|
Post by kgopalan90 on Mar 7, 2020 1:40:06 GMT 5.5
முதலில் விவாஹம், பின்னர் ப்ரவேச ஹோமம், ஸ்தாலி பாகம், ஒளபாஸனம், சேஷ ஹோமம் என ஐந்தும் நடக்கும்.
திருமண மேடையில் கோலம் போட்ட இடத்தில் பட்டு பாயை நான்றாக மடித்து போட்டு, அதில் மணமக்களை கிழக்கு பக்கம் பார்த்தபடி அமர செய்ய வேண்டும்.
இப்போது பெண் வீட்டு புரோஹிதர், பிள்ளை வீட்டு புரோஹிதர் என இரு புரோஹிதர் இருப்பர்.
மனப்பெண்ணின் தாயாரும், தப்பனாரும் இப்போது அவசியம் பெண் பக்கத்தில் இருக்க வேண்டும்.
வைதீகருக்கு தேவை படும் சில்லரை நாணயங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும்.
விவாஹ மந்திரங்களின் அர்த்தம் முன் கூட்டியே கேட்டு புரிந்து கொண்டு, அவசர படாமல் கல்யாண காலத்தில் சொல்லபடு மெல்லா மந்திரங்களையும் சரியாக நன்றாக உச்சரித்து, சடங்குகளையும், ஹோமங்களையும்
குறிப்பட்ட படி செவ்வனே செய்வதால் புது மண தம்பதிகளின் வாழ்வு சீரோடும், சிறப்போடும்,
பாசப்பிணைப்போடும், இன்பம் நிறைந்ததாக இருக்கும் என்பது திண்ணம்.
விவாஹத்தில் 1, அனுக்ஞை;2.கணபதி பூஜை;
3. வர ப்ரேக்ஷனை;4.கன்னிகா தானம்;5. கூறை புடவை அளித்தல்;6. மதுபர்கமும் கோ தானமும் 7. நுகத்தடி வைத்தலும் மாங்கல்ய தாரணமும்; 8.பாணி க்ரஹனம்
9. ஸப்த பதி; 10. லாஜ ஹோமம். என்று வரிசை யாக நடைபெறும்.விவாஹம் என்பது நிறைவு பெறுகின்றது இந்த லாஜ ஹோமத்துடன் தான்.
அனுக்ஞை= சம்மதம் என்று இந்த இடத்தில் அர்த்தம். தாம்பாளத்தில் தாம்பூலம், தக்ஷிணை வைத்து கையில்
ஏந்திய வண்ணம் அஶேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்ப்பிதாம் இமாம் ஸெளவர்ணிம் யத் கிஞ்சித் தக்ஷி
ணாமபி யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலஞ்ச ஸ்வீக்ருத்ய ஆவயோ: உத்வாஹ கர்ம கர்த்தும் யோக்கிதா ஸித்தி ரஸ்து இதி அனுக்ரஹான.
என்று கூறி தக்ஷிணை தந்து விவாஹம் செய்து கொள்வதற்கு ஏற்ற யோக்கியதையை பெற்று கொள்கிறான் மணமகன்.
ஒ வித்வாங்களது ஸபையே தங்களது திருவடியில் ஏதோ கொஞ்சம் ஸ்வர்ண தக்ஷிணை ஸமர்பிக்கிறேன். இதை உயர்ந்த
தக்ஷிணையாக தாம்பூலத்துடன் பெற்றுக்கொண்டு, எங்களுக்கு விவாஹம் செய்து கொள்வதற்கு ஏற்ற யோக்கியதை உண்டாக வேன்டுமென்று அனுகிரஹம் செய்யுங்கள்.
என்பதாகும். தக்ஷிணையை பெற்றுக்கொண்ட அந்தணர்கள், ததாஸ்து; யோக்கியதா ஸித்திரஸ்து என்று சொல்வார்கள்.
எல்லா வித கர்மாக்களிலும் துவக்கத்தில் இதை சொல்வார்கள். அந்தணர்கள் சொல் தேவ வாக்கா க கருத படுகிறது.
2, விக்னேஸ்வர பூஜை:-
மஞ்சள் பொடியால் கணபதி பிடித்து வைத்து த்யானம், ஆவாஹனம் என்ற 16 உபசார பூஜை கணபதிக்கு செய்து விக்னங்கள் வராமல் காத்தருள ப்ரார்திக்க வேண்டும்.
சங்கல்பத்தில் ஸுபே ஸோபனே ---- ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் தர்ம ப்ரஜா ஸம்பத் யர்த்தம் வரான் ப்ரேஷயிஷ்யே. என்று கூறி
ஸங்கல்பம் செய்து பின்னர் கணபதி யதா ஸ்தானம் செய்து அக்ஷதை புஷ்பங்களை புரோஹிதர் ஆசீர்வாதம் செய்து அளிக்க
அதை சிரசில் தரித்து கொள்ள வேண்டும். இங்கு வரனால் சொல்லப்படும் இரண்டு மந்திரங்களின் பொருள்.
க்ருஹஸ்தாஸ்ரமத்தை அடைந்த பின் நான் செய்ய போகும் யாகத்தில் நான் அளிக்க போகும்
ஸோம ரஸத்தை பருக போகும் இந்திரன் , நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதை விரும்புகிறான்.என்றும் தேவர்களை
ப்ரார்த்தித்து, தேவர்களே எனக்காக செல்லும் இவர்களது மார்கங்கள் நல்ல படியாக இருக்கு மாறு செய்வீராக. அர்யமா, பகன் என இரு தேவர்களும் எங்களை நல்ல முறையில் சேர்த்து
வைக்கட்டும்.எங்களுடைய தாம்பத்யம் ஒற்றுமையுடன் கூடியதாக இருக்கும்படி நீங்கள்அருள் புரிவீர்களாக என்றுமாகும்.
3. வர ப்ரேஷனை.
பெண்ணின் தந்தை தனது மனைவி ஸமேதராக அந்தணர்களை நமஸ்கரித்து தாம்பாளத்தில் தாம்பூலம், தக்ஷிணை
வைத்து அசேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்ப்பிதாம் இமாம் ஸெளவர்ணிம் யத் கிஞ்சித் தக்ஷிணாமபி
யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலம் ச ஸ்வீக்ருத்ய
தசானாம் பூர்வேஷாம் தசானாம் பரேஷாம் ஆத் மனஸ்ச ஏக விம்சதி குலோத்தாரன த்வாரா நித்ய நிரதிசயானந்த சாஸ்வத ப்ருஹ்ம லோகா அவா
ப்தியர்த்தம் ஸ்ரீ மஹா விஷ்ணு ப்ரீத்யர்த்தம் கன்யகா தானாக்ய மஹா தானம் கர்த்தும் யோக்யதா ஸித்திம் அனுக்ரஹாண. என்று சொல்லி கன்யகா தானம் செய்ய சம்மதம் கேட்கிறார்.
அதாவது திதி வார நக்ஷத்திரங்கள் சொல்லி எனக்கு முன்னால் என் குலத்தில் பிறந்த பத்து பேரும், நானும், எனக்கு பின்னே என் குலத்தில்
பிறக்க போகும் பத்து பேரும், ஆகிய 21 பேரை நற்கதி அடைவிப்பதின் மூலமாக அழிவற்றதும். அளவற்ற ஆனந்தமும் உள்ளதான சாஸ்வதமான
ப்ருஹம லோகத்தை அடைவதற்காக , மஹா விஷ்ணு வின் ப்ரீதியை பெறுவதற்காகவும்,
கன்னிகாதானம் என்னும் மஹா தானத்தை செய்கிறேன் என்று ஸங்கல்பம் செய்து கொண்டு,
விக்னேஸ்வர பூஜை செய்து கன்னிகா தானம் செய்கிறார். மஹா விஷ்ணுவே மாப்பிள்ளை வடிவில் வந்து தனது கன்னிகையை ஏற்பதாக
கருதி அவரது பாதங்களை பூஜிகின்றார்.
விக்னேஸ்வரரை யதா ஸ்தானம் செய்த பின்னர் க்ரஹ ப்ரீதி செய்ய வேண்டியது அவசியம். கன்யா தான காலத்தில் உண்டாகும்
தோஷங்களை நிவர்த்திக்கும் பொருட்டு நவகிரஹ ப்ரீதிக்காக சிறிது தக்ஷிணையை ப்ராஹ்மணர்களுக்கு கொடுப்பதே க்ரஹ ப்ரீதியாகும்.
இதன் பின்னர் மணமகனை விஷ்ணு ஸ்வரூபமாக எண்ணி , மஹா விஷ்ணு ஸ்வரூபஸ்ய வரஸ்ய இதம் ஆஸனம்;
ஸகல ஆராதனை: ஸ்வர்ச்சிதம் மஹா விஷ்ணூ ஸ்வரூப வர ஸ்வாகதம்; இதம் தே பாத்யம். என்று கூறி மணமகனுக்கு நல்வரவு கூறுவதாகவும்,அர்க்கியம், பாத்யம், ஆசமனீயம்
அளித்து வரனின் கால்களை அலம்பி இருவரும் ஆசமனீயம் செய்வதாகவும் கூறப்படுகிறது.
கால்களை அலம்பும் போது தத் விஷ்ணோ: பரமம் பத்ஸதா பஶ்யந்தி ஸுரய: என்ற வேத மந்திரத்தை உச்சரிக்கிறார்கள். இதன் கருத்து.
மஹா விஷ்ணுவினுடைய உயர்ந்த பரம பதமானது உலகெல்லாம் ப்ரகாசமாக விளங்குகிறது. அதை குற்ற மற்ற புண்யசீலர்கள்
ஆன பெரியவர்கள் எப்பொழுதும் பார்த்து போற்றுகின்றனர்.அத்தகைய மஹா விஷ்ணுவின் பாதமாக ,வரனான உம்மை கருதி பூஜிக்கிறேன்
என்பதாகும்.
இப்போது பெண்ணின் தந்தை தனது பெண்ணை குறிப்பிட்ட மணமகனுக்கு கன்னிகாதானம் செய்வதாக கூறி , பெண்ணின் முந்தய மூன்று
தலைமுறை பெரியவர்களின் பெயர்களையும் அவரது கோத்திரத்தையும் சொல்லி, அதே போல்
பிள்ளையின் முந்தய மூன்று தலை முறை பெரியவர்களின் பெயர்களையும், அவர்களது கோத்திரத்தையும் சொல்லி இந்த திருமணம்
எல்லோருக்கும் சம்மதமா என்று முஹூர்த்த திற்கு வந்துள்ள எல்லா பந்துக்களிடமும் சம்மதம் கேட்பதாக அமைந்துள்ளது.
எல்லோரது சம்மதமும் கிடைத்த பிறகு தான் விவாஹம் தொடரும். அந்த காலத்தில்.
4. கன்னிகாதானம்:-
வர ப்ரேஷனை ஆனபின்னர், ( நெல் நிரம்பிய மூட்டை) நெல் கோட்டை என்பர். நெல் கோட்டை ஒன்றின் மேல் பெண்ணின் தகப்பனார் கிழக்கு முகமாக
அமர்ந்திருக்க அவரது மடியில் மணப்பெண் அமர அவளது கைகளில் பழம் தேங்காய், தாம்பூலம், ஆகியவற்றை
வைத்து ,பெண்ணின் தாயாரை தீர்த்தம் விட சொல்லி பிள்ளைக்கு தனது மகளை தானமாக அளிப்பார். அப்போது
கன்யாம் கனக ஸம்பன்னாம் கனகாபரணைர் யுதாம் தாஸ்யாமி விஷ்ணவே துப்யம் ப்ருஹ்ம லோக
ஜினீஷயா வஸ்வம்பரா: ஸர்வ பூதா: ஸாக்ஷண: ஸர்வ தேவதா: இமாம் கன்யாம் ப்ரதாஸ்யாமி பித்ரூனாம் தாரணாய ச கன்யே மாமாக்ரதோ
பூயா: கன்யே மே பவ பார்ஸ்வயோ: கன்யே மே ஸர்வதோ பூயா: த்வத்தானான் மோக்ஷ மாப்னு யாம் ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம்
விபாவஸோ; அநந்த புண்ய பலதம் அதஶ் சாந்தி ம் ப்ரயஸ்சமே.என்று கூறி தானம் செய்கிறார்.
இதன் பொருள்;- தங்க நகைகள் பூட்டிய எனது கன்னிகையை , ப்ருஹ்ம லோகம் செல்ல வேண்டும் என்ற ஆசையினால் விஷ்ணு ரூபமான உமக்கு அளிக்கிறேன்.
உலகை தரிகின்ற ஸர்வ தேவர்களும்,ஸர்வ பூதங்களும் ஸாக்ஷியாக இருக்கட்டும். பித்ருக்கள் நன்மை
பெற இந்த கன்னிகையை தானம் செய்கிறேன். ஓ கன்யே தேவி எனக்கு எதிரிலும் பக்கத்திலும் எங்கும் இரு.உன்னை தானம் செய்வதால் மோக்ஷம் அடைய வேண்டும், குழந்தைகளை
பெறுவதற்காகவும்,புருஷனுடன் கூட இந்த கன்னிகை இருந்து ஸர்வ கர்மாக்களையும் செய்யும் பொருட்டும் தானம் செய்கிறேன்.
தானம் செய்பவர் கிழக்கு நோக்கியும், மணமகன் மேற்கு நோக்கியும் கன்னியின் தாய் வடக்கு
நோக்கியும் இருக்க வேண்டும்.என்பது கன்னிகா தான முறை.
மேற்கண்ட ஸ்லோகங்கள் எல்லாம் சொல்லி , கன்னிகையின் வலது கரத்தை ஜலதாரையுடன் தாம்பூல தக்ஷிணையுடன் வரனது கரத்தில் அளிக்க வேண்டும்.
அப்போது மண மகன் தேவஸ்ய த்வா ஸவிது ப்ரஸவே அசுவினோர் பாஹுப்யாம் பூஷணோ ஹஸ்தாப்யாம் ப்ரதிக்ருஹ்ணாமி என்ற மந்திரம் கூறி கன்னிகையை ஏற்று கொள்ள வேண்டும்.
ஸவித்ரு தேவன் நமக்கு நன்மை தருவத ற்காக அஸ்வினி தேவர்களுடைய பாஹு `களாலும் பூஷாவினுடைய கரங்களினாலும் இதை பெற்று கொள்கிறேன்.
சிறந்தவரான ஆங்கீரஸ் உன்னை ஏற்றுக்கொள் ளட்டும். நமது தோளிலிருந்து முழங்கை வரை உள்ள பகுதிக்கு பாஹு என்று பெயர்.
அங்கு அதிஷ்டமான தேவதையாக வசிப்பவர் அசுவினி தேவர்கள்.அதற்கு கீழே உள்ளது கரம் எனப்படும். இதற்கு அதிஷ்டான தேவதை பூஷா,
இந்த இருவர் பெயராலும் வாங்கி ஆங்கீரஸிடம் அளிக்கிறோம்.ஆகையால் இந்த பொருள் நேரிலோ, மறைமுகமாகவோ பரமாத்மாவிற்கு அளிக்கபடுகிறது.
அவ்வாறு நாம் தானம் வாங்கிய பொருளை நல்ல விதத்தில் பயன் படுத்தினால் தான் தானம்
வாங்கிய பாபம் அகலும். ஆதலால் தானம் வாங்கிய கன்னிகையை கண்ணும் கருத்துமாக காக்க வேண்டிய கடமை அதிக மாகிறது.
5, கூறை புடவை அளித்தல்.
முன் சொன்னது போல் மணமகள் தன் தந்தையின் மடி யில் அம்ர்ந்திருக்க மணமகன் ஒரு தட்டில் புடவை, ரவிக்கையை அவளிடம் கீழ் கண்ட மந்திரம் சொல்லி கொடுப்பான்.
பரித்வா நிர்வண கிர: இமா: பவந்து விசுவத: வ்ருத்தாயும் அனுவ்ருத்தய: ஜுஷ்டா பவந்து ஜிஷ்டவ:
அதாவது ஏ தேவேந்திரனே உன் அருளால் இந்த கன்னிகையை சுற்றி கட்டப்பட்ட புடவை அவளுக்கு சுகத்தையும் பெருமையையும் தரட்டும்
உம்மை விட சிறந்த தேவர்களை நீங்கள் உபாசி க்கிறீர்கள். ஆதலால் நாங்கள் கூறுகின்ற இந்த வாக்கும் வ்ருத்தி அடைந்து உம்மை ஸேவிக்க
ட்டும். நீங்கள் இவளுக்கு பரம ஸெள பாக்கி யங்களை தாருங்கள் என்பதாகும். மணமகள் தனது மணாளனுக்கு நமஸ்காரம் செய்து விட்டு புடவையை வாங்கி கொள்ள வேண்டும்.
மணமகனின் சகோதரியே இப்பவும் புடவை கட்டி விட செல்ல வேண்டும்.
ஒன்பது கஜ புடவையான அதன் உள் தலைப்பை நான்கு விறர்கடையான அகலத்தில் எட்டு முதல் பன்னிரன்டு வரை அவரவர் உடல்
சரீர வாகிற்க்கு தக்க வாறு கொசுவம் வைத்து கொண்டு,, இடது காலின் பின் பக்கத்தில் கொசுவம் வரும்படியாக புடவையை பிடித்து
கொண்டு , மீதியுள்ள புடவையை முன்பக்கமாக சுற்றி வலது பக்கத்தில் கொசுவிய பகுதியோடு சேர்த்து இறுக்க மாக முடிச்சு போட வேண்டும்.
இவ்வாறு செய்த பின் வலது காலின் கீழ்பகுதி புடவை கரை பகுதியை அந்த காலின் அடியில் குதி காலால் அழுத்தி பிடித்து கொண்டால்
( புடவை கட்டி முடியும் வரை) கால் பகுதியில் புடவை தூக்கி கொள்ளாமல் தழைய இருக்கும்.
முடிச்சு போட்ட பகுதியின் மற்றொரு பக்கத்தை
சிறிது முன் பக்கமாக இடுப்பில் இடது பக்கத்தில் சொருகி கொள்ள வேண்டும்.பின்னர் முன் பகுதியிலுள்ள புடவையை சிறிது தளர்த்திய வண்ணமாக ,
இரு பார்டர்களும் சேர்த்த வண்ணம் நேராக முன் பக்கம் வயிற்று பக்கமாக நடுவில் செருகி
கச்சமாக, முழு புடவையும் பின் பக்கம் கொண்டு வந்து இடுப்பில் பின் பகுதியின் நடுவில் நன்றாக அவிழாமல் செருக வேண்டும்.
இவ்வாறு சொருகிய மேல் பகுதியின் இடது பக்க கரையிலிருந்து புடவையின் மீதி பகுதியை மட்டும் வலது பக்கமாக கொண்டு வந்து ,
வயிற்றின் நடுவில் செருகி,மீதி புடவையை இடது பக்கதிலிருந்து கொன்டு வந்து ஒரு சுற்று சுற்றிய பின் வலது தோள் வழியாக மேலாக்காக
போட்டு, தலைப்பு பகுதியை இரண்டாக மடித்து இடுப்பின் வலது பக்கத்தில் செருக வேண்டும். இவ்வாறு செய்ய சாதாரணமாக நீளம் சரியாக இருக்கும்.
தலைப்பு கட்ட நீளம் போதாமல் போனால் உள்ளே வைத்து கொசுவிய கொசுவங்களை குறைத்து கட்டலாம்.
தலைப்பு நீளம் அதிகம் ஆனால் தலைப்பு போடும் முன்னால் சிறிது புடவையை சற்று அதிக மாக செருகி சரி செய்து கொள்ளலாம்.
புடவை முழுவதும் கட்டிய பின்னர் ,வலது குதி காலால் அழுத்திய பகுதியை தளர்த்தி விடலாம்.
ஒரு காலின் பக்க கொசுவமும்,மற்றொரு காலின் பகுதியும் நன்கு தழைத்து ஒன்றுடன் ஒன்று இணையாக உள்ளதா என்று பார்த்து இழுத்து சரி செய்து கொள்ள வேண்டும்.
உட்காரும் போது கட்டை தளர்த்தி கொள்ள வேண்டும் என்றால் , வலது தோள் பகுதி புடவையின் கைபக்கத்திலுள்ள பகுதியை மேலிருந்து கீழ் பக்கமாக இழுத்த படி சரி செய்து கொள்ளலாம்.
புடவையை கட்டிய பின் மண மகள் முன்பு அணிந்து இருந்த மாலைகள் யாவற்றையும் மறக்காமல் அணிவித்து மண மேடைக்கு அவளது நாத்தனார் அழைத்து வர வேண்டும்.
சிலர் மடிசார் புடவை கட்டியதும் , முன்பு கட்டியிருந்த ஊஞ்சல் புடவையை ஒரு நாற்காலி யில் போட்டு அதில் மணப்பெண்ணை உட்கார
வைத்து ஊஞ்சலில் சுற்றிய எரிந்து கொண்டி ருக்கும் விளக்கை ஒரு தட்டில் வைத்து பெண்ணின் முன்பு மூன்று முறை சுற்றி ஏற்றி இறக்கும் பழக்கத்தை செய்வர்.
|
|
|
Post by kgopalan90 on Mar 7, 2020 0:51:32 GMT 5.5
காசி யாத்திரை:-
திருமணதினதன்று விடியற்காலையில் நாதஸ்வர இசையுடன் மணமகனுக்கென ஒரு ட்ரேயில், பற்பசை, ப்ரஷ், துண்டு, பற்பொடி, ஹேர் ஆயில், சோப், சீப்பு, கண்ணாடி, ஷேவிங்க் செட்;
செண்ட் போன்றவை வைத்து ஒரு இனிப்பும் கொண்டு சென்று வைக்க வேண்டும். மணமகன் ஸ்நானம் செய்வதற்கென நல்லெண்ணெய்,
சீயக்காய் பொடி, வாசனை பொடி வைக்க வேண்டும். ஒரு பித்தளை தவலையில் வென்னீர் வைக்க வேண்டும். தற்போது கீஸர் உள்ளது.
காலையில் மணமகனின் அத்தையோ அல்லது மாமியோ மணமகனின் தலையில் சிறிது எண்ணய் எடுத்து தேய்த்த பின் ஸ்நானம் செய்ய வேண்டும்.
அறுபது வருடங்களுக்கு முன்னால் டயரியில் எழுதி வைத்திருந்ததை பார்த்து எழுதுகிறேன்.
ஸ்நானம் செய்த பின் முதல் நாள் கொடுத்த முஹுர்த்த வேஷ்டியை பஞ்ச கச்சமாக கட்டி கொள்ள வேண்டும். வீபூதி சந்தனம் குங்குமம் இட்டுக்
கொண்டு, புது பூணல் இரண்டு போட்டுகொண்டு, கண்ணுக்கு மைதடவிகொண்டு,திருஷ்டி பொட்டு வைத்து கொண்டு, கழுத்தில் தங்க சங்கிலி,
கையில் விசிறி ஊன்று கோல், ஒரு ஆன்மீக புத்தகம்,காலில் புது செறுப்பு, ஒரு புதிய துண்டில் சிறிது அரிசி, பருப்பு, தாம்பூலம் வைத்து கட்டி,
இதையும் கையில் வைத்து கொண்டு, மாப்பிள்ளையின் தோழன் குடை பிடிக்க காசி யாத்திரைக்கு கிளம்ப வேண்டும்.
சிலர் வலது கையில் குடை பிடித்து, புத்தகம், விசிறி வைத்து கொண்டு இடது கையில் பரதேச கோல மூட்டையை மாட்டி கொண்டு,தடி கம்பை
எடுத்து கொண்டு,, பாதரக்ஷை தரித்து, கெட்டி மேளம் முழங்க சுற்றத்தார் புடை சூழ கிழக்கே சென்று வடக்கே போய் திரும்பி பெண் வீட்டார்
(கல்யாண மண்டபத்திற்கு)அருகில் கிழக்கு முகமாக நிற்க வேண்டும். அரிசி, பருப்பு தேங்காய், கூறை புடவை,ரவிக்கை, விளையாடல்
சாமான்கள்,இவைகளை கையில் எடுத்து கொண்டு. பிள்ளை வீட்டார் பரதேசி கோலத்துடன் வர வேண்டும்.
பெண் வீட்டார் பருப்பு தேங்காய், மஞ்சள், குங்குமம், சந்தனம்,பழம்,புஷ்பம் சக்கரை வெற்றிலை,பாக்கு, மஞ்சள் தேங்காய் இவைகளை வைத்து கொண்டு மாப்பிள்ளையை எதிர் கொண்டு அழைக்க வேண்டும்.
அப்போது அவனது கழுத்தில் முஹுர்த்த மாலையும், மாற்று மாலை இரண்டும் அணிவிக்க வேண்டும். இதற்கு பரதேச கோலம் என்று பெயர்.
இந்த கோலத்தில் மணமகன் தனது உறவினர் புடை சூழ சிறிது தூரம் செல்ல , பெண்ணின் தந்தை இரு மஞ்சள் தடவிய தேங்காய் களை
மணமகனுக்கு அளித்து தமது பெண்ணை அவனுக்கு மணமுடிப்பதாக வாக்களித்து மீண்டும் அழைத்து வருவார்.
அந்த தேங்காய்களை மணமகன் சோபனம் என இரு முறை சொல்லி வாங்கிக்கொண்டு தனது தந்தையிடம் தருவான்.
ஒவ்வொரு ப்ராஹ்மணனும் தனக்கு ஏற்பட்ட ரிஷி கடன், தேவ கடன், பித்ரு கடன் என்ற மூன்றையும் தீர்த்து விட்டே மோக்ஷத்தை பற்றி எண்ண வேண்டும்.
ப்ருஹ்மசர்ய நியமத்துடன் வேத அத்யயனம் செய்வதால் ரிஷி கடன் அகல்கிறது. தேவ கடன் யக்ஞம் செய்வதால் அகலும். நல்ல சந்ததி பிறந்தால் தேவ பித்ரு கடன் அகலும்.
ஆதலால் தேவ பித்ரு கடன் தீர விவாஹம் செய்து கொள்வது அத்யாவசிய மாகிறது.
நான் எனது கன்னிகையை அலங்காரம் செய்து
உமக்கு தானமாக தருகிறேன். அவளை மணம் புரிந்து கொண்டு ஒளபாசன அக்னியுடன் காசி செல்லலாம் தம் வீட்டிற்கு வாரும் என அழைத்து செல்வதாக இது அமைகின்றது.
நாரதர் ஸ்ம்ருதி கூறுகிறது:- கன்னிகா தானம் ஆவதற்குள் வதூ அல்லது வரன் தோஷமுள்ளவர் என அறிந்தால், இந்த கல்யாணத்தை நிறுத்தி வேறு விவாஹம் செய்யலாம் என்கிறது.
விளையாட்டில் காலிறுதி போட்டி, அரை இறுதி போட்டி, இறுதி போட்டி என்று இருப்பது போல் அக்காலத்தில் இதிலும் அமைந்துள்ளன.
மணமகளுக்கும் திருமண தினத்தன்று காலையிலேயே எண்ணெய் தேய்த்து மங்கள ஸ் நானம் செய்வித்து, நன்கு அலங்கரித்து
தலையில் ஜடை நாகம் வைத்து ஊஞ்சல் புடவையை கட்டிகொண்டு, முஹூர்த்த மாலை ஒன்றும் மாற்று மாலை மூன்றும் அணிவித்து தயாராக இருக்க வேண்டும்.
மாலை மாற்றும் நிகழ்ச்சி வரை மணமகளோ
மணமகணோ ஒருவரை ஒருவர் பார்த்தது கிடையாது. அந்த காலத்தில்.
வட ஆற்காட்டை சேர்ந்தவர்கள் பெண்ணுக்கு கொண்டை போடுவார்கள். காசி யாத்திரை முடிந்து மணமகன் ஊஞ்சல் அருகில் வந்ததும் பெண்ணை கூப்பிடுவர். அப்போது பெண்ணுடன்
இருக்கும் தோழி அழைத்து வர , பெண்ணின் மாமா அவள் கழுத்தில் இருக்கும் ஒரு மாற்று மாலையை எடுத்து அவள் கையில் தருவார்.
அதை அவள் தனக்கு வரவிருக்கும் கணவனுக்கு முதலில் அணிவிக்க வேண்டும். அதே போல் வரனின் மாமா ,
வரனின் கழுத்தில் இருக்கும் மாற்று மாலையை எடுத்து கொடுக்க அவன் அவளுக்கு அணிவிக்க வேண்டும்.
