Post by kgopalan90 on Mar 7, 2020 1:40:06 GMT 5.5
முதலில் விவாஹம், பின்னர் ப்ரவேச ஹோமம், ஸ்தாலி பாகம், ஒளபாஸனம், சேஷ ஹோமம் என ஐந்தும் நடக்கும்.
திருமண மேடையில் கோலம் போட்ட இடத்தில் பட்டு பாயை நான்றாக மடித்து போட்டு, அதில் மணமக்களை கிழக்கு பக்கம் பார்த்தபடி அமர செய்ய வேண்டும்.
இப்போது பெண் வீட்டு புரோஹிதர், பிள்ளை வீட்டு புரோஹிதர் என இரு புரோஹிதர் இருப்பர்.
மனப்பெண்ணின் தாயாரும், தப்பனாரும் இப்போது அவசியம் பெண் பக்கத்தில் இருக்க வேண்டும்.
வைதீகருக்கு தேவை படும் சில்லரை நாணயங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும்.
விவாஹ மந்திரங்களின் அர்த்தம் முன் கூட்டியே கேட்டு புரிந்து கொண்டு, அவசர படாமல் கல்யாண காலத்தில் சொல்லபடு மெல்லா மந்திரங்களையும் சரியாக நன்றாக உச்சரித்து, சடங்குகளையும், ஹோமங்களையும்
குறிப்பட்ட படி செவ்வனே செய்வதால் புது மண தம்பதிகளின் வாழ்வு சீரோடும், சிறப்போடும்,
பாசப்பிணைப்போடும், இன்பம் நிறைந்ததாக இருக்கும் என்பது திண்ணம்.
விவாஹத்தில் 1, அனுக்ஞை;2.கணபதி பூஜை;
3. வர ப்ரேக்ஷனை;4.கன்னிகா தானம்;5. கூறை புடவை அளித்தல்;6. மதுபர்கமும் கோ தானமும் 7. நுகத்தடி வைத்தலும் மாங்கல்ய தாரணமும்; 8.பாணி க்ரஹனம்
9. ஸப்த பதி; 10. லாஜ ஹோமம். என்று வரிசை யாக நடைபெறும்.விவாஹம் என்பது நிறைவு பெறுகின்றது இந்த லாஜ ஹோமத்துடன் தான்.
அனுக்ஞை= சம்மதம் என்று இந்த இடத்தில் அர்த்தம். தாம்பாளத்தில் தாம்பூலம், தக்ஷிணை வைத்து கையில்
ஏந்திய வண்ணம் அஶேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்ப்பிதாம் இமாம் ஸெளவர்ணிம் யத் கிஞ்சித் தக்ஷி
ணாமபி யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலஞ்ச ஸ்வீக்ருத்ய ஆவயோ: உத்வாஹ கர்ம கர்த்தும் யோக்கிதா ஸித்தி ரஸ்து இதி அனுக்ரஹான.
என்று கூறி தக்ஷிணை தந்து விவாஹம் செய்து கொள்வதற்கு ஏற்ற யோக்கியதையை பெற்று கொள்கிறான் மணமகன்.
ஒ வித்வாங்களது ஸபையே தங்களது திருவடியில் ஏதோ கொஞ்சம் ஸ்வர்ண தக்ஷிணை ஸமர்பிக்கிறேன். இதை உயர்ந்த
தக்ஷிணையாக தாம்பூலத்துடன் பெற்றுக்கொண்டு, எங்களுக்கு விவாஹம் செய்து கொள்வதற்கு ஏற்ற யோக்கியதை உண்டாக வேன்டுமென்று அனுகிரஹம் செய்யுங்கள்.
என்பதாகும். தக்ஷிணையை பெற்றுக்கொண்ட அந்தணர்கள், ததாஸ்து; யோக்கியதா ஸித்திரஸ்து என்று சொல்வார்கள்.
எல்லா வித கர்மாக்களிலும் துவக்கத்தில் இதை சொல்வார்கள். அந்தணர்கள் சொல் தேவ வாக்கா க கருத படுகிறது.
2, விக்னேஸ்வர பூஜை:-
மஞ்சள் பொடியால் கணபதி பிடித்து வைத்து த்யானம், ஆவாஹனம் என்ற 16 உபசார பூஜை கணபதிக்கு செய்து விக்னங்கள் வராமல் காத்தருள ப்ரார்திக்க வேண்டும்.
