|
Post by kgopalan90 on Dec 31, 2021 10:57:44 GMT 5.5
ஜனன-மரண தீட்டு விபரம்
[accordions title=”” disabled=”false” active=”0″ autoheight=”false” collapsible=”true”] [accordion title=”தீட்டு சிறு விளக்கம் “] ஜனனம் மற்றும் மரணத்தினால் ஏற்படும் தீட்டு விளக்கங்கள்
ஒரு ஆணுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகள், அந்த ஆண் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் என வரிசையாக வரும் சந்ததியில் ஏற்படும் அனைத்துக் கிளைகளிலும் உள்ள ஆண்கள் அனைவரும் பங்காளிகள் எனப்படுவர். மூல புருஷன் எனப்படும் ஒரு ஆண் வழியாக தோன்றும் மகன்-பேரன்-கொள்ளுப்பேரன்-எள்ளுப்பேரன் எள்ளுப்பேரனுக்கு மகன் – எள்ளுப்பேரனுக்குப் பேரன் வரையில் மூல புருஷனையும் சேர்த்து 7 தலைமுறைகள் ஆகின்றது. இதற்குள் அடங்கும் அத்தனை பங்காளிகளில் யாராவது ஒருவர் இல்லத்தில் ஏற்படும் பிறப்பினாலும் (ஜனனத்தாலும்) அல்லது இறப்பினாலும் (மரணத்தாலும்) அனைவருக்கும் தீட்டு உண்டாகும்.
தீட்டுக் காலத்திலும் கண்டிப்பாக சந்தியாவந்தனம் பண்ணவேண்டும். காயத்திரி எண்ணிக்கை மட்டும் 10 காயத்திரியுடன் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
மற்ற காம்யமான ஜபங்கள் கிடையாது.
தாய் வழியாகவும் சில தீட்டுகள் ஏற்படும். தீட்டு பற்றிய விஷயங்களுக்கு மூல ஆதாரம் “வைத்யநாத தீக்ஷிதீயம் ஆசெளச காண்டம்” ஆகும். [/accordion] [accordion title=”தீட்டு என்றால் என்ன?”] இங்கு மிகவும் சுலபமான முறையில் தீட்டு விஷயங்கள் விளக்கப் படுகிறது. மிகவும் நுணுக்கமான விஷயங்களை அறிய ஒரு நாள் அவகாசத்துடன் ஈமெயில் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தீட்டு என்றால் என்ன? என்று கூட சிலர் கேட்கிறார்கள்.
தீட்டுக் காரியங்கள் நடக்கும் இடத்தின் மற்றும் பொருடக்களின் சம்மந்தம் ஆன்மீகம் மற்றும் விஜ்ஞான ரீதியாகவும் விலக்கத் தக்கது என்பது கருத்து. ஆன்மீகம் தீட்டு என்று சொல்லி விலகி நிற்கச் சொல்கிறது. விஜ்ஞானம் ஹைஜீனிக் என்று சொல்லி விலகி நிற்கச் சொல்கிறது.
எனவே ஆன்மீக ரீதியாக யார் யார் எவ்வளவு நாட்கள் பிறரிடமிருந்தும், வழக்கமான மேம்பாட்டு வழிமுறைகள் நெறிமுறைகளிலிருந்தும் சில காரணங்களை உத்தேசித்து விலகி நிற்கச் சொல்கிறது.
உறவைக் கொண்டு அவர்களின் விலகி நிற்கவேண்டிய கால அளவை வெகு அழகாக நிச்சயித்துள்ளார்கள்.
உறவு உள்ள அளவிற்கு எங்களுக்கு நெருக்கமில்லை நாங்கள் ஏன் அதைக் கடைப்பிடிக்க வேண்டும்? என்று சிலர் கேட்கிறார்கள்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் கார் செல்லும் வழி, மோட்டார் சைக்கிள் செல்லும் வழி, பஸ் செல்லும் வழி, கனரக வாகனங்கள் செல்லும் வழி, நடந்து செல்லும் வழி என பாதையைப் பகுத்து வைத்து இந்தந்த பாதையில் செல்வோர் இன்னின்ன வேகத்தில் செல்ல வேண்டும் என்று நிர்ணயம் செய்துள்ளார்கள். காரில் செல்பவன் தனக்குள்ள பாதையை விடுத்து மற்ற பாதையில் சென்று கொண்டு நான் நடந்து செல்லவில்லையாதலால் எனக்கு அந்தவிதி பொருந்தாது என்று கூறி அவனுடைய வேகத்திற்குச் செல்லமுடியாது.
அதுபோல, இந்த உறவு இருப்பவர்களுக்கு இந்த அளவு நெருக்கம் இருக்கும் இருக்கவேண்டும் என்பது பொது விதி. அப்படி நெருக்கம் இல்லாதது விதிசெய்தவன் குற்றமல்ல. இதுபோன்ற விதிவிலக்குகளுக்காக வேண்டி விதியை மாற்றி அமைக்க முடியாது. எனவே (உறவு முறையில்) நெருக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உறவுமுறையுடன் பிறந்து தொலைத்த காரணம் கருதி விதிப்படி அநுட்டிப்பதே விவேகமாகும். [/accordion] [accordion title=”தீட்டில் நியமங்கள்”] தீட்டுள்ளவன் வீட்டில் தீட்டற்றவன் தெரிந்து சாப்பிட்டால் அன்றையபொழுது அவனுக்குத் தீட்டு.
தீட்டுப்போகும் தினத்தில் சுமார் காலை எட்டரை மணிக்கு (ஸங்கவ காலம்) மேல்தான் தீர்த்தமாடி தீட்டை முடிக்க வேண்டும்.
பிறப்பு, இறப்பு, மாதவிடாய் (தூரம்) இவை சூர்ய உதயத்திற்கு பதினொன்றேகால் நாழிகை(270 நிமிடங்கள்)க்கு முன் ஏற்பட்டால் முதல் நாள் கணக்கு. அதன் பிறகானால் மறுநாள் கணக்கு.
ப்ரேதத்தின் பின் போனாலும் க்ஷவரம் செய்து கொண்டாலும் இரு முறை ஸ்நானம் செய்ய் வேண்டும்.
ஸந்யாசிகளுக்கு (முன் ஆச்ரம) மாதா, பிதாக்களின் மரணத்தில் மட்டும் ஸ்நாநம்.
88 அடிகளுக்குள் பிணம் (சவம்) இருந்தால், எடுக்கும்வரை, சமைப்பது, சாப்பிடுவது கூடாது.
ஸந்யாசியின் சவமானால் அந்தப் பகுதிக்கே தீட்டுக் கிடையாது.
நகரங்களுக்கு மேற்படி தோஷங்கள் எதுவுமில்லை.
ஸ்நானம் பண்ணமுடியாத அளவிற்கு நோயுள்ள தீட்டுகாரனின் தீட்டுப்போக வேண்டுமானால், தீட்டற்ற ஒருவன் தீட்டுள்ளவனைத் தொட்டுவிட்டு தீர்த்தமாடி பின் தொட்டு தீர்த்தமாடி என பத்து முறை தீர்த்மாடவேண்டும்.
அதுபோல் நோயுள்ள தூர ஸ்த்ரீயை மற்றொருத்தி 12 முறை தொட்டு தீர்த்தமாடி வேறு உடை உடுத்தச் செய்தால் சுத்தி. இரண்டிலும் புண்யாஹவாசனம் முக்கியம்.
ச்ராத்தத்தின் நடுவில் (ச்ராத்த சங்கல்பம் ஆனபின்) தீட்டுத் தெரிந்தால் ச்ராத்தம் முடியும்வரை கர்த்தாவுக்குத் தீட்டில்லை.
வரித்தபின் போக்தா (ச்ராத்த ஸ்வாமி)க்கு தீட்டுத் தெரிந்தால் சாப்பிட்டு முடியும்வரை தீட்டில்லை.
விவாஹத்தில் உத்வாஹ சங்கல்பத்தின் பின் தீட்டுத் தெரிந்தால் சேஷ ஹோமம் வரை தீட்டில்லை.
ஸந்யாசிகளின் மரணத்தினால் அவரின் பங்காளிகளக்குத் தீட்டில்லை, அவப்ருத ஸ்நாநம் மட்டும்.[/accordion] [accordion title=”மற்ற சில கவனிக்கத் தக்கவை”] ராஜாங்கத்தால் கொலை தண்டனை விதிக்கப்பட்டவனுக்கு உடனே கர்மா செய்யலாம்.
துர் மரணம் செய்து கொண்டவனுக்கு 6 மாதம் கழித்து கர்மா செய்ய வேண்டும் என்பது விதி ஆயினும் 24 நாட்கள் கழித்து செய்வது என்றும் ஒரு விதி உள்ளது.
தற்செயலாய் துர்மரணம் அடைவோருக்கு தீட்டு, தர்பணம் முதலியவை உண்டு.
தற்கொலை செய்துகொண்டவனுக்கு தீட்டு, தர்பணம் இவை இல்லை.
கர்மா செய்பவனுக்கு 11ம் நாள் கர்மாவிற்குப் பின் தீட்டுப் போகும்.
கல்யாணமான பெண் இறந்தால் அவள் பிறந்த வீட்டுப் பங்காளிகளுக்கு தீட்டில்லை.
பிறப்புத் தீட்டுள்ளவனை 4 நாளைக்கு மேல் தீண்டினால் அதிகம் தோஷமில்லை.
ஒரு தீட்டுக் காரன் மற்றொரு தீட்டுக்காரனைத் தொடக் கூடாது.
தீட்டுள்ளவன் வீட்டுக்கும் அவன் சாமான்களுக்கும் தீட்டுண்டு.
பிரம்மச்சாரிகள் கர்மா செய்தால் அதனுடன் தர்பணம் (உதகதானம்) தனியாக இல்லை.
மனைவி கர்பமாக இருக்கும்போது தானம் வாங்குதல், தூரதேச யாத்திரை போதல் கூடாது.
சவத்துக்கு முன்னாலும், பக்கவாட்டிலும் போகக் கூடாது.
சஞ்சயனம் ஆனபின் துக்கம் விசாரித்தால் ஆசமனம் மட்டும் போதும்.
சிராத்த தினத்தன்று துக்கம் விசாரிக்கச் செல்லக் கூடாது.
தன் மனைவி கர்பமாய் இருக்கும்போது தாய், தந்தை தவிர மற்றவர்களின் சவத்தை சுமக்கலாகாது.
ப்ரம்மச்சாரிகள் தாய் தந்தை சவத்தைத் தவிர மற்வர்கள் சவத்தைச் சுமக்கக்கூடாது.
தீட்டுக் காரர்கள் ஆலயத்திற்குள் செல்லக் கூடாது.
தீட்டுக்காரர்களை தீட்டில்லாதவர்கள் நமஸ்கரிக்கக் கூடாது. தீட்டுக்காரரும் அப்படியே.
ஜனன, மரண தீட்டிலும் ஏகாதசி, துவாதசி விரதம் விடக் கூடாது. உபவாஸம் மட்டும், பூஜை கிடையாது.
சாவு தீட்டுக்காரர் மெத்தை போன்றவற்றில் படுக்கக் கூடாது. தினமும் தீர்த்தமாடவேண்டும்.
சிசுக்கள் இறந்தால் புதைத்த தினம் முதல்தான் தீட்டு[/accordion] [accordion title=”தீட்டில் வேறு தீட்டு சோ்ந்தால்?”] பங்காளிகளைப் பொறுத்தவரையில் ஒரு தீட்டு காத்துக் கொண்டிருக்கும்போது மற்றொரு தீட்டு வந்தால் முன் வந்த தீட்டு முடியும்போது பின் வந்த தீட்டும் முடிந்துவிடும்.
உதாரணமாக 10நாள் தீட்டில் 4ம் நாள் மற்றொரு 10 நாள் தீட்டு வந்தால் முன் வந்த தீட்டின் 10ம் நாளுடன் பின் வந்த தீட்டும் முடிந்துவிடும்.
ஆனால் முன் வந்த 3 நாள் தீட்டுடன் பின் வந்த 10 நாள் தீட்டு முடியாது.
பத்துநாள் தீட்டின் இடையில் வந்த 3 நாள் தீட்டுடன் 10 நாள் தீட்டு முடியாது. 10ம் நாள்தான் சுத்தி.
பத்தாம் நாள் இரவில் வந்த புதிய பத்து நாள் தீட்டிற்கு அதிகப்படியாக 3நாள் மட்டும் காத்தால் போதும்.
ஆனால் பிறப்புத் தீட்டின் இறுதியில் வரும் பிறப்புத் தீட்டிற்காக மேலும் 3 நாள் காக்கத் தேவையில்லை.
மரணத் தீட்டு ஜனனத் தீட்டைக் காட்டிலும் பலம்
மரணத் தீட்டின்போது வந்த பிறப்புத் தீட்டு மரணத் தீட்டுடன் முடியும்.
பெற்ற குழந்தை பத்துநாள் பிறப்புத் தீட்டிற்குள் இறந்தால் அதற்காகத் தனியாகத் தீட்டில்லை. பிறந்ததிலிருந்து 10 நாள் விலகும். ஒரு வேளை 10ம் நாள் மரணமானால் மேலும் 2 நாள் அதிகரிக்கும். 10ம் நாள் இரவு ஆனால் 3 நாள்.
பங்காளிகளுக்கு மேற்படி 3 நாள் தீட்டில்லை.
அதிக்ராந்தாசெளசம் என்பது தீட்டுக்காலம் முடிந்தபின் தீட்டுப்பற்றி அறிந்தவருக்கு விதிக்கப்படுவது.
பிறப்புத் தீட்டில் அதிக்ராந்தாசெளசம் இல்லை.
பத்து நாள் தீட்டை பத்தாம் நாளுக்குமேல் 3 மாதங்களுக்குள் கேட்டால் 3 நாள் தீட்டு.
மூன்று மாதத்திற்கு மேல் 6 மாதத்திற்குள் கேட்டால் ஒன்றரை நாள்.
6 மாதத்திற்கு மேல் ஒரு வருடத்திற்குள் ஒரு நாள்.
அதன் பிறகு ஸ்னானம் மாத்திரம்.
3 நாள் தீட்டை பத்து நாட்களுக்குள் கேட்டால் 3நாள் தீட்டு. பத்து நாட்களுக்குப் பிறகு ஸ்னானம் மாத்திரம்.
1 நாள் தீட்டுக்கு அதிக்ராந்த ஆசெளசம் கிடையாது.
மாதா பிதாக்களின் மரணத்தில் புத்திரர்களுக்கும், கணவனனின் மரணத்தில் பத்தினிக்கும் எப்போது கேட்டாலும் அதிலிருந்து 10 நாள் தீட்டு உண்டு.[/accordion] [accordion title=”தீட்டு முடிவில் யார் யாருக்கு க்ஷவரம் உண்டு?”] சில தீட்டின் முடிவில் புருஷர் (ஆண்)களுக்கு ஸர்வாங்க க்ஷவரம் (வபனம்) செய்து கொண்டால்தான் தீட்டுப் போகும் என்பது சாஸ்திரம். ஸர்வாங்கம் என்பது :
தலையில் சிகை (குடுமி) தவிர்த மற்ற இடம்
முகம், கழுத்து
இரு கைகளிலும் மணிக்கட்டிலிருந்து முழங்கைக்குக் கீழ் உள்ள ஒரு சாண் இடம் தவிர்த்து மற்ற இடம்.
கழுத்துக்கீழே பாதங்கள் வரை, பிறப்புறுப்பு உட்பட பின் முதுகு தவிர்த்த மற்ற அனைத்து இடங்களிலும் உள்ள ரோமங்களை அறவே அகற்றுவது ஸர்வாங்க க்ஷவரம் ஆகும்.
கீழ்கண்ட மரண தீட்டுகளின் முடிவில் (முடிகின்ற நாள் அன்று – அதாவது பத்து நாள் தீட்டில் 10ம் நாள் காலை)ஸர்வாங்கம் அவசியம்.
இறந்த பங்காளி தன்னைவிட வயதில் பெரியவரானால். வயதில் சிறியவர்களுக்கு வபனம் தேவையில்லை ஆனால் தர்பணம் உண்டு.
மாதாமஹன், மாதாமஹீ, மாமன், மாமி, மாமனார், மாமியார் இவர்கள் மரணணத்தில் வனம் உண்டு.
இறந்தவர் பெரியவரா இல்லையா என ஸந்தேஹம் இருந்தால் வபனம் செய்து கொள்வதே சிறந்தது.
தீட்டு முடியும் தினம் வெள்ளிக் கிழமையானால் முதல்நாளான வியாழக் கிழமையிலேயே வபனம் செய்து கொள்ள வேண்டும். எக்காரணத்தாலும் வெள்ளிக்கிழமை க்ஷவரம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.[/accordion] [accordion title=”ஜனனத்தால் (பிறப்பால்) ஏற்படும் தீட்டுகள்”] கல்யாணமாகாத ஆண், பெண் இருபாலருக்கும் எந்தத் தீட்டும் இல்லை.
பிரசவத்தினால் ஏற்படும் தீட்டு பிரசவித்த பத்து நாளுக்குப் பிறகு எவரும் காக்கத் தேவையில்லை.
பெண் குழந்தையைப் பெற்றவளுக்கு 40 நாட்கள் தீட்டு
ஆண் குழந்தையைப் பெற்றவளுக்கு 30 நாட்கள் தீட்டு
பிறந்தது பெண் குழந்தையானால் கீழ்கண்டவர்களுக்கு பத்து நாட்கள் தீட்டு: குழுந்தையின் உடன் பிறந்தோர்.
மறுமனைவி(களு)க்குப் பிறந்த ஸஹோதரர்கள்
அதுபோல குழந்தையின் தகப்பனாரின் ஸஹோதரர்கள்
குழந்தையின் தகப்பனாரின் தகப்பனார்
(பிதாமஹர்) அவரின் ஸஹோதரர்கள். மேற்கண்டோர் திருமணமான ஆண்களானால் அவர்களது மனைவிகளுக்கும் அதே அளவு தீட்டு.
குழந்தை ஈன்றவளின் பெற்றோருக்கு 3 நாள் தீட்டு
குழந்தை பெற்றவளின் ஸஹோதரன், மாமா, பெரியப்பர, சித்தப்பா போன்றவர்களுக்கு தீட்டில்லை ஆயினும் அவர்களில் யாருடைய பொருட் செலவிலாவது ப்ரஸவம் ஆனால், ப்ரஸவம் எங்கு நடந்தாலும் செலவு செய்தவர்களுக்கு ஒரு நாள் தீட்டுண்டு.[/accordion] [accordion title=”பெண்களுக்கும் மட்டும் ஏற்படும் தீட்டுகள்”] ஜனனத்தில் குழந்தை பெற்றவளுக்கு மட்டும் சட்டி தொடடுதல் அதாவது சமையலறைக்கு வந்து சமையல் செய்ய வீட்டுக் காரியங்களில் அனைவருக்கும் உள்ள பத்து நாள் தீட்டு முடிந்தவுடன் ஈடுபட முடியாது. ஆண் குழந்தையானால் 30 நாளும், பெண் குழந்தையானால் 40 நாளுக்குப்பிறகே வீட்டுக் காரியங்களில் ஈடுபட முடியும்.
இனி மரணத்தினால் பெண்களுக்கு மட்டில் (கணவர் மற்றும் கணவர் குடும்பத்தாருக்குக் கிடையாது) ஏற்படும் தீட்டுகள் விபரம் கீழ்வறுமாறு —
பெண்களுக்கு திருமணத்தின் மூலம் கோத்திரம் வேறு படுகிறது. கணவனின் கோத்திரத்தை (சந்ததியைச்) சேர்ந்தவர்களின் பிறப்பு இறப்பே அவளுக்கும் உரியதாகும். ஆயினும் பிறந்தகத்தைச் சேர்ந்த சிலரது மரணத்தினால் பெண்களுக்கு மட்டும் 3 நாள் வரை தீட்டு சம்பவிக்கும் இந்த தீட்டு அவர்களுடைய கணவருக்குக் கிடையாது. தூரமான ஸ்த்ரீ தனித்திருந்து தீட்டுக் காப்பது போல இதை அவள் மட்டும் காக்க வேண்டியது.
பெண்களின் கீழ்க்கண்ட உறவினரின் மரணத்தில் அவளுக்கு மட்டும் 3 நாள் தீட்டு: உபநயனமான உடன்பிறந்த ஸஹோதரன்
உபநயனமான மருமான் (ஸஹோரதன் பிள்ளை)
உபநயனமான ஸஹோதரியின் பிள்ளை
இளைய அல்லது மூத்த தாயார் (தந்தையின் வேறு மனைவிகள்)
பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம். பகலின் அல்லது இரவின் கடைசீ பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்துவிட்டதாகவே பொருள்.
கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் பெண்களுக்கு பக்ஷிணீ தீட்டு. (ஒன்றரை நாள்) தந்தையுடன் பிறந்த பெரியப்பா, சித்தப்பா
தாயுடன் பிறந்த சித்தி, பெரியம்மா
தாயின் ஸஹோதரர்கள் (மாதுலன்)
தந்தையின் ஸஹோதரிகள் (அத்தை)
மேல் நான்கு வகையினரின் பெண்கள், பிள்ளைகள்
தந்தையின் தந்தை – பிதாமஹன்
தந்தையின் தாய் – பிதாமஹி
தாயின் தந்தை – மாதாமஹன்
தாயின் தாய் – மாதாமஹி
உடன் பிறந்த ஸஹோதரி
ஸஹோதரியின் பெண்கள்
மருமாள் (ஸஹோதரனின் பெண்)
கீழ்கண்டவர்கள் உபநயனமான ஆண், விவாஹமான பெண் மரணத்தால் பெண்களுக்கு மட்டும் 1 நாள் தீட்டு. தாயின் மூத்தாள் அல்லது இளையாள் (ஸபத்னீ மாதா)குமாரன்
ஸபத்னீ மாதா புத்ரீ (குமாரத்தி)
ஸபத்னீமாதா ஸஹோதர, ஸஹோதரிகள்
ஸபத்னீமாதா பிள்ளையின் பிள்ளை, பெண்
ஸபத்னீ மாதா பெண்ணின் பிள்ளை, பெண்
ஸபத்னீமாதா ஸஹோதரியின் பிள்ளை,பெண்[/accordion] [accordion title=”மரணத்தினால் ஏற்படும் தீட்டுகள்”] மரணத்தினால் ஏற்படும் தீட்டுகள் ஒருநாள், ஒன்றரை நாள், மூன்று நாள், பத்து நாட்கள் என நான்கு வகைப்படும். அவை தனித்தனியாக பிரித்து கீழே வகைப்படுத்தி வழங்கப்பட்டுள்ளன. முதலில் பத்துநாளில் ஆரம்பித்து, பின் மூன்று நாள், ஒன்றரை நாள், ஒரு நாள் என எந்தப் பகுதியில் தங்களுடைய உறவு முறை வழங்கப்பட்டுள்ளது என தீர்மானித்துக்கொள்ளவும். சில சமயம் இருவிதமான உறவு முறைகள் இருக்கலாம். அப்படி இருக்கும்போது அதிகப்படியான தீட்டு எந்த உறவினால் ஏற்படுகிறதோ அந்தத் தீட்டையே அநுஷ்டிக்கவேண்டும்.
[tabs title=”” disabled=”false” collapsible=”true” active=”0″ event=”click”] [tab title=”10 நாள்”] 10 நாள் தீட்டு பங்காளிகளில் யார் ஒருவர் இறந்தாலும் 7 தலை முறைகளுகு்கு உட்பட்ட அனைத்து ஆண்கள் மற்றும் அவர்கள் மனைவிகளுக்கும் 10 நாள் தீட்டு உண்டு. பிறந்து பத்து நாட்களே ஆன புருஷ (ஆண்)குழந்தை இறந்தால் கீழ்க்கண்டவர்களுக்கு பத்து நாள் தீட்டு.
இறந்தவர் (குழந்தை)யின் தந்தை
தாய், மற்றும் மணமான ஸஹோதரார்கள்
மேற்படி இறந்தது மணமாகாத ஒரு பெண் (குழந்தை) ஆனாலும் மேற்கண்ட அனைவருக்கும் 10 நாள் தீட்டு.
7 வயதுடைய உபநயனம் ஆன பையன் இறந்தால் பங்காளிகள் அனைவருக்கும் 10 நாள் தீட்டு. 7 வயதுக்கு மேல் இறந்தது ஆண் ஆனால் உபநயனம் ஆகியிருந்தாலும் இல்லாவிட்டாலும் பங்காளிகள் அனைவருக்கும் 10 நாள் தீட்டு.[/tab] [tab title=”3 நாள்”] 3 நாள் தீட்டு கீழ்க்கண்ட உறவினர்களின் மரணத்தில் ஆண்களுக்கும் அவர்களுடைய மனைவிகளுகு்கும் 3 நாள் தீட்டு. தாயின் தந்தை (மாதாமஹர்)
தாயின் தாய் (மாதாமஹி)
தாயின் ஸஹோதரன் (மாதுலன்)
மாமன் மனைவி (மாதுலானி)
மாமனார்
மாமியார்
தாயின் உடன் பிறந்த ஸஹோதரி (சித்தி,பெரியம்மா)
தந்தையின் ஸஹோதரிகள் (அத்தைகள்)
ஸஹோதரியின் மகன் (உபநயனமானவன்)மருமான்
உபநயனமான பெண்வயிற்றுப் பேரன்(தெளஹித்ரன்)
ஏழு தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள் (ஸமானோதகர்கள்)
கல்யாணமான பெண்
கல்யாணமான ஸஹோதரி
ஸ்வீகாரம் போனவனைப் பெற்றவள் (ஜனனீ)
ஸ்வீகாரம் போனவனை ஈன்ற தந்தை (ஜனக பிதா)
ஸ்வீகாரம் போன மகன் (தத்புத்ரன்)
7 வயதுக்கு மேற்பட்ட கல்யாணமாகாத பங்காளிகளின் பெண்.
2 வயதுக்கு மேற்பட்ட ஆனால் உபயநயனமாகாத பங்காளிகளின் ஆண் பிள்ளைகள்.
7 தலைமுறைக்கு மேற்பட்ட பங்காளிகள்.[/tab] [tab title=”90 நாழி”] பக்ஷிணீ பக்ஷிணீ என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம். பகலின் அல்லது இரவின் கடைசீ பகுதியில் அறியப்பட்டாலும் அந்த பொழுது தீட்டில் கழிந்துவிட்டதாகவே பொருள். பகலில் அறியப்பட்டு பகல், இரவு, மறுநாள் பகலில் தீட்டு முடிந்துவிட்டாலும் மறுநாள் காலையிலேயே ஸ்னானத்திற்குப் பிறகு தீட்டுப் போகும்.
கீழ்கண்ட பட்டியலில் உள்ளவர்களின் மரணத்தினால் ஆண்களுக்கு பக்ஷிணீ தீட்டு. (ஒன்றரை நாள்). அத்தையின் பிள்ளை அல்லது பெண்
மாமனின் பிள்ளை அல்லது பெண்
தாயின் ஸஹோதரியின் பெண்கள்-பிள்ளைகள்
தன்னுடைய ஸஹோதரியின் பெண்
தன் ஸஹோதரனின் மணமான பெண்
சிற்றப்பன், பெரியப்பன் பெண்கள்
தன் பிள்ளை வயிற்றுப் பேத்தி (பெளத்ரீ)
பெண் வயிற்றுப் பேத்தி (தெளஹித்ரி)
உபநயனமாகாத பெண் வயிற்றுப் பிள்ளை (தெளஹித்ரன்)
உபநயனமாகாத மருமான் (ஸஹோதரி புத்ரன்) [/tab] [tab title=”1 நாள்”] கீழ்க்கண்டோர் மரணத்தில் புருஷர்களுக்கு ஒரு நாள் தீட்டு. (இளைய, மூத்தாள் தாயார்களுக்கு ஸபத்னீ மாதா என்று பெயர்). ஸபத்னீ மாதாவின் ஸஹோதரன், ஸஹோதரி
ஸபத்னீ மாதாவின் பெண் மற்றும் மேற்சொன்ன 3வகை உறவினரின் பெண்கள் பிள்ளைகள்.
ஸபத்னீ மாதாவின் தாய், தந்தை
ஸபத்னீ மாதாவின் பெரியப்பா, சித்தப்பா
கல்யாணமாகாத 6 வயதுக்குட்பட்ட (2 வயதுக்கு மேற்பட்ட) பங்காளிகளின் பெண்.
ஸ்வீகாரம் சென்ற ஆணின் பிறந்தகத்தில் உடன் பிறந்த (முன் கோத்ர) ஸஹோதரர்கள்
ஆறு மாதத்திற்கு மேற்பட்ட இரண்டு வயதிற்குட்பட்ட பங்காளிகளின் ஆண் குழந்தை.
குழந்தையில்லாத மனைவி இறந்தபின் அவளைப் பெற்றவர்கள் மாமனார் மாமியார் இறந்தால்.[/tab][/tabs][/accordion] [/accordions]
|
|
|
Post by kgopalan90 on Dec 23, 2021 17:43:33 GMT 5.5
பானு ஸப்தமி.
ஞாயிற்று கிழமையும் ஸப்தமி திதியும் சேர்ந்து வரும் நாட்கள் பானு ஸப்தமி என்று அழைக்கபடும். 26-12-2021 மற்றும் 09-01-2022 இந்த மாதத்தில் இம்மாதிரி வருகிறது. காயத்திரி ஜபம் காலையில் 8-30 மணிமுதல் 10-30 மணி வரை ஆயிரம் காயத்ரி ஜபம் செய்தால் அது பத்தாயிரமாக இந்த பானு ஸப்தமி அன்று கணக்கில் எடுத்துக்கொள்ள படும். சூரிய கிரஹணத்திற்கு சமமான புண்ய காலம். ஆதித்ய ஹ்ருத்யம், சூரிய கவசம், அருணம், சூரிய ஸ்தோத்ரங்கள் படிக்கலாம். தானங்கள் செய்யலாம்.
தனுர் மாத பூஜை. 16-12-2021 முதல் 14-01-2022 வரை.
தேவர்களுக்கு தக்ஷிணாயனம் இரவு நேரம். உத்தராயணம் பகல் நேரம். . மார்கழி மாதம் விடியற்காலை போது தேவர்களுக்கு.. இந்த விடியற்காலையில் மஹா விஷ்ணுவை எழுப்பி 16 உபசாரம் பூஜை செய்து பொங்கல் படைத்து தினந்தோறும் மிகுந்த பக்தியுடன்
சூரிய உதயத்திற்கு முந்தி ஆராதித்து வருவதால் விஷ்ணு பதவியை பெறுகிறான். இம்மாதத்தில் சிவ பூஜையும் சிறந்ததாகும்.
மார்கழி மாதத்தில் திருவாதிரை நக்ஷத்திரதன்று சிவனையும் வழிபடுகின்றோம்.
மார்கழி மாதம் சுக்லபக்ஷ ஏகாதசி வைகுண்ட ஏகாதசி..இன்று வேத பாராயணத்துடன் விஷ்ணுவிற்கு உத்ஸவம் செய்ய வேண்டும் .
திருவோணம், ஏகாதசி, அமாவாசை, பெளர்ணமி. ஜன்ம நக்ஷத்திரம், மாச நக்ஷத்திரம், ஹரி தினங்களிலும், பக்தர்கள் வரும் போதும் துர்நிமித்தம், , துஸ் ஸ்வப்னம், மஹாபயம் வரும் போதும் மஹா விஷ்ணுவை ஆராதிக்க வேண்டும்.
விஷ்ணு பூஜையை விட வேறு விசேஷ வைதீக கர்மாவே கிடையாது. விஷ்ணு ஸூக்தம், புருஷ ஸுக்தத்தை விட வேறு சிறந்த வேத மந்திரம் கிடையாது. ஆகையால் திருமாலை தினந்தோறும் ஆராதிக்க வேண்டும். இதில் அஷ்டாக்ஷரம் பிரதியுப சாரத்திற்கும் உபசார மந்திரமாகும்.
திருமாலை பூஜித்து நமஸ்கரித்து ஆத்ம நிவேதனம் பண்ண தகுந்ததாகும்..
பஞ்சாக்ஷர மந்திரத்தால் பரமேஸ்வரனை ருத்திர மந்திரத்தோடு விஷ்ணு பூஜையில் சொல்லப்பட்டது போல் செய்ய வேண்டியது.
பூமியை பசுஞ் சாணத்தால் மெழுகி முன்னே ப்ரும, விஷ்ணு, சிவலிங்கத்தையும் , தெற்கில் கணபதி, சுப்பிரமணியரும், மேற்கில் சூலமும், வடக்கில் நந்திகேஸ்வரரையும், ஸ்தாபித்து, அர்க்கியம், பாத்யம் கொடுத்து நிர்மால்யத்தை நீக்கி வடக்கே சண்டிகேசுவரரிடம் சேர்ப்பித்து
அதன் பிறகு ஸ்நானம், , அலங்காரம், வஸ்த்ரம், தூப தீப நைவேத்ய உபசாரங்கள் எல்லா தேவதைகளுக்கும் செய்து மந்திர புஷ்பம், ஸ்தோத்ரம் ,மற்ற உபசாரங்கள் செய்ய வேண்டியது.. இப்படி செய்வது இஹ பர ங்களுக்கு நன்மை உண்டாகும்..
சிவ லிங்கத்தை தரிசிப்பதே புண்யமானது. . ஸ்பர்சம், அர்ச்சனம், த்யானம் இதை விட ஒவ்வொன்றும் மேலானது.
நூறு முறை பாலாபிஷேகமும், இருபத்தைந்து முறை எண்ணைய் அபிஷேகமும் பழ ரஸங்களால் ஆயிரம் முறை அபிஷேகம் செய்வது மஹா அபிஷேகம் எனப்பெயர்.
வாஸனை சந்தன அபிசேகத்திற்கு கந்தர்வ லோகமும்,, பன்னீர் அபிஷேகத்திற்கு குபேர லோகமும் ,பஞ்சாம்ருத அபிஷேகத்திற்கு முக்தியும் பலனாகும்.
புதிய பட்டு வஸ்த்ரங்களையும். , மூன்று இழையுள்ள தாமரை நூல்களால் இயற்றப்பட்ட பூணலையும், சாற்றுகிறவன் வேதாந்தத்தின் கரையை காண்பான். வாசனை சந்தனம் லேபனம் செய்பவன் அநேக கோடி வருஷங்கள் சிவ லோகத்தில் வசிப்பான் .நெய் தீபம் ஏற்ற வேண்டும். அகிற்புகை யூட்டுபவர் யம வாதனை பட மாட்டார்கள்.
பாத்திரத்தில் எவ்வளவு அன்னம் நிவேதிக்க படுகிறதோ அவ்வளவு ஆயிரம் யுகங்கள் ஸ்வர்கத்தில் ஆனந்தம் அநுபவிப்பர்.
வரகு, கேழ்வரகு, (ராகி) சுரைகள் உதவாது. தாழை, குருக்கத்தி, குருந்தை,, மா, முல்லை பூக்கள் சிவபூஜைக்கு ஆகாது.
விநாயகர், சூரியன், விஷ்ணு , சிவலிங்கம், அம்பாள் இந்த ஐவரையும் பூஜிப்பவர்,, சூரிய மண்டலத்திலோ, ஹிருதயத்திலோ , ஒரு மேடையிலோ, பிம்பத்திலோ பூஜிக்க வேண்டியது. கிழக்கு முகமான தேவனை, வடக்கு முகமாயிருந்து பூஜிக்க வேண்டும்.
பூஜை அறையில் சென்று நமஸ்கரித்து ஒரு தடுக்கு மேல் அமர்ந்து சுக்லாம்பரதரம், ப்ராணாயாமம், சங்கல்பம் செய்து பாத்திரத்திலும், சங்கிலும் நீர் நிரப்பி. புஷ்பாக்ஷதைகள் போட்டு காயத்ரி மந்திரத்தால் அபிமந்திரித்து தீர்தங்களை ஆவாஹனம் பண்ணி ஆப்போஹி என்ற மந்திரத்தால் தன்னையும், பூஜா அறை; பூஜா த்ரவ்யங்களையும் ப்ரோக்ஷித்து 16 உபசார பூஜை செய்ய வேண்டியது.
பதார்தங்கள் குறைவாய் இருந்தாலும் மனதினால் அதிகமாக் இருப்பதாய் த்யானம் செய்து கொள்ள வேண்டியது. கடைசியில் நமஸ்கரித்து அபராத மன்னிப்பு கேட்க வேண்டியது. இப்படி செய்வதால் ஸர்வாபிஷ்டங்களையும் பெறுவான்..
பூஜையில் நிவேதனம் ஆன அன்னத்தால் வைஸ்வ தேவம் செய்யக்கூடாது.
ஆசாரியனிடத்தில் மனிதன் என்ற புத்தி வரக்கூடாது.பிம்பத்தில் கல், தாமிரம், என்ற புத்தியும்,மந்திரத்தில் ஏதோ ஒரு சப்தம் என்கிற புத்தியும் வைப்பவன் ப்ருஹ்மஹத்தி செய்தவனாகிறான்.
குருவை அவமதிப்பதால் மரணத்தையும்,மந்திரத்தை தூஷிப்பதால் தாரித்ரத்தையும் அடைந்து நரகத்தில் அவதி படுவான் என பராசர, வசிஷ்டர் முதலியோர் கூறுகின்றனர்.
வைத்தினாத தீக்ஷிதீயம் ஆஹ்நீக கான்டம் பக்கம் 242 ல் தனுர் மாத பூஜையை அதிகாலையில் ஸ்நானம் செய்து சூர்ய உதயத்திற்கு முன் முடித்து வி ட வேண்டும் .சூர்ய உதயத்திற்கு பிறகு சந்தியாவந்தனம், ஜபம், ஒளபாசனம் செய்து விட்டு, தினசரி செய்யும் பூஜையை தனியாக செய்ய வேண்டும்.
ஆனால் சிலர் ஆசாரத்தில் விடியற்காலை தனுர் மாத பூஜையை அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை வரை நிறுத்திக்கொண்டு ஸந்தியாவந்தனம் காயத்ரி ஜபம் செய்து விட்டு, தூபம், தீபம், நிவேதனம், கற்பூர ஹாரத்தி முதலியன செய்து தனுர் மாத பூஜை .நித்ய பூஜை இரண்டும் சேர்த்து ஒரே பூஜையாக செய்கிறார்கள். இம்மாதிரியும் செய்யலாம்..
சூரிய உதயத்திலிருந்து தான் இன்றைய கணக்கு. சூரிய உதயத்திற்கு முன்பு நிவேதனம் செய்துவிட்டால் அது நேற்று செய்ததாக ஆகிவிடுகிறது. நேற்று செய்ததை இன்று ப்ரசாதமாக சாப்பிடுவது பழயது ஆகி விடுகிறது.
ஆதலால் சூரிய உதயத்திற்கு பிறகு வெண்பொங்கல் குக்கரில் தயாரித்து தூபம், தீபம், நைவேத்யம் கற்பூரம் காண்பித்து சாப்பிடுவதால் பழயது ஆன தோஷம் கிடையாது.
“உஷஹ்காலே து ஸம்ப்ராப்தே போதயித்வா ஜகத்பதிம் ஸமர்ப்யர்ச்சய பஜேத் விஷ்ணும் ஜகதாம் தோஷ சாந்தயே “என்ற தர்ம சாஸ்திர வாக்கியப்படி மார்கழி மாதம் விடியற்காலையில் மஹா விஷ்ணுவிற்கு, அபிஷேகம், அர்ச்சனை செய்து வெண் பொங்கல் படைத்து பூஜை செய்வதால்
அந்த கிராமத்திற்கும், அங்கு வசிக்கும் மக்களுக்கும், மற்ற ப்ராணிகளுக்கும் அனைத்து தோஷங்களும் விலகி நன்மை உண்டாகும். என்பதால் எல்லா கோயில்களிலும் மார்கழி மாதத்தில் மக்களின் நன்மை கருதி விடியற்காலையில் பூஜை செய்ய படுகிறது.
ஆதலால் விடியற்காலையில் எழுந்திருந்து இதயத்தில் பிள்ளையார், சூரியன் விஷ்ணு, சிவன், அம்பாள் ஐவரையும் 16 உபசாரங்களால் மானசீக பூஜை செய்து பலன் பெறலாமே.. ,
|
|
|
Post by kgopalan90 on Dec 23, 2021 14:21:40 GMT 5.5
, திஸ்ரேஷ்டகா, அஷ்டகா, அன்வஷ்டகா -1.
டிசம்பர் 26,27,28; ஜனவரி 24,25,26; பிப்ரவரி 23,24,25; மார்ச் 24,25,26.
நாற்பது ஸம்ஸ்காரங்கள்:-
ஸம்ஸ்காரங்கள் என்பது நமது ஜீவனிடம் உள்ள மலங்களை அகற்றி நம்மை ப்ரும்மத்துடன் ப்ருஹ்ம லோகத்தில் சேர்க்கின்றன.
இவைகளில் சில நம் பெற்றோர்களால் செய்ய தக்கவை. சில நாமே செய்ய தக்கவை.
கர்ப்பாதானம். பும்ஸவனம், ஸீமந்தம், ஜாதகர்மா, நாம கரணம், அன்ன ப்ராஶனம். செளளம், உப நயனம்.
ப்ராஜாபத்யம், ஸெளம்ய, ஆக்னேய வைஶ்வதேவ வ்ருதங்கள், ஸ்நானம், விவாஹம், வைஶ்வதேவம் அல்லது
தேவ, பித்ரு, மனுஷ்ய, பூத, ப்ரும்ம எனும் பஞ்ச மஹா யக்யம். இவை 19.
பாக யக்யங்கள்-7. அஷ்டகா, ஸ்தாலி பாகம், பார்வணம், ஆக்ரஹாயணீ, ஶ்ராவணீ, சைத்ரீ, ஆஶ்வயூஜீ.
ஹவிர் யக்யங்கள்-7. அக்னி ஆதானம், அக்னி ஹோத்ரம், தர்ஶ பூர்ணமாசம், ஆக்ரயணம், சாதுர்மாஸ்யம், நிரூட பஶுபந்தம், ஸெளத்ராமணீ.
ஸோம ஸம்ஸ்தைகள்:-7 அக்னிஷ்டோமம்; அத்யக்னிஷ்டோமம், உக்த்யம், ஷோடஶ, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம்.
ஆக இவைகளே 40 ஸம்ஸ்காரங்கள்.
ஸ்தாலி பாகம்:- இது அமாவாசைக்கு மறு நாளும், பெளர்ணமிக்கு மறு நாளும் வரும் ப்ரதமை அன்று மாதா மாதம் செய்ய வேண்டும்.
