|
Post by kgopalan90 on Dec 28, 2020 11:10:30 GMT 5.5
சனிப்பெயர்ச்சி (27 -12 -2020) பற்றி அனைவரும் அவசியம் அறிய வேண்டிய அபூர்வ உண்மை தகவல்களும், செய்ய வேண்டிய பரிகார ரகசியங்களும்....
கடந்த சில தினங்களாக சனிக்கிரக பெயர்ச்சி தனுசிலிருந்து மகர ராசிக்கு இடம் பெயருகிறார் என்று வலைத்தளம், முகநூல் மற்றும் நாளிதழ்களில் செய்திகளை காண்கிறோம். பெயர்ச்சி பலன்களை விகித அடிப்படையில் பதித்தும் சுபம் அசுபம் என்று வகுத்தும் தெய்வீக ரகசியங்களை கொண்ட இந்த சாஸ்திரத்தை பலர் கேலி செய்யும் படியும் குழப்பிக்கொள்ளும் படியும் பதிந்து அவமரியாதை செய்வதை காணும் பொழுது வருத்தமாக இருக்கிறது. இதை பற்றிய தெளிவு அனைவருக்கும் ஏற்படவே இந்த அற்புத பதிவு....
\ முகநூலில் மற்றும் நட்பு வட்டாரத்தில் மகர ராசிக்கு சனிப்பெயர்ச்சி மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று சோதிடர்கள் பலன் பதித்து உள்ளார்கள். என்ன பரிகாரம் செய்து கொள்ளவேண்டும் என்று பலர் கேட்டு உள்ளார்கள். பரிகாரத்தை பற்றி கவனிக்கும் முன் சனீஸ்வர பகவானை பற்றிய சிறு தகவலை நாம் முதலில் தெரிந்து கொள்வோம்....
சூரியனுக்கும் சுவர்ச்சலாவுக்கும் யமன், வைவஸ்தமனு, யமுனா என்ற மூன்று குழந்தைகள் உண்டு. சூரியனின் வெப்பம் தாளாமல் சுவர்ச்சலா தன் நிழலைக் கொண்டு ஒரு உருவத்தைப் படைத்தாள். அவளுக்குப் பெயர் சாயாதேவி என்று பெயர் வைத்து தான் தவம் செய்ய போவதாக கூறி தவம் முடிந்து வரும் வரை தன் கணவனுக்கு தன்னிடத்தில் மனைவியாக இருந்து பணிவிடைசெய்யும்படி பணிந்து விட்டுப் போய் விடுகிறாள். சாயாதேவியும் அப்படியே வாழ்ந்து வருகிறாள்.
சாயாதேவிக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன அவர்களில் கடைசியாக பிறந்தவன் சனி. அவளுக்கு குழந்தை பிறந்த பின் சாயாதேவியின் செயலில் மாற்றம் தென்பட்டதை கவனித்த சூரியனும் தலை பிள்ளை யமனும் சாயாவை கவனித்து இவள் நம் குலத்தவள் இல்லை என்று அடையாளம் கண்டவுடன் சாயாதேவி தன் குழந்தைகளுடன் தனியே வசிக்கலானாள். மற்ற இரு குழந்தைபோல சனியின் பார்வை மற்றும் உடல் வேகம் சுபமானதாக இல்லை என்று அறிந்த சாயா தேவி அவனை தன் அரவணைப்பில் வைத்து வளர்த்தாள்.
இப்படி மந்த செயல்களுடன் சனி தந்தையான சூரியனின் ஆசிகள் இல்லாமல் வளர்ந்ததால் தந்தைக்கு பகையாகவும் தாய்க்கு செல்ல பிள்ளையாக இருந்தார். இவனின் பார்வை பட்டால் உடல் நிலை பாதிக்க படும் என்று உணர்ந்த அனைத்து தேவர்களும் இவரை காண பயந்தார்கள். இது சனி தேவருக்கு வருத்தத்தை கொடுத்தது. தன் வேதனையை தாயிடம் கூறிய பொழுது சாயாதேவி அவனிடம் சூரியதேவரின் வெப்பம் தாளாமல் நானும் சுவர்ச்சலாவும் சிவபெருமானை நோக்கி தவம் செய்து வரங்களை பெற்று மேன்மை அடைந்தோம் உனக்கும் தவம் ஒன்றே சரியான வழி என்று சாயாதேவி மகனுக்கு ஆலோசனை வழங்கினாள். அதன் படி காசியில் தவம் செய்து சிவ தரிசனம் கண்ட பொழுது சிவ பெருமான் சனி தேவரிடம் இனி நீ நவகோள்களில் ஒருவனாக இருந்து மனிதர்களின் கர்மத்தினால் ஏற்பட்ட வினைகளின் தன்மை ஏற்ப
தண்டனைகளை கொடுத்து அவர்களை திருத்தி நல்வழிப்படுத்தி பாவம்களை போக்கும் அதீத கோள்களாக விளங்குவாய் என்று ஆசி கொடுத்து ஈஸ்வர பட்டம் அருளினார்.
ஈஸ்வர பட்டம் பெற்றும் சனியின் மனம் நிறைவு பெறவில்லை. தன் பார்வை தன்னை பற்றிய அடுத்தவர் சிந்திப்பது மற்றவர் இவருடன் யாரும் பழக அஞ்சுவது போன்ற நிலை இவரை சங்கட படுத்தியது. மேலும் இவருடைய கடமையில் நேர்மை அஞ்சாமை தண்டனை நோய்களை தருவது போன்றவைகளினால் இவரை சனி தேவர் என்று சொல்லாமல் தோஷம் என்று மற்றவர்கள் இவரை குறிப்பிடுவது வேதனையை இவருக்கு அளித்தது.
தன்னுடைய வேதனையை வசிட்ட முனியிடம் இவர் முறையிட்டபொழுது சனி தேவரின் கைகளில் இருந்த ஆயுதத்தை பிடுங்கி விட்டு விவசாயத்திற்கு பயன்படும் கலப்பையை கொடுத்து இதை இனி கைகளில் வைத்து கொள். மேலும் உனது தாய் வழிபட்ட அக்னிஸ்வர இறைவனை பூஜித்து நற்கதி அடைவாய் என்றும் அறிவுறுத்தினார். குருவின் ஆலோசனைப்படி தவமும் பூசைகளும் செய்து சனீஸ்வர பகவான் நன்மை செய்யும் சனியாக அருள்பெற்றார்.
சனீஸ்வர பகவானை பற்றிய ஆய்வில் எனக்கு கோவிலில் மற்றும் நூல்களில் கிடைத்த தகவல் இங்கே பதியப்பட்டது. சனி தேவரின் குரு காலபைரவர் என்று சோதிட நூல்கள் சொல்கிறது. காலபைரவருக்கும் சனி தேவருக்கும் என்ன தொடர்பு என்று நான் ஆசான் அகத்தியரிடம் கேட்ட பொழுது அவர் தன் சுவடிகளில்
"அண்டத்துள் அண்டமாய் அணுவில் நிற்கும்
அண்டவெளி பிரபஞ்சத்தில் சுட்சமாய் நிற்கும்
அண்டம் பிண்டம் இருநிலை காத்து நிற்கும்
அண்டர் எல்லாம் தொழுது போற்றும்"
சதாசிவ சாதக்கிய மூர்த்தியின் அம்சமான ருத்ரர். ருத்தரின் கட்டளைக்கு உட்பட்ட காலநிரந்ஜர். காலநிரந்ஜர் கட்டளைக்கு உட்பட்ட கால பைரவர்.
கால பைரவர் கட்டளைக்கு உட்பட்ட யமதர்மராஜர். யமதர்மராஜனின் கட்டளைக்கும் உறவுக்கும் உட்பட்ட "சனீஸ்வர பகவான்" என்று பதித்து இருந்தார்.
அதாவது சனியும் தர்மராஜரும் காலபைரவரின் சீடர்கள் என்றும், காலத்தால் உண்டாகும் வினைப்பயன்களை தருவது இவர்கள் என்றும் காலத்தில் உண்டான சாபத்தையும் தோஷத்தையும் தன் ஆசிகளினால் மாற்றி அமைக்கும் வல்லமை உடையவர் காலபைரவர் என்று உணர்த்தி இருந்தார்.
10 நிற வளையம் கொண்ட 10 கோள்களில் முக்கியமான 9 கோள்களில் நீல வளையும் கொண்ட சனி கிரகம் ஆகாயத்தில் உள்ள மிக அற்புதமான கோள். இவர் ஒரு ராசி வீட்டை கடக்கும் கால அளவு இரண்டரை ஆண்டுகள் ஆகும். நம்முடைய ராசிநாதன் நின்ற வீடு அடுத்த வீடு முந்தைய வீடு என்ற 12,1,2 ஆகிய மூன்று வீடுகளை கடக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு ஏழரை ஆண்டுகள் ஆகும். இதனையே ஏழரைச்சனி என்பர். 12-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை விரைய சனி என்றும் 1-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை ஜென்மச்சனி என்றும் 2-ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை வாக்கில்சனி /குடும்பத்தில் சனி என்றும் கூறுவர்.
ஒருவர் வாழ்வில் இருப்பது இரண்டு அரையாண்டுகள் (22.5) என்பது மூன்று முறை வரலாம். முதல் ஏழரை ஆண்டுகள் வருவது மங்குசனி என்றும் இரண்டாவது ஏழரை ஆண்டுகள் வருவது பொங்குசனி என்றும் மூன்றாவது ஏழரை ஆண்டுகள் வருவது மரணச்சனி என்றும் கோசார ரீதியில் சந்திரன் நின்ற வீட்டுக்கு 4-ல் சனி வருங்காலத்தை அஷ்டமச்சனி என்று சோதிட நூல்கள் சொல்கிறது.
மேலும் 10 ஆம் இடத்து அதிபதியை கர்மகாரகன் என்றும் சனி தேவரை கர்மாதிபதி என்றும் சோதிட நூல்கள் சொல்கிறது.
கர்மம் என்பது செயல்கள். செயல்கள் இரண்டு வகை படும் ஒன்று நன்மை, செய்வது மற்றது தீய செயல்களை செய்வது. இந்த செயல்களின் பலன் அனைத்தும் நம் உணவில் பதிந்து குருதியில் கலந்து பெண்களுக்கு கருவிலும், ஆண்களுக்கு விந்துவிலும் பதிந்து முதலில் பிறக்கும் தலைபிள்ளைக்கு அதிபதியாக இருந்து அந்த நபர்களை வழி நடத்துவார்.
கர்மத்தால் ஏற்பட்ட வினைகளை கொண்டு பலன்களை அளிக்கும் இவரை கர்மாதிபதி என்றும் கர்ம காரகர் என்று பெயர் வைக்கப்பட்டது. இவருக்கு கரியவன், முடவன், மந்தன் என்ற பெயர்கள் உண்டு. நாம் முன்னோர்களுக்கு கொடுக்கும் எள் நீர் மற்றும் தர்ப்பை காக்கை இவரின் காரத்துவம் பெற்றது.
தர்ப்பை புற்கள் நிறைந்த மனையில் சுயம்பாக உண்டான சிவலிங்கம் தர்பாரண்யேஸ்வரர் என்ற பெயருடன் தோன்றிய இடம் திருநள்ளாறு. இங்கே நம் முன்னோர்களுக்காக செய்யப்படும் தரிசனம் பூசைகள் சனி தேவரின் ஆசிகளை நாம் பெற முடியும் என்று சொல்ல படுகிறது.
1993 வருடம் உறையூர் பஞ்சவர்ணசாமி கோவில் வளாகத்தில் இருந்த ஒரு குருக்கள் அம்பாள் உபாசகரிடம் குரு பெயர்ச்சி சனி பெயர்ச்சி துவங்கும் சில நாட்களுக்கு முன் வருவார். உபாசகரிடம் பெயர்ச்சிக்காக பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் ஒரு யாகம் வளர்க்கலாம் என்று இருக்கிறேன். தங்கள் யாகத்திற்கு தேவையான பொருட்களையும் பங்குகொள்பவர்களையும் எனக்கு தெரியப்படுத்தவேண்டும் என்று ஒரு பத்திரிக்கையை தருவார். அதில் எந்த ராசியில் இருந்து சனி தேவர் அல்லது குரு தேவர் பெயர்ச்சி ஆகிறார் என்றும், எந்த ராசிக்காரர் பரிகாரம் செய்து கொள்ளவேண்டும் என்று பதிக்கப்பட்டு இருக்கும்.
ஒரு நபருக்கு 100 ரூபாய் பதிவு செய்ய என்றும், பதிந்தவர்களுக்கு அர்ச்சனையும் ஒரு டாலரும் தரப்படும் என்று தகவல் இருக்கும். உபாசகரின் ஆலோசனைப்படி பலர் சேருவார்கள். பெயர்ச்சி முடிந்தவுடன் உபாசாகருக்கு ஒரு சிறு தொகையை அந்த குருக்கள் கொடுத்து விட்டு மீதியை அவர் எடுத்து கொள்வார்.
நான் உபாசகரிடம் இதை பற்றி கேட்கும் பொழுது அவர் குருக்கள் வறுமையில் உள்ளார். பெயர்ச்சி என்று ஒரு ஹோமத்தை கோவில் செய்வது கோவிலுக்கும் நன்மை அவருக்கும் கொஞ்சம் பொருள் கிடைக்கும் அவருக்கு உதுவுகிறேன் அவ்வுளவுதான் மற்றபடி பெயர்ச்சிக்காக ஹோமம் செய்வது பற்றி எந்த வேத நூல்களிலும் சொல்லப்பட்டது இல்லை என்றார்.
இன்று எல்லாகோவில்களிலும் பெயர்ச்சியை விழாவாக கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து அவர்களுக்குள் வருமானத்தை பிரித்து கொள்வதை காண்கிறேன். சனி பெயர்ச்சி எனக்கு நன்மையை தருமா?அல்லது தீமையை தருமா என்ற கேள்விக்கு நாம் சில கேள்விகளுக்கு விடையளிக்கவேண்டும்.
சனியின் தன்மையை உங்கள் கட்டத்தில் அறிந்து கொள்ள நீங்க கவனிக்க வேண்டியது என்பது
(1) நீங்கள் பிறந்தது இரவா பகலா?
(2) உங்களுடைய லக்னம்
(3) நட்சத்திரம், ராசி
(4) உங்களுக்கு நடக்கும் திசை
(5) சனியின் 8 வர்க்க பலன்....
இவைகளை கணக்கிட்டு தான் பலன்களை அறிந்து கொள்ளவேண்டும். பிறகு தான் பரிகாரம் செய்து கொள்ளவேண்டும். பரிகாரம் என்பது சில வரமுறைக்கு உட்பட்டது. இதை எப்படி செய்ய வேண்டும் என்றால் அவரவர் கர்மத்தின் விளைவாக ஏற்படும் பலன்களை உணர்ந்து முறையாக செய்தால் மட்டும் பலிதம் ஆகும்.
பொதுவான பரிகாரங்கள் செய்வது சிறப்பு பலனை தராது.
சிவன் கோவில் வழிபாடு,
பிதுர்கள் வழிபாடு,
சித்தர்கள் வழிபாடு,
மகான்கள் வழிபாடு,
மிக நல்ல பலன்களை தரும்.
சனீஸ்வர பகவானுக்கு பரிகாரங்கள் என்றும் பெயர்ச்சிக்கு பூசைகள் என்றும் இன்று பல சோதிடர்களும் கோவில் குருக்களும் பலவிதமான உபாயங்களை முகநூலில் பதித்தும் பரப்பியும் வருவது வேதனையாக உள்ளது.
ஒரு சோதிடர் சொன்னார் என்று நண்பர் ஒருவர் நல்லான் குளத்தில் குளித்து விட்டு ஆடைகளை அதில் விட்டு வந்ததாக சொன்னார். உண்மையில் திருநள்ளாறில் நளதீர்த்தத்தில் நீராடி சிவதரிசனம் செய்து விட்டு திருவாரூர் தியாகேசர் தரிசனத்துடன் சப்தவிட தரிசனமாக நிறைவு செய்யவேண்டும் என்பது தான் விதி.
மேலும் தர்மராஜரும் சனிதேவரும் சகோதரர்கள் என்றாலும், சனி தேவர் பலன் வேறு தர்மராஜர் பலன்வேறு கர்மாக்கள் வேறு என்று புரிந்துகொள்வது இல்லை. நாம் பரிகாரத்தை பற்றி யோசிப்பது இல்லை.
இருவரும் வழிபட்ட சிவதலங்கள் வேறு, வரம் பெற்ற தலங்கள் தண்டனை பெற்ற தலங்கள் வேறு என்று நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.
ஒரு அன்பர் என்னிடம் சொன்னார் எள்ளை கருப்பு துணியில் கட்டி சனிக்கிழமை தோறும் விளக்கு ஏற்றி வந்தால் சனியின் தோஷம் குறையும் என்று ஒரு சோதிடர் சொன்னார் என்றார். ஸ்ரீசக்ரமலைக்கு சென்ற பொழுது அங்கு தவறாக விளக்கு ஏற்றியவர்களை அங்கு இருந்த ஒரு அடியார் ஏற்றியவரை திட்டியும் சோதிடர்களை ஒட்டுமொத்தமாக எரித்து விட்டால்தான் கோவிலையும் சாமியையும் காக்கமுடியும் என்றும் திட்டினார். அவர் சொன்னது தப்பே இல்லை எள்ளை பற்றி தெரியாமல் அது பற்றி வேதத்தில் குறிப்பிட்டியுள்ளதை பற்றி அறியாமல் பேசும் பொழுது எரிச்சலாக தான் உள்ளது.
ஒரு ரகசியம் தெரிந்து கொள்ளுங்கள் பிணம் எரிக்கும் பொழுது உண்டாகும் வாடை தான் எள்ளு எறியும் பொழுது வெளிப்படும். கோவிலில் எள்விளக்கை ஏற்ற கூடாது எள் எண்ணெய் விளக்கு அல்லது சகல தோஷத்தை தீர்க்கும் நெய்விளக்கு ஏற்றலாம்.
