|
Post by kgopalan90 on Dec 25, 2018 1:07:02 GMT 5.5
திஸ்ரேஷ்டகா; அஷ்டகா; அன்வஷ்டகா.
மார்கழி ,தை, மாசி ,பங்குனி மாதங்களின் க்ருஷ்ண பக்ஷ ஸப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் பித்ருக்களுக்கு சிராத்தம் அல்லது தர்பணம் செய்ய வேன்டும்.டிசம்பெர்-28;29;30; ஜனவரி-27;28;29;பெப்ரவரி -25;26;27;மார்ச்-27;28;29.
அஷ்டமி அன்று செய்யப்படும் அஷ்டகைய ப்ரதானமாக க்கொண்டு முதல் நாள் சப்தமிக்கு பூர்வேத்யு; என்று பெயர். மறு நாள் நவமிக்கு அநு+அஷ்டகா ==அந்வஷ்டகா என்று பெயர்.
மேற்கூறிய நான்கு மாதங்களிலும் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் வீதம் 12 தர்பணங்கள் ஷண்ணவதி தர்பணம் செய்பவர்கள் செய்ய வேண்டும். இது முதல் பக்ஷம்.
ஷண்ணவதி தர்பணம் செய்ய இயலாதவர்கள் தை மாதம் மட்டும் (மாக மாதம்) ஸப்தமி, அஷ்டமி, நவமி அன்று தர்பணம் செய்யலாம். அல்லது அஷ்டமி ஒரு நாளாவது பித்ருக்களுக்கு தர்பணம் செய்ய வேண்டும். பெப்ரவரி-25;26;27.
ஒவ்வொரு வருஷமும் தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்வது போல் இந்த அஷ்டகை, அந்வஷ்டகை நாட்களிலும் பித்ருக்களுக்கு ஹோமம் செய்து, சாப்பாடு போட்டு , முறையாக சிராத்தமாக செய்யலாம். இது இரண்டு விதமாக இருக்கிறது.
1, ஸப்தமி அன்று மாலை ஒளபாசனாக்னியில் அப்பம் தயார் செய்து ஹோமம் செய்ய வேன்டும். மறு நாள் அஷ்டமியன்று காலையில் எட்டு பேரை வரித்து தர்பணம் செய்து விட்டு, ஹோமம் செய்து முறையாக சிராத்தம் செய்ய வேன்டும். மறு நாள் (நவமி) அன்வஷ்டகா அன்று ஐந்து பேரை வரித்து சிராத்தம் செய்ய வேண்டும்.
2. அல்லது ஸப்தமி அன்று மாலை மற்றும் அஷ்டமி அன்று செய்ய வேண்டிய அஷ்டகா சிராத்தம் இரண்டிற்கும் பதிலாக தத்யஞ்சலி ஹோமம் என்னும் ஹோமம் செய்துவிட்டு மறு நாள் (நவமி) அன்வஷ்டகை அன்று ஐந்து பேரை வரித்து ஹோமம் செய்து, சாப்பாடு போட்டு சிராத்தம் செய்யலாம்.
அல்லது இந்த நாட்களில் சிராத்தம் அல்லது தர்பணம் செய்யும் போது ஏற்படும் குறைவை நிறைவு செய்ய ஒரு மந்திரத்தை நூறு முறை ஜபம் செய்யலாம்.
(ரிக் விதானம்) ஏபிர் த்யுபிர் ஜபேந் மந்திரம் சத வாரம் து தத் திநே.. அன்வஷ்டக்யாம் யதா ந்யூனம் ஸம்பூர்ணம் யாதி சர்வதா. என்பதாக அன்வஷ்டகை யன்று சிராத்தம் அல்லது தர்பணம் செய்யும்போது ஏற்படும் குறைவை நிறைவு செய்ய விரும்புவர்கள் ,
ரிக் வேதத்திலுள்ள ஏபிர் த்யுபி: (அஷ்டகம்-1,53,4 ).என்று தொடங்கும் வேத மந்திரத்தை நூறு முறை ஜபம் செய்யலாம். இதனால் அஷ்டகை, அந்வஷ்டகையில் ஏற்பட்ட தோஷம் விலகு மென்கிறது ரிக் விதானம் என்னும் புத்தகம்.
அஷ்டகா : மாக மாசத்தில் அஷ்டகாதி சிராத்தம்.:- முதல் நாள் இரவு ஒளபாசனம் செய்து . ஒரு வகையான அடைபோல் செய்து , அஷ்டகா தேவதைக்கு ஒரு ஹோமமும் ,
ஸ்விஷ்டக்ருத்திற்கு ஒரு ஹோமமும் செய்ய வேண்டும். . அதன் மிகுதியை , மறு நாள் ப்ராம்மணர்களாக வரிக்கும் எட்டு ப்ராஹ்மணர்களுக்கும் அளிக்க வேண்டும்.
அஷ்டகா சிராத்தத்தில் விச்வேதேவர் இருவர், பித்ரு வர்க்கம் மூவர், மாத்ரு வர்க்கம் மூவர் ஆக எட்டு ப்ராஹ்மணர்களை வரித்து , பார்வண சிராத்தம் போல் சில மாறுதல்களுடன் செய்ய வேண்டும்.
அஷ்டமி இரவு ஒளபாசனம் செய்து விச்வே தேவர்களுக்காக ஒருவர் ,பித்ரு, பிதாமஹர். ப்ரபிதாமஹருக்கு ஒருவர், மாத்ரு, பிதாமஹி ப்ரபிதாமஹிக்கு ஒருவர், மாதாமஹ வர்க்கத்திற்கு ஒருவர், மஹாவிஷ்ணுவிற்கு ஒருவர்,
ஆக ஐந்து ப்ராஹ்மணர்களை வரித்து , நவமி அன்று சில மாறுதல்களுடன் பார்வண சிராத்தம் போல் செய்ய வேண்டும்.
அந்வஷ்டகைக்கு ப்ரதிநிதியாக தத்யஞ்சலி ஹோமம் ஒன்றை செய்ய வேண்டும்.. அதில் இரு கரங்களாலும் தயிரை எடுத்து , அஷ்டகா தேவதைக்கு ஒரு ஹோமமும் , ஸ்வஷ்டக்ருத்துக்கு ஒரு ஹோமமும் செய்ய வேண்டும்.
மாக மாதத்தில் பெளர்ணமிக்கு பிறகு வரும் க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி , கேட்டை நக்ஷதிரத்துடன் கூடும். அதில் அஷ்டகா சிராத்தம் செய்ய வேண்டும். ஸுதர்சண பாஷ்யத்தில் கேட்டை நக்ஷத்திரம் கூடாமலிருந்தாலும் அந்த அஷ்டமியில் அஷ்டகா சிராத்தம் செய்ய வேண்டும் ..எனக்கூறபடுகிறது.
அஷ்டமி அன்று செய்ய வேன்டிய அஷ்டகா சிராதத்திற்கு அங்க பூதமான அபூப ஹோமம் செய்ய வேண்டும். ஸப்தமி அன்று மாலை ஒளபாசனம் செய்து அதில் (நெல்லைக்குத்தி அரிசியாக்கி, மாவாக்கி, அதை தட்டையாக செய்து வேக வைக்க வேண்டும்.) இது தான் அபூபம் என்பது.
பிறகு பார்வண ஸ்தாலி பாகத்தில் சொன்ன மாதிரி அக்னிப்ரதிஷ்டை முதல் ஆஜ்ய பாகம் வரை செய்துகொண்டு , அஞ்சலியால் அபூபம் எடுத்துக் கீழ் கண்ட மந்திரத்தை சொல்லி ஹோமம் செய்ய வேண்டும்.
“”யாம் ஜனா: ப்ரதிநந்தந்தி ராத்ரீம் தேநுமிவாயதீம் ஸம்வத்சரஸ்ய யா பத்னீ ஸா னோ அஸ்து ஸுமங்கலி ஸ்வாஹா.”” ஏகாஷ்டகையை ஸம்வத்சர பத்நியாக மற்ற விடத்தில் சொல்லியிருந்தாலும் ஏகாஷ்டகையின் ஸாமீப்யம் இருப்பதால் ஸப்தமி திதியின் ராத்ரியும் சம்வத்ஸர பத்நியாக இங்கு ஸ்துதிக்கப்படுகிறது.
கேட்டை நக்ஷதிரத்துடன் மாக மாத க்ருஷ்ண பக்ஷ அஷ்டமியும் சேர்வதை ஏகாஷ்டகை என்கின்றனர். ஹோமம் செய்த பிறகு மிச்சமுள்ள அபூபத்தை எட்டாக பிறித்து எட்டு ப்ராஹ்மணர்களுக்கு கொடுக்க வேன்டும். ராத்ரியின் அபிமான தேவதையை ஹோமத்தால் பூஜிக்கிறோம்.
பாலில் மாவை போட்டு கிண்டிய கூழுக்கு பிஷ்டான்னம் என்று பெயர். இந்த பிஷ்டான்னத்தால் ஹோமம் செய்ய வேன்டும்.””உக்தயஸ்ச அஸி அதிராத்ரஸ்ச ஸாத்யஸ்கிஸ்சந்த்ரஸாசஹா. அபூபத்ருதாஹுதே நமஸ்தே அஸ்து மாம்ஸபிப்லே ஸ்வாஹா. “
பிறகு ஆஜ்ய ஹோமம் .பின் வரும் ஏழு மந்திரம் சொல்லி. .பூ: ப்ருதிவ்யகினமர்சாமும்மயி காமம் நியுநஜ்மிஸ்வாஹா. ,.புவோ வாயுநா அந்தரிக்ஷேண ஸாம்னாமும் மயே காமம் நியுனஜ்மி ஸ்வாஹா. ஸ்வர்திவஆதித்யேன யஜுஷாமும் மயே காமம் நியுனஜ்மி ஸ்வாஹா.
ஜனதப்திரதர்வாடிங்கரொ பிரமும் மயி காமம் நியுநஜ்மி ஸ்வாஹா. ரோசனாயாசிராயாக்னயே தேவஜாதவே ஸ்வாஹா. கேதவே மனவே ப்ருஹ்மணே தேவஜாதவே ஸ்வாஹா
ஸ்வதா ஸ்வாஹா. அக்னயே கவ்ய வாஹனாய ஸ்வதா ஸ்வாஹா. பிறகு ஸ்விஷ்ட கிருத் என்ற கர்மம் முதல் பிண்டப்ரதானம் என்ற கருமம் முடிய உள்ள கார்யங்களை மாஸி சிராதத்த்தில் செய்த மாதிரி செய்ய வேணும்..
நவமி அன்று மட்டும் தான் ( அன்வஷ்டகையில் தான்) பிண்டதானம் செய்ய வேண்டும். என சிலர் வாதம். இது அஷ்டகையின் முக்ய கல்பம்.
இனி கெளண கல்பம் கூறப்படுகிறது. எந்த மந்திரம் சொல்லி அபூப ஹோமம் செய்கிறோமோ அதே மந்திரத்தை சொல்லி அஞ்சலியால் தயிரை ஹோமம் செய்ய வேண்டும்.இது மற்றொரு முறையாகும்.
யாம் ஜனா: ப்ரதிநந்தந்தி என்றதால் தயிரை ஹோமம் செய்ய வேண்டும். அபூபத்தை விலக்க வேண்டும். இந்த தயிர் ஹோமமானது அபூப ஹோமம் முதல் ஆஜ்ய ஹோமம் முடியவுள்ள
எல்லா கர்மங்களின் ஸ்தானத்திலும் விதிக்க படுவதால் இந்த தயிர் ஹோமத்தை தவிர்த்து மற்ற ஹோமங்களை செய்ய வேண்டுவதில்லை என்று ஸுதர்சன பாஷ்யத்தில் கூறப்பட்டிருக்கிறது.
அன்வஷ்டகையை மாசி சிராத்தம் மாதிரி செய்ய வேண்டும்.
சிராத்தங்கள்:--மாசி சிராத்தம்:--மாசி சிராத்தம் நித்ய கர்மாகளில் இதுவும் ஒன்று. க்ருஷ்ண பக்ஷத்தில் ஏதேனும் ஒரு திதியில் தொடங்கி , ஒவ்வொரு மாதமும் அதே திதியில் செய்ய வேண்டும். இது, பிதா , பிதாமஹர்., ப்ரபிதாமஹர் என்ற மூவரை உத்தேசித்து செய்ய படுகிறது.
ஆனால் பித்ருக்கள் பூஜிக்கபடும் இடத்தில் மாதா மஹாதிகளும் பூஜிக்க பட வேன்டும் என விதித்திருப்பதால் , புராணம், ஸ்மிருதியின் படி தாயின் தந்தை, பாட்டனார், அவர் தகப்பனார் ஆகியோரையும் சேர்த்து இரு
வம்சத்திற்கும் , ஹோமம், ப்ராஹ்மண போஜனம், பிண்ட ப்ரதானம் ஆகியவற்றுடன் செய்ய படுகிறது. இன்று செய்யபடும் சிராத்தங்கள் அனைத்திற்கும் இதுவே முன் மாதிரியாகும். இந்த காலத்தில் இது முடியாது.
இதை ஒற்றி வருவதே தர்ச சிராத்தமாகும். இதன் விக்ருதிகளே (96) ஷண்ணவதி சிராத்தங்கள். .ஒரு வருடத்தில் செய்ய வேன்டுவன .இவற்றில் ஒவ்வொன்றிர்க்கும் சிற்சில மாறுதல் உண்டு.
தாய் தந்தையருக்கு செய்யப்படும் ப்ரத்யாப்தீக சிராத்தம்,, கிரஹண, மற்றும் புண்ய கால தர்பணங்கள். முதலியன மாசி சிராத்தத்தை அடிபடையாக கொண்டு செய்ய படுபவை. ஆனால் இவை ஸப்த பாக யக்ஞங்களில் சேராதவை.
இவை ஜீவத்பித்ருகனுக்கு (( தந்தை உயிருடன் இருக்கும்போது)) கிடையாது. ஆனால் மாசி சிராத்தம் தந்தை உயிருடன் இருக்கும் போதும் ஹோமம் வரை செய்ய வேண்டும்.என்பது ரிஷியின் அப்பிப்ராயம். தந்தைக்கு யார் தேவதைகளோ அவர்களே இவனுக்குமாவார். .
ஒளபாசன அக்னியில் பிண்டபித்ரு யக்ஞம் செய்ய வேண்டும்.. அஷ்டகா சிராத்தத்தை ஒரு போதும் விடக்கூடாது. தை அமாவாசையை அடுத்து வரும் க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி ஏகாஷ்டகை எனப்படும். அந்த தேவதையை குறித்து ஹோமமும் பித்ரு, பிதாமஹர், ப்ரபிதாமஹர். மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, விஸ்வேதேவர் இருவர் ஆக எட்டு ப்ராஹ்மனர்களை வரித்து செய்வதால் அஷ்டகா என்று பெயர்.
அஷ்டகா தேவதை பித்ருக்களுக்கு நாம் அளிக்கும் ஹவிஸை அமோகமாக அளவற்றதாக ஆக்கி காமதேனு பால் சுரப்பது போல் சுரப்பதாக கூற பட்டுள்ளது. ஸம்வத்ஸர தேவதையின் பத்நியாகவும் ஏகாஷ்டகை கூறப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு விழிப்பை ஏற்படுத்தி அறிவை தரும் உஷஹ் கால தேவதையும் ஏகாஷ்டகையே. இவளே யாகங்களை செய்விப்பவள் என்றெல்லாம் மிக உயர்வாக கூறப்பட்டுள்ளது.
உரல் அம்மி முதலியவையும் இந்த அஷ்டகா சிராத்தம் செய்வதில் உத்ஸாகத்துடன் ஈடுபடுவதாக வேதம் கூறுகிறது. இந்த காலத்தில் உரல் அம்மி கிடையாது.இதை செய்பவனுக்கு , ஸந்ததி, சாரீர பல விருத்தி, மற்றும் வைதீக கர்மாக்களில் சிரத்தை செய்யக்கூடிய பாக்யம் ஏற்படுகிறது. என்று கூறுகிறது.
இதை கலி யுகத்தில் ஸ்ம்ருதியில் கூறப்பட்டபடி செய்ய முடியாது.
எனவே ரிஷிகள் தத்யஞ்சலி (தயிர்) ஹோமம் எனும் அனுகல்பத்தை விதிதுள்ளனர். இம்முறைகளில் அவதான முறைப்படி கையில் தயிரை எடுத்துக்கொண்டு ஒளபாஸனாக்னியில் ஏகாஷ்டகையை குறித்து ஹோமம் செய்வதாகும்.
( பிறகு சிராத்த முறைப்படி ப்ராஹ்மண போஜனம்) மறுநாள் அன்வஷ்டகை. அன்வஷ்டகையை தர்ச சிராத்தம் போன்றே வர்கத்வய பித்ருக்களை உத்தேசித்து செய்யபடுவது ஆகும். விஸ்வேதேவர், பித்ரு , மாத்ரு, மாதாமஹர், விஷ்ணு என ஐந்து ப்ராஹ்மணர்களை வரித்து சிராத்தம் செய்வது..
25-2-2019, 26-2-2019, 27-2-2019 இந்த நாட்களில் அஷ்டகா சிராத்தமோ, தர்பணமோ ஓய்வு பெற்றவர்கள் செய்யலாமே.
Details of ashtaka நமது தர்ம சாஸ்த்திரம் புத்தகத்திலும் அஷ்டகா சிராத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. புரட்டாசி மாதத்திலும், மாசி மாதத்திலும் பித்ருக்களுக்கு அன்னம் அளிக்கவேண்டும். என்று அறிவிக்கிறது. தை மாதத்திற்கு 6ம் மாதம் ஆடி மாதம்; சித்ரைக்கு 6ம் மாதம் ஐப்பசி ( துலா மாதம்.) புரட்டாசிக்கு 6ம் மாதம் மாசி மாதம் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
வருடத்தில் இந்த 96 நாட்கள் பித்ருக்களுக்கு பசி எடுக்கும் என நமது முன்னோர்கள் அறிந்து அந்த நாட்களை காட்டி கொடுத்து இருக்கிறார்கள்.
பசியுடன் இருப்பவருக்கு நாம் உடனே ஆகாரம் அளிக்க வேண்டும்.
மார்கழி. தை. மாசி பங்குனி இம்மாதங்களில் தேய் பிறை சப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் சிராத்தம் மற்றும் தர்ப்பணம் செய்ய வேன்டும் என்கிறது. வைத்தினாத தீக்ஷிதீயம் பக்கம்-321ல்.
ஆஸ்வலாயன மகரிஷி இம்மாதிரி 12 நாட்கள் சிராத்தம் செய்ய முடியாவிடினும் மாசி மாதம் ஒன்றிலாவது அவசியம் செய்ய வேண்டுமென்கிறார்..
அஷ்டமி திதிக்கு முன் தினமும் பின் தினமும் செய்யவேண்டியுள்ளதால் அஷ்டகை என பெயர் பெற்றது..
அஷ்டமிக்கு முன் தினம் பூர்வேத்யுஹு என்றும் அல்லது மூன்று நாள் தொடர்ச்சியாக வருவதால் திஸ்ரேஷ்டகா என்றும் பஞ்சாங்கங்களில் குறிப்பிட்டிருக்கும். . அஷ்டமிக்கு மறுநாள் அன்வஷ்டகா என்றும் பஞ்சாங்கங்களில் இருக்கும். .
வைத்தினாத தீக்ஷதீயம் சிராத்த காண்டம் புத்தகத்தில் இதற்கான மந்திரங்கள், செய்முறை உள்ளன. இதற்கு பண வசதி இல்லாதவர்கள் தர்பணமாவது செய்யுங்கள் என்கிறார்.
இதற்கும் பண வசதி இல்லாதவர்கள் தீர்த்தம் நிறைந்த குடத்தை யாருக்காவது அஷ்டமி அன்று தாநம் செய்யவும் .சிராத்த மந்திரங்களை ஜபம் செய்யுங்கள்; பசு மாட்டிற்கும், காளை மாட்டிற்கும் வைக்கோல். புல் கொடுக்கவும்.
இதற்கும் பண வசதி இல்லாதவர்கள் புல், புதர் இருக்குமிடத்தை தீயிட்டு கொளுத்தி அஷ்டகை செய்யும் சக்தியும், வசதியும் இல்லாததால் இந்த அக்னி தாஹத்தால் நீங்கள் த்ருப்தி அடையுங்கள் என கதறவும்.
ந த்வேவ அ நஷ்டகா ஸ்யாத் என்பதாக நாம் பித்ருக்களுக்கு அஷ்டகா தினங்களில் எதுவும் செய்யாமல் இருக்க கூடாது என்கிறது சாஸ்திரம்.
அஷ்டகை சிராத்தம் செய்பவர்கள் குடும்ப வம்சத்தில் குழந்தைகள் அழகு உள்ளவர்களாகவும், அறிவு உள்ளவர்களாகவும். எப்போதும் மிக பெரிய பணக்காரர்களாகவும் இருப்பார்கள் அனைத்து நன்மைகளும் கிட்டும் என்கிறது நமது தர்ம சாஸ்திரம்.
ஒவ்வொருவரும் அவரவரது ஜீவிய காலத்தில் ஒரே ஒரு முறையாவது இந்த அஷ்டகா சிராத்தம் செய்ய வேண்டும்.
வருடத்திற்கு 96 தர்பணம் செய்பவர்கள் இந்த 12 தர்பணமும் செய்து விடுகிறார்கள்.
96 தர்பணம் செய்ய இயலாதவர்கள் இந்த 12 தர்பணங்கள் செய்யலாம். இதற்கும் முடியாதவர்கள் தை மாதம் சப்தமி, அஷ்டமி, நவமி மூன்று நாள் தர்பணம் செய்யலாம்.
