|
Post by kgopalan90 on Feb 12, 2021 23:39:31 GMT 5.5
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் கர்ப்பாதானம் முதல் 40 ஸம்ஸ்காரங்கள் ஒவ்வொன்றாக விரிவாக பார்க்க இருக்கிறோம்*
*சம்ஸ்காரங்கள் என்பது மிக மிக அவசியம் நாம் கட்டாயம் செய்துக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் கூட முடிந்தால் செய்யலாம் முடியாவிடில் தவறில்லை. ஆனால் சரியான காலத்தில் இந்த சம்ஸ்காரங்கள் செய்யப்பட வேண்டும் அப்படி செய்தாலே, நாம் அதிகப்படியாக எதுவுமே செய்ய வேண்டி வராது. வேதம் நமக்கு அப்படி அமைத்துக் கொடுக்கிறது.*
*இதன் அடிப்படையிலேதான் மனுஸ்மிருதியில் மனு இதனுடைய தேவையை பல இடங்களில் காண்பிக்கிறார். நீ பிறக்கும்போது தனியாகத்தான் பிறந்தாய் உன்னுடைய கடைசி காலமும் தனியாகத்தான் போகும் என்று மனு காண்பிக்கிறார். உனக்கு எது கூடவே இருக்கும் என்றால் நீ செய்த தர்மம். அதாவது நீ செய்யக் கூடிய கடமையிலிருந்து அதாவது சம்ஸ்காரங்களில் இருந்து வரக்கூடிய பலன் தான்.*
*மேலும் உன்னுடைய கடைசி காலத்தில் கஷ்டப்பட கூடாது என்பதற்காகத்தான் வேதம் இந்த ஸம்ஸ்காரங்களை அமைத்துக் கொடுக்கிறது. அதனால் இந்த சமஸ்காரங்கள் எல்லாம் சரியாக நடக்க வேண்டும். சொந்தங்கள் நிறைந்திருக்கிறது வேலை செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் வீடு இருக்கிறது என்றெல்லாம் நீ நினைக்காதே, அவைகள் எல்லாம் உன் கூட வராது தர்மம் தான் உனக்கு துணை புரியும். அதனால் நீ எவ்வளவு தர்மம் செய்து இருக்கிறாயோ அதற்கு தகுந்தார்போல் தான் கடைசியில் அமையும்.*
*ஏதோ வாழ்க்கையில் ஒன்றை பெரியதாக செய்துவிட்டு நான் எல்லாம் செய்துவிட்டேன் என்று சொல்லக்கூடாது. சிறிது சிறிதாக உன்னுடைய கடமையை நீ செய்திருக்க வேண்டும். சகாயத்திற்கு ஆக கொஞ்சம் கொஞ்சமாக சிறிது சிறிதாக உன்னுடைய கடமைகளைச் செய்து கொண்டு வரவேண்டும்.*
*தர்மம் என்கின்ற ஒரு சகாயத்தினால் தான் தாண்ட முடியாத நரகங்களை கூட நீ தாண்டி விடலாம். அந்த அளவுக்கு உனக்கு தகுதி இருக்கிறது. அதனால்தான் நீ என் தூக்கத்தை எல்லாம் தாண்டி செல்கிறாய் என்பதை தெரிந்து கொள். தர்மத்தை அனுஷ்டிக்கின்றவனும் தர்மத்தினால் தன்னுடைய பாவத்தைப் போக்கிக் கொள்பவனும் எப்போதும் அவனுக்கு மரணம் என்பது தெரியவே தெரியாது அவனுடைய வாழ்க்கையில். அப்படி பிரம்ம ரூபமாக பரமேஸ்வரனை ஆராதிக்கின்றான் இந்த சம்ஸ்காரங்களின் மூலமாக.*
*அதனால் பரமேச்வரனுடைய அனுகிரகத்தாலும் நீ செய்யக்கூடிய இந்த தர்மத்தினாலும் உயர்ந்த ஒரு உலகம் உனக்கு கிடைக்கும் அதனால் சுருதிகள் என்று சொல்லக்கூடிய வேதமும் ஸ்மிருதிகள் என்று சொல்லக்கூடிய தர்ம சாஸ்திரமும் எது உனக்கு உயர்ந்தது என்று காட்டுகிறதோ அதை நீ செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.*
*அவரவர்களுடைய கர்மாக்களின் மூலம்தான் அவரவர்களுக்கு சரீரம் கிடைக்கின்றது அந்த சரீரம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அந்த சம்ஸ்காரங்கள் செய்யப்படவேண்டும். அவனுடைய எண்ணம்/சுற்று/நட்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், இந்த சமஸ்காரங்கள் செய்யப்பட வேண்டும். அவனுடைய கடைசி காலம் அனாயாசமாக இருக்க வேண்டும் என்றால் ஒரு மருத்துவமனையில் சேர்ந்து கஷ்டபட்டு துக்கப்பட்டு இல்லாமல், வேண்டுமானால் இந்த சமஸ்காரங்கள் செய்யப்பட வேண்டும்.*
*மேலும் மறுபிறவியும் ஆரோக்கியமாக கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் ஸம்ஸ்காரங்கள் சரியாக செய்ய வேண்டும். இப்படி இந்த அளவுக்கு மனு முக்கியத்துவத்தை காண்பிக்கிறார். அப்படி இல்லை என்றால் நீ மிருகங்களைப் போல் அதாவது பிராணிகளைப் போல் உன் ஜென்மா ஆகிவிடும். இவைகளுக்கெல்லாம் உதாரணங்கள் புராணங்களில் நிறைய சொல்லப் படுகிறது. இது விஷயமாக கருடபுராணத்தில் தர்ம விபாஹா அத்தியாயம் என்று சொல்லப்பட்டுள்ளது.*
*இது அனேகமாக அனைத்து புராணங்களிலும் இருக்கின்றது. ஒரே இடத்திலேயே சொல்லாமல் பதினெட்டு புராணங்களிலும் விரிவாக விளக்கி சொல்லியிருக்கிறார் வியாசர். கொஞ்சம் கொஞ்சமாக நாம் படித்தால் தான் நம்முடைய மனதில் பதியும் என்பதினால் அனைத்து புராணங்களிலும் இதை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.*
*அதுபோல ஒவ்வொருவருக்கும் ஒரு பெயரையும் அந்த புராணமே காண்பிக்கிறது. ஒருவன் சம்ஸ்காரம் எதுவும் செய்து கொள்ளவில்லை அல்லது முடிந்ததை செய்கிறான் என்றால் அவனுக்கு கடஹா என்று பெயர் இதை கருடபுராணம் சொல்கிறது. கடஹா என்றால் அதற்கு உதாரணம் கருடபுராணம் காண்பிக்கிறது.*
*நண்டு இருக்கிறது அதனுடைய ஜீவிதம் அதாவது வாழ்க்கையை பார்த்தால் அது தனக்காகவே வாழும் அனைவரோடும் சேர்ந்து வாழாது, எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழாது. இஷ்டப்பட்ட இடத்திற்கு செல்லும் கடைசியில் தானாகவே வினையை தேடிக் கொண்டு மாண்டு போகும். அதாவது ஆடி மாதத்தில் வரப்பில் தண்ணி ஓடும், அதனால் வரப்பின் இரண்டு ஓரமும் ஈரமாக இருக்கும் அப்போது இந்த நண்டு குட்டியாக இருக்கும் போதே தாயாரை விட்டு பிரிந்து வந்துவிடும். பின்பு அது மிருதுவாக உள்ள அந்த ஈர மண்ணிலே ஒரு துளை போடும் பின் அதன் உள்ளே சென்றுவிடும். பின்பு அந்த துளையின் உள்ளே ஒரு பெரிய இடத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வாசலை சின்னதாக அடைத்துவிடும். ஏனென்றால் வேறு ஒரு நண்டு உள்ளே வரக்கூடாது என்பதற்காக. சின்ன குட்டியாக இருக்கும்போது ஒரு இன்ச் அளவுதான் இருக்கும் அந்த அளவுக்கு வைத்துவிடும். அந்த துளையின் வழியாக தண்ணீரானது வந்து போய்க்கொண்டு சுத்தமாகவே இருக்கும்.*
*அந்தத் தண்ணீரின் மூலமாக வரக்கூடிய புழுக்கள் பூச்சிகளை சாப்பிட்டுக் கொண்டு வளர்ந்து கொண்டே வரும், இப்படி ஒரு ஆறு மாத காலம் அந்த கூட்டின் உள்ளே வாழும். அறுவடை காலம் வரும்பொழுது அந்த வரப்பு எல்லாவற்றையும் அடைத்து விடுவார்கள். அப்போது அந்த மண் எல்லாம் நன்றாக காய்ந்து விடும். அப்பொழுதும் அந்த துறையின் உள்ளே தண்ணீர் இருக்கும் அதை வைத்துக்கொண்டு ஜீவனம் நடத்திக் கொண்டு வரும்.*
*கோடை காலம் வந்தவுடன் நன்றாக காய்ந்து போய்விடும் அந்த வாசலும் அடைந்துவிடும். பிறகு அதிலிருந்து வெளியே வர முயற்சி செய்யும் பொழுது அதனுடைய உடலளவு பெருத்து விடும். அப்பொழுது அந்த வாசலை இடிக்க முயற்சி செய்யும் ஆனால் முடியாது ஏனென்றால் ஆரம்பத்திலேயே நன்றாக கட்டி விடும். அதனால் அதனுள்ளேயே பசி தாகத்தினால் இருந்து இறந்து போய்விடும். அப்படி யார் ஒருவன் இந்த சமஸ்காரங்கள் எல்லாம் சரிவர செய்து கொள்ளாமல் தன் இஷ்டப்படி வாழ்கின்றானோ அவனுக்கு கடஹா என்று பெயர் சூட்டுகிறது கருடபுராணம்.*
*ஏன் இப்படி சொல்லி இருக்கிறது என்றால் நாம் இந்த அளவுக்கு வாழக் கூடாது என்பதற்காகத்தான், மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
|
|
|
Post by kgopalan90 on Feb 9, 2021 11:37:22 GMT 5.5
ஶ்யாமளா நவராத்திரி. 12-02-2021 முதல் 21-02-2021 வரை சியாமளா நவராத்திரி. லலிதா ஸஹஸ்ரநாமம் , கட்கமாலா, தேவி ஸ்தோத்ரங்கள். தேவி பாகவதம், தேவி மஹாத்மியம் படிக்கலாம்.
|
|
|
Post by kgopalan90 on Feb 9, 2021 11:33:06 GMT 5.5
மாக ஸ்நானம்.12-2-2021 முதல் 13-3-2021 முடிய.
பௌர்ணமியன்று மகா நக்ஷத்ரம் சேர்ந்தால் அந்த மாதத்திற்கு மாக மாதம் எனப்பெயர்.
தை மாதம் சுக்ல பக்ஷ ப்ரதமை முதல் மாசிமாதம் அமாவாஸை வரையுள்ள நாட்களே மாக மாதமாகும்.
இந்த மாதத்தில் ஒவ்வெரு நாளும் ஸூரியன் உதயமாவதற்கு சிறிது முன்பாக அருகிலுள்ள நதி, குளம்,
ஏரி அல்லது கிணற்றிலாவது முறைபடி ஸங்கல்பம் செய்து ஸ்னானம் செய்யவேண்டும்.
ஸங்கல்பம்:–
ममोपात्थ समस्त …………….श्री परमेश्वर प्रीत्यर्थं…………नक्षत्रे …………राशौ
—————–जातस्य मम समस्त दुरित क्षयार्थं मकरस्थे रवौ माघमास पुण्यकाले अस्मिन् शुभोदके माघस्नानमहं करिष्ये
மமோபாத்த =++++++ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம் ++++++
நக்ஷத்ரே==== ராசெள+++++++ஜாதஸ்ய (ஜாதாயாஹா) மம ஸமஸ்த துரித க்ஷயார்த்தம்
மகரஸ்தே ரவெள மாக மாஸ புண்யகாலே அஸ்மின் ஸுபோதகே மாக ஸ்நானம் அஹம் கரிஷ்யே.
என்று சொல்லி கிழக்கு நோக்கி கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி மெளனமாக ஸ்நானம் செய்ய வேண்டும்.
माघ मासे रटन्त्यापः किञ्चिदभ्युदिते रवौ । ब्रह्मघ्नं वा सुरापं वा कं पतन्तं पुनीमहे ।।
मकरस्थे रवौ माघे गोविन्दाच्युत माधव । स्नानेन अनेन मे देव यथोक्त फलदो भव ।।
कृष्णाच्युत निमज्जामि प्रभाते अस्मिन् शुभोदके । अनेन माघ स्नानेन सुप्रीतो मां समुद्धर ।।
दुःख दारिद्रय नाशाय श्रीविष्णो स्तोषणाय च । प्रातः स्नानं करोम्यद्य माघे पापविनाशनम् ।।
1. மாக மாஸே ரடந்த்யாப: கிஞ்சிதப்யுதிதே ரவெள ப்ரஹ்மக்னம்வா ஸுராபம் வா கம் பதந்தம் புநீமஹே
2. மகரஸ்தே ரவெள மாகே கோவிந்தாச்யுத மாதவ ஸ்நாநேநா (அ) நே ந மே தேவ யதோக்த பலதோ பவ.
3. க்ருஷ்ணாச்யுத நிமஜ்ஜாமி ப்ரபாதே ( அ) ஸ்மின் சுபோதகே ய சஅநேந மாக ஸ்நானேந ஸுப்ரீதோ மாம் ஸமுத்தர
4. துக்க தாரித்ரிய நாசாய ஶ்ரீ விஷ்ணோஸ் தோஷணாய ச ப்ராத:ஸ்நானம் கரோம்யத்ய மாகே பாப விநாசனம்..
என்று சொல்லி ஸ்நானம் செய்து
अद्यकृत माघ स्नानाङ्गं अर्घ्यप्रदानं करिष्ये அத்ய க்ருத மாக ஸ்நானாங்கம் அர்கிய ப்ரதானம் கரிஷ்யே.
என்றுசொல்லி கீழ் கண்ட ஸ்லோகங்கள் சொல்லி மும்மூன்று முறை அர்க்கியம் விட வேண்டும்.
तपस्यर्क्कोदये नद्यां स्नात्वाहं विधिपूर्वकम् । माधवाय ददामीत मर्घ्यं धर्मार्थ्थ सिद्धिदम् । माधवाय नमः इदमर्घ्यम् (3)
सवित्रे प्रसवित्रे च परं धाम्ने नमोस्तु ते । त्वत्तेजसा परिभ्रष्टं पापंयातु सहस्रधा । सवित्रे नमः इदमर्घ्यम् (3)
गङ्गा यमुनयोर्मध्ये यत्र गुप्ता सरस्वती । त्रैलोक्य वन्दिते देवि त्रिवेण्यर्घ्यं ददामि ते । त्रिवेण्यै नमः इदमर्घ्यम् (3)
1.தபஸ்யர்கோதயே நத்யாம் ஸ்நாத்வா (அ)ஹம் விதி பூர்வகம் மாதவாய ததாமீத மர்க்கியம் தர்மார்த்த ஸித்திதம்। மாதவாய நம: இதமர்க்கியம் (3).
2. ஸவித்ரே ப்ரஸவித்ரே ச பரம்தாம்நே நமோஸ்துதே. த்வத் தேஜஸா பரிப்ரஷ்டம் பாபம் யாதுஸஹஸ்ரதா. । ஸவித்ரே நம: இதமர்க்கியம்(3)
3. கங்கா யமுநோர் மத்யே யத்ர குப்தா ஸரஸ்வதீ த்ரைலோக்ய வந்திதே தேவி த்ரிவேண்யர்க்கியம்ததாமிதே। த்ரிவேண்யை நம: இதமர்க்கியம்(3)
अनेन अर्घ्य प्रदानेन माधवादयः प्रीयन्ताम् ।। அநேந அர்க்கிய ப்ரதாநேன மாதவாதய: ப்ரீயந்தாம்
என்று அர்க்கியம் கொடுத்து விட்டு ஸூர்யனை நோக்கிநின்று கொண்டு
दिवाकर जगन्नाथ प्रभाकर नमोस्तु ते । परिपूर्ण कुरुष्वेदं माघ स्नानं मया कृतम् ।।
திவாகர ஜகன்னாதாய ப்ரபாகர நமோஸ்துதே பரிபூர்ணம் குருஷ்வே தம் மாக ஸ்நானம் மயா க்ருதம்
என்று ப்ரார்தித்து கொள்ள வேண்டும்.பிறகு சக்திக்கு தக்கவாறு நதி கரையில்உள்ள ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும்.
FROM 12-02-2021 TO 13-03-2021.
Merits of Maagha Snaana...
During this period it is prescribed to take bath early in the morning before Sunrise preferably during Arunodaya kaala.
This sacred bath is preferred to be taken in any river, lake or theertha or at least at home.
Taking a bath (Snana) which is always refreshing, not only cleanses our external body,
but also has significance from religious and spiritual point of view in the daily routine of an individual. In Hindu philosophy
daily routine generallybegins with a bath before worshiping God, a discipline that is inculcated with a sense of cleanliness in our actions.
If it is during an auspicious period like Maagha maasam, its spiritual merits are in
multiple. It is said that Maagha Snana can purify a person even from ghastly and dreadful sins committed.