ஒளபாசன அக்னியிலேயே ஸ்தாலியில் சருவை வைத்த அக்னிக்கும் ஸ்விஷ்ட க்ருத்துக்கும் ஒவ்வொரு ஹோமம் செய்ய வேண்டும். ஆக்ரயன, ஸர்ப்ப பலி முதலியவைகளுக்கு இது ப்ரக்ருதி ஆகும்.
பார்வணம்:- இதை மாஸி ஸ்ராத்தம் என்று கூறுவார்கள். இது தான் எல்ல ஶ்ராதத்திற்கும் ப்ரக்ருதியானது. ப்ரக்ருதி என்றால் பூர்ணம் என்று பொருள்.
இதை போலவே மற்றவைகளை செய்ய மேற்கோளாக இருக்கிறது.
இதற்கு மாறானது விக்ருதி எனப்படும். சில மாறுதல்களுடன், மாறுதல்கள் இல்லாத இடத்தில் ப்ரக்ருதியை போல் செய்வது என்று பொருள்.
ஶ்ராவணீ ஆவணி மாதம் பெளர்ணமியில் செய்ய வேண்டிய கர்மா. இதை ஸர்ப்ப பலி என்றும் கூறுவர்.
ஆவணி பெளர்ணமி இரவில் சரு ஆஜ்ய ஹோமம் செய்து , சரு என்றால் கஞ்சி வடிக்காத அன்னம் என்று அர்த்தம். ஆஜ்யம்= நெய்.
பலாச புஷ்பங்களால் இரு கரங்களாலும் ஹோமம் செய்து , ஸர்ப்பங்களுக்கு புற்று அல்லது சுத்தமான இடத்தில் பச்சை அரிசி மாவினால் கோலம் போல போட்டு
ஸர்ப்ப மந்திரங்களை கூறி உபஸ்தானம் செய்வது ஸர்ப்ப பலியாம். இம்மாதிரி தினமும் ஆவணி பெளர்ணமி முதல் மார்கழி பெளர்ணமி வரை தினமும் செய்ய வேண்டும்.
ஆக்ர ஹாயணீ;- ஆவணி பெளர்ணமியில் ஆரம்பித்த ஸர்ப்ப பலியை மார்கழி மாத பெளர்ணமியில் , ஆவணி மாதம் செய்ததைபோல் ஹோமம் செய்து பூர்த்தி செய்யனும்.
ஸர்ப்பங்களை அடித்து அதனால் ஸர்ப்ப சாபம் பெற்று அதனால் சந்ததி இல்லாதவர்கள் ஸர்ப்ப சாந்தி செய்வது போல் ஸர்ப்ப பலி செய்தால் ஸர்ப்ப சாபமாக இருந்தாலது அகன்று விடும்.
அதனால் இது ஸம்ஸ்கார மான நித்ய கர்மாவாக இருந்தாலும் , காம்ய கர்மா போல் காம்யத்தையும் பூர்த்தி செய்யும்.
சைத்ரீ:- சித்திரை மாத பெளர்ணமி யன்று செய்ய வேண்டியது. ஈசான தேவதையை ஆராதிப்பதால் ஈசான பலி என்று பெயர். இதை கோவில்களில் செய்ய வேண்டும்.
ஆஶ்வயுஜி:- கார்த்திகை மாத பெளர்ணமியில் செய்ய வேண்டிய கர்மா இது. இதை ஆக்ரயண ஸ்தாலி பாகம் என்று கூறுவார்கள்.
இதில் ஶ்யாமாகம் என்னும் தான்யத்தை கொண்டு பாகம் செய்து ஹோமம் செய்ய வேண்டும்.
அக்னி ஆதானம்:- கார்ஹ பத்யம், ஆஹவனீயம், தக்ஷிணாக்னி என்ற மூன்று அக்னிகளை ஆரம்பிப்பது .
அக்னி ஹோத்ரம்:- தினமும் காலை மாலைகளில் ஒளபாசனம் மாதிரி இவைகளில் ஹோமம் செய்வது.
தர்ஶ பூர்ண மாசம்:- ப்ரதமைகளில் செய்யும் இஷ்டி. இது தர்ச பூர்ண ஸ்தாலி பாகம் போன்றது.
ஆக்ரயணம்:- ஶ்யாமை தான்யத்தை கொண்டு செய்யும் இஷ்டி.
சாதுர் மாஸ்யம்:- பல இஷ்டிகள் சேர்ந்த ஒரு கர்மா.
நிரூட பஶுபந்தம், ஸெளத்ராமணி இவ்விரண்டும் ஆண்டுக்கு ஒரு முறை செய்யும் கர்மா.
கர்ப்பா தானம் போல் ஒவ்வொரு ப்ராஹ்மணனும் அவசியம் செய்ய வேண்டிய முக்கிய கர்மா இவைகள்.
அஷ்டகா;-
திஸ்ரேஷ்டகா; அஷ்டகா; அன்வஷ்டகா.
மார்கழி ,தை, மாசி ,பங்குனி மாதங்களின் க்ருஷ்ண பக்ஷ ஸப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் பித்ருக்களுக்கு சிராத்தம் அல்லது தர்பணம் செய்ய வேன்டும்.
அஷ்டமி அன்று செய்யப்படும் அஷ்டகைய ப்ரதானமாக க்கொண்டு முதல் நாள் சப்தமிக்கு பூர்வேத்யு; என்று பெயர். மறு நாள் நவமிக்கு அநு+அஷ்டகா
==அந்வஷ்டகா என்று பெயர்.
மேற்கூறிய நான்கு மாதங்களிலும் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் வீதம் 12 தர்பணங்கள் ஷண்ணவதி தர்பணம் செய்பவர்கள் செய்ய வேண்டும்.
இது முதல் பக்ஷம்.
ஷண்ணவதி தர்பணம் செய்ய இயலாதவர்கள் தை மாதம் மட்டும் (மாக மாதம்) ஸப்தமி, அஷ்டமி, நவமி அன்று தர்பணம் செய்யலாம். அல்லது அஷ்டமி ஒரு நாளாவது பித்ருக்களுக்கு தர்பணம் செய்ய வேண்டும். பெப்ரவரி 23,24,25.
ஒவ்வொரு வருஷமும் தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்வது போல் இந்த அஷ்டகை, அந்வஷ்டகை நாட்களிலும் பித்ருக்களுக்கு ஹோமம் செய்து, சாப்பாடு போட்டு , முறையாக சிராத்தமாக செய்யலாம். இது இரண்டு விதமாக இருக்கிறது.
1, ஸப்தமி அன்று மாலை ஒளபாசனாக்னியில் அப்பம் தயார் செய்து ஹோமம் செய்ய வேன்டும். மறு நாள் அஷ்டமியன்று காலையில் எட்டு பேரை வரித்து தர்பணம் செய்து விட்டு, ஹோமம் செய்து முறையாக சிராத்தம் செய்ய வேன்டும். மறு நாள் (நவமி) அன்வஷ்டகா அன்று
ஐந்து பேரை வரித்து சிராத்தம் செய்ய வேண்டும்.
2. அல்லது ஸப்தமி அன்று மாலை மற்றும் அஷ்டமி அன்று செய்ய வேண்டிய அஷ்டகா சிராத்தம் இரண்டிற்கும் பதிலாக தத்யஞ்சலி ஹோமம்
என்னும் ஹோமம் செய்துவிட்டு மறு நாள் (நவமி) அன்வஷ்டகை அன்று ஐந்து பேரை வரித்து ஹோமம் செய்து, சாப்பாடு போட்டு சிராத்தம் செய்யலாம்.
அல்லது இந்த நாட்களில் சிராத்தம் அல்லது தர்பணம் செய்யும் போது ஏற்படும் குறைவை நிறைவு செய்ய ஒரு மந்திரத்தை நூறு முறை ஜபம் செய்யலாம்.
(ரிக் விதானம்) ஏபிர் த்யுபிர் ஜபேந் மந்திரம் சத வாரம் து தத் திநே..
அன்வஷ்டக்யாம் யதா ந்யூனம் ஸம்பூர்ணம் யாதி சர்வதா. என்பதாக
அன்வஷ்டகை யன்று சிராத்தம் அல்லது தர்பணம் செய்யும்போது ஏற்படும் குறைவை நிறைவு செய்ய விரும்புவர்கள் ,
ரிக் வேதத்திலுள்ள ஏபிர் த்யுபி: (அஷ்டகம்-1,53,4 ).என்று தொடங்கும் வேத மந்திரத்தை நூறு முறை ஜபம் செய்யலாம். இதனால் அஷ்டகை, அந்வஷ்டகையில் ஏற்பட்ட தோஷம் விலகு மென்கிறது ரிக் விதானம் என்னும் புத்தகம்.
அஷ்டகா : மாக மாசத்தில் அஷ்டகாதி சிராத்தம்.:- முதல் நாள் இரவு ஒளபாசனம் செய்து . ஒரு வகையான அடைபோல் செய்து , அஷ்டகா தேவதைக்கு ஒரு ஹோமமும் ,
ஸ்விஷ்டக்ருத்திற்கு ஒரு ஹோமமும் செய்ய வேண்டும். . அதன் மிகுதியை , மறு நாள் ப்ராம்மணர்களாக வரிக்கும் எட்டு ப்ராஹ்மணர்களுக்கும் அளிக்க வேண்டும்.
அஷ்டகா சிராத்தத்தில் விச்வேதேவர் இருவர், பித்ரு வர்க்கம் மூவர், மாத்ரு வர்க்கம் மூவர் ஆக எட்டு ப்ராஹ்மணர்களை வரித்து , பார்வண சிராத்தம் போல் சில மாறுதல்களுடன் செய்ய வேண்டும்.
அஷ்டமி இரவு ஒளபாசனம் செய்து விச்வே தேவர்களுக்காக ஒருவர் ,பித்ரு, பிதாமஹர். ப்ரபிதாமஹருக்கு ஒருவர், மாத்ரு, பிதாமஹி ப்ரபிதாமஹிக்கு ஒருவர், மாதாமஹ வர்க்கத்திற்கு ஒருவர், மஹாவிஷ்ணுவிற்கு ஒருவர்,
ஆக ஐந்து ப்ராஹ்மணர்களை வரித்து , நவமி அன்று சில மாறுதல்களுடன் பார்வண சிராத்தம் போல் செய்ய வேண்டும்.
அந்வஷ்டகைக்கு ப்ரதிநிதியாக தத்யஞ்சலி ஹோமம் ஒன்றை செய்ய வேண்டும்.. அதில் இரு கரங்களாலும் தயிரை எடுத்து , அஷ்டகா தேவதைக்கு ஒரு ஹோமமும் , ஸ்வஷ்டக்ருத்துக்கு ஒரு ஹோமமும் செய்ய வேண்டும்.
மாக மாதத்தில் பெளர்ணமிக்கு பிறகு வரும் க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி , கேட்டை நக்ஷதிரத்துடன் கூடும். அதில் அஷ்டகா சிராத்தம் செய்ய
வேண்டும். ஸுதர்சண பாஷ்யத்தில் கேட்டை நக்ஷத்திரம் கூடாமலிருந்தாலும் அந்த அஷ்டமியில் அஷ்டகா சிராத்தம் செய்ய வேண்டும் ..எனக்கூறபடுகிறது.
அஷ்டமி அன்று செய்ய வேன்டிய அஷ்டகா சிராதத்திற்கு அங்க பூதமான
அபூப ஹோமம் செய்ய வேண்டும். ஸப்தமி அன்று மாலை ஒளபாசனம் செய்து அதில் (நெல்லைக்குத்தி அரிசியாக்கி, மாவாக்கி, அதை தட்டையாக செய்து வேக வைக்க வேண்டும்.) இது தான் அபூபம் என்பது.
பிறகு பார்வண ஸ்தாலி பாகத்தில் சொன்ன மாதிரி அக்னிப்ரதிஷ்டை முதல்
ஆஜ்ய பாகம் வரை செய்துகொண்டு , அஞ்சலியால் அபூபம் எடுத்துக் கீழ் கண்ட மந்திரத்தை சொல்லி ஹோமம் செய்ய வேண்டும்.
“”யாம் ஜனா: ப்ரதிநந்தந்தி ராத்ரீம் தேநுமிவாயதீம் ஸம்வத்சரஸ்ய யா பத்னீ ஸா னோ அஸ்து ஸுமங்கலி ஸ்வாஹா.””
ஏகாஷ்டகையை ஸம்வத்சர பத்நியாக மற்ற விடத்தில் சொல்லியிருந்தாலும்
ஏகாஷ்டகையின் ஸாமீப்யம் இருப்பதால் ஸப்தமி திதியின் ராத்ரியும் சம்வத்ஸர பத்நியாக இங்கு ஸ்துதிக்கப்படுகிறது.
கேட்டை நக்ஷதிரத்துடன் மாக மாத க்ருஷ்ண பக்ஷ அஷ்டமியும் சேர்வதை ஏகாஷ்டகை என்கின்றனர்.
ஹோமம் செய்த பிறகு மிச்சமுள்ள அபூபத்தை எட்டாக பிறித்து எட்டு ப்ராஹ்மணர்களுக்கு கொடுக்க வேன்டும். ராத்ரியின் அபிமான தேவதையை ஹோமத்தால் பூஜிக்கிறோம்.
பாலில் மாவை போட்டு கிண்டிய கூழுக்கு பிஷ்டான்னம் என்று பெயர்.
இந்த பிஷ்டான்னத்தால் ஹோமம் செய்ய வேன்டும்.””உக்தயஸ்ச அஸி அதிராத்ரஸ்ச ஸாத்யஸ்கிஸ்சந்த்ரஸாசஹா. அபூபத்ருதாஹுதே நமஸ்தே அஸ்து மாம்ஸபிப்லே ஸ்வாஹா.
“
பிறகு ஆஜ்ய ஹோமம் .பின் வரும் ஏழு மந்திரம் சொல்லி.
.பூ: ப்ருதிவ்யகினமர்சாமும்மயி காமம் நியுநஜ்மிஸ்வாஹா.
,.புவோ வாயுநா அந்தரிக்ஷேண ஸாம்னாமும் மயே காமம் நியுனஜ்மி ஸ்வாஹா.
ஸ்வர்திவஆதித்யேன யஜுஷாமும் மயே காமம் நியுனஜ்மி ஸ்வாஹா.
ஜனதப்திரதர்வாடிங்கரொ பிரமும் மயி காமம் நியுநஜ்மி ஸ்வாஹா.
ரோசனாயாசிராயாக்னயே தேவஜாதவே ஸ்வாஹா.
கேதவே மனவே ப்ருஹ்மணே தேவஜாதவே ஸ்வாஹா
ஸ்வதா ஸ்வாஹா.
அக்னயே கவ்ய வாஹனாய ஸ்வதா ஸ்வாஹா.
பிறகு ஸ்விஷ்ட கிருத் என்ற கர்மம் முதல் பிண்டப்ரதானம் என்ற கருமம் முடிய உள்ள கார்யங்களை மாஸி சிராதத்த்தில் செய்த மாதிரி செய்ய வேணும்..
நவமி அன்று மட்டும் தான் ( அன்வஷ்டகையில் தான்) பிண்டதானம் செய்ய வேண்டும். என சிலர் வாதம். இது அஷ்டகையின் முக்ய கல்பம்.
இனி கெளண கல்பம் கூறப்படுகிறது. எந்த மந்திரம் சொல்லி அபூப ஹோமம் செய்கிறோமோ அதே மந்திரத்தை சொல்லி அஞ்சலியால் தயிரை ஹோமம் செய்ய வேண்டும்.இது மற்றொரு முறையாகும்.
யாம் ஜனா: ப்ரதிநந்தந்தி என்றதால் தயிரை ஹோமம் செய்ய வேண்டும். அபூபத்தை விலக்க வேண்டும். இந்த தயிர் ஹோமமானது அபூப ஹோமம் முதல் ஆஜ்ய ஹோமம் முடியவுள்ள
எல்லா கர்மங்களின் ஸ்தானத்திலும் விதிக்க படுவதால் இந்த தயிர் ஹோமத்தை தவிர்த்து மற்ற ஹோமங்களை செய்ய வேண்டுவதில்லை என்று ஸுதர்சன பாஷ்யத்தில் கூறப்பட்டிருக்கிறது.
அன்வஷ்டகையை மாசி சிராத்தம் மாதிரி செய்ய வேண்டும்.
சிராத்தங்கள்:--மாசி சிராத்தம்:--மாசி சிராத்தம் நித்ய கர்மாகளில் இதுவும் ஒன்று. க்ருஷ்ண பக்ஷத்தில் ஏதேனும் ஒரு திதியில் தொடங்கி , ஒவ்வொரு மாதமும் அதே திதியில் செய்ய வேண்டும். இது, பிதா , பிதாமஹர்., ப்ரபிதாமஹர் என்ற மூவரை உத்தேசித்து செய்ய படுகிறது.
ஆனால் பித்ருக்கள் பூஜிக்கபடும் இடத்தில் மாதா மஹாதிகளும் பூஜிக்க பட வேன்டும் என விதித்திருப்பதால் , புராணம், ஸ்மிருதியின் படி தாயின் தந்தை, பாட்டனார், அவர் தகப்பனார் ஆகியோரையும் சேர்த்து இரு
வம்சத்திற்கும் , ஹோமம், ப்ராஹ்மண போஜனம், பிண்ட ப்ரதானம் ஆகியவற்றுடன் செய்ய படுகிறது. இன்று செய்யபடும் சிராத்தங்கள் அனைத்திற்கும் இதுவே முன் மாதிரியாகும். இந்த காலத்தில் இது முடியாது.
இதை ஒற்றி வருவதே தர்ச சிராத்தமாகும். இதன் விக்ருதிகளே (96) ஷண்ணவதி சிராத்தங்கள். .ஒரு வருடத்தில் செய்ய வேன்டுவன .இவற்றில் ஒவ்வொன்றிர்க்கும் சிற்சில மாறுதல் உண்டு.
தாய் தந்தையருக்கு செய்யப்படும் ப்ரத்யாப்தீக சிராத்தம்,, கிரஹண, மற்றும் புண்ய கால தர்பணங்கள். முதலியன மாசி சிராத்தத்தை அடிபடையாக கொண்டு செய்ய படுபவை. ஆனால் இவை ஸப்த பாக யக்ஞங்களில் சேராதவை.
இவை ஜீவத்பித்ருகனுக்கு (( தந்தை உயிருடன் இருக்கும்போது)) கிடையாது. ஆனால் மாசி சிராத்தம் தந்தை உயிருடன் இருக்கும் போதும் ஹோமம் வரை செய்ய வேண்டும்.என்பது ரிஷியின் அப்பிப்ராயம். தந்தைக்கு யார் தேவதைகளோ அவர்களே இவனுக்குமாவார். .
ஒளபாசன அக்னியில் பிண்டபித்ரு யக்ஞம் செய்ய வேண்டும்.. அஷ்டகா சிராத்தத்தை ஒரு போதும் விடக்கூடாது. தை அமாவாசையை அடுத்து வரும் க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி ஏகாஷ்டகை எனப்படும்.
அந்த தேவதையை குறித்து ஹோமமும் பித்ரு, பிதாமஹர், ப்ரபிதாமஹர். மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, விஸ்வேதேவர் இருவர் ஆக எட்டு ப்ராஹ்மனர்களை வரித்து செய்வதால் அஷ்டகா என்று பெயர்.
அஷ்டகா தேவதை பித்ருக்களுக்கு நாம் அளிக்கும் ஹவிஸை அமோகமாக அளவற்றதாக ஆக்கி காமதேனு பால் சுரப்பது போல் சுரப்பதாக கூற பட்டுள்ளது. ஸம்வத்ஸர தேவதையின் பத்நியாகவும் ஏகாஷ்டகை கூறப்பட்டுள்ளது.
மனிதர்களுக்கு விழிப்பை ஏற்படுத்தி அறிவை தரும் உஷஹ் கால தேவதையும் ஏகாஷ்டகையே. இவளே யாகங்களை செய்விப்பவள் என்றெல்லாம் மிக உயர்வாக கூறப்பட்டுள்ளது.
உரல் அம்மி முதலியவையும் இந்த அஷ்டகா சிராத்தம் செய்வதில் உத்ஸாகத்துடன் ஈடுபடுவதாக வேதம் கூறுகிறது. இந்த காலத்தில் உரல் அம்மி கிடையாது.இதை செய்பவனுக்கு , ஸந்ததி, சாரீர பல விருத்தி, மற்றும் வைதீக கர்மாக்களில் சிரத்தை செய்யக்கூடிய பாக்யம் ஏற்படுகிறது. என்று கூறுகிறது.
இதை கலி யுகத்தில் ஸ்ம்ருதியில் கூறப்பட்டபடி செய்ய முடியாது.
எனவே ரிஷிகள் தத்யஞ்சலி (தயிர்) ஹோமம் எனும் அனுகல்பத்தை விதிதுள்ளனர்.
இம்முறைகளில் அவதான முறைப்படி கையில் தயிரை எடுத்துக்கொண்டு ஒளபாஸனாக்னியில் ஏகாஷ்டகையை குறித்து ஹோமம் செய்வதாகும்.
( பிறகு சிராத்த முறைப்படி ப்ராஹ்மண போஜனம்) மறுநாள் அன்வஷ்டகை.
அன்வஷ்டகையை தர்ச சிராத்தம் போன்றே வர்கத்வய பித்ருக்களை உத்தேசித்து செய்யபடுவது ஆகும். விஸ்வேதேவர், பித்ரு , மாத்ரு, மாதாமஹர், விஷ்ணு என ஐந்து ப்ராஹ்மணர்களை வரித்து சிராத்தம் செய்வது..