ஒவ்வொரு வருஷமும் நம் தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்வது போல் இந்த சப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் பித்ருக்களுக்கு சாப்பாடு போட்டு ஹோமம் செய்து சிராத்தமாகவும் செய்யலாம்.
---இது இரண்டு விதமாக இருப்பதால் ஏதோ ஒரு முறையில் செய்யலாம்.
ஸப்தமியன்று மாலை 7 மணி சுமாருக்கு ஒளபாஸனம் செய்யவும். இதே அக்னியில் அபூபம் தயாரிக்க வேன்டும். மாலை 5 மணிக்கு 2 கைப்பிடி அளவு பச்சரிசி எடுத்து தண்ணீர் விட்டு களைந்து நிழலில் ஒரு துணி மேல் உலர விடவும். நன்றாக உலர்ந்த பிறகு மிக்சியில் மாவாக அறைக்கவும். மாவு சல்லடையில் சலிக்கவும். இந்த மாவில் சிறிது தயிர் விட்டு கெட்டியாக பிசைந்து சப்பாத்தி மாதிரி இட்டு
கொள்ளவும். மாலை 7 மணிக்கு ஒளபசனம் செய்த உடன் ஒளபாசன அக்னியில் தோசை கல்லை போட்டு இந்த அரிசி மாவு சப்பாத்தியை தோசை கல்லில் போட்டு இரு பக்கமும் வேக விடவும். இதுதான் அபூபம்.
இதே ஒளபாசனாக்னியில் மந்திரம் சொல்லி இந்த அபூப ஹோமம். . மீதமுள்ள அபூபத்தை மறு நாள் வரப்போகும் சாஸ்திரிகளை இப்போதே வரசொல்லவும். அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா- 3 பேர். அம்மா, பாட்டி,
கொள்ளு பாட்டி -3 பேர். விசுவேதேவர் -2 பேர். மொத்தம் -8 பேர். இந்த 8 சாஸ்திரிகளை சப்தமியன்று மாலை 6 மணிக்கே வரசொல்லி. அவர்களை ஆவாஹனம் செய்து இந்த அபூப துண்டுகளையும், கோதுமை மாவு சப்பாத்தி இந்த எட்டு பேருக்கும் தயார் செய்து சட்னியுடன் இலையில் பரிமாறவும்..
அவர்கள் சாப்பிட்ட பிறகு மறு நாள் காலை 10 மணிக்கு அவர்களை வரசொல்லவும். தக்ஷிணை தாம்பூலம், பழம் கொடுத்து அனுப்பவும். கர்த்தா, கர்த்தாவின் மனைவிக்கும் இதே தான் ஆகாரம். .இன்று இரவு.
மறு நாள்அஷ்டமி அன்று காலை 10 மணிக்கு இந்த எட்டு பேர் வந்தவுடன் எண்ணைய், சீயக்காய் கொடுத்து வெந்நீர் போட்டு கொடுத்து ஸ்நானம் செய்து விட்டு வந்தவுடன். முதல் நாள் இரவு ஆவாஹனம் செய்த வாரே
மறுபடியும் ஆவாஹனம் செய்து ஒன்பது ஐந்து வேட்டி துண்டு ஒவ்வொருவருக்கும் கொடுத்து சாப்பாடு போட்டு சிராத்தம் முடிந்த பிறகு தக்ஷிணை, தாம்பூலம் கொடுத்து அனுப்ப வேண்டும்.
இன்று சமாராதனை சமையல், ஒருவருக்கு ஒரு வாழை இலை வீதம் போதும்.. 8 பேர் வைத்து சிராத்தம் செய்ய பண வசதி இல்லாதவர்கள் அப்பா வர்க்கம் ஒருவர், அம்மா வர்க்கம் ஒருவர்; விசுவேதேவர் ஒருவர் என மூவர் வைத்தும் செய்யலாம். சாஸ்திர சம்மதம் இருக்கிறது.
.மறு நாள் நவமி அன்று வேறு ஐந்து சாஸ்திரிகள் வரச்சொல்லி எண்ணய் ஸ்நானம் செய்து புது ஒன்பது ஐந்து வேட்டி வாங்கி கொடுத்து சிராத்தம் முடிந்த பிறகு தக்ஷிணை தாம்பூலம் கொடுத்து அனுப்ப வேண்டும்.
நவமி அன்று அப்பா வர்க்கம் ஒருவர், அம்மா வர்க்கம் ஒருவர், அம்மாவின் பெற்றோர் வர்க்கம் ஒருவர், விசுவேதேவர் ஒருவர், மஹா விஷ்ணு ஒருவர் என ஐந்து பேர். .
இதற்கு மஹா விஷ்ணுவிற்கும் ஒருவர் அவசியம் வர வேண்டும். ஹோமம் அப்பா வர்க்கம் -6 ஹோமம் வழக்கம்போல். பிறகு தாயின் பெற்றோர் வர்கத்திற்கும் 6 ஹோமம் உண்டு. விகிரான்னம் உண்டு.
பிண்ட ப்ரதானமும் தாய் தந்தையருக்கு 6; அம்மாவின் தாய் தந்தைக்கும் 6 மொத்தம் . காருண்ய பித்ருக்களுக்கு -6 என 18 பிண்டம் . இன்று சிராத்த சமையல் அவரவர் வீட்டு வழக்கப்படி, இரு வாழை இலைகள்.. மஹா விஷ்ணு விற்கு இலை மாத்திரம் போட்டு பரிமாறும் வழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த அஷ்டகா சிராத்தத்தில் மஹாவிஷ்ணுவிற்கு ஒரு சாஸ்திரிகள் அவசியம் வர வேண்டும்.
மற்றொரு விதம்;- இரு கைகளாலும் தயிர் ஹோமம் செய்வது. ததி ஹோமம்.
ஸப்தமி அன்று எதுவுமில்லை. அஷ்டமி அன்று காலையில் தயிர் ஹோமம் ஒளபாசானாக்னியில் செய்து விட்டு நவமி அன்று ஐந்து பேரை வரித்து ஹோமம், சாப்பாடு போட்டும் நிறைவு செய்யலாம்.
அஷ்டகா தர்ப்பணம் முதலில் இரு நாட்களும் செய்து விட்டு பிறகு தான் சிராத்தம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.. ஞாபகமாக இதை வைத்து கொள்ளவும்.. இந்த மூன்று நாட்களிலும் ஒளபாசனம் தினமும் இரு வேளையும் செய்ய வேண்டும்.. மூன்று நாட்களிலும் ஒளபாசன அக்னி அணையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
அல்லது தினமும் விச்சின்னாகினி ஹோத்ரம் செய்து பிறகு ஒளபாசனம் செய்து அந்த அக்னியில் சிராத்த ஹோமம் செய்ய வேண்டும். ரிக் விதான மந்திரம் ஒன்று உள்ளது. இதை நூறு முறை சொல்ல வேண்டும்.
நான்கே வரிகள் தான். இந்த தர்பணம், ஹோமம் செய்யும்போது ஏற்படும் குறைகளை சரி செய்யும்.. ருக் வேத மந்திரம் ஆதலால் சரியாக உச்சரிக்க வேண்டும். .அஷ்டகம் 1, 53, 4 ஏ பிர் த்யுபிர் என்று ஆரம்பிக்கும்.. ருக் வேத சாஸ்திரிகளிடம் இதை சரியாக உச்சரிக்க கற்றுக்கொண்டு சொல்லலாம்.
இந்த மூன்று நாட்களாவது தினமும் மூன்று வேளையும் ஸந்தியா வந்தனம் காயத்ரி ஜபம் செய்ய வேண்டும்.
|
|
|
Post by kgopalan90 on Dec 23, 2018 22:22:20 GMT 5.5
அமாவாசை தர்பண மந்திரங்களின் தமிழ் அர்த்தம்.
ஸ்தல சுத்தி: - தர்பங்களை கையில் எடுத்துக்கொண்டு தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்க வேன்டும்.ப்ராசீனாவீதியுடன். பிறகு தர்பைகளை எறிந்து விட வேண்டும்.
அபே தவீதா விச ஸர்ப்ப தாதோ யேத்ரஸ்த புராணா யே ச நூதனா: அதாதி தம் யமோ வஸானம் ப்ருதிவ்யா அக்ரனிமம் பிதரோ லோகமஸ்மை.
ஓ யம தூதர்களே நீங்கள் இங்கு யமன் உத்திரவினால் தங்கி இருக்கிறீர்கள் அல்லவா. வெகு காலம் இருப்பவரும் இப்போது வந்தவர்களுமான நீங்கள் இடத்தை விட்டு தாமே செல்லுங்கள். பித்ரு தர்ப்பணம் செய்யும் வரை எங்களுக்கு இந்த இடத்தை யமன் சொந்தமாக செய்திருக்கிறார். பித்ருக்களும் இந்த இடத்தில் வந்து தங்குவதற்கு தக்க இடம் என எங்களுக்கு தந்தனர்.
அபஹதா அஸுரா ரக்ஷாகும் ஸீ பிஶாசா யே க்ஷயந்தி ப்ரித்வீ மனு அன்யத்ரே தோ கச்சந்து யத்ரைஷாம் கதம் மன; என்று சொல்லி கருப்பு எள்ளை இந்த இடத்தில் கையை திருப்பி இறைக்கவும்.
இந்த இடத்தை அண்டி வசிக்கின்ற அஸுரர், ராக்ஷசர், பிஶாசர், முதலியவர் ---பித்ரு கர்மாவுக்கு விக்னம் செய்பவர்கள் --இந்த இடத்தை விட்டு அவர் மனம் எங்கு செல்கிறதோ அங்கு செல்லட்டும்.
உபவீதி--பூணல் வலம். தீர்த்தத்தால் ப்ரோக்ஷிக்க வேண்டிய மந்திரம்.
அ பவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர ஸுசி: பூர் புவஸ்ஸுவோ பூர் புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ
நான் மஹா விஷ்ணு ஸ்மரனையுடன் தெளிக்கும் இந்த தண்ணீர் இந்த இடத்தை பவித்ர மாக்கட்டும். நம் மனது ஒருமுகப்பட்டு பித்ருக்களின் உருவ ஞாபகம் மனதில் தோன்றும். வாய் மந்திரத்தை சொல்லும்.
ப்ராசீனாவீதி- பூணல் இடம்;
ஸம்ப்ரதாயப்படி தர்பைகளை தெற்கு நுனியாக போட்டு கட்டை விரல், ஆள் காட்டி விரல் தவிற மற்ற விரல்களால் எள்ளை எடுத்து ஆவாஹனம் செய்ய வேண்டும்.
ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வை: ப்ரஜா மஸ்மப்யம் ததோ ரயீஞ்ச தீர்காயுத்வஞ்ச ஶதஶாரதஞ்ச
ஓ பித்ருக்களே மிக நல்லவர்களான நீங்கள் எங்களுக்கு ஸந்ததி, செல்வம், நீண்ட ஆயுள் இவைகளை கொடுத்துக்கொண்டு சிறந்த ஆகாச மார்க்கமாக இங்கு வாருங்கள்.
அஸ்மின் கூர்ச்சே ---------கோத்ரான்--------ஶர்மண: வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் ----------கோத்ரா:----------தா: வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹீஸ்ச ஆவாஹயாமி.
என்னுடைய இந்த கூர்ச்சத்தில், எனது இந்த கோத்ரத்தை உடைய இந்த பெயர் உடைய வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபர்களான எனது தகப்பனார், தாத்தா, கொள்ளு தாத்தா , எனது இந்த கோத்திரத்தை உடைய இந்த பெயர்கள் உடைய எனது தாய், பாட்டி, கொள்ளு பாட்டி இவர்களை ஆவாஹனம் செய்ய வேண்டுகிறேன். ஜீவனுடன் இருப்பவர்களை விலக்கி மற்றவர்களை ஆவாஹனம் செய்யவும்.
ஒரே கூர்ச்சத்தில் அம்மா ஆத்து கோத்திரம் -------- பெயர்------- வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீ: மாதா மஹ, மாதுஹ் பிதாமஹ, மாதுஹ்ப்ரபிதாமஹீஸ் ச ஆவாஹயாமி. என்று சொல்லி ஆவாஹணம் செய்யும் வழக்கமும் உண்டு. குடும்ப ஸம்ப்ரதாயப்படி செய்யவும். சிலர் மற்றொரு கூர்ச்சத்தில் இம்மாதிரி ஆவாஹனம் செய்யும் வழக்கமும் உண்டு.
வட மொழியில் பிதா= தகப்பனார்; பிதா மஹர்-அப்பாவின் அப்பா; ப்ரபிதாமஹர்= அப்பாவின் தாத்தா; மாதா=அம்மா; பிதாமஹி=அப்பாவின் அம்மா; ப்ரபிதாமஹி= அப்பாவின் பாட்டி;
மாதா=அம்மா; மாதாமஹர்= அம்மாவின் அப்பா; மாத்ரு பிதாமஹர்-= அம்மாவின் தாத்தா; மாத்ரு ப்ரபிதாமஹர்= அம்மாவின் கொள்ளு தாத்தா. ஸ பத்னீ;= மனைவியுடன்.; பத்னி=மனைவி; மாதாமஹி=அம்மாவின் அம்மா;
மாத்ரு பிதாமஹி=அம்மாவின் பாட்டி; மாத்ரு ப்ரபிதாமஹி= அம்மாவின் கொள்ளு பாட்டி
ஆஸன மந்திரம்;-
ஸக்ருதாச்சின்னம் பர்ஹி ரூர்ணா ம்ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம்
அஸ்மின் ஸீதந்து மே பிதரஸ் ஸோம்யா: பிதா மஹா; ப்ரபிதா மஹா: ச அனுகைஸ்ஸஹ. என்று சொல்லி பித்ரு, பிதா மஹ, ப்ரபிதாமஹானாம் மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹானாம், ஸ பத்னீக மாதா மஹ மாது; பிதாமஹ; மாதுஹு ப்ரபிதாமஹானாஞ்ச இதமாஸனம். மூன்று தர்பங்களை கூர்ச்சத்தின் கீழ் வைக்க வேண்டும்.
ஓ தர்பையே நீ ஒரு முறை என்னால் அறுக்கப்பட்டாய். உன்னை பரப்புகிறேன். எங்கள் பித்ருகளுக்கு அதி ம்ருதுவான ஆஸனமாக இரு. இதில் அனுக்கிரஹ மூர்த்திகளான என் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா தங்களை சார்ந்தவர்களுடன் அமரட்டும்.
வர்க்க த்வய பித்ருப்யோ நம: ஸகல ஆராதனை: ஸ்வர்ச்சிதம் என்று சொல்லி கறுப்பு எள்ளை கை மறித்து கூர்ச்சத்தின் மேல் போடவும். வர்க்கத்வயம்= இரண்டு வர்க்கங்க்கள்=அப்பா வர்க்கம்; அம்மா வர்க்கம்.ஏகம்-=ஒன்று; த்வே=இரண்டு; த்ரீனீ=மூன்று; சத்வாரி=நான்கு.
இரண்டு கூர்ச்சம் வைத்து தர்ப்பணம் செய்யும் குடும்ப வழக்க முடையவர்கள் இரண்டாவது கூர்ச்சத்தில் அம்மா ஆத்து கோத்ரம், அம்மாவின் பெற்றோர் பெயர் சொல்லி ஆவாஹணம்., ஆஸனம், ஸகல ஆராதனைஹி ஸ்வர்ச்சிதம் என்று மறுமுறை சொல்லி போடவும்.
இடது காலை முட்டி போட்டுக்கொண்டு தெற்கு முகமாக ப்ராசீனாவீதியாய் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
யக்யம் முதலான கர்மாக்களை செய்தவர் உயர்ந்த பித்ருக்கள். ஒளபாஸனம் முதலிய ஸ்மார்த்த கர்மா செய்தவர் மத்யம பித்ருக்கள். கர்பாதானம் முதலான ஸம்ஸ்காரம் இல்லாதவர் அதம பித்ருக்கள்.
தற்காலத்தில் யாகம், யக்யம் செய்ய முடியாது. இதற்கு பதில் சுனந்து முனிவர் பவிஷ்யோத்திர புராணத்தில் திதி பூஜைகள் இம்மாதிரி செய்ய வேண்டும் என்று எழுதியதை பார்த்து திதி பூஜைகள் என்று வெளியிட்டு வருகிறேன். இதையாவது செய்து எல்லோரும் உயர்ந்த பித்ருக்கள் ஆக வேண்டும் என்ற அவாவில் முனிவர்கள் புராணங்களில் இம்மாதிரி எழுதி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது எங்காத்து வழக்கம் இல்லை என்று சொல்லி கொண்டு தொலை காட்சியில் சீரியல் பார்த்து கொண்டு பொழுதை கழிக்கிறார்கள். இது மட்டும் அவாத்து பழக்கம்.
1:1 உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸூம்ய ஈயூரவ்ருகா ரிதக்ஞஆஸ் தேனோஅவந்து பிதரோஹவேஷு.
பித்ருக்களில் திவ்ய பித்ருக்கள்; அதிவ்ய பித்ருக்கள் என இரு வகை படுவர். ஒரு வகையினர் அழைத்தால் மட்டும் வருவர். மற்றொரு வகையினர் உங்கள் வீட்டில் எப்போதுமே இருப்பர். காலை ஸூர்ய உதயத்தின் போது உங்கள் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது வீட்டு வாசலில் சாணி தண்ணீர் தெளித்து கோலம் போட்டு வைத்தால் தான் உள்ளே வருகிறார்கள். குடுமி தலைமுடி தண்ணீரையும் , நீங்கள் வஸ்த்திரம் பிழியும் தண்ணீரையும் பருகுகிறார்கள். தற்காலத்டில் குடுமியும் இல்லை. வஸ்த்ரம் மந்திரம் இல்லாமல் வாஷிங் மெஷின் பிழிந்து கொடுக்கிறது.
அஸ்து அஸ்து என்று சொல்லி கொண்டிருகிறார்கள் என்று முனிவர்கள் ஞான த்ருஷ்டியில் பார்த்து அந்த காலத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். இதை செய்யாதே வேண்டாம் என்றும் நம் முன்னோர்கள் சொல்வது நம் காதில் விழ வில்லை. முற் பிறவிகளில் செய்த பாபங்கள் இது நம் காதில் விழாமல் தடுக்கிறது என்று ரிஷிகள் ல்கிறார்கள்.
தற்போது உதீரதாம் என்ற மந்திர அர்த்தம் எழுதுகிறேன். தாழ்ந்தவர்களும், சிறந்தவர்களுமான நம் பித்ருக்கள் நாம் அளிக்கும் உணவை ஏற்று அருள் புரியட்டும். நாம் அழைத்து வந்த பித்ருக்கள் சிக்ஷிக்க தக்க குற்றம் செய்தாலும் ,நம்மை ஹிம்சிக்காமல் நாம் அளித்ததை ஏற்று நன்றி உள்ளவர்களாகி , நம்மை காப்பாற்றட்டும்.
உத்தேசமாக 7 அல்லது 8 கருப்பு எள்ளுடன் (ஒவ்வொரு தடவையும்) 100 மில்லி தண்ணீருடன் கூர்ச்சத்தின் நுனியில் வலது கை மறித்து விட வேண்டும். தாழ்ந்தவர்கள் என்று எழுதியதற்கு விளக்கம் அக்காலத்தில் அவர்கள் எழுதி வைத்ததையே ஸ்ரீ வத்ஸ ஸோம தேவ சர்மா 1956 ல் எழுதிய புத்தகத்தை பார்த்து இங்கு எழுதுகிறேன்.
ஆள் காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் நடுவில் தண்ணீர் விடுவது பித்ரு தீர்த்தம் எனப்பெயர். நான்கு விரல் நுனிகளால் விடுவது தேவ தீர்த்தம். சுண்டி விரலுக்கு கீழ் உள்ள உள்ளங்கையால் விடுவது ரிஷி தீர்த்தம் என்று பெயர்.
உள்ளங்கையிலிருந்து மணிக்கட்டு வழியாக தீர்த்தம் வருவது ப்ருஹ்ம தீர்த்தம் என்று பெயர். ஆசமனம் செய்யும் போது தண்ணீர் அருந்துவது ப்ருஹ்ம தீர்த்தம்.
--------கோத்ரான்---------ஶர்மண: இம்மாதிரி( : )உள்ளதை ஹ என்று உச்சரிக்க வேண்டும். வசு ரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
பித்ருக்களை ரக்ஷிக்க ஸ்வதா தேவி உண்டாக்க பட்டாள் என தேவி பாகவதத்தில் உள்ளது.
1-2. அங்கிரஸோ ந: பிதரோ நவக்வா அதர்வாணோ ப்ருகவஸ் ஸோம்யாஸ:
தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞ்இயானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம:
----------கோத்ரான்------சர்மண: வசு ரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
அங்கீரஸ், அதர்வா, ப்ருகு என்று நமது பித்ருக்கள் அழைக்க படுகிறார்கள். அவர்கள் மிக சிறந்த குணமுள்ளவர். ஸந்ததிகளிடம் புதிது புதிதாக அன்புள்ளவர். யாகத்தினால்
ஆராதிக்க தக்க அவர்களது மங்கள கரமான மனதில் நாம் இருக்க வேண்டும்.
1:3. ஆயந்துந; பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ்வாத்தா: பதிபிர் தேவ யானை:
அஸ்மின் யக்ஞ்யே ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான்.
--------கோத்ரான்--------சர்மண: வஸுரூபான் பித்ருன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
யாகம் செய்யாமல் பித்ரு லோகம் சென்ற அக்னிஷ்வாத்தர் என்பவரும் மனோ வேகம் உள்ளவருமான பித்ருக்கள் தேவ யான மார்கமாக இங்கு வரட்டும். இங்கு நாம் செய்யும் தர்ப்பண யக்ஞ்யத்தில் ஸ்வதா என்று அளிக்கும் உணவினால் சந்தோஷம் அடையட்டும். பர லோகத்தில் நமக்காக பரிந்து பேசட்டும். நம்மை காக்கட்டும்.