இம்மாதிரி மூன்று முறை செய்ய வேண்டும். அந்த காலத்தில், எட்டு அல்லது பத்து வயது பெண் குழந்தைக்கும், பத்து அல்லது பதினைந்து வயது ஆண் குழந்தைக்கும் திருமணம் நடக்கும்.
பெண்கள் மாலை மாற்றும் பாடல்கள் பாடுவது வழக்கம். மாலை மாற்றுவதை எல்லோரும் பார்ப்பதற்காக குழந்தைகளை தனது தோள்களில்
தூக்கி வைத்து கொண்டு மாலை மாற்றினார்கள்.
மணமகளோ மணமகணோ தனது என்று தனி தன்மையாக இல்லாது, விருப்பு, வெறுப்பு எல்லாவற்றிலும் ஒன்றாக , எண்ணம், செயல்,
வாக்கு யாவற்றிலும் ஒன்றி இருந்து வாழ்க்கை நடத்தி இனிய பேற்றை பெற வேண்டும்.என்பதை உணர்த்துகிறது.
சாதாரண மாக ஒருவர் அணிந்த மாலையை மற்றவர் அணிய கூடாது என்பது சாஸ்திரம்,
ஆனால் இங்கு ஒரு கன்னிகை தனது மணாளனுக்கு தனது மாலையையே அணிவிக்கும் போது அவர்கள் இருவரது உள்ளங்களுமொன்றாக
கலந்து ஈருடல் ஓருயிர் என இணைந்து விட்டதை காண்பிக்கிறது. ஆதலால் அன்னியர் அணிந்த மாலை என்ற பேச்சுக்கே இங்கு இட மில்லை.
மாலை மாற்றும் நிகழ்ச்சி முடிந்தவுடன் மாமாகளுக்கு சந்தனம், வஸ்த்ரம் அளிக்கும் வழக்கம் உண்டு.
மணமகளின் வலது கரம் எல்லா விரல்களும் சேர்ந்து குவிந்த வண்ணம் இருக்க வேண்டும். மாலை மாற்றுதல் ஆனதும் மணமகன் தனது
வலது கரத்தால் மணமகளின் குவிந்த வண்ணம் இருக்கும் மண மகளின் வலது கரத்தை பற்றிய வண்ணம் இருவரும் அலங்கரிக்க பட்ட
ஊஞ்சலில் அமர வேண்டும். மணமகள் மணமகனின் வலது பக்கத்தில் அமர வேண்டும்.
மழ நாட்டு ப்ரஹசரணம் பிரிவை சேர்ந்தவர் களுக்கு மணப்பெண் மணமகனின் இடது பக்கம் அமர வேண்டும்,
ஊஞ்சல் முடிந்த பிறகு பெண், மணமகனின் வலது பக்கத்தில் இருக்க வேண்டும்.
திருமணத்தன்று காலையிலும் மணடபத்தின் நுழை வாயிலில் ஒரு மேஜையின் மீது ஒரு தட்டில், சக்கரை,கல்கண்டு,புஷ்பம், சந்தனம், குங்குமம்,பன்னீர் இவற்றை வைத்து கொண்டு
திருமணத்திற்கு வருவோற்கு கொடுத்து வர வேற்க வேண்டும்.மண்டபத்தின் நுழை வாயில் முன்பாக கிழக்கு மேற்காக கட்டபட்டுள்ள ஊஞ்சலை புஷ்பங்களால் அலங்கரித்து
அதன் பலகையில் பட்டு பாயை நான்காக மடித்து போட்டு மணமக்கள் இருவரும் மழலை செல்வங்கள் புடைசூழ இந்த ஊஞ்சலில் அமர்வர்.
அப்போது பெண்கள் ஊஞ்சல் லாலி பாட்டு பாடுவர். குரல் வளம் படைத்த அனைவருக்கும் இது ஒரு சிறந்த சந்தர்ப்பம். நாதஸ்வர காரர்களும் இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கொள்வர்.
இச்சமயத்தில் பெண் வீட்டார் ஊஞ்சலுக்கான பருப்பு தேங்காய் ஜோடியில் தலையில் பூ சுற்றி, சந்தனம் குங்குமம் இட்டு, தாம்பூலம்,வாழை பழம் நிரம்பிய தாம்பாளங்களை ஏந்தி கொண்டும்
பிள்ளை வீட்டார் விளையாடல் சாமான் களையும். பிள்ளையின் தாயார் கூறை புடவையையும் அதன் மேல் திருமாங்கல்யமும் வைத்திருக்க வேண்டும்.
இந்த நிகழ்ச்சிக்கு பெண்ணிற்கு சீராக வைக்கபட்ட வெள்ளிகிண்ணம் ஒன்றில் சக்கரை, வாழை பழ துண்டங்கள்,கலந்த பாலையும் அதில் ஒரு தேக்கரண்டியும், , மற்றொரு கிண்ணத்தில் வெறும் பாலும் வைத்து கொள்ள வேண்டும்.
ஒரு தாம்பாளத்தில் பச்சை பிடி சுற்ற கேடரர் சாத உருண்டைகள் செய்து கொடுப்பார். அவரிடம் முன் கூட்டியே இந்த மாதிரி வேண்டும் என்று சொல்லி விட வேண்டும்
இந்த உருண்டைகளின் நிறம் அவரவர் ஊரை பொருத்து மாறுகிறது.
தஞ்சாவூர், திருச்சியை சேர்ந்தவர்கள் சிவப்பு நிற உருண்டைகள் போதும் எங்கிறாகள்.
மதுரையை சேர்ந்தவர்கள் மஞ்சள், சிவப்பு எனும் இரண்டு நிறங்களில் தனி தனியே தயாரித்து பிறகு அதை கலந்து வைக்கிறார்கள்.
வட ஆற்காடு,செங்கல்பட்டை சேர்ந்தவர்கள் வெள்ளை,மஞ்சள், சிவப்பு என மூன்று விதமாக தயார் செய்து வைக்கிறார்கள்.
இரண்டு பித்தளை சொம்புகளில் ஜலமும்,ஒரு அகல சிறிய பித்தளை அடுக்கில் நெல் இட்டு அதில் ஐந்து முகமுள்ள பித்தளை விளக்கின்
மேற்பகுதியை மட்டும் அந்த அடுக்கினுள் வைத்துஎண்ணய் திரி இட்டு ஐந்து முகங்களையும் ஏற்றி வைக்க வேண்டும்.
ஊஞ்சலில் அமர்ந்துள்ள மணமக்களது கால்களை பாலால் அலம்பி ,மணமக்கள் கையில் ஒரு கிண்ணத்தை அல்லது அட்டை யிலான கப்பில் பாலும் பழமும் ஒவ்வொருவராக தருவார்கள்.
மணமகள், மணமகன் இருவரது நெருங்கிய உறவு பெண்டிர்கள் ஒருவர் பின் ஒருவராக இதை செய்ய வேண்டும்.
முதலில் வெறும் பாலாக இருக்கும் கிண்ணத்தை இருவரது கால்களுக்கு அருகே வைத்து கொண்டு, இரு கை விரல்களாலும் பாலை தொட்டு
அவர்களது இரு கால்களிலும் என மூன்று முறைதொட்டு அலம்பி தமது புடவையின் மேல் தலைப்பால் துடைப்பது வழக்கம்.
பின்னர் பாலும் பழமுமாக இருக்கும் கிண்ணத்திலிருந்து தேக்கரண்டியால் மூன்று முறை மணமகளுக்கும், மணமகனுக்கும்
அவர்கள் கையில் வைத்துள்ள கப்பில் கொடுக்க வேண்டும். அவர்கள் அதை சாப்பிட வேண்டும்.
கை துடைக்க கர்சிப்பும் முதலிலேயே இருவருக்கும் கொடுத்து விடுங்கள்.
இவ்வாறு ஐந்து பேருக்கு குறையாமல் எத்தனை பேர் வேண்டுமானாலும் செய்யலாம்.ஒற்றை படையில் இருக்க வேண்டும்.
அடுத்த படியாக தாம்பாளத்தில் தயாராக வைக்க பட்டிருக்கும் சாத உருண்டைகளை தாங்கிய தாம்பாளத்தை கைகளில் எடுத்து தூக்கி
பிரதக்ஷிணமாக அதாவது தனது இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாக , கீழிருந்து மேலாக மண மக்களின் முன்பு மூன்று முறை சுற்ற வேண்டும்.
தட்டை கீழே வைத்து பின்னர் அதிலிருந்து தனது வலது கையால் ஒரு உருண்டை எடுத்து மணமக்களின் இருவரது தலை மேல் மூன்று
முறை பிரதக்ஷிணமாக சுற்றி, முதலில் கிழக்கு பக்கத்திலும், பிறகு மேற்கிலும், பிறகு தெற்கிலும் பிறகு வடக்கு பக்கத்திலும் என வீசி எறிய வேண்டும்.
வடக்கு பக்கத்தில் தான்முடிக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.
இவ்வாறு ஒருவருக்கு நான்கு உருண்டைகள் . நான்கு முறைகள் செய்ய வேண்டி வருகிறது.
இதற்கும் ஐந்து பேருக்கு குறையாமல் ஒற்றை படையில் எத்தனை பேர்கள் வேண்டு மானாலும் செய்யலாம்.
இதை பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் என மாறி மாறி செய்யலாம்.
பிறகு நெருங்கிய உறவினர் இருவர் பித்தளை சொம்பில் ஜலத்துடன் , மணமகளின் தாயார் விளக்கு வைத்த அடுக்கை வலது கையில் வைத்து கொண்டு ,
விளக்கு அணையாதிருக்க இடது கையால் புடவை தலைப்பால் மறைத்து கொண்டு மெதுவாக ஊஞ்சலில் உட்கார்ந்தி
ருக்கும் மணமக்களை சுற்றி வலம் வரவேண்டும். இது தஞ்சாவூர் பழக்கம்.
வட ஆற்காட்டை சேர்ந்தவர்கள் மூன்று பேர் சொம்புகளில் ஜலமும், இரண்டு பேர் விளக்குமாக ஏற்றி சுற்றுவார்கள்.
மழ நாட்டு ப்ருஹ சரணத்தை சேர்ந்தவர்கள், இரண்டு பேர் சொம்பில் ஜலமும், ஒருவர் விளக்கும், ஒருவர் பாலும், பழ கிண்ணத்துடனும்,
ஒருவர் பித்தளை படியில் அரிசியை நிரப்பி அதன் மேல் ஒரு தேங்காயை வைத்து கொண்டும் சுற்றுவார்கள்.
ஜலம் நிரம்பிய சொம்பை லேசாக சாய்த்த வண்ணம், வலது கையால் நீரை சிறிது சிறிதாய் தரையில் விட்ட வண்ணமும், சுற்ற வேண்டும்.
இவ்வாறு மூன்று முறை சுற்று ஆனவுடன் , மீதியுள்ள சொம்பு ஜலத்தினால் பிள்ளை, பெண் கால்களில் சிறிது விட்டு அலம்பிய பின்னர்
தாம்பாளத்தில் சுற்றபடாமல் மீதி இருக்கும் சாத உருண்டைகளை தண்ணீர் விட்டு கரைத்து பெண் வீட்டார் ஒருவரும், பிள்ளை வீட்டார் ஒருவரும்
சேர்ந்து மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து வாசலில் கொட்டி விட வேண்டும்.
வட ஆற்காட்டை சேர்ந்தவர் இதன் பின்னர் தனியாக ஒரு ஆரத்தி எடுப்பர்.
அதன் பின்னர் பெண்ணின் மாமியார் பெண்ணுக்கும், பிள்ளையின் மாமியார் பிள்ளைக்கும் முறையே வெற்றிலை,பாக்கு,
வாழை பழம், மட்டை தேங்காய் கொடுக்க அவற்றை மணமக்கள் மேளக்காரருக்கு கொடுத்து விடுவார்கள்.
யாராவது ஒருவர் ஒரு தேங்காயால் மணமக்கள் தலைகளில் மூன்று முறை இடமிருந்து வலமும்
பின்னர் வலமிருந்து இடமும் சுற்றி மணமக்கள் உள்ளே சென்றதும் தேங்காயை வாசலில் போட்டு சதுர் தேங்காயாக உடைக்க வேண்டும்.
மணமக்கள் இருவரும் முன்பு கூறிய படி மணமகன் மணமகள் கரத்தை பிடித்த படி இருவரும் முதலில் வலது காலை எடுத்து
வைத்து கெட்டி மேளம் முழங்க , பெண்டிர் கெளரி கல்யாணம் பாட முஹூர்த்த மேடை நோக்கி செல்ல வேண்டும்.
சிலர் இப்போது, மணமகன் மாமியார் கைகளை பிடித்து கொண்டு, மணமகள் மாமியார் கைகளை பிடித்து கொண்டு மணமேடை சென்று அமருகி றார்கள்.
இவை யாவும் வைதீகத்தை சேர்ந்தவை அல்ல.
ஊஞ்சலில் உள்ள சங்கிலிகள் கர்ம பாசத்தினால் மேலான வைகுண்டத்திலிருந்து பூமியில் இறங்கி இந்த மானிட பிறவியை பெற்றுள்ளோம் என்பதையும்
ஊஞ்சல் முன்னும், பின்னும் செல்வது வாழ்வில் நமக்கு ஏற்படும் இன்ப துன்பங்களை அறிவுரு த்துகிறது. நமது வாழ்க்கை சமுத்திர அலை போல் சஞ்சல மானது.
என்றாலும் எல்ல நிலைகளிலும் இந்த புது மண தம்பதிகள் மனதாலும் உடலாலும் ஒன்றி ,நிலையான அமைதியான இனிமையான ஒரு வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் நல்லவைகளை தேர்ந்தெடுத்து அசைவில்லா நிலையில் ஸ்திரமான ஒன்றை பின்பற்றி வாழ வேண்டும் என்பதை காட்டுகிறது.
நமது கண்களுக்கு புலப்படாத எத்தனையோ கிருமிகள் நம்மை தாக்க முற்படுகின்றன.என்பது நிரூபிக்க பட்ட உண்மை.
மஞ்சள் போன்ற கிருமி நாசினியும், சுண்ணாம்பு போன்ற பூச்சி கொல்லியும் சுற்றி சூழ்ந்துள்ள காற்றில் உள்ள கிருமிகளை அழிக்க உஷ்ணத்தை
ஏற்படுத்தும் . விளக்கும் உஷ்ணத்தை கொடுக்கும். பஞ்ச பூதங்களான ஆகாயம், பூமி, காற்று, ஜலம், நெருப்பு ஆகிய சாக்ஷியில் ,
திருமணம் நடக்கட்டும், என்பதனாலேயோ என்னமோ அக்காலத்தில் இம்மாதிரி வைத்திருக்கிறார்கள். பூத ப்ரேதாதிகள் தூரே
விட்டெரியும் அன்னத்தை பலியாக புசித்து துர் தேவதைகள் , பூத ப்ரேத ராக்ஷஸ பிசாசாதிகள் தம்பதிகளை அண்டாதிருக்கும் படி அந்த காலத்தில் இம்மாதிரி ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
கெட்டி மேளம் வாசிப்பது மற்ற அபசகுனமான வார்த்தைகள் எதுவும் காதில் விழாமல் தடுப்பதற்கே ஆகும்.
வெளி நாட்டில் எதிர் பாரா விபத்தில் உயிரிழந்த
வரின் இருதயம், கல்லீரல், சிறு நீரகம் எடுத்து உடனே ஆஸ்பத்ரியில் , இந்த அங்கங்கள் செயல் இழந்து போன நோயாளிகளுக்கு பொருத்தி குணமாக்குகிறார்கள்.
இது இவர்களுக்கு நன்றாக வேலை செய்கிறது. இத்துடன் விபத்தில் உயிரிழந்தவரின் குணங்களும் இவர்களுக்கு ஏற்படுகிறது.
இது வரை படம் வரைய தெரியாதவர்கள் இப்போது சிறு நீரகம் மாற்றிய பிறகு இவர்கள் அலக்ஷியமாக மிக நன்றாக படம் வரைகிறார்கள்.
விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரிடம் கேட்டத்தில் விபத்தில் உயிரிழந்த என் மகன் மிக சிறப்பாக ஓவியம் தீட்டுவான் என்று அவன்
வரைந்த ஓவியத்தையும் காண்பிக்கிறார்கள். இம்மாதிரி பலருக்கு அங்கு நடக்கிறது
இது வரை பாட்டு பாட தெரியாதவர்கள் இப்போது நன்றாக ப்பாடுகிறார்கள். இருதயம் மாற்றப்பட்ட ஒருவர்.
ஆதலால் மனம் எங்கு உள்ளது. உடலில் இருந்து யாரும் இது வரை கான்பிக்காததால் மனம் என்று ஒன்று கிடையாது. இதுவரை
இந்த இடத்தில் உயிர் இருக்கிறது என்று யாரும் காண்பிக்கவில்லை. ஆதலால் யாருக்கும் உயிர் இல்லை என்று சொல்கிறீர்களா.
இப்போது வைதீக முறைப்படி செய்ய வேன்டிய வைகள் ஆரம்பம். மண மேடையில் புரோஹிதர் குறிப்பிட்டவை எல்லாம் தயாராக வைக்க வேண்டும்.
ஊஞ்சலுக்கு வைத்திருந்த பருப்பு தேங்காய் , தாம்பூலம், பழம், தேங்காய்கள், விளையாடல் சாமான். யாவற்றையும் கொண்டு வந்து இங்கு
மணமேடையில் வைக்க வேண்டும். புஷ்பம், ஹோமம் செய்வதற்கான பொருட்கள், , மஞ்சள் பொடி, சந்தனம்; குங்குமம்,அக்ஷதை,சக்கரை,
கல்கண்டு,பஞ்ச பாத்திரத்தில் ஜலம், என யாவற்றயும் வைத்து, கூறைபுடவை, திருமாங்கல்யத்தையும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
|
|
|
Post by kgopalan90 on Mar 7, 2020 0:33:50 GMT 5.5
பெண் ஆண் (வதூ, வரன் ) ( மணமகள்) (மண மகன்) இருவருக்கும் திருமணத்திற்கு முதல் நாள் காலை செய்ய வேண்டியது. ஏற்கனவே செய்திருந்தாலும் மறுபடியும் இப்போது செய்ய வேண்டும்.
ஜாதகாதி:- இரு வீட்டாருக்கும் சேர்த்து :- பெண் வீட்டார் வாங்கி கொடுக்க வேண்டும்.
தேவையான பொருட்கள்:- மஞ்சள் தூள் 100 கிராம்; குங்குமம் 50 கிராம்; சந்தனப்பொடி 100 கிராம்; வெற்றிலை 100; பாக்கு 100 கிராம்; வாழைப்பழம் 50; உதிரி புஷ்பம் 250 கிராம்;
தொடுத்த புஷ்பம் 20 முழம்.; மாலை-2; அன்ன ப்ராஸ்னத்திற்கு ஹவிஸ் 100 கிராம்; வெல்லம், தயிர், தேன், நெய் தனிதனியே வகைக்கு 20 கிராம்; தேங்காய் 20.; ஊதுவத்தி-2 பாக்கெட்;
கற்பூரம்2 பாக்கெட்; பூஜை மணி-2; கற்ப்பூரதட்டு-2; பஞ்ச பாத்திர உத்திரிணி-2. ;கிண்ணம் 2; டிரே4
வாழை இலை 20; கோதுமை 2கிலோ; பச்சரிசி 2 கிலோ. மாவிலை கொத்து 20; சுண்ணாம்பு-2 பாட்டில்;
நாந்திக்கு பச்சரிசி , பயற்றம் பருப்பு; வாழைக்காய் ; 9x5 வேஷ்டி- 9 பேருக்கு: வாத்யார் சொல்படி தலைக்கு 250 கிராம் பச்சரிசி; பருப்பு 50 கிராம்;
வாழைக்காய் 1; வேஷ்டி-1; தேங்காய் 1; வெற்றிலை, பாக்கு. பழம்; புஷ்பம். மாப்பிள்ளை வீட்டார்க்கு 9 பேருக்கு தலைக்கு 250 கிராம் பச்சரிசி, பயற்றம் புருப்பு 50 கிராம் ,தேங்காய் :வாழைக்காய், வாழை இலை, பழம், புஷ்பம்.
நாந்தி முடிந்தவுடனும் புண்யாஹ வசனம் செய்ய வேண்டும்.
ஹாரத்தி தாம்பாளம்; ஹாரத்தி கரைசல்; குத்து விளக்கு-2; திரிநூல்; எண்ணெய்; தீப்பெட்டி.-2;
பாலிகை-10; பாலிகை த்ரவியம்;- 250 கிராம். பாலிகை தெளிப்பதற்கு முதல் நாளே தண்ணிரில் ஊற போட வேண்டும். பாலிகை திரவியம் என்பது
மிகவும் சீக்கிரமாக முளைக்க கூடிய
கடுகு, உளுந்து, பயறு, நெல், கருப்பு எள்ளு. இவை மட்டும். வகைக்கு 50 கிராம் இரு வீட்டார்க்கும். சேர்த்து , வீபூதி 2 பாகெட்; கலசத்திற்கு சொம்பு-2; புது துண்டு கலசத்திற்கு சாற்ற 2;
ஆஸன பலகை அல்லது தடுக்கு 8;
ஹோம குண்டம்-1; பிள்ளை வீட்டார்க்கு மட்டும்.
வைதீக விவரம்:- அநுக்ஞை=பர்மிஷன்; 10 பேர்; விக்னேஸ்வர பூஜை;
ஆரம்ப க்ருஹ ப்ரீதி; முக்ய கால க்ரஹ ப்ரீதி; நாமகரண புண்யாஹ வசனம்; ஜப தக்ஷிணை; அன்ன ப்ராஸ்ன க்ரஹ ப்ரீதி; தேன் தயிர் ஹவிஸ் கொடுத்தல்.
பாலிகை தெளித்தலுக்கு புண்யாஹ வசனம்; ஓஷதி ஸூக்த ஜப தக்ஷிணை; ரக்ஷா பந்தன க்ரஹ ப்ரீதி; ஜப தக்ஷிணை; சூடா கர்மா; ஹாரத்தி
பருப்பு தேங்காய்:-
முந்திரி, பருப்பு தேங்காய் ஒரு ஜோடி; அல்லது
தேங்காய் பர்பி பருப்பு தேங்காய் ஒரு ஜோடி;
பொட்டு கடலை அல்லது நிலக்கடலை புருப்பு தேங்காய் சிறியது 5 .
லட்டு பருப்பு தேங்காய் ஒரு ஜோடி.
மனோகரம் பருப்பு தேங்காய் ஒரு ஜோடி;
மைசூர் பாகு பருப்பு தேங்காய் ஒரு ஜோடி;
4 தினுசுகள் வழக்கம். சக்திக்கு தகுந்தார் போல் செய்து கொள்ளவும்.
கை முறுக்கு 31; அதிரசம் 31; லட்டு-31.
முறுக்கு 31; முள்ளூ தேங்குழல் 31. மூடி போட்ட பாத்திரங்களில் வைக்க வேண்டும்.
பித்தளை குடம், குத்து விளக்கு. வெங்கல பானை கரண்டி, அருக்கஞ்சட்டி, சொம்பு மிக முக்கியம். சீர் பாதிரங்கள் லிஸ்ட் போட்ட படி வாங்கி வைக்கவும்.
அரிசி, வெல்லம், அங்க மணி சாமான்கள் வாங்கி வைக்க வேண்டும்.
புஷ்ப வகையராக்கள்.
மாப்பிள்ளை அழைப்பு மாலை-1;
நிச்சய தாம்பூலத்திற்கு பெண்ணுக்கு மாலை 1;
புஷ்ப சரம் 20 முழம்;
ஜாதகாதிக்கு பெண்ணுக்கு மாலை 1
விரதத்திற்கு மாப்பிளைக்கு மாலை-1.
முஹூர்த்த மாலை ஒரு ஜோடி;
மாற்று மாலை -5.
முஹுர்த்ததிற்கு புஷ்ப சரம் 25 முழம்.
நலங்கு , ரிசெப்ஷன் மாலை ஒரு ஜோடி.
நலங்கிற்கு புஷ்ப பந்து 2
புஷ்ப சரம் 15 முழம்;
சேஷ ஹோமத்திற்கு மாலை 2.
பாலிகை 10; ஒளபாசன பானை-1; மடக்கு பெரிது 5; சிறியது 5.
நெல் விதை கோட்டை-1; நெல் பொரி 1 லிட்டர்
உமி 2 கிலோ; விசிறி 2; விராட்டி-10; நெய் 500 கிராம்; சிறாய் தூள் 2 கிலோ; அம்மி-1;
மாப்பிள்ளைக்கு அஷ்ட விரதம்:-
அனுக்ஞை 8 பேர்; விக்னேஸ்வர பூஜை; காலா தீத க்ரஹ ப்ரீதி; ஆரம்ப க்ருஹ ப்ரீதி; கும்ப ரத்னம்; ப்ரதிமை; ஸ்வர்ண புஷ்பம்;ப்ருஹ்ம
தக்ஷிணை; ஜப தக்ஷிணை;உத் ஸர்ஜன அனுக்ஞை; க்ரஹ ப்ரீதி; நாந்தி 9பேர்;
புண்யாஹ வசனம்; ஜப தக்ஷிணை; மதந்தீ ஜப தக்ஷிணை; அங்குர புண்யாஹ வசனம்; பாலிகை ஜப தக்ஷிணை; ஓஷதீ ஸூக்த ஜப தக்ஷிணை;
ப்ரதி ஸர கும்பம்; ஜப தக்ஷிணை; ரக்ஷா பந்தன க்ரஹ ப்ரீதி, சாத்குண்யம், ஹாரத்தி.
அஷ்ட விரதமென்பது 8 விரதம். மிகவும் சுருக்கமாக இதை திருமணத்திற்கு முதல் நாள்
செய்கிறோம். பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் சந்தனம், குங்குமம் எடுத்து கொண்டு போய் கொடுத்து விரதம் நடந்து கொண்டிருக்கிறது.
விரதம் பார்க்க பாலிகை தெளிக்க வர வேண்டும் என்று அழைக்க வேண்டியது. பெண் வீட்டார் அப்பம், கண்ணாடி, பக்ஷணங்களை எடுத்து கொண்டு வந்து கெளரி கல்யாணம் பாடி சபையில் வைக்க வேண்டியது.
பிள்ளை வீட்டார் வந்த பெண் வீட்டார்களுக்கு பாலிகை தெளித்த பின் சந்தனம், குங்குமம், சக்கரை, தாம்பூலம் ,பணம் வைத்து கொடுக்க
வேண்டும். கங்கணம் கட்டும் போது கெளரி கல்யாணம் பாட வேண்டும். பாலிகை தெளிக்க மடிசார் புடவை, கட்டி கொண்டிருக்க வேண்டும்.
விரதம் முடிந்த பின் மாப்பிள்ளை ஸர்வாங்க க்ஷவரம் செய்து கொள்ள வேண்டியது. அஷ்ட விரதம் செய்வதனால் ப்ருஹ்மசாரியாக இருந்த போது செய்த எல்லா பாபமும் போய் விடுகிறது.
வைதீக கர்மாக்களை செய்யாதவர்கள் கடமையை கை விட்டவராகிறார்கள். நாம் நம் கடமையை செய்வதனால் நம் குடும்பம் க்ஷேமம் அடைகிறது
|
|
|
Post by kgopalan90 on Mar 6, 2020 22:51:10 GMT 5.5
வட ஆற்காடு சேர்ந்தவர்கள் , யஜுர் வேதம் இல்லா மற்ற வேத காரர்களும் 4 பாலிகை வைத்து பூஜிக்கிறார்கள்.
யஜுர் வேத காரர்கள் 5 பாலிகை நடுவில் ஒன்றும், கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என வைக்கிறார்கள்.
ஊர வைத்த விதைகளை முதலில் நடுவிலும், பின்னர், கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என்ற வரிசையிலும் ப்ரதக்ஷிண மாகவும் விதைகளை தெளிக்க வேண்டும்.
கருப்பு எள் சீக்கிரமாக முளை விட்டு வேகமாக வளரும் சுபாவ முள்ளது. ஆதலால் இங்கு இதை சேர்க்கிறார்கள். இதை சுப காரியங்களுக்கும் தாராளமாக சேர்க்கலாம். எந்த தவறும் இல்லை.