சங்கல்பத்தில் ஸுபே ஸோபனே ---- ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் தர்ம ப்ரஜா ஸம்பத் யர்த்தம் வரான் ப்ரேஷயிஷ்யே. என்று கூறி
ஸங்கல்பம் செய்து பின்னர் கணபதி யதா ஸ்தானம் செய்து அக்ஷதை புஷ்பங்களை புரோஹிதர் ஆசீர்வாதம் செய்து அளிக்க
அதை சிரசில் தரித்து கொள்ள வேண்டும். இங்கு வரனால் சொல்லப்படும் இரண்டு மந்திரங்களின் பொருள்.
க்ருஹஸ்தாஸ்ரமத்தை அடைந்த பின் நான் செய்ய போகும் யாகத்தில் நான் அளிக்க போகும்
ஸோம ரஸத்தை பருக போகும் இந்திரன் , நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதை விரும்புகிறான்.என்றும் தேவர்களை
ப்ரார்த்தித்து, தேவர்களே எனக்காக செல்லும் இவர்களது மார்கங்கள் நல்ல படியாக இருக்கு மாறு செய்வீராக. அர்யமா, பகன் என இரு தேவர்களும் எங்களை நல்ல முறையில் சேர்த்து
வைக்கட்டும்.எங்களுடைய தாம்பத்யம் ஒற்றுமையுடன் கூடியதாக இருக்கும்படி நீங்கள்அருள் புரிவீர்களாக என்றுமாகும்.
3. வர ப்ரேஷனை.
பெண்ணின் தந்தை தனது மனைவி ஸமேதராக அந்தணர்களை நமஸ்கரித்து தாம்பாளத்தில் தாம்பூலம், தக்ஷிணை
வைத்து அசேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்ப்பிதாம் இமாம் ஸெளவர்ணிம் யத் கிஞ்சித் தக்ஷிணாமபி
யதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலம் ச ஸ்வீக்ருத்ய
தசானாம் பூர்வேஷாம் தசானாம் பரேஷாம் ஆத் மனஸ்ச ஏக விம்சதி குலோத்தாரன த்வாரா நித்ய நிரதிசயானந்த சாஸ்வத ப்ருஹ்ம லோகா அவா
ப்தியர்த்தம் ஸ்ரீ மஹா விஷ்ணு ப்ரீத்யர்த்தம் கன்யகா தானாக்ய மஹா தானம் கர்த்தும் யோக்யதா ஸித்திம் அனுக்ரஹாண. என்று சொல்லி கன்யகா தானம் செய்ய சம்மதம் கேட்கிறார்.
அதாவது திதி வார நக்ஷத்திரங்கள் சொல்லி எனக்கு முன்னால் என் குலத்தில் பிறந்த பத்து பேரும், நானும், எனக்கு பின்னே என் குலத்தில்
பிறக்க போகும் பத்து பேரும், ஆகிய 21 பேரை நற்கதி அடைவிப்பதின் மூலமாக அழிவற்றதும். அளவற்ற ஆனந்தமும் உள்ளதான சாஸ்வதமான
ப்ருஹம லோகத்தை அடைவதற்காக , மஹா விஷ்ணு வின் ப்ரீதியை பெறுவதற்காகவும்,
கன்னிகாதானம் என்னும் மஹா தானத்தை செய்கிறேன் என்று ஸங்கல்பம் செய்து கொண்டு,
விக்னேஸ்வர பூஜை செய்து கன்னிகா தானம் செய்கிறார். மஹா விஷ்ணுவே மாப்பிள்ளை வடிவில் வந்து தனது கன்னிகையை ஏற்பதாக
கருதி அவரது பாதங்களை பூஜிகின்றார்.
விக்னேஸ்வரரை யதா ஸ்தானம் செய்த பின்னர் க்ரஹ ப்ரீதி செய்ய வேண்டியது அவசியம். கன்யா தான காலத்தில் உண்டாகும்
தோஷங்களை நிவர்த்திக்கும் பொருட்டு நவகிரஹ ப்ரீதிக்காக சிறிது தக்ஷிணையை ப்ராஹ்மணர்களுக்கு கொடுப்பதே க்ரஹ ப்ரீதியாகும்.