2-1. ஊர்ஜம் வஹந்தீர் அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன்.----------கோத்ரான்--------ஶர்மண: ருத்ர ரூபான் பிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
ஓ தீர்த்தமே கர்மவசமாகி , ஒரு ஸமயம் -மனுஷ்ய, தேவ, ராக்ஷஸ, (குணம்) மரம், செடி, கொடி, சண்டாளன் முதலிய பிறவியை எங்கள் பித்ருக்கள் அடைந்திருந்தால் அவர்களுக்கு உசிதமான அன்னம், அம்ருதம், நெய்,பால், ரக்தம், கள், முதலிய அவரவர்களுக்கு உசிதமான உணவாகி , பித்ரு அன்னமாக இருந்து என் பித்ருக்களை ஸந்தோஷ படுத்து.
2-2. பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நம: பிதா மஹேப்யஸ் ஸ்வதாவிப்யஸ் ஸ்வதா நம: ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நம: -------கோத்ரான்-------சர்மண: ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
ஸ்வதா என்று கூறி அளிக்கும் உணவை விரும்புவர்களான பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹர் ஆகியவர்களுக்கு ஸ்வதா என்று தர்ப்பணம் செய்து வணங்குகிறேன். பித்ருக்கள் உண்டு களிக்கட்டும்.
2-3. யே சேஹ பிதரோ யே ச நேஹ யாகும்ஸ்ச வித்மயாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்கும் ஸ்வதயா மதந்தி.-------கோத்ரான் ---------சர்மண: ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
எல்லாம் அறிந்த ஓ அக்னியே எந்த பித்ருக்கள் இந்த உலகத்தில் உள்ளனர், எவர் இங்கு இல்லையோ எவரை நாம் அறிவோமோ , எவரை நாம் அறிய மாட்டோமோ அவர் அனைவரையும் நீர் அறிவீர். ஆதலால் அவர்களுக்கு ஏற்றதாக இந்த உணவை அவர்களுக்கு அளியும். அதனால் அவர்கள் சந்தோஷ மடையட்டும்.
3-1. மதுவாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் ந ஸந்த்வோஷதீ: -----------
கோத்ரான்--------ஶர்மண: ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
பித்ரு தர்பணம் செய்கின்ற எனக்கு காற்று நன்மையை தரட்டும். நதிகளும், ஓஷதிகளும் மதுரமானதை அளிக்கட்டும்.
3-2. மது நக்த முதோஷஸி மதுமத் பார்திவகும் ரஜ: மது த்யெள ரஸ்து ந: பிதா.
---------கோத்ரான்--------ஶர்மண: ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
இரவு, காலை, பகல் ஆகிய காலமும் நமக்கு இன்பத்தை தரட்டும். பூமியின் தூளியும் இன்பத்தை தரட்டும். ஆகாயமும் கபடமில்லாமல் இன்பம் தரட்டும்.
3-3. மதுமான்னோ வனஸ்பதி: மதுமாகும் அஸ்து ஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந: ----------கோத்ரான்-------ஶர்மண: ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
மரங்களும் எங்களுக்கு இன்பம் தரட்டும். ஸுர்யன் அதிக தாபமின்றி ஜீவ சக்தியை அளிக்கட்டும்.பசுக்களும் மதுரமான பால் தந்து இன்பம் அளிக்கட்டும்.
ஸ்த்ரீகளுக்கு தர்ப்பணம் செய்யும் போது வேத மந்திரம் கிடையாது.
--------கோத்ராஹா--------நாம்னீ: (அல்லது தா: )மாத்ரு ஸ்வதா நமஸ் தர்பயாமி என்று மூன்று தடவை சொல்ல வேண்டும்.
|
|
|
Post by kgopalan90 on Dec 22, 2018 13:26:50 GMT 5.5
ஆவணி க்ருஷ்ண பக்ஷ பஞ்சமியன்று வீட்டு முற்றத்தில் வேப்பிலையால், மனசார, தேவியை பூஜை செய்வது மிக உத்தமம், ஏகாதசி விரதம் இவைகளை விட சிறப்பு வாய்ந்தது.19-08-2019
ஜமதக்னி முனிவர் சூரியனை மிரட்டினார். உலக நன்மைக்காக நீ வெப்பத்தை காட்டினாலும் அதனால் ஏற்படும் தாபம் போக என்ன வழி என்று சூரியனைக் கேட்டார். சூரியன் காலுக்கு செறுப்பும் தலைக்கு குடையும்
அணிந்து கொண்டு செல்ல வேண்டும் எனச்சொன்னார் .சூரியனே ஜமதக்னி முனிவருக்கு குடையும் செறுப்பும் கொடுத்தார்.. குடை செறுப்பு தானம் செய்பவர் ஸ்வர்க்கம் செல்வர் என சூரியன் திரு வாய் மலர்ந்து அருளினார்.
ஸப்தமி விருதத்தை உத்தராயணத்தில் சுக்கில பக்ஷ ஞாயிற்றுகிழமைகளில் துவங்க வேண்டும்.. எல்லா பாபங்களையும் இந்த வ்ருதம் போக்கடிக்கும்.5-5-2019
ஞாயிற்றுகிழமை ப்ரதமை திதி முதல் ஸப்தமி வரை எருக்கு இலையை கொண்டு சூரியனை பூஜிக்க வேண்டும். .ப்ரதமை முதல் ஸப்தமி வரை உபவாசம் இருக்க வேண்டும். அர்ச்சனை செய்த அந்த எருக்கம்
இலைகளையே உண்ண வேண்டும். முதல் நாள் ஒரு எருக்கு இலை. இரண்டாம் நாள் இரண்டு எரூக்கு இலை. மூன்றாம் நாள் மூன்று ; நான்காம் நாள் 4 இலை; 5ம் நாள் 5 இலை. 6ம் நா 6 இலை. 7ம் நாள் 7எருக்கு இலைகள் அர்ச்சனைக்கு…. இவைகளையே சாப்பிட வேண்டும்
இரண்டாம் மாதம் ப்ரதமை முதல் ஸப்தமி வரை மேற்சொன்ன வகையில் மாசிப்பச்சை இலைகளால் அர்ச்சனை செய்து அந்த இலைகளையே சாப்பிடவும். முதல் மாதம் செய்த மாதிரியே மற்ற மாதங்களும் செய்யவும்.
மூன்றாம் மாதம் வேப்பிலையை அர்ச்சனைக்கு உபயோகிக்கவும்.. நான்காம் மாதம் பழத்தை அர்ச்சனைக்கு உபயோகிக்கவும்.
ஐந்தாம் மாதம் பாகம் செய்யாத ஆகாரத்தை உபயோகிக்கவும். ஆறாவது மாதம் எதயுமே சாப்பிடாமல் உபவாசம் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் பூஜை செய்ய வேண்டிய இலைகளை எடுத்து வந்து ஒரு புது குடத்தில் போட்டு ஒரு புருஷனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் எடுத்து செல்லப்பட்டு திரும்பவும் கொண்டு வரப்பட்டு
அவற்றால் பூஜை செய்ய வேண்டும் .இரவும் பகலும் கண் விழித்து பகவானை தியானிக்க வேண்டும். இவ்வாறு எவன் ஏழு ஸப்தமிகளில் நியமத்தோடு விரதம் இருக்கிறானோ அவனுக்கு எல்லா பாபங்களும் நீங்கி விடும்.
எருக்கு இலைகளால் அர்ச்சனை செய்தால் பணம் பெருகும். மாசிபச்சை இலைகளால் அர்ச்சனை செய்தால் விருப்பமானவரோடு சிநேகம் உண்டாகும். வேப்பிலையால் அர்ச்சனை செய்தால் வியாதி விலகும் .பழங்களால் அர்ச்சித்தால் உத்தமமான குழந்தைகள் பிறக்கும்.
பிராமணர்களுக்கு சாப்பாடு போட்டு தக்ஷிணை தர வேண்டும். எதை விரும்பினாலும் அதை அடைய முடியும்.ஸப்தமி விரதத்தில் எவனொருவன் எந்தெந்த பொருட்களை மகிழ்ச்சியோடு தானம் செய்கிறானோ அந்தந்த பொருட்கள் அவனுக்கு பல மடங்கு பெருகும்..
பனிரெண்டு சுக்ல ஸப்தமிகளில் எவன் பசுஞ்சாணியை உட்கொண்டு பூஜிகிறானோ அவன் அளவற்ற பலன் அடைவான் .கஞ்சி மட்டும் குடித்தும், பால் மாத்திரம் சாப்பிட்டும், உலர்ந்த சருகு மாத்திரம் சாப்பிட்டும்,
ஒரு வேளை ஆகாரம் மட்டும் சாப்பிட்டுகொண்டும், ஜலத்தை மட்டுமே அருந்தியும், பிச்சை எடுத்து சாப்பிட்டு இருந்தும் இந்த ஸப்தமி விரதம் ஆண்/ பெண் இரு பாலாரும் இருக்கலாம். அவரவர் சக்திக்கேற்ப ஒவ்வொரு மாதமும் ஆராதனை செய்ய வேண்டும்.
பசுஞ்சாணியால் மெழுகிய இடத்தில் சூரிய மண்டலம் வரைந்து அதில் ஆவாஹனம் செய்யலாம்.. ஆகாசத்தில் ப்ரகாசிக்கும் சூரிய பிம்பத்திலும், அக்னி, ஜலம், ப்ரதி பிம்பம், யந்திரம், தங்கம் அல்லது செப்பு பாத்திரத்திலும் ஆவாஹனம் செய்யலாம்..ஆல மரத்திலும் ஆவாஹனம் செய்யலாம்.
சூரியனுக்கு ஒவ்வொரு உபசாரம் செய்யும் போதும் நமஸ்காரம் செய்யலாம்.ஸப்தமி வ்ருதம் இருந்து பூஜை செய்பவர்கள் சூரியனுக்கு இருபத்து நான்கு உபசாரங்கள் செய்ய வேண்டும்.அந்தந்த உபசாரத்திற்கு சொல்லப்பட்டுள்ள மந்திரங்களை பக்தியோடு சொல்லி பூஜிக்கவும்.
முதல் உபசாரம்;1. ஆவாஹனம்:-- நிர்குண ஸ்வரூபியும், நிஷ்கல மானவருமான சூர்யனை ஸகுண ஸ்வரூபியாக பிம்பத்தில் ஸான்னித்யம் கொள்ளுமாறு மந்திரம் சொல்லி அழைப்பது.
2.ஆசனமளித்து அதில் உட்காருமாறு வேண்டுவது. ஸ்தாபனம். 3.வேறு இடங்களுக்கு போகாமல் அந்த ஆசனத்திலேயே அமர வைப்பது ரோதனம்.
4. சூரியனை ஒருமனத்தோடு தியானிப்பது ஸான்னித்யம். 5,கால்களில் ஜலம் விட்டு அலம்புவது பாத்யம் . 6.தாமிர பாத்திரத்தில் சந்தனம் கலந்த ஜலத்தில் வாசனை பூக்கள் போட்டு இரண்டு முழங்கால்களால் நடந்து சூரியனுக்கு ஜலம் அளிப்பது அர்க்கியம்.
7. பால்,தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிருதம், தேன், பழச்சாறு, வாசனை பவுடர், சுத்த நீராலும், அபிஷேகம் செய்வது ஸ்நானம்.
8.சந்தனம், குங்குமம் திலகமிடுவது அக்ஷதை போடுவது சந்தனம் உபசாரம்.
9. அழகிய வஸ்த்ரம் சூரியனுக்கு சார்த்தி அலங்கரிப்பது வஸ்த்ரம் என்ற உபசாரம். 10.மலர் மாலை சாற்றி பாதங்களில் மலர் தூவுவது புஷ்பம் என்ற உபசாரம்.
11.ஆபரணங்கள் அணிவிப்பது ஆபரணம் என்ற உபசாரம் 12.ஊதுபத்தி, சாம்பிராணி, தசாங்கம் புகை போடுவது தூபம் என்ற உபசாரம்.
13.நெய்யிட்ட திரியை ஏற்றி சூரியனுக்கு அலங்காரமாக காட்டுவது தீபம்.
சூரிய பூஜைக்கு குறைந்த பக்ஷம் அறுபது விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும். இதற்கு மேலும் ஏற்றலாம்.
14. சூரியனுக்கு அங்க பூஜை அங்கங்கள் பெயர் சொல்லி அந்தந்த அங்கங்களில் அர்ச்சனை செய்வது. அங்க பூஜை. 15.சூரியனுக்கு நிவேதனம் செய்து பரிவார தேவதைகளுக்கு பலி போடுவது.
16. மறுபடியும் சந்தன ஜலத்தால் அர்க்கியம் தருதல். 17.சூரிய ஜபம் செய்வது. 18.முத்திரைகளால் தேகத்தை தேவதா மயமாக்கி கொள்வது நியாசம் எனும் உபசாரம்.
19.மந்திர ஸ்லோகங்களால் துதி செய்வது ஸ்தோத்ரம் எனும் உபசாரம். 20. அக்னி குண்டத்தில் ஹோமம் செய்வது ஹோமம் என்ற உபசாரம்
21.பூஜை செய்ததனால் ஏற்படக்கூடிய பலன்கள் தனக்கு சித்தியாக வேண்டும் என ப்ரார்திப்பது ஸம்ஹாரம் என்ற உபசாரம்.
22சூரியனின் கை கால்களை அலம்பி விடுவது சுத்த பாதம் என்ற உபசாரம்
23. பகவானை த்ருப்தி படுத்துவதற்காக விசிறி, பாட்டு, நடனம் முதலியன செய்வது விஹாரணம் என்னும் உபசாரம். 24. சூரியனை யதாஸ்தானம் செய்வது விஸர்ஜனம் எனும் உபசாரம்.
மூல மந்திரங்களை கூறி இருபத்து நான்கு உபசாரங்களையும் செய்ய வேண்டும். விஸர்ஜனம் செய்து ஹோமம் முடிந்த பிறகு சிறிது புஷ்பம்,,ஹோம பஸ்பம் ஆகியவற்றை வடக்கு திக்கில் வைக்க வேண்டும்,
இதற்கு நிஹோரம் என்று பெயர். பிறகு ஸாஷ்டாங்கமாக சூரியனை நமஸ்காரம் செய்ய வேண்டும். உத்தமமான பிராமணருக்கு தானம் செய்ய வேண்டும்.
சூரியனுக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெயர் கூறி பூஜை செய்ய வேண்டும்.. சித்திரை மாதம் அம்சுமான் என்ற பெயரிலும், வைகாசி மாதம் தாதா என்ற பெயரிலும், ஆனியில்- இந்திரன், ஆடியில் ரவி, ஆவணியில்
கபஸ்தி, புரட்டாசியில் யமன்; ஐப்பசியில் சுவர்ண ரேதஸ்; கார்த்திகையில் துவஷ்டா; மார்கழியில் மித்திரன்; தை மாதத்தில் விஷ்ணு; மாசி மாதம் அருணன் ; பங்குனியில் சூரியன் என்ற பெயர் சூட்டி சூரியனை பூஜிக்க வேண்டும்.
சூரியனின் தேரில் உள்ள மற்ற தேவதைகளையும் விதிப்படி பூஜிக்க வேண்டும். ஒவ்வொரு தேவதைகளையும் பூஜிக்க தனி தனி பூஜா முறைகள் உள்ளன.
சூரியனை சாயா தேவி சுவர்ச்ச லாம்பா வுடன் தாமரை மலர் கொண்டு பூஜிக்க வேண்டும் அருணன், குதிரைகளயும் பூஜிக்க வேன்டும்.
நியமத்தோடு சூரியனை சப்தமியிலோ அல்லது ஞாயிற்றுகிழமையிலோ விதிப்படி ஆராதிப்பவர் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், தேஜஸ், கீர்த்தி புத்ர பெளத்ரர்கள் அடைவர்.,
ஸப்தமிக்கு முதல் நாளான சஷ்டி முதலே பிரயாணம், காம விஹாரமின்மை; மயக்க வஸ்துக்களை சாப்பிடாதிருத்தல், ஹிம்சை செய்யாதிருத்தல்; எண்ணைய் ஸ்நானம் செய்யாதிருத்தல், ,வீட்டுக்கு விலக்கான பெண்களுடன் பேசாமல், அவர்கள் பொருட்களை தொடாமலும் , பொய் பேசாதிருத்தல் போன்ற நியமங்களை கை கொள்ள வேண்டும்.
சூரிய மந்திரம் அல்லது தீக்ஷை இல்லாதவர் சூரியனை பூஜை செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் வியாதி வரும்.. குரு உபதேசம் பெற்று பிறகு பூஜிக்க வேண்டும்.
மானஸீக புஷ்ப பூஜை:--- ப்ரதிஷ்டை செய்த லிங்கத்தை வாசனையுள்ள பூக்களால் பூஜிப்பது போல இருதயத்தில் உள்ள லிங்கத்தை பூஜிக்க எட்டு வித மானஸீக பூக்கள் எவை?
அஹிம்சை எனப்படும் உடல், வாக்கு, மனம், ஆகிய முக்கரணங்களாலும் யாருக்கும் எந்த ஹிம்சையும் செய்யதிருத்தல் முதல் புஷ்பம்.
இந்திரிய ஜயம்:---கண், காது, மூக்கு, வாய், மனம் என்கின்ற ஐந்து இந்திரியங்களையும் அடக்கி ஒரு நிலை படுத்த வேண்டும். இது 2ஆவது புஷ்பம்.
தேகத்துக்கோ மனதுக்கோ துன்பம் வந்தால் தைரியமாக ஏற்க வேண்டும். , தைரியம் 3ஆவது புஷ்பம்.
பிறர் செய்யும் தீங்கை பொறுமையோடு சகித்துக்கொள்ள வேண்டும்.அதை பொருட்படுத்தாதே. பொறுமை 4ஆவது புஷ்பம்.
சுத்தமான மனம், வாக்கு, தேகம் எப்போதும் இருக்க வேண்டும். களங்கம், அசுத்தம் இல்லாத ஈடுபாடு தேவை. ஸெளசம் எனும் சுத்தியே 5ஆவது பூ.
கோபம் வந்தாலும், கோபத்தை பிறர் தூண்டினாலும்,கோபபட கூடாது. கோபமின்மை ஆறாவது புஷ்பம்.
செயலிலும், எண்ணத்திலும், பேச்சிலும் தர்மமாக இருக்க வேண்டும். அதர்மம் செய்யாமல் இருப்பதே ஹரீ என்னும் ஏழாவது புஷ்பம்.
ஸத்யம் எட்டாவது புஷ்பம்.. பேச்சிலும், செயலிலும், எண்ணத்திலும் ஸத்யமாக இருக்க வேண்டும்.
இம்மாதிரி இருதயத்திலுள்ள லிங்கத்தை பூஜிக்க எட்டு வித மானஸீக பூக்கள் விதிக்கப்பட்டுள்ளன.
நாள் தோறும் எவன் இந்த மானஸீக புஷ்பங்களால் ஜபம், ஹோமம் செய்து பகவானை பூஜிக்கிறானோ அவன் அக்ஞானம் என்னும் இருளிலிருந்து வெளிப்பட்டு சுஷும்னா நாடி வழியாக தலையை பேதித்துக் கொண்டு பகவானை அடைகிறான். .
பிராணாயாமத்தால் இந்திரியங்களை அடக்க வேண்டும் .தியானம் முதலிய உபசாரங்களாலும் பகவானை பூஜிக்க வேன்டும். இதனால் அகங்காரம் அழியும் .நான் என்னுடையது என்ற அகங்காரம் நீங்க வேண்டும்.
நமது கண்கள்—சூரியன்; நாக்கே வருணன்; மூக்கே பூமி ;இந்த சரீரம் அக்கினியும் வாயுவுமாகும் .கர்மேந்திரியங்களே இந்திரன் .நமது உடலில் விஷ்ணு இருந்து எல்லாவற்றையும் அனுபவிக்கிறார். ஆதலால் விஷ்ணு போக்தா.
பாபங்களின் இருப்பிடம் அபானம் ஆகும்.. மனமே ஜீவாத்மா. இவ்வாறு தியானித்து உபாசிப்பது உயர்ந்த மானஸீக பூஜை எனப்படுகிறது.
|
|
|
Post by kgopalan90 on Dec 22, 2018 13:17:05 GMT 5.5
சூரிய நாராயணனுக்கு அன்றாடம் செய்ய வேண்டிய பூஜை:----காலையில் சூரிய உதயத்திற்கு முன் குளித்து விட வேண்டும். சுத்தமான வஸ்த்ரம் தரித்து ஆசமனம் செய்து விட்டு ஓம் ககோல்காய ஸ்வாஹா என்று அர்க்கியம் விட வேண்டும். இது தான் ஸப்தாக்ஷர மந்திரம்.இந்த மந்திரத்தை முடிந்த அளவு சொல்லி பூஜை செய்ய வேண்டும்.
அதன் பின் ஹ்ருதய பூர்வமாக சூரியனை உத்தேசித்து பூஜை செய்ய வேண்டும். பிறகு ப்ராணாயாமம் செய்து , வாயவி, ஆக்னேயி, மாகேந்த்ரி, வாருணி ஆகியோரை த்ருப்திபடுத்தி அந்த ஜலத்தினால் ப்ரோக்ஷணம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு பிறகு அங்கன்யாஸம்.