மொத்தம் தெளிப்பது ஒற்றை படையில் இருக்க வேண்டும், எத்தனை பேர் வேண்டுமானாலும் தெளிக்கலாம். பெண் வீட்டு பாலிகைகளில்
தெளிக்கும் சுமங்கலிகளுக்கு பெண் வீட்டினரும், பிள்ளை வீட்டு பாலிகைகளில் தெளிப்பவர்களுக்கு பிள்ளை வீட்டினரும், தாம்பூலம், சந்தனம், குங்குமம், பணம் கொடுக்க வேண்டும்.
நாந்தி இரு வீட்டாரும் செய்வர். பிறகு ரக்ஷா பந்தனம் என்னும் ப்ரதிஸர பந்தம்.
வெறும் வயிற்றுடன் தான் நாந்தி செய்ய வேண்டும். நாந்தி செய்பவர்களும், ப்ரதக்ஷிணம் வருபவர்களும், நாந்தி முடிந்த பிறகே டிபன் சாப்பிட செல்வார்கள்.
பிள்ளைக்கு வலது கையிலும், பெண்ணுக்கு இடது கையிலும் அவரவரது தந்தை கங்கணம் கட்டுவர்.
பெண்ணிற்கு பெண் வீட்டினரும், பிள்ளைக்கு பிள்ளை வீட்டினரும் ஆரத்தி எடுக்க வேண்டும். ஆரத்தி இருவர் எடுக்க வேண்டும்.
வடக்கு பக்கமாக இருக்கும் பெண்டிர் அந்த தட்டிலுள்ள ஆரத்தி கரைசலை வாசலில் கோலத்தின் மீது கொட்ட வேண்டும்.
ஆரத்தி தட்டில் போட்ட காசை இருவரும் சமமாக எடுத்து கொள்ள வேண்டும்.
பிறகு மணமகன் ஸர்வாங்க க்ஷவரம் செய்து கொள்ள வேண்டும். நாவிதர் ஸர்வாங்க க்ஷவரம் செய்யும் போது மணமகனின் தொடை இடுக்குகளில் தோல் வியாதி இருக்கிறதா
வீரியம் சீக்கிரம் வெளி வரும் நிலையில் இந்த மணமகன் இருக்கிறாரா என்பதை கண்டு பெண் வீட்டாரிடம் சொல்வர். அந்த காலத்து நாவிதர் களுக்கு நாட்டு வைத்தியம் நன்கு தெரியும்.
தற்காலம்போல் அந்த காலத்தில் வைத்திய வசதி இல்லாததால் , குழந்தை பிறந்த வுடன் தாயார் இறப்பதும், அக்குழந்தைக்காக வேறு திருமணம் செய்து கொள்வதும் அதிக மாக இருந்திருக்கிறது.
பிறகு எல்லோரும் சாப்பிட செல்ல வேண்டும்.
பிறகு ஸாயங்கால டிபன், காப்பி.
பிறகு மாப்பிள்ளை அழைப்புக்கு ஏற்பாடுகள். இது முழுவதும் லெளகீகம் தான்,இதில் வைதீக நிகழ்ச்சி இல்லை. இக்காலத்தில் இதுவும் தேவை இல்லா ஒன்று.
முன்பாகவே திருமண மண்டபத்திற்கு அருகாமையில் உள்ள கோயிலில் மாப்பிள்ளை அழைப்பிற்கு சொல்லி ஏற்பாடுகள் செய்து வைத்து,
தெருவில் மாப்பிள்ளை அழைப்பு கார் வருவதற்கு போலீசிடம் பர்மிஷன் , தேவைபடும் மற்ற பர்மிஷன்களும் வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.
மாலை 6 மணிக்கு சந்தியாவந்தனம், காயத்ரி ஜபம் எல்லா ஆண்களும் செய்து விட்டு கோயிலுக்கு மெதுவே நடந்து செல்வர், கீழே விரிக்கும் ஜமக்காளம் போன்றவற்றையும் எடுத்து செல்வர்.
பெண்கள் , வெற்றிலை, பாக்கு, சந்தனம், குங்குமம், மஞ்சள் தூள், கல்கண்டு, சக்கரை, பருப்பு தேங்காய் ஒரு தாம்பாளத்தில் ஒரு ஜோடி உச்சியில் பூ சுற்றி அதில் 4 வெற்றிலை, பாக்கு
கோயிலில் மணமகனை கிழக்கு முகமாக அமர செய்து புரோஹிதர் டிரஸ்ஸை ஓதி கொடுக்க அதை மனப்பெண்ணின் சகோதரன் மணமகனுக்கு அணிய செய்து ,
மாலை போட்டு பூசென்டை கையில் கொடுத்து சந்தனம் குங்குமம் இட்டு, பன்னீர் தெளித்து , பரிசு பொருட்கள் ஆன
மோதிரம், அல்லது, ப்ரேஸ்லெட், அல்லது செயின், கை கடிகாரம் முதலியன போட்டுவிட்டு
சர்க்கரை கல்கண்டு கொடுத்து பின்னர் அங்கு வந்துள்ள பிள்ளை வீட்டாருக்கு சந்தனம் கல்கண்டு கொடுத்து உபசரிக்க வேண்டும்.
பின்னர் கோயிலுக்குள் மாலையை கழற்றி கையில் வைத்து கொண்டு, சுவாமிக்கு அர்ச்சனை செய்து கொண்டு, பிறகு வெளியே தயாராக
இருக்கும் அலங்காரம் செய்த காரில் ஏறி உட்கார்ந்து கொண்டு மாலையை போட்டு கொண்டு, மணமகனை ஊர்வலமாக
மண்டபத்திற்கு அழைத்து வருவார்கள். இந்த ஊர்வலத்தில் பாண்ட் வாத்ய காரர்கள், பின்னர் நாதஸ்வர இசை மழையை பொழிந்து கொண்டு
வர, மாப்பிள்ளையின் பக்கத்தில் மழலை செல்வங்கள் நிரம்பி வழிய காற்றே இல்லாமல் உடல் வியர்த்து கொட்டும். மாப்பிள்ளையின் காரின் பின் பக்கம் பெண் வீட்டு பெண்டிர்கள்
பருப்பு தேங்காய், தேங்காய், பழம் என பல தாம்பாளங்கலை ஏந்திய வண்ணம் எல்லா உறவினர்களும் காரை தொடர்ந்து வருவார்கள்.
இடை இடையே வாண வேடிக்கையும் செய்கிறார்கள். மணப்பெண்ணை மற்றொரு காரில் அழைத்து வந்து ஊர்வலத்தை காணச்செய்
கிறார்கள். மண்டபம் வந்தவுடன் மண ப்பெ ண்ணையும் மாப்பிள்ளை அருகில் அமர வைத்து போட்டோ, வீடியோ எடுக்கிறார்கள்.
ஊர்வலம் வரும்போது மிக அதிக வயதான வர்கள், மண்டபத்திற்கு வர முடியாத நிலையில் உள்ளவர்கள் தங்கள் வீட்டு வாசலில் இருந்த படியே மணமகனை
பார்த்து ஆசீர்வதிக்கட்டும், என்பதற்கோ, அல்லது ஊர்வலம் வரும் போது மணமகனை பற்றிய தகவல்கள் ஊரில்லுள்ளவர்கள் எவரேனும்
பார்த்து, பெண் வீட்டாரிடம் சொல்லி ஆவன செய்யலாம் என்பதற்கோ இம்மாதிரி வைத்திருக்கலாம் அந்த காலத்தில்.
ஊர்கோலம் முடிந்து மணமகன் மண்டப வாயிலில் வந்து இறங்கியவுடன் முதலில் மணமகளின் தாயார் மணமகனுக்கு வெற்றிலை, பாக்கு பழம், ஒரு மட்டை தேங்காய் கொடுக்க வேண்டும். அதை வாங்கி மணமகன் மேளக்கா ரரிடம் கொடுப்பான்.
அதன் பின்னர் பெண் வீட்டார் இருவர் ஆரத்தி எடுக்க , யாராவது ஆண் நபர் ஒரு தேங்காயால் மணமகனின் தலையில் திருஷ்டியாக சுற்றி, சதுர் தேங்காயாக கீழே போட்டுடைக்க வேண்டும்.
இதன் பின்னர் மண மகளின் தந்தையாரும், மணமகனின் தந்தையாரும் சேர்ந்து நிச்சய தார்த்தம் செய்து கொள்ள வேண்டும். இதிலும் வைதீக கர்மா எதுவுமில்லை.
விக்னேஸ்வர பூஜை செய்த பின்னர், இன்னாருடைய குமாரியை இன்னாருடைய குமாரனுக்கு கொடுக்க இருப்பதாய் நிச்சயித்து,
இருப்பதையும் இந்த லக்னத்தில் பாணி கிரஹணம் செய்து கொடுக்க போவதாய் லக்ன பத்ரிக்கை வாசிப்பர்.
மணப்பெண்ணை நன்கு அலங்கரித்து , தலையில் ராக்கோடி வைத்து பின்னி ஜடை நாகம் வைத்து, பூவினால் அலங்காரங்கள் செய்து
மண மேடையில் அந்த காலத்தில் அமர செய்வார்கள். மாப்பிள்ளை அழைப்புக்கு வைத்த பருப்பு தேங்காயை பிள்ளை வீட்டினர் மண மேடையில் கொண்டு வந்து வைக்க வேண்டும்.
வெற்றிலை, பாக்கு பழங்கள், பன்னீர்,சந்தனம், குங்குமம். சக்கரை, கல்கண்டு, புஷ்பம் யாவற்றையும் வைத்து , மணப்பெண் மேடைக்கு வரு முன்னர் பிள்ளை வீட்டினர் எல்லோரையும்
நிச்சய தார்த்ததிற்கு வரும் படி அழைத்து வந்தவர்களுக்கு, சந்தனம், குங்குமம், சக்கரை, கல்கண்டு கொடுத்து உபசரிக்க வேண்டும்.
பெண்ணின் தந்தை, பிள்ளையின் தந்தையிடம் தாம்பூலம், பழங்கள், தேங்காய், புஷ்பம் இவற்றுடன் கல்யாண பத்ரிக்கை வைத்து ,
மறு நாள் இந்த லக்னத்தில் கன்னிகா தானம் செய்து கொடுப்பதாய் தெரிவிக்க , பிள்ளை வீட்டு புரோஹிதர் அந்த பத்ரிக்கையை எடுத்து எல்லோர் முன்னிலையிலும் வாசிப்பர்.
மணமகனின் தந்தை பழத்தட்டுடன் தனது சம்மதத்தை தெரிவித்தவுடன் மணப்பெண்ணை அழைத்து வரச்சொல்வர்.
மணப்பெண்ணிற்கு மாலை அணிவித்து அழைத்து வர ,அவளது தந்தைக்கு வலது பக்கம் அருகில் மணையில் உட்கார சொல்லி, பிள்ளையின் தந்தை
நிச்சயதார்த்த புடவையை புரோஹிதர் மந்திரம் முழங்க கெட்டி மேளம் கொட்ட பெண் தனது மாமனாருக்கு நமஸ்காரம் செய்து பெற்று கொள்ள வேண்டும்.
அந்த புடவையை பெண்ணிற்கு நாத்தனார் ஆக போகும் பெண் அழைத்து சென்று மணமகளுக்கு தலைப்பு நிறைய விட்டு கட்டி விட வேண்டும்.
புடவை கட்ட நாத்தனார் வர வேண்டும் என்று வைத்ததிற்கு காரணம், மணப்பெண்ணை மிக அருகில் பார்த்து ஏதேனும் குறை கண்டால் , அவர்களது ஆயிரம் காலத்து பயிரான வாழ்க்கையை காக்க வழி வகுக்கலாம் என்பதே.
அவர்களது உறவு சுமுகமாக இருக்க வழி கோலும். மணப்பெண்ணுக்கும் பிள்ளை வீட்டினர் மீது இருக்கும் பயம் சிறிது தெளியும். தைரியத்தை ஏற்படுத்தும் ஒரு வாய்ப்பு. அந்த காலத்தில் இதற்காக இம்மாதிரி வைத்து இருக்கி றார்கள்.
பெண் புது புடவை கட்டி கொண்டு வருவதற்குள்
பெண்ணின் தந்தை பிள்ளையார் பூஜை செய்து , எந்த வித விக்கினமும் இன்றி திருமணம் இனிதே நடைபெற ப்ரார்த்தித்து கொள்ள வேண்டும்.
மணப்பெண் தன் தந்தையின் அருகில் உட்கார, பெண்ணின் நாத்தனார் பெண்ணின் கழுத்திலும், கைகளிலும் சந்தனம் பூசி , நெற்றியில் குங்குமம் இட்டு,சர்க்கரை, கல்கண்டு கொடுத்து , தலையில் சிறிது புஷ்பம் வைத்து
மாலை ஒன்றை போட்டு , ஒரு ப்ளாஸ்டிக் பையில் வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் போட்டு, இந்த பையை மணமகளின் புடவை தலைப்பில் வைத்து, கீழே விழாதபடி சொருகி விட வேண்டும்.
வட ஆற்காடு, தென் ஆற்காட்டை , சேர்ந்தவர்கள் இதை அவர்களது இல்லத்திற்கு வந்த பிறகு செய்கிறார்கள்.
திரு நெல்வெலி காரர்கள் இத்துடன் பயறு அல்லது பொட்டு கடலையும் சேர்த்து வைத்து கட்டுகிறார்கள்.
புடவை தலைப்பில் ப்ளாஸ்டிக் பை பொருட்களை வைத்து கட்டுவதை மட்டும் மண பெண்ணை நிற்க வைத்த படி கட்டலாம்.
அந்த காலத்தில் மணமகன் இங்கு வர மாட்டார். இந்த காலத்தில் வந்தால் தகப்பனாருக்கு வலது பக்கத்தில் உட்காரலாம்.
இதன் பின்னர் பெண் அவளது பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் நமஸ்காரம் செய்த பிறகு அமர வேண்டும்.
இப்போது ஒரு பெண் வீட்டாரும் ஒரு பிள்ளை வீட்டாரும் என இருவர் பாட்டு பாடி ஆரத்தி எடுத்து இவ்வைபவத்தை நிறைவு செய்ய வேண்டும்.
ஆரத்தியில் பெண்ணும், பெண்ணின் அப்பாவும் காசு போட வேண்டும். இதன் பின் மணபெண் அவளது மடியில் கட்டபட்டுள்ள தாம்பூலத்தை வெளியே எடுத்து வைத்து விடலாம்.
மணமகனுக்கான முஹூர்த்த வேஷ்டியையும், மணமகளுக்கான கூறை புடவையையும் ஓதி பெண்ணின் தந்தை பிள்ளையின் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும்.
மணமகனுக்கு மட்டும் தனியாக இன்று இரவு மாமியார் சாப்பாடு பரிமார வேண்டும். அந்த காலத்து வழக்கம்.
இதன் பிறகு நெருங்கிய உறவினர்களுக்கு தனது சக்திக்கேற்ப துணி மணிகளோ, பணமோ புரோஹி தர் ஓதிட அளிக்கலாம்.
இதன் பின்னர் விருந்தினர்களை உணவு உண்ண செய்து தாம்பூலம் அளிக்க வேண்டும்.
பிள்ளை வீட்டார் விளையாடல் சாமான் களையும்
விளையாடல் சாமான் என்பதில் பெண்ணுக்கு வேண்டிய அலங்கார பொருட்கள் இருக்கும்.
இதை பிள்ளை வீட்டார் வாங்கி வைத்திருக்க வேண்டும். இப்போது பிள்ளை வீட்டார் விளையாடல் சாமான் களையும், பிள்ளயின் தாயார்
கூறை புடவையையும், அதன் மேல் திருமாங்க ல்யமும் வைத்து கையில் வைத்திருக்க வேண்டும்.
இன்றும் மணமகன்/ மணமகள் பெற்றோர் மடிசார், பஞ்ச கச்சத்துடன் இருக்க வேண்டும்.
|
|
|
Post by kgopalan90 on Mar 6, 2020 22:43:02 GMT 5.5
கல்யாண பத்திரிக்கை அடித்து வந்தவுடன் குல தெய்வம் கோயிலுக்கு சென்று அபிஷேகம், அர்ச்சனை செய்து வஸ்த்ரம் வாங்கி சாற்றி, கோயிலுக்கு காணிக்கை செலுத்தி பத்ரிக்கை கோயிலுக்கு கொடுத்து நல்ல படியாக கல்யாணம்
நடக்க வேண்டும் என வேண்டி கொண்டு வர வேண்டும். பிறகு காஞ்சி அல்லது சிருங்கேரி அல்லது உங்கள் மடாதிபதியிடம் வெற்றிலைபாக்கு, பழம், புஷ்பம் பத்ரிக்கை தக்ஷிணை வைத்து ஆசீர்வாதம் பெற்று வர வேண்டும்.
பிறகு உங்கள் நெருங்கிய உறவினர்களுக்கு தாம்பூலம், பழம், புஷ்பம், தேங்காய், மஞ்சள், குங்குமம் , பத்ரிக்கையும் வைத்து கல்யாணத்தை வந்து நடத்தி கொடுக்கும் படியாக கூப்பிட வேண்டும்.
மற்றவர்களுக்கு நேரிலும், கம்ப்யூட்டர் மூலமும் பத்ரிக்கை அனுப்பி கூப்பிடலாம். உறவினர்களுக்கு ஜவுளி வாங்க வேண்டிய லிஸ்ட் தயார் செய்து புடவை,ரவிக்கை துண்டு, சுடிதார்; வேட்டி, துண்டு, பேன்ட், ஷர்ட்
இத்யாதிகள் வாங்கி அவரவர் பெயர் கவர் மேல் எழுதி வைத்து கொள்ள வேண்டும். கட்டு சாத கூடைக்கும் இருக்க வேண்டும் என்ற கட்டு பாடுடன் மேளத்திற்கு அட்வான்ஸ் ,கேடரரிடம் கொடுக்க சொல்லவும்.
இக்காலத்தில் எல்லாம் கேடரர் பார்த்து கொள்கி றார். குடை, பாத ரக்ஷை, தடி கம்பு, பரதேச கோல துண்டு, சோப்பு, சீப்பு,கண்ணாடி, ஷேவிங்க் செட்; பற்பசை; டூத் ப்ரஷ்; துண்டு , மண மக்கள் பெயரிட்ட பட்டு பாய் இவைகளும் கேட்டரர் வாங்கி கொடுத்து விடுவார். பர தேச கோல
துண்டில் அரிசியும், பருப்பும் போட்டு கட்டி வைக்க வேண்டும். ஊஞ்சல் , அதற்கு புஷ்ப அலங்காரம், மண மேடை புஷ்ப அலங்காரம் இவைகளும் கேடரர் பார்த்து கொள்வர்.
நல்ல நாள் பார்த்து கூறை புடவை, ரவிக்கை, திரு மாங்கல்யம், காலுக்கு மெட்டி, வெள்ளி குங்கும சிமிழ், பஞ்ச பாத்திரம் உத்திரிணி, சந்தன பேலா, தாம்பாளம், பால் இட கிண்ணம் 2, வாங்கி வைத்து கொள்ள வேண்டும். பிள்ளை வீட்டாரிடம் , திருமாங்கல்யம் எடை, தினுசு அவர்கள் பாதி பெண் வீட்டார் பாதியும் போட வேண்டுமா என்பதை எல்லாம் கேட்டு செய்ய வேண்டும்.
திருமண கல்யாண மண்டபம் தேர்ந்து எடுத்து பிள்ளை வீட்டாரும் வந்து பார்த்து த்ருப்தி சொன்ன பிறகே அட்வான்ஸ் தர வேண்டும். ஜெனெரேட்டர், ஏ. சி ; ஏ சி இல்லாத ரூம்கள் தேவையானவை உள்ளதா , தண்ணீர் , கார் பார்கிங்க் ஏரியா த்ருப்தி கரமாக உள்ளதா; ஜீஸர் உள்ளதா என்று எல்லாவற்றையும் கவணிக்கவும் போதிய அளவு ஜமக்காளம், தலை காணி உள்ளதா?. பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் தங்கும் அறைகளில் சோப், சீப்பு, தேங்காய் எண்ணைய், மஞ்சள் தூள், குங்குமம், பற்பசை, வீபுதி இவைகளை சிறிய அளவில் வாங்கி ஜிப் ப்ளாஸ்டிக் பையில் போட்டு ஒரு அறைக்கு ஒன்றாக வைத்து விடவும்.
திருமணத்திற்கு முதல் நாள் காலை பிள்ளை வீட்டார் திருமண மண்டபத்திற்கு வருவார்கள். இதற்கும் முதல் நாள் இரவு கல்யாண
மண்டபத்திற்கு சென்று , திருமண மண்டபத்தை அலம்பி அரிசி மாவில் 2 டிராப் பெவிகால் கலந்து இழை கோலம் போட்டு வைத்திருப்பார்கள் உங்கள் கேடெர்ரர் ஆட்கள். வாசலிலும், மண்டபத் திலும், பிள்ளை வீட்டார் தங்க இருக்கும் அறையிலும் , பெண்ணின் சீர் பொருட்கள் வைக்கும் அறையிலும், இழை கோலம் போட வேண்டும்.
நுழை வாயிலில் வாழை மரம், தோரணம் கட்டி இருப்பார்கள். பூந்தோரணம் மண்டபத்திலும் அலங்கரிக்க வேண்டும். இதுவும் கேடரர் வேலை.
பிள்ளை வீட்டார் தங்கி இருக்கும் அறையில் ஒரு இடத்தில் கிழக்கு பக்கமாக சுவாமி படம் வைத்து குத்து விளக்கு திரி,எண்ணைய், தீபெட்டி வைத்து தயாராக இருக்க வேண்டும். அவர்கள் வரும் சமயத்தில் விளக்கு ஒருவர் ஏற்றவேண்டும். மற்றொரு அறையில் பெண்ணின் சீர் வரிசைகள் பாத்திரங்கள் அழகாக வரிசை படுத்தி வைத்து அரிசி, பருப்பு, வெல்லம்,நெய், அப்பளம், வடகம், சீர் பக்ஷண வகைகள், தீபாவளி லேஹியம், அங்கமணி சாமாங்கள் வைக்க வேண்டும். சீரில் வைக்க வேண்டிய பக்ஷணங்கள்:- திரட்டி பால் 500 கிராம்; 7 சுற்று கை முறுக்கு 31; மற்ற உபயோகத்திற்காக 5 சுற்று முறுக்கு 51; முள்ளு தேங்குழல் 40; ஒன்பது அங்குல அளவில் அதிரசம் 31; ஆறு அங்குல அளவில்51; விரத அப்பம் 11; பெரிய சைஸ் லட்டு 31; சிறிய சைஸ் லட்டு 51; மைசூர் பாகு பெரிது 31. சிறியது 51; ப்ளாஸ்டிக் கவர்களில் ஒரு கை முறுக்கும், சிரிய சைஸ் லட்டு, அல்லது சிறிய சைஸ் அதிரசம் ஒன்றும் போட்டு வைக்கலாம்.
முன்னதாக பிள்ளை வீட்டாரிடம் இது பற்றி பேசி அதன் படி, அவரவர் வசதிபடி செய்துகொடுங்கள். இது தவிர ஒரு சம்படத்தில் 500 கிராம் திரட்டி பால் கையில் வைத்து கொண்டு, பிள்ளை வீட்டாரின் வருகையின் போது , பெண்ணீன் தாயார் பிள்ளையின் தாயாரிடம் கொடுக்க வேண்டும்.
மாப்பிள்ளை அழைப்பிற்கு சர்கரையில் செய்த பருப்பு தேங்காய்.(மைசூர் பாகு பருப்பு தேங்காய்.) இதை நிச்சயதார்தத்திற்கு பிள்ளை வீட்டார் கொண்டு வந்து வைப்பர். ஊஞ்சலுக்கு வெல்லம் போட்ட மனோகரம் பருப்பு தேங்காய். ஊஞ்சல் முடிந்தவுடன் இதை முஹூர்தத்தில் மேடையில் வைக்க வேண்டும். வெல்லம் போட்ட பொட்டு கடலை 5 சிறிய பருப்பு தேங்காய் ஆசீர்வாதத்திற்கு.
கிரஹ ப்ரவேசத்திற்கு1 ஜோடி பருப்பு தேங்காய். (லட்டு பருப்பு தேங்காய்) இது முதல் நாள் விரததிற்கு பெண் வீட்டார் வைத்தது. இதை பிள்ளை வீட்டார் கிரஹ ப்ரவேசத்திற்கு வைப்பர். உதக சாந்திக்கு ஒரு ஜோடி பருப்பு தேங்காய். (பர்பி பருப்பு தேங்காய்).
ஒரு பித்தளை குடம், பச்சைபிடி சுற்ற ஒரு பித்தளை தாம்பாளம், 2 பித்தளை சொம்பு; சிறிய அடுக்கு; ஐந்து முகமுள்ள குத்து விளக்கு; இவை பித்தளை யில் போதும்.
திருமண பெண்ணிற்கான புடவைகள்:- நிச்சய தார்தத்திற்கு ஒன்று; பிள்ளை வீட்டார் வாங்குவார் இது சிலர் வீட்டு பழக்கம்.முதலில் பேசி தெரிந்து கொள்ளவும்.
ஊஞ்சலுக்கு ஒன்று; பெண்ணின் மாமா வாங்குவர். முஹூர்தத்திற்கு 9 கஜம் புடவை ஒன்று. கிரஹ ப்ரவேசத்திற்கு ஒன்று; உதக சாந்திக்கு ஒன்று. வரவேற்புக்கு ஒன்று. மொத்தம் ஆறு புடவைகள். விளையாடல் புடவை - பிள்ளை வீட்டார் வாங்குவர்.
மணமகனுக்கு வேஷ்டி. 9x5வேஷ்டி முஹூர்தத்திற்கு.ஒரு ஜோடி. மாற்று வேஷ்டி 8 முழம். ஒரு ஜோடி.
கிரஹ ப்ரவேசத்திற்கு ஒன்று. 9x5 பட்டு வேஷ்டி ஒன்று. மாப்பிள்ளை அழைப்பிற்கென டிரஸ் தைக்க முன் கூட்டியே பெண் வீட்டார் பிள்ளை வீட்டாரிடம் பணம் கொடுக்க வேண்டும். இதில்
பேண்ட், ஷர்ட், கோட், டை; ஷூ, ஸாக்ஸ், யாவும் அடங்கும். காசி யாத்திரைக்காக விசிறி, குடை, காலணி,
கைத்தடி, புத்தகம், துண்டு; வாங்கி வைக்கவும் முஹூர்தத்தன்று காலையில் மண மகனுக்கு அளிக்க என ட்ரேயில் டூத் பேஸ்ட்; ப்ரஷ்;டவல்
ஷேவிங்க் செட்; சீப்பு; கண்ணாடி. ஹேர் ஆயில்; டால்கம் பவுடர், செண்ட், ஆகியவை தேவை.
மாப்பிள்ளை வீட்டார் உள்ளூரிலேயே இருந்தால் அவர்களை நேரில் சென்று பத்திரிக்கை, தாம்பூலம்,பழம், புஷ்பம் வைத்து திருமணத்திற்கு அழைக்க வேண்டும். அவர்களை வேன் வைத்து கொண்டு வரசொல்லி
வேன் டிரைவருக்கு பணம் கொடுத்து விடவும். வெளியூரிலிருந்து வருபவர்களை, ரயில் நிலைய த்திலிருந்து/பேருந்து நிலையதிலிருந்து யாராவது சென்று அழைத்து வர வேண்டும்.
அவர்கள் மண்டபம் வரு முன்பே மண்டபத்தின் நுழை வாயிலில் சந்தனம், குங்குமம், சக்கரை கல்கண்டு, புஷ்பம் இவற்றுடன் வர வேற்க தயாராக இருக்க வேண்டும்.
சிற்றுண்டி, காபி தயாராக உள்ளதா என்பதையும் பார்த்து கொள்ளவும். மாப்பிள்ளையை வரவேற்க கையில் தயாராக மாலையும், ஆரத்தி கரைசலும்
இருக்க வேண்டும்.மாப்பிளை வீட்டார் மண்டபத்தின் முன் வந்ததும் , மணப்பெண்ணின் தந்தை அல்லது மணப்பெண்ணின் சகோதரர்
மாப்பிளைக்கு மாலை இட பெண் வீட்டார் ஒருவர், ஆரத்தி எடுத்து அழைக்க சந்தனம், குங்குமம், சக்கரை, கல்கண்டு, புஷ்பம் இவற்றை கொடுத்து , பெண்ணின் தாய், பிள்ளையின் தாயிடம் திரட்டு பால் கொடுத்தும் வர வேற்று உபசரிக்க வேண்டும்.