இதன் பின்னர் மணமகனை விஷ்ணு ஸ்வரூபமாக எண்ணி , மஹா விஷ்ணு ஸ்வரூபஸ்ய வரஸ்ய இதம் ஆஸனம்;
ஸகல ஆராதனை: ஸ்வர்ச்சிதம் மஹா விஷ்ணூ ஸ்வரூப வர ஸ்வாகதம்; இதம் தே பாத்யம். என்று கூறி மணமகனுக்கு நல்வரவு கூறுவதாகவும்,அர்க்கியம், பாத்யம், ஆசமனீயம்
அளித்து வரனின் கால்களை அலம்பி இருவரும் ஆசமனீயம் செய்வதாகவும் கூறப்படுகிறது.
கால்களை அலம்பும் போது தத் விஷ்ணோ: பரமம் பத்ஸதா பஶ்யந்தி ஸுரய: என்ற வேத மந்திரத்தை உச்சரிக்கிறார்கள். இதன் கருத்து.
மஹா விஷ்ணுவினுடைய உயர்ந்த பரம பதமானது உலகெல்லாம் ப்ரகாசமாக விளங்குகிறது. அதை குற்ற மற்ற புண்யசீலர்கள்
ஆன பெரியவர்கள் எப்பொழுதும் பார்த்து போற்றுகின்றனர்.அத்தகைய மஹா விஷ்ணுவின் பாதமாக ,வரனான உம்மை கருதி பூஜிக்கிறேன்
என்பதாகும்.
இப்போது பெண்ணின் தந்தை தனது பெண்ணை குறிப்பிட்ட மணமகனுக்கு கன்னிகாதானம் செய்வதாக கூறி , பெண்ணின் முந்தய மூன்று
தலைமுறை பெரியவர்களின் பெயர்களையும் அவரது கோத்திரத்தையும் சொல்லி, அதே போல்
பிள்ளையின் முந்தய மூன்று தலை முறை பெரியவர்களின் பெயர்களையும், அவர்களது கோத்திரத்தையும் சொல்லி இந்த திருமணம்
எல்லோருக்கும் சம்மதமா என்று முஹூர்த்த திற்கு வந்துள்ள எல்லா பந்துக்களிடமும் சம்மதம் கேட்பதாக அமைந்துள்ளது.
எல்லோரது சம்மதமும் கிடைத்த பிறகு தான் விவாஹம் தொடரும். அந்த காலத்தில்.
4. கன்னிகாதானம்:-
வர ப்ரேஷனை ஆனபின்னர், ( நெல் நிரம்பிய மூட்டை) நெல் கோட்டை என்பர். நெல் கோட்டை ஒன்றின் மேல் பெண்ணின் தகப்பனார் கிழக்கு முகமாக
அமர்ந்திருக்க அவரது மடியில் மணப்பெண் அமர அவளது கைகளில் பழம் தேங்காய், தாம்பூலம், ஆகியவற்றை
வைத்து ,பெண்ணின் தாயாரை தீர்த்தம் விட சொல்லி பிள்ளைக்கு தனது மகளை தானமாக அளிப்பார். அப்போது
கன்யாம் கனக ஸம்பன்னாம் கனகாபரணைர் யுதாம் தாஸ்யாமி விஷ்ணவே துப்யம் ப்ருஹ்ம லோக
ஜினீஷயா வஸ்வம்பரா: ஸர்வ பூதா: ஸாக்ஷண: ஸர்வ தேவதா: இமாம் கன்யாம் ப்ரதாஸ்யாமி பித்ரூனாம் தாரணாய ச கன்யே மாமாக்ரதோ
பூயா: கன்யே மே பவ பார்ஸ்வயோ: கன்யே மே ஸர்வதோ பூயா: த்வத்தானான் மோக்ஷ மாப்னு யாம் ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம்
விபாவஸோ; அநந்த புண்ய பலதம் அதஶ் சாந்தி ம் ப்ரயஸ்சமே.என்று கூறி தானம் செய்கிறார்.
இதன் பொருள்;- தங்க நகைகள் பூட்டிய எனது கன்னிகையை , ப்ருஹ்ம லோகம் செல்ல வேண்டும் என்ற ஆசையினால் விஷ்ணு ரூபமான உமக்கு அளிக்கிறேன்.