மேலும் நவகிரகங்களுக்கு உண்டான தானியத்தில் உணவுகளை செய்து அதை கோவிலில் படைக்கலாம். சிலருக்கு வெள்ளைஎள்ளை, கருப்பு எள்ளை எதற்கு பயன்படுத்துவது என்றே தெரியவில்லை.
மகர ராசிக்கு பெயர்ச்சி பெரும் சனீஸ்வர பகவானுக்கு என்ன பரிகாரம் என்பதை பற்றி ஆசான் அகத்தியரிடம் கேட்டபொழுது அவர் சொன்னது பெயர்ச்சிக்கு பரிகாரம் என்பது இல்லை கர்ம வினைகளின் தண்டனைகளுக்கு, பாவத்திற்கு பரிகாரம் உண்டு.
உண்மை தான் சூரியன் மாதம் ஒரு முறை பெயர்ச்சி, சந்திரன் இரண்டரை நாட்களில் பெயர்ச்சி, செவ்வாய் நாற்பது ஐந்து நாட்களில், புதன் சுக்ரன் முப்பது நாட்களில் பெயர்ச்சி, குரு வருடம் ஒரு முறையும், ராகு கேது பதினெட்டு மாதத்திற்கு ஒரு முறை, சனி இரண்டரை வருடத்திற்கு ஒரு முறை என்று அவைகள் நகர்ந்து கொண்டே இருக்கும். பெயர்ச்சிக்கு பரிகாரம் என்பது எப்படி முடியும் என்பது ஒரு கேள்வி தான்.
கர்மத்தின் விளைவாக ஏற்படும் பலன்களுக்கு பரிகாரம் என்று மகா சிவ நாடியில் சொல்லப்பட்டு உள்ளது. மேலும் சனியின் வர்க்க பரல் நிலையில் மூன்று பரலுக்கு மேல் உள்ள அமைப்பு இருந்தால் ஜென்ம சனியும் ஒன்றும் செய்யாது என்பது சோதிட கணக்கு.
தனுசு ராசியில் ஜென்ம சனி அமருவதால் கும்பகோணம் சிவபுரத்தில் உள்ள காலபைரவரின் தரிசனம் சில பாதுகாப்பை தரும். மேலும் சனீஸ்வர பகவானின் ஆசிகளை தரும் வழுவூர், திருநீலக்குடி மற்றும் திருவேதிகுடி நல்ல மாற்றங்களை தரும்.
சங்கு போல வடிவம் கொண்ட நீல மலர்களை வைத்து சனிக்கு அர்ச்சனை செய்வதும், உடல் ஊனமுற்றவர்களுக்கு உடைகள் உணவுகள் அளிப்பதும், சனியின் நேரடி ஆசிகளை தரும் என்று சோதிட நூல்கள் சொல்கிறது.
சில வைணவ நூல்கள் சொல்வது ஹனுமானின் பாதம் 8 சனிக்கிழமை நம் தலையில் வைத்து ஆசிர்வதிக்க படும் பொழுது சனியின் தாக்கம் குறையும் என்பதும், சனிக்கிழமை ஒரு மிளகை தூளாக்கி தின்று நீர் விட்டு அருந்தி பெருமாள் கோவில் செல்லும் பொழுது சனியின் தாக்கம் குறையும் என்றும் சொல்லப்படுகிறது.
சனீஸ்வர பகவான் சத்தியத்திற்கும் தர்மத்திற்கும் கட்டுப்பட்டவர். சத்தியமும் தர்மமும் நம்மில் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் இவரால் நமக்கு நன்மையே மேலும் காகபுஜண்டர், நீளங்கிசர் சனீஸ்வர பகவானின் நேரடி தொடர்பு உடையவர்கள். இவர்களின் ஆசிகள் வழிபாடுகள் நமக்கு நன்மை செய்யும் மேலும் சனீஸ்வர பகவானின் ஆசிகளை தரும்....
(1)திருகாரவாசல்
(2)திருக்குவளை
(3)திருவாய்மூர்
(4)திருமறைக்காடு
(5)திருநாகை
(6)திருநள்ளாறு
(7)திருவாரூர்.
இவைகள் ஒரே நாளில் தரிசனம் (சப்த விட தலங்கள்) செய்ய தர்மராஜனின் ஆசிகள் கிடைக்கும்.
முக்கியமாக எக்காரணம் கொண்டும் எங்கும் சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றாதீர்கள். இதுவும் தவறாகச் செய்யப்படும் ஒரு வழிபாடு. இது தோஷத்தைப் போக்குவதற்குப் பதிலாக அதிகப்படுத்தும். எள் என்பது அரிசியைப் போல ஒரு தானியம். அரிசியை எரிப்போமா? எள்ளை எண்ணையாக்கி அந்த எண்ணையைக் கொண்டு தீபமேற்றச் சொல்லித்தான் நமது பரிகாரமுறைகள் சொல்கிறதே தவிர எள்ளையே நேரிடையாக எரிக்க அல்ல. எள்ளை நைவேத்தியமாகத்தான் படைக்க வேண்டும். மனித உருவத்தில் நமது காலத்தில் வாழ்ந்து நம் கண்முன் நடமாடிய மகான் காஞ்சித்தெய்வம் ஸ்ரீமகாபெரியவர் ஒருமுறை இந்த எள்தீபம் கூடாது என்று தெளிவுபடுத்தியும், நமது கோவில்களில் இந்த முறையைத் தொடருவது துரதிர்ஷ்டம்தான்.
சனீஸ்வர பகவானின் தாக்கத்தை குறைக்க சித்த நூல்களில் பின்வரும் 20 எளிய பரிகார முறைகள் சொல்லப்பட்டு உள்ளன!!!
(1) தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதத்தை வைக்கவும்.
(2) சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழி படவும்.
(3) கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.
(4) வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.
(5) சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.
(6) சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.
(7) ஸ்ரீஆஞ்சநேயருக்கு வடை மாலை அல்லது வெற்றிலை மாலை சாற்றி வழிபடுதல் வேண்டும். அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.
(8) ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.
(9) தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.
(10) அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யவும்.
(11) கோ பூஜை,
பசுவுக்கு வழிபாடுகளை செய்யவும்
(12) ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவிகளை செய்யவும்.
(13) சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.
(14) அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.
(15) சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபாடுகளை செய்யவும்.
(16) உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யவும்.
(17) வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.
(18) பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இல்லை கொடுத்து வணங்கி வரவும்.
(19) தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனி பகவானின் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.
(20) சனிக்கிழமை விரதமிருந்து பெருமாளை வழிபட்டு காக்கைக்கு உணவு படைக்க தாக்கங்கள் குறையும்....
சனி பெயர்ச்சியை பற்றிய கவலையும் சிந்தனையும் தவிர்த்து விட்டு சிவாலயங்களில் தரிசனத்தை உணர்ந்து பெருமானை வழிபட்டு பஞ்சாட்சர நாமத்தை ஜெபித்து ஈசனின் அருளை பெற்று எல்லா கோள்களின் ஆசிகளையும் பெற வாழ்த்தி பதிவை நிறைவு செய்கிறேன்.
நன்றி ராஜா கோவிந்தராஜ் ஐயா....
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் சிவ சிவ ஓம்
- திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
சித்தர்களின் குரல் shiva shangar
|
|
|
Post by kgopalan90 on Dec 27, 2020 13:41:20 GMT 5.5
29-12-2020 லவண தானம்;-
மார்கசீர்ஷ பெளர்ணமியான இன்று நாம் சாப்பிடும் கல் உப்பை ஏழைகளுக்கு தானம் செய்யலாம்.இன்று காலை நித்ய பூஜைகளை முடித்து விட்டு சுத்தமான உப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொண்டு தெய்வ ஸன்னதியில் மார்க்க சீர்ஷ பூர்ணிமாயாம்
ஸுந்தர ரூபத்வ ஸித்தியர்த்தம் லவண தானம் கரிஷ்யே என்று உப்புடன் கூடிய பாத்திரத்தை கையில் எடுத்துக்கொண்டு துளசி தக்ஷிணை சேர்த்து ரஸானா மக்ரஜம் ஸ்ரேஷ்டம் லவணம் பலவர்த்தனம் தஸ்மாதஸ்ய ப்ரதானேன அத: சாந்திம் ப்ரயஸ்சமே.
மார்க்கசீர்ஷ பூர்ணிமா மஹாபுண்ய காலே மம ஸஹ குடும்பஸ்ய ஸதா ஸுந்தர ரூபத்வ ஸித்தியர்த்தம் இதம் லவணம் ச பத்ரம் ஸம்ப்ரததே. என்று சொல்லி கீழே வைத்து நமஸ்காரம் செய்ய வேண்டும். பிறகு அதை யாரோ ஒருவருக்கு கொடுத்து விடவும்.
மேலும் பலருக்கு இன்று கல் உப்பு வாங்கி தரலாம். இதனால் தானம் செய்பவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் அழகான தோற்றம் ஏற்படும். எப்போதும் அழகு குறையாது. என்கிறது நிர்ணய ஸிந்து.
29-12-2020 தத்தாத்ரேயர் ஜயந்தி:--
பதிவிரதையான அனஸூயா தேவிக்கும் அத்ரி மஹரிஷிக்கும் புத்ரராக மார்கழி மாத பெளர்ணமியன்று புதன் கிழமை ம்ருகசீர்ஷ நக்ஷத்திரதன்று அவதரித்தார் தத்தாத்ரேயர்.
இவரை நினைப்பதாலேயே பக்தர்களின் கஷ்டங்கள் தூர விலகி போகும். இவரை உபாசித்தால் பூத ப்ரேத பைசாச தொல்லைகள் நீங்கும். . ஞான மார்க்கத்தில் ஈடுபாடும் தீவிர வைராக்கியமும் உண்டாகும்.
|
|
|
Post by kgopalan90 on Dec 26, 2020 21:03:43 GMT 5.5
*24/12/2020 No Broadcaste*
*25/12/2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமம் பெருமைகளையும் முக்கியத்துவத்தையும் பற்றி மேலும் தொடர்கிறார்.*
*இந்த ஹோமம் இரண்டு விதமாக இருக்கிறது என்று முதலில் பார்த்தோம். அதாவது பூஜை ஜெபம் என்பது ஒரு பாகம். ஹோமம் என்பது ஒரு பாகம். இப்படி இரண்டு பகுதிகளாக இருக்கிறது அதிலே, நாம் ஜெபம் செய்யும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரத்தின் அர்த்தங்களைத் தான் இப்போது பார்க்கிறோம்.*
*ரொம்ப அற்புதமான மந்திரம் அதர்வண வேதத்தில் உள்ள மந்திரம். ஒரு தடவை சொன்னால் போதும் அதிகமான பலன்களை நமக்கு கொடுக்கவல்லது. இந்த மந்திரம் உபநிஷத் பாகத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.*
*தைத்திரீய உபநிஷத்தில் இந்த ஆவஹந்தி ஹோமத்தின் உடைய மந்திரங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. இது ஒரு உபாசனை மந்திரமாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. முதலில் ஒரு உபாசனையும் நடுவில் இந்த ஆவஹந்தி ஹோம மந்திரமும் கடைசியில் ஒரு உபாசனையும் சொல்லப்பட்டிருக்கிறது. இது ஏன் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்க்கும்பொழுது ஆதிசங்கரர், நமக்கு ஞானத்திலே முழுமையான ஈடுபாடு வர வேண்டும் என்றால், நமக்கு சில சின்னச் சின்ன ஆசைகள், அதிலே ஒரு ஆசை நமக்கு ஐஸ்வர்யங்களை பற்றியது. மேற்கொண்டு நாம் அடுத்த விஷயங்களில் ஈடுபட வேண்டும் என்றால் நம் கையிலேயே ஐசுவரியம் இருக்க வேண்டும்.*
*அதை கருத்தில் கொண்டு இந்த ஆவஹந்தி ஹோமம் ஆனது சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் ஐஸ்வர்யமும் பரம்பரையாக ஞானம் வரைக்கும் நமக்கு உபயோகப்படுகின்றன. இதை ஆதி சங்கரர் நமக்குச் சொல்கிறார். அதாவது தனஞ்சே கர்மார்த்தம். நாம் செய்ய வேண்டிய கர்மாக்கள் எல்லாம் எதற்கு என்றால் நமக்கு சித்த சுத்தி ஏற்பட வேண்டும் என்பதற்காக.*
*நமக்கு சில பிராரப்தங்களினால் ஒட்டிக் கொண்டிருக்கின்ற பாவங்கள் போவதற்காக. அதைத்தான் நாம் சங்கல்பத்தில் மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் என்று சொல்கிறோம். அந்த மனசிலே ஒட்டிக் கொண்டிருக்கின்ற பாபங்கள் போவதற்காக.*
*அந்த ஒட்டிக் கொண்டிருக்கின்ற பாவங்கள் போனால் தானே நமக்கு சித்த சுத்தி ஏற்படும். மனசிலே தெளிவு ஏற்படும் மகாபாரதத்தில், அதாவது ஒரு கண்ணாடி இருக்கிறது. நாம் நம்முடைய முகத்தை பார்த்து அலங்காரம் செய்து கொள்வதற்காகத்தான் அதை வாங்கி மாட்டிக் கொள்கிறோம். ஆனால் அந்தக் கண்ணாடியில் புழுதிகள் ஒட்டிக் கொண்டிருந்தால் நம்முடைய முகம் அதிலே தெரியாது. தெரிந்தவரையில் போரும் என்று நாம் கண்ணாடியை பார்க்கிறோமா இல்லை. அந்தக் கண்ணாடியில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற புழுதியைத் துடைக்கிறோம். அது செய்ய முடியக்கூடிய காரியம் தானே. உடனே நம்முடைய முகம் அந்தக் கண்ணாடியில் பளிச்சென்று தெரிகிறது.*
*அதுபோலத்தான் பல ஜென்மங்களில் நாம் செய்த பாவங்கள் நம்முடைய மனசிலே ஒட்டிக் கொண்டிருக்கின்றன. எப்படி கண்ணாடியில் புழுதி ஒட்டிக்கொண்டு இருக்கின்றதோ அதே போல. அதே போல நம்முடைய மனசிலே இருக்கின்றது துரிதங்கள் அதாவது பாவங்களை அந்த புழுதியை துடைப்பது போல் துடைக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த கர்மாக்கள் எல்லாம் நமக்கு வைத்திருக்கிறார்கள் துடைப்பதற்காக. அனைத்து கர்மாக்களுமே ஆச்ச மனத்தில் இருந்து ஆரம்பித்து, நாம் என்னவெல்லாம் செய்கின்றோமோ அனைத்துக்குமே கர்மாக்கள் என்றுதான் பெயர்.*
*அவைகள் இரண்டாகப் பிரிந்து நமக்கு பலன்களை கொடுக்கின்றது ஒன்று புண்ணிய கர்மா இன்னொன்று பாப கர்மா. இப்படி இரண்டாக இருந்து நம்மை வழி நடத்துகிறது. நம்முடைய மனசிலே ஒட்டிக் கொண்டிருக்கின்ற அழுக்குகளைப் போக்கும் புண்ணிய கர்மா வாக இருந்தால், பாப கர்மாவாக இருந்தால் மேற்கொண்டு அழுக்கு ஒட்டிக் கொள்ளும். அதாவது நல்ல காட்டன் துணியை வைத்துக் கொண்டு ஒரு தடவை துடைத்தால் கண்ணாடி ஆனது பளிச்சென்று நம் முகம் தெரிகிறது. ஏற்கனவே ஈரமாக உள்ள புழுதி ஒட்டிக் கொண்டிருக்கின்ற துணியால் துடைத்தால் அதுவும் சேர்ந்து கண்ணாடியில் ஒட்டிக்கொள்ளும். அப்படித்தான் பாப கர்மாவும்*
*அப்படித்தான் நம்முடைய சின்ன சின்ன ஆசைகள் எல்லாம் பூர்த்தியாக வேண்டும். பாவம் நிவர்த்தியாகிறது சித்த சுத்தி ஏற்படுகிறது. இதைத்தான் பகவத்பாதாள் ஆவஹந்தி ஹோமத்தின் உடைய மந்திரத்திற்கு பாஷ்யங்கள் சொல்லும்பொழுது, அப்படித்தான் சொல்லி இருக்கிறார்.*
*அதற்காகத்தான் உபநிஷத் பாகங்களில் இந்த மந்திரமானது வைக்கப்பட்டிருக்கிறது. இதை ஆதிசங்கரர் சொல்லி, இந்த ஆவஹந்தி ஹோமத்திற்கான மந்திரத்திற்கான அர்த்தம், ஆத்மாத்திகமான முறையில் இந்த மந்திரம் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது ஈஸ்வரனை இந்த மந்திரமானது வர்ணிக்கின்றது. அதாவது ஆத்மா அனுபவம் என்பது நமக்கு வரவேண்டும். சுஷுக்தி நிலையிலே அந்த ஞானத்தை நாம் எப்படி அனுபவிக்கின்றோமோ ஆழ்ந்த உறக்கம் எப்படி நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கின்றோம் அதாவது ஈஸ்வரனை அனுபவிக்கின்றோம். அதை நாம் முழித்துக் கொண்டிருக்கும்போதே அந்த நிலைக்கு கொண்டு வர வேண்டும். இதுதான் நம்முடைய முக்கியமான நோக்கம்.*
*நாம் செய்யக்கூடிய தான அனைத்து காரியங்களுக்கும் பலன் அதுதான். அந்த ஈஸ்வரனுடைய ரூபத்தை தான் இந்த மந்திரம் வர்ணிக்கின்றது. ஈஸ்வரன் என்பது பரமாத்மா. பரமாத்மாவை இந்த மந்திரம் எப்படி வருணிக்கிறது என்பதை அடுத்த உபன்யாசத்தில்
|
|
|
Post by kgopalan90 on Dec 24, 2020 3:37:54 GMT 5.5
23/12/2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமத்தின் மந்திர சாஸ்திரங்களில் அர்த்தங்களை விரிவாக மேலும் பார்க்க இருக்கிறோம்.*
*ஆவஹந்தி ஹோமம் செய்ய வேண்டிய முறை என்று பார்த்தால், முதலில் சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும். கலசத்தில் பிரணவாத்வமாக உள்ள இந்திரனை பூஜை செய்து கொள்ள வேண்டும். மிகவும் முக்கியமானதொரு மந்திரம் இது.*