Taking bath early in the morning during Maagha maasam is highly sacred, spiritual and meritorious.
Sacred texts like Vayu Purana, Brahmaanda Purana are said to have made reference to the merits and significance of Maagha Snanam .
According to Dharma Saastras merits of Maagha Snaana gets increased depending on the place where the bath is taken as given below....
With hot water at home–Merits equivalent to Six years of such Snana
From the waters of a well –12 years of such Snana phala;
In a lake –24 years of such Snana phala;
In any river – 96 years of such Snana phala;
In any sacred river – 9600 years of such Snana phala;
At the confluence of sacred rivers–38400 years of such Snana phala;
In Ganga (Ganges) River–Merits equivalent to 38400000 years of such Snana phala;
At Triveni Sangam (Prayaga) – 100 times of Ganga Snana phala;
Maagha Snana in sea (Samudra) is considered more meritorious than all the above.
Wherever may be the place of bath; one should always remember to recollect (recite) Prayaaga and also pray Maasa
Niyamaka Sri Maadhava (Lord Vishnu) silently. Those who cannot take bath as said above for the entire
month should at least take it for the last three days which is known as Anthya Pushkarini. Maagha Snanam is prescribed for all ages of men and women.
|
|
|
Post by kgopalan90 on Feb 8, 2021 19:36:20 GMT 5.5
from 7th day.
|
|
|
Post by kgopalan90 on Jan 11, 2021 7:55:35 GMT 5.5
VIVAHAM -2. STARTS FROM கல்யான பத்ரிக்கை அடித்து வந்தவுடன்-----------------------------------------. விவாஹம் 10 வரை உள்ளது.
|
|
|
Post by kgopalan90 on Jan 11, 2021 7:36:49 GMT 5.5
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.
1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்
2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்
3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்
4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்
5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்
6. நெய் தானம் தர நோயைப் போக்கும்
7. பால் தானம் தர துக்கநிலை மாறும்
8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்
9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்
10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்
11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்
12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்
13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்
14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்
15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.🙏🙏🙏தாஸன்.ஆர்.மணிகண்ட ஶ்ரௌதிகள்.திண்டிவனம்.📞9367731112
|
|
|
Post by kgopalan90 on Jan 9, 2021 12:55:03 GMT 5.5
கிருஷ்ண அங்காரக சதுர்தசி 12-01-2021.
இது சூர்ய கிரஹண புண்ய காலத்திற்கு சமமானது.
தகப்பனார் உள்ளவர், இல்லாதவர் எல்லோரும் செய்யலாம்.
கிழக்கு நோக்கிஅமரவும். ஆசமனம்.
சுக்லாம்பரதரம், ப்ராணாயாமம்,
சங்கல்பம்
மமோபாத்த சமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹுர்த்தே ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே சுவேத வராஹ கல்பே
வைவஸ்வத மன்வந்தரே அஷ்ட விம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ:
தக்ஷிணே பார்சுவே சாலி வாஹன சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதீனாம் சஷ்டியா: ஸம்வத்சரானாம் மத்யே சார்வரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே
ஹேமந்த ருதெள தனுர் மாசே க்ருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் சுப திதெள பெளம வாசர பூர்வாஷாட நக்ஷத்ர வ்யாகாத நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குன ஸகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் சதுர்தசியாம் சுப திதெள
க்ருஷ்ண அங்காரஹ சதுர்தஸீ புண்ய காலே யம தர்பணம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்து கொள்ளவும்.
சுத்த ஜலத்தால் தர்பணம்செய்யவும். பூணல்வலம். உபவீதம்.தேவதர்பணம்.
யமாய தர்மராஜாய ம்ருத்யவே தாந்த காயச,வைவஸ்வத காலாய சர்வபூத க்ஷயாய ச ஒளதும்பராய தக்னாய நீலாய பரமேஷ்டினே வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:இதயே தர்பணமாக செய்ய வேண்டும்.
1.யமாயநம:யமம்தர்பயாமி. each 3 times.=மூன்று தடவைகள். 2.தர்மராஜாயநம;தர்மராஜம்தர்பயாமி 3.ம்ருத்யவேநம:ம்ருத்யும்தர்பயாமி. 4.அந்தகாயநம:அந்தகம்தர்பயாமி.
5.வைவஸ்வதாயநம:வைவஸ்வதம்தர்பயாமி 6.காலாயநம:காலம்தர்பயாமி. 7.சர்வபூதக்ஷயாய நம:ஸர்வபூதக்ஷயம் தர்பயாமி. 8.ஒளதும்பராயநம;ஒளதும்பரம்தர்பயாமி.
9.தத்நாயநம:தத்நம்தர்பயாமி 10.நீலாயநம:நீலம்தர்பயாமி 11.பரமேஷ்டிநேநம:பரமேஷ்டிநம்தர்பயாமி. 12.வ்ருகோதராயநம:வ்ருகோதரம்தர்பயாமி. 13.சித்ராயநம:சித்ரம்தர்பயாமி
14.சித்ரகுப்தாய நம:சித்ரகுப்தம்தர்பயாமி..
ஜீவத்பிதாபி குர்வீத தர்பணம் யமபீஷ்மயோ:என்னும்வசனப்படி தந்தை இருப்பவர்கள், இல்லாதவர்கள் எல்லோரும் இதை செய்யவேண்டும்.
இதனால்பாபங்கள் யம பயம் விலகி அபம்ருத்யு மற்றும் வ்யாதியும் விலகும்.
தெற்கு திசைநோக்கி நின்று கொண்டு கீழ்காணும் ஸ்லோகம் சொல்லி யமதர்ம ராஜனை ப்ரார்த்தித்து கொள்ளவும்.
யமோ நிஹந்தா பித்ரு தர்ம ராஜோ வைவஸ்வதோ தண்ட தரஸ்ச கால: ப்ரேதாதி போதத்த க்ருதாந்தகாரி க்ருதாந்த ஏதத் த சக்ருஜ் ஜபந்தி.
நீலபர்வத சங்காச ருத்ரகோப ஸமுத்பவ காலதண்டதர ஸ்ரீ மந் வைவஸ்வத நமோஸ்துதே.
ஆசமனம். ஓம் தத்ஸத் ப்ருஹ்மார்பணம் அஸ்து.ஜலத்தை கீழே விடவும்.
|
|
|
Post by kgopalan90 on Jan 5, 2021 8:50:55 GMT 5.5
*03/01/2021*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமம் மந்திரத்தின் அர்த்தங்களை விரிவாக மேலும் தொடர்கிறார்.*
*மிகவும் அற்புதமான மந்திரம். ஒரு தடவை அந்த மந்திரங்களை ஜெபம் செய்தால் நம்முடைய ஆயுள் காலம் முடிய எல்லாவற்றையும் ஸ்திரமாக நமக்கு அளிக்கக்கூடிய சக்தி அந்த மந்திரங்களுக்கு உண்டு.*
*அவைகள் பணங்காசு ஆக இருக்கட்டும் தேக ஆரோக்கியமாக இருக்கட்டும் மனைவி குழந்தைகளாக இருக்கட்டும் நல்லோர் உடைய சேர்க்கை நம்மைப் பற்றிய நல்ல விஷயங்களை சொல்பவர்கள் இவர்களை ஸ்திரமாக இருக்கும் படி நாம் செய்ய வேண்டும்.*
*அப்படி இந்த மந்திரங்கள் பிரார்த்திக்கின்றன. முதலில் நாம் செய்த ஆகுதி நல்ல வஸ்திரம் கட்டிக் கொள்வதற்கு. நல்ல பால் கொடுக்கக்கூடிய பசுக்கள். சாப்பிடுவதற்கு யோக்கியமாக உள்ள அன்னம். அதனியியம் அதாவது சாப்பிடும் படியாக இருக்க வேண்டும். அரிசி என்றால் இப்பொழுது ரப்பரில் வருகிறது அது சாப்பிடக்கூடய வஸ்துவா அலங்காரத்திற்கு ஒரு பாக்கெட்டில் மாட்டி வைக்கலாம். காருக்குள்ளேயே கொத்துக்கொத்தாக திராட்சைகள் தூங்கும் பிளாஸ்டிக்கில். பார்ப்பதற்கு அழகாக இருக்குமே தவிர சாப்பிடுவதற்கு லாயக்கில்லை.*
*நமக்குப் பசி வந்தால் அதிலிருந்து ஒரு திராட்சை எடுத்து சாப்பிட முடியுமா முடியாது பார்க்கத் தான் முடியும். அப்படி இல்லாமல் சாப்பிடுவதற்கு யோக்கியமாக அன்னம். குடிப்பதற்கு நல்ல தண்ணீர். அது இல்லாமல் நல்ல பூமி நல்ல சொல்பேச்சு கேட்கும் படியான குழந்தைகள். நம் மனது போல் நடந்து கொள்ளும் மனைவி. இவர்கள் எல்லாம் எனக்கு அமைய வேண்டும் என்று முதல் மந்திரம் பிரார்த்தனை செய்கிறது.*
*அடுத்து வரக்கூடிய தான மந்திரங்கள் நல்லோருடைய சேர்க்கை எனக்கு எப்படி இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றது மற்ற ஆகுதிகளில் வரக்கூடிய மந்திரங்கள்.*
*ஆமாயந்து அப்படி என்றால், பிரம்மச்சாரி அதாவது நம் சொல் பேச்சு கேட்டு நம்மிடத்தில் உள்ள வித்தையைக் கற்றுக் கொள்ளக் கூடியவன். அவனுக்குத்தான் பிரம்மச்சாரி என்ற பெயர்.*
*நாம் படித்த படிப்பை நம்மிடம் சொல்லிக் கொள்வதற்கு மாணவர்கள் எப்போதும் நம்மிடம் இருக்க வேண்டும். அந்த மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்றால், இது மூன்றாவது ஆகுதி. விமாயந்து வி என்றால் மிகுந்த கெட்டிக்காரனாக இருக்க வேண்டும். அசடாக இருக்கக்கூடாது.*
*மேதா சக்தி அதிகமாக உள்ளவனாக இருக்கவேண்டும். இது நான்காவது ஆகுதி. பிரமாயந்து பிரம்மச்சாரினஹா என்றால், சொல்லிக் கொடுக்கக் கூடிய படிப்பை அவன் பயன்படுத்துவதாக இருக்க வேண்டும்.*
*ஏதோ படித்தோம் எதற்காக என்றால் ஒரு கம்பெனியில் வேலை கிடைக்கும் என்ற காரணத்திற்காக படிப்பது. அல்லது இவ்வளவு சம்பளம் வரும் ஸ்டைபன்டு வரும் என்று படிப்பது என்பது கூடாது. அப்படி இல்லாமல் அந்தப் படிப்பை படித்து முடித்த பிறகு பயன்படுத்த கூடியவனாக இருக்க வேண்டும்.*
*அவன் கற்றுக்கொண்ட படிப்பை திரும்பவும் சொல்லிக்கொடுக்கும் படியாகவும் அவன் படிக்க வேண்டும். என்னிடத்தில் கற்றுக் கொள்ளக்கூடிய படிப்பையும் வஸ்துக்களையும் மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கும்படி உள்ளவனாக இருக்கவேண்டும். மேலும் நல்லதையே நினைப்பவன் ஆக இருக்க வேண்டும்.*
*நாம் ஓரிடத்தில் சென்று படிக்கிறோம், அந்தப் படிப்பு நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் பயன்படும். மேலும் அந்த வாழ்க்கையை மேன்மைப்படுத்தும் அந்த படிப்பு என்கின்ற எண்ணத்தோடு உள்ளவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மாணவன் எனக்கு கிடைக்க வேண்டும்*
*இப்படியாக நம்மிடம் வித்தையை கற்றுக் கொள்ளக்கூடிய மாணவனை பற்றியும் பிரார்த்தனை செய்கிறது இந்த மந்திரம். மேலும் இம் மந்திரம் எப்படி பிரார்த்திக்கின்றது என்றால், எனக்கு எப்பொழுதும் உதவி செய்வதற்கு என்னை சுற்றி எப்போதும் மாணவர்களும் மற்றும் எல்லோரும் இருக்க வேண்டும். அவர்கள் ஆலோசனை சொல்பவர்கள் ஆக வேலையாட்கள் ஆக மாணவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு அந்தேவாசினஹா என்று பெயர்*
*தக்க சமயத்தில் அவர்கள் எனக்கு ஆலோசனை சொல்ல கூடியவர்களாக கிடைக்க வேண்டும். வேலையாட்கள் எப்போதும் எனக்கு நிறைந்து இருக்க வேண்டும். இவர்களெல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்றால், ஒருவர் உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஆனால் அவரே கஷ்டப்படுகிறார். அப்படி இருக்கக் கூடாது. நமக்கு பணம் தேவைப்படுகிறது என்றால் உடனே அதைக் கொடுத்து உதவி செய்பவராக இருக்க வேண்டும் நம்மிடத்தில் இருக்கக் கூடியவர்.*
*வேலையாட்கள் நம்மை சுற்றி இருக்கிறார்கள் என்றால் சம்பளத்துக்காக அவர்கள் நம்மை சுற்றி இருக்கிறார்கள் என்று இருக்கக்கூடாது. சம்பளம் என்பது தேவைதான் ஆனால் அதுவே முக்கியம் என்று நினைக்காமல், இவ்வளவு நாள் நமக்கு சம்பளம் கொடுத்து நம்மை காப்பாற்றியிருக்கிறார், அப்படிப்பட்ட நல்ல எண்ணத்தோடு என்ன சுற்றி இருக்க வேண்டும் அவர்கள். அவர்கள் உண்மையாக வேலை செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும். என்னிடத்தில் ஒரு மாதிரியாகவும் வெளியில் சென்றால் வேறுவிதமாகவும் பேசக் கூடியவர்களாக இருக்கக்கூடாது.*
*எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக பேசக் கூடியவராக இருக்க வேண்டும். தமாயந்து எப்பொழுதும் நமக்கு உண்மையாக உழைக்க கூடியவராகவும், ஓரிடத்தில் வேலை செய்யும்பொழுது அந்த முதலாளி நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவராகவும், நானும் என் முதலாளியும் சௌக்கியமாக இருக்க வேண்டும் என்று என்ன கூடியவரும், முதலாளி நஷ்டபட வேண்டும் என்று நினைக்கக் கூடாது. நம்மால் முடியவில்லை என்றால் அவரே கொடுத்து உதவி செய்யக் கூடியவராகவும் எனக்கு அமைய வேண்டும் என்னை சுற்றி உள்ளவர்கள்.*
*இப்படி இரண்டு விதமான அர்த்தங்களையும் இந்த மந்திரம் பிரார்த்திக்
*ஸ்ரேயான் என்றால் மிகவும் உயர்ந்த ஸ்தானத்தை நான் அடைய வேண்டும். என்னை சுற்றியுள்ள சினேகிதர்கள் உயர்ந்த ஸ்தானத்தை அடைந்தவர்களாக இருக்க வேண்டும். அவர்களும் ஈஸ்வரன் இடத்திலேயே பக்தியோடு நம்பிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சினேகத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நண்பர்களை எனக்கு நீ ஏற்படுத்த வேண்டும் இப்படியாக இந்த மந்திரம் பிரார்த்தனை செய்கிறது மேற்கொண்டு மந்திரங்கள் பிரார்த்திக்கின்றன அவை என்ன என்று அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
|
|
|
Post by kgopalan90 on Jan 4, 2021 11:56:48 GMT 5.5
*31/12/2020 & 01/02/2021 No Broadcasting.*