உலகை தரிகின்ற ஸர்வ தேவர்களும்,ஸர்வ பூதங்களும் ஸாக்ஷியாக இருக்கட்டும். பித்ருக்கள் நன்மை
பெற இந்த கன்னிகையை தானம் செய்கிறேன். ஓ கன்யே தேவி எனக்கு எதிரிலும் பக்கத்திலும் எங்கும் இரு.உன்னை தானம் செய்வதால் மோக்ஷம் அடைய வேண்டும், குழந்தைகளை
பெறுவதற்காகவும்,புருஷனுடன் கூட இந்த கன்னிகை இருந்து ஸர்வ கர்மாக்களையும் செய்யும் பொருட்டும் தானம் செய்கிறேன்.
தானம் செய்பவர் கிழக்கு நோக்கியும், மணமகன் மேற்கு நோக்கியும் கன்னியின் தாய் வடக்கு
நோக்கியும் இருக்க வேண்டும்.என்பது கன்னிகா தான முறை.
மேற்கண்ட ஸ்லோகங்கள் எல்லாம் சொல்லி , கன்னிகையின் வலது கரத்தை ஜலதாரையுடன் தாம்பூல தக்ஷிணையுடன் வரனது கரத்தில் அளிக்க வேண்டும்.
அப்போது மண மகன் தேவஸ்ய த்வா ஸவிது ப்ரஸவே அசுவினோர் பாஹுப்யாம் பூஷணோ ஹஸ்தாப்யாம் ப்ரதிக்ருஹ்ணாமி என்ற மந்திரம் கூறி கன்னிகையை ஏற்று கொள்ள வேண்டும்.
ஸவித்ரு தேவன் நமக்கு நன்மை தருவத ற்காக அஸ்வினி தேவர்களுடைய பாஹு `களாலும் பூஷாவினுடைய கரங்களினாலும் இதை பெற்று கொள்கிறேன்.
சிறந்தவரான ஆங்கீரஸ் உன்னை ஏற்றுக்கொள் ளட்டும். நமது தோளிலிருந்து முழங்கை வரை உள்ள பகுதிக்கு பாஹு என்று பெயர்.
அங்கு அதிஷ்டமான தேவதையாக வசிப்பவர் அசுவினி தேவர்கள்.அதற்கு கீழே உள்ளது கரம் எனப்படும். இதற்கு அதிஷ்டான தேவதை பூஷா,
இந்த இருவர் பெயராலும் வாங்கி ஆங்கீரஸிடம் அளிக்கிறோம்.ஆகையால் இந்த பொருள் நேரிலோ, மறைமுகமாகவோ பரமாத்மாவிற்கு அளிக்கபடுகிறது.
அவ்வாறு நாம் தானம் வாங்கிய பொருளை நல்ல விதத்தில் பயன் படுத்தினால் தான் தானம்
வாங்கிய பாபம் அகலும். ஆதலால் தானம் வாங்கிய கன்னிகையை கண்ணும் கருத்துமாக காக்க வேண்டிய கடமை அதிக மாகிறது.
5, கூறை புடவை அளித்தல்.
முன் சொன்னது போல் மணமகள் தன் தந்தையின் மடி யில் அம்ர்ந்திருக்க மணமகன் ஒரு தட்டில் புடவை, ரவிக்கையை அவளிடம் கீழ் கண்ட மந்திரம் சொல்லி கொடுப்பான்.
பரித்வா நிர்வண கிர: இமா: பவந்து விசுவத: வ்ருத்தாயும் அனுவ்ருத்தய: ஜுஷ்டா பவந்து ஜிஷ்டவ:
அதாவது ஏ தேவேந்திரனே உன் அருளால் இந்த கன்னிகையை சுற்றி கட்டப்பட்ட புடவை அவளுக்கு சுகத்தையும் பெருமையையும் தரட்டும்
உம்மை விட சிறந்த தேவர்களை நீங்கள் உபாசி க்கிறீர்கள். ஆதலால் நாங்கள் கூறுகின்ற இந்த வாக்கும் வ்ருத்தி அடைந்து உம்மை ஸேவிக்க
ட்டும். நீங்கள் இவளுக்கு பரம ஸெள பாக்கி யங்களை தாருங்கள் என்பதாகும். மணமகள் தனது மணாளனுக்கு நமஸ்காரம் செய்து விட்டு புடவையை வாங்கி கொள்ள வேண்டும்.
மணமகனின் சகோதரியே இப்பவும் புடவை கட்டி விட செல்ல வேண்டும்.