23-02-2022; 24-02-2022;25-02-2022 இந்த நாட்களில் அஷ்டகா சிராத்தமோ, தர்பணமோ ஓய்வு பெற்றவர்கள் செய்யலாமே.
Details of ashtaka
நமது தர்ம சாஸ்த்திரம் புத்தகத்திலும் அஷ்டகா சிராத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. புரட்டாசி மாதத்திலும், மாசி மாதத்திலும் பித்ருக்களுக்கு அன்னம் அளிக்கவேண்டும். என்று அறிவிக்கிறது. தை மாதத்திற்கு 6ம் மாதம் ஆடி மாதம்; சித்ரைக்கு 6ம் மாதம் ஐப்பசி ( துலா மாதம்.) புரட்டாசிக்கு 6ம் மாதம் மாசி மாதம் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
வருடத்தில் இந்த 96 நாட்கள் பித்ருக்களுக்கு பசி எடுக்கும் என நமது முன்னோர்கள் அறிந்து அந்த நாட்களை காட்டி கொடுத்து இருக்கிறார்கள்.
பசியுடன் இருப்பவருக்கு நாம் உடனே ஆகாரம் அளிக்க வேண்டும்.
மார்கழி. தை. மாசி பங்குனி இம்மாதங்களில் தேய் பிறை சப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் சிராத்தம் மற்றும் தர்ப்பணம் செய்ய வேன்டும் என்கிறது. வைத்தினாத தீக்ஷிதீயம் பக்கம்-321ல்.
ஆஸ்வலாயன மகரிஷி இம்மாதிரி 12 நாட்கள் சிராத்தம் செய்ய முடியாவிடினும் மாசி மாதம் ஒன்றிலாவது அவசியம் செய்ய வேண்டுமென்கிறார்..
அஷ்டமி திதிக்கு முன் தினமும் பின் தினமும் செய்யவேண்டியுள்ளதால் அஷ்டகை என பெயர் பெற்றது..
அஷ்டமிக்கு முன் தினம் பூர்வேத்யுஹு என்றும் அல்லது மூன்று நாள் தொடர்ச்சியாக வருவதால் திஸ்ரேஷ்டகா என்றும் பஞ்சாங்கங்களில் குறிப்பிட்டிருக்கும். . அஷ்டமிக்கு மறுநாள் அன்வஷ்டகா என்றும் பஞ்சாங்கங்களில் இருக்கும்.
.
வைத்தினாத தீக்ஷதீயம் சிராத்த காண்டம் புத்தகத்தில் இதற்கான மந்திரங்கள், செய்முறை உள்ளன.
இதற்கு பண வசதி இல்லாதவர்கள் தர்பணமாவது செய்யுங்கள் என்கிறார்.
இதற்கும் பண வசதி இல்லாதவர்கள் தீர்த்தம் நிறைந்த குடத்தை யாருக்காவது அஷ்டமி அன்று தாநம் செய்யவும் .சிராத்த மந்திரங்களை ஜபம் செய்யுங்கள்; பசு மாட்டிற்கும், காளை மாட்டிற்கும் வைக்கோல். புல் கொடுக்கவும்.
இதற்கும் பண வசதி இல்லாதவர்கள் புல், புதர் இருக்குமிடத்தை தீயிட்டு கொளுத்தி அஷ்டகை செய்யும் சக்தியும், வசதியும் இல்லாததால் இந்த அக்னி தாஹத்தால் நீங்கள் த்ருப்தி அடையுங்கள் என கதறவும்.
ந த்வேவ அ நஷ்டகா ஸ்யாத் என்பதாக நாம் பித்ருக்களுக்கு அஷ்டகா தினங்களில் எதுவும் செய்யாமல் இருக்க கூடாது என்கிறது சாஸ்திரம்.
அஷ்டகை சிராத்தம் செய்பவர்கள் குடும்ப வம்சத்தில் குழந்தைகள் அழகு உள்ளவர்களாகவும், அறிவு உள்ளவர்களாகவும். எப்போதும் மிக பெரிய பணக்காரர்களாகவும் இருப்பார்கள் அனைத்து நன்மைகளும் கிட்டும் என்கிறது நமது தர்ம சாஸ்திரம்.
ஒவ்வொருவரும் அவரவரது ஜீவிய காலத்தில் ஒரே ஒரு முறையாவது இந்த அஷ்டகா சிராத்தம் செய்ய வேண்டும்.
வருடத்திற்கு 96 தர்பணம் செய்பவர்கள் இந்த 12 தர்பணமும் செய்து விடுகிறார்கள்.
96 தர்பணம் செய்ய இயலாதவர்கள் இந்த 12 தர்பணங்கள் செய்யலாம். இதற்கும் முடியாதவர்கள் தை மாதம் சப்தமி, அஷ்டமி, நவமி மூன்று நாள் தர்பணம் செய்யலாம்.
ஒவ்வொரு வருஷமும் நம் தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்வது போல் இந்த சப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் பித்ருக்களுக்கு சாப்பாடு போட்டு ஹோமம் செய்து சிராத்தமாகவும் செய்யலாம்.
---இது இரண்டு விதமாக இருப்பதால் ஏதோ ஒரு முறையில் செய்யலாம்.
ஸப்தமியன்று மாலை 7 மணி சுமாருக்கு ஒளபாஸனம் செய்யவும். இதே அக்னியில் அபூபம் தயாரிக்க வேன்டும். மாலை 5 மணிக்கு 2 கைப்பிடி அளவு பச்சரிசி எடுத்து தண்ணீர் விட்டு களைந்து நிழலில் ஒரு துணி மேல் உலர விடவும்.
நன்றாக உலர்ந்த பிறகு மிக்சியில் மாவாக அறைக்கவும். மாவு சல்லடையில் சலிக்கவும். இந்த மாவில் சிறிது தயிர் விட்டு கெட்டியாக பிசைந்து சப்பாத்தி மாதிரி இட்டு
கொள்ளவும். மாலை 7 மணிக்கு ஒளபசனம் செய்த உடன் ஒளபாசன அக்னியில் தோசை கல்லை போட்டு இந்த அரிசி மாவு சப்பாத்தியை தோசை கல்லில் போட்டு இரு பக்கமும் வேக விடவும். இதுதான் அபூபம்.
இதே ஒளபாசனாக்னியில் மந்திரம் சொல்லி இந்த அபூப ஹோமம். . மீதமுள்ள அபூபத்தை மறு நாள் வரப்போகும் சாஸ்திரிகளை இப்போதே வரசொல்லவும். அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா- 3 பேர். அம்மா, பாட்டி,
கொள்ளு பாட்டி -3 பேர். விசுவேதேவர் -2 பேர். மொத்தம் -8 பேர். இந்த 8 சாஸ்திரிகளை சப்தமியன்று மாலை 6 மணிக்கே வரசொல்லி.
அவர்களை ஆவாஹனம் செய்து இந்த அபூப துண்டுகளையும், கோதுமை மாவு சப்பாத்தி இந்த எட்டு பேருக்கும் தயார் செய்து சட்னியுடன் இலையில் பரிமாறவும்..
அவர்கள் சாப்பிட்ட பிறகு மறு நாள் காலை 10 மணிக்கு அவர்களை வரசொல்லவும். தக்ஷிணை தாம்பூலம், பழம் கொடுத்து அனுப்பவும்.
கர்த்தா, கர்த்தாவின் மனைவிக்கும் இதே தான் ஆகாரம். .இன்று இரவு.
மறு நாள்அஷ்டமி அன்று காலை 10 மணிக்கு இந்த எட்டு பேர் வந்தவுடன் எண்ணைய், சீயக்காய் கொடுத்து வெந்நீர் போட்டு கொடுத்து ஸ்நானம் செய்து விட்டு வந்தவுடன். முதல் நாள் இரவு ஆவாஹனம் செய்த வாரே
மறுபடியும் ஆவாஹனம் செய்து ஒன்பது ஐந்து வேட்டி துண்டு ஒவ்வொருவருக்கும் கொடுத்து சாப்பாடு போட்டு சிராத்தம் முடிந்த பிறகு தக்ஷிணை, தாம்பூலம் கொடுத்து அனுப்ப வேண்டும்.
இன்று சமாராதனை சமையல், ஒருவருக்கு ஒரு வாழை இலை வீதம் போதும்..
8 பேர் வைத்து சிராத்தம் செய்ய பண வசதி
இல்லாதவர்கள் அப்பா வர்க்கம் ஒருவர், அம்மா வர்க்கம் ஒருவர்; விசுவேதேவர் ஒருவர் என மூவர் வைத்தும் செய்யலாம். சாஸ்திர சம்மதம் இருக்கிறது.
.மறு நாள் நவமி அன்று வேறு ஐந்து சாஸ்திரிகள் வரச்சொல்லி எண்ணய் ஸ்நானம் செய்து புது ஒன்பது ஐந்து வேட்டி வாங்கி கொடுத்து சிராத்தம் முடிந்த பிறகு தக்ஷிணை தாம்பூலம் கொடுத்து அனுப்ப வேண்டும்.
நவமி அன்று அப்பா வர்க்கம் ஒருவர், அம்மா வர்க்கம் ஒருவர், அம்மாவின் பெற்றோர் வர்க்கம் ஒருவர், விசுவேதேவர் ஒருவர், மஹா விஷ்ணு ஒருவர் என ஐந்து பேர். .
இதற்கு மஹா விஷ்ணுவிற்கும் ஒருவர் அவசியம் வர வேண்டும். ஹோமம் அப்பா வர்க்கம் -6 ஹோமம் வழக்கம்போல். பிறகு தாயின் பெற்றோர் வர்கத்திற்கும் 6 ஹோமம் உண்டு. விகிரான்னம் உண்டு.
பிண்ட ப்ரதானமும் தாய் தந்தையருக்கு 6; அம்மாவின் தாய் தந்தைக்கும் 6 மொத்தம் . காருண்ய பித்ருக்களுக்கு -6 என 18 பிண்டம் .
இன்று சிராத்த சமையல் அவரவர் வீட்டு வழக்கப்படி, இரு வாழை இலைகள்..
மஹா விஷ்ணு விற்கு இலை மாத்திரம் போட்டு பரிமாறும் வழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த அஷ்டகா சிராத்தத்தில் மஹாவிஷ்ணுவிற்கு ஒரு சாஸ்திரிகள் அவசியம் வர வேண்டும்.
மற்றொரு விதம்;- இரு கைகளாலும் தயிர் ஹோமம் செய்வது. ததி ஹோமம்.
ஸப்தமி அன்று எதுவுமில்லை. அஷ்டமி அன்று காலையில் தயிர் ஹோமம் ஒளபாசானாக்னியில் செய்து விட்டு நவமி அன்று ஐந்து பேரை வரித்து ஹோமம், சாப்பாடு போட்டும் நிறைவு செய்யலாம்.
அஷ்டகா தர்ப்பணம் முதலில் இரு நாட்களும் செய்து விட்டு பிறகு தான் சிராத்தம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.. ஞாபகமாக இதை வைத்து கொள்ளவும்..
இந்த மூன்று நாட்களிலும் ஒளபாசனம் தினமும் இரு வேளையும் செய்ய வேண்டும்.. மூன்று நாட்களிலும் ஒளபாசன அக்னி அணையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
அல்லது தினமும் விச்சின்னாகினி ஹோத்ரம் செய்து பிறகு ஒளபாசனம் செய்து அந்த அக்னியில் சிராத்த ஹோமம் செய்ய வேண்டும்.
ரிக் விதான மந்திரம் ஒன்று உள்ளது. இதை நூறு முறை சொல்ல வேண்டும்.
நான்கே வரிகள் தான். இந்த தர்பணம், ஹோமம் செய்யும்போது ஏற்படும் குறைகளை சரி செய்யும்.. ருக் வேத மந்திரம் ஆதலால் சரியாக உச்சரிக்க வேண்டும்.
.அஷ்டகம் 1, 53, 4 ஏ பிர் த்யுபிர் என்று ஆரம்பிக்கும்.. ருக் வேத சாஸ்திரிகளிடம் இதை சரியாக உச்சரிக்க கற்றுக்கொண்டு சொல்லலாம்.
இந்த மூன்று நாட்களாவது தினமும் மூன்று வேளையும் ஸந்தியா வந்தனம் காயத்ரி ஜபம் செய்ய வேண்டும்.
அஷ்டகா, அன்வஷ்டகா, திஸ்ரேஷ்டகா
முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் செய்யக்கூடியது ஆன தர்ப்பணங்களின் வரிசைகளை பார்த்துக்கொண்டு என்ற வகையிலே மேலும் தொடர்கிறார்.
அதிலே நாம் அடுத்ததாக பார்க்கக் கூடியதான மிக முக்கியமான புண்ணியகாலம் #அஷ்டகா_ஸ்ராத்தம். #திஸ்ரோஷ்டகா_என்று_பஞ்சாங்கத்தில் #போட்டிருப்பார்கள்.
*முதலில் இந்த அஷ்டகா புண்ணிய காலத்தை எப்பொழுது செய்ய வேண்டும், என்று பார்த்த பிறகு இதை நாம் எதற்காக செய்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.*
*இதற்கான ஒரு சரித்திரத்தையே தர்மசாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது. மார்ககஷிச மாசம் புஷ்ய மாசம் மாக மாசம் பால் குண மாசம் இந்த அஷ்டகா சிராத்தம் கூட சாந்திரமான படிதான் தர்மசாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது.*
*மார்கழி மாதம் மாசி பங்குனி தை இந்த நான்கு மாதங்களிலும் கிருஷ்ணபட்ச த்தில் வரக்கூடிய, சப்தமி அட்டமி நவமி, இந்த மூன்று நாட்களில் நாம் இந்த புண்ணிய காலத்தை அனுஷ்டிக்க வேண்டும்.*
*இதனுடைய முக்கியத்துவத்தை பார்த்துதான் மகரிஷிகள் நமக்கு சப்த பாக யஞ்கியங்களில் இந்த அஷ்டகாவை தனியாக வைத்திருக்கிறார்கள்.*
*இந்த ஷண்ணவதி 96 தர்ப்பணங்களை நாம் பண்ணுகிறோம் குறைந்தபட்சம் ஒரு வருடத்தில். இதில் எந்த ஒரு புண்ணிய காலமும் பாக அல்லது ஹவிர் யஞ்கியங்களில் வரவில்லை.*
நாற்பது சம்ஸ்காரங்களிலும் வரவில்லை. #ஆனால்_இந்த_அஷ்டகா #ஸ்ராத்தம்_40_சம்ஸ்காரங்களில் #சொல்லப்பட்டிருக்கிறது.
*சப்த பாக யஞ்கியங்களில் ஒன்று தான் இந்த அஷ்டகா ஸ்ராத்தம். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதினால் தான் நாற்பது ஸம்ஸ்காரங்களில் இதை வைத்து கொடுத்திருக்கிறார்கள்*
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் இதை விடவே கூடாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எப்படி சீ மந்தத்தையும் குழந்தைக்கு ஜாத கர்மாவையும் விடக் கூடாதோ, நாம கர்மாவையும் செய்யாமல் இருக்கக் கூடாதோ,
அதேபோல்தான் இந்த அஷ்டகா புண்ணிய காலத்தையும் செய்யாமல் இருக்கக் கூடாது என்று மகரிஷிகள் நமக்கு காண்பித்துள்ளனர்.
இதற்கு திஸ்ரோஷ்டகா என்று மூன்று புண்ணிய காலங்கள் வரும். மார்கழி மாதத்தில் வரக்கூடிய கிருஷ்ண பக்ஷத்தில் சப்தமி அஷ்டமி நவமி.
அதேபோல் தை/மாசி/பங்குனி மாதத்திலும் வரக்கூடிய கிருஷ்ண பக்ஷத்தில் சப்தமி அஷ்டமி நவமி இப்படி 3 நாட்களாக நான்கு மாதங்களும் வரும்.
இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சௌனகர் என்கின்ற மகரிஷி சொல்கின்ற பொழுது, ஹேமந்த ருது சிசிர ருது மார்கழி தை மாசி பங்குனி இந்த நான்கு மாதங்களும், இந்த ருதுக்களில் வரும். இதை செய்யவேண்டுமென்று மகரிஷி நமக்கு காண்பித்திருக்கிறார்
ஸ்ராத்தம் பார்வனமாக செய்ய வேண்டும். பொதுவாக நாம் தர்ப்பணம் செய்யும் போது பிதுர் பிதாமஹ பிரபிதாமஹ மாத்ரு பிதாமஹி
பிரபிதாமஹிகள் மாதாமஹ மாது பிதாமஹ மாது பிரபிதாமஹ, மாதாமஹி மாது பிதாமஹி மாது பிரபிதாமஹி இதுதான் வர்க்கத்துவயம் என்று சொல்கிறோம்.
இந்த வர்க்கத்துவயம் எப்படி ஆராதிக்கிறோம் என்றால், ஒவ்வொரு ஸ்ராத்தங்களிலும் ஒவ்வொரு விதமாக அனுஷ்டானம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.
தர்ப்பணம் ஆக நாம் செய்யும் பொழுது அதில் எந்த மாற்றமும் தெரியாது ஒரே மாதிரியாக செய்து விடுவோம். ஆனால் இதை சிராத்தம் ஆக செய்யும்பொழுது, அதில் நிறைய விசேஷங்கள் வருகிறது.
இந்த அஷ்டகா சிராத்தத்தில் எப்படி என்றால், தாயார் வர்க்கத்திற்கு தனியாக வரணம் செய்ய வேண்டும்.
பொதுவாக இந்த ஷண்ணவதி அனைத்து ஸ்ராத்தங்களிலும் தாயாரும் தகப்பனாரும் சேர்ந்துதான் ஒரு வர்க்கம்.
அதேபோல் மாதாமஹர் மாதா மஹி ஒரு வர்க்கம்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட சில இடங்களில் தாயாருக்கு தனியாக ஒரு வர்க்கம் சொல்லப்பட்டிருக்கிறது.
அதாவது வருடாவருடம் நாம் தாயாரை உத்தேசித்து செய்யக்கூடிய சிராத்தத்தில்,
நாந்தி சிராத்தத்திலும் கயையில் செய்யக்கூடிய ஸ்ராத்தத்திலும், #தாயார்_வர்க்கத்திற்கு #தனியாக_வரணம்_உண்டு.
அதேபோல்தான் இந்த #அஷ்டகா #சிரார்த்தத்திலும்_தாயார்_வர்க்கத்திற்கு தனியாக ஒரு வரணம் சொல்லப்பட்டிருக்கிறது.
ஏனென்றால் அங்குதான் விசேஷங்கள் நிறைய சொல்லப்பட்டிருக்கிறது.
*அந்த சரித்திரத்தை பார்க்கும்போது அந்த விஷயங்களை நாம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே நாம் தகப்பனாரையும் தாயாரையும் ஒரு வர்க்கமாக செய்தாலும்,
எப்படி நாந்தி சிராத்தத்தில் தாயாருக்கு தனியாக ஒரு வர்க்கம் செய்கின்றோமோ, அதே போல் தான் இந்த அஷ்டகா சிராத்தத்திலும் தாயாருக்கு தனியாக செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.*
*அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இந்த அஷ்டகா சிராத்தத்தில் 4 மாதத்தில் மூன்று மூன்றாக 12 தர்ப்பணங்கள் வருகின்றன இந்த அஷ்டகா புண்ணியகாலம்.*
*இதை அன்ன சிராத்தம் ஆக காண்பித்திருக்கிறார்கள்*
*மேலும் தர்ப்பணம் ஆக செய்யலாம் என்றும் காண்பித்து இருக்கிறார்கள்.
குறைந்தபட்சம் தர்ப்பணமாகவாது செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.*
*இதை ஏன் அன்ன ரூபமாக செய்யக்கூடாது என்றால் செய்யலாம் ஆனால் நிறைய நியமங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. மூன்று நாட்கள் இதை அனுஷ்டிக்க வேண்டிவரும்.
நியமங்கள் நிறைய சொல்லப்பட்டிருக்கிறது முடிந்தால் செய்யலாம். தர்ப்பணமாக செய்வதற்கு தர்ம சாஸ்திரத்தில் விசேஷங்கள் காண்பித்திருக்கிறார்கள்*
*இந்த அஷ்டகா தர்ப்பணத்தை செய்யாவிடில் தோஷங்களும் காண்பிக்கிறார்கள். இதை யார் தெரிந்து கொள்ள வில்லையோ அல்லது தெரிந்து கொண்டும் செய்யவில்லையோ, அவர்கள் தரித்திரம் ஆக போய்விடுகிறார்கள்.
அதாவது பணம் இல்லாமல் இருப்பவர்கள் தரித்திரர்கள் ஆகவும், அதேசமயம் பணம் இருந்தும் அனுபவிக்க முடியாதவர்களும்
தரித்திரர்கள் என்ற ஒரு நிலையானது நமக்கு ஏற்படுகின்றது என்று ஒரு முக்கியத்துவம் சொல்லப்பட்டு இருக்கிறது இந்த அஷ்டகா புண்ணிய காலத்திற்கு.*
*மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் நம் பெற்றோர்களை உத்தேசித்து செய்யக்கூடிய தான ஷண்ணவதி தர்ப்பணம் விவரங்களை மேலும் தொடர்கிறார்.