வசதி உள்ளவர்கள் மாப்பிளை வீட்டார் எல்லோருக்கும் சிறிய சந்தன மாலை அணிவித்து அழைக்கிறார்கள்.
அவர்களுக்கு என ஏற்பாடு செய்துள்ள அறையில் தயாராக உள்ள குத்துவிளக்கை ஏற்றி பிறகு அவர்களை அழைத்து செல்லுங்கள்.
அவர்களுக்கான வசதி அனைத்தையும் கவனித்து செய்யவும். இந்த சமயத்தில் பெண் வீட்டு புரோகிதர் பந்தகால் முஹுர்த்தம் செய்ய கூப்பிடுவார்.
பந்தகால் முஹுர்த்தம் ஆன பிறகு தான் திருமண விழா துவங்குவது வழக்கம். சாஸ்திரப்படி மந்திரங்க ளை கூறி ஒரு மூங்கில் கம்பை வைத்து பூஜை செய்து தூணில் கட்டுவர்.
கல்யாண மண்டபத்தில் ஒரு பக்கம் பிள்ளை வீட்டாரும், மற்றொரு பக்கம் பெண் வீட்டாரும் தனி தனி இடங்களில் வைதீகரது அறிவிப்பின் படி அவரவர் வைபவத்தை தொடங்குவார்கள்.
கேடரர் வைதீகரர்களுக்கு தேவையானவைகளை இங்கு தயாராக வைத்திருப்பார்கள். பிள்ளை வீட்டார் விரதம் செய்ய துவங்கும் போது பெண்ணின் அத்தையானவள் ஒரு ஜோடி பருப்பு தேங்காய், அதிரசமும், அப்பமும், ஒரு
முகம் பார்க்கும் கண்ணாடியும் அங்கு கொண்டு வந்து வைக்க வேண்டும்.இந்த அத்தைக்கு பதில் மரியாதையாக பிள்ளை வீட்டார், தாம்பூலம், பழம், புஷ்பம், பணம் வைத்து கொடுப்பார்கள்.
மணமகன்/ மனமகள் தாய் தந்தையர் மடிசாரும், பஞ்ச கச்சமும் அணிந்திருக்க வேண்டும்.
|
|
|
Post by kgopalan90 on Mar 6, 2020 17:24:18 GMT 5.5
.
பாக்கு வெற்றிலை மாற்றுதல்:-= நிச்சயதார்த்தம்
ஜாதகம் பொருந்தி, பெண்ணுக்கும் பிள்ளைக்கும் பிடித்து , எல்லோர் மனதிற்கும் த்ருப்தி ஏற்பட்ட பின் ,சம்பந்தம் கொள்வது என்று உறுதியானபின்
, பிள்ளை வீட்டில் பாக்கு வெற்றிலை மாற்றி கொள்வது வழக்கம். அந்த காலத்தில் வாய் வார்த்தையின் நிச்சயத்திலேயே நம்பி இருந்தனர்.
இக் காலத்தில் விவாஹத்திற்கு முன்னதாகவே ஒரு நல்ல நாளில் பிள்ளை வீட்டில் இந்த நிகழச்சி நடை பெறுகிறது.
இதற்கு பெண் வீட்டார் ஒரு புதிய சம்படத்தில் திரட்டி பால் 500 கிராம்,, பருப்பு தேங்காய் ஒரு ஜோடி, ஏதோ ஒரு வகை இனிப்பு 31;
வெற்றிலை, பாக்கு, புஷ்பம், மாலை, கல்கண்டு, சந்தனம், குங்குமம். , மஞ்சள் தூள், ஆப்பிள், ஆரஞ்ச், பைன் ஆப்பிள்,
பன்னீர் திராட்சை, கொய்யா, மாதுளை, வாழை பழம், பலா பழம், மாம்பழம் (கிடைக்கும் சீசனில்)
வகைக்கு ஒரு டஜனும், வாதாம் பருப்பு, பேரீச்சை, பிஸ்தா பருப்பு, வால்னட்,கிஸ்மிஸ் பழம், முந்த்ரி பருப்பு வகைக்கு ஒரு கிலோவும்; சக்கரை பொம்மைகள்;
சர்க்கரை, அதில் கலர் பெப்ப்ர் மின்டால் பெயர்கள் எழுதி வைக்கிறார்கள்.
ட்ரேகளில் இவைகளை வைத்து அலங்கரிக்கி றார்கள்.
மணமகனுக்கு பேண்ட், ஷர்ட். டை; ஷூ மணமகள் வீட்டார் வாங்கி செல்ல வேண்டும்.
திருமணதிற்கென வைக்க இருக்கும், வெள்ளி சந்தன பேலா, குங்கும சிமிழ், இவற்றை இந்த வைபவத்தின் போது பிள்ளை வீட்டாரிடம்
சேர்பிக்க வேண்டும். கல்யாண தினதன்று இவைகளை பிள்ளை வீட்டார் கல்யாண மணடப
திற்கு கொண்டு வருவார்கள். இதை முன் கூட்டியே பேசி கொள்ளலாம். பெண் வீட்டு புரோஹிதரும், பிள்ளை வீட்டு ப்ரோஹிதரும் இந்த வைபவத்திற்கு வருவார்கள்.
பிள்ளை வீட்டார் அவர்களது மொட்டை மாடியில் இடமிருந்தால் அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் ஷாமினா போட்டு, டேபிள், நாற்காலி
போட்டு, தண்ணீர், ப்ளாஸ்டிக் டம்ப்ளர்கள் வாங்கி கேடரர் இடம் சொல்லி டிபனோ அல்லது சாப்பாடோ சமயத்திற்கு ஏற்றார்
போல் போட்டு, தாம்பூல பையில் தாம்பூலம், பழம் அல்லது தேங்காய், பரிசு பொருள், பணம் போட்டு கொடுக்க வேண்டும். மாதர்களுக்கு
இத்துடன் ரவிக்கை துண்டும் சேர்த்து கொடுக்க வேண்டும். சாப்பாடு அல்லது டிபன், காபி, தாம்பூல பை இவைகள் பிள்ளை வீட்டார் சிலவு.
மொட்டை மாடியில் இடமில்லா விட்டால் பக்கத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் செய்ய வேண்டும். இதுவும் பிள்ளை வீட்டார் சிலவு.
முதலில் பெண் வீட்டார் விக்னேஸ்வர பூஜை; கிரஹ ப்ரீதி செய்து வாங் நிச்சய பத்திரிக்கை
வைத்து தாம்பூலம், பழம், தேங்காய் புஷ்பம் உள்ள தாம்பாலத்தை பிள்ளை வீட்டு தலைவரிடம் கொடுப்பார்
பிறகு பிள்ளை வீட்டு தலைவரும் பெண் வீட்டு தலைவரிடம் பத்ரிக்கை, தாம்பூலம், பழம், புஷ்பம் தேங்காய் கொடுப்பார்.
இப்போது வந்திருக்கும் அனைவருக்கும் சக்கரை, கற்கண்டு, சந்தனம் கொடுக்க வேண்டும்.
செளகரிய பட்டால் மண மகனையும், மண மகளையும் தனி தனியே கிழக்கு நோக்கி உட்கார வைத்து , பிள்ளைக்கு பெண்ணீன் தந்தையும், பெண்ணிற்கு பிள்ளையின் சகோதரியுமாக சந்தனம் கொடுத்து, , பெண்ணுக்கு
குங்குமமும், பூவும் கொடுத்து பிள்ளைக்கு பெண் வீட்டார் உடை அளித்து அதை அணிந்து வந்த பிறகு, மாலை போட்டு, அதே போல் பெண்ணிற்கு
பிள்ளை வீட்டார் வாங்கி கொடுத்த , புடவை கட்டி வர பெண்ணிற்கும் மாலை போடுவார்கள்.
வசதி உள்ளவர்கள் பிள்ளை வீட்டார் பெண்ணிற்கு நகையும், பெண் வீட்டார் பிள்ளைக்கு கை கடிகாரம், மோதிரம், மைனர் செயின் ,ப்ரேஸ்லெட் இத்யாதிகளில் ஏதோ ஒன்று வாங்கி போடு
வார்கள்.
பெண்ணின் பெற்றோர்கள் பிள்ளையின் பெற்றோர்களுக்கு புடவை, வேட்டி, துண்டு வாங்கி கொடுப்பார்கள்.
பிள்ளையின் பெற்றோர்கள் பெண்ணின் பெற்றோர்களுக்கு வேட்டி, துண்டு, புடவை வாங்கி தருவார்கள்.
அதன் பின்னர் ஆரத்தி எடுப்பார்கள். பெண் வீட்டு உறவுகாரர்களை பிள்ளைக்கும், பிள்ளை வீட்டோருக்கும், பிள்ளை வீட்டு உறவு காரர்களை பெண்ணுக்கும் பெண் வீட்டோருக்கும் அறிமுகம் செய்து வைப்பார்கள்.
பிள்ளை வீட்டிலேயே நடக்குமானால் குத்து விளக்கு, திரி நூல், எண்ணெய், கற்பூரம்,தீபெட்டி, ஊதுபத்தி, பஞ்ச பாத்திர உத்திரிணி ஆசன பலகை கொடுப்பார்கள்,
கல்யாண மண்டபம் என்றால் பெண் வீட்டார் தடுக்கு, பஞ்ச பாத்திர உத்திரிணி, குத்து விளக்கு, எண்ணெய், திரி நூல், தீப்பெட்டி, ஊதுவத்தி, கற்பூரம், கற்பூர கரண்டி முதலியவை எடுத்து செல்ல வேண்டும்.
திருமணம் ஆகாததால் பெண் தனியாகவும், பிறகு பிள்ளை தனியாகவும் நமஸ்காரம் செய்ய வேண்டும். இருவரும் சேர்ந்து இப்போது நமஸ்காரம் செய்ய கூடாது.
இரு தரப்பினரும் வாக்கு மாறாமல் இருப்பதற்காக இந்த வாங் நிச்சயம் செய்ய படுகிறது.
பெண் வீட்டுக்காரர்.
நிகழும் மங்களகரமான -------- வருஷம் ------
மாதம் ------ தேதி ----- கிழமை ----- திதி ------
நக்ஷத்திரம் -------- யோகம் கூடிய ஶுப
தினத்தில் உதயாதி நாழிகை ----- மேல் ----- குள்
------- ( ஊரின் பெயர் ) --------- கோத்ரம் --------
பேரனும் --------- குமாரனுமான சிரஞ்சீவி --------
ஊர் ------ கோத்ரம் --------- பெளத்ரியும் -------
குமாரியுமான ---------- யை பகவத் க்ருபையுடன் -------- தேதி நிச்சயமானால்) ------- வருஷம் ------- மாதம் -------- தேதி அன்று
சுப முஹூர்த்தத்தில் கன்னிகா தானம் செய்து
கொடுப்பதாய் இரு பக்கத்தாரின் ஸம்மதத்துடன்
பெரியோர்களால் நிச்சயிக்க பட்டது
இடம் --------- இப்படிக்கு.
தேதி --------
பிள்ளை வீட்டுக்காரர்.
நிகழும் மங்களகரமான -------- வருஷம் ------
மாதம் ------ தேதி ----- கிழமை ----- திதி ------
நக்ஷத்திரம் கூடிய -------- யோகம் கூடிய ஶுப
தினத்தில் உத்யாதி நாழிகை ----- மேல் ----- குள்
------- ( ஊரின் பெயர் ) --------- கோத்ரம் --------
பேரனும் --------- குமாரனுமான சிரஞ்சீவி --------
ஊர் ------ கோத்ரம் --------- பெளத்ரியும் -------
குமாரியுமான ---------- யை பகவத் க்ருபையுடன் -------- தேதி நிச்சயமானால்) ------- வருஷம் ------- மாதம் -------- தேதி அன்று
சுப முஹூர்த்தத்தில் பாணி க்ரஹணம் செய்து
கொள்வதாய் இரு பக்கத்தாரின் ஸம்மதத்துடன்
பெரியோர்களால் நிச்சயிக்க பட்டது
இடம் --------- இப்படிக்கு.
தேதி --------
நான்கு மூலைகளிலும் மஞ்சள் தடவி கைஎழுத்திட்டு கவரில் போட்டு கொடுக்கவும்.
இதை தாம்பாளத்தில் வைத்து பழம், புஷ்பம், இரு தேங்காய் களுடன் கொடுக்கும் போது
ஶோபனம், ஶோபனம் என்று சொல்லி கொண்டு இரு தரப்பினரும் பெற வேண்டும்.
ஒரு தேங்காயை பிள்ளையாருக்கு சதுர் தேங்கா யாக உடைக்கவும். மற்றொன்றை சுவீட் செய்து சாப்பிடலாம். திருமணத்திற்கு நாளாகும் என்றால்.
பெண்ணின் தகப்பனார் ஆசமனம் செய்து, சுக்லாம்பரதரம் சொல்லி, ப்ராணாயாமம் செய்து ஸங்கல்பத்தில் சுபே சோபனே முஹூர்த்தே -----
சுப திதெள ---------நக்ஷத்ரே -------- ராசெள ------ ஜாதாயாஹா --------- நாமின்யாஹா அஸ்ய:
மம குமார்யாஹா -------- வத்வாஹா---------
---------- நக்ஷத்ரே -------- ராசெள -------ஜாதஸ்ய
--------- சர்மன: அஸ்ய வரஸ்ய அனயோஹோ வதூ வரயோ: உத்வாஹார்த்தம்
வாங்க் நிச்சயம் கரிஷ்யே. ததங்கம் க்ரஹ ப்ரீதி தானம் ச கரிஷ்யே. அப உபஸ்பர்ஸ்ய.
பிறகு பிள்ளையார் பூஜை. பிறகு யதா ஸ்தானம். பிள்ளையாரை சிறிது வடக்கே நகர்த்தவும். க்ஷேமாய புணராகமனாய ச. என்று சொல்லவும். புஷ்பத்தை கர்த்தா மனைவி தலையில் வைத்து கொள்ளலாம்.
கிரஹ ப்ரீதி: ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அதஶாந்திம் ப்ரயஸ்சமே.
வதூவரயோ: உத்வாஹா வாங் நிச்சய முஹூர்த்த லக்னாபேக்ஷயா ஆதித்யாதீனாம்
நவானாம் க்ரஹானாம் ஆனுகூல்ய ஸித்தியர்த்தம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதா ப்ரீத்யர்த்தம் இதம் ஹிரண்யம் ப்ராஹ்மணேப்ய:
ஸம்ப்ரததே ந மம. என்று சொல்லி ஜலத்தை கீழே விட்டு தக்ஷிணையை ப்ராஹ்மணர்களுக்கு கொடுக்கவும்.
இரு பக்கத்து வாத்யார்களுக்கும் ஸம்பாவனை கொடுக்கவும்.
பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் கொடுத்த பழங்கள், உலர் பழங்கள்; ஸ்வீட், இத்யாதிகளை காலி அட்டை பெட்டிகளில் மாற்றி கொண்டு
தனது வீட்டிற்கு எடுத்து செல்வார்கள். தனது உறவினர்களுக்கு அதை பகிர்ந்து கொடுப்பார்கள்.
பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் அவரவர் வீடுகளில் சமாராதனை; ஸுமங்கலி ப்ரார்த்தனை செய்வார்கள்.
பிள்ளை வீட்டார் மறுமகள் வீட்டிற்கு வந்த பின்னும் சிலர் ஸுமங்கலி ப்ரார்த்தனை செய்வார்கள். ஒரு நல்ல நேரத்தில் ஒரு மஞ்சள் துணியில் பத்து ரூபாய் நாணயம் வைத்து
முடிந்து ஸுமங்கலி ப்ரார்த்தனை மறுமகள் வந்த பிறகு செய்கிறேன் என்று வேண்டி கொண்டு பிறகு செய்யலாம். வருடத்திற்கு ஒரு முறை தான் ஸுமங்கலி ப்ரார்த்தனை செய்ய முடியும்.
|
|
|
Post by kgopalan90 on Jan 30, 2020 20:28:13 GMT 5.5
sir, you may cut the hair with your scissors and keep it safely in a carry bag in your house. you may go to vaitheeswaran koil after 2 months . have tosure and return the carry bag hair at vaitheeswaran koil barber and come back.
|
|
|
Post by kgopalan90 on Nov 30, 2019 19:48:59 GMT 5.5
புதாஷ்டமி-04-12-2019. புதன் கிழமையும் அஷ்டமி திதியும் சேர்ந்து வருவது.
எந்த மாதத்திலாவது பெளர்ணமிக்கு பிறகு அல்லது அமாவாசைக்கு பிறகு வரும் புதன் கிழமை அன்று அஷ்டமி திதியும் வருமானால் அது புதாஷ்டமி விரதம், அல்லது சற்கதி விரதம் என பெயர்படும். அன்றைய தினம் விரதம் தொடங்க வேண்டும். வெல்ல பாகு மட்டுமே சிறிதளவு உட்கொள்ள வேண்டும். உள்ளங்கையிலே கடைசி மூன்று விரல்கள் கவரும் அளவை போல எட்டு பங்கு சாதம் தான் அவன் உட்கொள்ள வேண்டும்.
மாவிலையை தைத்து அதன் மேல் சாதத்தை கொட்டி , தர்பையால் கிளறி ஆற விட வேண்டும். அம்பிகையை பரிவாரங்களோடு பூஜிக்க வேண்டும். கற்கண்டினால் கலந்து தயாரிக்க பட்ட அன்னத்தை தானம் அளிக்க வேண்டும். விரத கதையை பக்தியுடன் கேட்க வேண்டும்.
புதாஷ்டமி -1.
அக்னி புராணம் 218 ம் பக்கம் உள்ள கதை.
ஒரு சமயம் தீரன் என்னும் அந்தணன் வசித்து வந்தான். அவனது மனைவி ரம்பை . மகன் கெளசிகன், மகள் விஜயை. அவனிடம் ஒரு எருது இருந்தது. அதன் பெயர் தனதன்.
ஒவ்வொரு நாளும் மகன் கெளசிகன் மற்ற பசுக்களுடன் தனது எருதையும் மேய்த்து வர ஓட்டி செல்வான்.
ஒரு நாள் அவன் கங்கையில் நீராடிக்கொண்டிருக்கும் போது திருடர்கள் அங்கு வந்து எருதை கவர்ந்து சென்று விட்டனர். அவன் சகோதரி விஜையையும் அவனும் எருதை தேடி நாற்புரமும் சுற்றி திரிந்தனர்.
அவ்வாறு சுற்றி வரும்போது ஒரு ஏரியை அடைந்தனர். அங்கே தேவ லோக மங்கையர் பலர் வந்து நீராடிக்கொண்டிருந்தனர்.
வெகு நேரமாக காளையை தேடி அலைந்து திரிந்ததால் கெளசிகன் மிகவும் களைப்பும் பசியுடனும் இருந்தான். அங்குள்ள தேவ மங்கையர்களிடம் தனக்கு ஏதாவது உணவு அளிக்குமாறு வேண்டினான்.
அங்குள்ள மங்கையர் நீர் உம்முடைய தகுதிக்கு ஏற்ப விரதம் இருக்க வேண்டும். அப்போது நாங்கள் உணவளிப்போம் என்றனர்.
கெளசிகனும் அவர்களிடம் விரதம் இருக்க வேண்டிய வழி முறைகளை கேட்டு தெரிந்து கொண்டு அதன் படி விரதம் இருந்தான்.
அதன் பலனாக அவனது எருதும் அங்கு வந்தது. உனவும் கிடைத்தது.
பசி நீங்கியதும் தனது எருதுடனும், விஜயையுடனும் வீடு திரும்பினான்.
தீரன் தனது குமாரியை ஒருவனுக்கு மணம் செய்து வைத்தான். காலகிரமத்தில் தீரனின் வாழ்க்கை முடிவடைந்தது.
விரதம் அனுஷ்டித்ததின் பலனாக கெளசிகன் அயோத்தி நகருக்கு அரசனானான்.
தீரனும் அவனது மனைவி ரம்பையும் வாழ் நாள் முழுவதும் வீணடித்து விட்டதால் நரகத்தில் கிடந்து துன்புற்றனர். அதை காண சகிக்காது விஜயை கண்ணீர் விட்டு துக்கித்தாள்.
தன் கணவனிடம் பெற்றோர் துன்பத்தை நீக்கி அருளுமாறு பல முறை வேண்டிக் கொண்டாள். அவள் கணவன் தர்மராஜன் தனக்கு அந்த சக்தி இல்லை என்று கூறி விட்டான். விஜயைக்கு மனம் குமுறுவதை விட வேறு வழி இல்லை.
இவ்விதமிருக்கையில் ஒரு நாள் எதிர் பாரா விதமாக பெற்றோர் நரகத்தை விட்டு நீங்கி செல்வதை பார்த்தாள்.
விஜையைக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. கணவனிடம் கூறினாள். கணவன் கூறினான். இப்போது உன் தமையன் நல்ல நிலையில் உள்ளான்.
புதாஷ்டமி விரதம் இருந்த பலன் அரச பதவி கொடுத்தது. அவன் மறுபடியும் இரு புதாஷ்டமி விரதம் இருந்து அவற்றின் பலனை தன் பெற்றோர்களுக்கு அளித்தான்.
அதன் பலனே உங்கள் பெற்றோர்களின் நரக துன்பத்திலிருந்து கரை ஏற்றியது. என்றான் தர்ம ராஜன்.
இவ்வாறு கணவன் கூறியதை கேட்டதும் விஜயையும் நியமத்தோடு விரதம் இருந்து பூர்த்தி செய்தாள். இதன் பலன் பேரின்ப வாழ்வு பெற்றாள்.
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் அஷ்டமி அன்று புனர்பூசம் நக்ஷத்திரமும் கூடி வந்தால்
அன்றைய தினம் அசோக மரத்தின் வேர்கள் எட்டை ஊற வைத்து நீரை மட்டும் உட்கொண்டு எவனொருவன்
விரதம் இருக்கிறானோ அவன் எல்லாவித துக்கங்க லிருந்து விடுபட்டவனாகிறான். அவனை ஒருபோதும் எந்த துக்கமும் அணுகாது.
அன்றைய தினம் அஷ்ட மாதாக்களை வழிபட்டால் அவனுக்கு எதிரிகள் என்பவர்கள் இருக்க மாட்டார்கள்.
அந்தணர்கள் யாக யக்யங்கள் செய்ய வேன்டும். இதற்கு வசதி இல்லாதவர்கள் இம்மாதிரி விரதங்கள் இருக்க வேண்டும்.
புதாஷ்டமி 01-04-2020 மற்றும் 12-08-2020 வருகிறது.
|
|
|
Post by kgopalan90 on Oct 21, 2019 20:45:40 GMT 5.5
ப்ரதக்ஷிண அமாவாசை 28-10-2019.
28-10-2019 திங்கட் கிழமை காலை 10 மணி வரை அமாவாசை உள்ளதால் அரச மர ப்ரதக்ஷிணம் செய்யலாம்.
ப்ரதக்ஷிணம்செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்.
1. ஆயுர் பலம் யஶோ வர்ச்ச: ப்ரஜா: பஶு வஸுனி ச ப்ரஹ்ம ப்ரஞ்ஞாம் ச மேதாம் ச த்வம் நோ தேஹி வநஸ்பதே.
2. ஸததம் வருணோ ரக்ஷேத் த்வாமாராத் வ்ருஷ்டிராஶ்ரயேத். பரிதஸ்த்வாம் நிஷேவந்தாம் த்ருணா நிஸுகமஸ்துதே.
3. அக்ஷிஸ்பந்தம் புஜஸ்பந்தம் துஸ்ஸ்வப்னம் துர்விசிந்தனம் ஶத்ரூணாம் ச ஹ்யஸ்வத்த ஶமய ப்ரபோ.
4. அஶ்வத்தாய வரேண்யாய ஸர்வ ஐஸ்வர்ய ப்ரதாயினே. நமோ துஸ்ஸ்வப்ன நாசாய ஸூஸ்வபன பல தாயினே.
5. மூலதோ ப்ருஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே அக்ரத: ஶிவரூபாய வ்ருக்ஷ ராஜாய தே நம:
6. அஶ்வத்த ஸர்வ பாபானி ஶத ஜன்மார்ஜிதானி ச நுதஸ்வ மம வ்ருக்ஷேந்த்ர ஸர்வ ஐஸ்வர்ய ப்ரதோ பவ.
7. யம் த்ருஷ்ட்வா முச்யதே ரோகை; ஸ்ப்ருஷ்ட்வா பாபை:ப்ரமுச்யதே. பதாஶ்ரயா சிரஞ்சீவி தம் அஶ்வத்தம் நமாம்யஹம்.
8. அஶ்வத்த ஸுமஹா பாக ஸுபக ப்ரியதர்ஶன. இஷ்ட காமாம்ஶ்ச மே தேஹி ஶத்ருப்யஸ்ச பராபவம்.
9. ஆயு: ப்ரஜாம் தனம் தான்யம் ஸெளபாக்கியம் ஸர்வஸம்பதம். தேஹி தேவ மஹா வ்ருக்ஷ த்வாமஹம் ஶரணம் கத:
10. ருக் யஜு: ஸாம மந்த்ராத்மா ஸர்வ ரூபி பராத்பர: அஶ்வத்தோ வேதமூலோ ஸா வ்ருஷிபி: ப்ரோச்யதே ஸதா.
11. ப்ருஹ்மா குருஹா சைவ தரித்ரோ வ்யாதி பீடித: ஆவ்ருத்ய லக்ஷ ஸங்கியம் தத் ஸ்தோத்ர மேதத் ஸுகீ பவேத்.
பல ஶ்ருதி பகுதி சேர்க்கபடவில்லை.
சேங்காலிபுரம் அனந்த ராம தீக்ஷிதரின் ஜய மங்கள ஸ்தோத்ரம் புத்தகத்தில் உள்ளது.
இதன் பொழிப்புரை.
வன மரங்களுக்கு நாயகனே. ஆயுள், பலம், கீர்த்தி, காந்தி, மக்கட் செல்வம், த்ரவ்யங்கள், வேதம் ஓதுவதில் திறமை, நல்ல புத்தி, மேதை திறன் ஆகியவற்றை அருள்வாயாக.
அஸ்வத்த மரமே- உமக்கு வருண பகவானின் பாதுகாவல் நாற்புறமும் இருக்கட்டும்.
உமது அருகே மழை நீர் பெருகட்டும். நாற்புறமும் உம்மை புல் சூழ்ந்து இருக்கட்டும். உமக்கு ஸுகம் உண்டாகட்டும்.
மரங்களின் அரசே கண் துடிக்கும் நோய், கை நடுக்கம், கெட்ட கனவுகள் காணுதல், தீய எண்ணங்களின் தாக்கம், எதிரிகளை குறித்த பயம் ஆகியவற்றை விலக்கி அருள்வீராக.
சிறப்புகள் மிக்கவரும், அனைத்து செல்வங்களையும் அருள்பவரும் , கெட்ட கணவுகளை களைபவரும், நல்ல கனவுகளை பலித மாக்குபவருமான வ்ருக்ஷராஜனே உமக்கு நமஸ்காரம்.
வேர் பகுதியில் ப்ருஹ்மா ஸ்வரூபமாகவும், நடு பகுதியில் மஹா விஷ்ணு ஸ்வரூபமாகவும், நுனி பகுதியில் சிவ ஸ்வரூபமாகவும், விளங்கும் வ்ருக்ஷ ராஜனே. உமக்கு நமஸ்காரம்.
மரங்களுக்கு இந்திரனான அரசே. நூற்றுகணக்கான பிறவிகளில் என்னால் ஈட்டப்பட்ட பாபங்கள் அனைத்தையும் விலக்கி , அனைத்து செல்வங்களையும் அருள்வாயாக.
கண்டாலே விலகும் ரோகங்கள், தொட்டாலே பாபங்கள் விலகி ஓடும். நெருங்கி வந்தால் போதும் நீண்ட ஆயுள் சித்திக்கும்.அத்தகைய அரச மரத்தை நான் நமஸ்கரிக்கின்றேன்.
