Post by kgopalan90 on Mar 6, 2020 22:51:10 GMT 5.5
வட ஆற்காடு சேர்ந்தவர்கள் , யஜுர் வேதம் இல்லா மற்ற வேத காரர்களும் 4 பாலிகை வைத்து பூஜிக்கிறார்கள்.
யஜுர் வேத காரர்கள் 5 பாலிகை நடுவில் ஒன்றும், கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என வைக்கிறார்கள்.
ஊர வைத்த விதைகளை முதலில் நடுவிலும், பின்னர், கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என்ற வரிசையிலும் ப்ரதக்ஷிண மாகவும் விதைகளை தெளிக்க வேண்டும்.
கருப்பு எள் சீக்கிரமாக முளை விட்டு வேகமாக வளரும் சுபாவ முள்ளது. ஆதலால் இங்கு இதை சேர்க்கிறார்கள். இதை சுப காரியங்களுக்கும் தாராளமாக சேர்க்கலாம். எந்த தவறும் இல்லை.
மொத்தம் தெளிப்பது ஒற்றை படையில் இருக்க வேண்டும், எத்தனை பேர் வேண்டுமானாலும் தெளிக்கலாம். பெண் வீட்டு பாலிகைகளில்
தெளிக்கும் சுமங்கலிகளுக்கு பெண் வீட்டினரும், பிள்ளை வீட்டு பாலிகைகளில் தெளிப்பவர்களுக்கு பிள்ளை வீட்டினரும், தாம்பூலம், சந்தனம், குங்குமம், பணம் கொடுக்க வேண்டும்.
நாந்தி இரு வீட்டாரும் செய்வர். பிறகு ரக்ஷா பந்தனம் என்னும் ப்ரதிஸர பந்தம்.
வெறும் வயிற்றுடன் தான் நாந்தி செய்ய வேண்டும். நாந்தி செய்பவர்களும், ப்ரதக்ஷிணம் வருபவர்களும், நாந்தி முடிந்த பிறகே டிபன் சாப்பிட செல்வார்கள்.
பிள்ளைக்கு வலது கையிலும், பெண்ணுக்கு இடது கையிலும் அவரவரது தந்தை கங்கணம் கட்டுவர்.
பெண்ணிற்கு பெண் வீட்டினரும், பிள்ளைக்கு பிள்ளை வீட்டினரும் ஆரத்தி எடுக்க வேண்டும். ஆரத்தி இருவர் எடுக்க வேண்டும்.
வடக்கு பக்கமாக இருக்கும் பெண்டிர் அந்த தட்டிலுள்ள ஆரத்தி கரைசலை வாசலில் கோலத்தின் மீது கொட்ட வேண்டும்.
ஆரத்தி தட்டில் போட்ட காசை இருவரும் சமமாக எடுத்து கொள்ள வேண்டும்.
பிறகு மணமகன் ஸர்வாங்க க்ஷவரம் செய்து கொள்ள வேண்டும். நாவிதர் ஸர்வாங்க க்ஷவரம் செய்யும் போது மணமகனின் தொடை இடுக்குகளில் தோல் வியாதி இருக்கிறதா
வீரியம் சீக்கிரம் வெளி வரும் நிலையில் இந்த மணமகன் இருக்கிறாரா என்பதை கண்டு பெண் வீட்டாரிடம் சொல்வர். அந்த காலத்து நாவிதர் களுக்கு நாட்டு வைத்தியம் நன்கு தெரியும்.
தற்காலம்போல் அந்த காலத்தில் வைத்திய வசதி இல்லாததால் , குழந்தை பிறந்த வுடன் தாயார் இறப்பதும், அக்குழந்தைக்காக வேறு திருமணம் செய்து கொள்வதும் அதிக மாக இருந்திருக்கிறது.
பிறகு எல்லோரும் சாப்பிட செல்ல வேண்டும்.
பிறகு ஸாயங்கால டிபன், காப்பி.
பிறகு மாப்பிள்ளை அழைப்புக்கு ஏற்பாடுகள். இது முழுவதும் லெளகீகம் தான்,இதில் வைதீக நிகழ்ச்சி இல்லை. இக்காலத்தில் இதுவும் தேவை இல்லா ஒன்று.
