the full process of observing the Indira Ekadasi. This Ekadasi occurs during the dark fortnight of the month of Ashwin. On the Dashami tithi, the day before Ekadasi, rise early in the morning, take bath, and then do some service for God with full faith. At noon, bathe again in running water and then offer oblations to your forefathers with faith and devotion. Be sure not to eat more than once on this day and at night sleep on the floor.
When you awaken on Ekadasi morning, cleanse your mouth and teeth thoroughly and then with deep devotion for the Lord take this sacred vow: Today I shall fast completely and give up all kinds of sense enjoyment. Oh lotus-eyed Supreme Lord, Oh infallible one, please give me shelter at Your lotus feet.
At noon, stand before the sacred form of the Sri Shaligram Shila and worship Him faithfully, following all the rules and regulations; then offer oblations of ghee into the sacred fire, and tarpana directed to help your forefathers. Next, feed qualified Brahmins and offer them some charity according to your means. Now take the food pindas you offered to your forefathers, smell it, and then offer it to a cow. Next, worship Lord Hrishikesha with incense and flowers, and finally, remain awake all night near the Deity of Lord Sri Keshava.
Early in the morning of the next da y, Dvadasi tithi, worship Sri Hari with great devotion and invite Brahmin devotees to a sumptuous feast. Then feed you relatives, and finally take your meal in silence.
Oh king, if you strictly observe a fast on Indira Ekadasi in this way, with controlled senses, your father will surely be elevated to the abode of lord Vishnu. After saying this, Devarishi Narada immediately disappeared from the scene to bless someone else with his presence.
King Indrasena followed the great saint's instructions perfectly, observing the fast in the association of his relatives and servants. As he broke his fast on the Dvadasi tithi, flowers fell from the sky. The merit that Indrasena maharaj earned by observing this fast released his father from the kingdom of Yamaraja and caused him to attain a completely spiritual body.
Indeed, Indrasena saw him rising to the abode of Lord Hari on the back of GarudaVahan. Indrasena himself was able to rule his kingdom without any obstacles, and in time when he handed over the kingdom to his son, he also went to the spiritual realm of Vaikuntha.
Oh Yudhishthira, these are the glories of the Indira Ekadasi, which occurs during the dark fortnight of the month of Ashwin. Whoever hears or reads this narration certainly enjoys life in this world, is freed of all reactions to his past sins, and at the time of death returns home, back to Godhead, where he lives eternally.
Thus ends the narration of the glories of Ashwin-krishna Ekadasi, or Indira Ekadasi, taken from the Brahma-vaivarta Purana.
|
|
|
Post by kgopalan90 on Oct 27, 2018 15:53:26 GMT 5.5
சங்கடஹர சதுர்த்தி.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை ( கிருஷ்ண பக்ஷம்) சதுர்த்தி திதிக்கு ஸங்கட ஹர சதுர்த்தி எனப் பெயர். ஆனால் சிராவண மாத தேய் பிறை சதுர்த்திக்கு மஹா சங்கடஹர சதுர்த்தி எனப்பெயர்.
ஒரு வருடம் தம்பதியாக இன்று ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் இந்த விருதத்தை அநுஷ்டிக்கலாம்.