*ஏன் இந்திரனை நாம் பூஜை செய்கிறோம் என்றால் அத்தனை தேவதைகளுக்கும் அவன் தான் இராஜாவாக இருக்கிறான். தேவராஜா என்று அவருக்குப் பெயர். இந்திரஹா என்றால் அது ஒரு ஸ்னானத்தையும் குறிக்கிறது, ஒரு நபரையும் குறிக்கிறது. ஒருவரை மாத்திரம் உத்தேசித்து என்று இல்லை.*
*இந்திர பதவி என்று சொல்கிறோம். அத்தனை தேவதைகளுக்கும் அதிபதியாக உள்ள ஒரு பதவி. அதனால் அவரை அங்கு நாம் ஆவாகனம் செய்கிறோம். ஷோடச உபசார பூஜைகள் எல்லாம் செய்து முடித்த பிறகு, இந்த மந்திரத்தை குறைந்தபட்சம் ஒரு தடவையாவது ஜெபிக்க வேண்டும். அதிகபட்சம் நமக்கு எந்த அளவுக்கு பலன் சீக்கிரமாக வர வேண்டும் என்று நினைக்கிறோமோ அவ்வளவுக்கு ஆவர்த்திகள் செய்யலாம். அப்படி செய்து ஜெபம் செய்யலாம்.*
*ஜபம் செய்யும் போது நாம் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தினுடைய அர்த்தம் மிகவும் அற்புதமானது. இரண்டு விதமான அர்த்தங்களை இந்த மந்திரத்திற்கு பார்க்கலாம். சாயணாசாரியாரும் இந்த மந்திரத்திற்கு அர்த்தம் சொல்லி இருக்கிறார், ஆதிசங்கரரும் உபநிஷத் பாஷ்யத்தில் இந்த மந்திரத்திற்கு அர்த்தம் சொல்லி இருக்கிறார்.*
*நிர்குணமான மற்றும் சகுணமான அர்த்தமும் உண்டு. இந்த மந்திரம் முதலில் நமக்கு ஸ்ரவணம் செய்து ஞானத்தை நாம் அடைவதற்கு, உபநிஷத் சிரவணம் செய்வதற்கு முன்பு நமக்கு சில அதிகாரங்கள் வேண்டும். அவை என்ன வென்றால் சாதண சதுஷ்டைய சம்பத்தி வேண்டும். இது யாருக்கு இருக்கிறதோ அவர்தான் உபநிஷத் சிரவணம் செய்ய முடியும் அவரால் மனதில் அதை கிரகித்துக் கொள்ள முடியும்.*
*பழைய நாட்களில் எல்லாம் நாம் போய் ஒருவரிடம் உபநிஷத் பாஷ்யம் எனக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்று கேட்டால், சாதண சதுஷ்டைய சம்பத்தியோடு வா என்று சொல்வார்கள். அப்படி என்றால் என்ன, எவையெல்லாம் நித்தியமான வஸ்துக்கள் எவையெல்லாம் அநித்தியமான வஸ்துக்கள் என்கின்ற விபாகம் நமக்கு மனசுக்கு தெரிய வேண்டும்.*
*வாயினால் சொன்னால் போதாது மனசுக்கு நன்றாக புரிய வேண்டும். அதாவது வேதாந்த சிரவணம் செய்வதற்கு முன்பு நமக்கு இந்திரிய நிக்கிரகம் வேண்டும். எதையெல்லாம் பார்க்க கேட்க சாப்பிட வேண்டும் என்கின்ற ஆசைகள், எல்லாம் இருக்கக் கூடாது. அதற்குத்தான் போகம் என்று பெயர். நாக்குக்கு ருசியாகவும் பக்கத்திலேயே பட்சணங்களை வைத்துக்கொண்டு உபநிஷத் பாஷ்யம் வாசிப்பது என்பதெல்லாம் கூடாது அதெல்லாம் பொழுதுபோக்காக செய்வது.*
*பக்கத்தில் சாப்பிடுவதற்கான வஸ்துக்களை வைத்துக்கொண்டோ அல்லது குடிப்பதற்கு தண்ணீர் வைத்துக் கொண்டு நாம் படிக்கிறோம் என்றால் அந்த நேரத்தை வீண் செய்ய வேண்டாம் என்பதற்காக ஒரு அர்த்தம்தான் ஆகும். சொல்கின்ற அவருக்கும் அந்த நேரம் வீணாகப் போய்விடும். எதிலும் ஆசையே இருக்கக் கூடாது. இந்த லோகம் இருந்தாலும் சரி மற்ற லோகம் ஆக இருந்தாலும் சரி அந்த பலன்களில் நமக்கு ஆசையே இருக்கக் கூடாது.*
*சமத மாதி ஷட்கம் என்று மூன்றாவது சாதம். அடிப்படையாக இந்த ஆறும் இருக்க வேண்டும் நமக்கு. எதையும் பொறுத்துக் கொள்ளக்கூடிய சக்தி, மற்ற விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருத்தல் இப்படி ஆறு இருக்கின்றன. இது எல்லாவற்றுக்கும் மேல் முமுக்ஷ்த்துவம் அவசியம். நாம் ஞானத்தை அடைய வேண்டும் என்கின்ற முழுமையான ஆசை ஈடுபாடு வேண்டும்.*
*இவைகளெல்லாம் நமக்கு இருந்தால்தான் உபநிஷத்தின் அர்த்தங்கள் நமக்கு புரியும். இல்லையென்றால் அதை சொல்பவர்களை பார்க்கும்போது நமக்கு எல்லாம் புரிந்தார் போல் தோன்றும். ஆனால் வீட்டுக்கு வந்த பிறகு என்ன சொன்னார் என்று கேட்டால் ஏதோ அவர் சொன்னார் வித்தியாசமாக இருந்தது என்று சொல்வோம். மனதிற்கு கிரகித்தது போல் தோன்றினாலும் தத்துவத்தை கிரகிக்க முடியாது.*
*இது நமக்கு அந்த நேரத்தை ஏதோ நல்ல பொழுதாக போக்குமே தவிர, ஞானம் வரையிலும் கொண்டு போய் விடாது. அதனால்தான் சாதன சம்பந்த சந்துஷ்டி மிக மிக அவசியம். முதலில் நாம் இதற்காகத்தான் முயற்சி செய்ய வேண்டும்.*
*அதற்கான முயற்சியாக தான் இந்த கர்மாக்கள் எல்லாம் நமக்கு சொல்லி இருக்கிறார்கள். ஏதோ நம்மை வேறு வழியில் கொண்டு செல்வதற்காக என்று நாம் நினைக்கக் கூடாது. இந்த கர்மாக்கள் எல்லாம் நம்மை என்ன செய்கின்றது என்றால் சித்த சுத்தியை நமக்கு கொடுக்கின்றன.*
*மன அமைதி அனைத்து விஷயங்களிலும் சகிப்புத்தன்மை போரும் என்கின்ற எண்ணம், இவைகளை எல்லாம் கர்மாக்கள் தான் நமக்கு கொடுக்கின்றன. இந்தக் கர்மாவின் துணை இல்லாமல் நாம் எவ்வளவு கட்டுக்கட்டாக, உபநிஷத்துக்களை நாம் படித்தாலும் கேட்டாலும் ஏதோ மனதிற்கு ஆகுமே தவிர அந்த சமயத்தில், பிறகு மீண்டும் நாம் இதற்கு வந்து விடுவோம்.*
*ஃபேன் இல்லாமல் நம்மால் உட்கார முடியாது படுக்கை இல்லாமல் நம்மால் படுக்க முடியாது. ருசி இல்லாமல் நம்மால் சாப்பிட முடியாது. இதெல்லாம் ஒருவருக்கு இருக்கு என்றால் ரொம்ப தூரம் தள்ளி இருக்கிறார் ஞான வழியில் இருந்து. இது எல்லாம் போதும் என்கின்ற எண்ணத்தை கொடுப்பது தான் இந்த கர்மாக்கள் எல்லாம்.*
*இதை நாம் மனதில் வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த ஆவஹந்தி ஹோமத்தில், நாம் செய்யக்கூடிய ஜெபம் நமக்கு என்ன பலனை கொடுக்கிறது என்றால், சாதன சம்பந்த சந்துஷ்டி ஓரளவு நமக்கு ஏற்படுத்துகிறது.*
*அதனால்தான் மஹா பெரியவா இந்த ஹோமத்தை நமக்கு சொல்லியிருக்கிறார்கள். பர பிரமத்தை குறித்து தான் இந்த மந்திரங்கள் எல்லாம் சொல்கின்றன. முதலில் இந்த மந்திரங்கள் பரம் பிரம்மத்தைப் பற்றி தான் சொல்கிறது. இரண்டு விதமான அர்த்தங்கள் இருக்கின்றன. முதலில் பர பிரமத்தை என்ன சொல்கிறது என்று பார்த்தபிறகு, இந்த லோகத்தில் தேவைப் படும் படியாக எப்படி சொல்வது என்று இரண்டு விதமான அர்த்தங்களை எப்படி சொல்வது என்று அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
|
|
|
Post by kgopalan90 on Dec 23, 2020 4:33:40 GMT 5.5
22/12/2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமத்தின் பெருமைகளை மேலும் தொடர்கிறார்.*
*ஆவஹந்தி ஹோமம் என்பது மந்திர சாஸ்திரத்தில் ஒரு முறையாகவும், வைதிக முறையில் ஒரு முறையாகவும் பார்க்கிறோம். மந்திர சாஸ்திரத்தில் அதை பார்க்கும்பொழுது நாம் தினமும் செய்யக்கூடிய ஒரு அனுஷ்டானம் ஆன வைஸ்வ தேவத்தில், கடைசியில் இந்த ஆவஹந்தி ஹோமத்தை சேர்த்து செய்ய வேண்டும் என்று மந்திர சாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது.*
*அதாவது நாம் சமையல் செய்யும் பொழுது, 5 விதமான தோஷங்கள் ஏற்படுகின்றன. அது போவதற்காக செய்யக்கூடிய தான் இந்த வைஸ்வ தேவம் என்பது.*
*கண்டினி என்றால் காய்கறி பழங்களை நறுக்குவது. அவைகள் பூமியில் போட்டால் நன்றாக முளைத்து வரக்கூடிய சக்திவாய்ந்தவை. அப்படி இருக்கக் கூடியதை நாம் இருக்கின்றோம். அது ஒருவிதமான ஹிம்சை. அந்தப் பாபம் போவதற்காகவும், பேஷினி அதாவது இடிப்பது அரைப்பது தானியங்களை. அந்த தானியங்களில் ஜீவராசிகள் இருக்கின்றன. அதை நாம் இம்சை செய்கின்றோம். அந்தப் பாபம் போவதற்காக.*
*சுள்ளி எரிபொருளாக நிறைய வஸ்துக்களை நாம் உபயோகம் செய்கின்றோம். அவைகள் எரிகின்ற போது அதிலே பூச்சிகள் வந்து விடும். அது ஒருவகையான பாவம். ஜலகும்பஹாக தண்ணீரை எடுத்துக் கொண்டு வருகிறோம். அதை சூடு செய்து உபயோகம் செய்கிறோம். அதிலே நல்லவைகள் செய்யக்கூடிய தான பாக்டீரியாக்கள் இருக்கின்றன. அந்த ஜீவராசிகளை நாம் அழிக்கின்றோம். அதேபோல புடைத்தல் சலித்தல் இதுபோன்ற காரியங்களில் நாம் சில இம்சைகள் செய்கிறோம். இந்த ஐந்து விதமான இம்சைகள் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய பாவங்கள் போவதற்காக தான், இந்த வைஸ்வதேவம் என்கின்ற இந்த அனுஷ்டானம் நாம் தினமும் செய்ய வேண்டும் என்று மகரிஷிகள் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.*
*அந்த வைஸ்வதேவ அனுஷ்டானம் செய்கின்ற பொழுது, இந்த ஆவஹந்தி ஹோமத்தை சேர்த்து செய்ய வேண்டும். வைஸ்வதேவம் என்பது மூன்று பாகமாக இருக்கிறது.*
*முதலில் தன்னை சுத்தி செய்து கொள்வதற்காக செய்ய வேண்டிய விஷயம். இரண்டாவது தேவதைகளை உத்தேசித்து அக்னியில் செய்யக்கூடிய ஆகுதிகள். மூன்றாவது பல ஜீவராசிகளை உத்தேசித்து செய்யக்கூடியது ஆன பலி. இப்படி மூன்று பாகமாக இருக்கின்றது வைஸ்வதேவம்.*
*இந்த மூன்றையும் செய்து முடித்த பிறகு, வைஸ்வதேவ அனுஷ்டானம் செய்து முடிப்பதற்கு முன்னால், இந்த ஆவஹந்தி ஹோமத்தை செய்து கொள்ள வேண்டும் நியாசம் செய்துகொண்டு . அந்த மந்திரத்தில் சொல்லப்படக்கூடிய தான தேவதைகளை, நம்முள் ஆவாகனம் செய்து கொள்வது இதற்குத்தான் நியாசம் என்று பெயர். ஜபம் செய்து அந்த மந்திரங்களை சொல்லி ஹோமம்/தர்ப்பணம்/உபஸ்தானம் செய்வது என்கின்ற முறையிலே வகுத்து கொடுத்திருக்கிறார்கள் நைமித்தியமாக ஸ்ரீ வித்தையில் சொல்லப்பட்டிருக்கிறது.*
*இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால், அவரவர்கள் தனக்காக இதை செய்து கொள்ளலாம். மற்றவருக்காக மற்றவர் வைஸ்வதேவம் செய்ய முடியாது. செய்ய கூடாது. வைஸ்வதேவம் என்பது கிரகஸ்தன் தான் செய்ய வேண்டும். யாருக்கெல்லாம் ஹௌபாசனம் என்பது இருக்கின்றதோ, அவர்கள்தான் இந்த வைஸ்வதேவத்தை செய்ய முடியும்.*
*பிரம்மச்சாரிகள் சன்யாசிகள் இவர்களுக்கு அந்த வைஸ்வதேவம் அனுஷ்டானம் கிடையாது. ஒருவருக்காக இன்னொருவர் சங்கல்ப்ம் செய்து கொண்டு செய்யக்கூடாது. இப்படி இந்த வைஸ்வதேவம் செய்யக்கூடிய நிலையில் ஆவஹந்தி ஹோமத்தின் உடைய முறையை விளக்குகிறார்கள் மந்திர சாஸ்திரத்தில் பகவத் பாதர் ஆதிசங்கரர்.*
*இந்த வைதிக முறையில் பார்த்தால், அதற்கு ஷட் பார்த்ர பிரையோகம் என்று ஒருமுறை இருக்கிறது. அதாவது பாத்திரங்களை சுத்தி செய்து அதை வைத்துக் கொண்டு ஹோமம் செய்வது. அல்லது அக்னி முகம் என்று சொல்வதும் வழக்கம்.*
*அந்த முறையை செய்துகொண்டு, ஒரு அக்னிஹோத்ரம் செய்த அக்னியையோ, அல்லது அரணியில் இருந்து கடைந்து எடுத்த அக்னியில் செய்யக்கூடியது இந்த ஆவஹந்தி ஹோமம். அனைத்து ஹோமங்களும் இப்படித்தான் செய்ய வேண்டும். இந்த ஹோமத்தை செய்யக்கூடியதான அக்னி எப்படி இருக்க வேண்டும்? ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான அக்னி சொல்லப்பட்டிருக்கிறது. அதை நாம் முன்னரே விரிவாக அக்னி சரித்திரத்தில் பார்த்தோம். அக்னி என்னுடைய ஆவிர்பாகம் எத்தனை விதமான அக்னிகள் அவைகள் எங்கெங்கு இருக்கின்றன எந்த அக்கினியை எந்த முறையில் எந்த ஹோமத்தில் நாம் உபயோகம் செய்ய வேண்டும் என்பதை முன்னரே விரிவாக பார்த்துள்ளோம்.*
*அப்படி இந்த ஆவஹந்தி ஹோமத்திற்கு, அக்னி ஹோத்திரம் செய்பவருடைய அக்னி அல்லது அரனி என்கின்ற கட்டையிலிருந்து கடைந்து எடுத்துவைத்த தான அக்னி. இந்த இரண்டிற்கும் ஏதாவது ஒன்றை வைத்து இந்த ஆவஹந்தி ஹோமத்தை செய்ய வேண்டும்.*
*அந்த மந்திரங்கள் மிகவும் அற்புதமான மந்திரங்கள். ஒரு தடவை செய்தால் போதும் இந்த ஆவஹந்தி ஹோமம், வைதிக முறையில் செய்கின்ற பொழுது, இரண்டு பாகமாக இருக்கிறது அந்த மந்திரம். அந்த அனுஷ்டானம் இரண்டு பாகமாக இருக்கிறது. அதாவது முதலில் ஜபம் அதற்கான சங்கல்பம் தனியாக செய்துகொண்டு செய்ய வேண்டும். பிறகு ஹோமம். இந்த இரண்டிற்கும் தனித்தனியாக சங்கல்பங்கள் செய்துகொண்டு, இந்த ஆவஹந்தி ஹோமத்தை செய்ய வேண்டும்.*
*இந்த மந்திரத்தை ஒரு தடவை சொன்னாலே போதும். அது ரொம்ப பலனை நமக்கு கொடுக்கக்கூடியது. அதர்வன மந்திரம் என்று பெயர். அதாவது நாம் உபநயனத்தில் சொல்லக்கூடிய தான மந்திரங்கள். கல்யாணத்தில் சொல்லக்கூடிய தான மந்திரங்கள் போல, இந்த ஆவஹந்தி ஹோமத்திற்கு சொல்லக்கூடிய மந்திரங்கள். கல்யாண மந்திரங்களை நம்முடைய வாழ்நாளில் ஒரு முறை தான் நாம் சொல்கிறோம். அவைகள் நம்முடைய ஆயுட்காலம் முடிய பலனைக் கொடுக்கக் கூடியது. ஜன்மாவில் ஒரே ஒருமுறைதான் அந்த மந்திரங்களை நாம் உபயோகிக்கிறோம். உபநயனமும் அதே போல தான். அந்த மந்திரங்கள் அந்த குழந்தைக்கு ஆயுட் காலம் வரைக்கும் பலனைக் கொடுக்கக் கூடியது. ஆகையினாலே தான் அந்த மந்திரங்களை நன்றாகத் தெரிந்துகொண்டு செய்ய வேண்டும்.*
*அந்த மந்திரங்களுக்கு அர்த்தங்கள் தெரியவில்லை என்பதனால், அலட்சியம் செய்யக்கூடாது. அந்த விஷயங்களில் போதுமான அளவு நமக்கு புரிதல் இல்லாத காரணத்தினால், இந்த நாட்களில், உபநயனம் மற்றும் கல்யாணங்கள் எல்லாம் செய்தும் செய்யாதது போல் ஆகிறது. காரணம் அந்த மந்திரங்களின் மீது நமக்கு சிரத்தைகள் குறைந்துவிட்டன. அவைகள் சொன்ன முறையிலே செய்வதற்கான எண்ணங்கள் நமக்கு இல்லை.*
*இந்த நாட்களில் எப்படி சுலபமாக இருக்கிறதோ,அப்படி செய்து கொண்டு வாழ்க்கையை ஒரு மாதிரி நாம் ஓடிக்கொண்டு இருக்கிறோம். இந்த அளவுக்கு நாம் கஷ்டப்பட வேண்டி வருகிறது. அதனால் மந்திரங்களை நன்றாக தெரிந்து கொண்டு மிகவும் சிரத்தையாக செய்யவேண்டும். கட்டாயம் செய்து அந்த பலனை நாம் அனுபவித்துதான் பார்க்க முடியும். நம்முடைய அனுபவத்தில் அதை நாம் தெரிந்து கொள்ளலாம்.*
*அப்படி அந்த மந்திரங்கள் அதர்வன மந்திரங்கள் என்று பெயர். கல்யாணத்தில் சொல்லக்கூடிய மந்திரங்கள் எல்லாம் அதர்வண மந்திரம் என்றால் ஒரு தடவை சொன்னால் போதும். ஆயுட் காலம் முடிய பலனைக் கொடுக்கக் கூடியவைகள். அதேபோல்தான் இந்த ஆவஹந்தி ஹோமத்தில் சொல்லக்கூடிய தான மந்திரங்கள். அந்த மந்திரத்தினுடைய அர்த்தங்கள் எல்லாம் மிகவும் அற்புதமானது. அந்த அர்த்தங்களை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
|
|
|
Post by kgopalan90 on Dec 22, 2020 1:30:24 GMT 5.5
21/12/2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமத்தின் உடைய பெருமைகளையும் சிறப்புகளையும் மேலும் தொடர்கிறார்.*