முன்பாகவே திருமண மண்டபத்திற்கு அருகாமையில் உள்ள கோயிலில் மாப்பிள்ளை அழைப்பிற்கு சொல்லி ஏற்பாடுகள் செய்து வைத்து,
தெருவில் மாப்பிள்ளை அழைப்பு கார் வருவதற்கு போலீசிடம் பர்மிஷன் , தேவைபடும் மற்ற பர்மிஷன்களும் வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.
மாலை 6 மணிக்கு சந்தியாவந்தனம், காயத்ரி ஜபம் எல்லா ஆண்களும் செய்து விட்டு கோயிலுக்கு மெதுவே நடந்து செல்வர், கீழே விரிக்கும் ஜமக்காளம் போன்றவற்றையும் எடுத்து செல்வர்.
பெண்கள் , வெற்றிலை, பாக்கு, சந்தனம், குங்குமம், மஞ்சள் தூள், கல்கண்டு, சக்கரை, பருப்பு தேங்காய் ஒரு தாம்பாளத்தில் ஒரு ஜோடி உச்சியில் பூ சுற்றி அதில் 4 வெற்றிலை, பாக்கு
கோயிலில் மணமகனை கிழக்கு முகமாக அமர செய்து புரோஹிதர் டிரஸ்ஸை ஓதி கொடுக்க அதை மனப்பெண்ணின் சகோதரன் மணமகனுக்கு அணிய செய்து ,
மாலை போட்டு பூசென்டை கையில் கொடுத்து சந்தனம் குங்குமம் இட்டு, பன்னீர் தெளித்து , பரிசு பொருட்கள் ஆன
மோதிரம், அல்லது, ப்ரேஸ்லெட், அல்லது செயின், கை கடிகாரம் முதலியன போட்டுவிட்டு
சர்க்கரை கல்கண்டு கொடுத்து பின்னர் அங்கு வந்துள்ள பிள்ளை வீட்டாருக்கு சந்தனம் கல்கண்டு கொடுத்து உபசரிக்க வேண்டும்.
பின்னர் கோயிலுக்குள் மாலையை கழற்றி கையில் வைத்து கொண்டு, சுவாமிக்கு அர்ச்சனை செய்து கொண்டு, பிறகு வெளியே தயாராக
இருக்கும் அலங்காரம் செய்த காரில் ஏறி உட்கார்ந்து கொண்டு மாலையை போட்டு கொண்டு, மணமகனை ஊர்வலமாக
மண்டபத்திற்கு அழைத்து வருவார்கள். இந்த ஊர்வலத்தில் பாண்ட் வாத்ய காரர்கள், பின்னர் நாதஸ்வர இசை மழையை பொழிந்து கொண்டு
வர, மாப்பிள்ளையின் பக்கத்தில் மழலை செல்வங்கள் நிரம்பி வழிய காற்றே இல்லாமல் உடல் வியர்த்து கொட்டும். மாப்பிள்ளையின் காரின் பின் பக்கம் பெண் வீட்டு பெண்டிர்கள்
பருப்பு தேங்காய், தேங்காய், பழம் என பல தாம்பாளங்கலை ஏந்திய வண்ணம் எல்லா உறவினர்களும் காரை தொடர்ந்து வருவார்கள்.
இடை இடையே வாண வேடிக்கையும் செய்கிறார்கள். மணப்பெண்ணை மற்றொரு காரில் அழைத்து வந்து ஊர்வலத்தை காணச்செய்
கிறார்கள். மண்டபம் வந்தவுடன் மண ப்பெ ண்ணையும் மாப்பிள்ளை அருகில் அமர வைத்து போட்டோ, வீடியோ எடுக்கிறார்கள்.
ஊர்வலம் வரும்போது மிக அதிக வயதான வர்கள், மண்டபத்திற்கு வர முடியாத நிலையில் உள்ளவர்கள் தங்கள் வீட்டு வாசலில் இருந்த படியே மணமகனை
பார்த்து ஆசீர்வதிக்கட்டும், என்பதற்கோ, அல்லது ஊர்வலம் வரும் போது மணமகனை பற்றிய தகவல்கள் ஊரில்லுள்ளவர்கள் எவரேனும்
பார்த்து, பெண் வீட்டாரிடம் சொல்லி ஆவன செய்யலாம் என்பதற்கோ இம்மாதிரி வைத்திருக்கலாம் அந்த காலத்தில்.