ஓம் க: ஸ்வாஹா ஹ்ருதயாய நம: ஓம் கம் ஸ்வாஹா சிரஸே ஸ்வாஹா; ஓம் உல்காய ஸ்வாஹா சிகாயை வஷட்; ஓம் யாயா ஸ்வாஹா கவசாய ஹூம்; ஓம் ஸ்வாமி ஸ்வாஹா நேத்ர த்ரயாய வஷட், ஓம் ஹாம் ஸ்வாஹா அஸ்த்ராய பட் என்று செய்ய வேண்டும். இவ்வாறு மந்திர ஜலத்தினால் தன்னையும் ப்ரோக்ஷித்துகொண்டு பூஜைக்குறிய திரவ்யங்கள் , பாத்திரங்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
காலையில் கிழக்கு முகமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும், இரவில் வடக்கு முகமாகவும் ஆறு தள தாமரையில் சூரிய மூர்த்தியை வைத்து ஒருமுக சிந்தனயுடன் தியானிக்கவும். ஹோமத்துடன் காலையிலும், மாலையிலும் பூஜை செய்வது நல்லது.
பிறகு சிகப்பு சந்தனம், சிகப்பு பூக்கள், தூபம், தீபம், நைவேத்யம் காட்ட வேண்டும் .பிறகு சந்திரன் முதலிய நவகிரஹங்கள், இந்திரன் முதலிய அஷ்ட திக்கு பாலகர்கள் , அவர்களின் ஆயுதங்களுக்கும் பூஜை செய்ய வேண்டும்.
அதற்கு பின் வ்யோம வோனம், தண்ணீர் முத்திரை, ரவி முத்திரை, பத்ம முத்திரை, மஹேஸ்வரா முத்திரை என்ற ஐந்து வகை முத்திரைகளையும் காட்டி பூஜை, ஜபம், த்யானம் அர்க்கியம் ஆகியவைகளை எட்டு திக்கு பாலகர்களுக்கும் சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து ஒரு வருடம் பக்தி சிரத்தையுடன் செய்தால் இவ்வுலகில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மோக்ஷமும் கிட்டும்.
சூரிய பூஜை செய்யும் போது சூரியனின் பெயர்கள் சித்திரை மாதம்:---விசாகன்; வைகாசி_:- தாதா; ஆனியில் இந்திரன், ஆடியில் ரவி; ஆவணியில் நபு;
புரட்டாசியில் யமன்; ஐப்பசியில் பர்ஜன்யன்; கார்த்திகையில் த்வஷ்டா; மார்கழியில் மித்திரன்; தை மாதம் விஷ்ணு; மாசியில் வருணன்; பங்குனியில் சூரியன்.
12 மாதங்களில் 12 ஆதித்யர்களை பூஜை செய்ய வேண்டும். முதல் நாள் ஹவிஸ் அன்னம் மட்டும் உட்கொள்ள வேண்டும். மாலையில் ஆசமனம் செய்து சூரிய பகவானின் சாரதி, அருணனை வணங்க வேண்டும்.
அதன் பின் சூரிய பகவானை வணங்கி த்யானம் செய்ய வேண்டும். மறு நாள் விடியற் காலையில் எழுந்து விதிப்படி சூரிய பகவானை பூஜை செய்து அவரது ஸப்தாக்ஷர மூல மந்திரத்தை “ஓம் ககோல்காய ஸ்வாஹா”
என்பதை ஜபிக்க வேண்டும். அக்னியை சூரிய ஜ்யோதியாக பாவித்து ஹோமம் செய்ய வேண்டும். இதன் பிறகு தர்பணமும் செய்ய வேண்டும் .தர்பண புல்லில் நெய்யை நனைத்து ஹோம தீயில் மூல
மந்திரத்தை சொல்லி விட்டு கொண்டிருக்க வேண்டும். பூரணாஹூதியை விரிவாக செய்யவும்..பூர்ணாஹுதி முடிந்த பிறகு தர்பணம் செய்ய வேண்டும் .பிறகு ப்ராஹ்மணர்களுக்கு சாப்பாடு தக்ஷிணை கொடுக்கவும். . 12 மாதம் இவ்வாறு செய்து 12 ப்ராஹ்மணர்களைஆதித்யர்களாகவும் 13 ம் மாதம் ப்ரதானஆசாரியரை சூரிய பகவானாகவே பாவித்து சூரிய ரதத்தை தானம் செய்ய வேண்டும். அந்த ரதத்தில்
தங்கத்திலான சூரியனை நடுவில் வைத்து முன்னால் சாரதியாக அருணனையும் வைத்து குதிரையின் ப்ரதிமையும் அமைக்க வேண்டும் .ஏழைகளுக்கு சாப்பாடு போட்டு தானமும் செய்ய வேன்டும்..
மாசி மாதம் சுக்ல பக்ஷம் பஞ்சமி அன்று ஒரு வேளை சாப்பிடுவது, மறு நாள் சஷ்டி அன்று இரவில் மட்டும் சாப்பாடு. மறு நாள் சப்தமி அன்று பாரணை செய்ய வேண்டும்.11-03-2019
சப்தமி அன்று சூரியனை பூஜை செய்ய வேன்டும். சிவப்பு சந்தனம், அரளி பூக்கள். குங்குலிய தீபம், பாயசம் ஆகியவைகள் நைவேத்யம். ஆத்ம சுத்திக்காக கோமயம் கலந்த ஜலத்தால் ஸ்நானம் செய்ய வேண்டும்.13-03-2019
உண்ணும் உணவிலும் கொஞ்சம் கோமயத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும். ப்ராஹ்மணருக்கு போஜனம் செய்ய வேண்டும்….
ஆனி மாதம் முதல் நான்கு மாதங்கள் சப்தமியன்று வெள்ளை சந்தனம், வெள்ளை பூக்கள், கருப்பு சுகந்த மணமுள்ள அகர் மர தூபம், உத்தமமான நைவேத்யங்கள் படைக்க வேண்டும்..8-7-2019
ஐப்பசி முதல் நான்கு மாதங்கள் அகஸ்த்திய புஷ்பம், சுபராஜித தூபம், வெல்ல அப்பம் ஆகியவைகள் தேவை .ப்ராஹ்மண போஜனம். ஆத்ம சுத்திக்காக ஜலத்தில் தர்பையை நனைத்து குளிக்க வேண்டும் ..உணவிலும் தர்ப்பை ஊறிய ஜலத்தை சேர்த்து கொள்ளலாம் . இவ்வாறு சப்தமி வ்ரதங்களின் முடிவில் மாசி மாதம் சப்தமியன்று ரதத்தை யாத்திரை உற்சவம் கொண்டாடி ரதத்தை தானம் செய்ய வேண்டும்.
ரத சப்தமியை உபவாசமிருந்து கொண்டாடுபவர்கள் கீர்த்தி தனம், படிப்பு, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் ஆகியவைகளை அடைவர். ரத சப்தமி குறித்து விரத ரத்னாகர், விரத கல்பத்ரும, வ்ருதராஜன், பத்ம புராணம், வாயு புராணம் ஆகியவற்றில் விரிவாக கூறப்பட்டுள்ளன.
மார்கழி மாதம் சுக்ல சப்தமியன்று சூரியனுக்கு சிரத்தை பூர்வமாக அபிஷேகம் செய்ய 13-1-19 வேண்டும்.சக்கரை பொங்கல், சித்ரான்னம் நைவேத்யம் நெய்யுடன் சேர்த்து செய்ய வேண்டும்.
12 -2-2019தை மாதம் சுக்ல சப்தமி அன்று சுத்த பவித்ர ஜலத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும்.அதன் பின் பக்தி பூர்வமாக பூஜை செய்ய வேணும் மாசி மாதம் க்ருஷ்ண பக்ஷ சப்தமியன்று மங்கள கலசத்தை சதுரமான செங்கல்லால் அமைத்த வேள்வி மேடையில் சூர்ய நாராயணனை நன்றாக ஸ்தாபிக்க 25-02-2019
வேண்டும்.. ஹோமத்தீயில் ஆஹூதிகள் செய்யவும் .ப்ராஹ்மண போஜனம், வேத பாடம்., நடனம், இசை போன்ற உற்சவாதிகள் செய்ய வேண்டும்.
சதுர்த்தியில் விரதமிருந்து , பஞ்சமியில் ஒரு போது சாப்பிட்டு சஷ்டி ஸப்தமியில் இரவு மாத்திரம் சாப்பிட்டு சப்தமி யன்று வேள்வி, ப்ராஹ்மண போஜனம் செய்விக்க வேண்டும். ப்ராஹ்மணருக்கும், பெளராணிகருக்கும்
நல்ல தக்ஷிணை தர வேண்டும். அஷ்டமி அன்று ரத ஓட்டம் நடை பெற வேண்டும். ரதம் நகரில் எல்லா வீதிகளிலும் சென்று வர வேண்டும். புரட்டாசி மாதம் சுக்ல பக்ஷ சப்தமி வ்ருதம் சூரியனுக்கு மிகவும் பிடித்தமானது.5-10-2019
சூரிய பகவானுக்கு பேரிச்சம் பழம், , இளநீர், மாம்பழம், மாதுளம் பழம் சூரியனுக்கு பிடிக்கும். கோதுமை மாவில் வெல்லமும் நெய்யும் சேர்த்து நைவேத்யம் செய்தால் மிகவும் பிடிக்கும்..
4-9-2019ஆவணி சுக்ல சப்தமி யன்று அபய சப்தமி கொண்டாடப்படுகிறது.. தை மாதம் சுக்ல பக்ஷ சப்தமி அபய பக்ஷ சப்தமி வ்ரதம் 11-2-2019
. கொண்டாடப்படுகிறது. 5-10-2019புரட்டாசி மாதம் சுக்ல சப்தமி திதி அனந்த சப்தமி வ்ரதம். மார்கழி சுக்ல பக்ஷ12-01-2019
சஷ்டியில் காமத விரதம். மார்கழி மாத சஷ்டியில் மந்தார சஷ்டி வ்ருதம். மந்தார பூக்களால் அருச்சிக்க வேண்டும் .ஐப்பசி மாத சுக்ல பக்ஷ சதுர்த்தி யன்று சர்க்கர சப்தமி வ்ருதம் .ப்ராஹ்மண்ருக்கு சக்கரை அல்லது இனிப்பு தானம் செய்ய வேண்டும்.31-10-2019
மார்கழி க்ருஷ்ண பக்ஷ சப்தமி: சர்வதா சப்தமி வ்ருதம் எனப்பெயர். உப்பு எண்ணைய் இரண்டையும் சாப்பாட்டில் ஒதுக்க வேண்டும் 28-12-2018
.பங்குனி மாதம் சுக்ல பக்ஷ சப்தமி வ்ருதம் த்ரிவர்க்க சப்தமி விரதம் எனப்படும்.,நந்தா ஸப்தமி என்றும் இதற்குப்பெயர். ஸந்தான ஸப்தமி என்றும் கூறுகின்றனர் 12-4-2019
ஞாயிற்று கிழமையும் ஹஸ்த நக்ஷத்திரமும் சேர்ந்து வரும் நாளில் செய்யும் விரதம் புத்ர விரதம்.. புத்ரன் வேண்டி செய்யும் விரதம். சூரிய பூஜை செய்து மஹாஸ்வமேத மந்திரத்தை சொல்லி இரவு படுக்க வேண்டும்.29-09-2019
29-9-2019 அன்று ஞாயிற்று கிழமையும் ஹஸ்த நக்ஷத்திரமும் சேர்ந்து வருகிறது.
சுக்ல பக்ஷம், சப்தமி திதி ரோஹிணி நக்ஷத்திரம் ஞாயிற்றுகிழமை சேர்ந்து வந்தால் வட ஆதித்ய வார விருதம் எனப்பெயர் சாயங்காலம் வரை மஹாஸ்வமேத மந்திரம் ஜபிக்க வேண்டும்.. இந்த வருடம் இம்மாதிரி சேர்ந்து ஒரு நாளும் இல்லை..
ஆதித்ய ஹ்ருதய வ்ருதம்:---சங்கராந்தி ஞாயிற்றுகிழமை வந்தால் அன்று வ்ருதத்தை தொடங்கலாம். 14-4-2019அன்று சித்ரை மாத ஸங்க்ரமணம்.ஞாயிறு கிழமை. இன்று சூரிய பூஜை செய்து ஆதித்ய 16-2019;18-8-2019-17-11-2019;
ஹ்ருதயம் படித்து வழிபட வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வீட்டிற்கு வந்து ப்ராம்மண போஜனம் செய்வித்து , இரவில் வெள்ளரிக்காய் கலந்த அன்னத்தை புஜித்து , தரையில் படுக்க வேண்டும்
108 தினங்கள் இதை தொடர்ந்து செய்தால் எல்லா இஷ்டங்களும் நிறைவேறும்..
ரஹஸ்ய ஸப்தமி:--மிகவும் சிலாக்கியமானது. முந்தய பிறவிகளில் செய்த பாவங்களை போக்கவல்லது. வரும் பிறவிகளில் சிறப்பாக வாழ வகை செய்யும். குலத்தில் முன்னோர்கள்
செய்த பாவத்தையும் போக்கி அவர்களுக்கு நற்கதி அளிக்கும்.சித்திரை சுக்ல ஸப்தமியில் துவங்க வேண்டும். சதா சூரியனையே ஸ்மரிக்க வேண்டும். எல்லோருடனும் அன்பாக பழக வேண்டும்.11-05-2019
எக்காரணம் கொண்டும் எண்ணையை தொடக்கூடாது. நீல வர்ண துணிகளை அணியக் கூடாது .நெல்லிக்காய் தவிர்க்க பட வேண்டும். கலகம் எதுவும் செய்யக் கூடாது.
இந்த நாளில் வாய் பாட்டு, வீணை வாத்தியம் வாசிப்பது, நடனமாடுவது, அநாவஸ்யமாக சிரிப்பது, பெண்களுடன் படுப்பது, சூதாடுவது , அழுவது, பகலில் தூங்குவது, பொய் சொல்லுவது,
பிறருக்கு துன்பம் தர எண்ணுவது அடுத்த ஜீவனுக்கு கஷ்டம் தருவது, அதிகமாக சாப்பிடுவது துஷ்டத்தனம் சோகம், ஆகியவை கூடாது. கோபபடக்கூடாது. கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது.
சித்திரை மாதம் துவங்கும் இந்த விரதத்தை 12 மாதங்களில் 12 ஆதித்யர்களான தாதா, அர்யமா, மித்ரன்,வருணன் ,இந்திரன், விவஸ்வான், பர்ஜன்யன், பூஷா,அம்சு, பகன், த்வஷ்டா, விஷ்ணு , ஆகியோர்களை மாதம் ஒருவராக பூஜை செய்து போஜக ப்ராஹ்மணனுக்கு நெய்யுடன் அன்னமளிக்க வேண்டும். அதன் பிறகு பாலுடன் ஸ்வர்ண பாத்திரத்தை தானம் செய்ய வேண்டும் தக்ஷிணையுடன், சூரிய லோகத்தில் வசிக்கும் பாக்கியம் கிடைக்கும்.
ஐப்பசி, கார்த்திகை, மாசி, சித்திரை மாதங்களீல் சிவன் அல்லது விஷ்ணு பூஜை செய்வதால் நல்ல பலன் கிடைக்கும். ப்ரதமை திதியில் அக்கினி தேவனுக்கு சடங்குகள், ஹோமம் செய்வித்தல் போன்றவற்றை செய்வதால் தனம் தானியம் மற்றும் கோரிய பலன்கள் கிடைக்கும்.
ஆடி, ஆவணி மாதங்களில் சூரியன். ஆஷாட, கர்கடக ராசிகளில் பிரவேசிக்கும் சமயம் த்விதியை சேர்ந்தால் விஷ்ணு பூஜை மிக விசேஷம்.
ஆவணி மாதம் க்ருஷ்ண பக்ஷ த்விதியை அன்று லக்ஷ்மி நாராயண பூஜை செய்வது பல நற்பலன்கள் தரும். கணவன் மனைவி பிரிவு ஏற்படாது. பிறிந்தவர் கூடுவர். 1-9-2019.
6-6-2019வைகாசி மாதம் சுக்ல பக்ஷ த்ருதியை அன்று கங்கை ஸ்நானம் செய்வது விசேஷம், மாசி மாதம் த்ருதியையும் ரோஹிணியும் சேர்ந்தால் விசேஷம்.-- ஐப்பசி த்ருதியையில் தானம் கொடுத்தால் நற்பயன் பெருகும்.,இன்று விசேஷ சித்ரான்னங்களும் , கொழுக்கட்டையும் நைவேத்யம் செய்தல் வேண்டும்.30-10-2019
ஆவணி மாதம் புதன் கிழமையும் த்ருதியையும் சேர்ந்து அமைந்த நாளில் உபவாசம் இருப்பது நல்லது.
சதுர்த்தியும் பரணியும் சேர்ந்த நாளில் யம தேவதைக்காக உபவாசமிருந்தால் எல்லா பாவங்களும் விலகும்.
3-9-2019 புரட்டாசி மாதம் சுக்ல பஞ்சமியில் பூஜையும், உபவாசமும் சிவலோக ப்ராப்தி கொடுக்கும்.
கார்த்திகை, மாசி மாதங்களில் வரும் கிரஹணங்களின் போது குளித்து ஜப தபாதிகள் , உபவாசம் ஏராளமான நற்பயன் தரும்.
5-8-19 சிராவண மாதம் சுக்ல பக்ஷ பஞ்சமி அன்று நாகங்களுக்கும், ப்ரதிமைகளுக்கும் பால், தயிர், சந்தனம், சிந்தூரம்,கங்கா ஜலம் மூலிகை கலந்த திரவியங்கள் கொண்டு பூஜை செய்தால் பல கோடி திரவியங்கள் கிடைக்கும். குலம் வ்ருத்தி அடையும். வம்சம் செழிக்கும்.
|
|
|
Post by kgopalan90 on Dec 22, 2018 13:15:50 GMT 5.5
சூரிய நாராயணனுக்கு அன்றாடம் செய்ய வேண்டிய பூஜை:----காலையில் சூரிய உதயத்திற்கு முன் குளித்து விட வேண்டும். சுத்தமான வஸ்த்ரம் தரித்து ஆசமனம் செய்து விட்டு ஓம் ககோல்காய ஸ்வாஹா என்று அர்க்கியம் விட வேண்டும். இது தான் ஸப்தாக்ஷர மந்திரம்.இந்த மந்திரத்தை முடிந்த அளவு சொல்லி பூஜை செய்ய வேண்டும்.
அதன் பின் ஹ்ருதய பூர்வமாக சூரியனை உத்தேசித்து பூஜை செய்ய வேண்டும். பிறகு ப்ராணாயாமம் செய்து , வாயவி, ஆக்னேயி, மாகேந்த்ரி, வாருணி ஆகியோரை த்ருப்திபடுத்தி அந்த ஜலத்தினால் ப்ரோக்ஷணம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு பிறகு அங்கன்யாஸம்.
ஓம் க: ஸ்வாஹா ஹ்ருதயாய நம: ஓம் கம் ஸ்வாஹா சிரஸே ஸ்வாஹா; ஓம் உல்காய ஸ்வாஹா சிகாயை வஷட்; ஓம் யாயா ஸ்வாஹா கவசாய ஹூம்; ஓம் ஸ்வாமி ஸ்வாஹா நேத்ர த்ரயாய வஷட், ஓம் ஹாம் ஸ்வாஹா அஸ்த்ராய பட் என்று செய்ய வேண்டும். இவ்வாறு மந்திர ஜலத்தினால் தன்னையும் ப்ரோக்ஷித்துகொண்டு பூஜைக்குறிய திரவ்யங்கள் , பாத்திரங்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
காலையில் கிழக்கு முகமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும், இரவில் வடக்கு முகமாகவும் ஆறு தள தாமரையில் சூரிய மூர்த்தியை வைத்து ஒருமுக சிந்தனயுடன் தியானிக்கவும். ஹோமத்துடன் காலையிலும், மாலையிலும் பூஜை செய்வது நல்லது.
பிறகு சிகப்பு சந்தனம், சிகப்பு பூக்கள், தூபம், தீபம், நைவேத்யம் காட்ட வேண்டும் .பிறகு சந்திரன் முதலிய நவகிரஹங்கள், இந்திரன் முதலிய அஷ்ட திக்கு பாலகர்கள் , அவர்களின் ஆயுதங்களுக்கும் பூஜை செய்ய வேண்டும்.
அதற்கு பின் வ்யோம வோனம், தண்ணீர் முத்திரை, ரவி முத்திரை, பத்ம முத்திரை, மஹேஸ்வரா முத்திரை என்ற ஐந்து வகை முத்திரைகளையும் காட்டி பூஜை, ஜபம், த்யானம் அர்க்கியம் ஆகியவைகளை எட்டு திக்கு பாலகர்களுக்கும் சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து ஒரு வருடம் பக்தி சிரத்தையுடன் செய்தால் இவ்வுலகில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மோக்ஷமும் கிட்டும்.
சூரிய பூஜை செய்யும் போது சூரியனின் பெயர்கள் சித்திரை மாதம்:---விசாகன்; வைகாசி_:- தாதா; ஆனியில் இந்திரன், ஆடியில் ரவி; ஆவணியில் நபு;
புரட்டாசியில் யமன்; ஐப்பசியில் பர்ஜன்யன்; கார்த்திகையில் த்வஷ்டா; மார்கழியில் மித்திரன்; தை மாதம் விஷ்ணு; மாசியில் வருணன்; பங்குனியில் சூரியன்.
12 மாதங்களில் 12 ஆதித்யர்களை பூஜை செய்ய வேண்டும். முதல் நாள் ஹவிஸ் அன்னம் மட்டும் உட்கொள்ள வேண்டும். மாலையில் ஆசமனம் செய்து சூரிய பகவானின் சாரதி, அருணனை வணங்க வேண்டும்.