*02/01/2021*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமத்தின் பெருமைகளையும் மேலும் மந்திரங்களின் அர்த்தங்களை விரிவாக தொடர்கிறார்.*
*அதில் இதுவரை ஆவஹந்தி ஹோமத்திற்கு அங்கமாக சொல்லப்பட்ட, ஜெபத்தின் உடைய அர்த்தங்களையும் அந்த மந்திரத்தின் பெருமைகளையும் பார்த்தோம். அடுத்ததாக ஹோமம் செய்யக்கூடிய மந்திரத்தின் பொருளை பார்க்கப் போகிறோம்.*
*12 ஆகுதிகளாக அந்த மந்திரம் அமைந்துள்ளது. அதாவது 12 ஹோமங்கள் செய்ய வேண்டும். இந்த மந்திரங்கள் அற்புதமாக பிரார்த்திக்கின்றது. இதையெல்லாம் பிரார்த்தனை செய்கிறது என்றால், விபூதியை அதாவது ஐஸ்வர்யத்தை பிரார்த்திக்கின்றது என்று மகரிஷிகள் நமக்கு காண்பித்திருக்கிறார்கள்.*
*ஸ்ரீஹீ என்றால் கிரகம் வீடு வாகனம் மனைவி குழந்தைகள் இவர்களுக்கெல்லாம் ஸ்ரீஹீ என்ற பெயர். லெட்சுமிஹீ என்றால் நம் வாழ்க்கைக்கு பயன் படக்கூடிய தான பணம். புஷ்டிஹீ என்றால் தேக ஆரோக்கியம். கீர்த்திஹீ என்றால் நல்லோர் உடைய சேர்க்கை/அறிவுரைகள் இந்த நான்குக்கும் தான் விபூதி என்று பெயர்.*
*இவைகளெல்லாம் கொடுக்கக்கூடியது இந்த ஆவஹந்தி ஹோமத்தின் பலன். அந்த வஸ்துக்களில் எல்லாம் ஈஸ்வரன் வாசம் செய்கிறார். அனைத்தையுமே அதாவது அனைத்து வஸ்துக்களையும் நாம் ஈஸ்வரனாக பார்க்கவேண்டியது என்பதுதான் நம்முடைய சித்தாந்தம்.*
*அனைத்து வகுப்புகளிலும் தேவதா அம்சம் இருக்கிறது. ஆகையினாலே தான் நாம் காலையில் எழுந்தவுடன், பூமியைப் பார்த்து நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும் அதிலே தேவதைகள் இருக்கிறார்கள். ஜலத்தை பார்த்து பிரார்த்தனை செய்ய வேண்டும். தண்ணீரில் தேவதைகள் வாசம் செய்கிறார்கள்.*
*சாதாரணமாக ஒரு இடத்திலே நான் உட்காருவதற்கு ஒரு ஆசனம் போட்டுக் கொள்கிறோம். அது பாய் துணி அல்லது பலகாய் இதை போட்டுக் கொண்டு உட்கார்ந்தாலும் அதில் தேவதை அம்சம் இருக்கிறது. ஆகையினாலே தான் ஆசனத்தை காலால் இழுத்துப் போட்டு உட்காரக்கூடாது. வெளியில் எங்கோ செல்கிறோம் அங்கு ஒரு ஆசனம் போட்டு இருக்கிறது அதை நம் காலால் இழுத்து போட்டுக்கொண்டு உட்காரக் கூடாது.*
*அப்படி உட்கார்ந்தால் பைல்ஸ் வியாதியினால் நமக்கு கஷ்டப்பட நேரிடும். அதனால்தான் காலால் அதை இழுக்கக் கூடாது தேவதைகள் அதிலே வாசம் செய்கிறார்கள். இப்படி அனைத்து வஸ்துக்களிலும் தேவதைகளாக பார்க்கவேண்டும் என்பதுதான் நம்முடைய சித்தாந்தம்.*
*இப்படி இந்த ஐஸ்வர்யங்களில் ஈஸ்வரனாக பிரார்த்தனை செய்கிறது இந்த மந்திரம். இந்த மந்திரத்தின் அர்த்தம், ஐஸ்வர்யா ரூபமாகவும் அக்னி ரூபமாகவும் உள்ள அந்த தேவதையை நாம் பிரார்த்திக்கின்றோம். அனைத்தையும் எனக்கே அடையும் படியாக உள்ள சக்தியை அதிகப்படுத்தக்கூடிய உள்ள என்னிடம் என்ன வஸ்துவாக இருக்கிறதோ அது பணம் காசு ஆக கூட இருக்கலாம், வீடு வாசல் ஆக இருந்தாலும் சரி, அதை ஸ்திரமாகவும் அதிகப்படுத்தும் படியாகவும் நீ செய்ய வேண்டும்.*
*நீண்ட காலமாக என்னிடம் இருக்கக்கூடிய வஸ்து எனக்கே உள்ளதாக ஆக வேண்டும். கொஞ்சநாள் என்னிடமும் பிறகு மற்றவரிடம் போகாமல் இருக்கவேண்டும். என்னிடத்தில் நீண்டகாலம் ஸ்திரமாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் படியாக செய்ய முடியும் உன்னால். அப்படி எனக்கு செய்ய வேண்டும்.*
*என்கிட்ட உள்ள ஐஸ்வர்யத்தை எப்படி எல்லாம் நீ கொடுக்க வேண்டும் அப்படி என்றால் உடம்பை மறைக்க கூடியதான நல்ல வஸ்திரங்கள். பணம் நிறைய இருக்கிறது கட்டிக் கொள்வதற்கு வேஷ்டி இல்லை என்றால் புரோஜனம் இல்லை. அப்படி நாம் பார்த்திருக்கிறோம் ஒரு காலத்தில். சென்னையிலே வெள்ளம் வந்தது விட்டது வெள்ளம் எல்லோர் வீட்டுக்கும் வந்து விட்டது பேங்கில் நிறைய பணம் இருக்கிறது. ஆனால் ஒரு ரூபாய் கூட நமக்கு பயன்படாமல் இருந்தது. ஒரு உணவு கிடைக்கவில்லை ஈரத் துணியை கட்டிக் கொண்டு எவ்வளவு கஷ்டப் பட்டோம்? அப்படி ஒருநாள் இருந்தது நமக்கு பணம் இருந்தும் இல்லாதது போல் தான் இருந்தோம். ஏழை பணக்காரன் எல்லோரும் சமமாக இருந்த காலம் அது.*
*அப்படி இருக்கக் கூடாது. நினைத்த போது எனக்கு வஸ்திரங்கள் கட்டிக் கொள்ளும் படியாக இருக்க வேண்டும். நல்ல பல விதமான பசுக்களுடன் நிறைந்து நான் இருக்க வேண்டும். நான் சாப்பிடக்கூடிய பாலானது நல்ல சுத்தமான வஸ்துவாக இருக்கவேண்டும். பால் என்கின்ற நிறத்தில் அது இருக்க கூடாது. பாலை கொடுக்கக்கூடிய சக்தி பசுக்களுக்கு தான் உண்டு நாம் நினைத்தால் உற்பத்தி செய்ய முடியுமா?
பண்ண முடியாது மாடுகள் தானே என்று பசுக்களை குறைவாக நினைக்கிறோம். மாடுகள் விஷயத்திலேயே நமக்கு அலட்சியம் ஜாஸ்தியாக இருக்கிறது ஸ்ரத்தை வரவில்லை இன்றுவரையில். அதாவது முழுமையான ஈடுபாடு நமக்கு வரவில்லை மாடு புல் வைக்கோல் அதாவது நாம் ஒதுக்கக் கூடிய வஸ்துக்களை சாப்பிட்டு, பால் என்கின்ற ஒரு உத்தமமான வஸ்துவை கொடுக்கின்றது. அதுபோல் நம்மால் ஒரு இயந்திரத்தை தயாரிக்க முடியுமா?*
*ஒரு பக்கம் வைக்கோலை நாம் போட்டால் மறுபக்கம் பாலாக வந்து கொட்டும் எந்திரத்தை நாம் கண்டுபிடித்துவிட்டோமா? இன்னும் இல்லை அதை செய்யக்கூடிய சக்தி மாட்டுக்கு தான் உண்டு. பசுக்கு தான் அந்த சக்தி உண்டு அதனால் எனக்கு பால் இருந்தால் போதும் என்று நினைக்காமல், சுத்தமான பசுக்களும் எனக்கு வேணும்.*
*எப்போதும் நல்ல ஆரோக்கியமான உணவு/தண்ணீர் எனக்கு எப்போதும் கிடைக்க வேண்டும். அப்படி நீ செய்ய வேண்டும். மேலும் இந்த ஐஸ்வர்யங்களை முதலில் சொன்னது போல வீடு வாகனம் மனைவி குழந்தைகள் உலகத்திற்கு புழங்கக்கூடிய பணத்தையும் தேக ஆரோக்கியத்தையும் நல்லோர் உடைய சேர்க்கையையும் தொடர்ந்து நீ எனக்கு கொடுக்க வேண்டும்.*
*எப்படிப்பட்ட ஐஸ்வர்யம் என்றால் நல்ல பூமி நல்ல குழந்தைகள் நல்ல ஐஸ்வரியம் இவைகளோடு கூட பசுக்களோடு கூட இவ்வளவு ஐஸ்வரியங்களையும் எனக்கு கொடுத்து அதை என்னிடத்திலே ஸ்திரமாக இருக்கும் படி நீ செய்ய வேண்டும் என்று அந்த ஆகுதியை சொல்லி ஸ்வாஹாஹா.*
*இது முதல் மந்திரத்தினுடைய அர்த்தம். இரண்டாவது மந்திரத்தினுடைய அர்த்தத்தை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
|
|
|
Post by kgopalan90 on Jan 2, 2021 13:51:41 GMT 5.5
அஷ்டகா, அன்வஷ்டகா, திஸ்ரேஷ்டகா
முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் செய்யக்கூடியது ஆன தர்ப்பணங்களின் வரிசைகளை பார்த்துக்கொண்டு என்ற வகையிலே மேலும் தொடர்கிறார்.
அதிலே நாம் அடுத்ததாக பார்க்கக் கூடியதான மிக முக்கியமான புண்ணியகாலம் #அஷ்டகா_ஸ்ராத்தம். #திஸ்ரோஷ்டகா_என்று_பஞ்சாங்கத்தில் #போட்டிருப்பார்கள்.
*முதலில் இந்த அஷ்டகா புண்ணிய காலத்தை எப்பொழுது செய்ய வேண்டும், என்று பார்த்த பிறகு இதை நாம் எதற்காக செய்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.*
*இதற்கான ஒரு சரித்திரத்தையே தர்மசாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது. மார்ககஷிச மாசம் புஷ்ய மாசம் மாக மாசம் பால் குண மாசம் இந்த அஷ்டகா சிராத்தம் கூட சாந்திரமான படிதான் தர்மசாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது.*
*மார்கழி மாதம் மாசி பங்குனி தை இந்த நான்கு மாதங்களிலும் கிருஷ்ணபட்ச த்தில் வரக்கூடிய, சப்தமி அட்டமி நவமி, இந்த மூன்று நாட்களில் நாம் இந்த புண்ணிய காலத்தை அனுஷ்டிக்க வேண்டும்.*
*இதனுடைய முக்கியத்துவத்தை பார்த்துதான் மகரிஷிகள் நமக்கு சப்த பாக யஞ்கியங்களில் இந்த அஷ்டகாவை தனியாக வைத்திருக்கிறார்கள்.*
*இந்த ஷண்ணவதி 96 தர்ப்பணங்களை நாம் பண்ணுகிறோம் குறைந்தபட்சம் ஒரு வருடத்தில். இதில் எந்த ஒரு புண்ணிய காலமும் பாக அல்லது ஹவிர் யஞ்கியங்களில் வரவில்லை.*
நாற்பது சம்ஸ்காரங்களிலும் வரவில்லை. #ஆனால்_இந்த_அஷ்டகா #ஸ்ராத்தம்_40_சம்ஸ்காரங்களில் #சொல்லப்பட்டிருக்கிறது.
*சப்த பாக யஞ்கியங்களில் ஒன்று தான் இந்த அஷ்டகா ஸ்ராத்தம். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதினால் தான் நாற்பது ஸம்ஸ்காரங்களில் இதை வைத்து கொடுத்திருக்கிறார்கள்*
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் இதை விடவே கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எப்படி சீ மந்தத்தையும் குழந்தைக்கு ஜாத கர்மாவையும் விடக் கூடாதோ, நாம கர்மாவையும் செய்யாமல் இருக்கக் கூடாதோ,
அதேபோல்தான் இந்த அஷ்டகா புண்ணிய காலத்தையும் செய்யாமல் இருக்கக் கூடாது என்று மகரிஷிகள் நமக்கு காண்பித்துள்ளனர்.
இதற்கு திஸ்ரோஷ்டகா என்று மூன்று புண்ணிய காலங்கள் வரும். மார்கழி மாதத்தில் வரக்கூடிய கிருஷ்ண பக்ஷத்தில் சப்தமி அஷ்டமி நவமி.
அதேபோல் தை/மாசி/பங்குனி மாதத்திலும் வரக்கூடிய கிருஷ்ண பக்ஷத்தில் சப்தமி அஷ்டமி நவமி இப்படி 3 நாட்களாக நான்கு மாதங்களும் வரும்.
இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சௌனகர் என்கின்ற மகரிஷி சொல்கின்ற பொழுது, ஹேமந்த ருது சிசிர ருது மார்கழி தை மாசி பங்குனி இந்த நான்கு மாதங்களும், இந்த ருதுக்களில் வரும். இதை செய்யவேண்டுமென்று மகரிஷி நமக்கு காண்பித்திருக்கிறார்
ஸ்ராத்தம் பார்வனமாக செய்ய வேண்டும். பொதுவாக நாம் தர்ப்பணம் செய்யும் போது பிதுர் பிதாமஹ பிரபிதாமஹ மாத்ரு பிதாமஹி
பிரபிதாமஹிகள் மாதாமஹ மாது பிதாமஹ மாது பிரபிதாமஹ, மாதாமஹி மாது பிதாமஹி மாது பிரபிதாமஹி இதுதான் வர்க்கத்துவயம் என்று சொல்கிறோம்.
இந்த வர்க்கத்துவயம் எப்படி ஆராதிக்கிறோம் என்றால், ஒவ்வொரு ஸ்ராத்தங்களிலும் ஒவ்வொரு விதமாக அனுஷ்டானம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.
தர்ப்பணம் ஆக நாம் செய்யும் பொழுது அதில் எந்த மாற்றமும் தெரியாது ஒரே மாதிரியாக செய்து விடுவோம். ஆனால் இதை சிராத்தம் ஆக செய்யும்பொழுது, அதில் நிறைய விசேஷங்கள் வருகிறது.
இந்த அஷ்டகா சிராத்தத்தில் எப்படி என்றால், தாயார் வர்க்கத்திற்கு தனியாக வரணம் செய்ய வேண்டும்.
பொதுவாக இந்த ஷண்ணவதி அனைத்து ஸ்ராத்தங்களிலும் தாயாரும் தகப்பனாரும் சேர்ந்துதான் ஒரு வர்க்கம்.
அதேபோல் மாதாமஹர் மாதா மஹி ஒரு வர்க்கம்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட சில இடங்களில் தாயாருக்கு தனியாக ஒரு வர்க்கம் சொல்லப்பட்டிருக்கிறது.
அதாவது வருடாவருடம் நாம் தாயாரை உத்தேசித்து செய்யக்கூடிய சிராத்தத்தில்,
நாந்தி சிராத்தத்திலும் கயையில் செய்யக்கூடிய ஸ்ராத்தத்திலும், #தாயார்_வர்க்கத்திற்கு #தனியாக_வரணம்_உண்டு.
அதேபோல்தான் இந்த #அஷ்டகா #சிரார்த்தத்திலும்_தாயார்_வர்க்கத்திற்கு தனியாக ஒரு வரணம் சொல்லப்பட்டிருக்கிறது.
ஏனென்றால் அங்குதான் விசேஷங்கள் நிறைய சொல்லப்பட்டிருக்கிறது.
*அந்த சரித்திரத்தை பார்க்கும்போது அந்த விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே நாம் தகப்பனாரையும் தாயாரையும் ஒரு வர்க்கமாக செய்தாலும்,
எப்படி நாந்தி சிராத்தத்தில் தாயாருக்கு தனியாக ஒரு வர்க்கம் செய்கின்றோமோ, அதே போல் தான் இந்த அஷ்டகா சிராத்தத்திலும் தாயாருக்கு தனியாக செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.*
*அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இந்த அஷ்டகா சிராத்தத்தில் 4 மாதத்தில் மூன்று மூன்றாக 12 தர்ப்பணங்கள் வருகின்றன இந்த அஷ்டகா புண்ணியகாலம்.*
*இதை அன்ன சிராத்தம் ஆக காண்பித்திருக்கிறார்கள்*
*மேலும் தர்ப்பணம் ஆக செய்யலாம் என்றும் காண்பித்து இருக்கிறார்கள்.
குறைந்தபட்சம் தர்ப்பணமாகவாது செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.*
*இதை ஏன் அன்ன ரூபமாக செய்யக்கூடாது என்றால் செய்யலாம் ஆனால் நிறைய நியமங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. மூன்று நாட்கள் இதை அனுஷ்டிக்க வேண்டிவரும்.
நியமங்கள் நிறைய சொல்லப்பட்டிருக்கிறது முடிந்தால் செய்யலாம். தர்ப்பணமாக செய்வதற்கு தர்ம சாஸ்திரத்தில் விசேஷங்கள் காண்பித்திருக்கிறார்கள்*
*இந்த அஷ்டகா தர்ப்பணத்தை செய்யாவிடில் தோஷங்களும் காண்பிக்கிறார்கள். இதை யார் தெரிந்து கொள்ள வில்லையோ அல்லது தெரிந்து கொண்டும் செய்யவில்லையோ, அவர்கள் தரித்திரம் ஆக போய்விடுகிறார்கள்.
அதாவது பணம் இல்லாமல் இருப்பவர்கள் தரித்திரர்கள் ஆகவும், அதேசமயம் பணம் இருந்தும் அனுபவிக்க முடியாதவர்களும்
தரித்திரர்கள் என்ற ஒரு நிலையானது நமக்கு ஏற்படுகின்றது என்று ஒரு முக்கியத்துவம் சொல்லப்பட்டு இருக்கிறது இந்த அஷ்டகா புண்ணிய காலத்திற்கு.*
*மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் நம் பெற்றோர்களை உத்தேசித்து செய்யக்கூடிய தான ஷண்ணவதி தர்ப்பணம் விவரங்களை மேலும் தொடர்கிறார்.
அதில் நாம் இப்பொழுது பார்த்துக் கொண்டு வரக்கூடிய தான அஷ்டகா புண்ணியகாலம். மிகவும் முக்கியமானது ஒன்று
நாற்பது சம்ஸ்காரங்களில் இதுவும் ஒன்றாக நமது மகரிஷிகள் காண்பிக்கின்றனர். சப்த பாக யஞ்கியங்களில் ஒன்று.