அதில் நாம் இப்பொழுது பார்த்துக் கொண்டு வரக்கூடிய தான அஷ்டகா புண்ணியகாலம். மிகவும் முக்கியமானது ஒன்று
நாற்பது சம்ஸ்காரங்களில் இதுவும் ஒன்றாக நமது மகரிஷிகள் காண்பிக்கின்றனர். சப்த பாக யஞ்கியங்களில் ஒன்று.
பாக யக்ஞங்கள் ஏழு:- அஷ்டகா; ஸ்தாலி பாகம்; பார்வணம்; ஆக்ரஹாயணி;ஶ்ராவணீ; சைத்ரீ;ஆஶ்வயூஜீ.
ஹௌபாசனம் செய்கின்றவர்கள், அனைவரும் செய்ய வேண்டியது இந்த அஷ்டகா புண்ணியகாலம்.
இது நித்தியமாக சொல்லப்பட்டு இருக்கிறது அதாவது கட்டாயம் செய்ய வேண்டும். (பிரத்தியவாயம்) அதாவது செய்யாமல் விட்டால் வரக்கூடிய தான பாவத்திற்கு இந்தப் பெயர்.
ஆனால் இந்த அஷ்டகா புண்ணிய காலத்திற்கு செய்யாமல் விட்டால் தோஷங்களும் சொல்லப்பட்டிருக்கிறது.
#நரகம்தான்_கிடைக்கும்_இந்த_அஷ்டகா #புண்ணிய_காலத்தை_செய்யாவிடில் #என்று_தர்ம_சாஸ்திரம்_காண்பிக்கிறது.
இப்படி நிறைய எச்சரிக்கைகள் செய்து அதை கட்டாயம் செய்ய வேண்டும் என்று காண்பிக்கின்றது.
ஏன் இந்த அளவுக்கு முக்கியத்துவம் என்றால் புராணங்கள் இதனுடைய பெருமைகளை நிறைய காண்பிக்கின்றது.
*முக்கியமாக பிரம்ம வைவர்த்த/வாயு புராணங்களும் இதனுடைய பெருமையை காண்பிக்கின்றது.
#ஸ்திரீகளுக்கு_மிகவும்_முக்கியமான #சிராத்தம்_இந்த_அஷ்டகா_ஸ்ராத்தம்.
பொதுவாக தர்ப்பணங்களில் தகப்பனார் வர்க்கம் செய்யும் பொழுதே தாயார் வர்க்கமும் சேர்ந்து வந்துவிடும்.
அதாவது எல்லா இடங்களிலும் பதியோடு சேர்ந்து வந்துவிடும். தகப்பனாருடன் தாயாருக்கும் அதில் பாகம் வந்துவிடும்.
முக்கியமாக சில இடங்களில் தாயாருக்கு தனி வரணம் உண்டு. விருத்தி அதாவது நாந்தி சிராத்தம். இதில் தாயார் வர்க்கத்திற்கு தனியாக பூஜை உண்டு.
வருடாவருடம் தாயாருக்கு செய்யக்கூடிய தான ஸ்ராத்தம். கயாவில் செய்யக்கூடியது ஆன ஸ்ராத்தம். (மாத்துரு ஷோடசி), மற்றும் இந்த அஷ்டகா ஸ்ராத்தம்.
இவைகளில் எல்லாம் தாயார் வர்க்கத்திற்கு தனியாக பூஜை சொல்லப்பட்டிருக்கிறது. ஏன் அந்த அளவுக்கு முக்கியத்துவம் என்று இந்தப் புராணங்கள் சொல்லும் பொழுது, அதாவது நாம்
வழக்கமாக தர்ப்பணம் செய்யும் பொழுது, ஸ்திரீகள் யார் யாரெல்லாம் உத்தேசித்து நாம் செய்கின்றோமோ, அவர்கள் அத்தனை பேரும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் இந்த அஷ்டகா சிராத்தத்தில்.
#மேலும்_ஸ்திரீகளுக்கு_பொதுவாகவே #நிறைய_எதிர்பார்ப்புகள்_இருக்கும்_அது #நிறைவேறவில்லை_என்றால்_அதற்காக #ஒன்றும்_வருத்தப்பட்டு_கொள்ள #மாட்டார்கள்_ஆனால்_அவர்களால்
#எதிர்பார்த்ததை_நாம்_நிறைவேற்ற #முடியவில்லை_என்பது_ஒரு #தாபம்தான்.
*அந்த மாதிரியான தாபங்களை இந்த அஷ்டகா சிராத்தம் மூலம் நிறைவேற்றப்படுகிறது என்பதை ஒரு சின்ன சரித்திரம் மூலம் பிரம்ம வைவர்த்த/வாயு புராணமும் காண்பிக்கிறது.*
#அதாவது_பித்ருக்கள்_மூன்று_விதமான பிரிவுகளாக இருக்கின்றனர். #சோமப் #பிதுர்மான்_பிதரோ_பரிகிஷதஹா, #அக்கினி_ஸ்வாதாஹா என்று மூன்று பிரிவுகள்.
இங்கு பிரிவு என்பது இவர்களுக்கு உள்ளேயே பிரிவு என்று நினைக்கக்கூடாது. ஸ்தானம் என்று பெயர். இதை தனித்தனியாகப் பிரித்துக் காண்பித்து இருக்கின்றனர்.
#அதிலே_இந்த_அக்னி_ஸ்வதாஹா #என்கின்ற_பிதுருக்கள்_யாகம் #செய்தவர்கள்_அக்னிஹோத்திரம் #செய்து_இந்த_பூமியிலே_யாகம_செய்த #ஸ்தானத்தை_அடைந்தவர்கள்.
ஒரு சமயம், இந்த அக்னி ஸ்வதாஹா என்கின்ற பிதுருக்கள் இடத்திலே ஒரு கன்னிகா இருந்தாள். ஒரு குழந்தை பெண். அவளுக்கு பெயர் அச்சோதா என்று பெயர்.
ஒருசமயம் அவள் வெளியிலே சஞ்சாரம் செய்து கொண்டு வரும்பொழுது, அமாவசு என்ற ஒரு பிதுர் வர்க்கத்தை சேர்ந்த ஒரு யுவா அவனைப் பார்த்து இவள் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.
*கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு அவனிடத்திலே கேட்கிறாள், அமாவசு என்கின்ற அவன், அவளைப் பற்றிய எந்த விவரமும் கேட்காமல் அவள் கேட்ட
உடனேயே திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னவுடன் இருவரும் தொப்பென்று இந்த பூலோகத்தில் வந்து விழுந்து விட்டனர்*
ஏனென்றால் அவர்கள் இருவரும் ஞாதிகள் (பந்துக்கள்) பங்காளிகள்.
#ஒரே_கோத்திரத்தில்_ஒருவருக்கொருவர்_திருமணம்_செய்து_கொள்ளக்கூடாது. இவர்களுக்குத் தெரியாமல் அப்படி கேட்டதினால்,
அவர்களுடைய அந்த பிதுர் பாவமானது போய்விட்டது, உடனேயே இங்கே பூமியில் வந்து விழுந்து விட்டார்கள்.
*எப்படி விழுந்தாள் என்றால் அந்த கன்னிகா அச்சோதா என்கின்ற ஒரு நதியாக ஆவிர்பவித்தாள். இந்த அமாவசு என்கின்ற அவர் ஒரு கல்லாக போய்விட்டார் அந்த நதிக்கரையில்.
இப்படி இந்த இரண்டு பேரும் பூமியிலே வந்து விழுந்து துக்கப்பட்டார்கள். அவர்களுக்கு நாம் இருவரும் ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்து போய்விட்டது.*
*மிகவும் துக்கப்பட்டு அழுதாள். இதைப் பற்றி தெரிந்த உடன் அக்கினி ஸ்வாதாஹா என்கின்ற பித்ருக்கள், எல்லோரையும் அழைத்துக் கொண்டு இங்கு வந்தார்கள். இரண்டு பேரையும் பார்த்து
வருத்தப்பட்டார்கள் பிதுருக்கள்.*
*அவர்களுக்கு இந்த துக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு ஒரு வழியை சொன்னார்கள். என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஷண்ணவதி தர்ப்பணங்கள் வரிசையை பார்த்துக்கொண்டு என்ற வகையில் அஷ்டகா சிராத்தம் பெருமைகளை மேலும் தொடர்கிறார்.*
*இந்த அஷ்டகா ஸ்ராத்தம் பெருமைகளை முக்கியமாக ஸ்திரீகளை உத்தேசித்து செய்யக்கூடிய தர்ப்பணம்.*
*இதற்கான ஒரு சரித்திரத்தை பிரம்ம வர்த்த புராணமும் வாயு புராணமும் காண்பிக்கின்றன. அந்த சரித்திரத்தில் அச்சோதா என்கின்ற கன்னிகை, ஒரே கோத்திரத்தில் உள்ள ஒரு பையனை திருமணம் செய்து கொள்ள
ஆசைப்பட்ட தோஷத்தினால், இந்த பூமியிலே நதியாக ஆவிர் பவித்து ஓடினாள். அந்த நதிக் கரையினிலே அமாவசு என்கின்ற பிதுர் வர்க்கத்தை சேர்ந்த ஒரு யுவா கல்லாக விழுந்தான்.*
*அவர்கள் இருவரும் துக்கப்பட்டனர். அந்த நதி எப்படி ஓடுகின்றது என்றால் பூமியில் இறங்காமல் ஓடுகிறது. பூமியிலே தண்ணீர் இறங்க வேண்டும் அப்போதுதான் அது
சாரவத்தாக இருக்கும். ஆனால் இந்த நதி கருங்கல்லிலேயே ஓடிக்கொண்டிருக்கிறது அந்தக் கருங்கல் யார் என்றால் இந்த அமாவசு என்கின்ற யுவா.*
*ஆகையினாலே அந்த நதியானது யாருக்கும் பயன்படாமல் பூமியில் ஓடிக்கொண்டிருந்தது. தன்னை நினைத்துக் கொண்டு மிகவும் வெட்கப்பட்டாள் அந்த கன்னிகை.
இப்படி ஒரு தப்பை நாம் செய்துவிட்டோமே நம்முடைய ஞாதி களிலேயே ஒருவனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நினைத்தது எவ்வளவு பெரிய தவறு.*
*ஒரே கோத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு ஞாதிகள் என்று பெயர். இப்படி ஒரு தப்பை நான் செய்து விட்டேனே என்று வருத்தப்பட்டு அழுதாள்.
அவள் தன்னுடைய தகப்பனார் வர்க்கத்தில் உள்ள பிதுருக்களை நினைத்து பிரார்த்தனை செய்தாள்/அழுதாள்.*
*நான் ஒரு வயதின் கோளாறு காரணமாக இந்த தப்பை செய்துவிட்டேன், என்னை நீங்கள் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று அழுதாள்.
ஒரு துஷ்டன் இடத்திலே போய் ஒரு ஸ்திரீ மாட்டிக்கொண்டால் எவ்வளவு கஷ்டப்பட்டு (சுதந்திரமாக நம் வீட்டிற்கு போய் வாழ வேண்டும் என்று) அழுவாளோ
அதேபோல் பித்ருக்களை நினைத்து தபஸ் பூராவும் வீணாக போய் விட்டதே என்று அழுதாள்.*
*அப்படி இருக்கும் பொழுது, அங்கே வந்து சேர்ந்தனர் பித்ருக்கள் அனைவரும். அவள் மிகவும் வருத்தப்பட்டு இப்படி நீ செய்யலாமா நாங்களெல்லாம் இருக்கும் போது
எங்களிடம் நீ கேட்க வேண்டாமா, என்று அவளிடம் சமாதானமாக தன்மையாக சொல்லி, வாஞ்சையோடு கூட ஒரு யோசனை சொன்னார்கள்.*
நீ மனதினால், ஒரே கோத்திரத்தில் உள்ளவனை கல்யாணம் செய்துகொண்டு வாழவேண்டும் என்று நினைத்ததால், அந்த பாவத்தை நீ அனுபவித்து தான் தீர வேண்டும்.
அதுவரையிலும் இந்த பூமியிலிருந்து நீ வர முடியாது.
இந்த பூமியில் இருந்து தான் அந்த பாவத்தை நீ அனுபவித்து ஆகவேண்டும். அதற்குப்பிறகு எங்களால் உனக்கு நல்லது செய்ய முடியும் என்று சொல்லி,
அவர்கள் சொல்லும் பொழுது நீ இந்த பாவத்தை சீக்கிரமாக அனுபவித்து முடித்து, இந்த இருபத்தி எட்டாவது மன் வந்திரமான வைவஸ்த மனு ஆரம்பிப்பதற்கு முன்னால்,
ஒரு நல்ல குலத்திலே நீ ஆவிர்பவிப்பாய். ஒரு உத்தமமான புத்திரனை நீ அடைவாய். நல்ல இடத்திலே உனக்கு திருமணமாகி, நல்ல புத்திரனே நீ அடைவாய் அவனை எல்லோரும்
பாராட்டும் விதமாக, ஸ்திரீகளுக்கு ஜென்மம் எடுத்ததற்கான பயன் எப்பொழுது, ஒரு புத்திரனை அவள் பெற்றெடுத்த உடன் ஜென்மம் பயனுள்ளதாக அமைகிறது.
#புத்திரன்_என்று_ஒருவன்_பிறக்க #வேண்டும்_ஸ்திரீகளுக்கு_அதன்பிறகு #அவர்களுக்கு_உத்தமமான_லோகம் #கிடைக்கும்_காத்துக்கொண்டிருக்கிறது.
இதைத்தான் நாம் இராமாயணத்தில் பார்த்தோமேயானால் இராமன் பிறந்தவுடன் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள் என்று சொல்கின்ற இடத்திலே,
தசரதர் மற்றும் அந்த ஊர் மக்கள் மிகவும் பேரானந்த பட்டார்கள் என்று சொல்வதற்கு முன்னால்,
கௌசல்யை மிகவும் சந்தோஷப்பட்டாள் பிரகாசமாக இருந்தாள் என்று வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடுகிறார் முதலில்.*
*ஏனென்றால் புத்திரன் என்று ஒருவன் பிறந்த விட்டவுடன் நம்முடைய ஜென்மம் பயனுள்ளதாக ஆகிவிட்டது என்று, இனி நாம் ஜெபமும் தபசு பூஜைகள் ஹோமங்கள் செய்து அடுத்த ஜென்மம் நன்றாக கிடைக்க வேண்டுமே,
இந்தப் பிறவியில் எல்லா சுகங்களையும் அடைய வேண்டுமே என்று, அதற்கான முயற்சிகளை நாம் செய்ய வேண்டியது இல்லை, புத்திரன் என்ற பிறந்து ஆகிவிட்டது,
இனி நமக்கு சத்கதி தான் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு, கௌசல்யா மிகவும் சந்தோஷமாக இருந்தாள் என்று வால்மீகி தனியாகவே இராமாயணத்தில் காண்பிக்கின்றார்.*
*காரணம் ஸ்திரீகளுக்கு புத்திரன் என்ற பிறந்தவுடன் பிறவிப்பயன் ஆனது கிடைத்து விடுகின்றது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த பித்ருக்களும் இந்த கன்னிகைக்கு அதையே சொல்கின்றனர்.*
#உனக்கு_நல்ல_இடத்தில்_திருமணம் #ஆகி_ஒரு_நல்ல_புத்திரன்_உனக்கு #கிடைப்பான்_அவன்_பிறந்த #மாத்திரத்திலேயே_உனக்கு_நல்லr_கதி #கிடைத்து_ஒரு_ஸ்தானத்தை_அடைவாய் #என்று_பிதுருக்கள்_அனுகிரகம் #செய்கின்றனர்.
*அந்த உத்தமமான புத்திரனும் அனைவராலும் பாராட்டப் பெறுவார், அவன் லோகத்திற்கு பெரிய உபகாரங்களை செய்யக் கூடியவனாக இருப்பான், அனைவரும் தினமும் நினைத்துப் பார்க்கக்கூடிய புத்திரனாக அவன் இருப்பான்.*
*அப்படி ஒரு புத்திரனை நீ அடைந்த மாத்திரத்திலேயே இந்த பாவமானது சுத்தமாக நீங்கிப் போய்விடும்.
திரும்பவும் இது போல் கெட்ட எண்ணங்கள் உன்னுடைய மனதிலே உருவாகாது, இப்படியாக பிதுருக்கள் அந்த கன்னி கைக்கு அனுகிரகம் செய்கின்றனர்.*
*உன்னையும் உன்னை மாதிரி பாலிய வயதில் நினைத்துப் பார்க்கக் கூடாததை நினைத்து பார்த்ததினால் வந்த பாவமும்,
பாவத்தினால் ஏற்பட்ட தோஷங்களினுடைய ஸ்திரீகளும் கல்யாணம் செய்துகொண்டு எந்த சுகத்தையும் அடைய முடியாமல் காலம் ஆகிவிட்ட ஸ்திரீகளுக்கும்,
கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு கல்யாணம் செய்யாமலேயே காலமான ஸ்திரீகளும்,
கர்ப்பத்தில் இருக்கின்ற போதே காலமான ஸ்திரீகளுக்கும் இவர்கள் அத்தனை பேருக்கும் உத்தேசித்து அஷ்டகா என்கின்ற ஒரு சிராத்தத்தை அனைவரும் செய்வார்கள்,
அதன்மூலம் இதுபோல் உள்ள ஸ்திரீகள் அனைவருக்கும் பாகங்கள் கிடைக்கும் அத்தனை ஸ்திரீகளின் உடைய சாபங்களும் பாவங்களும் நிவர்த்தியாகும்,
அந்த அஷ்டகா சிராத்தத்தை செய்கின்றவர்களுக்கு தீர்க்கமான ஆயுள், ஆரோக்கியத்தை பூரணமாக அடைவார்கள்
என்று பிதுர்க்கள் அனுக்கிரகம் செய்து, இந்த அஷ்டகா சிராத்தம் எப்போது நடக்கும் என்றால் உத்தராயணம் பிறந்து இதை அனைவரும்
செய்வார்கள் அதன்மூலம் ஸ்திரீகள் அனைவருக்கும் பூரணமான திருப்தி கிடைக்கும் என்று சொல்லி அனுகிரகம் செய்தார்கள்.
*மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்*
முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் நம் முன்னோர்களை உத்தேசித்து செய்யக்கூடிய தான தர்மங்களின் வரிசைகளை மேலும் விளக்குகிறார்.
*அதில் அஷ்டகா புண்ணிய காலத்தின் பெருமைகளை ஒரு சரித்திரத்திலிருந்து நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.*
*அப்படி பித்ருக்களின் உடைய அனுக்கிரகத்தினால் நதியாக ஓடக்கூடிய அச்சோதா என்கின்ற கன்னிகை,
அந்தப் பாவத்தை அனுபவித்து முடித்த பிறகு, அந்த கன்னிகை தான் சத்திய வதியாக ஆவிர்பவிக்கிறாள் பூலோகத்தில் ஒரு மீனவக் குடும்பத்தில்.
அந்த சத்தியவதிக்கு ஒரு புத்திரன் பிறக்கிறான் அவர்கள்தான் #வியாசர் என்று நாம் சொல்கிறோம்.
*வியாசாச்சார்யாள் விஷ்ணுவினுடைய அவதாரமாகவே பிறந்திருக்கிறார். காரணம் அந்த பிதுருக்களின் சினேகத்தின் மூலம்
அவர்களின் பரிபூரண அனுகிரகத்துடன் பிறந்ததன் மூலம் மகாவிஷ்ணுவே வியாசர் ஆக வந்து பிறந்தார் இந்த பூலோகத்தில்.*
ஆகையினாலே தான் #வ்யாஸாய #விஷ்ணு_ரூபாய_வ்யாஸ_ரூபாய #விஷ்ணவே_என்று_சொல்கிறோம்.
விஷ்ணுவும் வியாசரும் வேறு அல்ல இருவரும் ஒன்றே தான் அவர் தான் பகவான் நாராயணன் ஆக ஆவிர்பவித்தார் என்று பார்க்கிறோம்.
*பித்ருக்கள் அனுக்கிரகம் செய்து, இந்த அஷ்டகா ஸ்ராத்தம் செய்ய வேண்டிய முறைகளையும் அவர்களே காண்பிக்கின்றனர்.
இப்படி சொல்லிக் கொண்டு வரும்பொழுது, ஸ்ராத்தங்கள் மூன்று விதமாக இருக்கின்றன. நித்தியமாக/நைமித்தியமாக/காம்மியமாக செய்யக்கூடியது.*
*நித்தியமாக செய்யக்கூடியது நாம் பார்த்து கொண்டு வரக்கூடியது ஆன ஷண்ணவதி தர்ப்பணங்கள், இவைகள் நித்தியம் என்று பெயர்.*
*நைமித்திகம் என்றால் ஒரு கிரகண புண்ணிய காலத்தில், செய்யக்கூடிய தான தர்ப்பணம். சிராத்தத்தை முடித்த பிறகு ஸ்ராத்தாங்கமாக
செய்யக்கூடிய தர்ப்பணம். ஒரு தீட்டு வந்துவிட்டால் அது போகக்கூடியதற்கான தர்ப்பணம். இவைகளெல்லாம் இதில் வரும்.*
*காமியம் என்று ஒன்று இருக்கிறது, ஒரு குறிப்பிட்ட பலனை உத்தேசித்து செய்யக்கூடியதான சிராத்தாங்க தர்ப்பணம்.