கண்ணால் காண்பதற்கு ரம்யமானவர் நீர். நல்ல பாக்கியங்களை பெற்றவர் நீர்; ஹே அரச மரமே என் இச்சைகளை பூர்த்தி செய்வாயாக.எனது அக புற சத்ருக்களை ஜயித்திட அருள்வீராக.
தேவனே மஹா வ்ருக்ஷமே உன்னை சரணடைந்தேன். நீண்ட ஆயுள், நன்மக்கட்பேறு , நிதி, உணவு பொருட்கள், அழகு, ஸர்வ ஸம்பத் ஆகியவற்றை அருள்வீராக.
ருக் யஜுர் ஸாம வேத மந்த்ரங்களின் அந்தர் ஆத்மாவாக, அனைத்தின் சொரூபமாக பரந்து விரிந்துள்ள அஸ்வத்தமே. வேதங்களின் மூலமாகவே நீர் எப்போதும் ரிஷிகளால் போற்ற படுகிறீர்.
ப்ருஹ்ம ஹத்தி பீடித்தவரும், குருஹத்தி பாவம் பற்றபட்டவனும், வறுமையால் வாடுபவனும் , வ்யாதியால் வாடுபவனும் அரசமரம் ப்ரதக்ஷிணம் செய்து இந்த ஸ்தோத்தி ரத்தை லக்ஷம் முறை பாராயணம் செய்தால் சுகமடைவான்.
வ்ருக்ஷம் என்றால் மரம். ராஜன் என்றால் அரசன். வ்ருக்ஷ ராஜன் மரங்களின் அரசனான அரச மரத்தை குறிக்கும். ஸ்காந்தம் 247/41-44 சொல்கிறது. அரச மரத்தின் மேல் பகுதி சிவனாகவும், நடு பகுதி விஷ்ணுவாகவும் வேர் பகுதி ப்ருஹ்மாவாகவும் பரம்பொருள் உறைகிறான்.
பகவத் கீதை -10-26. மரங்களில் நான் அசுவத்தம் என்று கூறுகிறார். ருக் வேதம் 1.164.120 கூறுகிறது
உடல் என்பது அரச மரத்தின் பழத்தை போன்றது. சுக துக்கங்களை அனுபவிக்கின்றது. ஆன்மா என்பது அந்த பழத்தின் விதை போன்றது. அது சுக துக்கங்களால் அல்லல் படாமல் எல்லாவற்றிர்க்கும் சாக்ஷியாக உள்ளது. ப்ரபஞ்சத்தில் உள்ள சுக துக்கங்களாகிய பழங்களை சுவைப்பது ஜீவாத்மா. அவற்றை கண்டும் சுவைக்காமல் , பாதிக்க படாமல் இருப்பது உள்ளுக்குள் இருக்கும் பரமாத்மா.
அரச மரம் வம்ச வ்ருத்தி வழங்கும் குணமுள்ளது. என்று அக்னி புராணம் கூறுகிறது. ஒரு யக்ஞ்யத்தில் வெறுப்புற்ற அக்னி தேவன் ஒரு குதிரையின்(அஶ்வம்) உரு எடுத்துக்கொன்டு யாக சாலை விட்டகன்றார். சமாதானம் செய்ய தேவர்கள் பின் தொடர்ந்தனர்.
அக்னி தேவன் ஒரு அரச மரத்தில் லய படுத்திக்கொண்டு மறைந்தார். அஷ்வம் மறைந்திருந்தமையால் அரச மரம் அசுவத்த மரமாகியது. இதனால் அரச மரமே அக்னி சொரூபமாக கருதப்பட்டு வழிபடபடுகின்றது. அரச மரத்திற்கு செய்யும் வழிபாடுகள் உரிய தெய்வங்களை சென்று அடைகிறது.
ஆதி சங்கர பகவத் பாதர் ஸம்ஸ்க்ருததில் ஶ்வ என்றால் நாளை என்று பொருள். அஶ்வ என்றால் நாளை என்று ஒன்று இல்லாதது. த்த என்றால் இருப்பது, நிற்பது என்று அர்த்தம்.
அதாவது , நாளைக்கு இன்று போல் இல்லாதது. வேறு விதமாக இருப்பது என்று விளக்குகிறார். அது போல தான் இந்த ப்ரபஞ்சத்தின் தன்மை எங்கிறார்.
ஆகையால் அசுவத்தம் என்பது இந்த ப்ரபஞ்சத்தின் உருவகம். அதை தொழுவது இந்த ப்ரபஞ்ச மாக வ்யாபித்து இருக்கும் பரப்ருஹ்மத்தையே தொழுவதாகும் என அர்த்தம்.
பகவத் கீதையின் 15ஆவது அத்யாயமிதை பற்றி கூறுகிறது.கதோபனிஷத் 2ம்ப்ரஸ்னம், 3ம் அத்யாயம் யம தர்ம ராஜன் கூறுகிறான்;_ இது தலை கீழாய் என்றும் மறையாது நின்று இருக்கும் அஸ்வத்த மரம். இதுவே ப்ருஹ்மம். இதை தான் நீ தேடி கண்டுபிடித்து அடைய வேண்டும்.
நீல ருத்ர உப நிஷத்:- 3வது மந்திரம். நீரின் மேல் நிலைத்து இருக்கும் அஸ்வத்தினின்றும் தோன்றி வரும் ருத்திரன் தீயன வற்றை அழிக்கின்றான்.
ஸ்வேதாஸ்வதார உபனிஷத்:- இணை பிரியா இரு பறவைகள் ஒரே அரச மரத்தில் உள்ளன. ஜீவாத்மா அரச மர பழத்தின் சுவையில் சொக்கி கிடந்து , பரம் பொருளை மறந்து போய் துக்க கடலில் வீழ்கிறது. அது அருகிலிருக்கும் மற்ற பறவையை கண்டால்
( பரமாத்மாவை அறிந்து கொண்டால்) அதன் துக்கம் மறைந்து விடுகிறது.
பத்ம புராணம்- ஸோம வார அமாவாசை அன்று மஹா விஷ்ணுவும் மஹா லக்ஷ்மியும் அரச மரத்தில் வந்து உறைந்திருந்து தம்மை வழி படுவோருக்கு அருள்வதாக ஐதீகம்.
வாமன புராணம்:- அந்தர்வாஹிணியான ஸரஸ்வதி நதி , ஒரு அசுவத்த வ்ருக்ஷத்திலிருந்து தான் உற்பத்தியாகி வருகிறாள்.எங்கிறது.
தேவ அசுர யுத்தத்தின் போது , மஹா விஷ்ணு அசுவத்த மரத்தில் மறைந்து இருந்தார் எங்கிறது ப்ருஹ்ம புராணமும், பத்ம புராணமும். எனவே அரச மரத்தை வேறு ப்ரதிமைகள் ப்ரதிஷ்டை செய்யாமல் அப்படியே வழிபடுவது நாராயணனை வழிபடுவதாகும் எங்கிந்றன சாத்திரங்கள். அப்போது அவர் அஶ்வத்த நாராயணன் என்ற பெயர் பெறுகிறார்.
அரச மரத்தின் அடியில் தான் மஹா விஷ்ணுவின் ஒர் அவதாரம் நிகழ்ந்ததாக ஸ்காந்த புராணம் கூறுகின்றது.ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம் நிறைவுற்றதும் ஒரு அரச மரத்தின் அடியில் தான்.
பார்ப்பு என்ற செந்தமிழ் சொல்லுக்கு பறவை குஞ்சு என பொருள். பார்ப்பு அன்னவன், பார்ப்பு அனன் என திரிந்து பார்பணன் ஆயிற்று. அதாவது பறவைகளை ஒத்தவன் பார்ப்பனன் ஆனான்.. பறவைக்கும் இரு பிறப்பு, முட்டையாக பிறந்து குஞ்சாக வெளி வருகிறது.
அதே போல நெறி வழுவா அந்தனனும் இரு பிறப்பாளர். உபநயனம் மறு பிறப்பு. எனவே பறவைகளை ஹிம்சை செய்வது ப்ராஹ்மணர்களை வதைப்பது (ப்ருஹ்மஹத்தி) போலாம்.
அஶ்வத்த ஸ்தோத்ரத்தின் பல ஶ்ருதி பின் வருமாறு சொல்கிறது.
வாதம் ரோகம் போன்ற பிணிகள் அகல ஞாயிற்று கிழமைகளில் ஸூரியனை தொழுத பின்னரும், மங்களங்கள் சித்திக்க திங்கட்கிழமை சிவனை தொழுத பின்னரும், வெற்றி வேண்டுமெனில் செவ்வாய் கிழமைகளில் சக்தியை தொழுத பின்னரும்,
வாணிபத்தில் வெற்றி பெற புதங்கிழமை தேவர்களை தொழுத பின்னரும், ஞானம் வேன்டின் வியாழ கிழமையில் குரு பகவானை தொழுத பின்னரும், செல்வம் வேண்டின் வெள்ளி கிழமை லக்ஷ்மியை தொழுத பின்னரும், துக்கங்கள் தொலைய வேன்டின், சனி கிழமையில் எல்லா தேவதைகளை தொழுத பின்னரும் அரச மரம் ப்ரதக்ஷிணம் செய்க.
குறிப்பாக சந்திரனையும், சனீஸ்வரனையும் அஶ்வத்த உருவில் பூஜித்து அரச மரத்திற்கு நமஸ்காரம் செய்க.
ப்ரதக்ஷிணம் கணபதிக்கு ஒன்று, ஸூர்யனுக்கு இரண்டு. பரமேஸ்வரனுக்கு மூன்று, மஹா விஷ்ணுவிற்கு நான்கு, அரச மரத்திற்கு ஏழு. இவற்றிற்கு குறைவாக ப்ரதக்ஷிணம் செய்ய க்கூடாது. மெதுவாக நடந்து செல்ல வேண்டும். வாயினால் ஸ்தோத்ரம் சொல்லிக்கொண்டு, மனதினால் இறைவனை சிந்தித்த வண்ணம் ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்.
அரச மரத்திற்கு நல்லெண்ணய் விளக்கு ஏற்ற வேண்டும். அபிஷேகம் பொருள்கள் அரச மரத்தின் வேர் வழியாக அரச மரத்திற்கு செல்வதால், நல்லெண்ணய், வாசனை பொடி, பால், சந்தனம் மட்டும் போதும்.
அபிஷேக பொருள் மரத்திற்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும். அரச மரத்தடியில் இருக்கும் விநாயகருக்கும், நாகருக்கும் இதே அபிஷேக பொருள் போதும். அபிஷேக பொருள் அரச மரத்து அடியில் சென்று அரச மரத்திற்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும்.
நைவேத்தியத்திற்கு வெல்லமும், எள்ளும் போதும். மற்ற நைவேத்யம் சமர்பிப்பதில் தவறில்லை. இன்று முழுவதும் பஞ்சு, தலைகாணி, கிழங்கு வகைகள் தொட கூட கூடாது.
அரச மரம் அதிக அளவில் கரிய மில வாயுவை உட்கொன்டு ஒஜோன் எனும் ப்ராண வாயுவை விட வீர்யமிக்க , வாயுவை வெளி விடுகிறது. ஆதலால் காலை வேளைகளில் அரச மரம் சுற்ற வேண்டும்.
காலை பத்து மணிக்கு மேல் ஸ்ரீ தேவியின் தமக்கை மூதேவிக்கு இருக்க இந்த அரச மரம் லக்ஷ்மி தாயாரால் கொடுக்க பட்டது. ஆதலால் காலை பத்து மணிக்கு மேல் அரச மரம் பக்கமே செல்லாதீர்கள்.
அரச இலை பெண்மையையும், வேப்பம்பழம் ஆண்மையையும் குறிப்பதாக ஐதீகம்.
ஆதலால் அரசுக்கும் வேம்புக்கும் விவாஹம் செய்த பிறகே இந்த மரங்கள் ப்ரதக்ஷிணத்திற்கு அருகதை உள்ளதாக ஆகிறது.
விரத பூஜா விதானம் புத்தகத்தில் அமாஸோம வார ப்ரதக்ஷிண பூஜை செய்முறை உள்ளது.
|
|
|
Post by kgopalan90 on Oct 18, 2019 12:54:48 GMT 5.5
கேதாரேஸ்வரர் விரதம்.:-
முதலில் ஆசமனம். விக்னேஸ்வர பூஜை செய்யவும். பிறகு ப்ரதான பூஜை.
வினேஸ்வர பூஜை;- சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபசாந்தயே.
ப்ராணாயாமம். ஸங்கல்பம்:- மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வார ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்ய மான கர்மண: நிர்விக்னேன பரி ஸமாப்தியர்த்தம் ஆதெள மஹா கணபதி பூஜாம் கரிஷ்யே.
பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையார் மீது புஷ்பம் போடவும். அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் மஹா கணபதிம் த்யாயாமி. ஆவாஹயாமி, ஆஸநம் ஸமர்ப்பயாமி; பாதயோ: பாத்யம் ஸமர்ப்பயாமி. ஹஸ்தயோ: அர்க்கியம்
ஸமர்ப்பயாமி; ஆசமணியம் ஸமர்ப்பயாமி; மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி; பஞ்சாம்ருத ஸ்நானம் ஸமர்ப்பயாமி; ஸுத்தோதக ஸ்நானம் சமர்ப்பயாமி; ஸ்நானாந்திரம் ஆசமணியம் ஸமர்ப்பயாமி; வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி; உபவீதார்தம்
அக்ஷதான் ஸமர்ப்பயாமி; ஆபராணார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி. கந்தாந்தாரயாமி; கந்தஸ்யோபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி; அக்ஷதான் ஸமர்ப்பயாமி; புஷ்ப மாலாம் ஸமர்ப்பயாமி; புஷ்பானி பூஜயாமி.
ஓம் ஸுமுகாய நம: ஓம் ஏக தந்தாயை நம: கபிலாய நம; கஜ கர்ணகாய நம;லம்போதரய நம: விகடாய நம: விக்ன ராஜாய நம:வி நாயகாய நம: தூம கேதுவே நம: கணாத்யக்ஷாய நம: பால சந்திராய நம: கஜானனாய நம: வக்ர துண்டாய நம:
ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம: மஹா கணபதயே நம: நா நா வித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி; தூப தீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.
நிவேதனம்:- ஓம் பூர்புவஸ்ஸுவ: ------தேவ ஸவி தப்ரஸவீ: ஸத்யம் த்வர்த்தேண பரிஷஞ்சயாமி; அம்ருதோபஸ் தரண மஸி. ப்ராணாயஸ்ஸுவா: அபானாயஸ்ஸுவா: வ்யானாயஸ்ஸுவாஹா; உதானாயஸ்ஸுவா: ஸமாணாயஸ்ஸுவா:
ப்ருஹ்மணேஸ்ஸுவாஹா ;கணபதயே நம: கதலி பலம் நிவேதயாமி. அம்ருதாபிதா நமஸி. பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லிர் தலைர்யுதம் கற்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். தாம்பூலம் ஸமர்ப்பயாமி; கற்பூர நீராஞ்சனம் ; மந்திர புஷ்பம் ஸமர்ப்பயாமி. ஸுவர்ண புஷ்பம் ஸமர்ப்பயாமி; ஸர்வோபசாரான் ஸமர்ப்பயாமி.
வக்ர துண்ட மஹா காய ஸூர்ய கோடி ஸம ப்ரப அவிக்னம்குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா.
ப்ரதான பூஜை.:-
ஶுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்சதுர்புஜம் . ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே.
ப்ராணாயாமம்.ஓம் பூ:; ஓம் புவ:; ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓகும் ஸத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேயம், பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோயோன: ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதீ ரஸ: அம்ருதம் ப்ருஹ்ம ஓம் பூர்புவஸ்ஸுவரோம்.
ஸங்கல்பம்:- மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஶுபே ஶோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: தவிதீய பரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்ஶதீ தமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூ த்வீபே
பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலிவாஹன சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே -------- நாம ஸம்வத்ஸரே -------- ருதெள -----------மாஸே----------பக்ஷே -------ஶுப திதெள-----------
-----------வாஸர யுக்தாயாம் ----------- நக்ஷத்ர யுக்தாயாம்------ சுப யோக சுப கரண யேவங்குண ஸகல விஶேஷேன விசிஷ்டாயாம் அஸ்யாம்--------- ஶுப திதெள அஸ்மாகம் ஸஹ குடும்பானாம்க்ஷேமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுர் ஆரோக்கிய ஐஸ்வர்யானாம் அபிவ்ருத்தியர்த்தம் தர்மார்த்த காம மோக்ஷ சதுர் வித பல புருஷார்த்த
ஸித்தியர்த்தம் புத்ரபெளத்ராதி அபிவ்ருத்தியர்த்தம் இஷ்ட காம்யார்த்த ஸித்தியர்த்தம் மனோவாஞ்சாபல ஸித்தியர்த்தம் கேதாரேஶ்வர வ்ரத புஜாம் கரிஷ்யே. அப உபஸ்பர்சியா.
விக்னேஸ்வரம் யதா ஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி. என்று கூறி மஞ்சள் பிள்ளையார் மீது புஷ்பம் அக்ஷதை சமர்ப்பித்து வடக்காக மஞ்சள் பிள்ளையாரை நகர்த்தி வைக்கவும்.
கலச பூஜை:- பஞ்ச பாத்டிர உத்திரிணி தீர்த்த பாத்திரதிற்கு சந்தனம், குங்குமம், அக்ஷதை ஆகிய வற்றால் அலங்கரித்து வலது கையால் மூடிக்கொண்டு கலஶஸ்ய முகே விஷ்ணு: கண்டே ருத்ர : ஸமாஶ்ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ருஹ்மா மத்யே மாத்ரு கணாஸ்ம்ருதா: குக்ஷெளது ஸாகரா: ஸர்வே ஸப்த த்வீபா வஸுந்தரா. ருக் வேதோ அத யஜுர் வேதோ ஸாமவேதோ அப்யதர்வண . அங்கைஸ்ச ஸஹிதா ஸர்வே கலசாம்பு ஸமாஶ்ரிதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:
கங்கே ச யமுனேஸ் சைவ கோதாவரி ஸரஸ்வதி நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு. என்று ஜபித்து கலச தீர்த்தம் சிறிது எடுத்து பூஜா த்ரவியங்களையும், தன்னையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷணம் செய்து கொள்க.
சூலம் டமருகம் சைவ ததானம் ஹஸ்த யுக்மகே. கேதார தேவம் ஈசானம் த்யாயேத் த்ரிபுர காதினம். கேதாரேஸ்வரம் த்யாயாமி.
கைலாச சிகரே ரம்யே பார்வத்யா ஸஹித ப்ரபோ. அக்கச்ச தேவ தேவேஶ மத் பக்த்யா சந்த்ர சேகர. கேதாரேஸ்வரம் ஆவாஹயாமி.
ப்ராண ப்ரதிஷ்டை செய்யவும்.
ஸுராஸுர ஶிரோரத்ன ப்ரதீபித பதாம்புஜ. கேதார தேவ மத்தத்தம் ஆஸனம் ப்ரதிக்ருஹ்யதாம்.கேதாரேஸ்வராய ஆஸனம் ஸமர்ப்பயாமி.
கங்காதர நமஸ்தே அஸ்து த்ரிலோசன வ்ருஷத்வஜ. மெளக்திகாஸன ஸம்ஸ்தாய கேதாராய நமோ நம:கேதாரெஸ்வராய பாத்யம் ஸமர்ப்பயாமி.
அர்க்கியம் க்ருஹான பகவன் பக்த்யா தத்தம் மகேஶ்வர. ப்ரயஸ்சமே மனஸ்துஷ்டிம் பக்தானாம் இஷ்ட தாயக. கேதாரேஸ்வராய அர்க்கியம் ஸமர்ப்பயாமி.
முனிபிர் நாரதப்ரக்யைர் நித்யமாக்யாத வைபவ. கேதார தேவ பகவன் க்ருஹானா ஆசமனம் விபோ. கேதாரேஸ்வராய ஆசமனீயம் ஸமர்ப்பயாமி.
கேதாரதேவ பகவன் ஸர்வலோகேஸ்வர ப்ரபோ மதுபர்க்கம் ப்ரதாஸ்யாமி க்ருஹாணத்வம் ஶுபங்கர. கேதாரேஸ்வராய மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி.
ஸ்நானம் பஞ்சாம்ருதைர் தேவ ஶ்ரிதம் ஶுத்தோதகைரபி. க்ருஹாண கெளரி ரமண த்வத் பக்தேன மயார்ப்பிதம். கேதாரேஸ்வராய பஞ்சாம்ருத ஸ்நானம் சமர்ப்பயாமி.
நதீ ஜலம் ஸமாயுக்தம் மயா தத்தமனுத்தமம்.ஸ்நானம் ஸ்வீகுரு தேவேச சதாசிவ நமோஸ்துதே.கேதாரேஸ்வராய ஸுத்தோதக ஸ்நானம் ஸமர்ப்பயாமி.
வஸ்த்ரயுக்மம் ஸதா ஶுப்ரம் மனோஹரமிதம் ஶுபம். ததாமி தேவ தேவேச பக்த்யேதம் ப்ரதிக்ருஹ்யதாம். கேதாரேஶ்வராய வஸ்த்ரயுக்மம் ஸமர்ப்பயாமி.
ஸ்வர்ண யக்ஞோபவீதம் ச காஞ்சனம் சோத்தரீயகம். ருத்ராக்ஷ மாலயா யுக்தம் ததாமி ஸ்வீகுரு ப்ரபோ. கேதாரேஸ்வராய யக்ஞோபவீதோத்தரீயே ஸமர்ப்பயாமி.
ஸமஸ்த கந்தர்வபாணாம் தேவ த்வமஸி ஜன்மபூ: பக்த்யா ஸமர்ப்பிதம் ப்ரீத்யா மயா கந்தாதி க்ருஹ்யதாம்.கேதாரேஸ்வராய கந்தாந் தாரயாமி.
அக்ஷதோபி ஸ்வபாவேன பக்தானாமக்ஷதம் பதம். ததாஸி நாத . மத்தத்தை: அக்ஷதை: ப்ரீயதாம் பவான். கேதாரேஸ்வராய அக்ஷதான் ஸமர்ப்பயாமி.
கல்ப வ்ருக்ஷ ப்ரஸூனைஸ்த்வ மப்யர்ச்சிதப ஸுரை:குங்குமை: பார்த்டிவைரேபி:இதானீ மர்ச்சியதே மயா. கேதாரேஸ்வராய புஷ்பை பூஜயாமி.
இந்திராதி அஷ்ட திக் லோக பாலக பூஜை:-
ஒவ்வொரு பெயருக்கும் உண்டான மந்திரம் சொல்லி புஷ்பம் அக்ஷதை சேர்க்கவும்.
இந்திரன்-கிழக்கில்--ஸாங்கம் ஸாயுதம் ஸ வாஹனம் ஸ ஶக்திம் பத்னீ புத்ர பரிவார ஸமேதம் இந்திரம் திக்பாலகம் த்யாயாமி ஆவாஹயாமி.
அக்னி- தென் கிழக்கில்-
--ஸாங்கம் ஸாயுதம் ஸ வாஹனம் ஸ ஶக்திம் பத்னீ புத்ர பரிவார ஸமேதம்அக்னிம் திக் பாலகம் த்யாயாமி, ஆவாஹயாமி.
யமன் தெற்கில் --ஸாங்கம் ஸாயுதம் ஸ வாஹனம் ஸ ஶக்திம் பத்னீ புத்ர பரிவார ஸமேதம் யமம் திக் பாலகம் த்யாயாமி ஆவாஹ்யாமி.
நிருருதி தென் மேற்கில் --ஸாங்கம் ஸாயுதம் ஸ வாஹனம் ஸ ஶக்திம் பத்னீ புத்ர பரிவார ஸமேதம் நிருருதிம் திக் பாலகம் த்யாயாமி ஆவாஹயாமி.
வருணன் மேற்கில் --ஸாங்கம் ஸாயுதம் ஸ வாஹனம் ஸ ஶக்திம் பத்னீ புத்ர பரிவார ஸமேதம் வருணம் திக் பாலகம் த்யாயாமி ஆவாஹயாமி.
வாயு வட மேற்கில் --ஸாங்கம் ஸாயுதம் ஸ வாஹனம் ஸ ஶக்திம் பத்னீ புத்ர பரிவார ஸமேதம் வாயும் திக் பாலகம் த்யாயாமி ஆவாஹயாமி.
குபேரன் வடக்கில் --ஸாங்கம் ஸாயுதம் ஸ வாஹனம் ஸ ஶக்திம் பத்னீ புத்ர பரிவார ஸமேதம் குபேரம் திக் பாலகம் த்யாயாமி ஆவாஹயாமி.
ஈசானன் வட கிழக்கில் --ஸாங்கம் ஸாயுதம் ஸ வாஹனம் ஸ ஶக்திம் பத்னீ புத்ர பரிவார ஸமேதம் ஈசானம் திக் பாலகம் த்யாயாமி ஆவாஹயாமி.
இந்த்ராதி அஷ்ட திக் பாலக தேவதாப்யோ நம: ரத்ன ஸிம்மாஸனம் ஸமர்ப்பயாமி; பாத்யம் ஸமர்ப்பயாமி; அர்க்கியம் ஸமர்ப்பயாமி; ஆசமணீயம் சமர்ப்பயாமி; ஸ் நாபயாமி; ஸ் நானாந்திரம் ஆசமனீயம் ஸமர்ப்பயாமி; வஸ்த்ர உத்தரீய யக்ஞோபவீத ஆபரணார்த்தம்
அக்ஷதான் ஸமர்ப்பயாமி; கந்தாந்தாரயாமி; கந்தஸ்யொபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி.அக்ஷதான் ஸமர்ப்பயாமி; புஷ்பானி ஸமர்ப்பயாமி; தூப மாக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; மஹா நைவேத்யம் கதலி பலம் நிவேதயாமி; தாம்பூலம் ஸமர்ப்பயாமி;
கற்பூர நீராஞ்சனம் ஸமர்ப்பயாமி; மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி; ஸர்வோபசாரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.
இந்திராதி அஷ்ட திக் பாலக தேவதா ப்ரஸாத ஸித்திரஸ்து.
பிறகு சிவபெருமானுக்கு தெற்கில் ப்ரஹ்மணே நம: என்று பிரம்மாவையும், வடக்கில் விஷ்ணவே நம: என்று விஷ்ணுவையும் நடுவில் கேதாரேஸ்வராய நம: என்று கேதாரேசுவரனையும் அக்ஷதை போட்டு த்யானிக்கவும்.
அங்க பூஜை:- மஹேஶ்வராயை நம: பாதெள பூஜயாமி; ஈஶ்வராய ஜங்கே பூஜயாமி; காம் ரூபாய நம: ஜானுனி பூஜயாமி; ஹராய நம: ஊரூ பூஜயாமி; த்ரிபுராந்தகாய நம: குஹ்யம் பூஜயாமி; பவாய நம: கடிம் பூஜயாமி; கங்காதராய நம: நாபிம் பூஜயாமி; மஹாதேவாய நம: உதரம் பூஜயாமி; பசுபதயே நம: ஹ்ருதயம் பூஜயாமி; பி நாகினே நம: ஹஸ்தான் பூஜயாமி;
ஶிவாய நம: புஜெள பூஜயாமி; ஶிதிகண்டாய நம: கண்டம் பூஜயாமி; விருபாக்ஷாய நம: முகம் பூஜயாமி, த்ரி நேத்ராய நம: நேத்ராணி பூஜயாமி; ருத்ராய நம: லலாடம் பூஜயாமி;
ஶர்வாய நம: ஶிர: பூஜயாமி; சந்திர மெளலயே நம: மெளலீம் பூஜயாமி; பஶுபதயே நம: ஸர்வாண் யங்கானி பூஜயாமி;
சிவ அஷ்டோத்திர சத நாமாவளி சொல்லி அர்ச்சனை செய்யவும்.