*துரிதமாக பலனைக் கொடுக்கக்கூடிய தான் ஆவஹந்தி ஹோமம். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், ஒரு கணபதி ஹோமம்/நவக்கிரக ஹோமம் செய்கிறோம், இதற்கு என்று ஒரு குறிப்பிட்ட ஆவர்த்தி சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு மந்திரத்தை இவ்வளவு முறை சொல்லி செய்ய வேண்டியது. 108 அல்லது 1008 என்று சொல்லி செய்கிறோம் அதற்கு சமஸ்கிருதத்தில் ஆவர்த்தி என்று பெயர்.*
*ஒரு குறிப்பிட்ட அளவு அந்த மந்திரங்களை சொன்னால்தான் நமக்கு வேண்டிய பலன் பெறமுடியும், அதனால் ஜெபமோ ஹோமமோ நாம் செய்ய வேண்டி இருக்கிறது, அந்த அளவுக்கு நமக்கு இடையூறுகள் இருக்கின்றன.*
*ஆனால் இந்த ஆவஹந்தி ஹோமம் எப்படி என்றால் அதர்வண மந்திரம் என்று பெயர். ஒரு தடவை சொன்னால் கூறும் பலனை கொடுத்துவிடும். அதனால் தான், ஒரு குறிப்பிட்ட ஆவர்த்தி சொல்லப்படவில்லை. பொதுவாகவே வேத மந்திரங்களில் அதுபோல் உள்ள மந்திரங்கள் யாகத்தில் மட்டும்தான் உள்ளது. அக்னி ஹோத்ரம் செய்பவர்கள் செய்ய வேண்டிய ஒரு யாகமுமோ அல்லது ஷ்டியோ செய்தால் அங்கே நிறைய தேவதைகளை ஆவாகனம் செய்ய வேண்டி வரும். அப்போது அத்தனை தேவைகளுக்கும் ஒரு ஒரு முறைதான் ஆகுதிகள் கொடுக்கப்படும்.*
*108/1008 ஆவர்த்தி என்று சோம யாகங்களில் கிடையாது. ரிக் யஜுர் சாம வேத மந்திரங்களைச் சொல்லி அந்த ஆகுதியை நாம் கொடுத்துவிட்டால், பூர்ணமான பலனை அந்த தேவதை அனுகிரகம் செய்துவிடும். அந்த அளவுக்கு பெருமையை அந்த மந்திரம் செய்யும்.*
*இதுதான் வேத மந்திரத்திற்கு உள்ள பெருமை. மந்திரம் என்றால் என்ன இதைப்பற்றிய ஜெமினி மகரிஷி சொல்லும்போது, அதாவது நமக்கு நிறைய கர்மாக்களை கட்டாயம் செய்தே ஆகவேண்டும் என்று கடமையாக கட்டாயம் சொல்லப்பட்டு இருக்கிறது. அதற்கு விகிதம் என்று பெயர். அதற்கான சம்பந்தத்தை நமக்கு காட்டுவதுதான் மந்திரம்.*
*இதை அநேக விதமாக சாஸ்திரங்களில் பிரித்திருக்கிறார்கள். எந்தெந்த மந்திரங்களை எங்கெங்கே நாம் உபயோகப்படுத்த வேண்டும் என்றும் சாஸ்திரங்கள் காண்பிக்கின்றன. அதிலே இந்த ஆவஹந்தி ஹோமம் மிகவும் முக்கியமாக உபநிஷத்துக்களில் காண்பிக்கப்பட்டிருக்கிறது.*
*நான் முன்னரே பார்த்தோம், இந்த ஆவஹந்தி ஹோமம் இரண்டு விதமாக செய்யப்படும் என்று. வைதீக முறையாகவும் மற்றும் ஸ்ரீவித்யா உபாசக மந்திரங்களை அடிப்படையாக*
*கொண்டு முறையாகவும். அதிலே முதலில் இந்த ஸ்ரீவித்யா உபாசக விதான செய்யும் முறை பார்க்கும் பொழுது, அது தனக்காக என்று தான் செய்து கொள்ள முடியும். மற்றவருக்காக செய்ய முடியாது என்பதை அந்த கிரந்தங்களை பார்க்கும் போது தெரிய வருகிறது.*
*பகவத் பாதர் ஆதிசங்கரர் பிரபஞ்ச சார சங்கர சங்கரஹா என்று ஒரு கிரந்தம் செய்திருக்கிறார். அதிலே இந்த ஆவஹந்தி ஹோமம் செய்யும் முறையை விரிவாக காண்பித்திருக்கிறார்.*
*அதிலேயே சொல்லும்பொழுது நித்திய கர்மாவோடு சேர்த்து செய்யும் முறையாக காண்பித்திருக்கிறார்கள் இந்த ஆவஹந்தி ஹோமத்தை. ஸ்ரீவித்யா விதானத்திற்க்கும் அடிப்படை வேதம்தான். வேதத்தில் இருந்து அட்சரங்களை மந்திரங்களை நியாசம் செய்துகொண்டு, அதை ஜெபம் செய்வதாக அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். இதற்குத்தான் ஸ்ரீவித்யா விதானம் என்ற பெயர்.*
*இந்த ஆவஹந்தி ஹோமத்தை ஸ்ரீவித்யா விதானமாக பார்க்கும்பொழுது, எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்றால், கூஷ்மாண்ட ஹோமம் என்று ஆரம்பிக்கிறது. நைமித்திகம் ஆன கர்மா என்று பெயர். நமக்குத் தெரியாமல் செய்த அநேக விதமான தோஷங்கள் பாவங்கள் போவதற்காக செய்து கொள்ளக்கூடியது கூஷ்மாண்ட ஹோமம் என்பது.*
*மிகவும் முக்கியமான ஒரு அனுஷ்டானம். கூஷ்மாண்ட ஹோமம் என்கின்ற ஒரு தலைப்பிலேயே தனியாக அதை பார்ப்போம். அதுபோலத்தான் இந்த ஆவஹந்தி ஹோமம் ஸ்ரீ வித்தையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கிரகஸ்தனுக்கும் ஷட் கர்மா தினே தினே இன்று ஆறு கர்மாக்களை கட்டாயம் செய்தாக வேண்டும் தினமும் என்று தர்ம சாஸ்திரம் சொல்லி இருக்கிறது.*
*ஏனென்றால், தெரியாமலேயே ஐந்து விதமான பாபங்களை ஒவ்வொரு கிரகஸ்தனும் செய்கிறான். இந்த நாட்களில் பிரம்மச்சாரி சன்னியாசி கூட இந்த ஐந்து விதமான பாபங்களை செய்ய நேரிடுகிறது. அதாவது சமையல், சமையல் செய்யும் பொழுது நமக்குத் தெரியாமல் ஐந்து விதமான பாவங்கள் ஏற்படுகின்றன. கிரகஸ்தனுக்குதான் சமையல் என்பது நித்தியமாக சொல்லப்பட்டிருக்கிறது. பிரம்மசாரிகள் சன்னியாசிகள் தனக்குத் தானே
சமைத்துக் கொள்ளக் கூடாது என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது எப்போதுமே. அடிக்கடி நான் சொல்வது வழக்கம், எப்படி தாயார் தகப்பனாரை காப்பாற்ற முடியாதவர்கள், ஒரு விருத்தாஸ்மரத்தில் கொண்டுவந்து விடுகிறார்களோ, அதேபோல தாயார் தகப்பனார் இல்லாத குழந்தைகள், அவர்களை வைத்து காப்பாற்றக்கூடிய இடம், என்கின்ற இடங்கள் இருப்பதுபோல், பிரம்மச்சாரிகளுக்கு தினமும் சமைத்து கொடுப்பது என்று ஒன்று இருக்க வேண்டும்.*
*மிகப்பெரிய தருமமும் அது. அதேபோல சந்நியாசிகளுக்கு பிக்ஷ்சை போடுவது என்று அங்கங்கே ஏற்பாடு செய்ய வேண்டும். #ஏனென்றால் #பிரம்மச்சாரிகள்_தானே_சமைத்து #சாப்பிட்டால்_மகா_பாதகமாக #சொல்லப்பட்டிருக்கிறது_அதேபோல #சந்நியாசிகள்_சமைத்தால்_அவர்கள் #ஏற்றுக்_கொண்ட_சன்னியாசி #செல்லுபடியாகாது என்று அந்த அளவுக்கு முக்கியத்துவமாக சொல்லப்பட்டிருக்கிறது சமைக்கக் கூடாது என்று.*
*கிரகஸ்தனுக்குதான் அந்தக் கடமை சொல்லப்பட்டு இருக்கிறது. அதனால் குடும்பஸ்தன் தினமும் சமைத்து பிரம்மச்சாரி களுக்கும் சந்நியாசிகளுக்கும் போட்டுவிட்டு தான் சாப்பிட வேண்டும் என்பது தரமம். அதற்கு முன்னர் வைஸ்வதேவம் என்கின்ற ஒரு தர்மம் இருக்கிறது. அதை ஒவ்வொரு குடும்பஸ்தனும் கட்டாயம் பண்ணவேண்டும் தினமும். இந்த அனுஷ்டானம் எதற்காக என்றால் சமையல் செய்யும்போது ஐந்து விதமான பாவங்களை நாம் செய்ய தெரியாமல் செய்ய நேரிடுகிறது.*
*சமையல் செய்கின்ற பொழுது, பாபம் அதாவது ஜீவராசிகள் இந்த உலகத்தில் வந்து பிறக்கின்ற போது ஐந்து விதமான விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு வந்து தான் இங்கே பிறக்கிறார்கள் அவ்வளவு ஜீவராசிகளும். எந்த வழியாக அவர்கள் வருகிறார்கள் என்றால், தானியங்கள், தண்ணீர்,
உஷ்ணம், வழியாக அவர்கள் இந்த உலகத்தில் வந்து பிறக்கிறார்கள். அதை எல்லாம் நாம் சமையலில் உபயோகம் செய்கிறோம். இதுதான் பாபம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது போவதற்காக செய்யக்கூடிய தான் வைஸ்வதேவம் என்கின்ற ஒரு அனுஷ்டானம். மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
|
|
|
Post by kgopalan90 on Dec 22, 2020 1:23:25 GMT 5.5
*14/12/2020 to 19/12/2020 No Broadcaste*
*20/12/2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து தர்மங்களை பார்த்துக்கொண்டு வரக்கூடிய வரிசையில் ஆவஹந்தி ஹோமம் பெருமைகளையும் முக்கியத்துவத்தையும் மேலும் தொடர்கிறார்.*
*இந்த ஆவஹந்தி ஹோமம் வேதத்திலிருந்து எடுத்து அதை நாம் பயன்படுத்தி எல்லோருக்கும் அதனுடைய நன்மைகளை அடைய வேண்டும் என்று பிரபலப்படுத்தியவர், அதாவது அதற்கு முன்பு எல்லோராலும் இந்த ஹோமம் செய்ய முடியாமல் இருந்தது அதை சுலபமாக செய்ய முடியும் என்று வேத விற்பன்னர்களை கூட்டி எல்லோரும் பயன் பெற வேண்டும் என்று அனுப்பி வைத்து அதை நமக்கு சுலபமாக கொடுத்தவர் நமது மகா பெரியவா தான்.*
*உபநிஷத் பாகத்திலே இந்த ஆவஹந்தி ஹோமம் ஆனது சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது 108 க்கு மேலே உபநிஷத்துக்கள் இருக்கின்றன. ஆதி சங்கர பகவத் பாதாள் அனுகிரகித்தது என்று 108. அதிலேயே பத்திற்க்கு பாஷ்யம் செய்த போது ஆதிசங்கரர், அதில் தைத்திரீயோப உபநிஷத் என்று ஒரு பாகம் வருகிறது. அதில்தான் இந்த ஆவஹந்தி ஹோமம் சொல்லப்பட்டிருக்கிறது.*
*பொதுவாகவே, அனைத்து உபநிஷத்துக்களிலும் காமியம் ஆக சில பலன்களை உத்தேசித்து செய்யப்பட வேண்டியவை என்று சொல்லப்பட்டிருக்கின்றன.*
*பொதுவாக உலகத்தில் எப்படி பிரச்சாரம் என்றால், உபநிஷத்துகள் அனைத்துமே லோகத்தில் பர பிரமத்தை அடையக்கூடிய ஒரு வழியைத்தான் காண்பிக்கிறது என்று நாம் பிரசித்தமாக சொன்னாலும், அவாந்தர பலனாக நிறைய சொல்லப்பட்டிருக்கிறது.*
*அவாந்திர பலன் என்றால், மோக்ஷம் ஞானத்தை அடையவேண்டும் என்றால், அதற்கு முன்னால் செய்யவேண்டிய கடமைகள் நமக்கு நிறைய இருக்கின்றன. இந்த கடமைகள் எல்லாம் நாம் செய்த பிறகு உபநிடதங்களை நாம் வாசிக்க வேண்டும். அப்படி அந்தக் கடமைகளைச் செய்யும் போது நமக்கு இடையூறுகள் நிறைய ஏற்பட்டால், அவைகள் நீங்கி அதனுடைய பலன்கள் நமக்கு சீக்கிரமாக கிடைப்பதற்கு, உபநிடதங்கள் நிறைய காண்பிக்கின்றது.*
*ஒவ்வொரு உபநிடதங்களிலும், நிறைய காமிய கர்மாக்கள் சொல்லப்படுகின்றன. நைமித்திகம் ஆகவும் நிறைய சொல்லப்பட்டிருக்கின்றன. ஒதுக்கும் படியாக இல்லை. அதாவது திருமணம் ஆகவில்லை கல்யாணம் தள்ளிப் போகிறது என்றால், கல்யாணம் நித்தியமாக தான் சொல்லப்பட்டிருக்கிறது காம்மியமாக இல்லை. இப்படி விவாகம் நித்திய கர்மா என்று சொல்லப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் நமக்கு இடையூறு ஏற்படும் பொழுது, அவைகள் நீங்குவதற்கு உபநிடதங்கள் உபாயங்களை காண்பிக்கின்றன.*
*அதேபோல் விவாகம் ஆனபிறகு தம்பதிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்ற சமயத்தில், கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன என்கிற பொழுது, பிரம்ம சொரூபம் உபநிஷத் முழுமையாக நமக்கு புரிவதற்கான வாய்ப்புகள் இல்லை. அப்பொழுது அந்த இடைஞ்சல்கள் போய் ஒற்றுமை ஏற்பட வேண்டுமென்றால் அதற்கான உபாயங்கள் உபநிஷத்துக்களில் நிறைய சொல்லப்பட்டிருக்கின்றன.*
*அதேபோல சந்ததிகள் ஏற்பட வேண்டும் என்பதற்கான உபாயங்களும் அதிலே சொல்லப்பட்டிருக்கின்றன. மேலும் பிரசவ காலத்தில் சுகப்பிரசவம் ஏற்படுவதற்கான உபாயங்களும் உபநிஷத்துக்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. இப்போது சுலபமாக சிசேரியன் வந்துவிட்டது என்று நாம் செய்து கொள்கிறோம். நம்முடைய தர்ம சாஸ்திரமும் வேதமும் அந்த சிசேரியன் என்பதை ஒத்துக் கொள்ளவில்லை. கூடாது என்று சொல்லி இருக்கிறது,*
*ஏனென்றால் சுகப்பிரசவம் ஆக இயற்கையான முறையில் என்று நடக்க வேண்டும். அப்படி பிறந்தால் தான் அந்த குழந்தை வேதம் படிப்பதற்கு வேதத்தில் சொன்ன கர்மாக்களை செய்வதற்கு அதிகாரம் வரும். அந்த அளவிற்கு முக்கியத்துவமாக சொல்லப்பட்டிருக்கின்றது. அதனால் நாம் கூடுமானவரையில் சுகப்பிரசவம் நடப்பதற்கான முறையை கடைபிடிக்க வேண்டும். சிசரியன் சுலபமாக இருக்கிறது என்று நினைத்தால் தாயாருக்கு உடல் பலஹீனம் மிகவும் ஆகிவிடும். நரம்பு சம்பந்தமான நோய்கள் பிற்காலத்தில் ஏற்பட்டு கஷ்டப்பட நேரிடும். இப்படி வந்து விட்டது இந்த நாட்களில் அதை குறை சொல்லி பிரயோஜனம் இல்லை அது மாற வேண்டும்.*
*உபநிஷத்துக்களில் நிறைய உபாயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன, சுலபமான முறையில் சுகப்பிரசவம் களை நாம் பெறுவதற்கு.*
*அதேபோல நாம் குடும்பம் நடத்துவதற்கான பொருளாதார விஷயத்தில், குடும்ப விஷயத்தில் முன்னேற்றங்களுக்கு ஆன நிலையையும் நிறைய உபாயங்கள் உபநிஷத்துகளின் சொல்லப்பட்டிருக்கின்றன. இப்படி உபநிஷத்துக்களில் சொல்லப்படாத விஷயங்களே கிடையாது. ஒவ்வொரு உபநிடதங்களையும் முதலிலிருந்து கடைசிவரை நாம் பார்க்க வேண்டும். நிறைய காமிய கர்மாக்களும் நைமித்திய கர்மாக்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. பிரசவத்திற்காக செய்யக்கூடியவை எல்லாம் நைமித்திகம் என்றும் பெயர். இதெல்லாம் காமியம் என்று ஒதுக்க கூடாது.*
*அதேபோலத்தான் இந்த ஆவஹந்தி ஹோமம் விஷயமும். தைத்திரீய உபநிஷத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மிகவும் முக்கியமான ஒரு அனுஷ்டானம். மகரிஷிகள் இரண்டு விதமாக இந்த ஆவஹந்தி ஹோமத்தை பிரித்து கொடுத்திருக்கிறார்கள்.*
*ஒன்று வைதீக மான முறையில் அனுஷ்டிப்பது. மற்றொன்று தாந்த்ரீக முறையில் அனுஷ்டிப்பது. வைதிகம் தந்திரம் என்று இரண்டாகப் பிரித்து இருக்கிறார்கள். மந்திர சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு செய்வது என்று அர்த்தம். சாஸ்திரங்களில் தந்திரம் என்று சொன்னால் அர்த்தங்கள் வேறு. இங்கு நாம் பார்ப்பது தந்திரம் என்றால் மந்திர சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டு செய்வது. ஸ்ரீவித்யா உபாசகர்கள் செய்யக்கூடியது. இப்படி வைதீக முறை தாந்திரிக முறை என்ற மகரிஷி இரண்டு விதமாக நமக்கு காண்பித்திருக்கிறார்கள்.*
*மகாபெரியவா நமக்கு இந்த இரண்டையும் சொல்லிக் கொடுத்தாலும் கூட, வைதீக மான முறைக்கு தான் முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. தாந்திரிக முறையானது ஒரு நித்திய கர்மாவுடன் சேர்த்து செய்யக்கூடியதாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. இப்போது காயத்ரி ஜபத்தை நாம் எடுத்துக் கொண்டால், காயத்ரி னுடைய பலன் நமக்கு அதிகமாக வேண்டுமென்றால், சந்தியாவந்தனத்தில் செய்யக்கூடிய தான காயத்ரி ஆவர்த்தியையே அதிகமாக செய்வது, என்று ஒரு முறை. அல்லது தனியாக சங்கல்பம் செய்துகொண்டு காயத்ரி மந்திரத்தை ஜபிப்பது
என்பது ஒரு முறை. இதே போல் தான் இந்த ஆபத்து ஹோமத்தையும், நமக்கு பிரித்து கொடுத்திருக்கிறார்கள் இரண்டு விதமாக அதனுடைய பலன்களில் கூட வித்தியாசம் இருக்கின்றது. அது என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
|
|
|
Post by kgopalan90 on Dec 19, 2020 19:37:29 GMT 5.5
வ்யதீபாதம்;-22-12-2020.