பாக யக்ஞங்கள் ஏழு:- அஷ்டகா; ஸ்தாலி பாகம்; பார்வணம்; ஆக்ரஹாயணி;ஶ்ராவணீ; சைத்ரீ;ஆஶ்வயூஜீ.
ஹௌபாசனம் செய்கின்றவர்கள், அனைவரும் செய்ய வேண்டியது இந்த அஷ்டகா புண்ணியகாலம்.
இது நித்தியமாக சொல்லப்பட்டு இருக்கிறது அதாவது கட்டாயம் செய்ய வேண்டும். (பிரத்தியவாயம்) அதாவது செய்யாமல் விட்டால் வரக்கூடிய தான பாவத்திற்கு இந்தப் பெயர்.
ஆனால் இந்த அஷ்டகா புண்ணிய காலத்திற்கு செய்யாமல் விட்டால் தோஷங்களும் சொல்லப்பட்டிருக்கிறது.
#நரகம்தான்_கிடைக்கும்_இந்த_அஷ்டகா #புண்ணிய_காலத்தை_செய்யாவிடில் #என்று_தர்ம_சாஸ்திரம்_காண்பிக்கிறது.
இப்படி நிறைய எச்சரிக்கைகள் செய்து அதை கட்டாயம் செய்ய வேண்டும் என்று காண்பிக்கின்றது.
ஏன் இந்த அளவுக்கு முக்கியத்துவம் என்றால் புராணங்கள் இதனுடைய பெருமைகளை நிறைய காண்பிக்கின்றது.
*முக்கியமாக பிரம்ம வைவர்த்த/வாயு புராணங்களும் இதனுடைய பெருமையை காண்பிக்கின்றது.
#ஸ்திரீகளுக்கு_மிகவும்_முக்கியமான #சிராத்தம்_இந்த_அஷ்டகா_ஸ்ராத்தம்.
பொதுவாக தர்ப்பணங்களில் தகப்பனார் வர்க்கம் செய்யும் பொழுதே தாயார் வர்க்கமும் சேர்ந்து வந்துவிடும்.
அதாவது எல்லா இடங்களிலும் பதியோடு சேர்ந்து வந்துவிடும். தகப்பனாருடன் தாயாருக்கும் அதில் பாகம் வந்துவிடும்.
முக்கியமாக சில இடங்களில் தாயாருக்கு தனி வரணம் உண்டு. விருத்தி அதாவது நாந்தி சிராத்தம். இதில் தாயார் வர்க்கத்திற்கு தனியாக பூஜை உண்டு.
வருடாவருடம் தாயாருக்கு செய்யக்கூடிய தான ஸ்ராத்தம். கயாவில் செய்யக்கூடியது ஆன ஸ்ராத்தம். (மாத்துரு ஷோடசி), மற்றும் இந்த அஷ்டகா ஸ்ராத்தம்.
இவைகளில் எல்லாம் தாயார் வர்க்கத்திற்கு தனியாக பூஜை சொல்லப்பட்டிருக்கிறது. ஏன் அந்த அளவுக்கு முக்கியத்துவம் என்று இந்தப் புராணங்கள் சொல்லும் பொழுது, அதாவது நாம்
வழக்கமாக தர்ப்பணம் செய்யும் பொழுது, ஸ்திரீகள் யார் யாரெல்லாம் உத்தேசித்து நாம் செய்கின்றோமோ, அவர்கள் அத்தனை பேரும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் இந்த அஷ்டகா சிராத்தத்தில்.
#மேலும்_ஸ்திரீகளுக்கு_பொதுவாகவே #நிறைய_எதிர்பார்ப்புகள்_இருக்கும்_அது #நிறைவேறவில்லை_என்றால்_அதற்காக #ஒன்றும்_வருத்தப்பட்டு_கொள்ள #மாட்டார்கள்_ஆனால்_அவர்களால்
#எதிர்பார்த்ததை_நாம்_நிறைவேற்ற #முடியவில்லை_என்பது_ஒரு #தாபம்தான்.
*அந்த மாதிரியான தாபங்களை இந்த அஷ்டகா சிராத்தம் மூலம் நிறைவேற்றப்படுகிறது என்பதை ஒரு சின்ன சரித்திரம் மூலம் பிரம்ம வைவர்த்த/வாயு புராணமும் காண்பிக்கிறது.*
#அதாவது_பித்ருக்கள்_மூன்று_விதமான பிரிவுகளாக இருக்கின்றனர். #சோமப் #பிதுர்மான்_பிதரோ_பரிகிஷதஹா, #அக்கினி_ஸ்வாதாஹா என்று மூன்று பிரிவுகள்.
இங்கு பிரிவு என்பது இவர்களுக்கு உள்ளேயே பிரிவு என்று நினைக்கக்கூடாது. ஸ்தானம் என்று பெயர். இதை தனித்தனியாகப் பிரித்துக் காண்பித்து இருக்கின்றனர்.
#அதிலே_இந்த_அக்னி_ஸ்வதாஹா #என்கின்ற_பிதுருக்கள்_யாகம் #செய்தவர்கள்_அக்னிஹோத்திரம் #செய்து_இந்த_பூமியிலே_யாகம_செய்த #ஸ்தானத்தை_அடைந்தவர்கள்.
ஒரு சமயம், இந்த அக்னி ஸ்வதாஹா என்கின்ற பிதுருக்கள் இடத்திலே ஒரு கன்னிகா இருந்தாள். ஒரு குழந்தை பெண். அவளுக்கு பெயர் அச்சோதா என்று பெயர்.
ஒருசமயம் அவள் வெளியிலே சஞ்சாரம் செய்து கொண்டு வரும்பொழுது, அமாவசு என்ற ஒரு பிதுர் வர்க்கத்தை சேர்ந்த ஒரு யுவா அவனைப் பார்த்து இவள் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.
*கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு அவனிடத்திலே கேட்கிறாள், அமாவசு என்கின்ற அவன், அவளைப் பற்றிய எந்த விவரமும் கேட்காமல் அவள் கேட்ட
உடனேயே திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னவுடன் இருவரும் தொப்பென்று இந்த பூலோகத்தில் வந்து விழுந்து விட்டனர்*
ஏனென்றால் அவர்கள் இருவரும் ஞாதிகள் (பந்துக்கள்) பங்காளிகள்.
#ஒரே_கோத்திரத்தில்_ஒருவருக்கொருவர்_திருமணம்_செய்து_கொள்ளக்கூடாது. இவர்களுக்குத் தெரியாமல் அப்படி கேட்டதினால்,
அவர்களுடைய அந்த பிதுர் பாவமானது போய்விட்டது, உடனேயே இங்கே பூமியில் வந்து விழுந்து விட்டார்கள்.
*எப்படி விழுந்தாள் என்றால் அந்த கன்னிகா அச்சோதா என்கின்ற ஒரு நதியாக ஆவிர்பவித்தாள். இந்த அமாவசு என்கின்ற அவர் ஒரு கல்லாக போய்விட்டார் அந்த நதிக்கரையில்.
இப்படி இந்த இரண்டு பேரும் பூமியிலே வந்து விழுந்து துக்கப்பட்டார்கள். அவர்களுக்கு நாம் இருவரும் ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்து போய்விட்டது.*
*மிகவும் துக்கப்பட்டு அழுதாள். இதைப் பற்றி தெரிந்த உடன் அக்கினி ஸ்வாதாஹா என்கின்ற பித்ருக்கள், எல்லோரையும் அழைத்துக் கொண்டு இங்கு வந்தார்கள். இரண்டு பேரையும் பார்த்து வருத்தப்பட்டார்கள் பிதுருக்கள்.*
*அவர்களுக்கு இந்த துக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு ஒரு வழியை சொன்னார்கள். என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஷண்ணவதி தர்ப்பணங்கள் வரிசையை பார்த்துக்கொண்டு என்ற வகையில் அஷ்டகா சிராத்தம் பெருமைகளை மேலும் தொடர்கிறார்.*
*இந்த அஷ்டகா ஸ்ராத்தம் பெருமைகளை முக்கியமாக ஸ்திரீகளை உத்தேசித்து செய்யக்கூடிய தர்ப்பணம்.*
*இதற்கான ஒரு சரித்திரத்தை பிரம்ம வர்த்த புராணமும் வாயு புராணமும் காண்பிக்கின்றன. அந்த சரித்திரத்தில் அச்சோதா என்கின்ற கன்னிகை, ஒரே கோத்திரத்தில் உள்ள ஒரு பையனை திருமணம் செய்து கொள்ள
ஆசைப்பட்ட தோஷத்தினால், இந்த பூமியிலே நதியாக ஆவிர் பவித்து ஓடினாள். அந்த நதிக் கரையினிலே அமாவசு என்கின்ற பிதுர் வர்க்கத்தை சேர்ந்த ஒரு யுவா கல்லாக விழுந்தான்.*
*அவர்கள் இருவரும் துக்கப்பட்டனர். அந்த நதி எப்படி ஓடுகின்றது என்றால் பூமியில் இறங்காமல் ஓடுகிறது. பூமியிலே தண்ணீர் இறங்க வேண்டும் அப்போதுதான் அது
சாரவத்தாக இருக்கும். ஆனால் இந்த நதி கருங்கல்லிலேயே ஓடிக்கொண்டிருக்கிறது அந்தக் கருங்கல் யார் என்றால் இந்த அமாவசு என்கின்ற யுவா.*
*ஆகையினாலே அந்த நதியானது யாருக்கும் பயன்படாமல் பூமியில் ஓடிக்கொண்டிருந்தது. தன்னை நினைத்துக் கொண்டு மிகவும் வெட்கப்பட்டாள் அந்த கன்னிகை.
இப்படி ஒரு தப்பை நாம் செய்துவிட்டோமே நம்முடைய ஞாதி களிலேயே ஒருவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நினைத்தது எவ்வளவு பெரிய தவறு.*
*ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு ஞாதிகள் என்று பெயர். இப்படி ஒரு தப்பை நான் செய்து விட்டேனே என்று வருத்தப்பட்டு அழுதாள்.
அவள் தன்னுடைய தகப்பனார் வர்க்கத்தில் உள்ள பிதுருக்களை நினைத்து பிரார்த்தனை செய்தாள்/அழுதாள்.*
*நான் ஒரு வயதின் கோளாறு காரணமாக இந்த தப்பை செய்துவிட்டேன், என்னை நீங்கள் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று அழுதாள்.
ஒரு துஷ்டன் இடத்திலே போய் ஒரு ஸ்திரீ மாட்டிக்கொண்டால் எவ்வளவு கஷ்டப்பட்டு (சுதந்திரமாக நம் வீட்டிற்கு போய் வாழ வேண்டும் என்று) அழுவாளோ
அதேபோல் பித்ருக்களை நினைத்து தபஸ் பூராவும் வீணாக போய் விட்டதே என்று அழுதாள்.*
*அப்படி இருக்கும் பொழுது, அங்கே வந்து சேர்ந்தனர் பித்ருக்கள் அனைவரும். அவள் மிகவும் வருத்தப்பட்டு இப்படி நீ செய்யலாமா நாங்களெல்லாம் இருக்கும் போது
எங்களிடம் நீ கேட்க வேண்டாமா, என்று அவளிடம் சமாதானமாக தன்மையாக சொல்லி, வாஞ்சையோடு கூட ஒரு யோசனை சொன்னார்கள்.*
நீ மனதினால், ஒரே கோத்திரத்தில் உள்ளவனை கல்யாணம் செய்துகொண்டு வாழவேண்டும் என்று நினைத்ததால், அந்த பாவத்தை நீ அனுபவித்து தான் தீர வேண்டும்.
அதுவரையிலும் இந்த பூமியிலிருந்து நீ வர முடியாது.
இந்த பூமியில் இருந்து தான் அந்த பாவத்தை நீ அனுபவித்து ஆகவேண்டும். அதற்குப்பிறகு எங்களால் உனக்கு நல்லது செய்ய முடியும் என்று சொல்லி,
அவர்கள் சொல்லும் பொழுது நீ இந்த பாவத்தை சீக்கிரமாக அனுபவித்து முடித்து, இந்த இருபத்தி எட்டாவது மன் வந்திரமான வைவஸ்த மனு ஆரம்பிப்பதற்கு முன்னால்,
ஒரு நல்ல குலத்திலே நீ ஆவிர்பவிப்பாய். ஒரு உத்தமமான புத்திரனை நீ அடைவாய். நல்ல இடத்திலே உனக்கு திருமணமாகி, நல்ல புத்திரனே நீ அடைவாய் அவனை எல்லோரும்
பாராட்டும் விதமாக, ஸ்திரீகளுக்கு ஜென்மம் எடுத்ததற்கான பயன் எப்பொழுது, ஒரு புத்திரனை அவள் பெற்றெடுத்த உடன் ஜென்மம் பயனுள்ளதாக அமைகிறது.
#புத்திரன்_என்று_ஒருவன்_பிறக்க #வேண்டும்_ஸ்திரீகளுக்கு_அதன்பிறகு #அவர்களுக்கு_உத்தமமான_லோகம் #கிடைக்கும்_காத்துக்கொண்டிருக்கிறது.
இதைத்தான் நாம் இராமாயணத்தில் பார்த்தோமேயானால் இராமன் பிறந்தவுடன் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள் என்று சொல்கின்ற இடத்திலே,
தசரதர் மற்றும் அந்த ஊர் மக்கள் மிகவும் பேரானந்த பட்டார்கள் என்று சொல்வதற்கு முன்னால்,
கௌசல்யை மிகவும் சந்தோஷப்பட்டாள் பிரகாசமாக இருந்தாள் என்று வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடுகிறார் முதலில்.*
*ஏனென்றால் புத்திரன் என்று ஒருவன் பிறந்த விட்டவுடன் நம்முடைய ஜென்மம் பயனுள்ளதாக ஆகிவிட்டது என்று, இனி நாம் ஜெபமும் தபசு பூஜைகள் ஹோமங்கள் செய்து அடுத்த ஜென்மம் நன்றாக கிடைக்க வேண்டுமே,
இந்தப் பிறவியில் எல்லா சுகங்களையும் அடைய வேண்டுமே என்று, அதற்கான முயற்சிகளை நாம் செய்ய வேண்டியது இல்லை, புத்திரன் என்ற பிறந்து ஆகிவிட்டது,
இனி நமக்கு சத்கதி தான் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு, கௌசல்யா மிகவும் சந்தோஷமாக இருந்தாள் என்று வால்மீகி தனியாகவே இராமாயணத்தில் காண்பிக்கின்றார்.*
*காரணம் ஸ்திரீகளுக்கு புத்திரன் என்ற பிறந்தவுடன் பிறவிப்பயன் ஆனது கிடைத்து விடுகின்றது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த பித்ருக்களும் இந்த கன்னிகைக்கு அதையே சொல்கின்றனர்.*
#உனக்கு_நல்ல_இடத்தில்_திருமணம் #ஆகி_ஒரு_நல்ல_புத்திரன்_உனக்கு #கிடைப்பான்_அவன்_பிறந்த #மாத்திரத்திலேயே_உனக்கு_நல்லr_கதி #கிடைத்து_ஒரு_ஸ்தானத்தை_அடைவாய் #என்று_பிதுருக்கள்_அனுகிரகம் #செய்கின்றனர்.
*அந்த உத்தமமான புத்திரனும் அனைவராலும் பாராட்டப் பெறுவார், அவன் லோகத்திற்கு பெரிய உபகாரங்களை செய்யக் கூடியவனாக இருப்பான், அனைவரும் தினமும் நினைத்துப் பார்க்கக்கூடிய புத்திரனாக அவன் இருப்பான்.*
*அப்படி ஒரு புத்திரனை நீ அடைந்த மாத்திரத்திலேயே இந்த பாவமானது சுத்தமாக நீங்கிப் போய்விடும்.
திரும்பவும் இது போல் கெட்ட எண்ணங்கள் உன்னுடைய மனதிலே உருவாகாது, இப்படியாக பிதுருக்கள் அந்த கன்னி கைக்கு அனுகிரகம் செய்கின்றனர்.*
*உன்னையும் உன்னை மாதிரி பாலிய வயதில் நினைத்துப் பார்க்கக் கூடாததை நினைத்து பார்த்ததினால் வந்த பாவமும்,
பாவத்தினால் ஏற்பட்ட தோஷங்களினுடைய ஸ்திரீகளும் கல்யாணம் செய்துகொண்டு எந்த சுகத்தையும் அடைய முடியாமல் காலம் ஆகிவிட்ட ஸ்திரீகளுக்கும்,
கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு கல்யாணம் செய்யாமலேயே காலமான ஸ்திரீகளும்,
கர்ப்பத்தில் இருக்கின்ற போதே காலமான ஸ்திரீகளுக்கும் இவர்கள் அத்தனை பேருக்கும் உத்தேசித்து அஷ்டகா என்கின்ற ஒரு சிராத்தத்தை அனைவரும் செய்வார்கள்,
அதன்மூலம் இதுபோல் உள்ள ஸ்திரீகள் அனைவருக்கும் பாகங்கள் கிடைக்கும் அத்தனை ஸ்திரீகளின் உடைய சாபங்களும் பாவங்களும் நிவர்த்தியாகும்,
அந்த அஷ்டகா சிராத்தத்தை செய்கின்றவர்களுக்கு தீர்க்கமான ஆயுள், ஆரோக்கியத்தை பூரணமாக அடைவார்கள்
என்று பிதுர்க்கள் அனுக்கிரகம் செய்து, இந்த அஷ்டகா சிராத்தம் எப்போது நடக்கும் என்றால் உத்தராயணம் பிறந்து இதை அனைவரும்
செய்வார்கள் அதன்மூலம் ஸ்திரீகள் அனைவருக்கும் பூரணமான திருப்தி கிடைக்கும் என்று சொல்லி அனுகிரகம் செய்தார்கள்.
*மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்*
முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் நம் முன்னோர்களை உத்தேசித்து செய்யக்கூடிய தான தர்மங்களின் வரிசைகளை மேலும் விளக்குகிறார்.*
*அதில் அஷ்டகா புண்ணிய காலத்தின் பெருமைகளை ஒரு சரித்திரத்திலிருந்து நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.*
*அப்படி பித்ருக்களின் உடைய அனுக்கிரகத்தினால் நதியாக ஓடக்கூடிய அச்சோதா என்கின்ற கன்னிகை,
அந்தப் பாவத்தை அனுபவித்து முடித்த பிறகு, அந்த கன்னிகை தான் சத்திய வதியாக ஆவிர்பவிக்கிறாள் பூலோகத்தில் ஒரு மீனவக் குடும்பத்தில்.
அந்த சத்தியவதிக்கு ஒரு புத்திரன் பிறக்கிறான் அவர்கள்தான் #வியாசர் என்று நாம் சொல்கிறோம்.
*வியாசாச்சார்யாள் விஷ்ணுவினுடைய அவதாரமாகவே பிறந்திருக்கிறார். காரணம் அந்த பிதுருக்களின் சினேகத்தின் மூலம்
அவர்களின் பரிபூரண அனுகிரகத்துடன் பிறந்ததன் மூலம் மகாவிஷ்ணுவே வியாசர் ஆக வந்து பிறந்தார் இந்த பூலோகத்தில்.*
ஆகையினாலே தான் #வ்யாஸாய #விஷ்ணு_ரூபாய_வ்யாஸ_ரூபாய #விஷ்ணவே_என்று_சொல்கிறோம்.
விஷ்ணுவும் வியாசரும் வேறு அல்ல இருவரும் ஒன்றே தான் அவர் தான் பகவான் நாராயணன் ஆக ஆவிர்பவித்தார் என்று பார்க்கிறோம்.
*பித்ருக்கள் அனுக்கிரகம் செய்து, இந்த அஷ்டகா ஸ்ராத்தம் செய்ய வேண்டிய முறைகளையும் அவர்களே காண்பிக்கின்றனர்.
இப்படி சொல்லிக் கொண்டு வரும்பொழுது, ஸ்ராத்தங்கள் மூன்று விதமாக இருக்கின்றன. நித்தியமாக/நைமித்தியமாக/காம்மியமாக செய்யக்கூடியது.*
*நித்தியமாக செய்யக்கூடியது நாம் பார்த்து கொண்டு வரக்கூடியது ஆன ஷண்ணவதி தர்ப்பணங்கள், இவைகள் நித்தியம் என்று பெயர்.*
*நைமித்திகம் என்றால் ஒரு கிரகண புண்ணிய காலத்தில், செய்யக்கூடிய தான தர்ப்பணம். சிராத்தத்தை முடித்த பிறகு ஸ்ராத்தாங்கமாக
செய்யக்கூடிய தர்ப்பணம். ஒரு தீட்டு வந்துவிட்டால் அது போகக்கூடியதற்கான தர்ப்பணம். இவைகளெல்லாம் இதில் வரும்.*
*காமியம் என்று ஒன்று இருக்கிறது, ஒரு குறிப்பிட்ட பலனை உத்தேசித்து செய்யக்கூடியதான சிராத்தாங்க தர்ப்பணம்.
காம்ய ஸ்ரார்த்தம் என்று சொல்லி யிருக்கி றார்கள்*
*ஒரு குறிப்பிட்ட பலனை உத்தேசித்து செய்ய வேண்டுமானால் அதற்கான சிராத்தத்தை செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் காண்பித்துள்ளது.*
*அந்த ஸ்ராத்தத்தை முடித்த பிறகு செய்யக்கூடிய தான தர்ப்பணம் மற்றும் ஒரு சில புண்ணிய காலங்களில் செய்யக்கூடிய தர்ப்பணம். இவைகளுக்கு காமியம் என்று பெயர்.*
*இப்படி மூன்றாகப் பிரித்து அதில் இந்த அட்டகா புண்ணிய காலத்தில் செய்யக்கூடிய தர்ப்பணம் நித்தியம் என்று சொல்லி,
இந்த நான்கு மாதத்தில் செய்யக்கூடியதான இந்த திஸ்ரேஷ்டகா புண்ணிய காலம் நான்கு விதமாக ஸ்திரீகளுக்கு பலனை/திருப்தியை கொடுக்கிறது.
*முதலில் செய்யக்கூடியது ஐன்திரி மார்கழி மாதம் வரக்கூடியதான புண்ணியகாலத்தின் பெயர். அதாவது தர்ம சாஸ்திரம் இதை நமக்கு இரண்டு விதமாக காண்பிக்கின்றது.*
*மூன்று நாட்கள் செய்யக்கூடியது ஆன சப்தமி அஷ்டமி நவமி. இதிலே சப்தமி அன்று முதலில் செய்யக்கூடியதற்கு, ஐன்திரி, அஷ்டமி அன்று செய்யக்கூடியதற்கு பிராஜாபத்தியம் என்று பெயர். மூன்றாவதாக செய்யக்கூடிய அதற்கு வைஸ்யதேவிகி என்று பெயர்.*
*இப்படி இதைப் பிரித்து இருக்கிறார்கள் இந்த நான்கு மாதத்திலேயே, செய்யக்கூடிய தான தர்ப்பணங்களை நான்காகப் பிரித்து இருக்கிறார்கள்.*
அதில் முதலில் செய்யக்கூடியதான தர்ப்பணத்தின் மூலம் நம்முடைய வம்சத்திலே யாகங்கள் செய்து இருந்து வந்த குடும்பத்திலுள்ள ஸ்திரீகள் இறந்தது அவர்களுக்கு ரொம்ப திருப்தியை கொடுக்கின்றது.
இரண்டாவதாக செய்யக்கூடியது பிராஜாபத்தியம் விவாகம் செய்துகொண்டு நிறைய சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, வசதிகள் இருந்தும் ஆனால் அனுபவிக்க முடியாமல்,
புத்திரன் மூலமாக சம்ஸ்காரம் செய்யப்படாமல், எதிர்பார்த்த பலனை பெற முடியாமல் உள்ள ஸ்திரீகளுக்கு திருப்தியை கொடுக்கின்றது.
*மூன்றாவது கர்ப்பத்திலேயே இந்த வம்சத்தில் வந்த பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, பிறக்க முடியாமல், கருக்கலைப்பு ஏற்பட்டதன் மூலம் பிறந்த ஸ்திரீகள்,
பிறந்து கன்னிகா பருவத்தில், இறந்த ஸ்த்ரீகள், கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு கல்யாண வயது வரை வந்து கல்யாணம் செய்து கொள்ளாமல் இறந்த ஸ்திரீகள், இவர்களுக்கு போய் சேருகின்றது.*
*நான்காவதாக செய்யக்கூடியதான இந்த அஷ்டகா சிராத்தத்தில், குறைபட்ட ஸ்திரீகள், சுமங்கலிகளாக இருந்து,
குறைபட்டு போன ஸ்திரீகள், நம்மால் பாகம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு இறந்த ஸ்திரீகள், அதாவது தாய் மாமா இருக்கின்றார்
ஆனால் அவருக்கு குழந்தைகள் இல்லை, அப்போது அவர்களுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்,
அதே போல் நம்மை சுற்றியுள்ள பந்துகள், நாம் செய்ய வைக்க வேண்டும் அல்லது செய்யணும், என்று ஆசைப்பட்டு இருந்து செய்ய முடியாமல் போனால்,
அல்லது அவர்கள் எதிர்பார்த்தும் நடக்க முடியாமல் போன ஸ்திரீகள், இவர்களுக்கு திருப்தியை கொடுக்கின்றது,
இந்த அளவுக்கு இந்த புராணம் முக்கியத்துவத்தை காண்பித்து, நித்தியமாக சொல்லி, கட்டாயம் அஷ்டகா புண்ணிய காலத்தில் நாம் செய்ய வேண்டும்.*
இதில் கட்டாயம் இந்த திஸ்ரேஷ்டகா புண்ணிய காலத்தில், #நம்மிடம் #எவ்வளவு_செல்வங்கள்_இருக்கிறதோ
அவ்வளவையும் செலவு பண்ணி இதை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும் இந்த அஷ்டகா சிராத்தத்தில்.
*அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதை செய்யவில்லை என்றால் இதே போல் நமக்கும் தூக்கங்கள் ஏற்படும் அதற்கு நாம் வாய்ப்பு கொடுக்க கூடாது.*
*இதை நாம் செய்வதினால் நமக்கும் நம்மை சுற்றி உள்ள சந்ததியினருக்கும் நமக்கு அடுத்த தலைமுறைகளும் சௌக்கியமே கிடைக்கும் . அதனாலே இதை நாம் கட்டாயம் செய்ய வேண்டும்.*
*எப்படி ஒரு பசுமாடு, மடி நிறைய பாலை வைத்துக்கொண்டு நீ கறந்து எடுத்துக்கோ என்று நம்மிடத்தில், காத்துக்கொண்டு இருக்குமோ,
அதுபோல பித்ருக்கள், இந்த அஷ்டகா புண்ணிய கால தர்ப்பணங்களை எதிர்பார்த்து, நீங்கள் எல்லோரும் செய்து உங்களுடைய துக்கங்களை நீங்கள் போக்கிக் கொள்ள வேண்டும்,
நான் போக்குவதற்கு தயாராக இருக்கிறேன், அப்படி பித்ருக்கள் வாசலிலேயே காத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம்தான் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.*
*பசுமாட்டை கறக்காமல் விட்டால் நஷ்டம் நமக்குத்தான். அதுபோல நம்முடைய பிதுருக்கள் இந்த திஸ்ரேஷ்டகா புண்ணிய காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆகையால் நாம் அதை எதிர்பார்த்து அவர்களுக்கு செய்ய வேண்டியதான இந்த புண்ணிய காலத்தை செய்து, அவர்களுடைய அனுக்கிரகத்தை நாம்
பூரணமாக அடைய வேண்டும் என்று,இந்த சரித்திரம் நமக்கு காண்பிக்கின்றது அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.*
*இந்த திஸ்ரேஷ்டகா புண்ணிய காலத்தில் அஷ்டகா சிராத்தம் செய்யாமல் இருந்தால் நமக்கு இந்த நாற்பது ஸம்ஸ்காரங்களில் ஒன்று விட்டு போகும்.*
*அப்படி விட்டு போனால் நாற்பது சம்ஸ்காரங்கள் இதுவும் ஒன்று, நமக்கு தோஷங்கள் ஏற்படும். நாம் மிகவும் எதிர்பார்த்து இருந்த ஸ்திரீகளியினுடைய உடைய சாபங்களுக்கு ஆளாக வேண்டி வரும்.*
*மேலும் நமக்கு ஸ்கந்த புராணம் சொல்லும் பொழுது யார் ஒருவன் இந்த அஷ்டகா ஸ்ராத்தம் செய்யவில்லையோ அவன் கயை சென்று எட்டு விதமான ஸ்ராத்தங்களை அவன் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.*
*இப்பொழுது கயா போனால் கூட அங்கு செய்து வைப்பார்கள். அஷ்டகயா சிரார்த்தம் என்று செய்து வைக்கிறார்கள்.
இந்த எட்டு சிராத்தங்களை செய்தால்தான் அஷ்டகா செய்யாததினால் வந்த தோஷங்கள் போக்கும் இன்று காசிகண்டம் நமக்கு காண்பிக்கிறது.*
*இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த திஸ்ரேஷ்டகா புண்ணிய காலம். மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
|
|
|
Post by kgopalan90 on Jan 2, 2021 12:42:40 GMT 5.5
அன்வஷ்டகையை மாசி சிராத்தம் மாதிரி செய்ய வேண்டும்.
சிராத்தங்கள்:--மாசி சிராத்தம்:--மாசி சிராத்தம் நித்ய கர்மாகளில் இதுவும் ஒன்று. க்ருஷ்ண பக்ஷத்தில் ஏதேனும் ஒரு திதியில் தொடங்கி , ஒவ்வொரு மாதமும் அதே திதியில் செய்ய வேண்டும். இது, பிதா , பிதாமஹர்., ப்ரபிதாமஹர் என்ற மூவரை உத்தேசித்து செய்ய படுகிறது.
ஆனால் பித்ருக்கள் பூஜிக்கபடும் இடத்தில் மாதா மஹாதிகளும் பூஜிக்க பட வேன்டும் என விதித்திருப்பதால் , புராணம், ஸ்மிருதியின் படி தாயின் தந்தை, பாட்டனார், அவர் தகப்பனார் ஆகியோரையும் சேர்த்து இரு
வம்சத்திற்கும் , ஹோமம், ப்ராஹ்மண போஜனம், பிண்ட ப்ரதானம் ஆகியவற்றுடன் செய்ய படுகிறது. இன்று செய்யபடும் சிராத்தங்கள் அனைத்திற்கும் இதுவே முன் மாதிரியாகும். இந்த காலத்தில் இது முடியாது.
இதை ஒற்றி வருவதே தர்ச சிராத்தமாகும். இதன் விக்ருதிகளே (96) ஷண்ணவதி சிராத்தங்கள். .ஒரு வருடத்தில் செய்ய வேன்டுவன .இவற்றில் ஒவ்வொன்றிர்க்கும் சிற்சில மாறுதல் உண்டு.
தாய் தந்தையருக்கு செய்யப்படும் ப்ரத்யாப்தீக சிராத்தம்,, கிரஹண, மற்றும் புண்ய கால தர்பணங்கள். முதலியன மாசி சிராத்தத்தை அடிபடையாக கொண்டு செய்ய படுபவை. ஆனால் இவை ஸப்த பாக யக்ஞங்களில் சேராதவை.
இவை ஜீவத்பித்ருகனுக்கு (( தந்தை உயிருடன் இருக்கும்போது)) கிடையாது. ஆனால் மாசி சிராத்தம் தந்தை உயிருடன் இருக்கும் போதும் ஹோமம் வரை செய்ய வேண்டும்.என்பது ரிஷியின் அப்பிப்ராயம். தந்தைக்கு யார் தேவதைகளோ அவர்களே இவனுக்குமாவார். .
ஒளபாசன அக்னியில் பிண்டபித்ரு யக்ஞம் செய்ய வேண்டும்.. அஷ்டகா சிராத்தத்தை ஒரு போதும் விடக்கூடாது. தை அமாவாசையை அடுத்து வரும் க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி ஏகாஷ்டகை எனப்படும். அந்த தேவதையை குறித்து ஹோமமும் பித்ரு, பிதாமஹர், ப்ரபிதாமஹர். மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, விஸ்வேதேவர் இருவர் ஆக எட்டு ப்ராஹ்மனர்களை வரித்து செய்வதால் அஷ்டகா என்று பெயர்.
அஷ்டகா தேவதை பித்ருக்களுக்கு நாம் அளிக்கும் ஹவிஸை அமோகமாக அளவற்றதாக ஆக்கி காமதேனு பால் சுரப்பது போல் சுரப்பதாக கூற பட்டுள்ளது. ஸம்வத்ஸர தேவதையின் பத்நியாகவும் ஏகாஷ்டகை கூறப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு விழிப்பை ஏற்படுத்தி அறிவை தரும் உஷஹ் கால தேவதையும் ஏகாஷ்டகையே. இவளே யாகங்களை செய்விப்பவள் என்றெல்லாம் மிக உயர்வாக கூறப்பட்டுள்ளது.
உரல் அம்மி முதலியவையும் இந்த அஷ்டகா சிராத்தம் செய்வதில் உத்ஸாகத்துடன் ஈடுபடுவதாக வேதம் கூறுகிறது. இந்த காலத்தில் உரல் அம்மி கிடையாது.இதை செய்பவனுக்கு , ஸந்ததி, சாரீர பல விருத்தி, மற்றும் வைதீக கர்மாக்களில் சிரத்தை செய்யக்கூடிய பாக்யம் ஏற்படுகிறது. என்று கூறுகிறது.
இதை கலி யுகத்தில் ஸ்ம்ருதியில் கூறப்பட்டபடி செய்ய முடியாது.
எனவே ரிஷிகள் தத்யஞ்சலி (தயிர்) ஹோமம் எனும் அனுகல்பத்தை விதிதுள்ளனர். இம்முறைகளில் அவதான முறைப்படி கையில் தயிரை எடுத்துக்கொண்டு ஒளபாஸனாக்னியில் ஏகாஷ்டகையை குறித்து ஹோமம் செய்வதாகும்.