ஒன்பது கஜ புடவையான அதன் உள் தலைப்பை நான்கு விறர்கடையான அகலத்தில் எட்டு முதல் பன்னிரன்டு வரை அவரவர் உடல்
சரீர வாகிற்க்கு தக்க வாறு கொசுவம் வைத்து கொண்டு,, இடது காலின் பின் பக்கத்தில் கொசுவம் வரும்படியாக புடவையை பிடித்து
கொண்டு , மீதியுள்ள புடவையை முன்பக்கமாக சுற்றி வலது பக்கத்தில் கொசுவிய பகுதியோடு சேர்த்து இறுக்க மாக முடிச்சு போட வேண்டும்.
இவ்வாறு செய்த பின் வலது காலின் கீழ்பகுதி புடவை கரை பகுதியை அந்த காலின் அடியில் குதி காலால் அழுத்தி பிடித்து கொண்டால்
( புடவை கட்டி முடியும் வரை) கால் பகுதியில் புடவை தூக்கி கொள்ளாமல் தழைய இருக்கும்.
முடிச்சு போட்ட பகுதியின் மற்றொரு பக்கத்தை
சிறிது முன் பக்கமாக இடுப்பில் இடது பக்கத்தில் சொருகி கொள்ள வேண்டும்.பின்னர் முன் பகுதியிலுள்ள புடவையை சிறிது தளர்த்திய வண்ணமாக ,
இரு பார்டர்களும் சேர்த்த வண்ணம் நேராக முன் பக்கம் வயிற்று பக்கமாக நடுவில் செருகி
கச்சமாக, முழு புடவையும் பின் பக்கம் கொண்டு வந்து இடுப்பில் பின் பகுதியின் நடுவில் நன்றாக அவிழாமல் செருக வேண்டும்.
இவ்வாறு சொருகிய மேல் பகுதியின் இடது பக்க கரையிலிருந்து புடவையின் மீதி பகுதியை மட்டும் வலது பக்கமாக கொண்டு வந்து ,
வயிற்றின் நடுவில் செருகி,மீதி புடவையை இடது பக்கதிலிருந்து கொன்டு வந்து ஒரு சுற்று சுற்றிய பின் வலது தோள் வழியாக மேலாக்காக
போட்டு, தலைப்பு பகுதியை இரண்டாக மடித்து இடுப்பின் வலது பக்கத்தில் செருக வேண்டும். இவ்வாறு செய்ய சாதாரணமாக நீளம் சரியாக இருக்கும்.
தலைப்பு கட்ட நீளம் போதாமல் போனால் உள்ளே வைத்து கொசுவிய கொசுவங்களை குறைத்து கட்டலாம்.
தலைப்பு நீளம் அதிகம் ஆனால் தலைப்பு போடும் முன்னால் சிறிது புடவையை சற்று அதிக மாக செருகி சரி செய்து கொள்ளலாம்.
புடவை முழுவதும் கட்டிய பின்னர் ,வலது குதி காலால் அழுத்திய பகுதியை தளர்த்தி விடலாம்.
ஒரு காலின் பக்க கொசுவமும்,மற்றொரு காலின் பகுதியும் நன்கு தழைத்து ஒன்றுடன் ஒன்று இணையாக உள்ளதா என்று பார்த்து இழுத்து சரி செய்து கொள்ள வேண்டும்.
உட்காரும் போது கட்டை தளர்த்தி கொள்ள வேண்டும் என்றால் , வலது தோள் பகுதி புடவையின் கைபக்கத்திலுள்ள பகுதியை மேலிருந்து கீழ் பக்கமாக இழுத்த படி சரி செய்து கொள்ளலாம்.
புடவையை கட்டிய பின் மண மகள் முன்பு அணிந்து இருந்த மாலைகள் யாவற்றையும் மறக்காமல் அணிவித்து மண மேடைக்கு அவளது நாத்தனார் அழைத்து வர வேண்டும்.
சிலர் மடிசார் புடவை கட்டியதும் , முன்பு கட்டியிருந்த ஊஞ்சல் புடவையை ஒரு நாற்காலி யில் போட்டு அதில் மணப்பெண்ணை உட்கார
வைத்து ஊஞ்சலில் சுற்றிய எரிந்து கொண்டி ருக்கும் விளக்கை ஒரு தட்டில் வைத்து பெண்ணின் முன்பு மூன்று முறை சுற்றி ஏற்றி இறக்கும் பழக்கத்தை செய்வர்.