ஓம் ஶிவாய நம; ஓம் மஹேஸ்வராய நம: ஓம் ஶம்பவே நம: ஓம் பி நாகினே நம:
ஓம் சசி ஸேகராய நம: ஓம் வாம தேவாய நம: ஓம் விரூபாக்ஷாய நம: ஓம் கபர்தினே நம:
ஓம் நீல லோஹிதாய நம: ஓம் ஶங்கராய நம: ஓம் ஶூல பாணயே நம: ஓம் கட்வாங்கிணே நம: ஓம் விஷ்ணு வல்லபாய நம: ஓம் ஶிபிவிஷ்டாய நம: ஓம் அம்பிகா நாதாய நம:
ஓம் ஸ்ரீ கண்டாய நம: ஓம் பக்த வத்ஸலாய நம: ஓம் பவாய நம: ஓம் ஸர்வாய நம:
ஓம் த்ரிலோகேசாய நம: ஒம் ஶிதி கண்டாய நம: ஓம் ஶிவப்ரியாய நம: ஓம் உக்ராய நம: ஓம் கபர்தினே நம: ஓம் காமாரயே நம: ஓம் அந்தகாஸுர ஸூதனாய நம: ஓம் கங்காதராய நம: ஓம் லலாடாக்ஷாய நம: ஓம் கால காலாய நம: ஓம் க்ருபா நிதயே நம: ஓம் பீமாய நம;
ஓம் பரஶு ஹஸ்தாய நம: ஓம் ம்ருக பாணயே நம; ஓம் ஜடாதராய நம: ஓம் கைலாச வாஸினே நம: ஓம் கவசினே நம: ஓம் கடோராய நம: ஓம் த்ரிபுராந்தகாய நம: ஓம் வ்ருஷாங்காய நம: ஓம் வ்ருஷபாரூடாய நம: ஓம் பஸ்மோதூளித விக்ரஹாய நம:
ஓம் ஸாம ப்ரியாய நம: ஓம் ஸ்வர மயாய நம: ஓம் த்ரயீ மூர்த்தயே நம: ஒம் அநீஸ்வராய நம: ஓம் ஸர்வக்ஞாய நம: ஓம் பரமாத்மனே நம: ஓம் ஸோம சூர்யாக்னி லோசனாய நம:
ஓம் ஹவிஷே நம: ஓம் யக்ஞமயாய நம: ஓம் ஸோமாய நம: ஓம் பஞ்சவக்த்ராய நம:
ஓம் சதாசிவாய நம: ஓம் விஶ்வேஸ்வராய நம: ஓம் வீர பத்ராய நம: ஓம் கண நாதாய நம:
ஓம் ப்ரஜாபதயே நம: ஓம் ஹிரண்ய ரேதஸே நம: ஓம் துர்தர்ஷாய நம: ஓம் கிரீசாய நம;
ஓம் கிரிசாய நம: ஒம் அனகாய நம: ஓம் புஜங்க பூஷணாய நம: ஓம் பர்காய நம:
ஒம் கிரிதன்வனே நம: ஓம் கிரிப்ரியாய நம: அஒம் க்ருத்திவாஸஸே நம: ஓம் புராராதயே நம: ஓம் பகவதே நம: ஓம் ப்ரமதாதிபாய நம: ஓம் ம்ருத்யஞ்ஜயாய நம: ஓம் ஸூக்ஷ்ம தனவே நம: ஓம் ஜகத்வ்யாபினே நம: ஓம் ஜகத் குரவே நம: ஓம் வ்யோம கேசாய நம:
ஓம் மஹா ஸேன ஜனகாய நம: ஓம் சாருவிக்ரமாய நம: ஓம் ருத்ராய நம: ஓம் பூதபதயே நம: ஓம் ஸ்த்தாணவே நம: ஓம் அஹிர்புத்ன்யாய நம: ஓம் திகம்பராய நம: ஓம் அஷ்ட மூர்த்தயே நம: ஓம் அனேகாத்மனே நம: ஓம் ஸாத்வீகாய நம: ஓம் ஶுத்த விக்ரஹாய நம:
ஓம் ஶாஶ்வதாய நம: ஓம் கண்டபரஶவே நம: அஜாய நம: ஓம் பாஶவிமோசகாய நம: ஓம் ம்ருடாய நம: ஓம் பஶுபதயே நம: ஓம் தேவாய நம: ஓம் மஹாதேவாய நம: ஓம் அவ்வயாய நம: ஓம் ஹரயே நம: ஓம் பூஷதந்த பிதே நம: ஓம் அவ்யக்ராய நம: ஓம் ஹராய நம:
ஓம் தக்ஷாத்வரஹராய நம: ஓம் பக நேத்ரபிதே நம: ஓம் அவ்யக்தாய நம: ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம: ஓம் ஸஹஸ்ர பதே நம: ஓம் அபவர்க ப்ரதாய நம: ஓம் அனந்தாய நம: ஓம் தாரகாய நம: ஓம் பரமேஸ்வராய நம:
தோரக்ரந்தி பூஜை:-
ஶிவாய நம: ப்ரதம க்ரந்திம் பூஜயாமி; வாஹாய நம: த்விதீய க்ரந்திம் பூஜயாமி.
மஹா தேவாய நம: த்ருதீய க்ரந்திம் பூஜயாமி; வ்ருஷபத்வஜாய நம: சதுர்த்த க்ரந்திம் பூஜயாமி; கெளரீஶாய நம: பஞ்சம க்ரந்திம் பூஜயாமி; ருத்ராய நம; ஷஷ்டம க்ரந்திம் பூஜயாமி.
பஶுபதயே நம: ஸப்தம க்ரந்திம் பூஜயாமி; பீமாய நமள் அஷ்டம க்ரந்திம் பூஜயாமி.
த்ரியம்பகாய நம: நவம க்ரந்திம் பூஜயாமி; நீல லோஹிதாய நம: தசம க்ரந்திம் பூஜயாமி.
ஹராய நம: ஏகாதச க்ரந்திம் பூஜயாமி; ஸ்மரஹராய நம: த்வாதச க்ரந்திம் பூஜயாமி;
பவாய நம: த்ரயோதச க்ரந்திம் பூஜயாமி; ஶம்பவே நம: சதுர்தச க்ரந்திம் பூஜயாமி;
ஸர்வாய நம: பஞ்சதச க்ரந்திம் பூஜயாமி; ஸதாசிவாய நம: ஷோடதச க்ரந்திம் பூஜயாமி
ஈஶ்வராய நம: ஸப்ததச க்ரந்திம் பூஜயாமி; உக்ராய நம: அஷ்டாதச க்ரந்திம் பூஜயாமி.
ஸ்ரீ கண்டாய நம: ஏகோனவிம்ச க்ரந்திம் பூஜயாமி; நீலகண்டாய நம: விம்ஸதி தம க்ரந்திம் பூஜயாமி; கேதாரேஸ்வராய நம: ஏகவிம்ஶதிதம க்ரந்திம் பூஜயாமி.
கேதாரேஸ்வராய நம; நாநா வித பரிமள பத்ர புஷ்பானி ஸமர்ப்பயாமி.
தூபம்:- தஶாங்க தூபமுக்யஶ்ச அங்கார வினிவேஶித தூபஸ் ஸுகந்தை ருத்பன்னஹ த்வாம் ப்ரீணயது சங்கர கேதாரேஸ்வராய நம: தூபம் ஆக்ராபயாமி.
தீபம்:- யோகீனாம் ஹ்ருதயஷ்வேவ ஜ்ஞாத தீபாங்குரோஹ்யஸி பாஹ்ய தீபோ மயா தத்த: க்ருஹ்யதாம் பக்த கெளரவாத்.கேதாரேஸ்வராய நம: தீபம் தர்ஶயாமி.
நைவேத்யம்:- த்ரைலொக்யமபி நைவேத்யம் ந தே த்ருப்திஸ் ததா பஹி; நைவேத்யம் பக்த வாத்ஸல்யாத் க்ருஹ்யதாம் த்ரியம்பக த்வயா. கேதாரேஸ்வராய நம: மஹா நைவேத்யம் நிவேதயாமி.
தாம்பூலம்:- நித்யானந்த ஸ்வரூபஸ் த்வம் யோகிஹ்ருத் கமலேஸ்தித: கெளரீஶ பக்த்யா மத் தத்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கேதாரேஸ்வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி
அர்க்கியம் க்ருஹான பகவன் பக்த்யா தத்தம் மாஹேஸ்வர ப்ரயஸ்சமே ம நஸ்துஷ்டிம்
பக்தானாம் இஷ்ட தாயக. கேதாரேஸ்வராய நம: அர்க்கியம் ஸமர்ப்பயாமி.
கற்பூரம்:- த்வேஶ சந்திர ஶங்காஶம் ஜ்யோதி: ஸூர்யமிவோதிதம். பக்த்யா தாஸ்யாமி கற்பூர நீராஞ்சனம் இதம் சிவே. கேதாரேஸ்வராய நம: கற்பூர நீராஞ்சனம் தர்சயாமி.
பூதேச புவனாதீஸர்வ தேவாதிபூஜித ப்ரதக்ஷிணம் கரோமித்வாம் வ்ரதம் மே ஸபலம் குரு.
ஹர ஶம்போ மஹாதேவ விஶ்வேஶாமர வல்லப ஶிவ ஶங்கர ஸர்வாத்மன் நீலகண்ட நமோஸ்துதே. கேதாரேஸ்வராய நம நமஸ்காரான் ஸமர்ப்பயாமி.
ப்ரார்த்தனை:- அபீஷ்ட ஸித்திமே குரு ஶிவாவ்யய மஹேஸ்வர. பக்தானாம் இஷ்ட தானார்த்தம் மூர்த்திக்ருத களேபர. கேதார தேவ தேவேச பகவன் அம்பிகாபதே ஏக்விம்ஶத்தினே தஸ்மின் ஸூத்ரம் க்ருஹ்ணாம் யஹம் ப்ரபோ.
தோரத்தை எடுத்து அணிதல்:- ஆயுஶ்ச வித்யாம் ச ததா ஸுகம் ச ஸெளபாக்கிய ம்ருத்திம் குரு தேவ தேவ. ஸம்ஸார கோராம்புனிதெள நிமக்னம் மாம் ரக்ஷ கேதார நமோ நமஸ்தே.
வாயன ப்ரதிமா தானம்:- கேதார: ப்ரதிக்ருஹ்ணாதி கேதாரோவை ததாதி ச .கேதாரஸ் தாரகோபாப்யாம் கேதாராய நமோ நம: கேதார ப்ரதிமா யஸ்மாத் ராஜ்ய ஸெளபாக்கிய வர்த்தனி தஸ்மா தஸ்யா ப்ரதானேன மமாஸ்து ஸ்ரீரசஞ்சலா. தக்ஷிணை தாம்பூலத்துடன் கேதாரேஸ்வர ப்ரதிமையை அளித்திடவும்.
ஓம் தத்ஸத் ப்ருஹ்மார்ப்பணமஸ்து. ஆசமனம்.செய்யவும்.
|
|
|
Post by kgopalan90 on Oct 16, 2019 21:13:51 GMT 5.5
|
|
|
Post by kgopalan90 on Oct 15, 2019 16:45:00 GMT 5.5
ரஹஸ்ய தத்துவம்:- சிருஷ்டியில் பரமனிடமிருந்து ஆகாசம், அதிலிருந்து வாயு, வாயுவிலிருந்து அக்னி, அக்னியிலிருந்து ஜலம், ஜலத்திலிருந்து பூமி என்ற முறையில் உலகம் உண்டாகிறது. மறுபடியும் உலகம் பரமனிடத்தில் லயிக்கும் போது பூமி ஜலத்திலும், ஜலம் அக்னியிலும், அக்னி வாயுவிலும், வாயு ஆகாசத்திலும் ஆகாசம் பரமனிடத்தில் லயிக்கிறது. காசியை தவிர மற்ற எல்லாம் அழிந்து விடும். காசியில் எல்லாம் லயமாவதால் காசியை மஹா ஸ்மசானம் எங்கிறோம். அலகாபாத்தில்= (ப்ரயாகையில்) பூமியின் அம்சமான மணலை ஜலத்தில் விடுவதன் மூலம் நமக்கும் உலகத்திற்க்கும் லயமுண்டு. எல்லோரும் போய் சேர்ந்து நாம ரூபங்களை இழக்கும் இடம் இது என்ற லய தத்துவமும், ஜலமே முதலில் படைக்கப்பட்டது ஜலத்திலிருந்து பூமி என்ற சிருஷ்டி க்ரமத்தயும், அனுசரித்து ப்ரயாகையிலிருந்து கங்கை ஜலம் எடுத்து வந்து ராமனாதனுக்கு அபிஷேகம் செய்து நல்ல ஜன்மம் எடுக்கலாம். மண்ணாலாகிய உன்னுடலை காசியில் விடு. பரமனிடம் சேர்ந்து மறு பிறவியில்லாமல் இருப்பாய் என்பதயும் உணர்த்துகிறது.ஹரியும் ஹரனும் ஒன்று என்பதையும் காண்பிக்கிறது. எந்த இடமாக இருந்தாலும், ஸமுத்திரத்திற்கு முதலில் நமஸ்காரம், கல் அல்லது மணல் அல்லது வாழைபழம் போடுவது, ஸமுத்திரத்திற்கு அர்க்கியம், ப்ரார்த்தனை செய்து விட்டு ஸ்நானம் செய்ய அனுமதி பெற வேண்டும். (அனுக்ஞை). ஒவ்வொரு ஸ்நானமும் ஒரு அப்த க்ருச்சர பலனை தருவதால் நமது எல்லா பாவங்களும் நீங்க 36 ஸ்நானம் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு 12 ஸ்நானம் வீதம் மூன்று நாட்கள் ஆகும். ஒவ்வொரு ஸ்நானத்திற்கும் அங்கமாக ஸங்கல்பம், ஸ்நானாங்க தர்ப்பணம், , காய்ந்த மடி வஸ்த்ரம் அணிந்து நெற்றிக்கு இட்டு கொண்டு காயத்ரீ ஜபமும் செய்ய வேண்டும்.ஸ்நானாங்க தர்ப்பணத்தை தவிர ஸுக்ரீவன், நளன் ஸமந்தன், ஸீதா, லக்ஷ்மணன், ஸ்ரீ ராமசந்திரன் முதலியவர்களை த்யானம் செய்து, பிப்பலாதர் முதல் ஸீதை வரை எல்லோருக்கும் 3 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும். கோடிக்கரையில் ஹிரண்ய சிராத்தம் செய்து, அரிசி, எள்ளு இவைகளால் க்ஷேத்ர பிண்ட தானம் செய்ய வேண்டும். பிறகு ராமேஸ்வரம் வந்து கோடி தீர்த்த ஸ்நானம் செய்து அந்த தீர்த்தத்தை எடுத்து வந்து பூஜித்து ப்ராஹ்மண ஸமாராதனை செய்து வாத்தியார் ஸம்பானை செய்து யாத்திரை பூர்த்தி செய்ய வேண்டும். உடனே காசி யாத்திரை செல்வதானால் தனுஷ்கோடி மணலில் ஸேது மாதவர், பிந்து மாதவர், வேணி மாதவர் என மூன்றாக பாவித்து பூஜை செய்து வேணி மாதவராக கருதி பூஜை செய்த மணலை எடுத்து கொண்டு அலகாபாத் செல்ல வேண்டும். ஸமுத்திரத்தில் ஸ்நானம் செய்யும் போது ஒன்று அல்லது ஏழு சிறிய கற்கள் அல்லது மணலையாவது எடுத்து பிப்பலாத ஸமுத்பன்னே க்ருத்யே லோக பயங்கரி ஸைகதம் தே ப்ரதாஸ்யாமி ஆஹாரார்த்தம் ப்ரகல்பிதம் என்ற மந்திரத்தை கூறி ஸமுத்ர ஜலத்தில் போட வேண்டும்.தற்போது வாழை பழம் வாங்கி போடுகிறார்கள். ராமர் ராவணனை கொன்ற பிறகு பகவான் கடலில் கட்டிய பாலத்தை தனுசின் நுனியால் உடைத்த இடம், ஆதலால் தனுஷ் கோடி எனப்பெயர். இது மஹோ நதியும் ரத்னாகரமும் சேருமிடம். அந்த காலத்தில் 64 தீர்த்தங்கள் இருந்தன. தற்போது அது மிகவும் குறைந்து விட்டது. ராமேஸ்வரம், அலகாபாத், காசி, கயா கான்டேக்ட் விவரம். Kasi gaya contact details 09451372420. sons of late swamimalai visvanatha sastrikal V RAMASESHA SASTRIKAL ANSD KRISHNA MURTHY GANAPADIKAL. B-5 /311 oudghabi (hanuman ghat) VARANASI PIN:221001. phone( 0542 ) 22310133 ; 2310134; 2275173////cell; 93353 33137 and 94153 36064 irst you must go to RAMESWARAM and then to kasi and again to Rameswaram is the correct proceedure for iyers. So I am also giving the sastrigal's name s in RAMESVARAM. S. RADHA KRISHNA VADHYAR. Sri mathre graham. PHONE; (04573) 221943. cell; 9443508843; 9442461923; For boarding and lodging HOTEL TAMIL NADU IS THERE. KASI MUTT; LODGE PHONE NO; (04573) 223130. K.R. VENKATARAMA SASTRIGAL. (04573) 223636, 222068. cell; 94866 72258. SHRI. SWAMINATHA SARMA rameswaram cell; 99433 08217. He is doing THILA HOMAM AT HIS RESIDENCE FOR PITHRU SAPA/DOSHA NIVRUTHY. In the ramanatha swamy temple daily early morning spatika linga sevai is there at 5 a. m. entry fee rupees fifty only. Sankara mutt is having AC ROOM AND NON AC ROOM . and sri. sundar sastrigal is there in sankara mutt. (sringeri sankara muut),. cell no; 09443321641 . சுந்தர சாஸ்திரிகளும் தில ஹோமமும், தீர்த்த சிராத்தமும் செய்து வைக்கிறார். தில ஹோமத்திற்கு 12000 ஆவர்த்தி ஹோமம்; ஜபம், சாப்பாடு உள்பட 25,000 /= ரூபாய்; 6 பேர் தீர்த்த சிராத்தம் பார்வண விதி படி. எட்டாயிரம் ரூபாய். மிக சிறப்பாக செய்து வைக்கிறார். 2014ம் ஆண்டு இந்த ரூபாய் இருந்தது. ராமேஸ்வரம் கோவில் கிணறுகளில் ஸ் நானம் செய்ய இருபத்து ஐந்து ரூபாய் டிக்கட் வாங்கி எல்லா கிணறுகளிலும் குளிக்கலாம். ஐ நூறு ரூபாய் கொடுத்தால் எல்லா கிண்றுகளிலும் அதிக தண்ணிரில் குளிக்கலாம்.இதுவும் 2014 ஆண்டு இருந்த ரேட். NAVA BHASHANAM DEVI PATTINAM. SRI. V. JAGANNATHA IYENGAR 1/58 PERUMAL KOIL STREET NABASANAM PIN; 623514. PHONE: (04567) 264501. THIRUPULLANI; TPR. SRI. LAKSHMANA SASTRI. (04567) 254261 for tila homam. If the 5th and 10th house lords are ill placed and the running dasa is of the ill placed planets this combines the pithru dosham. after tila homam here you have to do anna dhaanam in sholingur. Swami malai V.RAMASESHA SASTRIGAL;V KRISHNAMOORTHY GANAPADIGAL. B-5 OUDGHARBI ( HANUMAN GHAT) VARANASI. 221001. PHONE NO; (0542) 2310133, 2310134, 2275173. ARIYUR S. MAHADEVA GANAPADIGAL; B-5/309 HANUMAN GHAT; VARANASI PIN: 221001 PHONE (0542) 2277117; 2275800, 2276244. cell; 93369 11879; 99562 76851. ARIYUR S. VISWANATHA GANAPADIGAL; B-5/286 AWADHGARBI, HANUMAN GHAT, VARANASI 221001. PHONE; 2277719, MOBILE; 9451372420. FOR IYERS; RIG/YAJUR/ SAMA VEDAMS. They can take you to allahabad and to gaya and in kasi they can do all rituals. Gaya : Karnatak Bhavan M.N Bacchu Acharya Ram Sagar, Nal Sadak Road, Near Panch Mahalla, Gaya – 823 001 ph : 0631-2435432, 99318 40631, 99340 23514 2. Thambu Shastrigal (Iyengar) – 9956513388 sri kasi nattukottai nagara satram godovilia varanasi phone.no-0542 2451804. fax no. 0542-2452404. Back side of susil cinema theatre. Godovilia tanga stand. U.P. Manager sankara mutt-No.B-4/7A hanuman ghat-varanasi-221001. O542-2277932. Sri kanchi kamakoti sankar mandir. Ahalya bai vishnupada road; gaya -bihar. Sri adhi sankara vimana mandap. Beni bundi road daragung allahabad 211006. Room in varanasi-98681 36243 jaya sri-Ravindrapuri near shivala ghat. நகரத்தார் விடுதிகள்;- வாரானாசி0542 2451804; 089534 79419; :- அலஹாபாத் 0532 2591265; கயா; 0631 222648 ராமேஸ்வரம்- 04573 221157; 944224 85293. அயோத்தி:-05278 232703; நாசிக்:-0253 2620878. Contact S. Nandini Shubha Phala Yathra Services, B.4/7 Hanuman Ghat , Varanasi 221001 (UP) India Phone No : 9962005936 email-id :nandushankar5@gmail.com web: www.subhaphalayatra.com/ வெங்கட் ராம ஐயர், 34 B , G2 ,கல்யாண வசந்தம் பிலாட்ஸ்; 2ஆவது மெயின் ரோடு புருஷோத்தமன் நகர் க்ரோம்பேட்டை சென்னை-600044. R, jaya raman; B-4/20 poora Nand Mutt Hanuman ghat-varanasi-221001. U.P state. E mail-vaara 1289 @gmail.com Rameswaram;_ contact 76391 08725.for arrange ments to sraththam and thila homam. Mr. Ravi. 94865 73075. ராமேஸ்வரத்திற்கு சென்னையிலிருந்து மாலை 5-50 மணிக்கு கிளம்பும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் 22661. காலை 4-30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். இதில் சென்றால் அன்று காலையே அவசரபடாமல் அமைதியாக கார்யங்கள் செய்யலாம். தங்குமிடத்திலேயே ஸ்நானம் செய்து சுத்த பாரம்பரிய உடை உடுத்தி பிறகு ஸங்கல்ப ஸ்நானம் செய்ய செல்ல வேண்டும். ஸமஸ்த பாபங்களும் அகன்றால் சுத்தமான பரமனின் திருவடியை நாம் அடைய முடியும்.ஆதலால் பாபம் நீக்கி புண்யம் தேட ஸேது யாத்திரை செய்வது பர லோக பலனை அளிக்கும்.தனுஷ் கோடியில் மணல் எடுத்து மூன்றாக பிரித்து இரண்டை ஸேது மாதவர் பிந்து மாதவர் என பூஜித்து அலகாபாத் சென்று அங்குள்ள வேணி மாதவரை பூஜிக்கவும், கங்கா ஸ்நானம் செய்யவும் உத்தரவு பெற வேண்டும். ஸேது மாதவர், பிந்து மாதவர் என எண்ணி பூஜித்த மணலை அங்கேயே விட்டு விடவும். மூன்றாவது பாகமான வேணி மாதவரை பூஜித்து இந்த மணலை அலகாபாத் எடுத்து செல்ல வேண்டும். அலகாபாத்தில் இந்த மணலை வேணி மாதவராக இங்கும் பூஜித்து இந்த மணலை த்ரிவேணி ஸங்கமத்தில் போட வேண்டும். மாதவன்= மா=லக்ஷ்மி; தவன்=புருஷன்; மாதவன் எனில் லக்ஷ்மி புருஷன் எனப்படும்.பன்னக சாயீயாக இருப்பது பாற்கடலில். பாற்கடலில் உதித்த லக்ஷ்மியை மார்பில் வைத்திருக்கிறார். ஆதலால் விஷ்ணுவிற்கு மூல ஸ்தானம் கடல். மூல ஸ்தானத்திலிருந்து பற்பல இடங்களில் மூர்த்தியுடன் எழுந்து அருளி யுள்ளார். விஷ்ணு, ப்ரயாகை, ராமேஸ்வரம் காசி ஆகிய இடங்களில் ஸேது மாதவர், பிந்து மாதவர், வேணி மாதவர் என்ற மூன்று இடங்களிலும் பஸித்தமாக் அமர்ந்திருக்கிறார். மணல் கெட்டியாகி கல் வடிவமாகுவது இயர்க்கை. மணலை பிடித்து பகவானாக பாவித்து பூஜை செய்தவுடன் , பக்தனது பக்தியாலும், மந்திரத்தாலும், பூஜையாலும் மணல் விரைவாக கல் ஆகும். இது ஸாலகிராம வடிவமாகவும், சிலா வடிவமாகவும் மாறும். த்ரிவேணி பூஜை செய்வோர் ஸேது மணலாக வந்த வேணி மாதவருக்கும் பூஜை செய்ததாகும். இதே போல் காசியிலிருந்து தான் எங்கும் லிங்கம் அமைக்க பட்டுள்ளது. காசி சிவனுக்கு மூல ஸ்தானம். தனது மூல ஸ்தானமான காசியிலிருந்து , தனது எட்டு உடலில் ஒன்றானதும் தனக்கு மிக ப்ரியதுமான கங்கா ஜலத்தால் அபிஷேகம் செய்தால் பரம சந்தோஷம் அடைந்து பக்தனுக்கு அருள் பாலிக்கிறார். கங்கையை தலையில் தரித்து கங்காதரன் என பெயர் பெற்றவர். தனி சுத்த கங்கை அலகாபாத்தில் தான் உள்ளது. காசியில் மற்ற நதிகளுடன் கலக்கிறது. ஸபிண்டிகரணம், ஆப்தீகம் முதலியவைகளில் ப்ராஹ்மணார்த்தம் சாப்பிடுவது அறியாமல் பூனை முதலியவற்றை கொல்வது, அக்ஞானத்தினால் ஸந்தியா வந்தனம் முதலிய வற்றை விட்டது, ஜெயிலில் வசித்தது, பலாத்காரமாக அன்ய தேசம், அன்ய மதம் சென்றது, முதலிய பாபங்களுக்கு ப்ராயஸ்சித்தம் செய்து கொள்ள முன்னர் பலர் தனுஷ்கோடி செல்வர்.அங்கு கோ தானம், க்ருச்சரம், ஹோமம் முதலியன செய்வர். ப்ரதக்ஷிண வகையில் வட தேச யாத்திரை:- சென்னயிலிருந்து துங்கபத்ரா, குருட்வாடி, பண்ட்ராபுரம்,பாம்பே, நாசிக், இடார்ஸி,அலகாபாத், காசி, கயா, கல்கத்தா ,பூரி, கோதாவரி, பெஜவாடா , சென்னை வர வேண்டும். இனி உங்கள் வீட்டில் ஸமாராதனை பூஜை:- ஆசமனம். அனுக்ஞை;- வினேஸ்வர பூஜை;- சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோபசாந்தயே. ப்ராணாயாமம். ஸங்கல்பம்:- மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வார ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்ய மான கர்மண: நிர்விக்னேன பரி ஸமாப்தியர்த்தம் ஆதெள மஹா கணபதி பூஜாம் கரிஷ்யே. பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையார் மீது புஷ்பம் போடவும். அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸுமுகம் மஹா கணபதிம் த்யாயாமி. ஆவாஹயாமி, ஆஸநம் ஸமர்ப்பயாமி; பாதயோ: பாத்யம் ஸமர்ப்பயாமி. ஹஸ்தயோ: அர்க்கியம் ஸமர்ப்பயாமி; ஆசமணியம் ஸமர்ப்பயாமி; மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி; பஞ்சாம்ருத ஸ்நானம் ஸமர்ப்பயாமி; ஸுத்தோதக ஸ்நானம் சமர்ப்பயாமி; ஸ்நானாந்திரம் ஆசமணியம் ஸமர்ப்பயாமி; வஸ்த்ரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி; உபவீதார்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி; ஆபராணார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி. கந்தாந்தாரயாமி; கந்தஸ்யோபரி ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி; அக்ஷதான் ஸமர்ப்பயாமி; புஷ்ப மாலாம் ஸமர்ப்பயாமி; புஷ்பானி பூஜயாமி. ஓம் ஸுமுகாய நம: ஓம் ஏக தந்தாயை நம: கபிலாய நம; கஜ கர்ணகாய நம;லம்போதரய நம: விகடாய நம: விக்ன ராஜாய நம:வி நாயகாய நம: தூம கேதுவே நம: கணாத்யக்ஷாய நம: பால சந்திராய நம: கஜானனாய நம: வக்ர துண்டாய நம: ஸூர்ப்ப கர்ணாய நம: ஹேரம்பாய நம: ஸ்கந்த பூர்வஜாய நம: மஹா கணபதயே நம: நா நா வித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி; தூப தீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி. நிவேதனம்:- ஓம் பூர்புவஸ்ஸுவ: ------தேவ ஸவி தப்ரஸவீ: ஸத்யம் த்வர்த்தேண பரிஷஞ்சயாமி; அம்ருதோபஸ் தரண மஸி. ப்ராணாயஸ்ஸுவா: அபானாயஸ்ஸுவா: வ்யானாயஸ்ஸுவாஹா; உதானாயஸ்ஸுவா: ஸமாணாயஸ்ஸுவா: ப்ருஹ்மணேஸ்ஸுவாஹா ;கணபதயே நம: கதலி பலம் நிவேதயாமி. அம்ருதாபிதா நமஸி. பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லிர் தலைர்யுதம் கற்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். தாம்பூலம் ஸமர்ப்பயாமி; கற்பூர நீராஞ்சனம் ; மந்திர புஷ்பம் ஸமர்ப்பயாமி. ஸுவர்ண புஷ்பம் ஸமர்ப்பயாமி; ஸர்வோபசாரான் ஸமர்ப்பயாமி. வக்ர துண்ட மஹா காய ஸூர்ய கோடி ஸம ப்ரப அவிக்னம்குரு மே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா. ப்ரதான பூஜா ஸங்கல்பம்:- சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே. ப்ராணாயாமம். மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷ்த்வார ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஶுபே ஶோபனே முஹூர்த்தே அத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்தே ஶ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே , அஷ்டாவிம்சதி தமே கலி யுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீ பே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பர்ஶுவே , ஶாலி வாஹன சகாப்தே, அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே-------- நாம ஸம்வத்ஸரே ------------அயனே-----------ருதெள-----------மாஸே---------பக்ஷே---------- திதெள------ ஸுப திதெள --------- வாஸர:------- நக்ஷத்ர யுக்தாயாம்--------யோக--------- கரண ஏவம் குண ஸகல விஷேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ------- சுப திதெள ஸ்ரீ பர்வத வர்த்தனி ஸமேத ஸ்ரீ ராம நாத ஸ்வாமி ப்ரஸாத சித்தியர்த்தம்,, ஸ்ரீ டுண்டி கணபதி , காலபைரவாதி பரிவார ஸஹித , விசாலாக்ஷி அன்னபூர்ணி ஸமேத ஸ்ரீ காசி விஸ்வேஸ்வர ஸ்வாமி ப்ரஸாத ஸித்யர்த்தம், ஸ்ரீ கங்கா பாகிரதீ ப்ரஸாத சித்தியர்த்தம், ஸ்ரீ மஹா லக்ஷ்மி ஸமேத ஸ்ரீ ஸேது மாதவ பிந்து மாதவ வேணி மாதவ , ஸ்ரீ ஆதி கதாதர ப்ரஸாத ஸித்தியர்த்தம், தேவைக்கு ஏற்ப இங்கு சேர்த்து கொள்ளலாம் இம்மாதிரி ---- ஸ்ரீ அலர்மேலு ஸமேத ஸ்ரீ ப்ரஸன்ன வேங்கடேஸ்வர ஸ்வாமி ப்ரஸாத ஸித்தியர்த்தம், ஸ்ரீ வள்ளி தேவ ஸேனா ஸமேத ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி ஸன்னிதெள ;ஸ்ரீ பூர்ணா புஷ்கலாம்பா ஸமேத ஸ்ரீ ஹரி ஹர புத்ர ஸ்வாமி ஸன்னிதெள , இத்யாதி. அஸ்மாகம் ஸக குடும்பானாம் க்ஷேமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயுர் ஆரோக்கிய ஐஸ்வர்யானாம் ஸேது ராமேஸ்வர த்ரிவேணி காசி கயா யாத்ரா ஸம்பூர்ண பல ஸித்தியர்த்தம் , ஸகல தைவானுகிரஹ ஸித்தியர்த்தம், ஸ்ரீ ராம நாதாதி ஸகல தேவதா பூஜாம் கரிஷ்யே. அப உபஸ் ஸ்பர்சியா. விக்னேஸ்வர யதாஸ்தானம்:- கணா நாந்த்வா---------- ஸாதனம். ஸ்ரீ மஹா கணபதயே நம: பூர்புவஸ்ஸுவரோம். அஸ்மாத் ஹரித்ரா பிம்பாத் ஸுமுகம் ஸ்ரீ விக்னேஸ்வரம் யதா ஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி. ஶோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச. கலச பூஜை:- பஞ்ச பாத்திர உத்ரணி பாத்திரத்தில் நாங்கு பாகமும் சந்தனம் குங்கும இடவும். உள்ளே அக்ஷதை புஷ்பம் போடவும். வலது கையால் பாத்திரத்தை மூடிக்கொண்டு சொல்லவும். கலசஸ்ய முகே விஷ்ணு : கண்டே ருத்ர ஸமாஶ்ரிதா: மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா ஸ்ம்ருதா: குக்ஷெள து ஸாகரா ஸர்வே ஸப்த த்வீபா வஸுந்தரா . ருக்வேதோ அத யஜுர் வேத: ஸாம வேதோ அப்யதர்வண: அங்கைஸ்ச ஸஹிதா: ஸர்வே கலஶாம்பு ஸமாஶ்ருதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் குரு தக்ஷய காரகா: கங்கே ச யமுணே சைவ கோதாவரி ஸரஸ்வதி நர்மதே ஸிந்து கவேரி ஜலேஸ்மின் ஸன்னதிம் குரு. கலச தீர்த்தம் சிறிதளவு எடுத்து பூஜா த்ரவ்யங்களையும், தன்னையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷணம் செய்து கொள்க. மணி அடிக்கவும். ஆகமார்த்தம் து தேவானாம் கமனார்த்தம் து ரக்ஷஸாம். கண்டாரவம் கரோம் யாதெள தேவதாஹ்வான காரணம். ஆவாஹனங்கள்:- அலங்கரித்து வைத்துள்ள படங்கள், பொருள்கள் ஆகிவற்றில் அந்தந்த தேவதைகளுக்கு , அந்தந்த தேவதை களின் த்யான ஸ்லோகம் சொல்லி ஆவாஹனம் செய்து அர்சிக்க வேண்டும். ஆவாஹனாதி முத்திரைகள்;- ஆவாஹிதோ பவ; ஸ்தாபிதோ பவ; ஸ்ன்னிஹிதோ பவ; ஸன்னிருத்தோ அபவ; அவகுண்டிதோ பவ; ஸுப்ரீதோ பவ; ஸுப்ரஸன்னோ பவ: ஸு முகோ பவ; வரதோ பவ; ப்ரஸீத ப்ரஸீத. 16 உபசார பூஜை புருஷ ஸூக்த விதானப்படியோ, அல்லது ஸ்ரீ ருத்ர விதானப்படியோ செய்யலாம். அலஹாபாத்=ப்ரயாகையிலிருந்து கொண்டு வரப்பட்ட கங்கை சொம்பில் கங்கா தேவியையும், காசியிலிருந்து கொண்டு வரப்பட்ட காசி ரக்ஷை கயிறுகளில் கால பைரவரையும், க்ருஷ்ணர் படம் ஒன்றில் ஸேது மாதவர், பிந்து மாதவர், வேணி மாதவர் களையும், கயா விலிருந்து கொண்டு வரப்பட்ட விஷ்ணு பாதத்தில் மஹா விஷ்ணுவையும், காசி யிலிருந்து வாங்கி வந்த அன்னபூரணி விக்ரஹத்தில் அன்ன பூரணியையும் , ஆவாஹனம் செய்து பூஜித்தல் வேண்டும். சிலர் குல தெய்வம் ஆவாஹனம் பூஜை யும் சேர்த்து செய்கின்றனர். முற்றும்.