ஊர்கோலம் முடிந்து மணமகன் மண்டப வாயிலில் வந்து இறங்கியவுடன் முதலில் மணமகளின் தாயார் மணமகனுக்கு வெற்றிலை, பாக்கு பழம், ஒரு மட்டை தேங்காய் கொடுக்க வேண்டும். அதை வாங்கி மணமகன் மேளக்கா ரரிடம் கொடுப்பான்.
அதன் பின்னர் பெண் வீட்டார் இருவர் ஆரத்தி எடுக்க , யாராவது ஆண் நபர் ஒரு தேங்காயால் மணமகனின் தலையில் திருஷ்டியாக சுற்றி, சதுர் தேங்காயாக கீழே போட்டுடைக்க வேண்டும்.
இதன் பின்னர் மண மகளின் தந்தையாரும், மணமகனின் தந்தையாரும் சேர்ந்து நிச்சய தார்த்தம் செய்து கொள்ள வேண்டும். இதிலும் வைதீக கர்மா எதுவுமில்லை.
விக்னேஸ்வர பூஜை செய்த பின்னர், இன்னாருடைய குமாரியை இன்னாருடைய குமாரனுக்கு கொடுக்க இருப்பதாய் நிச்சயித்து,
இருப்பதையும் இந்த லக்னத்தில் பாணி கிரஹணம் செய்து கொடுக்க போவதாய் லக்ன பத்ரிக்கை வாசிப்பர்.
மணப்பெண்ணை நன்கு அலங்கரித்து , தலையில் ராக்கோடி வைத்து பின்னி ஜடை நாகம் வைத்து, பூவினால் அலங்காரங்கள் செய்து
மண மேடையில் அந்த காலத்தில் அமர செய்வார்கள். மாப்பிள்ளை அழைப்புக்கு வைத்த பருப்பு தேங்காயை பிள்ளை வீட்டினர் மண மேடையில் கொண்டு வந்து வைக்க வேண்டும்.
வெற்றிலை, பாக்கு பழங்கள், பன்னீர்,சந்தனம், குங்குமம். சக்கரை, கல்கண்டு, புஷ்பம் யாவற்றையும் வைத்து , மணப்பெண் மேடைக்கு வரு முன்னர் பிள்ளை வீட்டினர் எல்லோரையும்
நிச்சய தார்த்ததிற்கு வரும் படி அழைத்து வந்தவர்களுக்கு, சந்தனம், குங்குமம், சக்கரை, கல்கண்டு கொடுத்து உபசரிக்க வேண்டும்.
பெண்ணின் தந்தை, பிள்ளையின் தந்தையிடம் தாம்பூலம், பழங்கள், தேங்காய், புஷ்பம் இவற்றுடன் கல்யாண பத்ரிக்கை வைத்து ,
மறு நாள் இந்த லக்னத்தில் கன்னிகா தானம் செய்து கொடுப்பதாய் தெரிவிக்க , பிள்ளை வீட்டு புரோஹிதர் அந்த பத்ரிக்கையை எடுத்து எல்லோர் முன்னிலையிலும் வாசிப்பர்.
மணமகனின் தந்தை பழத்தட்டுடன் தனது சம்மதத்தை தெரிவித்தவுடன் மணப்பெண்ணை அழைத்து வரச்சொல்வர்.
மணப்பெண்ணிற்கு மாலை அணிவித்து அழைத்து வர ,அவளது தந்தைக்கு வலது பக்கம் அருகில் மணையில் உட்கார சொல்லி, பிள்ளையின் தந்தை
நிச்சயதார்த்த புடவையை புரோஹிதர் மந்திரம் முழங்க கெட்டி மேளம் கொட்ட பெண் தனது மாமனாருக்கு நமஸ்காரம் செய்து பெற்று கொள்ள வேண்டும்.
அந்த புடவையை பெண்ணிற்கு நாத்தனார் ஆக போகும் பெண் அழைத்து சென்று மணமகளுக்கு தலைப்பு நிறைய விட்டு கட்டி விட வேண்டும்.
புடவை கட்ட நாத்தனார் வர வேண்டும் என்று வைத்ததிற்கு காரணம், மணப்பெண்ணை மிக அருகில் பார்த்து ஏதேனும் குறை கண்டால் , அவர்களது ஆயிரம் காலத்து பயிரான வாழ்க்கையை காக்க வழி வகுக்கலாம் என்பதே.