காம்ய ஸ்ரார்த்தம் என்று சொல்லி யிருக்கி றார்கள்*
*ஒரு குறிப்பிட்ட பலனை உத்தேசித்து செய்ய வேண்டுமானால் அதற்கான சிராத்தத்தை செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் காண்பித்துள்ளது.*
*அந்த ஸ்ராத்தத்தை முடித்த பிறகு செய்யக்கூடிய தான தர்ப்பணம் மற்றும் ஒரு சில புண்ணிய காலங்களில் செய்யக்கூடிய தர்ப்பணம். இவைகளுக்கு காமியம் என்று பெயர்.*
*இப்படி மூன்றாகப் பிரித்து அதில் இந்த அட்டகா புண்ணிய காலத்தில் செய்யக்கூடிய தர்ப்பணம் நித்தியம் என்று சொல்லி,
இந்த நான்கு மாதத்தில் செய்யக்கூடியதான இந்த திஸ்ரேஷ்டகா புண்ணிய காலம் நான்கு விதமாக ஸ்திரீகளுக்கு பலனை/திருப்தியை கொடுக்கிறது.
*முதலில் செய்யக்கூடியது ஐன்திரி மார்கழி மாதம் வரக்கூடியதான புண்ணியகாலத்தின் பெயர். அதாவது தர்ம சாஸ்திரம் இதை நமக்கு இரண்டு விதமாக காண்பிக்கின்றது.*
*மூன்று நாட்கள் செய்யக்கூடியது ஆன சப்தமி அஷ்டமி நவமி. இதிலே சப்தமி அன்று முதலில் செய்யக்கூடியதற்கு, ஐன்திரி, அஷ்டமி அன்று செய்யக்கூடியதற்கு பிராஜாபத்தியம் என்று பெயர். மூன்றாவதாக செய்யக்கூடிய அதற்கு வைஸ்யதேவிகி என்று பெயர்.*
*இப்படி இதைப் பிரித்து இருக்கிறார்கள் இந்த நான்கு மாதத்திலேயே, செய்யக்கூடிய தான தர்ப்பணங்களை நான்காகப் பிரித்து இருக்கிறார்கள்.*
அதில் முதலில் செய்யக்கூடியதான தர்ப்பணத்தின் மூலம் நம்முடைய வம்சத்திலே யாகங்கள் செய்து இருந்து வந்த குடும்பத்திலுள்ள ஸ்திரீகள் இறந்தது அவர்களுக்கு ரொம்ப திருப்தியை கொடுக்கின்றது.
இரண்டாவதாக செய்யக்கூடியது பிராஜாபத்தியம் விவாகம் செய்துகொண்டு நிறைய சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, வசதிகள் இருந்தும் ஆனால் அனுபவிக்க முடியாமல்,
புத்திரன் மூலமாக சம்ஸ்காரம் செய்யப்படாமல், எதிர்பார்த்த பலனை பெற முடியாமல் உள்ள ஸ்திரீகளுக்கு திருப்தியை கொடுக்கின்றது.
*மூன்றாவது கர்ப்பத்திலேயே இந்த வம்சத்தில் வந்த பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, பிறக்க முடியாமல், கருக்கலைப்பு ஏற்பட்டதன் மூலம் பிறந்த ஸ்திரீகள்,
பிறந்து கன்னிகா பருவத்தில், இறந்த ஸ்த்ரீகள், கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு கல்யாண வயது வரை வந்து கல்யாணம் செய்து கொள்ளாமல் இறந்த ஸ்திரீகள், இவர்களுக்கு போய் சேருகின்றது.*
*நான்காவதாக செய்யக்கூடியதான இந்த அஷ்டகா சிராத்தத்தில், குறைபட்ட ஸ்திரீகள், சுமங்கலிகளாக இருந்து,
குறைபட்டு போன ஸ்திரீகள், நம்மால் பாகம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு இறந்த ஸ்திரீகள், அதாவது தாய் மாமா இருக்கின்றார்
ஆனால் அவருக்கு குழந்தைகள் இல்லை, அப்போது அவர்களுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம்,
அதே போல் நம்மை சுற்றியுள்ள பந்துகள், நாம் செய்ய வைக்க வேண்டும் அல்லது செய்யணும், என்று ஆசைப்பட்டு இருந்து செய்ய முடியாமல் போனால்,
அல்லது அவர்கள் எதிர்பார்த்தும் நடக்க முடியாமல் போன ஸ்திரீகள், இவர்களுக்கு திருப்தியை கொடுக்கின்றது,
இந்த அளவுக்கு இந்த புராணம் முக்கியத்துவத்தை காண்பித்து, நித்தியமாக சொல்லி, கட்டாயம் அஷ்டகா புண்ணிய காலத்தில் நாம் செய்ய வேண்டும்.*
இதில் கட்டாயம் இந்த திஸ்ரேஷ்டகா புண்ணிய காலத்தில், #நம்மிடம் #எவ்வளவு_செல்வங்கள்_இருக்கிறதோ
அவ்வளவையும் செலவு பண்ணி இதை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும் இந்த அஷ்டகா சிராத்தத்தில்.
*அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதை செய்யவில்லை என்றால் இதே போல் நமக்கும் தூக்கங்கள் ஏற்படும் அதற்கு நாம் வாய்ப்பு கொடுக்க கூடாது.*
*இதை நாம் செய்வதினால் நமக்கும் நம்மை சுற்றி உள்ள சந்ததியினருக்கும் நமக்கு அடுத்த தலைமுறைகளும் சௌக்கியமே கிடைக்கும் . அதனாலே இதை நாம் கட்டாயம் செய்ய வேண்டும்.*
*எப்படி ஒரு பசுமாடு, மடி நிறைய பாலை வைத்துக்கொண்டு நீ கறந்து எடுத்துக்கோ என்று நம்மிடத்தில், காத்துக்கொண்டு இருக்குமோ,
அதுபோல பித்ருக்கள், இந்த அஷ்டகா புண்ணிய கால தர்ப்பணங்களை எதிர்பார்த்து, நீங்கள் எல்லோரும் செய்து உங்களுடைய துக்கங்களை நீங்கள் போக்கிக் கொள்ள வேண்டும்,
நான் போக்குவதற்கு தயாராக இருக்கிறேன், அப்படி பித்ருக்கள் வாசலிலேயே காத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம்தான் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.*
*பசுமாட்டை கறக்காமல் விட்டால் நஷ்டம் நமக்குத்தான். அதுபோல நம்முடைய பிதுருக்கள் இந்த திஸ்ரேஷ்டகா புண்ணிய காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆகையால் நாம் அதை எதிர்பார்த்து அவர்களுக்கு செய்ய வேண்டியதான இந்த புண்ணிய காலத்தை செய்து, அவர்களுடைய அனுக்கிரகத்தை நாம்
பூரணமாக அடைய வேண்டும் என்று,இந்த சரித்திரம் நமக்கு காண்பிக்கின்றது அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.*
*இந்த திஸ்ரேஷ்டகா புண்ணிய காலத்தில் அஷ்டகா சிராத்தம் செய்யாமல் இருந்தால் நமக்கு இந்த நாற்பது ஸம்ஸ்காரங்களில் ஒன்று விட்டு போகும்.*
*அப்படி விட்டு போனால் நாற்பது சம்ஸ்காரங்கள் இதுவும் ஒன்று, நமக்கு தோஷங்கள் ஏற்படும். நாம் மிகவும் எதிர்பார்த்து இருந்த ஸ்திரீகளியினுடைய உடைய சாபங்களுக்கு ஆளாக வேண்டி வரும்.*
*மேலும் நமக்கு ஸ்கந்த புராணம் சொல்லும் பொழுது யார் ஒருவன் இந்த அஷ்டகா ஸ்ராத்தம் செய்யவில்லையோ அவன் கயை சென்று எட்டு விதமான ஸ்ராத்தங்களை அவன் செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.*
*இப்பொழுது கயா போனால் கூட அங்கு செய்து வைப்பார்கள். அஷ்டகயா சிரார்த்தம் என்று செய்து வைக்கிறார்கள்.
இந்த எட்டு சிராத்தங்களை செய்தால்தான் அஷ்டகா செய்யாததினால் வந்த தோஷங்கள் போக்கும் இன்று காசிகண்டம் நமக்கு காண்பிக்கிறது.*
*இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த திஸ்ரேஷ்டகா புண்ணிய காலம். மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
|
|
|
Post by kgopalan90 on Dec 15, 2021 12:53:59 GMT 5.5
18-12-2021--தத்தாத்ரேயர் ஜயந்தி:-- மார்கழி மாதம் பெளர்ணமி , மிருக சீர்ஷ நக்ஷத்திரத்தில் அநசூயா தேவிக்கும் அத்ரி மகரிஷிக்கும் குழந்தையாக பிறந்த நாள். இன்று இவரை வணங்குவதால்
ஞான மார்க்கத்தில் ஈடுபாடும் வைராக்கியம், குழந்தை பேறு, மற்றும் தீய சக்தி உபத்திரம் அகலும்.
19-12-2021
ஸர்ப்ப பலி ஆவணி அவிட்டம் அன்று ஆரம்பித்தது இன்றுடன் முடிவு அடைகிறது. தினசரி உத்தேசமாக நான்கு மாத காலம் தினம் அரிசி மாவு நல்ல பாம்புகளுக்கு பலி போட்டது இன்று
முடிவடைகிறது. இன்று மாலை ஆவணி அவிட்டத்தன்று செய்தது போல பலாச பூக்கலாளும், சரக்கொன்றை சமித்துகளாலும் ஹோமம் செய்து ஸர்ப்பபலி கர்மாவை பூர்த்தி செய்ய வேண்டும்.
19-12-2021 அன்று உப்பு தானம் செய்வது சால சிறந்தது .நித்ய கர்மாக்கள் முடித்து விட்டு நம் வீட்டு ஸ்வாமி சன்னதியில் ஒரு அரை கிலோ அல்லது ஒரு கிலோ நாம் சாப்பிடும் கல் உப்பு வாங்கி ரஸாநாம் அக்ரஜம் சிரேஷ்டம் லவணம் பல வர்த்தநம் தஸ்மாதஸ்ய ப்ரதாநேன அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே மார்க சீர்ஷ பூர்ணிமா புண்ணிய காலே மம ஸஹ குடும்பஸ்ய ஸதா ஸுந்தர ரூபத்வ
ஸித்தியர்த்தம் இதம் லவணம் ஸ பாத்ரஸ்ய தானம் கரிஷ்யே என்று சொல்லி இத்துடன் தக்ஷிணை, துளசியும் சேர்த்து , நமஸ்காரம் செய்து அதை யாராவது ஒருவரிடம் தானம் கொடுக்க வேண்டும். இம்மாதிரி கொடுப்பதால் பிறர் பார்வைக்கு அழகாகவே தோன்றுவார்கள் அவரும் அவரது குடும்பதினர்களும். எவ்வளவு பேருக்கு வேண்டுமானாலும் இம்மாதிரி வாங்கி கொடுக்கலாம்.நிர்ணய ஸிந்து இம்மாதிரி பகர்கிறது.
20-12-2021`--- பரசுராம ஜயந்தி. ஏழுசிரஞ்சீவிகளில் ஒருவர்.தகப்பனார்சொல்படி தாயாரை கொன்றார்.தகப்பனாரிடம்வரம் கேட்டு தாயாரை மறுபடியும்உயிர்பித்தார்.கடலில்மூழ்கிய கேரள தேசத்தை மீட்டார்.மஹா விஷ்ணுவின்ஆறாவது அவதாரம்
|
|
|
Post by kgopalan90 on Dec 6, 2021 16:46:07 GMT 5.5
மார்கசீர்ஷ சுக்ல பக்ஷ சதுர்தி திதி;-07-12-2021 பத.ரீ கெளரி வ்ருதம். இலந்தை மரத்தினடியில் அம்மனை பூஜிக்கவும்..இலந்தை பழம் நிறய நிவேத்யம் செய்து தானும் உண்டு பிறருக்கும் கொடுக்கவும்.
இதனால் சிறந்த ஞானம் கிட்டும்.வாழ்க்கை இறுதியில் ஆத்ம தரிசனம் கிட்டும். உபநிஷத் கருத்துக்கள் நன்கு புலப்படும்.
09-12-2021. மார்கசீர்ஷ சஷ்டி திதி சிவலிங்கம் தரிசனம் செய்ய வேண்டும் என்கிறது ஸ்ம்ருதி கெளஸ்துபம் பக்கம் 430.
மார்கசீர்ஷே (அ)மலே பக்ஷே சஷ்டியாம் வாரே (அ) ம்ஸு மாலின: சத தாரா கதே சந்த்ரே லிங்கம் ஸ்யாத் த்ருஷ்டி கோசரம்
மார்கசீர்ஷ மாத சுக்ல பக்ஷ சஷ்டி திதியன்று நூறு நக்ஷதிரங்கள் ஒன்றாக சேர்ந்ததால் சத தாரா என்ற பெயருடைய சதய நக்ஷத்திரத்தில் சிவாலயத்தில் முறையாக ப்ரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்க படும் சிவலிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டும்.
இதனால் குடும்பத்தில் முன்னோர் காலத்து நிகழ்ந்த சிவாபசார தோஷங்கள் நீங்கும். குடும்பத்திலுள்ளவர்களின் மனோ புத்தி தோஷங்கள் விலகும். மனநிம்மதி அறிவு திறன் வளரும்…
10-12-2021;- சூரிய வ்ருதம்.- மித்ர ஸப்தமி அல்லது நந்த ஸப்தமி..
மார்கசிர மாதம் சுக்ல பக்ஷ ஸப்தமி திதியில் தான் அதிதிக்கும் கச்யப மஹரிஷிக்கும் ஶ்ரீ ஸூர்யன் புத்ரனாக பிறந்தார். அதித்யாம் கச்யபாஜ் ஜக்ஞே மித்ரோ நாம திவாகர: ஸப்தம்யாம் தேந ஸாக்யாதா லோகேஸ்மின் மித்ர சப்தமி.
ஸ்ம்ருதி கெளஸ்துபம்-பக்கம்-430.
பகல் முழுவதும் பூமிக்கு வெளிச்சம் கொடுப்பதால் திவாகரன் எனப்பெயர்.
அனைவருக்கும் நெருங்கிய நண்பனாவதால் மித்ரன் எனப்பெயர்.
இன்றைய தினம் பலவித புஷ்பங்களால் சூரியனை பூஜை செய்ய வேண்டும்
சூரிய காயத்ரி, சூரிய நமஸ்காரம், ஆதித்ய ஹ்ருத்யம், கோளறு பதிகம். போன்ற ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்யலாம்.
“”நாநா குஸும ஸம்பாரைர் பக்ஷ்யை: பிஷ்டமயை: சுபை: மது நா ச ப்ரசஸ்தேந ---போஜயேத்….தீநாநாதாம்ஸ்ச மாநவான் என்பதாக ஸூர்யனின் ப்ரீதிக்காக மாவினால் நெய்யுடன் சேர்ந்து செய்யப்பட்ட பக்ஷணங்களை ஸூர்யனுக்கு தேனுடன் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு கொடுத்து சாப்பிட செய்து ஸந்தோஷிக்க செய்ய வேண்டும்.
இதனால் ஆரோக்கியம் பாஸ்கராதிச்சேத் என்பதாக தீராத அனைத்து நோய்களும் தீரும். ,ஆரோக்கியம், ஆயுஸும் ஏற்படும்.
|
|
|
Post by kgopalan90 on Nov 21, 2021 16:58:01 GMT 5.5
கர்ண மந்திர ஜபம். ---உபவீதி----ப்ராணாயாமம் ----- ப்ராசீனாவீதி
------------ கோத்ரஸ்ய---------சர்மண: மம பிது: ப்ரேதஸ்ய அஸ்ய அஹணி பிது: ப்ரேதஸ்ய முமூர்ஷோ ப்ராண உத்க்ரம ண காலே ப்ராணானாம் ஸக உத்க்ரமண ஸித்தியேர்த்தம் மோக்ஷ ஸாம்ராஜ்ய ஸித்தியர்த்தம் அக்ஷய புண்ய லோக அவாப்த்தியர்த்தம் பரம பத ப்ராப்தியர்த்தம் கர்ண மந்திர ஜபம் கரிஷ்யே.
தாயார் அல்லது தகப்பனார் தலையை புத்ரன் தனது வலது தொடையில் வைத்துக்கொண்டு ஒரு தர்பத்தை வலது காதில் நுனி படும்படி வலது கையால் பிடித்து கொண்டு குனிந்து காதர்கே கர்ண மந்திரம் ஜபிக்க வேண்டும்.
ஆயுஷ: ப்ராணம் சந்தனு; ப்ராணாத் அபானம் சந்தனு; அபானாத்து வ்யானம் சந்தனு; வ்யானாது சக்ஷஸ் சந்தனு; ஶ்ரோத்ராது மனஸ் சந்தனு; மனஸ் வாசம் சந்தனு;வாச ஆத்மானம் சந்தனு; ஆஹ்மன ப்ருத்வீ சந்தனு;ப்ருத்வ்யா அந்தரிக்ஷம் சந்தனு; அந்தரிக்ஷம் து திவம் சந்தனு; திவஸ்ஸவ சந்தனு;
வடகலையர்கள் , சியாமா சரணம் ஆனவர்கள் அஷ்டாக்ஷரி---- ஓம் நமோ நாராயணாயா 10 தடவை; சரணாகதி மந்திரம் 3 தடவை; ஸ்ரீ மன் நாராயணாயை சரணம் சரணம் ப்ரபத்தயே.ஸ்ரீபதே நாராயணாய நம: சரம ஸ்லோகம் ஒரு தடவை; சர்வ தர்மான் பரிதயஸ்ச மாமேகம் சரணம் வ்ரஜா
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச ஜபம் ஆனதும் தர்பையை அங்கேயே போட்டு விட்டு ப்ரதக்ஷிணமாக கர்த்தாக்கள் வெளியே வர வேண்டியது.
ஒருவர் இறந்த உடன் நடத்த பட வேண்டிய காரியங்கள்:- கர்ண மந்திர ஜபம். தஹனம், சஞ்சயனம்; நக்ன சிராத்தம்; பாஷாண ஸ்தாபனம்; நித்ய விதி; ஏகோத்திர வ்ருத்தி சிராத்தம்; நவ சிராத்தம்; பங்காளி தர்ப்பணம்; ப்ரபூதபலி. பாஷாண உத்தாபனம்; சாந்தி ஆனந்த ஹோமம்; வ்ருஷப உத்ஸர்ஜனம்;
ஏகாதச ப்ராஹ்மண போஜனம்; ஆத்ய மாசிகம்; ஆவ்ருதாத்ய மாசிகம்; ஷோடசம்; சபிண்டீகரணம்; ஆத்ய சோதகும்பம்; இயல் சேவா காலம்; சுப ஸ்வீகாரம்.
நக்ன சிராத்தம்:-- இறந்தவர்களுக்கு ஏற்படும் ஐந்து விதமான பாதிப்புகளிடமிருந்து விமோசனம் ஏற்பட செய்ய படுகிறது.
பாஷாண ஸ்தாபனம்:--தடாக தீரம், க்ருஹத்வார ம் என இரு இடங்களில் குண்டம் அமைத்து ஆன்மாவை கல்லில் ஆவாஹனம் செய்வது.
நித்ய விதி:- ஆவாஹனம் செய்ய பட்ட ஆன்மாவிற்கு தினமும் வாஸ உதகம், தில உதகம், பிண்டங்கள்;அளிப்பது.
ஏகோத்திர வ்ருத்தி சிராத்தம்:- பத்தாம் நாள் வரை தினமும் செய்ய வேண்டிய சிராத்தம்.
நவ சிராத்தம்:- 1,3,5,7,9,11,ஆகிய ஒற்றைபடை நாட்களில் செய்ய வேண்டிய சிராத்தம்.
பங்காளி தர்ப்பணம்:- பத்தாம் நாள் பங்காளிகள் காரியம் நடக்கும் இடத்திற்கு வந்து பத்து நாளைக்கும் சேர்த்து தர்ப்பிக்க வேண்டும். இறந்தவரை விட வயதில் சிறிய பங்காளிகள் க்ஷவரம் செய்து கொண்டு தர்பிக்க வேண்டும். கர்த்தாக்கள் பிறகு தர்பிக்க வேண்டும்.
ப்ரபூத பலி:- பத்தாம் நாள் 500 கிராம் அரிசி சாதம், உப்பில்லா இட்லி, தோசை, வடை, தேங்குழல், வகைக்கு 11 எண்ணிக்கை, அதிரசம், எள்ளூருண்டை, வகைக்கு 11 எண்ணிக்கை, தேங்காய்-1; இளனீர்-1; அகத்திக்கீரை1 கட்டு; துண்டுகளாக்கி வேக வைத்த வாழைக்காய்-1; வேக வைத்த பயறு 50 கிராம்; வெற்றிலை 10; பாக்கு 10, வாழைப்பழம் 10, பழைய புடவை அல்லது வேட்டி-1; சமர்ப்பிக்க வேண்டும்.
இறந்தவர் சுமங்கலியாக இருந்தால் பலியில் சில விசேஷம் உண்டு. கணவருக்கு நடக்கும் பத்தாம் நாள் க்ருத்யத்தில் உயிருடன் இருக்கும் மனைவிக்கு புடவை போற்றுதல் உண்டு.
பாஷாண உத்தாபனம்:- ஆன்மாவை யதாஸ்தானம் செய்து கல்லை எடுப்பது,பலியை ஜலத்தில் சேர்ப்பது.கர்த்தாக்கள் க்ஷவரம். சாந்தி ஆனந்த ஹோ மம்; சாரு ஸம்பாவனை; அப்பம் பொரி ஓதி இடுதல்.