அதன் பின் சூரிய பகவானை வணங்கி த்யானம் செய்ய வேண்டும். மறு நாள் விடியற் காலையில் எழுந்து விதிப்படி சூரிய பகவானை பூஜை செய்து அவரது ஸப்தாக்ஷர மூல மந்திரத்தை “ஓம் ககோல்காய ஸ்வாஹா”
என்பதை ஜபிக்க வேண்டும். அக்னியை சூரிய ஜ்யோதியாக பாவித்து ஹோமம் செய்ய வேண்டும். இதன் பிறகு தர்பணமும் செய்ய வேண்டும் .தர்பண புல்லில் நெய்யை நனைத்து ஹோம தீயில் மூல
மந்திரத்தை சொல்லி விட்டு கொண்டிருக்க வேண்டும். பூரணாஹூதியை விரிவாக செய்யவும்..பூர்ணாஹுதி முடிந்த பிறகு தர்பணம் செய்ய வேண்டும் .பிறகு ப்ராஹ்மணர்களுக்கு சாப்பாடு தக்ஷிணை கொடுக்கவும். . 12 மாதம் இவ்வாறு செய்து 12 ப்ராஹ்மணர்களைஆதித்யர்களாகவும் 13 ம் மாதம் ப்ரதானஆசாரியரை சூரிய பகவானாகவே பாவித்து சூரிய ரதத்தை தானம் செய்ய வேண்டும். அந்த ரதத்தில்
தங்கத்திலான சூரியனை நடுவில் வைத்து முன்னால் சாரதியாக அருணனையும் வைத்து குதிரையின் ப்ரதிமையும் அமைக்க வேண்டும் .ஏழைகளுக்கு சாப்பாடு போட்டு தானமும் செய்ய வேன்டும்..
மாசி மாதம் சுக்ல பக்ஷம் பஞ்சமி அன்று ஒரு வேளை சாப்பிடுவது, மறு நாள் சஷ்டி அன்று இரவில் மட்டும் சாப்பாடு. மறு நாள் சப்தமி அன்று பாரணை செய்ய வேண்டும்.11-03-2019
சப்தமி அன்று சூரியனை பூஜை செய்ய வேன்டும். சிவப்பு சந்தனம், அரளி பூக்கள். குங்குலிய தீபம், பாயசம் ஆகியவைகள் நைவேத்யம். ஆத்ம சுத்திக்காக கோமயம் கலந்த ஜலத்தால் ஸ்நானம் செய்ய வேண்டும்.13-03-2019
உண்ணும் உணவிலும் கொஞ்சம் கோமயத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும். ப்ராஹ்மணருக்கு போஜனம் செய்ய வேண்டும்….
ஆனி மாதம் முதல் நான்கு மாதங்கள் சப்தமியன்று வெள்ளை சந்தனம், வெள்ளை பூக்கள், கருப்பு சுகந்த மணமுள்ள அகர் மர தூபம், உத்தமமான நைவேத்யங்கள் படைக்க வேண்டும்..8-7-2019
ஐப்பசி முதல் நான்கு மாதங்கள் அகஸ்த்திய புஷ்பம், சுபராஜித தூபம், வெல்ல அப்பம் ஆகியவைகள் தேவை .ப்ராஹ்மண போஜனம். ஆத்ம சுத்திக்காக ஜலத்தில் தர்பையை நனைத்து குளிக்க வேண்டும் ..உணவிலும் தர்ப்பை ஊறிய ஜலத்தை சேர்த்து கொள்ளலாம் . இவ்வாறு சப்தமி வ்ரதங்களின் முடிவில் மாசி மாதம் சப்தமியன்று ரதத்தை யாத்திரை உற்சவம் கொண்டாடி ரதத்தை தானம் செய்ய வேண்டும்.
ரத சப்தமியை உபவாசமிருந்து கொண்டாடுபவர்கள் கீர்த்தி தனம், படிப்பு, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் ஆகியவைகளை அடைவர். ரத சப்தமி குறித்து விரத ரத்னாகர், விரத கல்பத்ரும, வ்ருதராஜன், பத்ம புராணம், வாயு புராணம் ஆகியவற்றில் விரிவாக கூறப்பட்டுள்ளன.
மார்கழி மாதம் சுக்ல சப்தமியன்று சூரியனுக்கு சிரத்தை பூர்வமாக அபிஷேகம் செய்ய 13-1-19 வேண்டும்.சக்கரை பொங்கல், சித்ரான்னம் நைவேத்யம் நெய்யுடன் சேர்த்து செய்ய வேண்டும்.
12 -2-2019தை மாதம் சுக்ல சப்தமி அன்று சுத்த பவித்ர ஜலத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும்.அதன் பின் பக்தி பூர்வமாக பூஜை செய்ய வேணும் மாசி மாதம் க்ருஷ்ண பக்ஷ சப்தமியன்று மங்கள கலசத்தை சதுரமான செங்கல்லால் அமைத்த வேள்வி மேடையில் சூர்ய நாராயணனை நன்றாக ஸ்தாபிக்க 25-02-2019
வேண்டும்.. ஹோமத்தீயில் ஆஹூதிகள் செய்யவும் .ப்ராஹ்மண போஜனம், வேத பாடம்., நடனம், இசை போன்ற உற்சவாதிகள் செய்ய வேண்டும்.
சதுர்த்தியில் விரதமிருந்து , பஞ்சமியில் ஒரு போது சாப்பிட்டு சஷ்டி ஸப்தமியில் இரவு மாத்திரம் சாப்பிட்டு சப்தமி யன்று வேள்வி, ப்ராஹ்மண போஜனம் செய்விக்க வேண்டும். ப்ராஹ்மணருக்கும், பெளராணிகருக்கும்
நல்ல தக்ஷிணை தர வேண்டும். அஷ்டமி அன்று ரத ஓட்டம் நடை பெற வேண்டும். ரதம் நகரில் எல்லா வீதிகளிலும் சென்று வர வேண்டும். புரட்டாசி மாதம் சுக்ல பக்ஷ சப்தமி வ்ருதம் சூரியனுக்கு மிகவும் பிடித்தமானது.5-10-2019
சூரிய பகவானுக்கு பேரிச்சம் பழம், , இளநீர், மாம்பழம், மாதுளம் பழம் சூரியனுக்கு பிடிக்கும். கோதுமை மாவில் வெல்லமும் நெய்யும் சேர்த்து நைவேத்யம் செய்தால் மிகவும் பிடிக்கும்..
4-9-2019ஆவணி சுக்ல சப்தமி யன்று அபய சப்தமி கொண்டாடப்படுகிறது.. தை மாதம் சுக்ல பக்ஷ சப்தமி அபய பக்ஷ சப்தமி வ்ரதம் 11-2-2019
. கொண்டாடப்படுகிறது. 5-10-2019புரட்டாசி மாதம் சுக்ல சப்தமி திதி அனந்த சப்தமி வ்ரதம். மார்கழி சுக்ல பக்ஷ12-01-2019
சஷ்டியில் காமத விரதம். மார்கழி மாத சஷ்டியில் மந்தார சஷ்டி வ்ருதம். மந்தார பூக்களால் அருச்சிக்க வேண்டும் .ஐப்பசி மாத சுக்ல பக்ஷ சதுர்த்தி யன்று சர்க்கர சப்தமி வ்ருதம் .ப்ராஹ்மண்ருக்கு சக்கரை அல்லது இனிப்பு தானம் செய்ய வேண்டும்.31-10-2019
மார்கழி க்ருஷ்ண பக்ஷ சப்தமி: சர்வதா சப்தமி வ்ருதம் எனப்பெயர். உப்பு எண்ணைய் இரண்டையும் சாப்பாட்டில் ஒதுக்க வேண்டும் 28-12-2018
.பங்குனி மாதம் சுக்ல பக்ஷ சப்தமி வ்ருதம் த்ரிவர்க்க சப்தமி விரதம் எனப்படும்.,நந்தா ஸப்தமி என்றும் இதற்குப்பெயர். ஸந்தான ஸப்தமி என்றும் கூறுகின்றனர் 12-4-2019
ஞாயிற்று கிழமையும் ஹஸ்த நக்ஷத்திரமும் சேர்ந்து வரும் நாளில் செய்யும் விரதம் புத்ர விரதம்.. புத்ரன் வேண்டி செய்யும் விரதம். சூரிய பூஜை செய்து மஹாஸ்வமேத மந்திரத்தை சொல்லி இரவு படுக்க வேண்டும்.29-09-2019
29-9-2019 அன்று ஞாயிற்று கிழமையும் ஹஸ்த நக்ஷத்திரமும் சேர்ந்து வருகிறது.
சுக்ல பக்ஷம், சப்தமி திதி ரோஹிணி நக்ஷத்திரம் ஞாயிற்றுகிழமை சேர்ந்து வந்தால் வட ஆதித்ய வார விருதம் எனப்பெயர் சாயங்காலம் வரை மஹாஸ்வமேத மந்திரம் ஜபிக்க வேண்டும்.. இந்த வருடம் இம்மாதிரி சேர்ந்து ஒரு நாளும் இல்லை..
ஆதித்ய ஹ்ருதய வ்ருதம்:---சங்கராந்தி ஞாயிற்றுகிழமை வந்தால் அன்று வ்ருதத்தை தொடங்கலாம். 14-4-2019அன்று சித்ரை மாத ஸங்க்ரமணம்.ஞாயிறு கிழமை. இன்று சூரிய பூஜை செய்து ஆதித்ய 16-2019;18-8-2019-17-11-2019;
ஹ்ருதயம் படித்து வழிபட வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு வீட்டிற்கு வந்து ப்ராம்மண போஜனம் செய்வித்து , இரவில் வெள்ளரிக்காய் கலந்த அன்னத்தை புஜித்து , தரையில் படுக்க வேண்டும்
108 தினங்கள் இதை தொடர்ந்து செய்தால் எல்லா இஷ்டங்களும் நிறைவேறும்..
ரஹஸ்ய ஸப்தமி:--மிகவும் சிலாக்கியமானது. முந்தய பிறவிகளில் செய்த பாவங்களை போக்கவல்லது. வரும் பிறவிகளில் சிறப்பாக வாழ வகை செய்யும். குலத்தில் முன்னோர்கள்
செய்த பாவத்தையும் போக்கி அவர்களுக்கு நற்கதி அளிக்கும்.சித்திரை சுக்ல ஸப்தமியில் துவங்க வேண்டும். சதா சூரியனையே ஸ்மரிக்க வேண்டும். எல்லோருடனும் அன்பாக பழக வேண்டும்.11-05-2019
எக்காரணம் கொண்டும் எண்ணையை தொடக்கூடாது. நீல வர்ண துணிகளை அணியக் கூடாது .நெல்லிக்காய் தவிர்க்க பட வேண்டும். கலகம் எதுவும் செய்யக் கூடாது.
இந்த நாளில் வாய் பாட்டு, வீணை வாத்தியம் வாசிப்பது, நடனமாடுவது, அநாவஸ்யமாக சிரிப்பது, பெண்களுடன் படுப்பது, சூதாடுவது , அழுவது, பகலில் தூங்குவது, பொய் சொல்லுவது,
பிறருக்கு துன்பம் தர எண்ணுவது அடுத்த ஜீவனுக்கு கஷ்டம் தருவது, அதிகமாக சாப்பிடுவது துஷ்டத்தனம் சோகம், ஆகியவை கூடாது. கோபபடக்கூடாது. கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது.
சித்திரை மாதம் துவங்கும் இந்த விரதத்தை 12 மாதங்களில் 12 ஆதித்யர்களான தாதா, அர்யமா, மித்ரன்,வருணன் ,இந்திரன், விவஸ்வான், பர்ஜன்யன், பூஷா,அம்சு, பகன், த்வஷ்டா, விஷ்ணு , ஆகியோர்களை மாதம் ஒருவராக பூஜை செய்து போஜக ப்ராஹ்மணனுக்கு நெய்யுடன் அன்னமளிக்க வேண்டும். அதன் பிறகு பாலுடன் ஸ்வர்ண பாத்திரத்தை தானம் செய்ய வேண்டும் தக்ஷிணையுடன், சூரிய லோகத்தில் வசிக்கும் பாக்கியம் கிடைக்கும்.
ஐப்பசி, கார்த்திகை, மாசி, சித்திரை மாதங்களீல் சிவன் அல்லது விஷ்ணு பூஜை செய்வதால் நல்ல பலன் கிடைக்கும். ப்ரதமை திதியில் அக்கினி தேவனுக்கு சடங்குகள், ஹோமம் செய்வித்தல் போன்றவற்றை செய்வதால் தனம் தானியம் மற்றும் கோரிய பலன்கள் கிடைக்கும்.
ஆடி, ஆவணி மாதங்களில் சூரியன். ஆஷாட, கர்கடக ராசிகளில் பிரவேசிக்கும் சமயம் த்விதியை சேர்ந்தால் விஷ்ணு பூஜை மிக விசேஷம்.
ஆவணி மாதம் க்ருஷ்ண பக்ஷ த்விதியை அன்று லக்ஷ்மி நாராயண பூஜை செய்வது பல நற்பலன்கள் தரும். கணவன் மனைவி பிரிவு ஏற்படாது. பிறிந்தவர் கூடுவர். 1-9-2019.
6-6-2019வைகாசி மாதம் சுக்ல பக்ஷ த்ருதியை அன்று கங்கை ஸ்நானம் செய்வது விசேஷம், மாசி மாதம் த்ருதியையும் ரோஹிணியும் சேர்ந்தால் விசேஷம்.-- ஐப்பசி த்ருதியையில் தானம் கொடுத்தால் நற்பயன் பெருகும்.,இன்று விசேஷ சித்ரான்னங்களும் , கொழுக்கட்டையும் நைவேத்யம் செய்தல் வேண்டும்.30-10-2019
ஆவணி மாதம் புதன் கிழமையும் த்ருதியையும் சேர்ந்து அமைந்த நாளில் உபவாசம் இருப்பது நல்லது.
சதுர்த்தியும் பரணியும் சேர்ந்த நாளில் யம தேவதைக்காக உபவாசமிருந்தால் எல்லா பாவங்களும் விலகும்.
3-9-2019 புரட்டாசி மாதம் சுக்ல பஞ்சமியில் பூஜையும், உபவாசமும் சிவலோக ப்ராப்தி கொடுக்கும்.
கார்த்திகை, மாசி மாதங்களில் வரும் கிரஹணங்களின் போது குளித்து ஜப தபாதிகள் , உபவாசம் ஏராளமான நற்பயன் தரும்.
5-8-19 சிராவண மாதம் சுக்ல பக்ஷ பஞ்சமி அன்று நாகங்களுக்கும், ப்ரதிமைகளுக்கும் பால், தயிர், சந்தனம், சிந்தூரம்,கங்கா ஜலம் மூலிகை கலந்த திரவியங்கள் கொண்டு பூஜை செய்தால் பல கோடி திரவியங்கள் கிடைக்கும். குலம் வ்ருத்தி அடையும். வம்சம் செழிக்கும்.
|
|
|
Post by kgopalan90 on Dec 22, 2018 11:58:28 GMT 5.5
ஸப்தமி திதி;--ஸூர்யன். சப்தமி திதி சூரியனுக்கு மிகவும் பிடித்தமான திதி. உலகில் படைப்பை உருவாக்க ப்ருஹ்மா தன்னுடைய உடலை ஆண் பெண் என இரு கூறுகளாக்கி கொண்டார். அதில் ஆண் பாதி ஸ்வாயம்புவ மனு என்றும்
பெண் பாதி சதரூபா என்றும் அழைக்கப்பட்டனர். .அதே சமயம் தன் மனதின் மூலம் பத்து மகன்களை உருவாக்கி அவர்கள் ப்ரஜைகளின் உற்பத்திக்கு காரணமாக இருக்க வேண்டும் என க்கருதினார். அவர்கள் அதனால்
ப்ரஜா பதிகள் என அழைக்கப்பட்டனர். அவர்களில் தட்சனும் ஒருவன்.. தட்சனுக்கு நிறைய பெண்கள் இருந்தனர். அதில் திதி அதிதி என்பவர்களை காஸ்யப ப்ரஜாபதிக்கு மணம் செய்வித்தான்.
அதிதிக்கு பிறந்தவனே ஆதித்யன். .. அதிதி காச்யபர் திருமணமானப் பின் ஒரு முட்டை (அண்டம்). உண்டாயிற்று. பல நாள் ஆனப் பின்னும் எந்த உயிர் ஜீவனும் அந்த முட்டையிலிருந்து வெளி வரவில்லை. ஆனால்
காஸ்யபரோ அந்த முட்டை(அண்டம்) இறக்கவில்லை (மிருதா) என்று சொன்னார். ஒரு நாள் முட்டையை உடைத்துக்கொண்டு சூரியன் பிறந்தான். மிருதா அண்டம் என்ற இரு வார்த்தைகளை உள்ளடக்கி அவன் பெயரை மார்த்தாண்டன் என தந்தை அழைத்தார்..அதிதியின் பிள்ளை ஆதித்யன். , கதிரவன், பகலவன், பரிதி சூரியன்.. தேவ சிற்பி விச்வகர்மா மகள் சம்க்ஞா. .சூரியன் மனைவி ஆனாள் இவர்களுக்கு யமன், யமுனா, சாவர்னிமனு ஆகிய குழந்தைகள் பிறந்தார்கள்.
சம்க்ஞாவால் சூரிய பேரொளி தாங்க முடியவில்லை. அதனால் தன் நிழலைக்கொண்டு தன்னை போலவே உள்ள சாயா என்ற பெண்ணை உருவாக்கினாள்.
சூரியனுக்கும் சாயாவுக்கும் க்ருதசர்வா, ச்ருதகர்மா, தப்தி என்ற குழந்தைகள் பிறந்தனர். . ச்ருத கர்மா தான் பின்னால் சனி கிரஹமாக மாறினதாக பவிஷ்ய புராணம் கூறுகிறது. க்ருதசர்வா சாவர்ணிமனுவாக வளர்ந்ததாக கூறுகிறது.
ஒரு நாள் யமுனைக்கும் தப்திக்கும் தகராறு ஏற்பட்டது. நீ நதியாக போ என இருவரும் ஒருவருக்கொருவர் சாபமிட்டனர்.. தேவ சிற்பி யான விஸ்வகர்மா தன்னிடமுள்ள கடசல் கருவியினால் சூரியனின் தேவையற்ற உபரி சக்தியை செதுக்கி எடுத்து விட்டார்..
சூரியனின் வெப்பம் குறைந்தது. வனப்பகுதிகளில் பெண் குதிரையாக சுற்றிகொண்டிருந்த சம்க்ஞா தேவியிடம் சூரியன் ஆண் குதிரையாக வடிவெடுத்து சென்றார். இப்போது இருவருக்கும் பிறந்தவர்கள் அஸ்வினி தேவர்கள். . இவர்கள் தேவ லோக மருத்துவர்களானார்கள்..
மஹா பாரத கதையின் படி நகுல சகாதேவர்களின் தந்தையர் அசுவினி தேவர்கள்..
சூரியனும் சம்க்ஞாவும் சூரிய மண்டலத்திற்கு திரும்பியது ஸப்தமி திதிதான். ஆதலால் சூரியனுக்கு சப்தமி திதி மிகவும் பிடிக்கும்.. இப்போது இங்கு பிறந்தவன் ரேவந்தன். . இவன் குஹ்யர்கள் ராஜ்ய மன்ன னாவான்.
பஞ்சமி திதியில் ஒரு வேளை ஆகாரம் சாப்பீட்டு சஷ்டியன்று உபவாசமிருந்து சப்தமியன்று முதலில் உபவாசமிருந்து அதன் பின் காய்கறிகள், பஞ்ச பட்ச பரமான்னங்களை சூரியனுக்கு நிவேத்யம் செய்து ,ப்ராஹ்மணர்களுக்கு சாப்பாடு போட்டு இரவில் மெளன விரதத்துடன்
சூர்யனுக்கு அனைத்தையும் அர்ப்பணம் செய்து விட்டு சாப்பிடுகிறானோ அவன் எல்லாவற்றிலும் வெற்றி அடைகிறான். சூர்ய லோகத்தில் பல மன்வந்த்ரம் வாழ்வான். பிறகு பூமியில் சக்கிரவர்த்தியாக வாழ்வான்.
மனதில் நினைத்ததை எல்லாம் கொடுக்க கூடிய திதிகள்:- த்ருதியை, பஞ்சமி, சஷ்டி, ஸப்தமி, நவமி… மாசி ஸப்தமி, ஐப்பசி நவமி, புரட்டாசி சஷ்டி, மாத பஞ்சமி இவைகள் விசேஷ பலன் தருபவை. 13-3-2019;4-10-2019;5-11-2019.
கார்திகை சுக்ல பக்ஷ ஸப்தமியில் ஸப்தமி வ்ருதம் இருப்பதை துவக்கலாம். உத்தமமான பிராமணருக்கு நல்ல கனிகளை தானமாக கொடுக்க வேண்டும். 4-12-2019. . .ராத்திரியில் தவமிருப்பவர் காய் கறிகளையே சாப்பிடவேண்டும்.இந்த வ்ருதத்தை நான்கு மாதங்கள் அனுசரிக்க வேண்டும். பாரணை இருக்க வேண்டும். பஞ்ச கவ்யத்தால் சூரிய பகவானை ஸ்நானம் செய்விக்க வேண்டும். அதன் பின் தானும் சாப்பிட வேண்டும்.
முதல் மாதம் குங்குமப்பூ , சந்தனம், , புஷ்பம், பழம், பாயசம், தூப தீப நைவேத்யங்கள். ஆகியவைகளுடன் பூஜை செய்ய வேண்டும் .ப்ராமணருக்கு அதே மாதிரி சாப்பாடு போடவேண்டும்.
இரண்டாம் மாதம் ஜலத்தில் தர்பையை போட்டு அதை சூரிய பகவானுக்கு உணவாக கொடுக்க வேண்டும். பல புஷ்பங்கள், காய் கறிகள், வெல்ல அப்பம் நைவேத்தியம். காய்ச்சிய பால், அரளி பூ, குங்குலிய தூபம், தயிர் சாதம் போன்றவைகளால் சூரியனை பூஜை செய்ய வேண்டும்.
