Post by kgopalan90 on Oct 31, 2018 20:11:05 GMT 5.5
தீபாவளி ஸ்நானம் 05-11-2018 இரவு 06-11-2018 விடியற் காலை 4-30 மணி முதல் 6 மணிக்குள் நல்ல எண்ணைய் தேய்த்து கொண்டு வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும். முதலில் அபாமார்க்கம் என்னும் நாயுருவி செடியை அபாமார்க்கம் அதோ தும்பீம் ப்ரபுன்னாட மதாபராம் ப்ராமயேத் ஸ்நான மத்யே து நரகஸ்ய க்ஷயாய வை
என்றபடி ஸ்நானம் செய்யுமுன்பு நாயுருவி செடியை கையில் எடுத்து கொண்டு அபாமார்க லதே தேவி அபவர்க ப்ரதே சுபே அலக்ஷ்மீம் நாசய மே கேஹே ம்ருத்யும் வாரய வாரய போ ---ஸீதா லோஷ்ட ஸமாயுக்த
ஸ கண்டக தளான்வித ஹர பாபம் அபாமார்க்கம் ப்ராம்யமாணஹ புந;புநஹ என்று சொல்லி நாயுருவி செடி இருக்கும் வலது கையினால் தலையை மூன்று முறை சுற்றி வாசலில் தூக்கி போடவும்.
பிறகு நல்ல எண்ணய் தேய்த்து கொண்டு சுடு தண்ணீரில் ஸ்நானம் செய்ய வேண்டும்.
நெற்றிக்கு இட்டுக்கொண்டு புத்தாடை உடுத்தி பட்டாசு கொளுத்தி இனிப்புகள் உண்டு தீபாவளி மருந்து சாப்பிட்டு விட்டு ஸந்தியா வந்தனம் காயத்திரி ஜபம் செய்து விட்டு யம தர்ப்பணம் செய்யவேண்டும்.
கிழக்கு பக்கம் பார்த்து உட்காரவும். ஆசமனம் செய்யவும்.
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர் புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே. ப்ராணாயாமம்;
மமோ பாத்த ஸமஸ்த துரிதய க்ஷயத் வாரா ஸ்ரீ் பரமேஸ்வர ப்ரீத் யர்த்தம் ஆஸ்வயுஜ க்ருஷ்ண பக்ஷ சதுர்தசி புண்ய காலே யம தர்ப்பணம் கரிஷ்யே. என்று சொல்லி கைகளை துடைத்து க்கொண்டு
பூணல் வலம்.( உபவீதி ) கையில் மஞ்சள் கலந்த அக்ஷதை வைத்து கொண்டு கிழக்கு நோக்கி நுனி விரல்கள் மூலம் ( தேவ தர்ப்பணம் ) ஜலத்தால் அர்க்கியம் விடவும். தந்தை இருப்பவர்கள், இல்லாதவர்கள் எல்லோரும் இதை செய்யலாம்.
யமாயதர்மராஜாய ம்ருத்யவே தாந்தகாயச,வைவஸ்வதகாலாய சர்வபூத க்ஷயாய சஒளதும்பராய தக்னாய நீலாயபரமேஷ்டினே வ்ருகோதராய சித்ராயசித்ரகுப்தாயவை நம:இதயே தர்பணமாக செய்ய வேண்டும்.மூன்று தடவைகள்.ஒவ்வொன்றும்.
1.யமாயநம: யமம்தர்பயாமி.
2.தர்மராஜாயநம;தர்மராஜம்தர்பயாமி
3.ம்ருத்யவேநம:ம்ருத்யும்தர்பயாமி.
4.அந்தகாயநம:அந்தகம்தர்பயாமி.
5.வைவஸ்வதாயநம:வைவஸ்வதம்தர்பயாமி
6.காலாயநம:காலம்தர்பயாமி.
7.சர்வபூதக்ஷயாய நம:ஸர்வபூதக்ஷயம் தர்பயாமி.
8.ஒளதும்பராயநம;ஒளதும்பரம்தர்பயாமி.
9.தத்நாயநம:தத்நம்தர்பயாமி
10.நீலாயநம:நீலம்தர்பயாமி
11.பரமேஷ்டிநேநம:பரமேஷ்டிநம்தர்பயாமி.
12.வ்ருகோதராயநம:வ்ருகோதரம்தர்பயாமி.
13.சித்ராயநம:சித்ரம்தர்பயாமி
14.சித்ரகுப்தாய நம:சித்ரகுப்தம்தர்பயாமி..
தெற்கு திசைநோக்கி நின்று கொண்டு கீழ்காணும் ஸ்லோகம் சொல்லி யமதர்ம ராஜனை ப்ரார்த்தித்து கொள்ளவும்.
யமோ நிஹந்தாபித்ரு தர்ம ராஜோ வைவஸ்வதோதண்ட தரஸ்ச கால: ப்ரேதாதிபோதத்த க்ருதாந்தகாரி க்ருதாந்தஏதத் த சக்ருஜ் ஜபந்தி. ---நீலபர்வத சங்காச ருத்ரகோப ஸமுத்பவ காலதண்டதர ஸ்ரீ மந் வைவஸ்வத நமோஸ்துதே. ஆசமனம்.