( பிறகு சிராத்த முறைப்படி ப்ராஹ்மண போஜனம்) மறுநாள் அன்வஷ்டகை. அன்வஷ்டகையை தர்ச சிராத்தம் போன்றே வர்கத்வய பித்ருக்களை உத்தேசித்து செய்யபடுவது ஆகும். விஸ்வேதேவர், பித்ரு , மாத்ரு, மாதாமஹர், விஷ்ணு என ஐந்து ப்ராஹ்மணர்களை வரித்து சிராத்தம் செய்வது..
05-03-2021; 06-03-2021;07-03-2021 இந்த நாட்களில் அஷ்டகா சிராத்தமோ, தர்பணமோ ஓய்வு பெற்றவர்கள் செய்யலாமே.
Details of ashtaka நமது தர்ம சாஸ்த்திரம் புத்தகத்திலும் அஷ்டகா சிராத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. புரட்டாசி மாதத்திலும், மாசி மாதத்திலும் பித்ருக்களுக்கு அன்னம் அளிக்கவேண்டும். என்று அறிவிக்கிறது. தை மாதத்திற்கு 6ம் மாதம் ஆடி மாதம்; சித்ரைக்கு 6ம் மாதம் ஐப்பசி ( துலா மாதம்.) புரட்டாசிக்கு 6ம் மாதம் மாசி மாதம் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
வருடத்தில் இந்த 96 நாட்கள் பித்ருக்களுக்கு பசி எடுக்கும் என நமது முன்னோர்கள் அறிந்து அந்த நாட்களை காட்டி கொடுத்து இருக்கிறார்கள்.
பசியுடன் இருப்பவருக்கு நாம் உடனே ஆகாரம் அளிக்க வேண்டும்.
மார்கழி. தை. மாசி பங்குனி இம்மாதங்களில் தேய் பிறை சப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் சிராத்தம் மற்றும் தர்ப்பணம் செய்ய வேன்டும் என்கிறது. வைத்தினாத தீக்ஷிதீயம் பக்கம்-321ல்.
ஆஸ்வலாயன மகரிஷி இம்மாதிரி 12 நாட்கள் சிராத்தம் செய்ய முடியாவிடினும் மாசி மாதம் ஒன்றிலாவது அவசியம் செய்ய வேண்டுமென்கிறார்..
அஷ்டமி திதிக்கு முன் தினமும் பின் தினமும் செய்யவேண்டியுள்ளதால் அஷ்டகை என பெயர் பெற்றது..
அஷ்டமிக்கு முன் தினம் பூர்வேத்யுஹு என்றும் அல்லது மூன்று நாள் தொடர்ச்சியாக வருவதால் திஸ்ரேஷ்டகா என்றும் பஞ்சாங்கங்களில் குறிப்பிட்டிருக்கும். . அஷ்டமிக்கு மறுநாள் அன்வஷ்டகா என்றும் பஞ்சாங்கங்களில் இருக்கும். .
வைத்தினாத தீக்ஷதீயம் சிராத்த காண்டம் புத்தகத்தில் இதற்கான மந்திரங்கள், செய்முறை உள்ளன. இதற்கு பண வசதி இல்லாதவர்கள் தர்பணமாவது செய்யுங்கள் என்கிறார்.
இதற்கும் பண வசதி இல்லாதவர்கள் தீர்த்தம் நிறைந்த குடத்தை யாருக்காவது அஷ்டமி அன்று தாநம் செய்யவும் .சிராத்த மந்திரங்களை ஜபம் செய்யுங்கள்; பசு மாட்டிற்கும், காளை மாட்டிற்கும் வைக்கோல். புல் கொடுக்கவும்.
இதற்கும் பண வசதி இல்லாதவர்கள் புல், புதர் இருக்குமிடத்தை தீயிட்டு கொளுத்தி அஷ்டகை செய்யும் சக்தியும், வசதியும் இல்லாததால் இந்த அக்னி தாஹத்தால் நீங்கள் த்ருப்தி அடையுங்கள் என கதறவும்.
ந த்வேவ அ நஷ்டகா ஸ்யாத் என்பதாக நாம் பித்ருக்களுக்கு அஷ்டகா தினங்களில் எதுவும் செய்யாமல் இருக்க கூடாது என்கிறது சாஸ்திரம்.
அஷ்டகை சிராத்தம் செய்பவர்கள் குடும்ப வம்சத்தில் குழந்தைகள் அழகு உள்ளவர்களாகவும், அறிவு உள்ளவர்களாகவும். எப்போதும் மிக பெரிய பணக்காரர்களாகவும் இருப்பார்கள் அனைத்து நன்மைகளும் கிட்டும் என்கிறது நமது தர்ம சாஸ்திரம்.
ஒவ்வொருவரும் அவரவரது ஜீவிய காலத்தில் ஒரே ஒரு முறையாவது இந்த அஷ்டகா சிராத்தம் செய்ய வேண்டும்.
வருடத்திற்கு 96 தர்பணம் செய்பவர்கள் இந்த 12 தர்பணமும் செய்து விடுகிறார்கள்.
96 தர்பணம் செய்ய இயலாதவர்கள் இந்த 12 தர்பணங்கள் செய்யலாம். இதற்கும் முடியாதவர்கள் தை மாதம் சப்தமி, அஷ்டமி, நவமி மூன்று நாள் தர்பணம் செய்யலாம்.
ஒவ்வொரு வருஷமும் நம் தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்வது போல் இந்த சப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் பித்ருக்களுக்கு சாப்பாடு போட்டு ஹோமம் செய்து சிராத்தமாகவும் செய்யலாம்.
---இது இரண்டு விதமாக இருப்பதால் ஏதோ ஒரு முறையில் செய்யலாம்.
ஸப்தமியன்று மாலை 7 மணி சுமாருக்கு ஒளபாஸனம் செய்யவும். இதே அக்னியில் அபூபம் தயாரிக்க வேன்டும். மாலை 5 மணிக்கு 2 கைப்பிடி அளவு பச்சரிசி எடுத்து தண்ணீர் விட்டு களைந்து நிழலில் ஒரு துணி மேல் உலர விடவும்.
நன்றாக உலர்ந்த பிறகு மிக்சியில் மாவாக அறைக்கவும். மாவு சல்லடையில் சலிக்கவும். இந்த மாவில் சிறிது தயிர் விட்டு கெட்டியாக பிசைந்து சப்பாத்தி மாதிரி இட்டு
கொள்ளவும். மாலை 7 மணிக்கு ஒளபசனம் செய்த உடன் ஒளபாசன அக்னியில் தோசை கல்லை போட்டு இந்த அரிசி மாவு சப்பாத்தியை தோசை கல்லில் போட்டு இரு பக்கமும் வேக விடவும். இதுதான் அபூபம்.
இதே ஒளபாசனாக்னியில் மந்திரம் சொல்லி இந்த அபூப ஹோமம். . மீதமுள்ள அபூபத்தை மறு நாள் வரப்போகும் சாஸ்திரிகளை இப்போதே வரசொல்லவும். அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா- 3 பேர். அம்மா, பாட்டி,
கொள்ளு பாட்டி -3 பேர். விசுவேதேவர் -2 பேர். மொத்தம் -8 பேர். இந்த 8 சாஸ்திரிகளை சப்தமியன்று மாலை 6 மணிக்கே வரசொல்லி.
அவர்களை ஆவாஹனம் செய்து இந்த அபூப துண்டுகளையும், கோதுமை மாவு சப்பாத்தி இந்த எட்டு பேருக்கும் தயார் செய்து சட்னியுடன் இலையில் பரிமாறவும்..
அவர்கள் சாப்பிட்ட பிறகு மறு நாள் காலை 10 மணிக்கு அவர்களை வரசொல்லவும். தக்ஷிணை தாம்பூலம், பழம் கொடுத்து அனுப்பவும். கர்த்தா, கர்த்தாவின் மனைவிக்கும் இதே தான் ஆகாரம். .இன்று இரவு.
மறு நாள்அஷ்டமி அன்று காலை 10 மணிக்கு இந்த எட்டு பேர் வந்தவுடன் எண்ணைய், சீயக்காய் கொடுத்து வெந்நீர் போட்டு கொடுத்து ஸ்நானம் செய்து விட்டு வந்தவுடன். முதல் நாள் இரவு ஆவாஹனம் செய்த வாரே
மறுபடியும் ஆவாஹனம் செய்து ஒன்பது ஐந்து வேட்டி துண்டு ஒவ்வொருவருக்கும் கொடுத்து சாப்பாடு போட்டு சிராத்தம் முடிந்த பிறகு தக்ஷிணை, தாம்பூலம் கொடுத்து அனுப்ப வேண்டும்.
இன்று சமாராதனை சமையல், ஒருவருக்கு ஒரு வாழை இலை வீதம் போதும்.. 8 பேர் வைத்து சிராத்தம் செய்ய பண வசதி
இல்லாதவர்கள் அப்பா வர்க்கம் ஒருவர், அம்மா வர்க்கம் ஒருவர்; விசுவேதேவர் ஒருவர் என மூவர் வைத்தும் செய்யலாம். சாஸ்திர சம்மதம் இருக்கிறது.
.மறு நாள் நவமி அன்று வேறு ஐந்து சாஸ்திரிகள் வரச்சொல்லி எண்ணய் ஸ்நானம் செய்து புது ஒன்பது ஐந்து வேட்டி வாங்கி கொடுத்து சிராத்தம் முடிந்த பிறகு தக்ஷிணை தாம்பூலம் கொடுத்து அனுப்ப வேண்டும்.
நவமி அன்று அப்பா வர்க்கம் ஒருவர், அம்மா வர்க்கம் ஒருவர், அம்மாவின் பெற்றோர் வர்க்கம் ஒருவர், விசுவேதேவர் ஒருவர், மஹா விஷ்ணு ஒருவர் என ஐந்து பேர். .
இதற்கு மஹா விஷ்ணுவிற்கும் ஒருவர் அவசியம் வர வேண்டும். ஹோமம் அப்பா வர்க்கம் -6 ஹோமம் வழக்கம்போல். பிறகு தாயின் பெற்றோர் வர்கத்திற்கும் 6 ஹோமம் உண்டு. விகிரான்னம் உண்டு.
பிண்ட ப்ரதானமும் தாய் தந்தையருக்கு 6; அம்மாவின் தாய் தந்தைக்கும் 6 மொத்தம் . காருண்ய பித்ருக்களுக்கு -6 என 18 பிண்டம் . இன்று சிராத்த சமையல் அவரவர் வீட்டு வழக்கப்படி, இரு வாழை இலைகள்..
மஹா விஷ்ணு விற்கு இலை மாத்திரம் போட்டு பரிமாறும் வழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த அஷ்டகா சிராத்தத்தில் மஹாவிஷ்ணுவிற்கு ஒரு சாஸ்திரிகள் அவசியம் வர வேண்டும்.
மற்றொரு விதம்;- இரு கைகளாலும் தயிர் ஹோமம் செய்வது. ததி ஹோமம்.
ஸப்தமி அன்று எதுவுமில்லை. அஷ்டமி அன்று காலையில் தயிர் ஹோமம் ஒளபாசானாக்னியில் செய்து விட்டு நவமி அன்று ஐந்து பேரை வரித்து ஹோமம், சாப்பாடு போட்டும் நிறைவு செய்யலாம்.
அஷ்டகா தர்ப்பணம் முதலில் இரு நாட்களும் செய்து விட்டு பிறகு தான் சிராத்தம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.. ஞாபகமாக இதை வைத்து கொள்ளவும்..
இந்த மூன்று நாட்களிலும் ஒளபாசனம் தினமும் இரு வேளையும் செய்ய வேண்டும்.. மூன்று நாட்களிலும் ஒளபாசன அக்னி அணையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
அல்லது தினமும் விச்சின்னாகினி ஹோத்ரம் செய்து பிறகு ஒளபாசனம் செய்து அந்த அக்னியில் சிராத்த ஹோமம் செய்ய வேண்டும். ரிக் விதான மந்திரம் ஒன்று உள்ளது. இதை நூறு முறை சொல்ல வேண்டும்.
நான்கே வரிகள் தான். இந்த தர்பணம், ஹோமம் செய்யும்போது ஏற்படும் குறைகளை சரி செய்யும்.. ருக் வேத மந்திரம் ஆதலால் சரியாக உச்சரிக்க வேண்டும்.
.அஷ்டகம் 1, 53, 4 ஏ பிர் த்யுபிர் என்று ஆரம்பிக்கும்.. ருக் வேத சாஸ்திரிகளிடம் இதை சரியாக உச்சரிக்க கற்றுக்கொண்டு சொல்லலாம்.
இந்த மூன்று நாட்களாவது தினமும் மூன்று வேளையும் ஸந்தியா வந்தனம் காயத்ரி ஜபம் செய்ய வேண்டும்.
|
|
|
Post by kgopalan90 on Jan 1, 2021 22:23:06 GMT 5.5
நாற்பது ஸம்ஸ்காரங்கள்:-
ஸம்ஸ்காரங்கள் என்பது நமது ஜீவனிடம் உள்ள மலங்களை அகற்றி நம்மை ப்ரும்மத்துடன் ப்ருஹ்ம லோகத்தில் சேர்க்கின்றன.
இவைகளில் சில நம் பெற்றோர்களால் செய்ய தக்கவை. சில நாமே செய்ய தக்கவை.
கர்ப்பாதானம். பும்ஸவனம், ஸீமந்தம், ஜாதகர்மா, நாம கரணம், அன்ன ப்ராஶனம். செளளம், உப நயனம்.
ப்ராஜாபத்யம், ஸெளம்ய, ஆக்னேய வைஶ்வதேவ வ்ருதங்கள், ஸ்நானம், விவாஹம், வைஶ்வதேவம் அல்லது
தேவ, பித்ரு, மனுஷ்ய, பூத, ப்ரும்ம எனும் பஞ்ச மஹா யக்யம். இவை 19.
பாக யக்யங்கள்-7. அஷ்டகா, ஸ்தாலி பாகம், பார்வணம், ஆக்ரஹாயணீ, ஶ்ராவணீ, சைத்ரீ, ஆஶ்வயூஜீ.
ஹவிர் யக்யங்கள்-7. அக்னி ஆதானம், அக்னி ஹோத்ரம், தர்ஶ பூர்ணமாசம், ஆக்ரயணம், சாதுர்மாஸ்யம், நிரூட பஶுபந்தம், ஸெளத்ராமணீ.
ஸோம ஸம்ஸ்தைகள்:-7 அக்னிஷ்டோமம்; அத்யக்னிஷ்டோமம், உக்த்யம், ஷோடஶ, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம்.
ஆக இவைகளே 40 ஸம்ஸ்காரங்கள்.
ஸ்தாலி பாகம்:- இது அமாவாசைக்கு மறு நாளும், பெளர்ணமிக்கு மறு நாளும் வரும் ப்ரதமை அன்று மாதா மாதம் செய்ய வேண்டும்.
ஒளபாசன அக்னியிலேயே ஸ்தாலியில் சருவை வைத்த அக்னிக்கும் ஸ்விஷ்ட க்ருத்துக்கும் ஒவ்வொரு ஹோமம் செய்ய வேண்டும். ஆக்ரயன, ஸர்ப்ப பலி முதலியவைகளுக்கு இது ப்ரக்ருதி ஆகும்.
பார்வணம்:- இதை மாஸி ஸ்ராத்தம் என்று கூறுவார்கள். இது தான் எல்ல ஶ்ராதத்திற்கும் ப்ரக்ருதியானது. ப்ரக்ருதி என்றால் பூர்ணம் என்று பொருள்.
இதை போலவே மற்றவைகளை செய்ய மேற்கோளாக இருக்கிறது.
இதற்கு மாறானது விக்ருதி எனப்படும். சில மாறுதல்களுடன், மாறுதல்கள் இல்லாத இடத்தில் ப்ரக்ருதியை போல் செய்வது என்று பொருள்.
ஶ்ராவணீ ஆவணி மாதம் பெளர்ணமியில் செய்ய வேண்டிய கர்மா. இதை ஸர்ப்ப பலி என்றும் கூறுவர்.
ஆவணி பெளர்ணமி இரவில் சரு ஆஜ்ய ஹோமம் செய்து , சரு என்றால் கஞ்சி வடிக்காத அன்னம் என்று அர்த்தம். ஆஜ்யம்= நெய்.
பலாச புஷ்பங்களால் இரு கரங்களாலும் ஹோமம் செய்து , ஸர்ப்பங்களுக்கு புற்று அல்லது சுத்தமான இடத்தில் பச்சை அரிசி மாவினால் கோலம் போல போட்டு
ஸர்ப்ப மந்திரங்களை கூறி உபஸ்தானம் செய்வது ஸர்ப்ப பலியாம். இம்மாதிரி தினமும் ஆவணி பெளர்ணமி முதல் மார்கழி பெளர்ணமி வரை தினமும் செய்ய வேண்டும்.
ஆக்ர ஹாயணீ;- ஆவணி பெளர்ணமியில் ஆரம்பித்த ஸர்ப்ப பலியை மார்கழி மாத பெளர்ணமியில் , ஆவணி மாதம் செய்ததைபோல் ஹோமம் செய்து பூர்த்தி செய்யனும்.