புராணிகருக்கு வஸ்த்ரம், அலங்கார பொருள் கொடுத்து புராணங்கள் சொல்ல செய்ய வேண்டும் .சிகப்பு சந்தனம், அரளிப்பூ, குங்குலிய தீபம்,; கொழுக்கட்டை, பாயசம் நைவேத்யம்.
பால், தாமிர பாத்ரம், புராண கிரந்தங்கள், பெளராணிகர் ஆகியவை சூரியனுக்கு ப்ரீதியானவை. சாக ஸப்தமி வ்ருதம் சூர்ய பகவானுக்கு மிகவும் இஷ்டம். .
|
|
|
Post by kgopalan90 on Dec 21, 2018 10:41:55 GMT 5.5
24-12-2018:--பரசுராம ஜயந்தி;
ஶ்ரீ மஹா விஷ்ணுவின் ஆறாவது அவதாரம். த்ரேதா யுகத்தில் ரேணுகா தேவிக்கும் ஜமதக்னி மஹரிஷிக்கும் மகனாக பிறந்தார். தந்தை சொல்படி தாயின் தலையை துண்டித்து பின்னர் தந்தையிடம் வரம் பெற்று தாயை உயிர்பித்தார். ஏழு சிரஞ்சீவிகளில் இவரும் ஒருவர். இன்று பரசு ராமரைபூஜிப்போம்
|
|
|
Post by kgopalan90 on Dec 19, 2018 18:20:25 GMT 5.5
22-12-2018 லவண தானம்;-
மார்கசீர்ஷ பெளர்ணமியான இன்று நாம் சாப்பிடும் கல் உப்பை ஏழைகளுக்கு தானம் செய்யலாம்.இன்று காலை நித்ய பூஜைகளை முடித்து விட்டு சுத்தமான உப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொண்டு தெய்வ ஸன்னதியில் மார்க்க சீர்ஷ பூர்ணிமாயாம்
ஸுந்தர ரூபத்வ ஸித்தியர்த்தம் லவண தானம் கரிஷ்யே என்று உப்புடன் கூடிய பாத்திரத்தை கையில் எடுத்துக்கொண்டு துளசி தக்ஷிணை சேர்த்து ரஸானா மக்ரஜம் ஸ்ரேஷ்டம் லவணம் பலவர்த்தனம் தஸ்மாதஸ்ய ப்ரதானேன அத: சாந்திம் ப்ரயஸ்சமே.
மார்க்கசீர்ஷ பூர்ணிமா மஹாபுண்ய காலே மம ஸஹ குடும்பஸ்ய ஸதா ஸுந்தர ரூபத்வ ஸித்தியர்த்தம் இதம் லவணம் ச பத்ரம் ஸம்ப்ரததே. என்று சொல்லி கீழே வைத்து நமஸ்காரம் செய்ய வேண்டும். பிறகு அதை யாரோ ஒருவருக்கு கொடுத்து விடவும்.
மேலும் பலருக்கு இன்று கல் உப்பு வாங்கி தரலாம். இதனால் தானம் செய்பவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் அழகான தோற்றம் ஏற்படும். எப்போதும் அழகு குறையாது. என்கிறது நிர்ணய ஸிந்து.
22-12-2018 தத்தாத்ரேயர் ஜயந்தி:--
பதிவிரதையான அனஸூயா தேவிக்கும் அத்ரி மஹரிஷிக்கும் புத்ரராக மார்கழி மாத பெளர்ணமியன்று புதன் கிழமை ம்ருகசீர்ஷ நக்ஷத்திரதன்று அவதரித்தார் தத்தாத்ரேயர்.
இவரை நினைப்பதாலேயே பக்தர்களின் கஷ்டங்கள் தூர விலகி போகும். இவரை உபாசித்தால் பூத ப்ரேத பைசாச தொல்லைகள் நீங்கும். . ஞான மார்க்கத்தில் ஈடுபாடும் தீவிர வைராக்கியமும் உண்டாகும்.
|
|
|
Post by kgopalan90 on Dec 17, 2018 20:21:23 GMT 5.5
சுக்லபக்ஷம் சதுர்த்தியில் பிள்ளையாருக்கு கந்த மூலாதிகளால் வாசனையான திரவியங்கள், , பலகாரங்கள் ஆகியவற்றுடன் பூஜை செய்ய வேண்டும். அரளி பூ மாலையால் அலங்கரிக்க வேண்டும்.
பிள்ளையார் முன்பு அந்தணர்கள் ஸ்வஸ்திவாசகம் சொல்ல பூஜை ஆரம்பிக்க வேண்டும். அதன் பின் பார்வதி, சங்கரன் என்று தொடங்கி கணேச பூஜையை துவங்க வேண்டும், பித்ருக்களுக்கும், நவகிரஹங்களுக்கும் பூஜை
செய்ய வேண்டும். நான்கு கலசங்கள் வைத்து அதில் கோரோசனை, குங்கிலியம், மருந்து வாசனை சாமான்களை போட்டு, புனித நீரால் கலசங்களை நிரப்ப வேண்டும். கணேசரை அழகிய சிம்மாசனத்தில் அமர்த்த வேண்டும். கலச பூஜை செய்தபின் அடியிற்கண்ட மந்திரத்தால் கணேசரை பூஜை செய்ய வேண்டும்.
சஹஸ்ராக்ஷம் சததாரம் ரிஷிபி: பாவனம் கிருதம் தேன அபிஷிஞ்சாமி பாவமான்ய: புனந்து தே. பகம் தேவருணோ ராஜா பகம் ஸூர்யோ ப்ருஹஸ்பதி:
பகம் இந்த்ரஸ்ச வாயுஸ்ச பகம் சப்தர்ஷயோ தது: யத்தே கேஸேஷூ தெளர்பாக்கியம் சீமந்தேயச்ச மூர்த்தனி லலாடே கர்ணயோ: ரக்ஷணோ ஆபஸ்ததுந்தம் தேசதா:
இந்த மந்திரங்களை கணேசருக்கு அபிஷேகம் செய்வித்த பின் சொல்ல வேண்டும். அதற்கு பின் யாக ஹோம பூஜைகளையும் செய்ய வேண்டும். அதற்குபின் கையில் புஷ்பம், அறுகம்புல் மஞ்சள் கடுகு எடுத்துக்கொண்டு
கணேசனின் தாயார் பார்வதியை மூன்று முறை புஷ்பாஞ்சலி செய்ய வேண்டும்.. மந்திரத்தை சொல்லி ப்ரார்த்தனை செய்ய வேண்டும்.
ரூபம் தேஹி யசோ தேஹி பகம் பகவதி தேஹி மே; புத்ரான் தேஹி, தனம் தேஹி, சர்வான் காமாம்ஸ்ச தேஹிமே அசலாம் புத்தி மே தேஹி தராயாம் கியாதி மே வ ச
ப்ரார்த்தனைக்கு பின் அந்தணருக்கு சாப்பாடு போட்டு வஸ்த்ரம், தக்ஷிணை கொடுக்க வேண்டும் இவ்வாறு கணேசரையும் கிரஹங்களையும் பூஜை செய்தால் செய்யும் காரியங்கள் யாவற்றிலும் வெற்றியும் லக்ஷ்மி கடாக்ஷமும் கிடைக்கும்..
கணேச காயத்ரி சொல்லி வழிபாடு செய்யலாம். மஹா கர்ணாய வித்மஹே வக்ர துண்டாய தீ மஹீ தன்னோ தந்தி ப்ரசோதயாத். கணேசருக்கு பூஜை செய்ய நாள், நக்ஷத்திரம் உபவாசம் எதுவும் தேவையில்லை .சிரத்தையுடன் பூஜை செய்தால் போதும்.
புரட்டாசி மாதம் சுக்ல சதுர்த்தியில் செய்ய படும் கணேச பூஜை சிவா (க்ஷேமம்) என்று அழைக்க படுகிறது.(2-10-2019) அன்று ஸ்நானம், தானம், உபவாசம் ஆகிய நற் கருமங்கள் செய்தால் கணபதியின் அருள் பார்வை கண்டிப்பாக கிடைக்கும்.பூஜை முடிந்த பிறகு வெல்லம், உப்பு, பால் ஆகியவை தானம் செய்ய வேன்டும்.
பிராமணருக்கு சாப்பாடு போடுவதுடன் குருவாக கருதி உபசரிக்க வேண்டும். தானத்தின் போது வெல்லம், உப்பு, எள்ளு உளுந்து கொழுக்கட்டைகளும் வடை பாயசமும் கொடுக்க வேண்டும்.
ந்தா” என்று அழைக்கப்படும். .இன்று உபவாசமிருந்து கணபதிக்கு ஹோம பூஜைகள் செய்த பிறகு பிராமணர்களுக்கு உப்பு, வெல்லம், காய்கறி, இனிப்பு பண்டங்கள் தானம் செய்ய வேண்டும்(10-3-2019) கா” என்று அழைப்பார்கள் .(03-09-2019) சுக்ல சதுர்த்தியும் செவ்வாயும் சேர்ந்து வரும் நாளில் சுகா எனப்பெயர் இந்த விரதம் பெண்களுக்கு ஸெளபாக்கியம், உத்தமமான பேரழகு சுகம் ஆகியவைகளை கொடுக்கும். பகவான் பரமசிவன் பார்வதியுடன் இணைந்து பூமா தேவி மூலம் சிகப்பு வர்ணம் கொண்ட மங்கள சொரூபனை உற்பத்தி
செய்தார். அதனால் அவன் பூமி குமாரன், குஜன், ரக்தன், விரன், அங்காரகன் என்ற பெயரில் உலகில் அழைக்கப்படுகிறான் .சரீரத்தில் அங்கங்களை பாதுகாப்பதால் அங்காரகன் என்றும் மங்களங்களை தருபவன் ஆதலால் மங்களன் என்றும் அழைக்கபடுகிறான்.
செவ்வாய் கிழமையுடன் கூடிய சுக்ல சதுர்த்தியில் ஆணோ அல்லது பெண்ணோ உபவாசத்துடன் கணேசரையும், அங்காரகனையும் சிவப்பு பூக்கள், சிகப்பு சந்தனம் ஆகியவைகளால் பூஜை செய்தால் சகல செளபாக்கி யங்க ளையும் பெறுவர்.
முதலில் குளித்து சங்கல்பம் செய்து கணேசரை மனதால் நினைத்து , கையிலே சுத்தமான மண்ணை எடுத்துக்கொண்டு மந்திரத்தை சொல்ல வேண்டும்..
இஹ த்வம் வந்திதா பூர்வம் கிருஷணோ னோத்தரதா கிலா தஸ்மான் மே தஹ பாப்மானம் யன்மயா பூர்வ சஞ்சிதம்..
அதன் பின் மண்ணை சுத்தமான ஜலத்துடன் கலந்து சூரியன் முன்னால் வைத்து கீழ் கண்ட மந்திரம் சொல்ல வேண்டும்.
த்வம் ஆபோ யோனி: சர்வேஷாம் தைத்ய தாவைத் யோகஸாம். ஸ்வேதாண்டஜோதபிதாம் சைவ ரஸானாம் பதாயே நம:
இதன் பிறகு குளிக்க வேன்டும். .பிறகு பவித்ரம் தரித்து வீட்டுக்குள் செல்ல வேண்டும். அதன் பின் அறுகம்புல் ,வன்னி இலை, அரசு இலை, மாவிலை போன்றவற்றை மந்திரம் உச்சரித்து சமர்பிக்க வேண்டும்.பிறகு பசுமாடு ப்ரதக்ஷிணம் செய்ய வேண்டும்.,
கோபி சந்தனம் அணிந்துகொண்டு சமித்துகளால் கொழுந்து விட்டெறியும் அக்னியில் பால், பார்லி, எள், போன்றவைகளால் செய்த பதார்த்தங்களை போட வேண்டும். அப்போது
அடியிற் கண்ட மந்திரத்தை சொல்லவும் .ஓம். சர்வாய ஸ்வாஹா; ததா ஓம் லோஹிதாங்காய ஸ்வாஹா என்ற ப்ரத்யேக மந்திரத்தை 108 தடவை சொல்லி ஆகுதி அளிக்க வேண்டும். .
பிறகு தங்கம் அல்லது வெள்ளி , சந்தனம் அல்லது தேவதாரு மரத்தினால் செவ்வாயின் மூர்த்தியை செய்து ஆவாஹனம் செய்ய வேண்டும். நெய்.
குங்குமம் சிகப்பு சந்தனம், சிகப்பு புஷ்பம், நைவேத்யம் என்று வரிசையாக பூஜை செய்ய வேண்டும். பிறகு “அக்னி மூர்தெள” என்று தொடங்கும் யஜுர் வேத மந்திரத்தை சொல்ல வேண்டும். பூஜை முடிந்த பிறகு செவ்வாயின்
மூர்த்தியை பிராமணருக்கு தானம் செய்ய வேண்டும். அத்துடன் அரிசி, வெல்லம், நெய், பால், கோதுமை ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும்.கருமிதனமாக இருக்க கூடாது.
நான்கு முறை பூஜை செய்தபின் ஒரு தூய்மையான சத்தான பிராமணருக்கு இந்த கணபதி, செவ்வாய் மூர்த்தியை தானம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் விரதம் பூர்த்தியானதாகும்.
அதன் பின் அந்த பக்தன் சந்திரனை விட சாந்தியாகவும், சூரியனை விட தேஜஸாகவும், வாயுவை விட பலவானாகவும் இருப்பான். கணபதி அருளால் நீண்ட ஆயுள் பெறுவான். மிகுந்த செல்வத்துடன் செல்வாக்குடன் இருப்பான்..
நாக பஞ்சமி;:--ஆஸ்தீக முனிவர் நாகங்களை வேள்வி தீயிலிருந்து காப்பாற்றியது இந்த பஞ்சமியில் தான். இதனால் தான் நாகங்களுக்கு பஞ்சமி உகந்த நாள் எனக் கருதபடுகிறது. பின் கண்ட மந்திரத்தை சொல்வது மிகவும் உத்தமம் 5-8-2019
சர்வே நாகா ப்ரீயந்தாம் மேயே கேசித் ப்ருத்விதலே. யே சே ஹோலி மரீசிஸ்தா யே சுந்தர திவி சம்ஸ்திதா: யே நதீஷீ மஹாநாகா யே சரஸ்வதி காமின:
யே சே வாபி தடாகேஷு தேஷீசர்வேஷீ வை நம:
இந்த பூமியிலே, ஆகாசத்திலே, ஸ்வர்கத்திலே , சூரிய கிரணங்களிலே, சரோவர்களிலே ஏரி, கிணறு, குளங்களிலே ப்ரசன்னமாயிருக்கும் எல்லா நாகங்களுக்கும் நமஸ்காரம்.
இவ்வாறு நியமப்படி பஞ்சமியன்று நாகங்களுக்கு பூஜை செய்து ப்ராஹ்மண போஜனம் செய்வித்து அதன் பிறகு தானும் தன் குடும்பத்துடன் முதலில் இனிப்பையும் அதன் பிறகு மற்ற ப்ரசாதம் சாப்பிடுகிறானோ , அவன் இறந்த
பிறகு நாக லோகம் சென்று போக போக்யத்துடன் வாழ்கிறான். அதன் பின் த்வாபர யுகத்தில் மிகுந்த பராக்ரம சாலியாக ஆரோக்கியமாக பேரன் பேத்திகளோடு அரசாள்கிறான். . சதுர்த்தியன்று ஒரு வேளை சாப்பிட்டு பஞ்சமியன்று நாக பூஜை செய்ய வேண்டும்..12 மாதம் சுக்ல பஞ்சமியும் பூஜை செய்ய வேண்டும். வ்ரத பாரணை செய்ய வேண்டும். ஏராளமான ப்ராஹ்மணர்களுக்கு தங்க நாகர் தானம் செய்ய வேண்டும்.
அனந்தன், வாசுகி, சங்கன், பத்மன், கம்பளன், கார்கோடகன், அஸ்வதர், த்ருதராஷ்டிரன், சங்கபாலன், காளியன், தக்ஷகன், பிங்களன் என்று 12 நாகங்களுக்கும் 12 மாதம் கிரமமாக பூஜை செய்ய வேண்டும்.
பூமியில் நாகங்களின் சித்திரங்களை தங்கத்தாலோ , மரத்தாலோ , மண்ணாலோ செய்ய வேண்டும். அரளி, தாமரை, மல்லிகை பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும் .தூப, தீப , நைவேத்யம் செய்ய வேண்டும். கீரை, லட்டு ஆகியவைகளை ஐந்து ப்ராஹ்மணர்கள் உண்ண ச்செய்ய வேண்டும்.
பஞ்சமி யன்று பால், வெள்ளரிக்கய் சமர்பிக்க வேண்டும்.சிரவண சுக்ல பஞ்சமியன்று பால், தயிர், அறுகம்புல், சந்தனம் அக்ஷதை மற்றும் அநேக பதார்தங்களுடன் வணங்க வேண்டும்.5-8-2019
புரட்டாசி சுக்ல பஞ்சமியில் நாகங்களை பல விதமாக சித்தரித்து பலவிதமாக பூஜித்தால் தக்ஷகன் என்ற நாகத்தின் ஆசி கிடைக்கும் 3-10-2019 .ஐப்பசி சுக்ல பஞ்சமியில் தர்ப்பை புல்லால் நாகர் செய்து தயிர், பால், ஜலத்தால் ஸ்நானம் செய்விக்க வேண்டும்.. கட்டி தட்டிய பால், கோதுமையினால் செய்த பலகாரம் சமர்பிக்க வேண்டும் 1-11-2019
.இதனால் வாஸுகி த்ருப்தியடைவார். எந்த இடத்தில் :ஓம் “குருகுலவே ஸ்வாஹா”என்ற மந்திரம் ஜபிக்க படுகிறதோ அங்கு பாம்பு பயம் ஏற்படாது.
சஷ்டி விரத மஹிமையும் கார்த்திகேயரும்.:-- புரட்டாசி சஷ்டியின் போது எண்ணையினால் அபிஷேகம் செய்ய க்கூடாது.. 4-10-2019
புரட்டாசி சஷ்டி மிகவும் சிரேஷ்டமானது.இன்று செய்யும் ஸ்நானம், பூஜை, தானம் ஆகியவைகள் பன் மடங்கு பயனளிக்கூடியது.. இரவு பலகாரம் சாப்பிடவேண்டும்.
|
|
|
Post by kgopalan90 on Dec 17, 2018 16:47:23 GMT 5.5
த்விதீய திதி விரதம்.28-11-2019
இந்த த்விதீய விரதத்தால் அஸ்வினி குமாரர்களுக்கு தேவர் குல அங்கீகாரமும் ஆவிர்பாகமும் கிடைத்தன. கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ த்விதியை அன்று துவங்கி ஒரு வருடம் காலம் கழித்து பூஜை முடித்து பிராம்ணருக்கு பொன்னால் ஆன தாமரையை தானம் செய்தால் மேலுலகில் பல கற்ப காலங்கள் வாழ்ந்து விட்டு பூமியில் ராஜாவாக பிறக்கலாம்..
இந்த வருடம் 16-9-2019 அன்று வரும் அசூன்ய ஸயன வ்ருதம் .. ஆவணி மாதம் க்ருஷ்ண பக்ஷம் த்விதியை அன்று துவங்க வேண்டும். இதனால் பெண்கள் விதவை ஆகாமல் தடுக்க முடியும். கணவன் மனைவி பிரியாமல் வாழ முடியும்.
பள்ளி கொண்ட பெருமாளையும் அவரது மனைவியையும் பூஜை செய்து பின் வரும் துதியை சொல்ல வேண்டும்.
ஶ்ரீ வத்ஸ தாரீ ஶ்ரீ காந்த ஶ்ரீ வத்ஸ ஶ்ரீ பதே அவ்யய கார்ஹஸ்த்யம் மா ப்ரணாசம் மே பாது தர்மார்த்த காமதம். காவஸ்ச மா ப்ரணஸ்யந்து மா ப்ரணஸ்யந்து மே ஜனா:
ஜாமயோ மா ப்ரணஸ்யந்து மத்தோ தாம்பத்ய பேததஹ லக்ஷ்ம்யா வியுஜ்யே அஹம் தேவ ந கதாசித் அதா பவான் ததா களத்ர ஸம்பந்தோ தேவ மா மே வியுஜ்யதாம்
லக்ஷ்ம்யா ந சூன்யம் வரத யதாதே சயனம் சதா சய்யா மமாப்ய சூன்யஸ்து ததா தே மதுஸுதன.
இவ்வாறு மஹா விஷ்ணுவிடம் வேண்டிகொண்டு அவரை எப்போதும் ப்ரியாத மஹா லக்ஷ்மியையும் வேண்டி பூஜைசெய்தால் நிரந்தரமான பிரிவில்லாத படுக்கை சுகம் கிடைக்கும்.
காய்ந்து போன மிகவும் பழுத்த, கனிந்த பழம் நிவேத்யம் செய்ய க்கூடாது. பேரீச்சை, மாதுளை, அத்தி பழங்கள், இளநீர் மஹாவிஷ்ணுவிற்கு பிடிக்கும்.
எப்படி மஹா லக்ஷ்மி இல்லாத படுக்கை மஹா விஷ்ணுவிற்க்கு கிடையாதோ அதைபோல சோபை அற்ற படுக்கை வேண்டாம். லக்ஷ்மிகரமான மனைவி பிரியாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள ஸகலமும் கிடைக்கும்.
திருதியை வ்ரதம்.: அக்ஷய த்ருதியை மற்றும் ரம்பா த்ருதியை. 07-05-2019 ; 06-06-2019
பெண்கள் எவ்வகையில் நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அவ்வகையில் பெண்களுக்கு உதவ கூடியது திருதியை வ்ரதம்.