முசிறி அண்ணா நம்முடைய தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஒரு வருடத்தில் நாம் செய்யக்கூடிய தர்ப்பண விவரங்களை மேலும் தொடர்கிறார்.
அதாவது ஷண்ணவதி தர்ப்பணம் முறையை பார்த்தோம். அதில் நாம் இப்போது பார்க்க கூடியது வ்யதீபாத புண்ணிய காலம் என்ற முக்கியமான ஒன்று.
27 யோகங்களுள் இதுவும் வருகிறது. நாம் தினமுமே திதி வாரம் நட்சத்திரம் யோகம் கரணம் இந்த ஐந்தையும் பஞ்சாங்கம் மூலம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் நமக்கு ஐந்து விதமான லாபங்கள் கிடைக்கின்றன.
இன்றைக்கு என்ன #திதி_என்று_தெரிந்து கொண்டால் ஐஸ்வர்யம் இலாபம் கிடைக்கின்றது.
இன்றைக்கு என்ன #வாரம்_என்று தெரிந்து கொள்வதினால் #ஆயுசு_விருத்தி ஆகின்றது.
இன்றைக்கு என்ன #நட்சத்திரம்_என்று தெரிந்து கொண்டால் பாபம் போகிறது.
இன்றைக்கு என்ன #யோகம்_என்று தெரிந்துகொண்டால் ரோக நிவர்த்தி ஆகிறது.
இன்றைக்கு என்ன #கரணம்_என்று தெரிந்து கொள்வதினால் காரியசித்தி ஏற்படுகிறது.
இந்த ஐந்தையும் பஞ்சாங்கம் மூலம் தினமும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
யோகம் என்பது 27 உள்ளது. இந்த 27க்குள் வ்யதீபாதம் என்பதும் ஒரு யோகமாக சொல்லப்பட்டிருக்கிறது. இது ஒரு பெரிய புண்ணிய காலமாக சொல்லப்பட்டு இருக்கிறது தர்ம சாஸ்திரத்தில்.
இந்த வ்யதீபாத யோக நாமம் என்றைக்கு வருகிறதோ, அன்றைக்கு நாம் இந்த தர்ப்பணத்தை செய்ய வேண்டும்.
இந்த வ்யதீபாத யோகம் சில நட்சத்திரங்களோடும் சில வாரங்களோடும் சில திதிகளோடும் சேர்ந்து வந்தால், அது பெரிய புண்ணிய காலமாக சொல்லப்பட்டு இருக்கிறது.
பொதுவாகவே நாம் யாருக்காவது ஏதாவது ஒரு தானம் செய்யவேண்டும் என்று சங்கல்பித்து கொண்டால், இந்த வ்யதீபாத புண்ணிய காலத்தில் செய்தால் ரொம்ப புண்ணியத்தை கொடுக்கக் கூடியது என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.
#அமாவாசை_அன்று_நாம் செய்யக்கூடிய தானமானது, பத்து மடங்கு அதிகமான பலனைக் கொடுக்கக் கூடியது.
அதைவிட அதிகமான பலனை அதாவது #100_மடங்கு கொடுக்கக்கூடியது, மாச பிறப்பு அன்று நாம் செய்யக்கூடியதான தானம்.
#ஆயிரம்_மடங்கு_பலனைக் கொடுக்கக்கூடிய தான தினம், விஷு புண்ணிய காலம். துலா விஷு சைத்திரை விஷு என்று சித்திரை மாதப்பிறப்பு துலா மாச பிறப்பு.
இந்த இரண்டு தினங்களில் நாம் செய்யக்கூடியது ஆன தானங்கள் ஆயிரம் மடங்கு பலனைக் கொடுக்கக் கூடியது.
#யுகாதி_புண்ணிய_காலங்களில் நாம் செய்யக்கூடியதான தானம், 12000 மடங்கு பலனைக் கொடுக்கக் கூடியது.
#தட்சணாயன_உத்தராயண_புண்ணிய காலங்களில் நாம் செய்யக்கூடியதான தானம், அதாவது தை மாதப் பிறப்பும் ஆடி மாதப் பிறப்பும் அன்றைய தினத்தில், 12000 X 10 மடங்கு பலனைக் கொடுக்கக் கூடியதாக உள்ளது
#சந்திர_கிரகணத்தன்று_நாம் செய்யக்கூடிய தான தானம், 12,00,000 லட்சம் மடங்கு பலனைக் கொடுக்கக் கூடியது.
சூரிய கிரகணத் அன்று நாம் கொடுக்க கூடியதான தானம் #கோடி_மடங்கு பலனைக் கொடுக்கக் கூடியது.
இந்த_வயதீபாதம்_புண்ணிய_காலத்தில் நாம்_செய்யக்கூடிய_தான_தானம், அசங்கேயம்_அதாவது_சொல்லி மாளாது_முடியாது_அளவு_பலனைக் கொடுக்கக் கூடியது.
அந்த அளவுக்கு அதிகமான அகண்ட நிறைய புண்ணியங்களை கொடுக்கக் கூடியது இந்த வயதீபாதம். ஆகையினாலே அன்றைக்கு செய்யக்கூடிய தானம் மிகவும் உத்தமமான பலனைக் கொடுக்கக் கூடியது.
இந்த மாதிரியான புண்ணிய காலங்களில் நாம் செய்யக்கூடியது தானங்கள் ஸ்நானங்கள் ஜபங்கள் எல்லாம் அனைத்து விதமான பாவங்களையும் போக்க வல்லது.
இன்றைய நாட்களில் நமக்குத் தெரியாமல் எவ்வளவு தவறுகள் நடந்து விடுகின்றன, அல்லது நாம் செய்ய வேண்டி வருகிறது.
இப்போது உதாரணத்திற்கு, #தைத்த_துணியை நாம் போட்டுக் கொள்ளக்கூடாது என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது. அதாவது தையல் விழுந்த துணியை உடுத்திக் கொண்டு தேவ காரியங்களையும் பிதுர் காரியங்களை செய்யக்கூடாது.
ஆனால் தைத்த துணியை தான் நாம் போட்டுக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. தையல் விழாத துணியை போட்டுக் கொள்ளவே முடியாது என்கின்ற காலகட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம்.
அதேபோல, நாம் #தினமும்_வபனம் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறோம். ஏதோ ஒரு ரீதியாக அல்லது உத்தியோகத்தை சொல்லி, முக வபனம் என்று பாதி வபனம்
செய்துகொண்டு இருக்க வேண்டிய நிலை, மீசை வைத்துக் கொள்ள வேண்டிய நிலை, #இதையெல்லாம்_ஒரு_குறைபாடாக_நம் தர்ம சாஸ்திரம் நமக்கு காண்பிக்கின்றது.
இது எல்லாம் தவிர்க்க முடியாத ஒரு காலகட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம். இதை நாம் வேண்டாம் என்று நினைத்தாலும் கூட வைத்துக்கொள்ள வேண்டிய கடைபிடிக்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விட்டோம்.
இதற்கெல்லாம் என்ன பரிகாரம் என்று பார்க்கும்போது இந்த மாதிரியான வ்யதீபாதம்_புண்ணிய_காலங்களில், புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்வது, அந்த
நதிக்கரையில் இருப்பவர்களுக்கு ஏதாவது தானம் கொடுப்பது, அப்படி செய்வதினால் இந்த மாதிரியான பாபங்கள் எல்லாம் போகிறது. இதற்கெல்லாம் தனியான பரிகாரங்கள் தர்ம சாஸ்திரத்தில் சொல்லப்படவில்லை.
நாம் செய்யக்கூடியது ஆன இந்த நாட்களில் தவறுகள் எல்லாம் நடந்து போய் விடுகின்றன, ஆனால் பிராயச்சித்தம் என்று தர்ம சாஸ்திரத்தில் எதுவுமில்லை. பிராயச்சித்தம் தர்ம சாஸ்திரத்தில் இல்லை என்பதினால் பரவாயில்லை என்று நாம் முடிக்க முடியாது.
#எப்பொழுது_தர்மசாஸ்திரம் #ஒன்றை_செய்யக்கூடாது_என்று #சொல்கிறதோ_கட்டாயம்_அதற்கு #பாவங்கள்_உண்டு.
எதற்கான #பிராயச்சித்தம் நம் தர்ம சாஸ்திரத்தில் #சொல்லப்படவில்லையோ_அவைகளை #கட்டாயம்_நாம்_செய்யக்கூடாது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் இந்நாட்களில் இந்த மாதிரியான தவறுகள் நடந்து போய் விடுகின்றன.
இதற்கான பிராயச்சித்தமாக இந்த வ்யதீபாதம் புண்ணிய காலங்களை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி ஒரு உத்தமமான புண்ணிய காலம் இது.
இந்த வ்யதீபாதம் புண்ணிய காலம் விஷயமாக நிறைய தகவல்களை நமக்கு புராணங்கள் காண்பிக்கின்றன.
#முக்கியமாக_வராக_புராணம்_நாரத புராணம் கூறுகிறது இந்த வ்யதீபாத புண்ணிய காலம் என்றால் என்ன? இந்த புண்ணிய காலத்தில் நாம் என்னென்ன எல்லாம் செய்து, என்னென்ன
பலன்களை நாம் அடையலாம் என்பதை இந்த இரண்டு புராணங்களும் விரிவாக காண்பிக்கிறது. அதைப் பற்றிய விவரங்களை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.
முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் செய்யக்கூடியது ஆன தர்பணங்களின் வரிசையை பற்றி மேலும் விவரிக்கிறார்.
அதில் நாம் தற்பொழுது பார்த்துக் கொண்டு வரக்கூடிய தான புண்ணியகாலம் வ்யதீபாதம். மிக முக்கியமானதொரு புண்ணியகாலம் தர்மசாஸ்திரம் இதைப் பற்றி சொல்லும்போது ஸ்நானம் தானம் ஜபம் தர்ப்பணம் முதலியவை செய்ய வேண்டும் என்று சொல்கிறது.
புராணம் ஒரு சரித்திர மூலமாக இதனுடைய பெருமையை காண்பிக்கின்றது. வராக புராணத்தில் இருந்து பார்ப்போம்.
எதிர்பாராத விதமாக நமக்கு ஒரு பெரிய அதிகாரம்/பதவி கிடைக்கிறது, என்றால் அதை நாம் வேண்டாம் என்று சொல்லுவோமா?
அந்தப் பதவி நமக்கு கிடைத்தால் நம் மூலமாக பல குடும்பங்கள் முன்னேறும். நாம் நிறைய பேருக்கு நல்லவைகளை செய்ய முடியும்.
அப்படிப்பட்ட ஒரு பதவி நமக்கு கிடைத்தால், எப்படி நாம் அதை விடாமல் பயன்படுத்திக் கொள்வோமோ, அதேபோல் இந்த வ்யதீபாத
புண்ணிய காலத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வராக புராணம் காண்பித்து, இந்த வ்யதீபாத யோகமானது சில நட்சத்திர வார திதிகளோடு சேர்ந்தால் மிகவும் பெருமை சொல்லப்பட்டிருக்கிறது.
*மகாபாரதத்தில் இதைப் பற்றி சொல்லும் பொழுது, #அதாவது_வ்யதீபாத #யோகமானது_ஞாயிற்றுக்கிழமையோடு
#சேர்ந்தால்_கோடி_சூரிய_கிரகண #புண்ணிய_காலத்திற்கு_துல்லியமாக #சொல்லப்பட்டிருக்கிறது.
#அதேபோல்_திருவோணம்_அஸ்வினி, #அவிட்டம்_திருவாதிரை_ஆயில்யம், #மிருகசீரிஷம்_இந்த_நட்சத்திரங்களோடுசேர்ந்தால்_மிகவும்_புண்ணிய_காலமாக #சொல்லப்பட்டு_இருக்கிறது.
*திதியில் நாம் எடுத்துக் கொண்டால், அமாவாசை யோடு இந்த வயதீபாதம் சேர்ந்தால், அது அர்த்தோதையம் அலப்பிய யோகமாக சொல்லப்பட்டிருக்கிறது.*
*இப்படி மகாபாரதம் பல பெருமைகளை இந்த வயதீபாத புண்ணிய காலத்திற்கு காண்பிக்கிறது. வராக புராணமும் அதனுடைய பெருமையை சொல்லி, அதற்கான ஒரு சரித்திரத்தையும் நமக்கு காண்பிக்கிறது.*
*இந்த சரித்திரத்தை சொல்லி, வயதீபாத விரதம் என்று ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த விரதம் நாம் எதற்காக செய்து கொள்ள வேண்டும் என்றால், இதை பல பெயர்கள் அனுஷ்டித்து, பல இராஜாக்கள் இந்த விரதத்தை செய்து, நல்ல
புத்திரனையும் தீர்க்கமான ஆயுளையும், ஐஸ்வர்யங்களையும், மனநிம்மதியும் அடைந்திருக்கிறார்கள் என்று இந்த புராணம் காண்பிக்கிறது.*
#மேலும்_பஞ்ச_பாண்டவர்கள் #வனவாசத்தில்_வாசம்_செய்யக்கூடிய #காலத்தில்_இந்த_வ்யதீபாத_விரதத்தை #அனுஷ்டித்ததாக_இந்த_வராக_புராணம் #சொல்கிறது.