ஸர்ப்பங்களை அடித்து அதனால் ஸர்ப்ப சாபம் பெற்று அதனால் சந்ததி இல்லாதவர்கள் ஸர்ப்ப சாந்தி செய்வது போல் ஸர்ப்ப பலி செய்தால் ஸர்ப்ப சாபமாக இருந்தாலது அகன்று விடும்.
அதனால் இது ஸம்ஸ்கார மான நித்ய கர்மாவாக இருந்தாலும் , காம்ய கர்மா போல் காம்யத்தையும் பூர்த்தி செய்யும்.
சைத்ரீ:- சித்திரை மாத பெளர்ணமி யன்று செய்ய வேண்டியது. ஈசான தேவதையை ஆராதிப்பதால் ஈசான பலி என்று பெயர். இதை கோவில்களில் செய்ய வேண்டும்.
ஆஶ்வயுஜி:- கார்த்திகை மாத பெளர்ணமியில் செய்ய வேண்டிய கர்மா இது. இதை ஆக்ரயண ஸ்தாலி பாகம் என்று கூறுவார்கள்.
இதில் ஶ்யாமாகம் என்னும் தான்யத்தை கொண்டு பாகம் செய்து ஹோமம் செய்ய வேண்டும்.
அக்னி ஆதானம்:- கார்ஹ பத்யம், ஆஹவனீயம், தக்ஷிணாக்னி என்ற மூன்று அக்னிகளை ஆரம்பிப்பது .
அக்னி ஹோத்ரம்:- தினமும் காலை மாலைகளில் ஒளபாசனம் மாதிரி இவைகளில் ஹோமம் செய்வது.
தர்ஶ பூர்ண மாசம்:- ப்ரதமைகளில் செய்யும் இஷ்டி. இது தர்ச பூர்ண ஸ்தாலி பாகம் போன்றது.
ஆக்ரயணம்:- ஶ்யாமை தான்யத்தை கொண்டு செய்யும் இஷ்டி.
சாதுர் மாஸ்யம்:- பல இஷ்டிகள் சேர்ந்த ஒரு கர்மா.
நிரூட பஶுபந்தம், ஸெளத்ராமணி இவ்விரண்டும் ஆண்டுக்கு ஒரு முறை செய்யும் கர்மா.
கர்ப்பா தானம் போல் ஒவ்வொரு ப்ராஹ்மணனும் அவசியம் செய்ய வேண்டிய முக்கிய கர்மா இவைகள்.
அஷ்டகா;-
திஸ்ரேஷ்டகா; அஷ்டகா; அன்வஷ்டகா.
மார்கழி ,தை, மாசி ,பங்குனி மாதங்களின் க்ருஷ்ண பக்ஷ ஸப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் பித்ருக்களுக்கு சிராத்தம் அல்லது தர்பணம் செய்ய வேன்டும். ஜனவரி-5,6,7.;பெப்ரவரி -3,4,5.;மார்ச்-5,6,7.ஏப்ரல் 3,4,5.
அஷ்டமி அன்று செய்யப்படும் அஷ்டகைய ப்ரதானமாக க்கொண்டு முதல் நாள் சப்தமிக்கு பூர்வேத்யு; என்று பெயர். மறு நாள் நவமிக்கு அநு+அஷ்டகா ==அந்வஷ்டகா என்று பெயர்.
மேற்கூறிய நான்கு மாதங்களிலும் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் வீதம் 12 தர்பணங்கள் ஷண்ணவதி தர்பணம் செய்பவர்கள் செய்ய வேண்டும். இது முதல் பக்ஷம்.
ஷண்ணவதி தர்பணம் செய்ய இயலாதவர்கள் தை மாதம் மட்டும் (மாக மாதம்) ஸப்தமி, அஷ்டமி, நவமி அன்று தர்பணம் செய்யலாம். அல்லது அஷ்டமி ஒரு நாளாவது பித்ருக்களுக்கு தர்பணம் செய்ய வேண்டும். மார்ச் 5,6,7.
ஒவ்வொரு வருஷமும் தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்வது போல் இந்த அஷ்டகை, அந்வஷ்டகை நாட்களிலும் பித்ருக்களுக்கு ஹோமம் செய்து, சாப்பாடு போட்டு , முறையாக சிராத்தமாக செய்யலாம். இது இரண்டு விதமாக இருக்கிறது.
1, ஸப்தமி அன்று மாலை ஒளபாசனாக்னியில் அப்பம் தயார் செய்து ஹோமம் செய்ய வேன்டும். மறு நாள் அஷ்டமியன்று காலையில் எட்டு பேரை வரித்து தர்பணம் செய்து விட்டு, ஹோமம் செய்து முறையாக சிராத்தம் செய்ய வேன்டும். மறு நாள் (நவமி) அன்வஷ்டகா அன்று ஐந்து பேரை வரித்து சிராத்தம் செய்ய வேண்டும்.
2. அல்லது ஸப்தமி அன்று மாலை மற்றும் அஷ்டமி அன்று செய்ய வேண்டிய அஷ்டகா சிராத்தம் இரண்டிற்கும் பதிலாக தத்யஞ்சலி ஹோமம் என்னும் ஹோமம் செய்துவிட்டு மறு நாள் (நவமி) அன்வஷ்டகை அன்று ஐந்து பேரை வரித்து ஹோமம் செய்து, சாப்பாடு போட்டு சிராத்தம் செய்யலாம்.
அல்லது இந்த நாட்களில் சிராத்தம் அல்லது தர்பணம் செய்யும் போது ஏற்படும் குறைவை நிறைவு செய்ய ஒரு மந்திரத்தை நூறு முறை ஜபம் செய்யலாம்.
(ரிக் விதானம்) ஏபிர் த்யுபிர் ஜபேந் மந்திரம் சத வாரம் து தத் திநே.. அன்வஷ்டக்யாம் யதா ந்யூனம் ஸம்பூர்ணம் யாதி சர்வதா. என்பதாக அன்வஷ்டகை யன்று சிராத்தம் அல்லது தர்பணம் செய்யும்போது ஏற்படும் குறைவை நிறைவு செய்ய விரும்புவர்கள் ,
ரிக் வேதத்திலுள்ள ஏபிர் த்யுபி: (அஷ்டகம்-1,53,4 ).என்று தொடங்கும் வேத மந்திரத்தை நூறு முறை ஜபம் செய்யலாம். இதனால் அஷ்டகை, அந்வஷ்டகையில் ஏற்பட்ட தோஷம் விலகு மென்கிறது ரிக் விதானம் என்னும் புத்தகம்.
அஷ்டகா : மாக மாசத்தில் அஷ்டகாதி சிராத்தம்.:- முதல் நாள் இரவு ஒளபாசனம் செய்து . ஒரு வகையான அடைபோல் செய்து , அஷ்டகா தேவதைக்கு ஒரு ஹோமமும் ,
ஸ்விஷ்டக்ருத்திற்கு ஒரு ஹோமமும் செய்ய வேண்டும். . அதன் மிகுதியை , மறு நாள் ப்ராம்மணர்களாக வரிக்கும் எட்டு ப்ராஹ்மணர்களுக்கும் அளிக்க வேண்டும்.
அஷ்டகா சிராத்தத்தில் விச்வேதேவர் இருவர், பித்ரு வர்க்கம் மூவர், மாத்ரு வர்க்கம் மூவர் ஆக எட்டு ப்ராஹ்மணர்களை வரித்து , பார்வண சிராத்தம் போல் சில மாறுதல்களுடன் செய்ய வேண்டும்.
அஷ்டமி இரவு ஒளபாசனம் செய்து விச்வே தேவர்களுக்காக ஒருவர் ,பித்ரு, பிதாமஹர். ப்ரபிதாமஹருக்கு ஒருவர், மாத்ரு, பிதாமஹி ப்ரபிதாமஹிக்கு ஒருவர், மாதாமஹ வர்க்கத்திற்கு ஒருவர், மஹாவிஷ்ணுவிற்கு ஒருவர்,
ஆக ஐந்து ப்ராஹ்மணர்களை வரித்து , நவமி அன்று சில மாறுதல்களுடன் பார்வண சிராத்தம் போல் செய்ய வேண்டும்.
அந்வஷ்டகைக்கு ப்ரதிநிதியாக தத்யஞ்சலி ஹோமம் ஒன்றை செய்ய வேண்டும்.. அதில் இரு கரங்களாலும் தயிரை எடுத்து , அஷ்டகா தேவதைக்கு ஒரு ஹோமமும் , ஸ்வஷ்டக்ருத்துக்கு ஒரு ஹோமமும் செய்ய வேண்டும்.
மாக மாதத்தில் பெளர்ணமிக்கு பிறகு வரும் க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி , கேட்டை நக்ஷதிரத்துடன் கூடும். அதில் அஷ்டகா சிராத்தம் செய்ய வேண்டும். ஸுதர்சண பாஷ்யத்தில் கேட்டை நக்ஷத்திரம் கூடாமலிருந்தாலும் அந்த அஷ்டமியில் அஷ்டகா சிராத்தம் செய்ய வேண்டும் ..எனக்கூறபடுகிறது.
அஷ்டமி அன்று செய்ய வேன்டிய அஷ்டகா சிராதத்திற்கு அங்க பூதமான அபூப ஹோமம் செய்ய வேண்டும். ஸப்தமி அன்று மாலை ஒளபாசனம் செய்து அதில் (நெல்லைக்குத்தி அரிசியாக்கி, மாவாக்கி, அதை தட்டையாக செய்து வேக வைக்க வேண்டும்.) இது தான் அபூபம் என்பது.
பிறகு பார்வண ஸ்தாலி பாகத்தில் சொன்ன மாதிரி அக்னிப்ரதிஷ்டை முதல் ஆஜ்ய பாகம் வரை செய்துகொண்டு , அஞ்சலியால் அபூபம் எடுத்துக் கீழ் கண்ட மந்திரத்தை சொல்லி ஹோமம் செய்ய வேண்டும்.
“”யாம் ஜனா: ப்ரதிநந்தந்தி ராத்ரீம் தேநுமிவாயதீம் ஸம்வத்சரஸ்ய யா பத்னீ ஸா னோ அஸ்து ஸுமங்கலி ஸ்வாஹா.”” ஏகாஷ்டகையை ஸம்வத்சர பத்நியாக மற்ற விடத்தில் சொல்லியிருந்தாலும் ஏகாஷ்டகையின் ஸாமீப்யம் இருப்பதால் ஸப்தமி திதியின் ராத்ரியும் சம்வத்ஸர பத்நியாக இங்கு ஸ்துதிக்கப்படுகிறது.
கேட்டை நக்ஷதிரத்துடன் மாக மாத க்ருஷ்ண பக்ஷ அஷ்டமியும் சேர்வதை ஏகாஷ்டகை என்கின்றனர். ஹோமம் செய்த பிறகு மிச்சமுள்ள அபூபத்தை எட்டாக பிறித்து எட்டு ப்ராஹ்மணர்களுக்கு கொடுக்க வேன்டும். ராத்ரியின் அபிமான தேவதையை ஹோமத்தால் பூஜிக்கிறோம்.
பாலில் மாவை போட்டு கிண்டிய கூழுக்கு பிஷ்டான்னம் என்று பெயர். இந்த பிஷ்டான்னத்தால் ஹோமம் செய்ய வேன்டும்.””உக்தயஸ்ச அஸி அதிராத்ரஸ்ச ஸாத்யஸ்கிஸ்சந்த்ரஸாசஹா. அபூபத்ருதாஹுதே நமஸ்தே அஸ்து மாம்ஸபிப்லே ஸ்வாஹா. “
பிறகு ஆஜ்ய ஹோமம் .பின் வரும் ஏழு மந்திரம் சொல்லி. .பூ: ப்ருதிவ்யகினமர்சாமும்மயி காமம் நியுநஜ்மிஸ்வாஹா. ,.புவோ வாயுநா அந்தரிக்ஷேண ஸாம்னாமும் மயே காமம் நியுனஜ்மி ஸ்வாஹா. ஸ்வர்திவஆதித்யேன யஜுஷாமும் மயே காமம் நியுனஜ்மி ஸ்வாஹா.
ஜனதப்திரதர்வாடிங்கரொ பிரமும் மயி காமம் நியுநஜ்மி ஸ்வாஹா. ரோசனாயாசிராயாக்னயே தேவஜாதவே ஸ்வாஹா. கேதவே மனவே ப்ருஹ்மணே தேவஜாதவே ஸ்வாஹா
ஸ்வதா ஸ்வாஹா. அக்னயே கவ்ய வாஹனாய ஸ்வதா ஸ்வாஹா. பிறகு ஸ்விஷ்ட கிருத் என்ற கர்மம் முதல் பிண்டப்ரதானம் என்ற கருமம் முடிய உள்ள கார்யங்களை மாஸி சிராதத்த்தில் செய்த மாதிரி செய்ய வேணும்..
நவமி அன்று மட்டும் தான் ( அன்வஷ்டகையில் தான்) பிண்டதானம் செய்ய வேண்டும். என சிலர் வாதம். இது அஷ்டகையின் முக்ய கல்பம்.
இனி கெளண கல்பம் கூறப்படுகிறது. எந்த மந்திரம் சொல்லி அபூப ஹோமம் செய்கிறோமோ அதே மந்திரத்தை சொல்லி அஞ்சலியால் தயிரை ஹோமம் செய்ய வேண்டும்.இது மற்றொரு முறையாகும்.
யாம் ஜனா: ப்ரதிநந்தந்தி என்றதால் தயிரை ஹோமம் செய்ய வேண்டும். அபூபத்தை விலக்க வேண்டும். இந்த தயிர் ஹோமமானது அபூப ஹோமம் முதல் ஆஜ்ய ஹோமம் முடியவுள்ள
எல்லா கர்மங்களின் ஸ்தானத்திலும் விதிக்க படுவதால் இந்த தயிர் ஹோமத்தை தவிர்த்து மற்ற ஹோமங்களை செய்ய வேண்டுவதில்லை என்று ஸுதர்சன பாஷ்யத்தில் கூறப்பட்டிருக்கிறது.
|
|
|
Post by kgopalan90 on Dec 31, 2020 15:54:08 GMT 5.5
29/12/2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமம் மந்திரங்களின் அர்த்தங்களை விரிவாக மேலும் தொடர்கிறார்.*
*அந்த ஆவஹந்தி ஹோமம் இரண்டு பாகங்களாக இருக்கிறது என்று பார்த்தோம் முதலில் இந்திரனை குறித்து ஜபம் செய்வதாகவும், ஹோமம் செய்வது என்பது இரண்டாவது பகுதி.*
*ஜபம் செய்ய வேண்டிய மந்திரம் வேறு ஹோமம் செய்ய வேண்டிய மந்திரம் வேறு. பொதுவாக எந்த மந்திரத்தை ஜபம் செய்கிறோமோ அதேதான் ஹோமம் செய்வதும் வழக்கம். ஆனால் இங்கு மாத்திரம் ஜெபத்திற்கு மற்றும் ஹோமத்திற்கு*
மந்திரங்கள் தனித்தனி.