எக்காரணம் கொண்டும் உப்பு சேர்க்க கூடாது.
இந்த உபவாசத்தை ஆயுள் பூராவும் செய்தால் ரூபம், லாவண்யம், செளபாக்கியம் அனைத்தும் பெறுகிறார்கள்..
கன்னி பெண்கள் இந்த விரதம் அநுஷ்டித்தால் நல்ல கணவனை பெறுவார்கள்.
தங்கத்தில் கெளரியின் உருவத்தை செய்து ஒருமனப்பாட்டுடன் கெளரி பூஜை செய்ய வேண்டும். இரவு உப்பில்லாமல் சாப்பிட வேண்டும். அதன் பிறகு சம நிலையாக படுக்க வைக்க வேண்டும். அடுத்த நாள் அந்தணருக்கு சாப்பாடு போட்டு தக்ஷிணையும் தர வேண்டும்.
இம்மாதிரி நியமப்படி பூஜை செய்யும் கன்னிகை உன்னதமான பதியை அடைவாள். நீண்ட காலம் போக போக்கியங்களை அநுபவித்து கடைசியில் தன் கணவருடன் உத்தம லோகத்தை அடைவாள்.
விதவை இந்த விரதத்தை செய்தால் மேல் லோகத்தில் தன் பதியுடன் சேர்வாள். அவருடன் நீண்ட காலம் கணவன் மனைவியாக வாழ்வாள்.
இந்த்ராணி இந்த பூஜை செய்து ஜயந்தனை பெற்றாள். அருந்ததி இந்த பூஜை செய்து வசிஷ்டருடன் வானத்தில் ஸப்த ரிஷி மண்டலத்தில் அமர்ந்தாள்.
ரோஹிணி இந்த பூஜை செய்து சந்திரனின் அன்பு காதல் மனைவியாக வாழும் வாய்ப்பை பெற்றாள்.
வைகாசி, புரட்டாசி, மாசி மாதங்களில் இப்பூஜை செய்வது உத்தமம்.மாசி மாதம் செய்யும் த்ருதியை பூஜைக்கு பின் உப்பு, வெல்லம், இரண்டையும் தானம் செய்தால் ஆண், பெண் இருவருக்கும் மிக மதிப்பை கொடுக்கும். நல்லது.9-3-2019;6-6-2019;1-10-2019.
புரட்டாசி மாத த்ருதியை வ்ருதத்தின் போது வெல்ல அப்பம் நிவேத்யம் செய்திடல் வேண்டும். மாசி த்ருதியையின் போது கொழுக்கட்டை மற்றும் சொர்ண தானம், செய்திடல் வேண்டும்.
வைகாசி மாத த்ருதியையின் போது சந்தனம் கலந்த நீரையும், கொழுக்கட்டையையும் நைவேத்யம் செய்தால் எல்லா தேவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.
வைகாசி மாத த்ருதியை அக்ஷய த்ருதியை என அழைக்கபடுகிறது. இன்று சாப்பாடு, ஜலம், வஸ்த்ரம். தங்கம் தானம் செய்தால் குறைவில்லா பல நன்மைகள் உண்டாகும்.. இன்று உபவாசம் இருப்பவர்களுக்கு லக்ஷ்மி கடாக்ஷம் ஏராளமாக கிடைக்கும்.
|
|
|
Post by kgopalan90 on Dec 17, 2018 13:37:37 GMT 5.5
விரதங்கள் பற்றி பவிஷ்ய புராணம் கூறுகிறது.--திதி பூஜை.
தேவர்களுக்கு வேள்விகள் மூலம் யாகம் செய்ய முடியவில்லை என்றால் இல்லறத்தார் என்னென்ன திதியில் என்னென்ன விரதம் உபவாஸம் இருந்தால் தேவர்களை த்ருப்திபடுத்தலாம் என்று சுனந்து முனிவர் கூறுகின்றார்.
ப்ரதமை திதியில் பாலையும், த்விதியை திதியில் உப்பையும் தவிர்க்க வேன்டியது. த்ருதியை திதியில் எள்ளுஞ்சாதம் சாப்பிட வேண்டும்.
சதுர்த்தியில் பால் ஆஹாரம், பஞ்சமியில் பழம், சஷ்டியில் காய், சப்தமியில் வில்வ ஆஹாரம் செய்ய வேண்டும்.
அஷ்டமியன்று பொடி சாதம், நவமியன்று அக்னியில் சமைக்காத உணவு; தசமி அன்றும் ஏகாதசியன்றும் பால்; துவாதசியன்று கீரை; த்ரயோதசியன்று கோமியம், சதுர்தசியன்று பார்லி உணவும் சாப்பிட வேண்டும்.
அமாவசையன்று ஹவிஸ்; பெளர்ணமியன்று தர்ப்பை புல்லில் நனைத்த ஜலமும் சாப்பிடவேண்டும். இவ்வாறு விரதமிருந்தால் அந்தந்த திதிக்குறிய தேவதைகள் த்ருப்தி யடைகிறார்கள்.,
இந்த விருதம் நான்கு வர்ணத்தாரும் செய்யலாம். இந்த விரதம் ஆண், பெண் எல்லோரும் செய்யலாம்..
ஒரு பக்ஷம் இம்மாதிரி ஆகாரம் செய்தால் பத்து அஸ்வமேத யாக பலன் கிடைக்க பெறுகிறார்கள்.. நான்கு, மாதம், எட்டு மாதம், 12 மாதம் இவ்வாறு விரதம் இருந்தால் பல மந்வந்தரங்கள் சூரிய லோகத்தில் சுவர்க்க அநுபோகங்களை அநுபவிப்பான்.
இந்த விரதத்தை அதாவது ஒவ்வொரு திதியிலும் திதி உபவாசம் எப்படி இருக்க வேண்டுமென்பது;-
இந்த விரதத்தை ஐப்பசி நவமி; மாசி ஸப்தமி; வைகாசி த்ருதியை; கார்த்திகை பெளர்ணமியில் ஆரம்பித்தால் உத்தமம்.5-11-2019;13-03-2019;6-6-2019;11-12-2019.
நீண்ட ஆயுள் கிடைக்கும். சூர்ய லோகத்தில் சுகமாக இருக்கலாம். முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பயனாக இப்பிறவியில் விரதம், உபவாசம் ஆகியவைகளை செய்து , தானம் கொடுத்து , தர்ம வழியில்
நடந்து , தாய், தந்தை, குரு ஆகியோருக்கு சேவை செய்து, விதிப்படி தீர்த்த யாத்திரை செய்து , அற வழியில் நீண்ட ஆயுள் கழித்த புண்ணிய பலனை மேலும் உயர்த்திக் கொண்டு மேலுலகில் நற்பதவி பெறுகிறான்.,
இந்த உலகில் வாழும் போது எல்லா பொன் பொருள்களும், சிரேஷ்டமான உயர்ந்த மனைவி, நம்பிக்கையான வேலைகாரர்கள் ஆகியவை கிடைக்கும். கடுமையான வ்யாதிகளிலிருந்து விடுபடுவர். பந்து ஜனங்களின் புகழும், , புத்திரன், பேரன்களை பார்த்து மகிழவும் முடியும்.
இம்மாதிரி விரதம், உபவாசம், தானம் என்று செய்யாவிட்டால் ஒற்றை கண், குருடு, முடம், நொன்டி, ஊமை, படிப்புஅறிவின்மை தீராத நோய், தரித்திரம் ஆகியவைகளால் பாதிக்கபடுவர். .
முதலில் பரமாத்மா சிருஷ்டிக்காக ஜலத்தை உற்பத்தி செய்தார். அதிலிருந்து ஒரு முட்டை(அண்டம்) உண்டாகி அதில் ப்ருஹ்மா தோன்றினார்.இதுதான் ப்ருஹ்மாண்டம். ப்ருஹ்மா அதை இரண்டாக பிளந்து ஒன்றில் பூமியையும் மற்றதில் ஆகாயத்தையும் செய்தார்.
அதன் பின் திசைகள்., உப திசைகள். தெய்வம், அசுரன் என்று உற்பத்தி செய்தார். எந்த திதியில் இதை உற்பத்தி செய்தாரோ அதுவே ப்ரதி பதா என்கிற ப்ரதமை திதியாயிற்று. . இதிலிருந்துதான் மற்ற திதிகள் உண்டாயின.
ப்ரதமை விரதத்தை கார்த்திகை பெளர்ணமி; அல்லது மாசி ஸப்தமி அல்லது வைகாசி சுக்ல த்ருதியை முதல் தொடங்குவது விசேஷம். .இதற்கு முன்னால் வரும் சதுர்தசி அன்றே இந்த விரத சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். .அன்று சாப்பிடலாம்.11-12-2019;13-3-2019;6-6-2019;
அடுத்து அமாவாசையன்று மூன்று வேளை குளிக்க வேண்டும். ஆகாரம் கூடாது. காயத்ரி ஜபம் செய்ய வேண்டும்..விரதத்தை துவங்கும் நாளில் விடியற்காலையில் எழுந்து சிரேஷ்டமான அந்தணனை சந்தனம், தாம்பூலம்
கொடுத்து மரியாதை செய்யவும். தேவையான அளவு பால் கொடுத்து குடிக்கச் சொல்லவும். அதன் பின் அவரை ஆசனத்தில் அமர்த்தி , ப்ருஹ்மாவாக மனசில் கருத வேண்டும்.
“”ப்ருஹ்ம தேவரே எனக்கு காட்சி தர வேண்டும் என வேண்டிக்கொள்ளவும்.. ப்ருஹ்மதேவரின் அருள் கிடைக்கும். அதன் பின் ப்ரதமை விரதமிருப்பவர் பசும் பால் குடிக்க வேண்டும். இவ்வாறு ஒரு வருஷம்
காயத்ரியுடன் விரதத்தை செய்து வருஷ கடைசியில் ப்ருஹ்மாவிற்கு விசேஷ பூஜை செய்ய வேண்டும்.
இவ்வாறு விரதமிருப்பதால் எல்லா பாபமும் விலகும். ஆன்மா தூய்மை ஆகும். நீன்ட ஆயுளுடன் தர்மவானாகவும், தனவானாகவும், ஆரோக்கியமுள்ளவராகவும் எல்லா
போகங்களையும் அநுபவிப்பராகவும் இருப்பார். விண்ணுலகில் தேவதைகளுக்கு சமமாக கருதபடுவார்..அதன் பின் சத்ய யுகத்தில் பத்து பிறவிகள் வாழ்வாங்கு வாழ்வார்.
இந்த விரத மிருப்பதால் அந்தணர் அல்லாதவரும் அந்தணராகி விடுவர். விசுவாமித்ரர் இந்த விரதமிருந்த பிறகு தான் ப்ருஹ்ம ரிஷி எனப்பெயர் பெற்றார்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு மறுநாள் ப்ருஹ்மாவை 16 உபசார பூஜை செய்ய வேண்டும். ஓராண்டு முடிந்தபின் பெளர்ணமியன்று
ப்ருஹ்மாவிற்கு விசேஷ பூஜை செய்ய வேண்டும். அதன் பின் சங்கம், மணி, பேரி, வாத்யம் முதலியவற்றால் விசேஷ பூஜை செய்ய வேண்டும்.
வெள்ளை நிற பசுவின் பஞ்சகவ்யத்தாலும், தர்ப்பை ஜலத்தாலும் ப்ருஹ்மாவிற்கு ப்ருஹ்ம ஸ்நானம் செய்விக்க வேண்டும்..
கார்த்திகை மாதம் பெளர்ணமியன்று ப்ருஹ்மாவின் ரத யாத்திரை துவங்க வேண்டும்.. அருகில் காயத்ரி அமர்ந்திருக்க ப்ருஹ்மா மாந்தோல் ஆஸனத்தில் அலங்காரமாக காக்ஷி அளிப்பார்.12-12-2019
முன்னும் பின்னும் வேத கோஷம், வாத்யம் முழங்க பவனி வர வேண்டும் .ப்ருஹ்மாவின் விக்கிரஹம் அருஹில் ஒரு வேத விற்பன்னர் பூஜை செய்து மக்களுக்கு ப்ரசாதம் வழங்க அமர்ந்திருக்க வேண்டும்
இரவு நிலைக்கு திரும்ப வேண்டும். ரதம் ஓட்டி வந்தவர்களுக்கும், வாத்ய கோஷ்டி ; வேத விற்பன்னர்களுக்கும் அன்னம், பானம், சன்மானம் கொடுக்க வேண்டும்.
ஜன்மாந்திரங்களில் செய்த பாவங்கள் தொலையும்.
27-11-2019. மார்க்கசிரம் சுக்ல பக்ஷ ப்ரதமையில் பகலில் சாப்பிடாமல் இரவில் விஷ்ணு பூஜை செய்து சாப்பிட வேண்டும்.. நக்ன விரதம் என்றால் பகலில் சாப்பிடாமல் இரவில் சாப்பிடுவது.
த்விதீய திதி விரதம்.28-11-2019
|
|
|
Post by kgopalan90 on Dec 15, 2018 15:47:49 GMT 5.5
வைகுண்ட ஏகாதசி 18-12-2018.
வைகுண்ட ஏகாதசி பின் நடக்கும் நிகழ்வில்ஒரு சில திவ்யதேசங்களில் பெருமாளுக்கு ஏன் ரத்னாங்கி
சாற்றுகிறார்கள்? மற்ற ஏகாதசியை போலல்லாமல் மார்கழி மாத ஏகாதசியில் மட்டும் ஏன் பரமபத வாசல் நிகழ்வு .
வைகுண்ட ஏகாதசி என்பது மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியாகும்.. இந்நாளில் பகவான் ஒரு ஆத்மா. பரபதநாதனான தன்னை எப்படிவந்து அடையும் என நடித்து காண்பிக்கிறான்.
இந்த வருடம் அதன் நிறைவு நாளான (18/12/2018) நம்மாழவாருக்கு மோட்சத்தையைம் சமர்ப்பிக்கிறான்.
முன்பத்து பின்பத்து என இவ்விழா 21 நாட்கள் நடைபெறும்.
வைகுண்ட ஏகாதசிக்கு முன் பகவான் ஆழ்வாருக்கு பரமபதம் தர சங்கல்பம் கொண்டு அவருக்காக பரமபத வாசலை திறக்கச் செய்து தானே ( எப்படி நம் வீட்டுக்கு வரும் விருந்தினரை வாசலில் வந்து வரவேற்போமோ அப்படி) பரமபத வாசலுக்கு வந்து வரவேற்க சித்தமாகிறான்.
அரங்கம் என்றாலே நாடகம் நாட்டியம் நடக்கும் இடம் தானே அதனால் தான் இந்த விழாவை பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்தில் தானே நடித்து நடத்தி காட்டுகிறார். இந்த ரத்னாங்கி சேவை என்பது இங்கு தான் ஆரம்பிக்கப்பட்டது.
வைகுண்ட ஏகாதசி அன்று அரங்கனுக்கு சாற்ற பெறும் ரத்னாங்கி 1700 ஆம் வருடம் வழங்க பெற்ற அறிய ஆபரணம் 1900 ங்களில் மறுபடியும் பாகவத புருஷர்களால் செப்பனிடப்பட்டது ஏன் இந்த அங்கி என தகுந்த இடத்தில் சொல்லுகிறேன்.
பகல் பத்து முடித்து பரம்பதம் திறக்கப் பட்டதும்
திருவரங்கத்தில் இந்த இரா பத்து நடைபெறும் அந்த பத்து நாட்களும் அரங்கன் ஒரு நாடகத்தினை தினம் நடிக்கின்றான்.
அரங்கன் திருஅத்யாயன புறப்பாடு முதல் நாள் முதல் அந்த நாடகத்தை காண்போம்
அரங்கன் மூலஸ்தானத்திலிருந்து கிளம்பும் பொழுது சாதாரன போர்வை அணிந்து (வைகுண்ட ஏகாதசி நீங்கலாக ) தன் இரு அபயகரங்கள் மட்டுமே தெரியும் வண்ணம் எழுந்தருளுவார்.
பின்னர் மேல் படியில் மரியாதையாகி உத்தமநம்பி அவர்களுக்கு பரிவட்டம் வழங்கப் பெற்று அவர் மூலம் இந்த நாடகத்தை நடத்திவைக்க பணிப்பார் இக்கோவிலின் ஸ்தானிகர்
அதன் பின் அரங்கன் புறப்பட்டு சேனை முதல்வருக்கு மரியாதைகள் வழங்கிய பின்பு நாழி கேட்டான் வாயிலை அடைவார் ,
அது என்ன நாழிகேட்டான் ?
அதாவது அந்த கதவுகளின் அருகில் வந்தவுடன் சரியான நேரம் தானா என்று கேட்கப்படும்
நாழி:- முன்னோர் காலங்களில் நாழி என்னாச்சு? னு நம்மிடையே கேட்கும் வழக்கமும் இருந்தது அதாவது நேரத்தை நாழி என்று குறிப்பிடுவோம் ( இன்றும் சில இல்லங்களில் இப்பேச்சு உள்ளது)
24 நிமிடம் என்பது ஒரு நாழிகை. அங்கு நாழிகேட்கப்படுவதின் ரகஸ்யம்
அரங்கன் மூலஸ்தான புறப்பாடாகிய பொழுது (சாற்றியிருக்கும் அந்த போர்வை தான் நாம்) அதாவது ஜீவாத்மா அவன் அந்த ஆத்மாவை போல் இரு கரங்கள் தெரிய புறப்படுகிறான்
அந்த ஜீவாத்மா தான் மேலே கிளம்ப வேண்டிய நேரத்தினை அறிந்து புறப்படுகின்றது என்பதை தெரிவிக்கவே நாழி கேட்கப்படுகிறது
ஒரு ஆத்மாவின் ஜீவதசைக்கு ( மரணத்திற்க்கு) பின்பு இரண்டு வகையான பாதைகளிலில் பயணிக்கும் ஒன்று முக்திக்கு செல்ல கூடிய பாதை இன்னொன்று எம தர்மலோகமாம் எம பட்டினம் செல்லும் பாதை.
முக்திக்கு செல்லும் பாதையினை அர்ச்சிராதி மார்க்கம் என்று கூறுவார் இன்னொன்றை தூமாதி மார்க்கம் என்பார்கள் இப்பொழுது நம் அரங்கன் நமக்கு அர்ச்சிராதி மார்கத்தினை தான் காட்ட போகின்றான்
நாழி கேட்டனை அடைந்த பிறகு அரங்கன் துறை பிரகாரம் என்னும் பிரகாரம் கடப்பான் அந்த பிரகாரம் மட்டும் சற்றே மாறுபட்டது
இங்கு நடுவினில் முழுதும் தொடர்ச்சியான மண்டபம் இருமருங்கும் வெற்றிடம் ஏன் இப்படி என்றால் அந்த மண்டபத்திற்கு வெளிச்சம் ஏற்றிட என்பார்கள்
ஆம் அர்சிராதி மார்கத்தினை அடையும் ஜீவன் முதலில் விதியுத் அதாவது மின்னல் உலகம் பின்பு சூர்ய லோகம் சந்திர லோகம் என ஒளி பொருந்திய லோகங்களை கடந்தே செல்லும் அதற்க்கு தான் இந்த மண்டபம் பின்பு விராஜா மண்டபம் அடைவார் அரங்கன், அங்கு வேத பாராயண கோஷ்டி முதலியன நடை பெறும் ஏன் அங்கு இப்படி ஒர் ஏற்பாடு?
இந்த ஜீவன் விரஜை என்னும் பேரெழில் ஆற்றை அடையும் அதுவே வைகுண்டத்தின் கரை அந்த ஆற்றை அடைந்த பிறகு அங்கு வேத கோஷங்கள் முழக்க தேவ மங்கையர்கள் நம்மை நீராடிடுவார்கள் நமக்கு மரியாதையை செய்வார்கள் இது வரை அந்த ஜீவனுக்கு சூக்ஷும சரீரமா இருக்கும் .
கடைசியாக விரஜையில் அந்த ஜீவன் முழுகி எழுந்த உடன் அந்த ஜீவன் நான்கு கரமும் கஸ்தூரி திருமண் காப்போடு துலங்கும் அந்த மேனியினை வார்த்தையால் வர்ணிக்க ஒண்ணாது
அதுபோலவே ஒளிபொருந்திய மேனியை அடைந்ததை குறிக்கவே இரத்தினஅங்கி (வைகுண்ட ஏகாதசி நீங்கலாக மற்றைய நாட்களில்) வைகுண்ட வாசல் அருகில் வந்த உடன் அரங்கனின் போர்வை கலையப்பெற்று கஸ்தூரி திருமண் காப்பு சாற்ற பெற்று நான்கு கரத்துடன் அவர் உயர்த்தி காண்பிக்க படுவார்
இங்குதான் இரத்தினாங்கி சாத்தப்படுகிறது அதாவது அந்த பேரெழில் ஒளி பொருந்திய வார்த்தைகளால் வர்ணிக்கபட முடியாத மேனியினை காட்ட அரங்கனுக்கு ரத்னஅங்கி சாற்ற பெறுகின்றது
இன்னும் சொல்லப்போனால் நம்மால் விவரிக்க ஒண்ணா காந்தியினை கூறவே உலகில் கிடைக்கும் இயற்கையான ஒளி பொருந்திய கற்களால் ஆன அங்கி சாத்தப்படுகிறது இதையே இன்று வேறுபல திவ்யதேசங்களிலும் செய்கிறார்கள். பின் அந்தமிழ் பேரின்ப நாடாம் வைகுந்தமடைவார்.