*இந்த சரித்திரம் என்ன சொல்கிறது என்றால் முன்னர் ஒரு சமயம், பிரகஸ்பதியினுடைய மனைவியை பார்த்து ஆசைப்பட்டார் சந்திரன்.
சூரியனும் சந்திரனும் இணைபிரியா நண்பர்கள். இந்த இருவரும்தான் இந்த பூமிக்கு சாட்சியாக இருந்து கொண்டு அனைத்து தேவர்களுக்கும் சாட்சியாக இருந்து கொண்டிருக்கிறார்கள்*
*பிரகஸ்பதியின் மனைவி மிகவும் அலங்காரத்தோடு, ஒரு சமயம் சந்திரன் கண்ணில் பட்டாள். அவளைப் பார்த்தவுடன் ஒரு க்ஷணம் மோகித்தான் சந்திரன்.
அதைப் பார்த்ததும் சூரியனுக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. அப்பொழுது சூரியன் சொன்னார் சந்திரா நீ மிகவும் தவறு செய்கிறாய் என்று கண்டித்தார்.*
*மிகவும் கோபமாக சந்திரனை கோபித்துக் கொண்டார் சூரியன். சந்திரனுக்கும் சூரியன் இடத்தில் கோபம் வந்தது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் கோபமாக பார்த்துக் கொண்டனர்.
இந்த இருவர்கள் உடைய கோபத்தில் இருந்து உருவான ஒரு ஜோதிஸ் ஒரு உக்கிரமான ரூபமாக உருவெடுத்தது.*
*ஒரு புருஷன் உருவானான், எப்படி இருந்தான் என்றால் கண்கள் இரண்டும் சிவக்க சிவக்க கோவைப்பழம் போல் இருந்தது. உதடுகளும் சிவந்திருந்தது. பற்கள் நீளமாக இருந்தன.
நீண்ட புருவம் பெரிய உருவம். அக்னி போல் பள பளபளவென்று பிரகாசமாய் ஒரு ராக்ஷஸ ரூபமாய், ஒரு உருவம் அங்கு வந்து நிற்கிறது.*
#கோபத்திலிருந்து_ஆவிர்பவித்ததினால் #உக்கிரத்துடன்_கூடிய, அந்த உருவம் எதிர்ப்பட்டது. மேலும் அவ்வளவு பெரிய உருவத்தினால் பசி வந்துவிட்டது.
உடனே ஏதாவது சாப்பிட வேண்டும் என்று அந்த புருஷாத்காரமான உருவம் கிளம்பியது.
*அப்போது சூரியனும் சந்திரனும் அந்த உருவத்தை எங்கேயும் போகாதே என்று தடுத்தார்கள்.
ஏன் எனக்கு பசிக்கின்றது நான் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று சத்தம் போட்டு சுற்றி சுற்றி பார்த்தார் அந்த புருஷன்.*
*அப்போது போகக்கூடாது என்று மீண்டும் தடுத்தார் சூரியனும் சந்திரனும். ஏன் நான் இப்போது போகக்கூடாது எனக்கு பசிக்கின்றது.
நான் ஏதாவது சாப்பிட்டால் தான் மேற்கொண்டு, உயிர் வாழ முடியும் என்று சொல்லி சத்தம் போட்டது அந்த புருஷாத்காரமான உருவம்.*
*அப்போது சூரியனும் சந்திரனும், நம்முடைய கோபத்தினால் இப்படிப்பட்ட ஒரு உருவம் வந்துவிட்டது என்று நினைத்து அதற்கு சில கட்டுப்பாடுகளை வைத்தார்கள். அது என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் செய்ய வேண்டியது தான தர்ப்பணங்களை வரிசைப்படுத்தி பார்த்துக் கொண்டு வருவதை மேலும் தொடர்கிறார்.*
*அதில் வராக புராணத்தில் இருந்து ஒரு சரித்திரம் மூலமாக வயதீபாத புண்ணிய காலத்தை பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம்.*
*வியாசர் அதைப்பற்றி மேலும் தொடரும் போது சூரியனும் சந்திரனும் சேர்ந்து ஆவிர்பவித்த அந்த புருஷன் இடம் பேசினார்கள். மிகுந்த பசியுடன் இருக்கிறார் அவர்.*
*எது இப்போது கிடைக்கும் அதை வாங்கி சாப்பிட வேண்டும் என்று இருக்கிறார். எங்கள் இருவரின் கோபத்தினால் நீ ஆவிர்பவித்தாய், நீ ஒரு யோகமாக இருக்கவேண்டும் உனக்கு வ்யதீபாதம் என்று பெயர் இடுகிறோம், ஒரு கால தெய்வமாக நீ இருக்க வேண்டும்.*
*வ்யதீபாத யோகமாக இருந்து அனைத்து யோகங்களும் நீ இராஜாவாக இருப்பாய் மேலும் உனக்கு என்று வரக்கூடிய ஒரு காலம் இருக்கிறது.
அந்த காலத்தில் அனைவரும் செய்யக்கூடியது ஆன, ஸ்நானங்கள் ஜபங்கள் தர்ப்பணங்களை உன் மூலமாக பித்ருக்களுக்கு கிடைக்கட்டும்.
அவர்கள் எதிர்பார்க்கக்கூடிய பலன்களும் அவர்களுக்கு கிடைக்கட்டும். தேவதைகளுக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்தும் என்று சொல்லி,
உன்னுடைய காலமான வ்யதீபாதம் அன்று எல்லோரும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும், உன்னை மட்டும் அவர்கள் நினைத்துக் கொண்டு அன்றைய தினம் கர்மாக்களை செய்ய வேண்டும்.*
*அதனால் அன்றைய வ்யதீபாத யோகத்தில் யாரும் முகூர்த்தம் அதாவது கல்யாணம் உபநயனம் செய்ய வேண்டாம், சுப காரியங்களை தவிர்த்து, உன்னையே எல்லோரும் ஜெபித்து அன்றைய தினம் ஹோமங்கள் நடக்கட்டும்.*
*அப்படி சொல்லி ஆரம்பித்து நாம் இருக்கக்கூடிய தான இந்த பூலோகம் மட்டும் இல்லாமல், பதினான்கு லோகங்களிலும் அனைவரும் இந்த வ்யதீபாத யோகத்தை அனைவரும் பயன்படுத்திக் கொண்டனர்.*
*அனைத்து லோகங்களிலும் இந்த வ்யதீபாத புண்ணிய காலத்தில் அவர் அவர்களால் என்ன செய்ய இயலுமோ, அதை செய்வது என்று ஆரம்பித்தனர்.
மேலும் சூரிய சந்திரர்கள், இந்த வ்யதீபாத புண்ணிய காலத்தில், உன்னை மாத்திரம் உத்தேசித்து, தேவ காரியங்களையும் பித்ரு காரியங்களையும், செய்வார்கள்.
அவர்கள் செய்வதை நீ திருப்தியாக எடுத்துக்கொண்டு, அவர்கள் கேட்கக் கூடிய பலனை கொடு.*
*யார் இந்த வ்யதீபாத புண்ணிய காலத்தை நினைவில் வைத்துக்கொள்ள வில்லையோ, அல்லது தெரிந்தும் செய்யாமல் இருக்கிறார்களோ, அவர்களிடத்திலே
உன்னுடைய பசியின் மூலமாக வந்த கோபத்தை கொடு, குடும்பத்தில் சச்சரவுகள் தகராறுகள் ஏற்படும், உன்னுடைய கோபம் அவர்களுக்கு வேலை செய்யும். இந்த கோபத்தை அவர்களிடத்திலே கொடுத்துவிடு
நீ வைத்துக்கொள்ளக் கூடாது என்று சூரிய சந்திரர்கள் சொல்ல, அப்பொழுது வ
வ்யதீபாதம் சொன்னார், உங்கள் இருவர் களில் மூலமாகத்தான் நான் இங்கு ஆவிர்பவித்து இருக்கிறேன் எனக்கு இந்த அளவுக்கு அனுகிரகம் செய்ததற்கு சந்தோஷப்படுகிறேன்.*
*உங்களுடைய, பிரசாதம் அனுக்கிரகம் ஆசீர்வாதம் எப்பொழுதும் வேண்டும், என்று வ்யதீபாதம் சொல்ல, எங்களுடைய அனுகிரகம் உனக்கு எப்போதும் உண்டு.
இந்த வ்யதீபாத புண்ணிய காலத்தில் யாராக இருந்தாலும் அவர்கள் செய்யக்கூடிய ஸ்நானம் தானம் ஜபம், ஹோமம், பித்ரு காரியங்கள், இது அனைத்தும் உன்னையே சாரும். அவர்கள் எதையெல்லாம் விரும்புகிறார்களோ அதை நீ கொடுக்க வேண்டும்.*
*தர்ப்பணம் செய்கின்றவர்கள் அன்றைய தினத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
ஜீவ பிதுருக்கள் அதாவது தாயார் தகப்பனார் இருக்கும் போது அவருடைய குழந்தைகள் ஜெபம் ஹோமம் செய்ய வேண்டும்,
நான் இதற்காக ஒரு விரதத்தை சொல்கிறேன் என்று சொல்லி, வ்யதீபாத விரதம் என்ற ஒரு விரதத்தை காண்பித்து #புத்திரன் #வேண்டும்_என்று_ஆசைப்படுகிறவர்கள் #இந்த_விரதத்தை #செய்யவேண்டுமென்று அதற்கான முறையே காண்பிக்கிறார்.*
அதில் இருந்து ஆரம்பித்து இந்த வ்யதீபாத விரதமானது 26 யோகங்கள் உடன் 27ஆவது யோகமாக சேர்ந்து இருந்தது. அந்த வ்யதீபாத நாமயோகம் என்றைக்கு வருகின்றதோ, அன்றைக்கு இந்த விரதத்தை நாம் செய்ய வேண்டும்.
#தனுர்_மாசத்திலே_தனுர்_வ்யதீபாதம் என்று வரும். மார்கழி மாதத்தில் வரக்கூடிய விரதம் அதுதான். அதுதான் ஆரம்பம்.
வ்யதீபாத யோகம் ஆவிர்பவித்த தினம் தான் தனுர் வ்யதீபாதம்.
அந்த மார்கழி மாதம் வரக்கூடிய இந்த வ்யதீபாத விரதத்தை ஆரம்பித்து கொண்டு ஒவ்வொரு மாதமும், காலையிலே ஸ்நானம் செய்து உபவாசகமாக இருந்துகொண்டு,
#தாம்பிர_பாத்திரத்தில்_நாட்டு #சர்க்கரையை_நிரப்பவேண்டும், #அதற்குமேல்_ஒரு_பிரதிமையை #வைத்து_வ்யதீபாததே_நமஹா_என்று #மந்திரத்தைச்_சொல்லி, இதுதான் மந்திரம் வேறு எந்த மந்திரமும் இல்லை, ஷோடச உபசார பூஜைகள் செய்து தித்திப்பு நிவேதனம் செய்து, அதை முதலில் நாம் சாப்பிட வேண்டும்.
*இப்படி ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டும். 13 மாதங்கள் இதை செய்ய வேண்டும். வ்யதீபாத புண்ணிய காலம் 13 வரும் ஒரு வருடத்தில்.
பதினான்காவதாக திரும்பவும் தனுர் வ்யதீபாதம் வரும் அன்றைய தினத்தில் அந்த விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.*
#யார்_ஒருவர்_இந்த_விரதத்தைக்_அப்படி #அனுஷ்டிக்கிறார்களோ_மலடியாக #இருந்தாலும்_ஆண்_வாரிசு_பிறக்கும், என்று இந்த வ்யதீபாத புண்ணிய காலம் பெருமையை வராக புராணம் காண்பித்து, வ்யதீபாத
ஸ்ரார்த்தம் செய்து அதன் மூலம் பித்ருக்களுக்கு பலனை கொடுக்கும், பித்ரு சாபம் தோஷம் இருந்தால் நீங்கும் என்று, சொல்லி இந்த விரதத்தின்/தர்ப்பணத்தின் உடைய பெருமையை
காண்பிக்கின்றது வராக புராணம், இதையே தான் நம்முடைய தர்ம சாஸ்திரமும் ஷண்ணவதி தர்ப்பணம் மூலம், இந்த வ்யதீபாத புண்ணிய காலத்தை காண்பிக்கிறது.*
|
|
|
Post by kgopalan90 on Dec 17, 2020 14:23:04 GMT 5.5
20-12-2020. மார்கசீர்ஷ சஷ்டி திதி
சிவலிங்கம் தரிசனம் செய்ய வேண்டும் என்கிறது ஸ்ம்ருதி கெளஸ்துபம் பக்கம் 430.
மார்கசீர்ஷே (அ)மலே பக்ஷே சஷ்டியாம் வாரே (அ) ம்ஸு மாலின: சத தாரா கதே சந்த்ரே லிங்கம் ஸ்யாத் த்ருஷ்டி கோசரம்
மார்கசீர்ஷ மாத சுக்ல பக்ஷ சஷ்டி திதியன்று நூறு நக்ஷதிரங்கள் ஒன்றாக சேர்ந்ததால் சத தாரா என்ற பெயருடைய சதய நக்ஷத்திரத்தில் சிவாலயத்தில் முறையாக ப்ரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்க படும் சிவலிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டும்.
இதனால் குடும்பத்தில் முன்னோர் காலத்து நிகழ்ந்த சிவாபசார தோஷங்கள் நீங்கும். குடும்பத்திலுள்ளவர்களின் மனோ புத்தி தோஷங்கள் விலகும். மனநிம்மதி அறிவு திறன் வளரும்…
21-12-2020;- சூரிய வ்ருதம்.- மித்ர ஸப்தமி அல்லது நந்த ஸப்தமி..
மார்கசிர மாதம் சுக்ல பக்ஷ ஸப்தமி திதியில் தான் அதிதிக்கும் கச்யப மஹரிஷிக்கும் ஶ்ரீ ஸூர்யன் புத்ரனாக பிறந்தார்.
அதித்யாம் கச்யபாஜ் ஜக்ஞே மித்ரோ நாம திவாகர: ஸப்தம்யாம் தேந ஸாக்யாதா லோகேஸ்மின் மித்ர சப்தமி. ஸ்ம்ருதி கெளஸ்துபம்-பக்கம்-430.
பகல் முழுவதும் பூமிக்கு வெளிச்சம் கொடுப்பதால் திவாகரன் எனப்பெயர். அனைவருக்கும் நெருங்கிய நண்பனாவதால் மித்ரன் எனப்பெயர்.
இன்றைய தினம் பலவித புஷ்பங்களால் சூரியனை பூஜை செய்ய வேண்டும் சூரிய காயத்ரி, சூரிய நமஸ்காரம், ஆதித்ய ஹ்ருத்யம், கோளறு பதிகம். போன்ற ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்யலாம்.
“”நாநா குஸும ஸம்பாரைர் பக்ஷ்யை: பிஷ்டமயை: சுபை: மது நா ச ப்ரசஸ்தேந ---போஜயேத்….தீநாநாதாம்ஸ்ச மாநவான் என்பதாக ஸூர்யனின் ப்ரீதிக்காக மாவினால் நெய்யுடன் சேர்ந்து செய்யப்பட்ட பக்ஷணங்களை ஸூர்யனுக்கு தேனுடன் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு கொடுத்து சாப்பிட செய்து ஸந்தோஷிக்க செய்ய வேண்டும்.