சிராவணே பகுளே பக்ஷே சதுர்த்யாம் து விதூதயே கணேசம் பூஜயித்வா து சந்த்ராயார்க்யம் ப்ரதாபயேத்
இன்று பகல் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் கணபதி படம் அல்லது விக்கிரஹம் வைத்து , மம வித்யா-தன- புத்ர- பெளத்ராதி ஸுக ப்ராப்தியர்த்தம் ஸர்வ ஸங்கஷ்ட நிராஹரணார்த்தம் ஸங்கடஹர கணபதி பூஜாம் கரிஷ்யே. என்று ஸங்கல்பித்து கொண்டு
அஸ்மின் படே கஜாஸ்யாய நம: ஆவாஹயாமி; விக்னராஜாய நம: ஆஸனம் சமர்பயாமி. ஏகதந்தாய நம: பாத்யம் ஸமர்பயாமி ;;சங்கர ஸுநவே நம: அர்க்கியம் ஸமர்பயாமி; உமா ஸுதாய நம: ஆசமனீயம்
ஸமர்பயாமி; வக்ரதுண்டாய நம: பஞ்சாம்ருத ஸ்நானம் ஸமர்பயாமி; ஹேரம்பாய நம: ஸ்நானம் ஸமர்பயாமி; சூர்ப்ப கர்ணாய நம: வஸ்த்ரம் ஸமர்பயாமி; குப்ஜாய நம: யக்ஞோபவீதம் ஸமர்பயாமி;
கெளரீ புத்ராய கணேஸ்வராய நம : கந்தம் ஸமர்பயாமி; உமா புத்ராய நம: அக்ஷதான் ஸமர்பயாமி; சிவஸுநவே நம: புஷ்ப மாலாம் ஸமர்பயாமி; விக்ன நாசினே நம: புஷ்பானி பூஜயாமி; விகடாய நம: தூபம் ஆக்ராபயாமி
வாமனாய நம: தீபம் தர்சயாமி; சர்வாய நம: நைவேத்யம் நிவேதயாமி; 21 கொழுக்கட்டை (மோதகம்) –நிவேதனம்; ஸர்வார்த்தி நாசினே நம: பலம் ஸமர்பயாமி( (பழங்கள் நிவேதனம் செய்யவும்); விக்ன ஹர்த்தரே நம;
தாம்பூலம் ஸமர்பயாமி; ஸர்வேஸ்வராய நம: தக்ஷிணாம் ஸமர்பயாமி; ஈச புத்ராய நம: கற்பூர நீராஜனம் ஸமர்பயாமி; என்று சொல்லி உபசார பூஜைகள் முடித்து விட்டு பசும்பால் அல்லது சந்தனம் கலந்த நீரால் கீழ்
கண்ட 4 சுலோகம் சொல்லி கணபதியின் முன்பாக ஒரு கிண்ணத்தில் அர்க்கியம் விடவும்.
1, க்ஷீர ஸாகர ஸம்பூதஸுதா ரூப நிசாகர; க்ருஹாணார்க்யம் யா தத்தம் கணேச ப்ரீதி வர்த்தன ரோஹிணி ஸஹித சந்த்ர மஸே நம: இதமர்க்கியம், இதமர்க்கியம், இதமர்கியம்;
2. கணேசாய நமஸ்துப்யம் ஸர்வஸித்தி ப்ரதாயக ;ஸங்கஷ்டம் ஹர மே தேவ க்ருஹாணார்கியம் நமோஸ்துதே கணேசாய நம: இதமர்க்கியம்; இதமர்கியம், இதமர்க்கியம்.
3.கிருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் து பூஜிதஸ் த்வம் விதூதயே க்ஷிப்ரம் ப்ரஸாதிதோ தேவ க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே ஸங்கஷ்ட ஹர கணேசாய நம: இதமர்கியம்,இதமர்கியம், இதமர்கியம்.
4.திதீ நாம் உத்தமே தேவி கணேச ப்ரிய வல்லபே ஸர்வ ஸங்கஷ்ட நாசாய சதுர்த்யர்கியம் நமோஸ்துதே; -சதுர்தியை நம; இதமர்கியம்; இதமர்கியம், இதமர்க்கியம்.
கணபதியின் எதிரே தம்பதிகளாக உட்கார்ந்து கொண்டு நமோ ஹேரம்ப மத மோதித மம ஸர்வ ஸங்கஷ்டம் நிவாரய நிவாரய ஹூம் பட் ஸ்வாஹா.
என்னும் மந்திரத்தை 4444 அல்லது 444 தடவை ஜபிக்கவும்.
பிறகு கணபதிக்கு நிவேதனம் செய்த 21 கொழுகட்டைகளில் ஒரு ஐந்து கொழுகட்டைகளை ஏதாவது ஒரு குழந்தைக்கு கொடுத்து சாப்பிட சொல்லவும். மீதியை நீங்கள் .கணபதியை ப்ரார்த்திக் கொண்டு, சந்திரனை தரிசித்து விட்டு சாப்பிடலாம்.
இவ்வாறு செய்ய இயலாதவர்கள் அர்க்கியம் மட்டும் தந்து விட்டு சந்திரனை தரிசித்து விட்டு சாப்பிடலாமே. இதனால் அனைத்து இன்னல்களும் விலகும் என்கிறது கணேச புராணம்.
|
|