|
|
|
Post by kgopalan90 on Oct 11, 2019 7:30:48 GMT 5.5
திரும்ப ராமேஸ்வரம் செல்ல டிக்கட் ரிசர்வ் செய்து கொள்ளவும். இரவு சென்னையில் கிளம்பினால் காலை ராமேஸ்வரம் சென்று லாட்ஜில் ரூம் போட்டுகொண்டு, நேரே ராமனாத ஸ்வாமி கோவிலுக்கு செல்லலாம். அங்கு எல்லா கிணற்றிலும் குளிக்க 25 ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கி கொண்டு, முதலில் கடலில் குளித்து விட்டு எல்லா கிணற்றிலிருந்தும் குளித்துவிட்டு, ராம நாத ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்ய டிக்கட் வாங்கி கொண்டு அபிஷேகம் செய்து விட்டு வந்து விடலாம். கோவிலில் உங்கள் கங்கா தீர்த்தம் கன்டைய்னெர் திருப்பி தர மாட்டார்கள்.
அன்று இரவே கிளம்பி திரும்ப வந்து விடலாம்.
வாராணாசியில் 5 கட்ட தீர்த்த சிராத்த முடிவில் , தர்பணத்திற்கு பிறகு படகிலேயே அல்லது கங்கை கரையில் கங்கா பூஜை செய்ய படுகின்றது. தனது வீட்டிற்கு வந்த பிறகு யாத்ரா பூர்த்தி ஸமாராதனை செய்யும் போது, பல தெய்வங்கள், கங்கா தேவியையும்
பூஜிக்க வேண்டும்.திரிவேணி ஸங்கமத்திலிருந்து வாங்கி வந்த சுத்த கங்கா ஜலம் சொம்பு அனைத்தையும் ஸமாராதனை பூஜையில் வைத்து , காசி கயிரும் வைத்து பூஜிக்க வேண்டும். இதன் பிறகு கங்கை சொம்புகளை எல்லோருக்கும் கொடுக்கலாம். கங்கா தேவி படம் இருந்தாலும் அதை வைத்தும் பூஜிக்கலாம்.
காசியில் செய்ய வேண்டிய கங்கா பூஜை :-
ஆசமனம்;, சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே.
ப்ராணாயாமம்:-
சங்கல்பம்:- மமோபாத்த ஸமஸ்த துரித்ய க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் , ருண த்ரய விமோசனார்த்தம், கங்கா பாகிரதி ப்ரஸாத ஸித்தியர்த்தம் கங்கா பூஜாம் அஹம் கரிஷ்யே.
கலச பூஜை:- ஆத்ம பூஜை, பீடம் பூஜை , செய்து ப்ராண ப்ரதிஷ்டை செய்யவும்.
கங்கா தேவி த்யானம்:-சதுர்புஜாம், த்ரி நயநாம் சுத்த ஸ்படிக ஸன்னிபாம். த்யாயேன் அஹம், மகராரூடாம் ஶுப்ர வஸ்த்ராம் ஶுசிஸ்மிதாம். அஸ்மின் கலசே அல்லது அஸ்யாம் ப்ரதிமாயாம் ஸ்ரீ கங்கா பாகிரதீம் த்யாயாமி.
விஷ்ணு பாதாப்ஜ ஸம்பூதே விஶ்வ நாத ஶிர: ஸ்திதே.. ஆவாஹயாமி கங்கே த்வாம் பக்தாபீஷ்ட பலப்ரதே. ஸ்ரீ கங்கா பாகீரதீம் ஆவாஹயாமி.
முக்தா ரத்ன ஸுவர்ணாதி சுசிதம். ஸுந்தரம் சுபம்.
ஸிம்ஹாஸனம் ப்ரதாஸ்யாமி க்ருஹாண மகராஸணே. ஆஸனம் சமர்ப்பயாமி.
ஸிந்த்வாதி ஸரிதுத் பூதம் கந்த புஷ்ப ஸமன்விதம், பாத்யம் ததாம்யஹம் தேவி ப்ரஸீத பரமேஸ்வரி.--பாத்யம் ஸமர்ப்பயாமி.
ப்ருஹ்ம கமண்டலு ஸம்பூதே கங்கே த்ரிபத காமினி. க்ருஹாணார்க்கியம் ப்ரதாஸ்யாமி ஜஹ்னுகன்யே நமோஸ்துதே.--அர்க்கியம் ஸமர்ப்பயாமி.
ஸ்வர்ண கலசாநீதம் நானா கந்த ஸுவாசிதம். ஆசம்யதாம் மயா தத்தம், க்ருஹாண அம்ருத வர்ஷிணி. ஆசமனீயம் ஸமர்ப்பயாமி..
பயோ ததி க்ருதம், க்ஷெளத்ரம் ரம்பாபலம் ஸமன்விதம். பஞ்சாமிருதம் இதம் தேவி ஸ்வீக்ருஷ்வ மஹேஸ்வரி. பஞ்சாம்ருத ஸ்நானம் ஸமர்ப்பாயாமி.
நர்மதா, யமுனா, ஸிந்து கோதாவரி. ஆஹ்ருதைர் ஜலை: ஸ்நாபயாமி ஶிவே பக்த்யா பாகீரதி நமோஸ்துதே. ஸுத்தோதக ஸ்நானம் சமர்ப்பயாமி.
வைடூர்ய பத்ம ராகாதி சுசிதம் மேகலான் வ்ருதம் ஸுவர்ண ஸூத்ர ஸம்யுக்தம் க்ஷெளமம் தாஸ்யாமி க்ருஹ்யதாம். வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி.
மலயாசல ஸம்பூதம் கஸ்தூரி குங்குமான் விதம் கர்பூர மிஶ்ரிதம் கந்தம் க்ருஹாண பரமேஸ்வரி. கந்தம் ஸமர்ப்பயாமி. ஹரித்ரா குங்குமம் ஸமர்ப்பயாமி.
அக்ஷதான் ஶாலி சம்பூதான் ஹரித்ரா குங்குமான் விதான் பூஜார்த்தம் ஸங்க்ருஹாணேமான் அக்ஷய்ய பலதாயினி. அக்ஷதான் ஸமர்ப்பயாமி.
வஜ்ர வைடூர்ய மாணிக்ய பத்மராகாதி நிர்மிதம். கங்கணம் கரஶோபார்த்தம் காமிதார்த்த பலப்ரதே. ஆபரணம் ஸமர்ப்பயாமி.
கேதகீ துளஸி பில்வ மல்லிகா கமலாதிபி: புந்நாகை: அர்ச்சயாமி த்வாம் க்ருஹாண அமர வந்திதே. புஷ்ப மாலாம் சமர்ப்பயாமி.
அங்க பூஜை;_
பாப பர்வத நாசின்யை நம: பாதெள பூஜயாமி; பக்த வத்ஸலாயை நம: குல்பெள பூஜயாமி; ஜகத்தாத்ர்யை நம: ஜங்கே பூஜயாமி; ஜாஹ்ணவியை நம: ஜாநுனி பூஜயாமி; ஶைல ஸுதாயை நம: ஊரு பூஜயாமி; ஸமுத்ர காமின்யை நம: கடீம் பூஜயாமி; மகராரூடாயை நம: குஹ்யம் பூஜயாமி; ஆநந்த வர்தின்யை நம: ஜகனம் பூஜயாமி;
கங்காயை நம: நாபீம் பூஜயாமி; ஜகத் குக்ஷ்யை நம: உதரம் பூஜயாமி;
விஶால வக்ஷஸே நம: வக்ஷஸ்தலம் பூஜயாமி; ஹ்லாதின்யை நம: ஹ்ருதயம் பூஜயாமி; ஸுஸ்தந்யை நம: ஸ்த னெள பூஜயாமி.
தரங்கின்யை நம: பார்ஶ்வெள பூஜயாமி; உன்னத கண்ட்யை நம: கண்டம் பூஜயாமி; த்ரைலோக்கிய ஸுந்தர்யை நம: ஸ்கந்தெள பூஜயாமி;
அம்ருத கலச ஹஸ்தாயை நம: ஹஸ்தான் பூஜயாமி; லீலா ஸுக தாரிண்யை நம: பாஹூன் பூஜயாமி; வித்யா ப்ரகாசின்யை நம: முகம் பூஜயாமி. த்ரைலோக்கிய வாஸின்யை நம: லலாடம் பூஜயாமி;
ஸு நாஸிகாயை நம: நாஸிகாம் பூஜயாமி; மகர குண்டல தாரிண்யை நம: ஶ்ரோத்ரே பூஜயாமி; பிம்போஷ்டியை நம: ஓஷ்டெள [பூஜயாமி; அனாத ரக்ஷிண்யை நம: அதரம் பூஜயாமி; சஞ்சல கத்யை நம: ஜிஹ்வாம் பூஜயாமி. அளக நந்தாயை நம: கண்டஸ்தலம் பூஜயாமி.
திலக தாரிண்யை நம: பாலம் பூஜயாமி; ஜ்ஞான ரூபிண்யை நம: சுபுகம் பூஜயாமி; அம்ருத பிம்பாயை நம: அளகாந் பூஜயாமி; பீமஸ்த்யை நம: ஶிர: பூஜயாமி; பாகீரத்யை நம: ஸர்வாண்யங்கானி பூஜயாமி.
கங்கா அஷ்டோத்திர சத நாமாவளி:-
த்யானம்:- ஸிதம கர நிஷண்ணாம் ஶுப்ரவர்ணாம் த்ரி நேத்ராம் கர த்ருத கலஶோத்யத் ஸோத் பலாபீதி அபீஷ்டாம் விதி ஹரி ஹர ரூபாம் ஸேந்து கோடீர ஜூடாம் கலிதஸித துகூலாம் ஜாஹ்ணவீம் த்வாம் நமாமி;
ஓம் கங்காயை நம: ஓம் விஷ்ணு பாதாப்ஜ ஸம்பூதாயை நம: ஓம் ஹர வல்லபாயை நம: ஓம் ஹிமாசலேந்த்ர தனயாயை நம: ஓம் கிரி மண்டல காமிண்யை நம: ஓம் தாரகாராதி ஜனன்யை நம: ஓம் ஸாகராத்மஜ தாரிகாயை நம: ஓம் ஸரஸ்வதி ஸமாயுக்தாயை நம:
ஓம் ஸுகோஷாயை நம: ஓம் ஸிந்து காமின்யை நம: ஓம் பாகீரத்யை நம: ஓம் பாக்கிய வத்யை நம: ஓம் பாகிரத ரத அனுகாயை நம: ஓம் த்ரிவிக்கிரம பத உத்பூதாயை நம: ஓம் த்ரிலோக பத காமின்யை நம:
ஓம் க்ஷீர ஸுப்ராயை நம: ஓம் பஹு க்ஷீராயை நம: ஓம் வ்ருக்ஷ ஸமாகுலாயை நம: ஓம் த்ரிலோசன ஜடா வாஸின்யை நம: ஓம் ருண த்ரய விமோசின்யை நம: ஓம் த்ரிபுராரி ஶிரஶ் சூடாயை நம: ஓம் ஜாஹ்ணவ்யை நம: ஓம் நத பீதி ஹ்ருதே நம: ஓம் அவ்யயாயை நம:
ஓம் நயந ஆ நந்த தாயின்யை நம: ஓம் நகபுத்ரிகாயை நம: ஓம் நிரஞ்சனாயை நம: ஓம் நித்ய ஸுத்தாயை நம: ஓம் நீரஜாதி பரிஷ்க்ருதாயை நம: ஓம் ஸாவித்ரியை நம: ஓம் ஸலில வாஸாயை நம: ஓம் ஸா காராம்பு ஸமேதின்யை நம: ஓம் ரம்யாயை நம:
ஓம் பிந்து ஸரஸே நம: ஓம் அவ்யக்தாயை நம: ஓம் வ்ருந்தாரக ஸமாஶ்ரிதாயை நம: ஓம் உமா ஸபத்ன்யை நம: ஓம் ஸுப்ராங்காயை நம: ஓம் ஸ்ரீ மத்யை நம: ஓம் தவளாபராயை நம:
ஓம் அகண்ட லவண வாஸாயை நம: ஓம் கண்டேந்து க்ருத ஶேகராயை நம: ஓம் அம்ருதாகார ஸலிலாயை நம: ஓம் லீலாங்கித பர்வதாயை நம: ஓம் விரிஞ்சி கலஶா வாஸாயை நம: ஓம் த்ரிவேண்யை நம:
ஓம் த்ரிகுணாத்மிகாயை நம: ஓம் ஸங்கத அகெலக ஶமன்யை நம: ஓம் ஶங்க துந்துபி நிஶ்வனாயை நம: ஓம் பீதி ஹர்த்ரே நம: ஓம் பாக்கிய ஜநன்யை நம: ஓம் பின்ன ப்ரஹ்மாண்ட தர்பிண்யை நம: ஓம் நந்தின்யை நம: ஓம் ஶீக்ர காயை நம: ஓம் ஸித்தாயை நம:
ஓம் ஶரண்யாயை நம: ஓம் ஶஶி ஸேகராயை நம: ஓம் ஶாங்கர்யை நம;
ஓம் சபரீ பூர்ணாயை நம: ஓம் பர்கமர்க்னி க்ருதாலயாயை நம: ஓம் பவ ப்ரியாயை நம: ஓம் ஸத்ய ஸந்த ப்ரியாயை நம: ஓம் ஹம்ஸ ஸ்வரூபிண்யை நம: ஓம் பகீரதாம்ருதாயை நம: ஓம் அனந்தாயை நம:
ஓம் ஶரஸ் சந்திர நிபானனாயை நம: ஓம் ஓங்கார ரூபிண்யை நம: ஓம் அதுலாயை நம: ஓம் க்ரீடா கல்லோல காரிண்யை நம:ஓம் ஸ்வர்க்க ஸோபாண ஸரண்யை நம: ஓம் ஸர்வ தேவ ஸ்வரூபிண்யை நம: ஓம் அம்ப:ப்ரதாயை நம: ஓம் துக்க ஹந்த்ர்யை நம: ஓம் ஶாந்தி ஸந்தான
காரிண்யை நம: ஓம் தாரித்ர்ய ஹந்த்ர்யை நம: ஓம் ஶாந்தி ஸந்தான காரிண்யை நம: ஓம் தாரித்ர்ய ஹந்த்ர்யை நம: ஓம் ஶிவ தாயை நம: ஓம் ஸம்ஸார விஷ நாசின்யை நம: ஓம் ப்ரயாக நிலயாயை நம:
ஓம் ஸீதாயை நம: ஓம் தாபத்ரய விமோசின்யை நம: ஓம் ஶரணாகத தீனார்தி பரித்ராணாயை நம: ஓம் ஸு முக்திதாயை நம: ஓம் ஸித்தி யோக நிஷேவிதாயை நம: ஓம் பாபஹந்த்ர்யை நம: ஓம் பாவ நாங்காயை நம: ஓம் பரப்ருஹ்ம ஸ்வரூபிண்யை நம: ஓம் பூர்ணாயை
நம: ஓம் புராதனாயை நம: ஓம் புண்யாயை நம: ஓம் புண்ய தாயை நம: ஓம் புண்ய வாஹிண்யை நம: ஓம் புலோம சார்ஜிதாயை நம: ஓம் பூதாயை நம: ஓம் பூத த்ரிபுவனாயை நம: ஓம் ஜயாயை நம:
ஓம் ஜங்கமாயை நம: ஓம் ஜங்கம ஆதாராயை நம: ஓம் ஜல ரூபாயை நம: ஓம் ஜகத் ஹிதாயை நம: ஓம் ஜஹ்நு புத்ர்யை நம: ஓம் ஜகன் மாத்ரே நம: ஓம் ஜம்பூ த்வீப விஹாரிண்யை நம: ஓம் பவ பத்ந்யை நம:
ஓம் பீஷ்ம மாத்ரே நம: ஓம் ஸித்தாயை நம: ஓம் ரம்யரூப த்ருதாயை நம: ஓம் உமா கரகமல ஸஞ்சாதாயை நம: ஓம் அஞ்ஜான திமிர பானவே நம: நா நா வித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.
தூபம்:- சந்தன அகரு கஸ்தூரி க்ருத குக்லூ ஸம்யுதம் தசாங்க த்ரவ்ய ஸம்யுக்தம் தூபோயம் ப்ரதிக்ருஹ்யதாம். தூபம் ஆக்ராபயாமி.
தீபம்:- ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்னினா யோஜிதம் மயா. க்ருஹான மங்களம் தீபம் த்ரைலோக்கிய திமிராபஹம். தீபம் தர்சயாமி.
நைவேத்யம்:- ஶால்யன்னம் வ்யஞ்சனைர்யுக்தம் ஸுபாபூப க்ருதான்விதம் க்ஷீரான்னம் லட்டுகோபேதம் புஜ்யதாம் அம்ருதாஶினி- நைவேத்யம் ஸமர்ப்பயாமி.
தாம்பூலம்:- பூகிபல ஸமாயுக்தம் நாகவல்லிர் தலைர்யுதம் கற்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதி க்ருஹ்யதாம்.தாம்பூலம் ஸமர்ப்பயாமி.
கற்பூரம்:- தேஜ: புஞ்சஸ்வரூபே தே தேஜஸா பாஸிதம் ஜகத். நீராஜயாமி கங்கே த்வாம் பக்தாபீஷ்ட பலப்ரதே. கற்பூர நீராஞ்சனம் ஸந்தர்ஶயாமி.
கங்கே த்ரிபதகே திவ்யே ஜாஹ் நவி த்ரிதி வஸ்திதே. ப்ரதக்ஷிணம் கரோமி த்வாம் ப்ரணதா கெளக நாஶினி. ப்ரதக்ஷிண நமஸ்காரான் ஸமர்பயாமி.
ப்ராலேயாசல ஸம்பூதே ப்ராசீ நாப்தி ஸமாகமே. ப்ராணீ நாம் பவரோகக்னி பூஜாம் ஸம்பூர்ணதாம் குரு. புத்ர பெளத்ர தன தான்ய பசு புண்ய பலோதயம் தேஹி மே தேவி பக்திம் தே த்வத் பாத கமலே ஸதா. ப்ரார்த்தனை செய்யவும்.
அர்க்கிய ப்ரதானம்:- ஸங்கல்பம்:- அத்ய பூர்வோக்த---------ப்ரீத்யர்த்தம் , கங்கா பாகீரதி பூஜாந்தே க்ஷீரார்க்ய ப்ரதானம் கரிஷ்யே.
ப்ருஹ்ம கமண்டலு ஸம்பூதே கங்கே த்ரிபத காமினி த்ரிலோக்ய வந்திதே தேவி க்ருஹாணார்க்கியம் நமோஸ்துதே. கங்காயை நம: இதமர்க்கியம்
இதமர்க்கியம் இதமர்க்கியம்.
தப நஸ்ய ஸுதே தேவி யமஜ்யேஷ்டே யஶஸ்வினி ஶுத்தானாம் ஶுத்திதே தேவி க்ருஹாணார்க்கியம் நமோஸ்துதே. யமு நாயை நம: இதமர்க்கியம் இதமர்க்கியம் இதமர்க்கியம்.
விருஞ்சி தநயே தேவி ப்ரஹ்மரந்த்ர நிவாஸினி ஸரஸ்வதி ஜகன்மாத: க்ருஹாணார்க்கியம் நமோஸ்துதே. ஸரஸ்வத்யை இதமர்க்கியம் இதமர்க்கியம் இதமர்க்கியம்.
கங்கா யமுனையோர் மத்யே யத்ர குப்த ஸரஸ்வதி த்ரைலோக்கிய வந்திதே தேவி த்ரைவேண்யார்க்கியம் நமோஸ்துதே. த்ரிவேண்யை நம:
இதமர்க்கியம் இதமர்க்கியம் இதமர்க்கியம்.
ஏகார்ணவே மஹா கல்பே ஸுஷூப்தி மாதவ ப்ரபோ. பர்யங்க வட ராஜ த்வம் க்ருஹாணார்க்கியம் நமோஸ்துதே. வட ராஜாயை நம: இதமர்க்கியம் இதமர்க்கியம் இதமர்க்கியம்.
வேணி மாதவ ஸர்வக்ஞ்ய பக்தேப்ஸித பலப்ரதே. ஸபலாம் குரு மே யாத்ராம் வேணி மாதவ நமோஸ்துதே. தீர்த்த ராஜாய நம: இதமர்கியம் இதமர்க்கியம் இதமர்க்கியம்.
த்ரிவேணீ த்ரியம்பிகே தேவி த்ரிவித அக வினாசினி த்ரிமார்கே த்ரிகுணே த்ராஹி த்ரிவேணீ சரணாகதம்.