இதனால் ஆரோக்கியம் பாஸ்கராதிச்சேத் என்பதாக தீராத அனைத்து நோய்களும் தீரும். ,ஆரோக்கியம், ஆயுஸும் ஏற்படும்.
|
|
|
Post by kgopalan90 on Dec 14, 2020 2:47:13 GMT 5.5
|
|
|
Post by kgopalan90 on Dec 14, 2020 2:02:53 GMT 5.5
*13/12/2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஒவ்வொரு தர்மமாக நாம் விரிவாக பார்த்துக்கொண்டு வருகின்ற வரிசையில் அதனுடைய சொரூபம் என்ன தர்மம் என்ன யார் யாரெல்லாம் அந்த தர்மங்களை கடைபிடிக்க வேண்டும் அதனால் நமக்கு ஏற்படக்கூடிய பலன்கள் என்ன என்பதைப் பற்றி ஷண்ணவதி தர்ப்பணம் முறைகளை விரிவாக பார்த்து தெரிந்து கொண்டோம்.*
*அதாவது ஷண்ணவதி தர்ப்பணம் என்றால் என்ன அது யாரை உத்தேசித்து செய்ய வேண்டும் யார் யாரெல்லாம் செய்ய வேண்டும். எந்த இடங்களில்/எந்த முறையில் இந்த ஷண்ணவதி தர்ப்பணங்களை செய்ய வேண்டும். இதனால் நமக்கு ஏற்படும் பலன்கள் என்ன? அதை முறையாக நம்மால் செய்ய முடியாவிடில் அதற்கான பரிகாரங்கள் என்ன என்பதையெல்லாம் விரிவாகப் பார்த்தோம்.*
*இப்பொழுது அடுத்ததாக ஒரு முக்கியமான தர்மத்தை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். இந்தக் கலியில் நமக்கு மிகவும் சுலபமாக பலனைக் கொடுக்கக் கூடிய ஒரு தர்மம்.*
*இப்போது நாம் பார்க்கக்கூடிய இந்த தர்மம் மிகவும் முக்கியமானது இப்படி ஒரு அனுஷ்டானம் வேதத்தில் இருக்கிறது என்பதை இந்த தலைமுறை நினைத்து மஹாபெரியவா மூலம் தெரியவந்தது. அந்த ஹோமம் தான் ஆவஹந்தி ஹோமம் என்று பெயர்.*
*இந்த ஆவஹந்தி ஹோமம் என்றால் என்ன இது எப்படி செய்ய வேண்டும் எங்கு சொல்லப்பட்டிருக்கிறது, அதில் சொல்லவேண்டிய மந்திரங்களின் பெருமைகள் என்ன. அதற்கு என்ன பலன் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.*
*இந்த நாளில் மிகவும் சுலபமாக இந்த ஹோமத்தை செய்து அதனால் நமக்கு வேண்டிய எல்லா பலன்களையும் அடைய முடியும் என்பதை நமக்கு காண்பித்தவர் மகாபெரியவா தான்.*
*இதற்கு முன்னர் அந்த ஹோமத்தின் உடைய பெருமை நமக்கு அவ்வளவாக தெரியவில்லை. இந்த நாட்களில் இந்த ஹோமத்தின் மூலம் சுலபமாக எல்லா பலன்களையும் அடைய முடியும் என்பதை என்பதை மகா பெரியவா காண்பித்திருக்கிறார். மிகவும் முக்கியமான ஹோமம்.*
*இந்த ஆவஹந்தி ஹோமத்தின் உடைய சொரூபத்தை தான் நாம் பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்னர் கொண்டு நாம் தெரிந்துகொள்ள வேண்டும் நம் வேதங்களில் உள்ள மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. ஒரு தடவை நாம் முறையாக சொன்னால் அவைகள் நல்ல பலனை நமக்கு அளிக்கக் கூடியவை. நம்முடைய சந்தியாவந்தனம் முதற்கொண்டு சொல்லப்பட்ட மந்திரங்கள் அனைத்துமே ஷௌத அனுஷ்டானங்களில் சொல்லப் பட்டவைதான். அதாவது அக்னி ஹோத்திரம் ஷ்டிகள் ஸோம யாகங்கள் செய்பவர்கள் அந்தக் கர்மாக்களில் உபயோகப்படுத்தக் கூடிய மந்திரங்கள் தான் வேதத்தில் உள்ள மந்திரங்களில் 99%. ஒரு சதவிகிதம்தான் அதிலேயே சொல்லப்படாத மந்திரங்கள்.*
*இப்பொழுது சந்தியாவந்தனத்தில் நாம் எடுத்துக் கொண்டால் முதலில் நாம் சொல்வது ப்ரோக்ஷணம் மந்திரம். ஆபோ சிஷ்டா என்று மந்திரம். அனைத்து சூத்திர சந்தியாவந்தன களிலும் வரக்கூடிய மந்திரம் இது.*
*ரிக் யஜுர் சாமம் அதர்வணம் சுக்ல யஜுர் வேதம் என்று எல்லாவற்றுக்கும் பொதுவான ப்ரோக்ஷண மந்திரம் இதுதான். ஆனால் இது எங்க சொல்லப்பட்டிருக்கிறது என்று பார்த்தால் சோமயாகம் செய்யக்கூடிய எஜமானன்சில தீக்ஷ்சைகள் எடுத்துக் கொள்கிறார். அதாவது சில கட்டுப்பாடுகள் விரதங்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். பத்து விதமான கட்டுப்பாடுகளை அவர் அந்த இடத்திலேயே எடுத்துக் கொள்கிறார்.*
*அந்த பத்து நியமங்களை எடுத்துக் கொண்ட பிறகு முதலில் வருவது வபனம் மற்றும் ஸ்னானம். ஸ்நானம் செய்த பிறகு முதலில் வரும் மந்திரம் இதுதான் ஆப்போ சிஷ்டா. அப்படிப்பட்ட அங்கு சொல்லக்கூடிய ஒரு மந்திரத்தை தான் மகரிஷிகள் நமக்கு சந்தியாவந்தனத்திலேயே அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.*
*இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்றால் அந்த மந்திரத்தை மூன்றாகப் பிரித்துச் சொல்வது. பத்தாக பிரித்துச் சொல்வது என்று இன்னொரு முறை. மூன்றாகப் பிரித்து சொல்வதினால் அந்த மந்திரத்தினுடைய பலன்களில் அர்த்தங்களில் வித்தியாசம் இருக்கிறது. அதேபோல் பத்தாக பிரித்து அந்த மந்திரத்தைச் சொல்லும் பொழுது அதிலிருந்து வரக்கூடிய பலன்கள் மற்றும் அர்த்தங்களில் வித்தியாசம் ஏற்படுகிறது.*
*சந்தியாவந்தனத்தில் மகரிஷிகள் முதல் மந்திரமாக நமக்கு இதை வகுத்துக் கொடுத்து இருக்கிறார்கள் ஆனால் யாகத்தில் இது உபயோகப்படுத்தக்கூடிய மந்திரம். நாம் செய்யக்கூடிய கர்மாக்களில் பார்த்தால் க்ஷௌத அனுஷ்டானங்களில் உள்ள மந்திரமாக தான் அனேகமாக இருக்கும்.*
*ஆனால் இந்த ஆவஹந்தி ஹோமத்தில் என்ன விசேஷம் என்றால், நிறைய விஷயங்கள் இருக்கிறது அதாவது, இந்த ஹோமம் செய்வதே தனி யாகத்தான் இருக்கும்.*
*பொதுவாக நாம் எந்த ஒரு ஹோமத்தை ஆரம்பித்து செய்தாலும் முதலிலேயே சங்கல்பம் செய்து கொண்டு, ஒரு கலசத்தில் அல்லது பிரிதிமை அல்லது ஒரு மண்டலத்தில் தேவதைகளை ஆவாகனம் செய்து, ஒரு குறிப்பிட்ட அளவு ஜெபம் செய்து பிறகு ஹோமம் ஆரம்பித்து செய்து, பிறகு கடைசியில் புனர் பூஜை செய்து யதாஸ்தானம் செய்து அபிஷேகம் செய்து கொண்டு முடிப்பது என்று செய்வோம். இப்படித்தான் அனேகமாக எல்லாரும் ஹோமங்களின் முறைகளும் இருக்கும். ஆனால் இந்த ஆவஹந்தி ஹோமம் எப்படி என்றால் அதிலும் விசேஷம் இருக்கிறது.*
*இந்த ஆவஹந்தி ஹோமம் செய்ய வேண்டிய முறைகளிலும் மந்திரங்களிலும் வித்தியாசம் இருக்கிறது. அந்த மந்திரங்கள் உன்னுடைய பலன்களிலும் வித்தியாசம் இருக்கிறது. அதைத்தான் நாம் விரிவாகப் பார்க்கப் போகிறோம். ஆவஹந்தி ஹோமம் செய்யும் முறையை பார்ப்பதற்கு முன்னர் வேதத்திலிருந்து, மந்திரங்களை நம்முடைய சாஸ்திரங்கள் அனேக விதமாக பிரித்து காண்பிக்கிறது. சில மந்திரங்கள் ஜெபத்திற்கு மட்டும் சொல்ல வேண்டியவைகள். சில மந்திரங்கள் ஒரு வஸ்துவை யோ அல்லது ஒரு தெய்வத்தையும் பார்த்து சொல்ல கூடியவைகள். சில மந்திரங்கள் காரியங்கள் செய்யும்போது சொல்லக்கூடிய மந்திரங்கள். சில மந்திரங்கள் ஹோமத்திற்கு மட்டும் சொல்லக் கூடியவைகள். இப்படி அநேக விதமாக நம்முடைய சாஸ்திரங்கள் மந்திரங்களைப் பிரித்து காண்பிக்கின்றன.*
*இந்த வழியிலே ஆவஹந்தி ஹோமம் ஆனது மந்திரங்களை வேதத்திலிருந்து எப்படி சொல்லப்பட்டிருக்கிறது அதை எப்படி உபயோகித்து இந்த ஹோமத்தை செய்ய வேண்டும் என்பதை அடுத்த அடுத்த உபன்யாசங்களில் பார்ப்போம்.*
|
|
|
Post by kgopalan90 on Dec 13, 2020 16:43:06 GMT 5.5
*07/12/2020 to 10/12/2020 No Broadcaste*
*11/12/2020*
*முசிறி அண்ணா நம்முடைய தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் நம்முடைய முன்னோர்களை உத்தேசித்து செய்யக்கூடிய தான ஷண்ணவதி தர்ப்பணம் முறையை விரிவாகப் பார்த்தோம். மேலும் சில புண்ணிய கால தர்ப்பணங்கள் விட்டுப் போயிருந்தால் அதற்கு என்ன பரிகாரம் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள இருக்கிறோம்.*
*இந்தப் பரிகாரங்கள் செய்ய வேண்டியதற்கான பலன் என்ன என்று பார்க்கும்போது, நாம் செய்யவேண்டிய கர்மாக்களில் நித்தியம் என்று சில சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது கட்டாயம் செய்தே தீர வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் விடக்கூடாது.*
*சந்தியாவந்தனம்/ஹௌபாசனம்/பிரம்மச்சாரிகளுக்கு சமிதாதானம்/தாயார் தகப்பனார்களுக்கு செய்யவேண்டிய சிராத்தம் இவைகள் நித்திய கர்மா என்று சொல்லப்பட்டிருக்கிறது எக் காரணத்தைக் கொண்டும் விடக்கூடாது.*
*இவைகள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நிர்பந்தம் காரணமாக விட்டு போனால், அதற்கு என்ன பரிகாரம் என்று பார்க்கின்ற பொழுது, மூன்று விதமாக மகரிஷிகள் பிரித்து நமக்கு காண்பிக்கின்றனர்.*
*அதாவது சில நித்திய கர்மாக்களை விட்டு விட்டோம் என்றால் அது விட்டதுதான். அதை திரும்பவும் நம்மால் திருப்ப முடியாது. சில நித்திய கர்மாக்களை விட்டு போனால் அவை அனைத்தையும் சேர்த்து செய்வதற்கு சில வழிகளை காண்பித்துள்ளனர். சில நித்திய கர்மாக்களை விட்டு போனால் எவ்வளவு காலம் விட்டுப்போனது அவ்வளவு காலங்களையும் திரும்ப செய்ய வேண்டும்.*
*இப்படி மூன்று விதமாக இருக்கிறது இதில் முதலில் சந்தியாவந்தனம் எடுத்துக் கொண்டோமேயானால், சந்தியாவந்தனம் ஒரு வருடம் 3 வருடம் ஐந்து வருடம் 10 வருடம் விட்டு போனால் அவை அனைத்திற்கும் சேர்த்து ஒரு சந்தியாவந்தனம் ஆகவோ, அல்லது அதற்கு மாற்று வழியாக ஒரு கர்மாவையோ, நமக்கு மகரிஷிகள் காண்பிக்கவில்லை. அப்போது என்ன செய்ய வேண்டும், எவ்வளவு சந்தியாவந்தனம் விட்டுப் போயிருக்கு என்று நமக்கு தெரிந்தால் ஒரு வேளைக்கு 10 சந்தியாவந்தனம் ஆக செய்துகொண்டு அதை முழுமையடையச் செய்ய வேண்டும். பத்துவருட காலம் சந்தியாவந்தனம் விட்டு போய்விட்டது என்றால் பத்து பத்து காயத்ரி ஆக செய்து அதை முடிக்க வேண்டும்.*
*அதேபோலதான் சிராத்தங்களும். நம் தாயார் தகப்பனாருக்கு செய்யவேண்டிய சிராத்தம் விட்டு போனால் எத்தனை காலம் ஆனாலும் அதைச் செய்தே தீர வேண்டும். அதற்கான மாற்று வழி கிடையாது. ஒரு பத்து வருடம் ஸ்ராத்தம் செய்யப்படவில்லை அல்லது முறையான வகையில் அது செய்யப்படவில்லை என்றால், முதலில் சமுத்திர ஸ்நானம் செய்து, அத்தனை சிராத்தங்களையும் செய்து கொண்டே வர வேண்டும். தினம் ஒன்றாக செய்ய வேண்டும் அதை எல்லாம் சேர்த்து செய்வது என்பது கிடையாது.*
ம் என்ன பலன் என்று பார்க்கும்பொழுது, சில பரிகாரங்கள் விட்டுப்போனதை பூர்த்தி செய்கின்றன. விட்டுப் போனது போனது தான் என்றில்லாமல், விட்டு போனதினால் வரக்கூடிய பாவத்தையும் போக்கி, நாம் செய்ததாக ஆக்குகிறது சில பரிகாரங்கள்.*
*இன்னும் சில பரிகாரங்கள் விட்டுப் போனால் விட்டுப் போனது தான். ஆனால் அடுத்ததை செய்வதற்கான அதிகாரத்தை சில பரிகாரங்கள் கொடுக்கிறது. இன்னும் சில கர்மாக்கள் விட்டு போனால் விட்டு போனதுதான் ஆனால் அன்றைக்கு செய்வதான அதிகாரத்தை நமக்கு கொடுக்கிறது.*
*இப்படி மூன்று விதமாக பரிகாரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இப்பொழுது ஹௌபாசனம், கல்யாணம் ஆன தினத்திலிருந்து ஆரம்பமாகிறது. தொடர்ந்தார் போல் ஒரு பத்து வருடம் விட்டுப் போய்விட்டது என்றால், அது விட்டது விட்டதுதான். அதற்கான பாவத்தை நாம் அனுபவித்துதான் ஆகவேண்டும். ஆனால் நாம் ஒரு தாம்பாளத்தில் அரிசியை வைத்து ஹோம திரவிய தானம் என்று நாம் செய்கிறோம். ஸ்வர்ண தானிய ஆஜ்ய கிர்சரம் என்று நாம் செய்கிறோம்.*
*நான்கு வேளைக்கு மேல் ஒருவன் ஹௌபாசனம் செய்யாமல் இருந்தால், நான்கு விதமான தானங்களை அவன் செய்ய வேண்டும். தானியம் ஸ்வர்ணம் நெய் மற்றும் கிரிச்சரம் இந்த நான்கையும் அவன் செய்தால்தான், அவன் அடுத்த வேளை ஹௌபாசனம் செய்ய முடியும். இப்படி பரிகாரம் சொல்லப்பட்டிருக்கிறது.*
*இதற்கு என்ன பலன் என்றால், விட்டுப்போன பாவம் விட்டுப் போனது தான் ஆனால் அன்றைக்கு செய்ய வேண்டிய கர்மாவிற்கு அதிகாரத்தை கொடுக்கிறது. இதைத்தான் நாம் நம்முடைய சிராத்த தினத்தன்று அக்னி சந்தானம் ஹௌபாசனம் செய்கிறோம். அந்த தானத்தை செய்தால் அன்றைக்கு செய்ய வேண்டிய சிராத்தத்தை செய்ய அதிகாரம் நமக்கு கிடைக்கிறது.*
*ரொம்ப காலம் விட்டு போய் விட்டது என்றால் சிராத்தம் முடிந்த உடனேயே அந்த அக்னியை நிறுத்திக் கொள்ள வேண்டியதுதான். தொடர்ந்து செய்து கொண்டு வரக்கூடாது. இப்படி அன்றைய தினத்தில் செய்ய வேண்டியதற்கான அதிகாரத்தை கொடுக்கிறது சில பரிகாரங்கள்.*
*இன்னும் சில பரிகாரங்கள் மேற்கொண்டு செய்வதற்கான அதிகாரத்தை நமக்கு கொடுக்கிறது. இப்படி மூன்று விதமான பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது அதிலே இந்த சண்ணவதி தர்ப்பணம் செய்யாது விட்டு போனால் அதற்கான பரிகாரங்கள், மற்றும் அதற்கு என்ன பலன் என்றால், சில மந்திர ஜபங்கள் விட்டதை செய்வதாக ஆக்குகிறது. சிலவை விட்டது விட்டதுதான்.*
*சிலவைகள் அடுத்த புண்ணிய கால தர்ப்பணம் செய்வதற்கான அதிகாரத்தை நமக்கு கொடுக்கிறது. முதலில் தர்ச ஸ்ராத்தம் விட்டு போனால், அம்மாவாசையன்று செய்ய வேண்டிய தர்ப்பணம் விட்டு போனால் அதற்கான பரிகாரத்தை நாம் பார்த்தோம். நியூக்ஷூசாசம் என்று ஒரு மந்திரத்தை நூறு முறை ஜெபிக்க வேண்டும் என்று பார்த்தோம்.*
*அதற்கு என்ன பலன் என்றால், அந்த மந்திரத்தை ஜெபித்து பிறகு விட்டது செய்ததாகவே ஆகிறது என்று சொல்லப்பட்டது. என்ன காரணத்தினால் இந்த பரிகாரம் விட்டுப்போனது என்றால் அதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது.*
*ஒரு தீட்டு காலத்தில் 10 நாள் அல்லது மூன்று நாள் வருகிற பொழுது அந்த சமயத்திலே அமாவாசை வந்துவிட்டால், அப்படி விட்டுப் போனால் அதற்கு தோஷம் கிடையாது. அந்த தீட்டை நாம் காப்பதினால் இந்த அமாவாசை சிராத்தம் நாம் செய்ததாக ஆகிறது என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது. அதனால் விட்டுப்போன கணக்கிலேயே வராது.*
*அதேபோல, நாம் தாயார் தகப்பனார் களுக்கு செய்கின்ற சிராத்தம் அந்த நாளில் அமாவாசை சிராத்தம் வந்தால், அதுவும் விட்டு போனதாக ஆகாது. செய்ததாகவே கருதப்படும். ஒரு பிரயாணத்தில் நாம் இருக்கிறோம் அல்லது பஞ்சாங்கம் பார்க்காமல் விட்டு விட்டோம் என்றால் அந்த நேரத்தில் தான் இந்த பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது.*
*இப்படி ஒவ்வொரு புண்ணிய காலத்திற்கும் பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன அது என்ன என்பதை மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
|
|
|
Post by kgopalan90 on Dec 13, 2020 16:31:05 GMT 5.5
10 days theetu for you. if you are a married man. If you are a bachlor no theetu. If your father is alive he has to do kizhi tharpanam on tenth day. if you are a married man and if your father is not alive you have to do kuzhi tharpanam on tenth day. you can do upanayanam this year after 15th april .
|
|
|
Post by kgopalan90 on Dec 13, 2020 16:19:41 GMT 5.5
12/12/2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஷண்ணவதி தர்ப்பணம் நாம் ஏதாவது ஒன்றை செய்ய முடியாது போனால் அதற்கான பரிகாரமாக மந்திர ஜெபங்கள் செய்வதைப் பற்றி மேலும் தொடர்கிறார்.*
*அமாவாசை அன்று செய்ய வேண்டிய தர்ப்பணம் விட்டுப் போனால் அதற்காக ஜெபிக்க வேண்டிய மந்திரங்களை பார்த்தோம்.*
*அடுத்ததாக யுகாதி புண்ணிய காலத்தை பார்ப்போம். வருடத்தில் நான்கு முறை வரக்கூடிய இந்த புண்ணிய காலத்தில் நாம் செய்யாமல் விட்டு விட்டால், ரிக் வேதத்தில் ஒரு மந்திரம் இருக்கிறது நயசத்தியாவா என்று, அதை நூறு தடவை நாம் ஜெபிக்க வேண்டும் அப்படி செய்தால் இந்த யுகாதி விட்டு போனதாக ஆகாது என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.*
*அடுத்ததாக மன்வாதி புண்ய காலம். இதை நாம் செய்யத் தவறி விட்டோமே ஆனால், தும்புவஹா என்று ஒரு மந்திரம் ரிக் வேதத்தில் இருக்கிறது.