*இப்படி இரண்டு பாகமாக வேதமே நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறது. இந்த மந்திரத்திற்கான அர்த்தம் என்று பார்க்கும் பொழுது, இந்த மந்திரம் தான் ஜெபம் செய்ய வேண்டிய மந்திரம். இந்திரனுடைய சன்னதியில் ஜபம் செய்ய வேண்டிய மந்திரம். நாம் வாக்கினால் உபயோகப்படுத்தக் கூடிய அனைத்து வார்த்தைகளுக்கும் சந்தஹா என்று பெயர்.*
*மனுஷர்கள் மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகள் பிராணிகள், பக்ஷிகள் மரம் செடி கொடிகள், பஞ்சபூதங்கள் அனைத்துமே ஒவ்வொரு விதமான சப்தங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த அனைத்து சப்தங்களுக்கு ம் அதிபதி தலைவன் யார் என்றால் பிரணவாத்தகமாக உள்ள இந்திரன், ஓம் காரத்திற்கு பிரணவம் என்று பெயர். இந்த பிரணவம் தான் அனைத்து வார்த்தைகளுக்கும் முதலாக இருக்கக்கூடிய ஈஸ்வர சப்தம்.*
*அனைத்து வார்த்தைகளுக்கும் சிறந்தது. அந்தப் பிரணவமும் சிறந்ததாகவும் பிரணவ் ஆத்மாவாக உள்ள இந்திரனும் நமக்கு பிரகாசிக்கிறார்.*
*அனைத்து தேவதைகளுக்கும் அதிபதியாகவும் அவர்கள் ஆவிர்பவிப்பதற்க்கு*
*முதன்முதலாக* *இருப்பவரும், இந்திரன் இருக்கிறார் அமிர்தம்*
*அதாவது மரணமே இல்லாமல் இருப்பவர்களுக்குத்தான் தேவர்கள்/தேவதைகள் என்று பெயர்.*
*தேவதைகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்றால், மரணம் என்பது கட்டாயம் உண்டு என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. பிறந்தவனுக்கு இறப்பும் இறந்தவனுக்கு பிறப்பும் கட்டாயம் உண்டு. இவை இரண்டுமே இல்லை என்பது தான் என்பவர்கள் தான் தேவர்கள் தேவதைகள்.*
*இறந்தவர்கள் தான் பிறக்கப் போகிறார்கள். அந்த இறப்பு என்பது இல்லை என்றால், அவன் எங்கிருந்து பிறக்கப்போகிறான் எப்போதும் தான் இருக்கின்றானே.*
*நம் வாழ்க்கையில் முதலில் வரக்கூடியது இறப்பு*
*தான். இறந்ததன் மூலமாகத்தான் நாம் ஒருவரும் பிறக்கின்றோம். அப்போது அந்த இறப்பு என்பதை நாம் தவிர்க்க வேண்டும் நிறுத்த வேண்டும். அந்த இறப்பு என்பது நமக்கு இல்லாமல் செய்பவர்கள் தான் தேவர்கள்.*
*அப்படி அனைத்துக்கும் ஆதாரமாகவும் முதன்முதலாக சிறந்தவராகவும் உள்ள அந்த இந்திரன் ஆனவர் தேவராஜன் என்று இந்திரனுக்கு பெயர். தேவதைகளுக்கு எல்லாம் அதிபதியாக இராஜா போலுள்ள இந்திரன் ஆனவர் எனக்கு சில அனுக்ரஹத்தை செய்ய வேண்டும். என்ன அனுகிரகம் என்றால், நல்ல ஞாபக சக்தி அனைத்து விஷயங்களையும் கிரகிக்க கூடிய சக்தி. நம்முடைய மூளை மூன்று விதமாக செயல்படுகிறது. அதாவது அனைத்து விஷயங்களையும் சரியான முறையில் கிரஹிக்க கூடியது.*
*உள்வாங்கியதை நம்முடைய மனதில் நிலைநிறுத்துவது. அப்படி நம்முடைய மூளையில் நிலைநிறுத்தியதை தக்க சமயத்தில் வெளிப்படுத்துவது. இந்த மூன்றும் மூளைக்கு கட்டாயம் தேவை.*
*இதற்குத்தான் மேதா என்று பெயர் இந்த மூன்றும் சேர்ந்தது. அனைத்து உலக விஷயங்கள் வித்தைகள் எல்லாவற்றையும் சரியான முறையில் நம்முடைய புக்தி சக்தியானது சரியான முறையில் கிரகிக்க வேண்டும். படிக்கப் படிக்க நமக்கு அது மறந்து கொண்டே வருகிறது என்றால் அது புரோஜனம் படாது. அப்படி இருந்தால் வேடிக்கையாக அனைத்தும் படித்தவன் என்று சொல்வது.*
*அதை சரியான சமயத்தில் வெளிப்படுத்த தெரியவேண்டும். இந்த சக்தியை இந்திரன் ஆனவர் எனக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டும். அதற்கு தகுந்தார்போல் என்னுடைய மேத்தா சக்தி இருக்க வேண்டும். அப்படித்தான் இருக்கின்றது அதாவது ஒவ்வொருவருடைய மூளையும் 10 கம்ப்யூட்டருக்கு சமம். ஆனால் அதை நமக்கு வெளிப்படுத்த தெரியவில்லை. அப்படியெல்லாம் இல்லாமல் நன்றாக நமக்கு அதை புத்தி சக்தியுடன் நானே கிரகிக்கும் படியாக ஆக வேண்டும்.*
*எதற்கு என்னுடைய படிப்பை வைத்துக்கொண்டு இந்த உலகத்தில் வாழ்ந்து மரணத்தை நான் ஜெயிக்க வேண்டும். அப்படிப்பட்ட சக்தியை இந்த இந்திரன் எனக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டும்.*
*அதற்கு ஆதாரமாக உள்ளது இந்த சரீரம் தேகம். இந்த சரீரம் ஆரோக்கியமாக இருந்தால்தான் மற்ற காரியங்களில் நாம் ஈடுபட முடியும். அதற்கு என்னுடைய அனைத்து இந்திரியங்களும் சரியான முறையில் செயல்பட வேண்டும். நம்முடைய உடம்பில் என்னென்ன அங்கங்கள் இருக்கின்றன அவ்வளவும் சரியான முறையில் ஆரோக்கியமான முறையில் செயல்பட வேண்டும்.*
*என்னுடைய வாக்குகளில் இருந்து நல்ல வார்த்தைகளே வரவேண்டும். மற்றவர்களுக்கு ஒரு கோபத்தையோ தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது. என்னுடைய காதுகள் மூலம் எப்போதும் நல்ல விஷயங்களையே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். நல்ல விஷயங்கள் தான் என்னுடைய காதில் விழவேண்டும்.*
*இவ்வளவு அனு கிரகத்தையும் செய்ய முடியும் என்கின்ற இடத்திலுள்ள இந்திரனே, நீ எங்கு இருக்கிறாய் என்றால் பரமேச்வரனுடைய ஸ்தானத்திலே இருக்கிறாய். ஈஸ்சானாம் சர்வ வித்யானாம் என்று பரமேஸ்வரனை வேதம் சொல்கிறது. அனைத்து வித்தைகளுக்கும் அதிபதி வித்தைகள் ஆக உள்ளவர் யார் என்றால் பரமேஸ்வரன்.*
*பஞ்சபூதங்களாக உள்ளவர் பரமேஸ்வரன். அந்த இடத்தில் நீ இருப்பதினால் இந்த அனுபவங்கள் அவ்வளவையும் எனக்கு நீ செய்ய வேண்டும். மேலும் சில அனுபவங்களையும் எனக்கு செய்ய வேண்டும் அது என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்பm
10ம. ·
|
|
|
Post by kgopalan90 on Dec 29, 2020 21:07:12 GMT 5.5
31-12-2020:--பரசுராம ஜயந்தி;
ஶ்ரீ மஹா விஷ்ணுவின் ஆறாவது அவதாரம். த்ரேதா யுகத்தில் ரேணுகா தேவிக்கும் ஜமதக்னி மஹரிஷிக்கும் மகனாக பிறந்தார். தந்தை சொல்படி தாயின் தலையை துண்டித்து பின்னர் தந்தையிடம் வரம் பெற்று தாயை உயிர்பித்தார். ஏழு சிரஞ்சீவிகளில் இவரும் ஒருவர். இன்று பரசு ராமரைபூஜிப்போம்
|
|
|
Post by kgopalan90 on Dec 29, 2020 12:31:04 GMT 5.5
26 & 27/12/2020 No Broadcaste*
*28/12/2020*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமம் அதனுடைய பெருமைகளையும் அதனுடைய முக்கியத்துவத்தையும் மேலும் தொடர்கிறார்.*
*இரண்டு பாகங்களாக இந்த ஆவஹந்தி ஹோமம் இருக்கிறது என்பதை முதலில் பார்த்தோம். பூஜை ஜெபம் ஒரு பாகமாகவும் ஹோமம் மற்றொரு பாகமாகவும் இருப்பதைப் பார்த்தோம்.*
*இந்த ஆவஹந்தி ஹோமத்திற்கு நிறைய பலன்கள் சொல்லப்பட்டு இருந்தாலும் முக்கியமாக ஐந்து பலன்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.*
*மந்திரங்கள் இந்த ஐந்து பலன்களையும் விரிவாக பிரார்த்திக்கிறது. ஐந்து காமனைகளுக்காக இந்த ஹோமம் செய்யப்பட வேண்டும் என்று வேதம் நமக்கு காண்பிக்கின்றது. அதாவது முதலில் மேதா காமாய. ஞாபகசக்தியை அதிகப்படுத்துவது வேத வித்தையை நமக்கு சொல்வது இதை ஆவஹந்தி ஹோமம் நமக்கு காண்பிக்கிறது. நாம் படிக்க வேண்டிய படிப்பு அதுதான் வித்யா. வேதத்திற்கு தான் வித்தியா என்று பெயர்.*
*லௌகீதமாக நாம் என்ன படித்தாலும் அதை படிப்பு என்று சொல்வதில்லை. நம்முடைய குழந்தைகளையே பையன் என்ன பண்ணுகிறான் என்றால் BA/M.Com/MCA/B.Tech பண்ணுகிறான் என்றுதானே சொல்கிறோம். படித்துக் கொண்டிருக்கிறான் என்று சொல்வதில்லையே. MBBS பண்ணுகிறான்* என்று தான்
*சொல்கிறோமே ஒழிய படித்துக் கொண்டிருக்கிறான் என்று நாம் சொல்வதில்லை. தர்மசாஸ்திரம் வேதத்தை தான் வித்யா என்று சொல்லியிருக்கிறது.*
*காயத்ரி முதல் கொண்டு அனைத்து வேத மந்திரங்களும் சிந்திக்கின்றது இந்த ஆவஹந்தி ஹோமத்தின் மூலம். ஞாபக சக்தியை அதிகப்படுத்துகிறது ஜாஸ்தியாக உள்ளவர்கள், அல்லது மன அழுத்தம்/கவலை ஜாஸ்தியாக உள்ளவர்களுக்கு இந்த ஆவஹந்தி ஹோமம் ஒரு அருமருந்து.*
*இரண்டாவது தன காமாய ஐஸ்வர்யம் நிறைய வரும். தனம் என்றால் வரவு செலவுக்கு யோக்கியதை ஆக உள்ளது தனம் என்று பொருள். தனம் என்றால் பணம் மட்டும் பொருளல்ல அது வெள்ளை பணமாக இருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கைக்கு அது பயன்படும் வேண்டும். அதற்குத்தான் தனம் என்று பெயர்.*
*பணம் நமக்கு பற்றாக்குறையாக இருக்கிறது நிறைய தேவைப்படுகிறது, இதற்காகவும் இந்த ஆவஹந்தி ஹோமம் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்றாவதாக வாக் சித்தியை கொடுக்கிறது.*
*வாக் சித்தி என்றால் வாக்கிலிருந்து நல்ல வார்த்தைகள் தான் வரவேண்டும். வார்த்தைகள் தடித்து வரக்கூடாது. அதையும் இந்த ஹோமம் நமக்கு கொடுக்கிறது. மிகவும் கோபப்படக் கூடிய வார்த்தைகள் யாரிடம் பேசினாலும் வரக்கூடாது. கேட்போருக்கு இனிமையாக இல்லாவிட்டாலும்கூட அவர்களுடைய கோபத்தை ஏற்படுத்தும் படியாக இருக்க கூடாது நாம் பேசக்கூடிய வார்த்தைகள்.*
*நான்காவது பலன் நம்முடைய உடம்பில் 175 பாகங்கள் இருக்கின்றன. அதாவது அங்கங்கள். அவைகள் அனைத்தும் நன்றாக ஆரோக்கியமாக செயல்படுவதற்கு இந்த ஆவஹந்தி ஹோமம் மிகவும் முக்கியமானது.*
*பொதுவாக தேக ஆரோக்கியம் என்று நாம் சொல்கிறோம். இருதயம் முதற்கொண்டு எல்லா பாகங்களும் ஆரோக்கியமாக செயல்படுவதற்கு இந்த ஆவஹந்தி ஹோமம் மிகவும் பயனுள்ளதாக நமக்கு அமைகிறது. இருதயம் தான் நம்முடைய உடம்பில் உள்ள அனைத்து அங்கங்களுக்கும் இரத்தத்தை அனுப்புகிறது. 175 அங்கங்களுக்கும் அனுப்பிக் கொண்டே இருக்கின்றது. இருதயத்திலிருந்து ஆரம்பித்து எல்லா அங்கங்களும் நன்றாக செயல்படுவதற்கு இந்த ஆவஹந்தி ஹோமம் வழி செய்கிறது. அதாவது அந்த மந்திரங்களில் அப்படி வர்ணிக்கப்படுகின்றன*
*ஐந்தாவது முக்கியமான பலன் நம்முடைய சமூக தாரோடு நம்மை சேர்கிறது. ஒரு பத்து பேர் சேர்ந்து ஒரு காரியத்தைச் செய்வது என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது இந்த நாட்களில். ஏனென்றால் 10 பேருக்கும் 10 விதமான அபிப்பிராயங்கள்/எண்ணங்கள்/பேச்சுகள் இதனால் சிதறிப் போய் விடுகின்றன. ஒரு சமூகமாக பத்து பேர் சேர்ந்து ஒரு காரியத்தை செய்வது என்பது இல்லாமல் போய்விட்டது. சொந்த அண்ணன் தம்பிகளே சேர்ந்து ஒரு காரியத்தை செய்வது என்பது இல்லாமல் போய்விட்டது.*
*இந்த நாட்களில் கணவன் மனைவிகள் சேர்ந்து இருப்பது ரொம்ப ஒற்றுமை என்று சொல்லுமளவுக்கு வந்துவிட்டது. அப்படி இருக்கக்கூடாது சிதறிபோகாமல் இருக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து காரியங்களை செய்ய வேண்டும். அனைவரும் சேர்ந்து ஒரு குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நம் சமூகத்தோடு சேர்ந்து இருப்பது என்பது கட்டாயம் வேண்டும்.*
*அது இல்லையென்றால் மனநிம்மதி நமக்கு சுத்தமாக போய்விடும். நாம் வாழ்ந்தும் வாழாது அதுபோல் சிதறிப் போய்விடும். அப்படி இந்த மந்திரங்கள் வருணிக்கின்றன நம் சமூகத்தோடு சேர்ந்து வாழ வேண்டும். இந்த ஆவஹந்தி ஹோமத்தின் உடைய மந்திரங்கள் மிக அற்புதமாக காண்பிக்கின்றன. ஆகையினாலே தான் மஹாபெரியவா கட்டாயம் வலியுறுத்தி நாம் எல்லோரும் இந்த ஐந்து பலன்களும் அவசியம் பெற வேண்டும் என்பதற்காக சொல்லியிருக்கிறார்.*
*இந்நாட்களில் நம் சமூகத்துக்கு இந்த ஐந்து பலன்களும் தேவைப்படுகிறது. பணம் காசு நிறைய தேவைப்படுகின்றது அதை சேர்ப்பதற்கு குறுக்கு வழியில் போகலாமா என்று தோன்றுகிறது. இதேபோல் ஞாபகசக்தி சுத்தம்மாக குறைந்து போய்விட்டது. ஒரு கணக்குப் போட வேண்டுமென்றால் கூட சட்டென்று கால்குலேட்டர் அல்லது மொபைல் போன் எடுத்து விடுகிறோம். சட்டென்று யோசனை செய்து ஒரு எண்ணை நம்மால் சொல்ல முடியவில்லை ஞாபக சக்தி குறைந்து போய் விட்டது.*
*மூன்றாவதாக வாக்கு மிகவும் தடிமனாக இருக்கிறது. ஒரு விவேகம் தெரியாமல் எதைப் பேச வேண்டும் எதைப் பேசக்கூடாது என்று தெரியாமல் போய்விட்டது. வார்த்தைகள் படிப்பதினால் மன உளைச்சல் உண்டாகிறது. மனஸ்தாபங்கள் ஏற்படுகின்றன. யாரிடம் என்ன பேசவேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நம்மை விட வயதில் பெரியவர்கள் குடும்பத்தாரிடம் மற்றும் நம்மை விட சிறியவர்கள் இடம் எப்படி பேச வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.*
*இந்த நாட்களில் இவை அனைத்துமே சொல்லிக் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் . நான்காவதாக தேக ஆரோக்கியத்திற்கு சொல்லவே வேண்டாம். தேக ஆரோக்கியம் நன்றாக தேவைப்படுகிறது மேலும் இவை அனைத்திற்கும் மேலாக, நம்முடைய சமூகத்தார் அனைவரும் எங்கு இருக்கிறார்கள் என்றால் பாரததேசம் முழுவதும் சிதறி இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அனைவரும் சேர்ந்து ஒரு காரியத்தை செய்வது அல்லது அடிக்கடி பார்த்துக் கொள்வது இல்லாமல் போய்விட்டது. இந்த ஐந்து பலன்களும் நமக்கு தேவைப்படுகின்றது என்பதை மனதில் வைத்துக் கொண்டுதான் மகாபெரியவர் இந்த ஆவஹந்தி ஹோமத்தை நாம் கட்டாயம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லியிருக்கிறார்.*
*இது ஒவ்வொரு பாடசாலையிலும், ரொம்ப நாளாகவே செய்துகொண்டு வருகிறார்கள் அதான் வழக்கம் புதிதாக பாடசாலை ஒன்றை ஆரம்பித்தால் அதற்கு நிறைய வித்தியாதர்கள் வர வேண்டும். அந்த வாத்தியார் அந்த பையனுக்கு சொல்லிக் கொடுக்கிற படிப்பானது நன்றாக வரவேண்டும். இதற்கு இந்த ஆவஹந்தி ஹோமம் கட்டாயம் செய்ய வேண்டும். புது பாடசாலை ஆரம்பித்தால் இந்த ஹோமத்தை தினமும் செய்ய சொல்வார்கள். அதை செய்வதன் மூலம் தானாகவே படிப்பதற்கு மாணவர்கள் வருவார்கள். அந்தப் படிப்பு நன்றாக பயன்படும். அந்தப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் நிறைவேறும். இவை ரொம்ப நாளாக நடைமுறையில் இருக்கின்றன பாடசாலை ஆரம்பித்து அதில் செய்து கொண்டு வருவது.*
*அந்த மந்திரம் என்னுடைய அர்த்தங்கள் மிகவும் அற்புதமானவை என்னவென்று அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
|
|