. அப்படிபட்ட பேரோளியான ஆத்மா வைகுண்டத்தில் பகவானுடன் (திருவரங்கத்தில் பகவான் 1000 கால்களையுடைய மண்டபத்தின் நடுவே அதாவது திருமாமணி மண்டபத்தில் ஆனந்தமாக எழுந்தருளிஇருப்பார்) என்றும் ஆனந்த பரவசத்தில் திளைப்பதை தாம் நாம் அரங்கன் பரமபத வாசல் கடந்து நடத்தி காட்டுகிறார்
ஆயிரம் கால் மண்டபமான இந்த லீலா விபூதி அதாவது இந்த அவன் தற்காலிகமாக ஏற்பட்டுத்திருக்கும் இந்த வைகுண்டத்தைஅடைகிறார்
இப்படியாக ஒரு ஜீவனின் வழியை தானே நடித்து அதன் தன்மையினை அணிந்து காட்டுகின்றார். நம்மாழ்வாருக்கு மோட்சமருளும் நாள் அவர் காட்டிய வழியில் நாம் சென்றால் அவரால் நமக்கும் மோட்சம் கிட்டும்.
ஆழ்வார் ஆசாரியர் வழி நடந்து நாமும் மோட்சத்தை அடைவோம்!!
|
|
|
Post by kgopalan90 on Dec 15, 2018 13:48:11 GMT 5.5
கார்த்திகை மாதத்தில் ஏற்ற வேண்டிய தீபங்கள் -பலன்கள்.
27 தீபங்களும்அதன் பயன்களும்
தீபஜோதியே நமோ நம :
சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தன சம்பதா சத்புத்தி ப்ரகாசாய தீபஜ்யோதிர் நமோநம:
தீபம் ஏற்றுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனசேர்த்தி, நல்லபுத்தி ஆகியவை பெருகும் எனச் சொல்கிறது மேற்காணும் ஸ்லோகம்.
நம் பாரதத்தின் ஆன்மிகக் கலாசாரத்துடன் இரண்டறக் கலந்தது தீபவழிபாடு. விரிவான வழிபாடுகள் தெரியவில்லை என்றாலும், காலை-மாலை இரண்டு வேளைகளில் தீபம் ஏற்றிவைத்து, அதற்கு நமஸ்காரம் செய்தாலே போதும்; தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் ஸித்திக்கும் என்கின்றன ஞான நூல்கள். அப்படியான தீபத்தைச் சிறப்பிக்கும் மாதம்தான் திருக்கார்த்திகை. இந்த மாதத்தில் திரு விளக்கேற்றி வழிபடுவது அவ்வளவு விசேஷம்.
தினமும்27விளக்குகள்...
கார்த்திகை மாதத்தில், நமது வீடுகளில் 27 இடங்களில் தீபங்கள் ஏற்றிவைக்க வேண்டுமாம். அவை எந்தெந்த இடங்கள், எந்தெந்த இடங்களில் எத்தனை தீபங்கள் ஏற்றுவது? என்பது குறித்து விரிவாக அறிவோமா
· கோலமிடப்பட்ட_வாசலில்: ஐந்து விளக்குகள் · திண்ணைகளில்: நான்கு விளக்குகள் · மாடக்குழிகளில்: இரண்டு விளக்குகள் · நிலைப்படியில்: இரண்டு விளக்குகள் · நடைகளில்: இரண்டு விளக்குகள் · முற்றத்தில்: நான்கு விளக்குகள்
இந்த இடங்களில் எல்லாம் தீபங்கள் ஏற்றிவைப்பதால், நமது இல்லம் லட்சுமி கடாட்சத்தை வரவேற்கத் தயாராகி விடும்; தீய சக்திகள் விலகியோடும்.
· பூஜையறையில்: இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றிவைக்கவேண்டும். இதனால் சர்வமங்கலங்களும் உண்டாகும். · சமையல்_அறையில்: ஒரு விளக்கு; அன்ன தோஷம் ஏற்படாது. · தோட்டம்முதலானவெளிப்பகுதிகளில்: யம தீபம் ஏற்றவேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும். · பின்கட்டு_பகுதியில்:நான்கு விளக்குகளை ஏற்றிவைக்க விஷ ஜந்துக்கள் அணுகாது. ஆனால், அபார்ட்மென்ட் மற்றும் மாடி வீடுகள் அதிகம் உள்ள தற்காலத்தில், மேற்சொன்ன முறைப்படி விளக்கு ஏற்ற முடியாது ஆகையால், வசதிக்கு ஏற்ப வீட்டுக்குள்ளேயும் வெளியிலுமாக 27 விளக்குகளை ஏற்றிவைத்து பலன் பெறலாம்.
தீபத்தின்_வகைகள்
தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் `தீபலட்சுமியே நமோ நம' என்று கூறி வணங்குவது அவசியம். தீபத்தை பலவகையாகச் சொல்லி விளக்குகின்றன ஞானநூல்கள். அவற்றில் சில...
· சித்ர_தீபம்: தரையில் வண்ணப் பொடி களால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபங்கள். · மாலா_தீபம்: அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படுவது. · ஆகாச_தீபம்: வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படுவது, ஆகாச தீபமாகும்.
கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், யம பயம் நீங்கும். · ஜல_தீபம்: நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபங்கள் ஜல தீபம் ஆகும்.
· நௌகா (படகு) தீபம்: கங்கை கரையோரங்களில் வாழும் மக்கள், புண்ணிய யாத் திரையாக கங்கைதீரத்துக்குச் செல்பவர் கள், கங்கை நதிக்கு மாலைவேளையில் ஆரத்தி செய்து, வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்து, அதை கங்கையில் மிதக்கவிடுவர். படகு போன்ற வடிவங் களில் தீபங்கள் தயார் செய்தும் மிதக்க விடுவார்கள். இவற்றையே நெளகா தீபங் கள் என்று அழைப்பர். சம்ஸ்கிருதத்தில் `நௌகா' என்றால் `படகு' எனப் பொருள்.
· சர்வ_தீபம்: வீட்டின் அனைத்து பாகங் களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகும். · மோட்ச_தீபம்: முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, ஆலய கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படுவது.
· சர்வாலய_தீபம்: கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலைவேளையில் சிவாலயங்களில் ஏற்றப்படுவது. அதாவது, பனை ஓலை களால் கூடுபோல் பெரிதாகச் செய்து, அதற்கு பூஜை செய்து தீபாராதனை காட்டி, கற்பூரத்தின் ஜோதியை அதில் ஏற்றுவது, சர்வாலய தீபம் ஆகும்.
· அகண்ட_தீபம்: மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம்.திருவண்ணாமலை, பழநிமலை, திருப் பரங்குன்றம் முதலான திருத்தலங்களில், அகண்ட தீபத்தைத் தரிசிக்கலாம்.
· லட்ச_தீபம்:ஒரு லட்சம் விளக்குகளால் ஆலயத்தை அலங்கரிப்பது லட்சதீபமாகும். திருமயிலை, திருக்கழுக்குன்றம் (12 ஆண்டுகளுக்கு ஒருமுறை) முதலான பல ஆலயங்களில் லட்சதீபம் ஏற்றுவது உண்டு.
· மாவிளக்கு_தீபம்:அம்மன் ஆலயங்களில் நோய் தீர வேண்டிக்கொண்டு மாவிளக்கு ஏற்றுவார்கள். அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டை யாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரி போட்டு ஏற்றுவது மாவிளக்கு ஆகும்.
· விருட்ச_தீபம்: ஒரு மரத்தைப்போன்று கிளைகளுடன் அடுக்கடுக்காக அமைக்கப் படும் தீப ஸ்தம்பங்களில் விளக்கேற்றும்போது, விருட்சத்தைப் போன்று காட்சித் தரும்.சிதம்பரம், திருவண்ணாமலை, குருவாயூர் ஆலயங்களில் விருட்ச தீபத்தைக் காணலாம்.
காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு கச்சபேஸ்வரர் ஆலயத்தில், கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமை களில், இவ்வகை தீபத்தை தலையில் வைத்துக்கொண்டு ஆலயத்தை வலம் வந்து வழிபடும் வழக்கம் உண்டு. இதை, `#மண்டை_விளக்கு பிரார்த்தனை' என்கிறார்கள்.
|
|
|
Post by kgopalan90 on Dec 13, 2018 16:12:25 GMT 5.5
தனுர் மாத பூஜை. 17-12-2018 முதல் 14-01-2019 வரை.
தேவர்களுக்கு தக்ஷிணாயனம் இரவு நேரம். உத்தராயணம் பகல் நேரம். . மார்கழி மாதம் விடியற்காலை போது தேவர்களுக்கு.. இந்த விடியற்காலையில் மஹா விஷ்ணுவை எழுப்பி 16 உபசாரம் பூஜை செய்து பொங்கல் படைத்து தினந்தோறும் மிகுந்த பக்தியுடன்
சூரிய உதயத்திற்கு முந்தி ஆராதித்து வருவதால் விஷ்ணு பதவியை பெறுகிறான். இம்மாதத்தில் சிவ பூஜையும் சிறந்ததாகும்.
மார்கழி மாதத்தில் திருவாதிரை நக்ஷத்திரதன்று சிவனையும் வழிபடுகின்றோம்.
மார்கழி மாதம் சுக்லபக்ஷ ஏகாதசி வைகுண்ட ஏகாதசி..இன்று வேத பாராயணத்துடன் விஷ்ணுவிற்கு உத்ஸவம் செய்ய வேண்டும் . திருவோணம், ஏகாதசி, அமாவாசை, பெளர்ணமி. ஜன்ம நக்ஷத்திரம், மாச நக்ஷத்திரம், ஹரி தினங்களிலும், பக்தர்கள் வரும் போதும் துர்நிமித்தம், , துஸ் ஸ்வப்னம், மஹாபயம் வரும் போதும் மஹா விஷ்ணுவை ஆராதிக்க வேண்டும்.
விஷ்ணு பூஜையை விட வேறு விசேஷ வைதீக கர்மாவே கிடையாது. விஷ்ணு ஸூக்தம், புருஷ ஸுக்தத்தை விட வேறு சிறந்த வேத மந்திரம் கிடையாது. ஆகையால் திருமாலை தினந்தோறும் ஆராதிக்க வேண்டும். இதில் அஷ்டாக்ஷரம் பிரதியுப சாரத்திற்கும் உபசார மந்திரமாகும்.
திருமாலை பூஜித்து நமஸ்கரித்து ஆத்ம நிவேதனம் பண்ண தகுந்ததாகும்..
பஞ்சாக்ஷர மந்திரத்தால் பரமேஸ்வரனை ருத்திர மந்திரத்தோடு விஷ்ணு பூஜையில் சொல்லப்பட்டது போல் செய்ய வேண்டியது.
பூமியை பசுஞ் சாணத்தால் மெழுகி முன்னே ப்ரும, விஷ்ணு, சிவலிங்கத்தையும் , தெற்கில் கணபதி, சுப்பிரமணியரும், மேற்கில் சூலமும், வடக்கில் நந்திகேஸ்வரரையும், ஸ்தாபித்து, அர்க்கியம், பாத்யம் கொடுத்து நிர்மால்யத்தை நீக்கி வடக்கே சண்டிகேசுவரரிடம் சேர்ப்பித்து
அதன் பிறகு ஸ்நானம், , அலங்காரம், வஸ்த்ரம், தூப தீப நைவேத்ய உபசாரங்கள் எல்லா தேவதைகளுக்கும் செய்து மந்திர புஷ்பம், ஸ்தோத்ரம் ,மற்ற உபசாரங்கள் செய்ய வேண்டியது.. இப்படி செய்வது இஹ பர ங் களுக்கு நன்மை உண்டாகும்..
சிவ லிங்கத்தை தரிசிப்பதே புண்யமானது. . ஸ்பர்சம், அர்ச்சனம், த்யானம் இதை விட ஒவ்வொன்றும் மேலானது. நூறு முறை பாலாபிஷேகமும், இருபத்தைந்து முறை எண்ணைய் அபிஷேகமும் பழ ரஸங்களால் ஆயிரம் முறை அபிஷேகம் செய்வது மஹா அபிஷேகம் எனப்பெயர்.
வாஸனை சந்தன அபிசேகத்திற்கு கந்தர்வ லோகமும்,, பன்னீர் அபிஷேகத்திற்கு குபேர லோகமும் ,பஞ்சாம்ருத அபிஷேகத்திற்கு முக்தியும் பலனாகும்.
புதிய பட்டு வஸ்த்ரங்களையும். , மூன்று இழையுள்ள தாமரை நூல்களால் இயற்றப்பட்ட பூணலையும்,சாற்றுகிறவன் வேதாந்தத்தின் கரையை காண்பான் .வாசனை சந்தனம் லேபனம் செய்பவன் அநேக கோடி வருஷங்கள் சிவ லோகத்தில் வசிப்பான் .நெய் தீபம் ஏற்ற வேண்டும். அகிற்புகை யூட்டுபவர் யம வாதனை பட மாட்டார்கள்.
பாத்திரத்தில் எவ்வளவு அன்னம் நிவேதிக்க படுகிறதோ அவ்வளவு ஆயிரம் யுகங்கள் ஸ்வர்கத்தில் ஆனந்தம் அநுபவிப்பர். வரகு, கேழ்வரகு, (ராகி) சுரைகள் உதவாது. தாழை, குருக்கத்தி, குருந்தை,, மா, முல்லை பூக்கள் சிவபூஜைக்கு ஆகாது.
விநாயகர், சூரியன், விஷ்ணு , சிவலிங்கம், அம்பாள் இந்த ஐவரையும் பூஜிப்பவர்,, சூரிய மண்டலத்திலோ, ஹிருதயத்திலோ , ஒரு மேடையிலோ, பிம்பத்திலோ பூஜிக்க வேண்டியது. கிழக்கு முகமான தேவனை, வடக்கு முகமாயிருந்து பூஜிக்க வேண்டும்.
பூஜை அறையில் சென்று நமஸ்கரித்து ஒரு தடுக்கு மேல் அமர்ந்து சுக்லாம்பரதரம், ப்ராணாயாமம், சங்கல்பம் செய்து பாத்திரத்திலும், சங்கிலும் நீர் நிரப்பி. புஷ்பாக்ஷதைகள் போட்டு காயத்ரி மந்திரத்தால் அபிமந்திரித்து தீர்தங்களை ஆவாஹனம் பண்ணி ஆப்போஹி என்ற மந்திரத்தால் தன்னையும், பூஜா அறை; பூஜா த்ரவ்யங்களையும் ப்ரோக்ஷித்து 16 உபசார பூஜை செய்ய வேண்டியது.
பதார்தங்கள் குறைவாய் இருந்தாலும் மனதினால் அதிகமாக் இருப்பதாய் த்யானம் செய்து கொள்ள வேண்டியது. கடைசியில் நமஸ்கரித்து அபராத மன்னிப்பு கேட்க வேண்டியது. இப்படி செய்வதால் ஸர்வாபிஷ்டங்களையும் பெறுவான்..
பூஜையில் நிவேதனம் ஆன அன்னத்தால் வைஸ்வ தேவம் செய்யக்கூடாது.
ஆசாரியனிடத்தில் மனிதன் என்ற புத்தி வரக்கூடாது.பிம்பத்தில் கல், தாமிரம், என்ற புத்தியும்,மந்திரத்தில் ஏதோ ஒரு சப்தம் என்கிற புத்தியும் வைப்பவன் ப்ருஹ்மஹத்தி செய்தவனாகிறான்.
குருவை அவமதிப்பதால் மரணத்தையும்,மந்திரத்தை தூஷிப்பதால் தாரித்ரத்தையும் அடைந்து நரகத்தில் அவதி படுவான் என பராசர, வசிஷ்டர் முதலியோர் கூறுகின்றனர்.
வைத்தினாத தீக்ஷிதீயம் ஆஹ்நீக கான்டம் பக்கம் 242 ல் தனுர் மாத பூஜையை அதிகாலையில் ஸ்நானம் செய்து சூர்ய உதயத்திற்கு முன் முடித்து வி ட வேண்டும் .சூர்ய உதயத்திற்கு பிறகு சந்தியாவந்தனம், ஜபம், ஒளபாசனம் செய்து விட்டு, தினசரி செய்யும் பூஜையை தனியாக செய்ய வேண்டும்.
ஆனால் சிலர் ஆசாரத்தில் விடியற்காலை தனுர் மாத பூஜையை அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை வரை நிறுத்திக்கொண்டு ஸந்தியாவந்தனம் காயத்ரி ஜபம் செய்து விட்டு, தூபம், தீபம், நிவேதனம், கற்பூர ஹாரத்தி முதலியன செய்து தனுர் மாத பூஜை .நித்ய பூஜை இரண்டும் சேர்த்து ஒரே பூஜையாக செய்கிறார்கள். இம்மாதிரியும் செய்யலாம்..
சூரிய உதயத்திலிருந்து தான் இன்றைய கணக்கு. சூரிய உதயத்திற்கு முன்பு நிவேதனம் செய்துவிட்டால் அது நேற்று செய்ததாக ஆகிவிடுகிறது. நேற்று செய்ததை இன்று ப்ரசாதமாக சாப்பிடுவது பழயது ஆகி விடுகிறது.
ஆதலால் சூரிய உதயத்திற்கு பிறகு வெண்பொங்கல் குக்கரில் தயாரித்து தூபம், தீபம், நைவேத்யம் கற்பூரம் காண்பித்து சாப்பிடுவதால் பழயது ஆன தோஷம் கிடையாது.
“உஷஹ்காலே து ஸம்ப்ராப்தே போதயித்வா ஜகத்பதிம் ஸமர்ப்யர்ச்சய பஜேத் விஷ்ணும் ஜகதாம் தோஷ சாந்தயே “என்ற தர்ம சாஸ்திர வாக்கியப்படி மார்கழி மாதம் விடியற்காலையில் மஹா விஷ்ணுவிற்கு, அபிஷேகம், அர்ச்சனை செய்து வெண் பொங்கல் படைத்து பூஜை செய்வதால்
அந்த கிராமத்திற்கும், அங்கு வசிக்கும் மக்களுக்கும், மற்ற ப்ராணிகளுக்கும் அனைத்து தோஷங்களும் விலகி நன்மை உண்டாகும். என்பதால் எல்லா கோயில்களிலும் மார்கழி மாதத்தில் மக்களின் நன்மை கருதி விடியற்காலையில் பூஜை செய்ய படுகிறது.
ஆதலால் விடியற்காலையில் எழுந்திருந்து இதயத்தில் பிள்ளையார், சூரியன் விஷ்ணு, சிவன், அம்பாள் ஐவரையும் 16 உபசாரங்களால் மானசீக பூஜை செய்து பலன் பெறலாமே.. ,
|
|
|
Post by kgopalan90 on Dec 10, 2018 5:10:07 GMT 5.5
13-12-2018. மார்கசீர்ஷ சஷ்டி திதி சிவலிங்கம் தரிசனம் செய்ய வேண்டும் என்கிறது ஸ்ம்ருதி கெளஸ்துபம் பக்கம் 430.
மார்கசீர்ஷே (அ)மலே பக்ஷே சஷ்டியாம் வாரே (அ) ம்ஸு மாலின: சத தாரா கதே சந்த்ரே லிங்கம் ஸ்யாத் த்ருஷ்டி கோசரம்
மார்கசீர்ஷ மாத சுக்ல பக்ஷ சஷ்டி திதியன்று நூறு நக்ஷதிரங்கள் ஒன்றாக சேர்ந்ததால் சத தாரா என்ற பெயருடைய சதய நக்ஷத்திரத்தில் சிவாலயத்தில் முறையாக ப்ரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்க படும் சிவலிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டும்.
இதனால் குடும்பத்தில் முன்னோர் காலத்து நிகழ்ந்த சிவாபசார தோஷங்கள் நீங்கும். குடும்பத்திலுள்ளவர்களின் மனோ புத்தி தோஷங்கள் விலகும். மனநிம்மதி அறிவு திறன் வளரும்…
14-12-2018;- சூரிய வ்ருதம்.- மித்ர ஸப்தமி அல்லது நந்த ஸப்தமி..
மார்கசிர மாதம் சுக்ல பக்ஷ ஸப்தமி திதியில் தான் அதிதிக்கும் கச்யப மஹரிஷிக்கும் ஶ்ரீ ஸூர்யன் புத்ரனாக பிறந்தார். அதித்யாம் கச்யபாஜ் ஜக்ஞே மித்ரோ நாம திவாகர: ஸப்தம்யாம் தேந ஸாக்யாதா லோகேஸ்மின் மித்ர சப்தமி. ஸ்ம்ருதி கெளஸ்துபம்-பக்கம்-430.
பகல் முழுவதும் பூமிக்கு வெளிச்சம் கொடுப்பதால் திவாகரன் எனப்பெயர். அனைவருக்கும் நெருங்கிய நண்பனாவதால் மித்ரன் எனப்பெயர்.
இன்றைய தினம் பலவித புஷ்பங்களால் சூரியனை பூஜை செய்ய வேண்டும் சூரிய காயத்ரி, சூரிய நமஸ்காரம், ஆதித்ய ஹ்ருத்யம், கோளறு பதிகம். போன்ற ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்யலாம்.
“”நாநா குஸும ஸம்பாரைர் பக்ஷ்யை: பிஷ்டமயை: சுபை: மது நா ச ப்ரசஸ்தேந ---போஜயேத்….தீநாநாதாம்ஸ்ச மாநவான் என்பதாக ஸூர்யனின் ப்ரீதிக்காக மாவினால் நெய்யுடன் சேர்ந்து செய்யப்பட்ட பக்ஷணங்களை ஸூர்யனுக்கு தேனுடன் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு கொடுத்து சாப்பிட செய்து ஸந்தோஷிக்க செய்ய வேண்டும்.
இதனால் ஆரோக்கியம் பாஸ்கராதிச்சேத் என்பதாக தீராத அனைத்து நோய்களும் தீரும். ,ஆரோக்கியம், ஆயுஸும் ஏற்படும்.
|
|