பத்து கரைத்த பெண்ணுக்கு வெள்ளி கிண்ணம் பரிசு.
பதினொன்றாம் நாள் :-- புண்யாஹாவசனம்; நவ சிராத்தம்; வ்ருஷப உத்ஸர்ஜனம்; ஆத்ய மாசிகம்; ஆவ்ருதாத்ய மாசிகம் இத்யாதி.
12ம் நாள்:- புண்யாஹாவசனம்; ஒளபாசனம்; ஶோடசம்; சபிண்டீகரணம்; தானங்கள்; சோதகும்பம்; சேவா காலம். ஐயங்கார்களுக்கு வேத ப்ரபந்த பாராயணங்கள்;
13ம் நாள்:- சேவை; சாத்துமுறை; உபன்யாசம். ஊனம், மாசிகம், சோதகும்பம் நாள் குறிக்க உதவி; ஐயங்கார்களுக்கு. உதக சாந்தி, நவகிரஹ ஹோம ம். ப்ராஹ்மண போஜனம் ஐயருக்கு.
14 ம் நாள்:- பெண்கள் கசப்பு எண்ணைய் என்று எண்ணைய் தேய்த்து குளிப்பார்கள். பத்திய சாப்பாடு. பிறகு அவரவர் ஊருக்கு கிளம்புவார்கள்.
நித்ய விதி :- முதல் நாள் முதல் பத்தாம் நாள் வரை.
மணல் 1 பாண்டு. பால் 1 கப் ; தயிர் 1 கப் ; இள நீர் -1.தினமும்.; கருப்பு எள் 100 கிராம்; தேன் 1 பாட்டில்; நெய் 100 கிராம்;செங்கல்-16; அல்லது 2 மண்தொட்டி; இஞ்சி தினமும் ஒரு துண்டு; வெல்ல சக்கரை 100 கிராம்.
முதல் நாள் அரிசி 4x 250 கிராம்; பயற்றம் பருப்பு (பாசிபருப்பு) 4 x 100கிராம்; வாழைக்காய் 4 எண்ணம்.
இரண்டாம் நாள்:-4----4-----4; மூன்றாம் நாள் 6------6------6; நாங்காம் நாள் 6-----6-----6; ஐந்தாம் நாள் 8---8----8
ஆறாம் நாள்:- 8-----8------8; ஏழாவது நாள் 10------10-----10; எட்டாவது நாள் 10-----10-----10; ஒன்பதாம் நாள் 12----12-----12; பத்தாம் நாள் 12-------12-------12; மொத்தம் 20கிலோ பச்சரிசி; 8கிலோ பாசி பருப்பு; 80 நம்பர் வாழைக்காய்; தக்ஷிணை 80 பேருக்கு தலைக்கு 100ரூபாய் வீதம் 8000 ரூபாய்.
பத்தாம் நாள்:- பச்சரிசி 2 கிலோ; தேங்காய்-4; வெற்றிலை 50; பாக்கு 50 கிராம்; வாழைபழம் 12; சந்தனம் 10 கிராம்; நெல் 50 கிராம்; தேன் 50 கிராம்; தயிர் 100 கிராம்; நெய் 250 கிராம்; கட்டி கற்பூரம் 50 கிராம்; பித்தளை சொம்பு-1; தீபெட்டி1; மாவிலை கொத்து 4; விசிறி 1; பஞ்ச பாத்திர உத்திரிணி-1;விறாட்டி 75; சிறாக்கட்டு 10 நம்பர்; மணல்- 1 பாகெட்.; தொடுத்த பூ 2 முழம்;
பத்து கொட்ட:- 500 கிராம் அரிசி சாதம்; உப்பில்லாமல் பக்ஷணங்கள்:- இட்லி-11 நம்பர்; தோசை 11; வடை 11; அதிரசம்-11; எள்ளுருண்டை 11; தேங்குழல் 11; துண்டுகளாக்கி வேக வைத்த ஒரு வாழைக்காய் கறி; பயறு 50 கிராம் வேக வைத்தது; தேங்காய் -1; இள நீர்-1; வெற்றிலை-10; பாக்கு-10; வாழபழம்-10; அகத்திகீரை 1 கட்டு.
அம்மாவின்/அப்பாவின் பழைய புடவை/வேஷ்டி-1;
பத்து கரைத்த பெண்ணுக்கு வெள்ளி கிண்ணம் பரிசு;
சாந்தி-----ஆனந்த ஹோமத்திற்கு :- அரிசி 500 கிராம்; தேங்காய்-2; வெற்றிலை, பாக்கு, பழம் -6;மாவிலை கொத்து, துளசி; நெல் 100 கிராம்;
12 கிலோ அரிசி; 24 வாழைக்காய்; 12 பேருக்கு தலைக்கு 500 ரூபாய் தக்ஷிணை; க்ஷவரம்- ஏற்பாடு.
வைதீகாள் 2பேர் தக்ஷிணை ப்ரம்ம தண்டம், சாந்தி ஹோமம், ஆனந்த ஹோமம் செய்ய 4000 ரூபாய், வாத்தியார் தக்ஷிணை 5000ரூபாய்;
11 வது நாள்:- மஞ்சள் பொடி 25 கிராம்; சந்தனம், குங்குமம், வெற்றிலை 25; பாக்கு 25 கிராம்; தொடுத்த பூ 5 முழம்; உதிரி பூ 100 கிராம்; துளசி 10 ரூபாய்க்கு;கலச வஸ்த்ரம்-1; தேங்காய்-4; வாழைபழம் 12; கட்டி கற்பூரம் 20 கிராம்; நெய் 500 கிராம்; மாவிலை கொத்து-4; அரிசி-1 கிலோ; தேன் 50 கிராம்; எள்ளு 100 கிராம்
பித்தளை சொம்பு-1; நெல் 25 கிராம்; பசும்பால் 250க்ராம்;அரிசி மாவு 100 கிராம்; ஆத்து சாமாங்கள்:- பித்தளை கிண்ணம்-6; தட்டு/ட்ரே 4; விசிறி-1; தீப்பெட்டி-1.
ஒத்தனுக்கு வேண்டிய சமையல் சாமாங்கள், தான சாமாண்கள் .9 x5 வேஷ்டி-1; பஞ்சபாத்திர உத்திரிணி-1; பித்தளை சொம்பு-1; தங்க காசு-1; எள்ளுடன் டபரா-1.;8 முழ வேட்டி-1; துண்டு-1; நுனி வாழை இலை-3; அரிசி-1 கிலோ, பாசி பருப்பு 100 கிராம்; வாழைக்காய்-1; குடை1; தடி1; விசிறி1; செறுப்பு1; ஆசன பலகை1. ஒத்தனுக்கு தக்ஷிணை 750 ரூபாய்; வாத்யார் தக்ஷிணை 7500ரூபாய்.
ருத்திர ஜபம்—4 பேர் –6000ரூபாய் தக்ஷிணை; அரிசி 1 1 கிலோ; தேங்காய்-2; வெற்றிலை, பாக்கு, பழம்-6;அரிசி மாவு 100 கிராம்;பசும் பால் 250; நெய் 250;ருத்திர கலசம், கலச துண்டு, தானம்- பித்தலை சொம்பு ஜலத்துடன்; வஸ்த்ரம், தங்கம்; டபராவில் எள்ளு;
பதினோராம் நாள் காய்ந்த வேஷ்டி துண்டு 2 தேவை. ஈரம் இல்லை. ஒருத்தனுக்கு சமையலுக்கு ஒருவருக்கு தனியாக கொடுக்க வேண்டும். புண்யாஹ வசனம், ருத்ர ஹோம ம் ,ரிஷபோத்ஸர்ஜனம் கரிஷ்யே என்று ஸங்கல்பம். திதி வார யோக கரண, லக்ன தோஷ , ப்ராஜாபத்ய இத்யாதி தோஷ நிவ்ருத்தியர்த்தம் ஹிரண்ய தானம் கரிஷ்யே.
வடை, அதிரசம், எள்ளுருண்டை, தேங்குழல் இரண்டிரண்டு போட வேண்டும். சமையலுக்கு வாழைக்காய், பாகற்காய், புடலங்காய்,அவரைக்காய், சேப்பங்கிழங்கு,, பயத்தம் பருப்பு பாயசம், நுனி இலை 4.
கர்மா செய்த சொம்பில் ருத்ரஆவாஹனம்.சொம்பிற்கு நூல் சுற்றி மாவிலை, கூர்ச்சம், தேங்காய் வைத்து சந்தனம், குங்கும்ம் இட்டு வைக்க வேண்டும் ருத்ர ஹோமத்திற்கு 50 கிராம் நல்ல எண்ணேய், 50 கிராம் பச்சைபயறு போட்டு ஹோமம். தனியாக ஒருத்தனுக்கு 50 கிராம் நெய், 500 கிராம் சுர்ய காந்தி எண்ணய்,
மறு நாள் மாசிகத்திற்கு 3 பேருக்கு 500 கிராம் சூர்ய காந்தி எண்ணை, 100 கிராம் நெய் தனியாக வாங்கி கொடுக்கவும்.
தானம்:- பித்தளை டபராவில் எள்ளு, 9X5 வேஷ்டி; தங்கம் 400 மில்லி கிராம்,
ரிஷபோதுத்சர்ஜன ஹோமம். ஹோமத்திற்கு கற்பூரம், தீப்பெட்டி, விராட்டி, சுல்லி, 6 செங்கல், மணல்; நெய் 250 கிராம்.
கும்பத்தில் சாம்ப பரமேஸ்வரம் ஆவாஹயாமி. 1 உபசார பூஜை; அர்ச்சனைக்கு உதிரி புஷ்பம் தேவை. 2 வாழைபழம், தாம்பூலம் நைவேத்யம்.பசும்பால் 250 மில்லி. அத்தி இலை தேவை.பேப்பர்
தீட்டு சமையல் தனியாக செய்ய வேண்டும். மடி சமையல் தனியாக வேறு இடத்தில் செய்ய வேண்டும்.
ஆத்ய மாசிகம்:- அரிசி; நறுக்கிய வாழைகாய்; வேக வைத்த பயறு; 50 கிராம்; சவுக்கு விறகு உடைத்தது 10 கிலோ; விராட்டி 200; செங்கல்-30; உமி 2 பாக்கெட்;வீட்டிற்குள் செய்ய கூடாது.வீட்டின் வெளியே அல்லது மொட்டை மாடியில் ; ஷாமினா மேலே போட்டுக்கொண்டு செய்யலாம்.
காளை கன்று குட்டிக்கு துண்டு-1; மாலை 1; வாழைபழம்-4, ; சுமங்கலியாக இறந்தால் பசு மாடு கன்று இரண்டிற்கும் பூஜை மாட்டிற்கு புடவை; மாலை1; வாழைப்பழம்-6. மாடு, கன்று கொண்டு வருபவனுக்கு
500ரூபாய். மாடு, காளை கன்று கிடைக்காவிடில் மட்டைதேங்காயில் ஆவாஹனம் செய்து பூஜை செய்யலாம்.
12ம் நாள் சபிண்டீகரணம்:-
மஞ்சள் பொடி 25 கிராம்; சந்தனம்; வெற்றிலை25; பாக்கு 25 கிராம்; தொடுத்த பூ 5 முழம்; உதிரிபூ 10 ரூபாய்; தேங்காய்-4; வாழைபழம் 12; கட்டி கற்பூரம் 20 கிராம்; நெய் 500 கிராம்; மாவிலை கொத்து 4; அரிசி 1 கிலோ; தேன் 50 கிராம்; எள்ளு 100 கிராம்; பித்தலை சொம்பு1; கலச வஸ்த்ரம்1;துளசி5 ரூபாய்; நெல் 50 கிராம்;பித்தளை கிண்ணம்10; தட்டு/ட்ரே4; விசிறி1; தீபெட்டி1; நல்ல எண்ணய் 100 மில்லி; திரினூல் 2 ரூபாய்.
த்வாதச சிராவணாலுக்கு 12 பித்தளை டபரா அரிசி போட்டு கொடுக்க வேண்டும். யம தர்ம ராஜா தர்பாரின் ஜூரிகள் இவர்கள்.. தக்ஷிணை 12000ரூபாய்.
பாதேய சிராத்தம் :8முழம் வேஷ்டியில் தயிர் சாதம், ஊறுகாய் கட்டி தக்ஷிணையுடன் கொடுக்க வேண்டும்.
ஷோடசம்:- 16 பேருக்கு 8 கிலோ அரிசி, 16 வாழைக்காய் வெற்றிலை பாக்கு தக்ஷிணை 4800 ரூபாய்;
12 மாசிகமும், 4 ஊண மாசிகமும் செய்த பிறகு தான் ப்ரேதத்தை பித்ருவாக மாற்ற முடியும். கர்த்தா ஒரு வருட காலம் உயிருடன் இருப்பார் என்ற உறுதியிம் இல்லாததால் இன்று 16 மாசிகமும் அரிசி, வாழைகாய், தக்ஷிணை கொடுத்து முடிக்கிறோம்.
இன்று இவர்களுக்கு பார்வண விதிபடியும் சிராத்த மாகவே செய்து சாப்பாடு போடலாம். நேரம் அதிக ம் ஆகும். மறு நாள் 13ம் நாள் ப்ரேத ஸ்வரூபத்தை பித்ருவாக மாற்றலாம். வசதி உள்ளவர்கள் செய்யலாம்.
3 பிராமணாளுக்கு சிராத்த சமையல் ; எண்ணய், சீயக்காய் கொடுக்க வேண்டும் 3 பித்தளை சொம்பு ஜலத்துடன் தானம்; 3000ரூபாய் தக்ஷிணை. 9 x 5 வேஷ்டி-3; குடை3, விசிறி3, தடி3; ஆசன பலகை-3, செருப்பு3.
ஒளபாசனம். மாத்யானிகத்திற்கு பிறகு மாசிகம் சிராத்தம் 3 பேர்; சந்தனம், அக்ஷதை,எள்ளு,தீபெட்டி கற்பூரம், உதிரி புஷ்பம், தொடுத்த புஷ்பம், 2 கிண்ணம், ; மரகரண்டி; அனுக்ஞை; பார்வண ஏகோதிஷ்ட சபிண்டீ கரண சிராத்தம் விசுவேதேவர் இப்போது கால காமர் என்ற பிரிவிலிருந்து வருவர்; பித்ருக்கள் ;ஏகோதிஷ்டம்= ப்ரேதம்
திதி வார லக்ன தோஷ நிவ்ருத்தியர்த்தம் ப்ராஜாபத்ய க்ருச்சர ஹிரண்ய தானம். விசுவேதேவருக்கு சதுரம்; பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹருக்கு முக்கோணம், ப்ரேதம் டு பித்ருவுக்கு வட்டம். என்று போட்டு காலலம்பலாம்.
சோத கும்பம்- சமாராதனை சமையல்; புண்யாஹா வசனம்; தக்ஷிணை2000ரூபாய்; 9 x 5 வேஷ்டி-1. பித்தளை சொம்பு-1, பஞ்ச பாத்திர உத்திரிணி-1, குடை-1; விசிறி-1; தடி-1; ஆசனபலகை -1; செறுப்பு-1; இள நீர் -1,
ஈயம் பூசிய டபராவில் பானகம், நீர்மோர் கொடுக்க வேண்டும். தாம்பூல தானம், பழங்கள், காய்கள் தானம்;
தானம்:- வைகரணீ பசு மாடு தானம், மட்டை தேங்காய்; காமதேனு, ருண தேனு, மோக்ஷ தேனு;பாப தேனு 4 மட்டை தேங்காய்; நெளகா தானம் கரும்பில் ஓடம் செய்து அதி காமாக்ஷி விளக்கில் எண்ணைய், திரி போட்டு ஏற்றி விளக்கு ஜோதி நம் பக்கம் பார்த்திருக்க தானம், ஒவ்வொன்றிர்க்கும் தக்ஷீணை ;
தச தானம்:- பூமி, பசு, தங்கம், வெள்ளி; நெய், உப்பு, வெல்லம், எள்ளு, 9 x 5 வேஷ்டி;தான்யம்.
பஞ்ச தானம்:- 9 x 5 வேஷ்டி, தீபம், மணி, புத்தகம், ஜலத்துடன் பித்தளை சொம்பு.
ருத்ராக்ஷம், சிவலிங்கம், சாலகிராமம்; கம்பளம், கோபி சந்தனம்; விபூதி சம்படம். ஜமக்காளம், போர்வை, தலை காணி;
வாத்யார் தக்ஷிணை 12000ரூபாய்;
சுப ஸ்வீகரணம். 13 ம் நாள்.
உதக சாந்தி அண்ட் நவகிரஹ ஹோமம்:-
எவெர்சில்வெர் பேசின்-1. நல்ல எண்ணெய் 200 கிராம். எல்லோரும்முகம் பார்த்து தானம் செய்ய வேண்டும் தக்ஷிணையுடன்.
உதக சாந்திக்கு ஒரு பித்தளை குடம். நவகிரஹத்தீற்கு ஒரு பித்தளை சொம்பு. 4 வாத்யார் தக்ஷிணை 12000 ரூபாய். வாத்யார் தக்ஷிணை 20000 ரூபாய். சரம ஸ்லோகம் படித்தல், பொரி உருண்டை, பெண் மாப்பிள்ளைக்கு டிரஸ். 10ம் நாள் சரம ஸ்லோகம் படிக்கும் வழக்கமும் உள்ளது.
கோதுமை 2கிலோ; அரிசி 3 கிலோ; உளுந்து 1 கிலோ; எள்ளு 100 கிராம்; நவதானிய செட்; நவகிரஹ வஸ்த்ரம் செட்; நவகிரஹ ஹோமகுச்சி 1 செட்; அரச சமித்து 500; தர்ப்பை 5 கட்டு; நாயுருவி சமித்து ஒரு கட்டு. கலச துண்டு-2; தொடுத்த புஷ்பம் 12 முழம்; நூல் கண்டு, மாவிலை கொத்து 10; பழங்கள், உதிரி புஷ்பம்.500 கிராம் தேங்காய்-6; வாழைபழம் 25; கட்டி கற்பூரம் 25 கிராம்;
மஞ்சள் பொடி 50 கிராம்; சந்தனம் 50 கிராம்; குங்குமம் 50 கிராம்; வெற்றிலை 50, பாக்கு 50 கிராம்; ஊதுபத்தி 1 பாக்கெட்; திரி நூல்; நெய் 500 கிராம்; பச்சை கற்பூரம் 1 டப்பா; ஏலக்காய் பொடி, குங்கும பூ; அருகம் பில் 2 கட்டு; எலிமிச்சம் பழம்12; செங்கல் 16; மணல் 1 பான்டு; சிறாக்கட்டு 5; விராட்டி 30; ஹவிஸ் 250 கிராம்; நுனி வாழை இலை 10; பித்தளை கிண்ணம்6; தட்டு/ட்ரே4;
ஆத்து சாமான் கள்:- குடம்-1; சொம்பு-1; பஞ்ச பாத்திர உத்திரிணி 1; சந்தன பேலா, குங்கும சிமிழ்; மணி; தூப கால், தீப கால், குத்து விளக்கு, எண்ணை ;திரி. தீப்பெட்டி;கற்பூர தட்டு ; ஊதுவத்தி ஸ்டேண்ட்; விசிறி; கத்தி; கத்திரிகோல்; மனை பலகை/தடுக்கு.;பழைய பேப்பர்;வீட்டு நபர்களின் பெயர்=சர்மா; கோத்ரம்; நக்ஷத்ரம், ராசி உறவு முறை இவைகளை எழுதி வாத்யாரிடம் கொடுத்து விடவும்.
தஹன தின க்ரியைகள்:--
பலர் அசுப காரியங்கள் பற்றி பேசுவது தெரிந்து கொள்வது கூட தவறாக நினைக்கிறார்கள். தினமும் அசுப காரியங்களில் ஈடு படும் வாத்யார்கள் பிண ஊர்தி ஓட்டுபவர்,இல்லத்தில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் தானே இருக்கிறது. எவரும் இதிலிருந்து தப்பித்துவிட முடியாது.
தஹனம் இறந்தவர்களுக்கு செய்யும் முதல் நாள் க்ரியை.மரணத்தால் ஆன்மாவை விட்டு பிறிந்த சரீரத்திற்காக செய்யபடும் கர்மா.
ஜீவ ப்ராய சித்தம் சாமாங்கள் ஏற்பாடுகள். ஐயங்காருக்கு ஸ்ரீ சூர்ண பரிபாலனம். அக்னி நிர்ணயம்.
ப்ரேதாக்னி ஸந்தானம்; உதபனாக்னி; கபாலாக்னி;பைத்ருமேதித ப்ராயஸ்சித்தாதி ஹோமங்கள். ஸ்மசானத்தில் க்ரியைகள். தஹனம் செய்ய பட வேண்டிய ஸ்மசானம், அல்லது நகர்மானால் எலக்ற்றிக் க்ரிமடோரியம் போன்ற இடத்தில் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு புக்கிங்க் செய்ய வேண்டியது.