சமுத்திர ஸ்நானம் செய்துவிட்டு அந்த இடத்திலேயே நின்று கொண்டு நூறு தடவை இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். அப்படி செய்தால் அந்த மன்வாதி புண்ய காலம் செய்ததாக ஆகிறது என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது. இதே மந்திரம் தான் திஸ்ரோஷ்டகாவை விட்டுவிட்டாலும் செய்ய வேண்டும். மார்கழி தை மாசி பங்குனி இந்த நான்கு மாதங்களில் வரும் சப்தமி அஷ்டமி நவமியில் செய்ய வேண்டியது.*
*இது மிகவும் முக்கியம் திஸ்ரோஷ்டஹாவை பற்றி சொல்லும் பொழுது, தாயார் தகப்பனார்களுக்கு கர்மா செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு வருடத்தில் வேறு எந்த சிராத்தமும் நாம் செய்யக்கூடாது. இந்த ஷண்ணவதியும் நாம் தர்ப்பணம் ஆகத்தான் செய்ய வேண்டும் ஷகிரன் மாஹாளயம் கூட அந்த வருடம் கிடையாது. ஆனால் இந்த திஸ்ரோஷ்டஹா புண்ணிய காலம் மட்டும் அவசியம் செய்ய வேண்டும் விட்டே போகாது. அவசியம் செய்ய வேண்டும். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தும்புவஹா மந்திரம் தான் திஸ்ரோஷ்டகாவை விட்டுவிட்டாலும் சமுத்திர ஸ்நானம் செய்துவிட்டு அந்த ஜலத்திலே நின்றுகொண்டு 100 தடவை ஜபிக்க வேண்டும்.*
*அதேபோல மாஹாளயம் விட்டு போய்விட்டால், ஷகிரன் மாஹாளய சிராத்தம் விட்டு போய்விட்டால் அதற்கான துரோஅஸ்வஸ்யா என்று ஒரு ரிங் மந்திரம் இருக்கிறது ரிக் வேதத்தில். அந்த மந்திரத்தை தினமும் பத்து தடவை இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து ஜெபித்து கொண்டு வரவேண்டும். அப்படி செய்தோமே ஆனால் அந்த வருடம் நாம் செய்ய வேண்டிய ஷகிரன் மாஹாளயம்*
*சிராத்தம் செய்யாததினால் வரக்கூடிய பாவம் போகிறது, பித்ரு சாபம் வராமல் இருக்கும்.*
*மஹாளய பக்ஷத்தில் இரண்டு விதமாக நாம் செய்கிறோம். ஒன்று பக்ஷ மஹாளயம் 16 நாட்களுக்கு தர்ப்பணமாக செய்வது, மற்றொன்று ஷகிரன் மஹாளயம். இந்த ஷகிரன் மஹாளயம் விட்டுப் போனால் இந்த மந்திரம் ஜெபிக்க வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.*
*இந்த மாதிரியான ரிங் மந்திரங்கள் ரிக் வேதத்தில் இருப்பதினால் நாம் ரிக் வேதம் தெரிந்தவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி நமக்கு செய்ய முடியவில்லை என்றால் சமுத்திர ஸ்நானம் தான் செய்ய வேண்டும். அதே புண்ணியகாலம் திரும்பவும் வருவதற்குள் நாம் மகா சங்கல்பம் என்று ஒன்று செய்து கொண்டு சமுத்திர ஸ்நானம் செய்ய வேண்டும்.*
*அப்படி நாம் இந்த மகா சங்கல்பத்தை செய்யாவிடில் அடுத்த அதே புண்ணியகாலம் செய்வதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. அப்படி செய்யாவிடில் அது ஒரு குறைபாடாகவே இருக்கும். அதாவது நமக்கு ஒரு கால் இல்லை என்றால் எப்படி இருக்கும் அதே போல். அதாவது ஊனமாக இருக்கும்.*
*அதனால் நாம் மகா சங்கல்பம் செய்து கொண்டு அதற்கான பரிகாரங்களை செய்து விட்டு நாம் மேற்கொண்டு கர்மாக்களைச் செய்ய வேண்டும்.*
*மூன்று புண்ணிய காலங்களுக்கு இந்த ரிங் மந்திரங்கள் பரிகாரமாக சொல்லப்படவில்லை. அதாவது சங்கரமணம் (மாதப்பிறப்பு) வைதிருதி வ்தீபாதம். பராசர ஸ்மிருதி லே இதற்குப் பரிகாரமாக சஹஸ்ர காயத்ரி சொல்லப்பட்டிருக்கிறது. 1008 காயத்ரி மந்திரத்தை கண்டிப்பாக நாம் செய்ய வேண்டும் இந்த மூன்று புண்ணிய காலங்களும் விட்டு போனால். அதனால் இந்த ஷண்ணவதி தர்ப்பணங்கள் மிக மிக முக்கியம் கட்டாயம் செய்ய வேண்டும்.*
*இவ்வளவு நாட்களாக செய்யவில்லையே என்றால் அதனால் தப்பில்லை, 1, 2 தர்ப்பணம் ஆக பழக்கத்திற்கு கொண்டுவந்துவிடலாம் 15 நிமிட நேரம் தான் அந்த தர்ப்பணம். இவைகளை எல்லாம் விடாமல் நாம் செய்து வந்தோமே ஆனால் பித்ரு சாபங்கள் வராது. தில ஹோமம் எல்லாம் செய்ய வேண்டிய அவசியம் வராது. க்ஷேத்திரங்களுக்கு எல்லாம் போய் நாம் செய்யவேண்டிய கர்மாக்கள் நிர்பந்தங்கள் எல்லாம் வராது. இப்படி சுலபமாக தான் நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.*
*மகரிஷிகளும் சுலபமாகத் தான் இந்த பரிகாரங்களை நமக்கு சொல்லி இருக்கிறார்கள். இந்த ஷண்ணவதி அனைத்தையும் சிராத்தம் ஆகத்தான் செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தால், எவ்வளவு சிரமம் நமக்கு. அப்படி இல்லாமல் தர்ப்பணம் ஆக செய்யலாம் என்று வகுத்துக் கொடுத்து இருக்கிறார்கள் மிகப் பெரிய உபகாரம்.*
*இந்த ஷண்ணவதியை அவசியம் தர்ப்பணமாக செய்ய வேண்டும். சிராத்தமாக இருக்கின்றன பிரயோகம் தெரிந்து கொள்ள வேண்டும். அது எல்லாம் நாம் தெரிந்து கொண்டு எழுதி வைத்துக்கொண்டு குறித்துக்கொண்டு தான் ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஆரம்பித்து 1, 2, செய்துவிட்டு பிறகு விட்டுவிடுவது என்பது கூடாது. இப்படி மெதுவாக நாம் தர்ப்பணம் ஆக செய்ய 1, 2 ஆரம்பித்து பிறகு இந்த 96 ஆராயும் நாம் செய்வதற்கு பிதுருக்கள் நமக்கு ஆசிர்வதிப்பார்கள். மிகவும் முக்கியமானதாக மனதில் நினைத்து செய்ய வேண்டும். மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
|
|
|
Post by kgopalan90 on Dec 9, 2020 4:20:48 GMT 5.5
23-11-2020 To 04-12-2020 No Broadcaste*
*05-12-2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஷண்ணவதி தர்ப்பணம் என்கின்ற தலைப்பில் மேலும் தொடர்கிறார்.*
*96 தர்ப்பணங்களை ஒரு வருடத்தில் நாம் நம்முடைய பித்ருக்களை உத்தேசித்து கட்டாயம் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நித்தியம். அதாவது அவசியம் செய்ய வேண்டும் என்று பொருள்.*
*தர்ம சாஸ்திரத்தில் எதெல்லாம் நித்தியம் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அவைகளை நாம் கட்டாயம் செய்யவேண்டும் செய்யாமல் இருத்தல் கூடாது.*
*அப்படி நாம் செய்யாமல் இருந்துவிட்டால் அன்று அப்போ ஜனம் அதாவது அன்று போஜனம் செய்யாமல் இருக்கவேண்டும் சாப்பிடாமல். ஏனென்றால் அந்த அளவுக்கு இந்த ஷண்ணவதி தர்ப்பணம் முக்கியமாக சொல்லப்பட்டிருக்கிறது. சம்பிரதாயம் பழக்கத்தில் செய்வதில்லை என்று நாம்தான் சொல்லுகிறோமே ஒழிய, தர்ம சாஸ்திரத்தில் அப்படி சொல்லவில்லை நம்முடைய ரெஃபரன்ஸ் தர்மசாஸ்திரம் தான்.*
*தர்ம சாஸ்திரத்தில் ஒரு விஷயம் நித்தியம் என்று சொல்லப்பட்டு இருந்தால் அதை மீறுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. உலகத்தில் இல்லை அல்லது வேறு காரணங்களை சொல்லி நாம் தப்பிப்பதற்கான வழியே தவிர அதில் சொல்லியுள்ளபடி நாம் அப்படியே செய்யவேண்டும்.*
*அப்படி நாம் விட்டுவிட்டோமே ஆனால் அதற்கான பாவங்கள் நம்மை வந்து சேரும். பராசர மகரிஷி சொல்லும்பொழுது, புண்ணியம் பாவம் இவை இரண்டும் நாம் அனுபவித்தே ஆக வேண்டும் சுகத்தையும் துக்கத்தையும். இப்பொழுது நாம் லௌகீகமாக ஒரு கடன் வாங்கி இருக்கிறோம் அதை திருப்பி செலுத்த முடியவில்லை என்றால் வேறு ஏதாவது அதற்கு மாற்று வழியில் நாம் அடைப்பதற்கு முயற்சிக்கலாம் கொடுக்கலாம்.*
*ஆனால் இந்த புண்ணிய பாபங்கள் இருக்கிறதே கோடி ஜென்மங்கள் எடுத்தாலும், அதை அனுபவித்தே ஆக வேண்டும் அதில் இருந்து தப்ப முடியாது. வேறு எந்த வழியிலும் இந்த பாவங்களை நாம் போக்க முடியாது. இந்த பூமியின் உள்ளே என்னென்ன தானியங்கள் விதைகள் கிடைக்கிறது என்று நமக்குத் தெரியாது. அது எப்படி வெளியில் வரும் என்றால் மழை ஒரேயடியாக பொழிந்து அவைகள் பரிபக்குவம் ஆகி வெளியே வரும். யார் அங்கே விதைகளை போட்டார்கள் என்று நமக்குத் தெரியாது. என்றோ அங்கு விழுந்த விதைகள் காத்துக்கொண்டிருக்கும் மழை பொழிவதற்காக.*
*அதே போல் தான் நாம் செய்யக்கூடியது தான பாபங்கள் அந்த ஆத்மாவின் மனசில் ஒட்டிக் கொண்டே வரும். நமக்கு ஒரு சிறிய சிரமம் வரும்பொழுது அத்தனை பாவங்களும் சேர்ந்து ஆரம்பித்துவிடும். ஆகைனால் ஏதோ மாற்று வழிகள் இருக்கின்றது என்று நினைத்து அதை எல்லாம் நாம் சரிசெய்ய முடியாது.*
*தர்ம சாஸ்திரத்தில் எதையெல்லாம் கட்டாயம் என்று சொல்லப்பட்டிருக்கிறது அவைகளை நாம் செய்துதான் ஆகவேண்டும் பழக்கத்தில் இல்லை சம்பிரதாயத்தில் இல்லை நம் வீடுகளில் அதை இப்போது வேண்டாம் என்று சொல்கிறார்கள், அது எல்லாம் பிரமாணமாக ஆகாது. அடிப்படையாக தர்மசாஸ்திரம் தான் நமக்கு பிரமாணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.*
*மேலும் நாம் விட்டதினால் வரக்கூடிய பாபங்களை கஷ்டங்களை நாம் தான் அனுபவிக்க வேண்டுமே தவிர நம்மை சுற்றியுள்ளவர்களும் நமக்கு ஆலோசனை சொன்னவர்களும் அனுபவிக்க மாட்டார்கள்.*
*அதாவது பாவம் என்றால் இங்கே செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டது ஒரு பாவமாக அனுஷ்டானங்களை விட்டது. அந்தப் பாவங்கள் எப்போது வேலை செய்யும் என்றால் யுகம் வாரியாக அது மாறுபடுகிறது.*
*கிருதயுகத்தில் ஏ உடனேயே அது வேலை செய்ய ஆரம்பித்து விடும். திரேதா யுகத்திலே பத்து நாட்களில் அது வேலை செய்யும். துவாபர யுகத்திலே ஒரு மாதம் கழித்து அது நம்முடைய அனுபவத்திற்கு வரும். ஆனால் கலியிலே ஒரு வருட காலம் எடுத்துக்கொள்ளும் ஏனென்றால் அதற்கான பரிகாரம் ஏதாவது அந்த வருடத்தில் செய்கிறானா என்று கலிபுருஷன் நமக்கு அவகாசம் கொடுக்கிறார். ஆகையினாலே தர்ம சாஸ்திரத்தில் இந்த பித்ரு காரியங்களை கட்டாயம் நாம் செய்ய வேண்டும் என்பதை இந்த ஷண்ணவதி தர்ப்பணங்களிலே காண்பித்திருக்கிறார்கள்.*
*அமாவாஸ்யா மன்வாதி யுகாதி சங்கரமனம் வைதிருதி வ்தீபாதம் மஹாளயம் திஸ்ரோஷ்டகாஹா என்று இவைகள் தான் 96 தர்ப்பணங்கள். இவைகளை முன்னரே நாம் பார்த்தோம் இவைகளை அவசியம் நாம் செய்ய வேண்டும். ஒரு 15 நிமிட காரியம்தான் நம்முடைய முன்னோர்கள் இதையெல்லாம் செய்து தான் சௌகரியமாக இருந்தார்கள். அவர்கள் எந்தப் பெரிய மருத்துவமனைக்கு சென்றார்கள் அல்லது எந்த சுகத்தை அனுபவிக்க எதைத் தேடி சென்றார்கள்? கிராமத்திலேயே தான் அவர்கள் வசித்தார்கள். மிகப்பெரிய வசதிகள் இல்லாவிட்டாலும் கூட தர்ப்பணங்களை விடாமல் செய்து வந்தார்கள்.*
*ஒரு குடும்பத்தில் நான்கு காரியங்களில் முக்கியமாக வைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த பிதுரு காரியங்களை விடக்கூடாது என்று முயற்சி செய்து செய்து கொண்டிருந்தார்கள்.*
*சிராத்தங்களை முதல் நாளில் இருந்து ஆரம்பித்து செய்வது, தர்ப்பணங்களை விடாமல் செய்வது. மேலும் கிராமங்களை விட்டு வெளியில் போகக்கூடாது என்று முக்கியமாக வைத்துக் கொண்டிருந்தார்கள். வெளியூர்களில் வேறு வசதிகள் இருக்கிறது என்று போக மாட்டார்கள் இங்கு என்ன சௌரியம் இருக்கோ அதை வைத்துக்கொண்டு கிராமத்திலேயே வாழ்ந்தார்கள்.
இயற்கையான சூழலில் கிராமத்தில் அமைத்துக் கொண்டார்கள். மேலும் கிராம காரியங்களை எதுவும் விட்டுக்கொடுக்காமல் செய்துகொண்டிருந்தார்கள். ராதா கல்யாணம் சீதா கல்யாணங்கள் கிராமங்களில் நடக்கும். திருமணங்கள் நடக்கும் போது அனைவரும் சென்று ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு விட்டுக்கொடுக்காமல் செய்து கொண்டிருந்தனர். மேலும் குலதெய்வத்தினுடைய பிரார்த்தனைகளை விடாமல் செய்து வந்தார்கள். வருடத்திற்கு இரண்டு தடவையாவது குலதெய்வத்தை சென்று பார்ப்பது அந்த காரியங்களை விடாமல் செய்வது என்று வைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த நான்கு காரியங்களை வைத்துக்கொண்டு சௌக்கியமாக இருந்தார்கள் நம் முன்னோர்கள்.*
*இந்த நாட்களில் இந்த நான்குமே நாம் விட்டுவிட்டோம். பித்ரு காரியங்களை நாம் குறைத்து விட்டதால் இந்த நாட்களில் இவ்வளவு சிரமங்களை நாம் அனுபவிக்க நேரிடுகிறது. ஆகையினாலே இவைகளை விடக்கூடாது இதற்கான பிராயச்சித்தங்கள் என்ன சொல்லியிருக்கிறது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.*
|
|