அவர்களது உறவு சுமுகமாக இருக்க வழி கோலும். மணப்பெண்ணுக்கும் பிள்ளை வீட்டினர் மீது இருக்கும் பயம் சிறிது தெளியும். தைரியத்தை ஏற்படுத்தும் ஒரு வாய்ப்பு. அந்த காலத்தில் இதற்காக இம்மாதிரி வைத்து இருக்கி றார்கள்.
பெண் புது புடவை கட்டி கொண்டு வருவதற்குள்
பெண்ணின் தந்தை பிள்ளையார் பூஜை செய்து , எந்த வித விக்கினமும் இன்றி திருமணம் இனிதே நடைபெற ப்ரார்த்தித்து கொள்ள வேண்டும்.
மணப்பெண் தன் தந்தையின் அருகில் உட்கார, பெண்ணின் நாத்தனார் பெண்ணின் கழுத்திலும், கைகளிலும் சந்தனம் பூசி , நெற்றியில் குங்குமம் இட்டு,சர்க்கரை, கல்கண்டு கொடுத்து , தலையில் சிறிது புஷ்பம் வைத்து
மாலை ஒன்றை போட்டு , ஒரு ப்ளாஸ்டிக் பையில் வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள் போட்டு, இந்த பையை மணமகளின் புடவை தலைப்பில் வைத்து, கீழே விழாதபடி சொருகி விட வேண்டும்.
வட ஆற்காடு, தென் ஆற்காட்டை , சேர்ந்தவர்கள் இதை அவர்களது இல்லத்திற்கு வந்த பிறகு செய்கிறார்கள்.
திரு நெல்வெலி காரர்கள் இத்துடன் பயறு அல்லது பொட்டு கடலையும் சேர்த்து வைத்து கட்டுகிறார்கள்.
புடவை தலைப்பில் ப்ளாஸ்டிக் பை பொருட்களை வைத்து கட்டுவதை மட்டும் மண பெண்ணை நிற்க வைத்த படி கட்டலாம்.
அந்த காலத்தில் மணமகன் இங்கு வர மாட்டார். இந்த காலத்தில் வந்தால் தகப்பனாருக்கு வலது பக்கத்தில் உட்காரலாம்.
இதன் பின்னர் பெண் அவளது பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் நமஸ்காரம் செய்த பிறகு அமர வேண்டும்.
இப்போது ஒரு பெண் வீட்டாரும் ஒரு பிள்ளை வீட்டாரும் என இருவர் பாட்டு பாடி ஆரத்தி எடுத்து இவ்வைபவத்தை நிறைவு செய்ய வேண்டும்.
ஆரத்தியில் பெண்ணும், பெண்ணின் அப்பாவும் காசு போட வேண்டும். இதன் பின் மணபெண் அவளது மடியில் கட்டபட்டுள்ள தாம்பூலத்தை வெளியே எடுத்து வைத்து விடலாம்.
மணமகனுக்கான முஹூர்த்த வேஷ்டியையும், மணமகளுக்கான கூறை புடவையையும் ஓதி பெண்ணின் தந்தை பிள்ளையின் தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும்.
மணமகனுக்கு மட்டும் தனியாக இன்று இரவு மாமியார் சாப்பாடு பரிமார வேண்டும். அந்த காலத்து வழக்கம்.
இதன் பிறகு நெருங்கிய உறவினர்களுக்கு தனது சக்திக்கேற்ப துணி மணிகளோ, பணமோ புரோஹி தர் ஓதிட அளிக்கலாம்.
இதன் பின்னர் விருந்தினர்களை உணவு உண்ண செய்து தாம்பூலம் அளிக்க வேண்டும்.
பிள்ளை வீட்டார் விளையாடல் சாமான் களையும்
விளையாடல் சாமான் என்பதில் பெண்ணுக்கு வேண்டிய அலங்கார பொருட்கள் இருக்கும்.
இதை பிள்ளை வீட்டார் வாங்கி வைத்திருக்க வேண்டும். இப்போது பிள்ளை வீட்டார் விளையாடல் சாமான் களையும், பிள்ளயின் தாயார்
கூறை புடவையையும், அதன் மேல் திருமாங்க ல்யமும் வைத்து கையில் வைத்திருக்க வேண்டும்.
இன்றும் மணமகன்/ மணமகள் பெற்றோர் மடிசார், பஞ்ச கச்சத்துடன் இருக்க வேண்டும்.