இனி உங்கள் வீட்டில் செய்ய வேண்டிய சமாராதனை:-
|
|
|
Post by kgopalan90 on Oct 10, 2019 18:38:13 GMT 5.5
அலஹாபாத்தில் செய்ய வேண்டியவை:-ஸ்நானம் செய்து மடி வஸ்த்ரம் தரித்து சங்கல்பம், செய்ய வர வேண்டும்.
1. அனுக்ஞை= பர்மிஷன். சங்கல்பம்.
2.விக்னேஸ்வர பூஜை:-3. ப்ராயஸ்சித்த சங்கல்பம், க்ரஹ ப்ரீதி; க்ருச்சராசரணம்; மஹா சங்கல்பம்.
4.வேணி தானம்; 5. ராமேஸ்வரத்தில் பூஜை செய்து எடுத்து வந்த மணலை கரைத்தல்; வபனம் : 6. த்ரிவேணி சங்கம ஸ்நானம். 7. ஹிரண்ய சிராத்தம்.
8. பிண்ட ப்ரதானம்-க்ஷேத்ர பிண்டம்= (16.) தர்ப்பணம்; ப்ருஹ்ம யஞ்யம்.
9. வேணி மாதவர் தரிசனம்; 10. வட வ்ருக்ஷ தர்சனம்; 11.சுத்தமான கங்கை நீர் பிடித்து வைத்துக்கொள்ளுதல்; 12. ராம் காட் ஹனுமார் தரிசனம்;
13. காஞ்சி காம கோடி கோயில் தரிசனம்; 14. தம்பதி பூஜை.
சென்னையிலிருந்து கங்கா காவேரி எக்ஸ்ப்ரஸ் வாரத்திற்கு இரு முறை செல்கிறது அதில் முன் பதிவு முன் கூட்டியே செய்து கொண்டு 36 மணி நேரம் ரயிலில் சென்றால் அலகாபாத் அடையலாம். வசதி உள்ளவர்கள் 2 டயர், 3 டயர் ஏ.சி கோச்சில் செல்லலாம். ஆகாய விமானத்தில் சென்றால் 2 மணி நேரத்தில் அலகாபாத் செல்லலாம்.
பரிப்ராஜகோபனிஷத் :- யானி கானி ச பாபானி ப்ருஹ்மஹத்யா ஸமானி ச கேசான் ஆஶ்ருத்ய திஷ்டந்தி தஸ்மாத் கேசான் வபாம்யஹம். ப்ரும்ஹ ஹத்தி முதலான பாபங்கள் முடியில் சென்று உறைந்து விடுகின்றன. எனவே ப்ராயஸ்சித்தத்திற்காக கேசத்தை களைந்திடல் அவசியம்.( மன வருத்தம் பாராட்டாமல்). த்ரிவேணி சங்கம ஸ்நானம் செய்வதற்கு முன்னால் , வேணி தானத்திற்கு தயாரன பிறகு கர்த்தா முண்டனம் ( வபனம்) செய்து கொள்ள வேண்டும். கனவனின் நல் வாழ்வை வேண்டி , பத்னியர் தலை முடியை வெட்டி த்ரிவேணிக்கு ஸமர்ப்பிப்பது சோபிதமான செயலாகும்.இரண்டு அங்குலம் வெட்டி வேணிக்கு தானம் செய்வது மூலம் அனைத்து மன விருப்பங்களும் நிறைவடையும்.யுவதிகளும் வேணி தானம் செய்ய வேண்டும். இதனால் பணம், வம்ச வ்ருத்தி, ஆயுள் வ்ருத்தி, ஸெளபாக்கியம் உண்டாகும்.
சுக்ல பக்ஷத்தில் ஒரு நல்ல திதியில் ஏற்புடுய நல்ல நக்ஷத்திரத்தில் செய்வது நல்லது. இதன் ப்ரகாரம் ப்ரயாண தேதியை தேர்ந்தெ டுக்கலாம் . த்ரிவேணி தேவி, கணவர், ப்ராஹ்மணர்கள், சுமங்கலிகள் ஆகியவர்களை வணங்கி ஆசி பெற வேண்டும்.மடி உடுத்தி கிழக்கு அல்லது வடக்கு முகமாக ஆசனத்தில் அமர்ந்து வாத்யார் சொல்கின்றபடி சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். திதி வாரம் நக்ஷத்திரம் சொல்லி பிறந்தது முதல் இந்நாள் வரை அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களை பட்டியலிட்டு , அவற்றை அழிக்க வேண்டி, தனது ஸெளபாக்கியம், கணவரின் ஆயுள் ஆரோக்கிய அபிவ்ருத்தி புத்ர பெளத்ராதிகளின் நல் வாழ்வையும் வேன்டி, , தன் கணவர் மற்றும் மற்ற அந்தணர்கள் ஸம்மதத்துடன் , வேணி மாதவரின் நல்லாசி வேண்டி, வேணி தானம் செய்கிறேன். இதுவே வேணி தான ஸங்கல்ப மந்திரத்தன் அர்த்தம்.
தலை முடி பிறிந்து விடாமல் முடிந்து வைத்த வண்ணம், , முகத்தில் மஞ்சள் பூசிக்கொண்டு கணவரின் கையை பிடித்தபடி இருவரும் சேர்ந்து த்ரிவேணி ஸங்கம ஸ்நானம் செய்ய வேண்டும். மனைவி கணவனுக்கு பாத பூஜை செய்ய வேண்டும். வேணி தானத்திற்கு மனைவி கணவனிடம் அனுமதி பெற வேண்டும்.
ஸுமங்கலிகளுக்கு ரவிக்கை துண்டு, ஸெளபாகிய த்ரவ்யங்கள் கொடுக்க வேண்டும். 9 X 5 வேஷ்டி 5, மற்றும் வாத்யாருக்கு 2; 9 கஜம் புடவை-1.
ஸெளபாகிய சாமான் செட்-2.; காலுக்கு வெள்ளி மெட்டி, திரு மாங்கல்யம், தங்கத்தில். தம்பதி பூஜைக்கு.
தச தானம் := தங்கம், வெள்ளி, பசு , பூமி , வேஷ்டி, உப்பு, எள்ளு; தான்யம், வெல்லம், நெய்; முதலியன. இவற்றிர்க்கு மொத்தமாக பைசா வாக தானம் செய்து விடலாம்.
அலகாபாத்திலிருந்து ரயில்வசதி கயா செல்ல உள்ளது. காசியிலிருந்து மிக குறைவாக உள்ளது. ஆதலால் ஒரே நாளில் இவை எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு ரிசர்வ் முன் கூட்டியே செய்து வைத்திருக்க வேண்டும். இரவு கயா சென்று கயாவிலும் ஒரே நாளில் எல்லாம் முடித்துகொண்டு அன்று இரவே காசி வந்து விடலாம்.
கயாவில்:- 1. பல்குனி நதி தீர்த்த ஸ்னானம்; மஹா ஸங்கல்பம்; தண்ணிர் இருக்காது. சொம்பில் தண்ணிர் ஊற்றிலிருந்து எடுத்து ப்ரோக்ஷித்து கொள்ளலாம். 2. பல்குனி நதி கரையில் ஹிரண்ய சிராத்தம்; க்ஷேத்ர பிண்டம் 17 எண்ணிக்கை; பசு மாட்டிற்கு இதை கொடுக்க வேண்டும். 3, தில தர்ப்பணம்; 4. விஷ்ணு பாத ஹிரண்ய சிராத்தம்; 5. 64 பிண்டம்-பிண்ட ப்ரதானம்; 6. விஷ்ணு பாதத்தில் க்ஷேத்ர பிண்ட தரிசனம்; 7, மாத்ரு ஷோடசி; 8. அக்ஷய வடம் அன்ன சிராத்தம்-ஹோமம். அல்லது ஹிரண்ய சிராத்தம்; 9. அக்ஷய வட பிண்ட ப்ரதானம்; க்ஷேத்ர பிண்ட தானம்; 10. த்ருப்தி தக்ஷிணை; ஆசார்ய சம்பாவனை; 11. காய்,இலை, பழம் விடுதல்; 12. போதி மர தர்சனம்; 9X5 வேஷ்டி--5 அல்லது 2; 5 கயா வாளிகள் சாப்பிட வேண்டும். தற்காலத்தில் கயா வாளிகள் குறைந்து விட்டார்கள். முன்னதாகவே சொல்லி ஏற்பாடு செய்ய வேண்டும்.
அலகாபாத்திலோ அல்லது கயா விலோ அல்லது காசியிலோ புது பூணல் அணிய வேண்டும். வசதி உள்ளவர்கள் காசிக்கு சென்று அங்கிருந்து ஒரு நாள் அலகாபாத் காரில் சென்று எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு திரும்ப காரில் காசிக்கு வந்து , திரும்ப கயாவிற்கு காரில் ஒரு நாள் சென்று இரவே காரில் திரும்ப காசி வந்து விடலாம்.ஸ்வாமி நாத சாஸ்திரி; ( சிவகுமார்) ; கே. வெங்கடராமன் சாஸ்த்ரி; காசியில் உள்ளார். B-5/311 OUDGHARBI ( HANUMAN GHAT)
VARANASI- 221001; E MAIL :-rshiv kumar@rediffmail.com; www. Shrikashiyatra.com; phone no; (0542)2276134; 2275173; 2276533; cell:- 91 93369 12058; 93353 33137; 94153 36064;
இவரிடம் எல்லா வசதியும் உள்ளது. இட வசதி, போஜன வசதி. கோவில் தரிசனம்; கார் வசதி; ஹிரண்ய சிராத்தம், அலஹாபாத், கயா சிராத்தமும் இவர்களே பொருப்பேற்று செய்து தருகிறார்கள். ஒரு மாதம் முன் கூட்டியே இவர்களிடம் எழுதி தெரிந்து கொள்ள வேன்டும்.
அடுத்து அரியூர் மஹாதேவ கண பாடிகள்- B-5/309 HNUMAN GHAT;VARANASI-221001; (0542) 2277117; 2275800; MOBILE NOS; 87957 77888; 98949 61599; 96708 04000;
KASI SANKARA MUTT- MANAGER-CHANDRA SEKAR (0542) 9554 66613.; 9415 22872;
2276932; 2276915 ;
காசியில்:- 1. அனுக்ஞை; விக்னேஸ்வர பூஜை; 2. பூர்வாங்க சங்கல்பம்
நவகிரஹ ப்ரீதி தானம்; பூர்வாங்க தச தானம்; நாந்தி சிராத்தம்; வைஷ்ணவ சிராத்தம்; புண்யாஹ வசனம்; மஹா சங்கல்பம்; ப்ராயஸ்சித்த சங்கல்பம்; பல தானம்; மஹத் ஆசீர்வாதம்; உத்தராங்க பசு தானம்;
சக்ர தீர்த்த ஸ்நானம்; மணி கர்ணிகா தீர்த்த ஸ்நானம்; பார்வண விதானமல்லது ஹிரண்ய ரூப சிராத்தம்; ப்ராஹ்மண போஜனம்; அன்ன ரூப தீர்த்த சிராத்தம்; பிண்ட தானம்; க்ஷேத்ர பிண்ட தானம்; தில தர்ப்பணம்; ப்ருஹ்ம யக்யம்;
1 அசி கட்டம்:- ஹரித்வாரில் செய்த பலன் கிடைக்கும்.
2 தச அஸ்வமேத கட்டம்:- ப்ருஹ்மா 10 அஸ்வமேத யாகம் இங்கு செய்ததால் இந்த பெயர்.
3 திரிலோசனா கட்டம், அல்லது வாரணா கட்டம்:-விஷ்ணு பாத உதக தீர்த்தம்.
4 பஞ்ச கங்கா கட்டம்:-கங்கை, யமுனை, ஸரஸ்வதி, கிராணா, தூதப்பா என்ற இவை ஐந்தும் இங்கு சங்கமம். இங்கு பிந்து மாதவர் கோயில் உள்ளது.
பிந்து மாதவர் அவசியம் தரிசிக்க வேண்டும். 250 படி ஏறி பிந்து மாதவரை பார்க்கலாம். அர்ச்சனை செய்யலாம்.
5 மணிகர்ணிகா கட்டம்:- சக்ர புஷ்கர தீர்த்தம்.சிறிது தூரத்தில் பக்கத்தில் ஒரு குளம் உள்ளது. முதலில் அங்கு சென்று ஸ்நானம் செய்துவிட்டு பிறகு மணி கர்ணிகா கட்டத்திலும் ஸ்நானம்.
இந்த ஐந்து கட்டங்களிலும் க்ஷேத்ர பிண்ட தானம். ஒவ்வொன்றிலும் 17 பிண்டம். உதிரி அன்னம் நைவேத்தியத்திற்கு. மனைவி உயிருடன் இல்லாதவர்கள் சென்றால் மனைவிக்காக ஒன்று17+1=18 பிண்டம்.
மோட்டார் படகில் இந்த 5 கட்டங்களுக்கும் செல்ல வேண்டும். படகிற்குள் குமிட்டி அடுப்பு, கரி இருக்கும், அடுப்பு பற்ற வைத்து கங்கை தண்ணீர் அரிசியில் ஊற்றி சாதம் வடித்து 17 பிண்டம் பிடித்து வைக்க வேண்டியது கர்த்தாவின் மனைவியின் வேலை. கர்த்தா பிண்டம் வைத்து முடிந்த பின் பாத்திரத்தை அலம்பி வைக்க வேண்டும். மறு கட்டம் படகு செல்லு முன் மறுபடியும் அரிசியை சாதம் வடித்து பிண்டம் பிடித்து வைக்க வேண்டும். இம்மாதிரி 5 கட்டங்களிலும் செய்ய வேண்டும். மடிசார் புடவை கட்டி கொண்டு வர வேண்டும். மோட்டர் படகிற்கு.
இம்மாதிரி ஒரு படகில் ஒரு நேரத்தில் 5 குடும்பம் சென்று பிண்ட தானம் செய்து திரும்பி வரலாம். படகோட்டிக்கு பணம் இந்த ஐவரும் பகிர்ந்து கொள்ளலாம்.
பிண்டத்தை கங்கையில் கரைத்து விடலாம். தர்பைகளை கங்கையில் போட வேண்டாம்.
தில தர்ப்பணம். ப்ருஹ்ம யக்ஞ்யம். கங்கா பூஜை செய்ய வேண்டும்.
கால பைரவர் கோயிலுக்கு சதுர்தசி அன்று செல்வது விஷேசம்.
ப்ருத்வீ லிங்க பூஜை:- ஓம் ஹராய நம: என்று சொல்லி மண் எடுத்து ஓம் மஹேஸ்வராய நம என்று சொல்லி நீர் ஊற்றி பிசைந்து லிங்கமும் பீடமும் செய்க. ஓம் சூல பாணயே நம: என்று சொல்லி ப்ரோக்ஷணம் செய்க.ஓம் பசுபதயே என்று சொல்லி பூஜை செய்க. ஓம் மஹாதேவாய நம: என்று சொல்லி தண்ணீரில் கரைத்து விடவும்.
காசியிலும் தம்பதி பூஜை செய்ய வேண்டும். 9 கஜம் புடவை+ ரவிக்கை-1.
வெள்ளி மெட்டி காலுக்கு-4; தங்க திருமாங்கல்யம்.-1. ஸெளபாக்கிய திரவியங்கள். = கண்ணாடி, சீப்பு, மஞ்சள். குங்குமம். கண்ணாடி வளையல். மெகந்தி, கண் மை; 9x5 வேஷ்டி-1. புஷ்பம், பழம். தாம்பூலம்.தக்ஷிணை. தற்காலத்தில் பண வசதி இல்லாதவர்கள் ஜுவெல்லரி கடையில் விற்கும் ஸ்வாமி படத்திற்கு வைக்கும் தங்கத்தில் பொட்டு கிடைக்கிறது. இதில் ஒன்று ஆயிரம் ரூபாய் விலை ஆகிறது. திருமாங்கல்யத்திற்கு பதில் இதை கொடுக்கவும்.
போஜனம் செய்யும் ஐவருக்கும் 9x5 வேஷ்டி-5. ஒரு நாள் பார்வண விதிப்படி ஹோமம் செய்து சிராத்தம் செய்ய வேண்டும். தினமும் மாலை வேளைகளில் கோயில்களுக்கு சென்று வழி பட வேண்டும்.
காசி விசுவ நாதர் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக கடுமையாக உள்ளது. கையில் எதுவும் எடுத்து செல்ல முடியாது. பெரு மழை காலங்களில் , கங்கையில் வெள்ள பெருக்கு உள்ள நாட்களில் படகுகள் ஓட்ட அரசு தடை விதிதுள்ளது. யாத்திரை செல்ல திட்ட முடுவோர் ஞாபகம் வைத்து கொள்ளவும்.தீபாவளிக்கும் சிவ ராத்ரிக்கும் இடைபட்ட காலம் அதிகமான குளிர் காலம். ஏப்ரல், மே மாதம் அதிக வெய்யல் கோடை காலம். மஹாளய பக்ஷ காலமும் கூட்டம் அதிகம் வரும். தீபாவளியும், மகர சங்கராந்தியும் திரு விழா காலம்.
மார்ச், ஏப்ரல், ஜூன், ஜூலை, ஆகஸ்ட், மாதங்களில் சென்று வரலாம். தேவி பாகவதம் மற்றும் வாயு புராணம் புத்ரனின் கடமை பற்றி இவ்வாறு கூறுகிறது. பெற்றோர்களின் ஜீவித காலத்தில் அவர்கள் சொற்களை மீறாமலிருத்தல், அவர்கள் அமரர் ஆன பின் அவர்களது திதியில் சிராத்தம் செய்து பித்ரு போஜனம் செய்வித்தல், கயாவிற்கு சென்று பிண்ட தானம் செய்தல் ஆகிய இம்மூன்றும் தான் ஒரு புத்திரன் புத்திரனாக பிறந்ததின் பூரண பலனை அவனுக்கு ஸித்திக்க வைக்கும். காசியில் சிறு சந்துகள் அதிகம். அதில் செல்லும்போது தடை விதிக்கபட்டிருந்தும் அவ்விடங்களில் டூ வீலர் களில் சவாரி செய்வோர் அதிகம் உள்ளது. கவனம் தேவை. மிகுந்த ப்ரயாசை பட்டு காசிக்கு சென்று விட்டு அங்கு உள்ள எல்லா நாட்களிலும் கங்கையில் சங்கல்ப ஸ்நானம் செய்யாமல் இருக்க வேண்டாம்.
காசிக்கு காலை 8 மணிக்கு சென்றடைந்தால் அந்த நாளை ஆலயங்கள் பார்க்க வைத்து கொள்ளுங்கள். காசிக்கு மாலையில் வந்தால் தசாஸ்வ மேத கட்டத்தில் , மாலை சுமார் 6-30 மணிக்கு ஆரம்பிக்கும் கங்கா ஆரத்தியை போய் பாருங்கள். அல்லது விசுவ நாதர் ஆலயத்தில் மாலை 7-30 மணிக்கு நடக்கும் ஸப்தரிஷி பூஜை தரிசிக்கலாம்.
காசியில் முதல் நாள் காலை தங்கியுள்ள இடத்தில் ஸ்நானம் செய்து சுத்த வஸ்த்ரம் தரித்து பிள்ளையார் பூஜை, கங்கா ஸ்நான சங்கல்பம், கிரஹ ப்ரீதி, க்ருச்சராசரனம், ப்ராயசித்த தானங்கள், செய்து கங்கை ஸ்நானம் செய்துவிட்டு தீர்த்த சிராத்தம், ஹோமம், ப்ராஹ்மண போஜனத்துடன் செய்யவும். பின்னர் பிண்ட ப்ரதானம்:-க்ஷேத்ர பிண்டத்துடன் 17 பிண்டங்கள் வைத்து தர்பணம் செய்ய வேண்டும்.
பிண்டங்களை கங்கையில் கரைக்கலாம், அல்லது பசு மாட்டிற்கும் கொடுக்கலாம். மாலையில் கோயில் தரிசனம்.
இரண்டாம் நாள் காலை ஐந்து கட்ட ஸ்நானம், ஐந்து தீர்த்த ஸ்ராத்தம், பிண்ட ப்ரதானம், கங்கா பூஜை. ஐந்து மணி நேரமாகும். மாலையில் கோயில், ஷாப்பிங்க், இத்யாதி.
மூன்றாவது நாள் தம்பதி பூஜை; முடிந்தவுடன் ஐந்து ப்ராஹ்மணர்கள் வரித்து ஸமாராதனை செய்ய வேண்டும்.
பிற்பகல் வேளைகளில் விசுவனாதர், விசாலாக்ஷி, அன்ன பூரனி, கால பைரவர்,டுண்டி கணபதி, சங்கடமோசன ஆஞ்சனேயர்,காசி மன்னர் அரண்மனை, சாரனாத்,பிந்து மாதவர், தண்ட பானி,பனாரஸ் ஹிண்டு யூனிவர்சிடி, கெளடி மாதா ஆலயம், துர்கா கோவில், முதலியன பார்க்க வேண்டும். அஷ்டமி, சதுர்தசி, ஞாயிறு, செவ்வாய் காலபைரவர் தரிசனம் நல்லது.
கால பைரவர் ஆலயம் செல்லும் போது அங்கு கறுப்பு கலர் ரக்ஷை கயிறுகள் தேவை பட்ட எண்ணிக்கை வாங்கி அவற்றை பூஜாரியிடம் கொடுத்து காலபைரவர் காலடியில் வைத்து புனித மாக்கி வாங்கி வர வேண்டும்.மயில் பீலி தண்டத்தால் கால பைரவர் ஸன்னதியில் பைரவ தன்டனை அவசியம் பெற வேண்டும்.
விசுவ நாதர் ஆலயத்திற்கு அருகாமையில் ஒரு ஆஞ்சனேயர் சன்னதி. அதன் பின்புறம் ஒரு ஆலமரம் உள்ளது. இதன் வேர் அலஹாபாத்தில் உள்ளது. இதன் கிளைகள் கயாவில் உள்ளது. இது மத்திம பாகம்.ப்ரதக்ஷிணம் செய்ய முடியாது. பார்க்கலாம்.
அலஹாபாத்தில் ஒரு நாள், கயாவில் ஒரு நாள், காசியில் மூன்று நாள்.முண்டம், தண்டம், பிண்டம் இம்மூன்று ஊர்களில் இவைகளை முடித்து கொண்டு சென்னை திரும்பலாம்.திரும்பி வருவதற்கும் சென்னையிலேயே ரிசர்வேஷன் டிக்கட் வாங்கி வைத்து கொள்ளுங்கள்.
2018ம் வருடம் . அலாஹாபாத்தில் வாத்தியார் தக்ஷிணை3000/ரூபாய். கயாவிலும் தக்ஷிணை 3000/ரூபாய், காசியில் தக்ஷிணை 6000ரூபாய் ஆகிறது. பாக்கேஜ் என்று சொல்லி 40,000 டு 50,000 ரூபாய் வாங்குகிறவர்களும் இருக்கிறார்கள். ஆகாரம், தங்குமிட வாடகை, இது தவிர .கோயில்களுக்கு செல்ல வேன் உள்ளது. அதில் அழைத்து போய் எல்லா இடங்களையும் காண்பித்து , திரும்ப கொண்டு வந்து விடுவார்கள். இதற்கு பணம் செல்லும் நீங்கள் எல்லாரும் பகிர்ந்து கொடுக்கலாம்.
கால பைரவர் ஆலயத்தில் பைரவாஷ்டகமும், அன்ன பூரணி கோயிலில் அன்னபூர்ணாஷ்டகமும், விசுவ நாதர் ஆலயத்தில் விசுவ நாதாஷ்டகம் ஒரு முறையாவது பாராயணம் செய்து மன நிறைவு பெறலாம். கையில் இப்புத்தகம் எடுத்து செல்லுங்கள்.
தர்ம ஸாதனங்கள்:- காசி மஹாத்மியம் 136ம் பக்கம்:- ஸத்யத்தை கடைபிடித்தல், மடி ஆசாரமாய் இருத்தல்; அஹிம்சை; சாந்தம்; வள்ளல் தன்மை;கருணை, அடக்கம், களவு எண்ணமின்மை; புலனடக்கம் ஆகியவை அறநெறி பற்றி ஒழுகும் வழிகள்.
|
|
|
Post by kgopalan90 on Oct 10, 2019 16:00:16 GMT 5.5
கோஜாகரி விரதம் -விவரம்.
ஆங்கில மாதம்-செப்டம்பர்-அக்டோபர்.
தமிழ் காலண்டர் மாதம்= புரட்டாசி;(ஸெளரமானம்)
தமிழ் சாந்திரமான மாதம்= ஆசுவயுஜம்.
மலையாளம்-------------=கன்னி மாதம்.
தெலுங்கு-ஆந்திரா=ஆசுவயுஜம் மாதம்.
கன்னடா- -------------=ஆசுவினா மாதம்
வட இந்தியா-ஹிந்தி காலண்டர்= ஆசுவினம் மாதம்.
பெங்காலி காலண்டர்=ஆசின் மாதம்.
நேபாலி காலண்டர்= அஷோஜ் மாதம்
மராத்தி காலண்டர்= ஆசுவின் மாதம்.
குஜராத்தி காலண்டர்=அஸோஜ் மாதம். என்ற பெயர்கள் உள்ளன.
பெங்கால், பீஹார், ஒரிஸ்ஸா, அஸ்ஸாம், குஜராத், மஹா ராஷ்டிரா, கிழக்கு இந்தியா பகுதிகளில் இந்த கோஜாகரி விரதம் 13-10 2019 பெளர்ணமி அன்று கொண்டாடுகிறார்கள்.
அவர்களுக்கு இது மழைகாலம் முடிந்து நெல், கோதுமை, மற்ற தானியுங்கள் அறுவடை முடிந்து முதன்முதல் கடவுளுக்கு படைக்கிறார்கள். நாம் தை மாதத்தில் பொங்கல் கொண்டாடுவது போல். இன்றே அவர்களும் மாட்டு பொங்கலும் குக்கிராமங்களில் கொண்டாடுகிறார்கள்.
இன்று களிமண்ணால் செய்த லக்ஷ்மி பொம்மைகளிலும், லக்ஷிமி பாதம் வரையப்பட்ட ரங்கோலி டிசைன் கோலங்களிலும், பெளர்ணமி அன்று 16 உபசார லக்ஷ்மி பூஜை, இனிப்புகள் படைத்தல்; லக்ஷ்மியின் சகோதரர் ஆன சந்திரனுக்கும் இன்று பூஜை உண்டு. சந்திரனும், லக்ஷ்மியும் பாற்கடல் கடைந்த போது வெளி வந்தார்கள் என்பதால். பெளர்ணமி அன்று லக்ஷ்மி பூஜை செய்ய வேண்டும் என அவர்களது நம்பிக்கை.
ஒரிஸ்ஸாவில் குமார் பெளர்ணமி என்று இன்று ஸ்கந்தனுக்கு பூஜை செய்கிறார்கள்.
13-07-2019 முதல் 11-08-2019 வரை சாக விருதம். காய் ஏதும் சேர்த்துகொள்ளாமல் சாப்பிட வேண்டும். 12-08-2019 முதல் தயிர் விரதம். 09-09-2019 வரை. 10-09-2019 முதல் 09-09-2019 வரை பால் விரதம்.
10-09-2019 முதல் 09-11-2019 வரை த்வி தள விரதம். இரு பருப்புகளாக உடையும், உளுந்து, பயறு, கடலை, துவரை, வேர் கடலை. இவைகள் இல்லாமல் சாப்பிட வேண்டும். இது தான் குடும்பிகளுக்கான சாதுர் மாஸ்ய விரதம்.
மழை காலத்தில் காய் கிடைக்காது. பசு மாடு கர்பிணியாக இக்காலத்தில் இருக்குமாம். ஆதலால் பால் கறக்கவேண்டாம். பால் தயிர் வேண்டாம் என விட்டார்கள். தானியம் பருப்பு வகைகள் இப்போது விளைந்து வந்த புதிதில் உபயோகிக்க வேண்டாம். இது உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் என இக்காலத்தில் இதுவும் வேண்டாம் என ஒதிக்கினார்கள்.தீபாவளியின் போது இப்பருப்புகள் இல்லா பக்ஷணங்கள் சாப்பிட வேண்டும்.
|
|