ஆதார் கார்டு ஜெராக்ஸ் காபி. டாக்டர் சர்டிபிகேட், காபி எடுத்தி கொள்வது. க்ரிமடோரியத்தில் பணம் கட்டி ரசீது, தஹன சான்று பெற்று கொள்வது.கர்ண மந்திரம் சொல்ல வேண்டியது.பூஜை அறையிலிருந்து கங்கை ஜல சொம்புகள்,மற்றும் தேவையானவற்றை எடுத்து கொண்டு பூஜை அறையின் கதவை சாற்றி விட வேண்டியது. அன்று வீட்டில் சமையல் செய்ய கூடாது. ஆதலால் கேடரரிடம் தேவையான வைகளை ஆர்டர் கொடுத்தல். உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டியது.
சவம் குளிப்பாட்டிய ஜலம் வெளியே ஓட க்கூடிய இட த்தில் தெற்கு நுனியாக சில தர்ப்பங்கள் போட்டு அதன் மீது சவத்தை தெற்கில் தலை வைத்து படுக்க வைக்க வேண்டும்.துளசி பக்கத்தில் போட வேண்டும். தலை மாட்டில் தெற்கு நோக்கி விளக்கு எரிய வேண்டும். வாத்யாருக்கு உடன் தெரிவிக்க வேண்டியது.
வாத்யாருக்கு உங்கள் வேதம், சூத்ரம், இறந்தவர் உறவு தெரிவிக்கவும். தேவையான சாமாங்கள்:- பாடை=ஆஸந்தி; பச்சை மூங்கில்; 9 அடி நீளத்தில் இரண்டு; பச்சை கீற்று-2;குறுக்கு கொம்புகள் 12; கப்பாணி கயிறு 2 முடி; நெல் பொறி 100 கிராம்; நெய் 200 கிராம்; எள் 50 கிராம்; கற்பூரம் 4 கட்டி;;
தீப்பெட்டி-1;வெற்றிலை12; பாக்கு 6; பழம்-2; புஷ்பம் 2 முழம்; கரை இல்லாத வெள்ளை மல் துணி 2 மீட்டர்; சுமங்கலி ஆனால் சிவப்பு துணி; விராட்டி8; சுள்ளி 12; அத்தி இலை 1 கொத்து; மண் பானை மீடியம் சைஸ்-1;; சிறிய மண் மடக்கு 4; இரண்டு பழைய துண்டுகள்,/டவல்;
ஆத்மா வேறு சரீரம் வேறு என்ற சித்த சுத்தி ஏற்படுவதற்காகத்தான் கர்மானுஷ்டானம். கடைசியில் இந்த தேஹத்தையும் ஆஹூதியாக தேவதைகளுக்கு ஹோம ம் செய்துவிட வேண்டும் என்பதற்குத்தான் ப்ரேததிற்கு நெய்யை தடவி அதையும் ஒரு திரவியமாக வேத மந்திரங்களோடு செய்ய வேண்டும் என தர்ம சாஸ்திரம் விதித்து இருக்கிறது.
இறந்தவுடன் ஏற்படும் நிலை ப்ரேத சரீர நிலை. அந்த நிலையிலிருந்து பித்ரு நிலையை அடைய செய்யும் கர்மாக்கள் பைத்ரு மேதிக கர்மாக்கள் என்று சொல்ல படுகின்றன. பைத்ரு மேதிக கர்மாவை செய்யா விட்டால் இறந்தவர் ப்ரேத சரீரத்திலிருந்து விடுபடுவதில்லை.புண்ய சரீரம் கிடைப்பது இல்லை. ஸுகானுபவம் இல்லை.துக்கத்தில் மூழ்கியவர்களாக இருக்கிறார்கள்.
இறந்தவுடன் யம கிங்கரர்கள் இந்த ஸூக்ஷ்ம சரீரத்தோடு கூடிய ஜீவனை காற்று ரூபமாக உடனே யம தர்மராஜன் முன் கொண்டு நிறுத்து கிறார்கள். அவர் பார்த்து இவனை அவன் வீட்டிலேயே விட்டு விடு . 12 நாட்கள் கழித்த பிறகு நம் சபைக்கு அழைத்து வா என்று உத்திரவு போடுகிறார்.
இவை 48 நிமிடத்தில் நடை பெறுகிறது.
ஆகையால் நாமும் ப்ராயஸ்சித்தம் போன்ற கர்மாக்களை செய்து அந்த ஜீவனுக்கு உரிய அக்னியை தயார் செய்து இறந்தவரின் ஆசிரமத்திற்கும், வேதத்திற்கும் தகுந்த படி உயிர் போன பிறகு 3 மணி நேரம் காத்திருந்து பைத்ரு மேத கர்மா ஆரம்பிக்க வேண்டும்.
ஸ்தூல சரீரம் எரிக்க பட்ட வுடன் ஸூக்ஷ்ம சரீரம் பிண்டாகாரமாக ஆகி யம புரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. நாம் உபயோகபடுத்தும் தர்பை விஷ்ணுவினுடைய ரோமத்திலிருந்து உண்டானது.அந்த தர்பையின் மூலத்தில் ப்ரம்மா, மத்தியில் ஜனார்த்தனர், நுனியில் சங்கர் இருப்பதாக கருட புராணம் கூறுகிறது.
எள்ளும் விஷ்ணுவினுடைய வியர்வையிலிருந்து உண்டானது. தர்பை, எள்ளு, துளசி இவைகள் பிள்ளை இல்லாதவரையும் துர்கதி அடையாமல் காப்பாற்று கிறது. இறந்த தினத்திலிருந்து பத்து நாள் வரை தினமும் உதக பிண்ட தானத்தினால் முறையாக பூர்ண சரீரம் பெறுகிறது. பிறகு ப்ரபூத பலி கர்மாவினால் பசி தாகம்
தீர்ந்து பிறகு 11ம் நாள் வ்ருஷோத்ஸர்ஜத்தினாலும், ஆத்ய மாசிகம், பதினைந்து மாசிகம் முதலியவைகளால் பைசாச பாத நிவ்ருத்தி ஏற்படுகிறது. தானங்களால் யமபுரம் போகும் போது ஏற்படும் ஸகல துக்கமும் போகின்றது.ஸபிண்டீகரணத்தினால் ப்ரேதத்வ நிவ்ருத்தி ஏற்பட்டு பித்ருக்களோடு சேர்க்க படுகிறது.
உத்க்ராந்தி கோதானம், தச தானம், பஞ்ச தானம் இவைகள் இறந்த நாள் அன்றே ப்ராயஸ்சித்ததோடு தவறாமல் செய்வது அளவிட முடியாத பலனை கொடுக்க வல்லது என சாஸ்திரங்கள் கூறுகின்றன. தச தானத்தின் அளவும் சொல்ல பட்டிருக்கிறது.
கோ தானம்:- கன்றோடு கூடிய கறக்கும் பசு. பூமி தானம்:- 300 கிலோ நெல் விளைவிக்க கூடிய 20 செண்ட் ஒருவன் போஜனத்திற்கு போதுமான அளவு. எள்ளு:- 25.6 கிலோ; தங்கம்:-18.75 கிராம்; வெள்ளி :-25 கிராம்; நெய்:- 3.2 கிலோ; வேஷ்டி 9x5; தான்யம்:- 307.2 கிலோ; வெல்லம் :-3 கிலோ; உப்பு :-307.2 கிலோ.
|
|
|
Post by kgopalan90 on Oct 24, 2021 19:49:44 GMT 5.5
கோவத்ச துவாதசி;_--01-11-2021.
இன்று கன்று குட்டியுடன் கூடிய பசு மாட்டை பூஜை செய்ய வேண்டும்.
ஐப்பசி மாதம் கிருஷ்ண பக்ஷ துவாதசி. 01-11-2021. இன்று பசும்பால்; பசும் தயிர். பசு மோர், பசு வெண்ணை, பசு நெய் சாப்பிட கூடாது.
பசும் பால் இன்று கறக்காமல் கன்றுக்குட்டி குடிப்பதற்கே விட்டு விட வேண்டும்.நிர்ணய சிந்து 147. இம்மாதிரி பகர்கிறது.
அகத்தி கீரை, புல் பசு மாட்டிற்கு தர வேண்டும். இந்த ஸ்லோகம் சொல்லி கொடுக்கவும்.
ஸுரபி த்வம் ஜகன் மாதர் தேவி விஷ்ணு பதே ஸ்திதா ஸர்வ தேவ மயே க்ராஸம் மயா தத்தம் இமம் கிரஸ:.
இன்று பசு மாட்டை நமஸ்காரமாவது செய்ய வேண்டும். கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி பசு மாட்டை வணங்கவும். ஸர்வ தேவ மயே தேவி; ஸர்வ தேவைஸ்ச ஸத் க்ருதா மாதர் மமா அபிலஷிதம் ஸ பலம் குரு நந்தினி
.
பாற் கடலை கடைந்த போது காமதேனு வந்தது. காமதேனுவின் மகள் நந்தினி ஆவாள். வட இந்தியாவில் தீபாவளியின் முதல் நாளாக இதை தான் கொண்டாடு கிறார்கள்
|
|
|
Post by kgopalan90 on Oct 23, 2021 20:03:55 GMT 5.5
பதினாறு பேறுகள் தரும் கௌரி வடிவங்கள்
தீபாவளிக்கு மறுதினம் சுமங்கலிப் பெண்கள் “கேதார கௌரி விரதம்” அனுஷ்டிப்பது வழக்கம். மகாகௌரியான அம்பிகை சிவபெருமானின் முழு அருளையும் அன்பையும் பெற 21 நாட்கள் விரதம் மேற்கொண்டாள். அதுவே கேதாரீஸ்வரர் விரதம் அல்லது கேதார கௌரி விரதம் என்று போற்றப்படுகிறது.
அதன் பயனாக ஈசன் உடலில் சரிபாதியைப் பெற்றாள் அம்பிகை. இந்த விரதத்தை பெண்கள் மேற்கொண்டால் கணவனின் முழு அன்பைப் பெறுவதுடன், பதினாறு பேறுகளையும் பெற்று வாழலாம் என்று ஞானநூல்கள் கூறுகின்றன. அம்பிகையை 16 வடிவங்களாகப் போற்றி, சோடசகௌரி வழிபாடு செய்தால் சகல பாக்கியங்களையும் பெறலாம் என்கிறது ஸ்கந்த புராணம்.
ஆதிபராசக்தியின் வழிபாடே உலகில் தோன்றிய முதல் வழிபாடாகும். ஆதியில் அன்னை, பரமசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளிபோல் வெண்மையான வடிவில் தோன்றி, பெண் வடிவில் திகழ்ந்தாள். பேரண்டங்களையும் உலகங்களையும், அவற்றில் உயிர்த் தொகுதிகளையும் உண்டாக்கினாள். உயிர்களுக்கு அருள்புரிய மலைகளின் மீது வந்து தங்கினாள். அவள் மெல்லிய பனி போன்ற வெண்மையான வண்ணத்துடன் இருந்ததாலும், மலை(கிரி)களில் வந்து தங்கியதாலும் “கெளரி என்று அழைக்கப் பட்டாள் (வெண்மை நிறத்தைக் கெளர வர்ணம் என அழைப்பர்).
ஸ்ரீ கெளரி தேவியை வழிபடுவது உலகிலுள்ள அனைத்து தேவ, தேவியர்களையும் வழிபடுவதற்குச் சமமாகும். அவள் சிவனிடம் உமையாகவும், திருமாலிடம் லட்சுமியாகவும், பிரம்மனிடத்தில் சரஸ்வதியாகவும் விளங்குகிறாள். இவ்வாறே வேளாண்மை செய்பவர்களிடம் செளபாக்ய கெளரி; வணிகர்களிடத்தில் சுவர்ண கெளரி; வீரர்களிடத்தில் ஜெயகெளரி, ஞானிகளிடத்தில் ஞானேஸ்வரி, அரசர்களிடத்தில் சாம்ராஜ்ய மஹாகெளரி என்று பல்வேறு வடிவங்கள் தாங்கி உலகெங்கும் நிறைந்திருக்கின்றாள்.
01 ஸ்ரீ ஞான கௌரி
“உலக உயிர்களுக்கு சக்தி கொடுப்பது நானே” என்று சிவபெருமானிடம் வாதிட்டாள் சக்திதேவி. உடனே சிவபெருமான் உலக உயிர்களின் அறிவை ஒரு கணம் நீக்கினார். அதனால் உலக இயக்கம் நின்று பெரும் குழப்பம் ஏற்பட்டது. அதைக்கண்ட தேவி, உயிர்களுக்கு சக்தி மட்டுமே போதாது என்பதை உணர்ந்து இறைவனைப் பணிந்தாள். பின்னர் இறைவன் மீண்டும் உலக உயிர்களுக்கு ஞானமளித்து, அறிவின் திறனை தேவி உணரும்படி செய்தார். தன் நாயகனிடம் வாதிட்டதால் ஏற்பட்ட தோஷம் நீங்க வன்னி மரத்தடியில் அமர்ந்து தவம் செய்தாள் அம்பிகை. அவளது தவத்தினைப் போற்றிய இறைவன், தன் உடலில் பாதியை அளித்து அறிவின் அரசியாக்கினார். எனவே ஞான கௌரி என்று போற்றப்பட்டாள். சிவாலயங்களில் அமைந்துள்ள அம்பாள் சந்நிதியில் அருள்புரியும் அம்பிகையை, ஞான கௌரியாக மனதில் நினைத்து வழிபட்டால் ஞானம் பெருகும், எண்ணியது நிறைவேறும். விஜயதசமியில் வழிபட கூடுதல் பலன் கிட்டும்.
02 ஸ்ரீ அமிர்த கௌரி
உலகில் வாழும் உயிர்களுக்கு வளமான வாழ்வையும் ஆயுளையும் தருவது அமிர்தம். மிருத்யுஞ்ஜயரான இறைவனின் தேவியானதால் கௌரிக்கு அமிர்த கௌரி என்று பெயர். இந்த தேவியை வழிபடுவதால் ஆயுள் மற்றும் வம்சம் விருத்தியாகும். இந்த கௌரி அருள்பாலிக்கும் தலம் திருக்கடவூர் ஆகும். திருக்கடவூர் அபிராமி “அமிர்த கௌரி” என்று போற்றப்படுகிறாள்.
03 ஸ்ரீ சுமித்ரா கௌரி
இறைவனின் உடலில் பாதி இடத்தைப் பிடித்த தேவி, அவரைப் போலவே உயிர்களுக்கு உற்ற தோழியாகத் திகழ்வதால் சினேகவல்லி என்று போற்றப்படுகிறாள். தேவகோட்டைக்கு அருகிலுள்ள திருவாடனைத் திருத்தலத்தில் அருள்புரியும் அம்பிகைக்கு “சினேகவல்லி” என்று பெயர். இந்த அன்னையை வடமொழியில் ஸ்ரீ சுமித்ரா கௌரி என்று போற்றுவர். இவளை வழிபட நல்ல சுற்றமும் நட்பும் கிட்டும்.
04 ஸ்ரீ சம்பத் கௌரி
வாழ்வதற்கு மிகவும் அவசியமானது உணவு, உடை, உறைவிடம். இவற்றை “சம்பத்” என்பர். அந்தக் காலத்தில் பசுக்களும் உயர்ந்த செல்வமாகப் போற்றப்பட்டன. அத்தகைய உயர்ந்த சம்பத்துகள் பெருக அருள்புரிபவள் ஸ்ரீ சம்பத் கௌரி. இந்த அம்பிகை பசுவாக உருவெடுத்து சிவபூஜை செய்த திருத்தலங்கள் உண்டு. எனவே கோமதி, ஆவுடை நாயகி என்றும் போற்றுவர். இந்த கௌரியை திருச்சிக்கு அருகில் உள்ள துறையூர் தலத்தில் சம்பத் கௌரி உடனாய நந்தீஸ்வரர் கோவிலில் தரிசிக்கலாம். மேலும், காசி ஸ்ரீ அன்ன பூரணியையும் மகாமங்கள கௌரி, சம்பத் கௌரி என்று போற்றுவர். இந்த தேவியை வழிபட செல்வ வளம் பெருகும்.
05 ஸ்ரீ யோக கௌரி
யோக வித்தைகளின் தலைவியாக ஸ்ரீ மகா கௌரி திகழ்கிறாள். இவளையே யோக கௌரி என்றும் போற்றுவர். யோகங்களை வழங்கும் அம்பிகை யோகாம்பிகை; யோக கௌரி எனப்படுகிறாள். திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் கோவிலில் எழுந்தருளியுள்ள கமலாம்பிகையே யோக கௌரி ஆவாள். திரிபங்க ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அற்புதமான திருக்கோலம். அங்கு அருள்புரியும் தியாகராஜரின் ரகசியங்கள் யோக வித்தை எனப்படுகின்றன. இந்த ரகசியங்கள் அனைத்தும் அறிந்தவள் யோக கௌரியான கமலாம்பிகை. இந்த தேவியை வழிபட யோகா, கல்வி, இசை சம்பந்தமான கலைகளில் சிறந்து விளங்கலாம்.
06 ஸ்ரீ வஜ்ரச்ருங்கல கௌரி
உறுதியான, ஆரோக்கியமான உடலை “வஜ்ரதேகம்” என்பர். அத்தகைய உடலை உயிர்களுக்குத் தரும் தேவியே ஸ்ரீ வஜ்ரச்ருங்கல கௌரி என்று போற்றப்படுகிறாள். கருட வாகனத்தில் பவனி வரும் இந்த கௌரி சக்கரம், கத்தி ஆகியவற்றுடன் நீண்ட சங்கிலியையும் கையில் ஏந்தியிருப்பாள். (“ச்ருங்கலம்” என்பதற்கு சங்கிலி என்று பொருள்.) வைரமயமான சங்கிலியைத் தாங்கியிருப்பதால் வஜ்ரச்ருங்கல கௌரி என்பர். சென்னைக்கு அருகிலுள்ள திருவொற்றியூர் தலத்தில் அருள்புரியும் வடிவுடையம்மனே இந்த கௌரியாகத் திகழ்கிறாள். இந்த அன்னையை வழிபட உடல் உறுதியாகத் திகழும்; வலுவுடன் காட்சி தரும்.
07 ஸ்ரீ த்ரைலோக்ய மோகன கௌரி
மனதிற்கு உற்சாகத்தையும், உடலுக்கு தெய்வீக சக்தியையும் அளிக்கும் சக்தி கொண்டவள். காசியில் நளகூபரேஸ்வரர் கோவிலுக்கு மேற்குப் பக்கத்திலுள்ள குப்ஜாம்பரேசுவரர் சிவாலயத்தில் இந்த தேவிக்கு தனிச்சந்நிதி உள்ளது. தமிழகத்தில், திருநெல்வேலியிலுள்ள நவகயிலாயங்களுள் முதல் தலமான பாபநாசத்தில் அருள்புரியும் உலகம்மை எனும் விமலை சக்தியே த்ரைலோக்ய மோகன கௌரியாகப் போற்றப்படுகிறாள். கிரக தோஷங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் குறைகளை நீக்கி மகிழ்ச்சியைத் தருபவள். பெண்கள் தீர்க்கசுமங்கலியாக- மகிழ்வுடன் வாழ அருள்பவள்.
08 ஸ்ரீ சுயம்வர கௌரி
சிவபெருமானை தன் மணாளனாக எண்ணியவாறு நடந்து செல்லும் கோலத்தில் காட்சி தருபவள். மயிலாடுதுறை- திருவாரூர் வழியிலுள்ள திருவீழிமிழலை அம்மையை சுயம்வர கௌரிஎன்பர். இவளை வழிபட மனதிற்குப் பிடித்த மணாளன் அமைவார்.
09 ஸ்ரீ கஜ கௌரி
காசி அன்னபூரணி ஆலயத்தில் ஸ்ரீ கஜ கௌரிக்கு தனிச்சந்நிதி உள்ளது. தமிழகத்தில், ராமேஸ்வரத்தில் அருள்புரியும் ஸ்ரீ பர்வதவர்த்தினி அன்னையே கஜ கௌரியாகப் போற்றப்படுகிறாள். இந்த தேவியை வணங்கினால் குழந்தைச் செல்வம் கிட்டும்; வம்சம் விருத்தியாகும்.
10 ஸ்ரீ விஜய கௌரி
நற்செயலால் ஒருவன் பெரிய அந்தஸ்தை அடைந்திருந்தாலும், அதன் முழுப்பயனையும் அனுபவிக்கச் செய்பவள் ஸ்ரீ விஜய கௌரி. திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் உள்ள ஸ்ரீ வடாரண்யேஸ்வரர் – ஸ்ரீ வண்டார்குழலி ஆலயத்தில் மகாகாளி அருள்புரிகிறாள். இத்தலத்திற்கு வருபவர்கள் முதலில் இந்த தேவியை வழிபட்ட பின்தான் இறைவனை வழிபட வேண்டும். இது இறைவன் தந்த வரம் என்பதால் இந்த காளி விஜய கௌரி எனப்படுகிறாள். இறைவனுடன் போட்டி நடனமாடிய இந்த தேவியை வழிபட்டால் எதிலும் வெற்றி கிட்டும்; பகைவர்கள் விலகுவர்.
11 ஸ்ரீ சத்யவீர கௌரி
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவர்களுக்கு உறுதுணையாக இருப்பவள் இந்த அன்னை. நாகை மாவட்டம் திருவெண்காட்டில், ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரருடன் இணைந்து அருள்புரிகிறாள் பிரம்ம வித்யாம்பிகை. இத்தேவியை வழிபட கொடுத்த வாக்கினைக் காப்பாற்றும் திறன் கிட்டும்; இந்த தேவியை வழிபட்டால் பூர்வஜென்ம பாவங்கள் நீங்கும்.
12 ஸ்ரீ வரதான கௌரி
வள்ளல் மனம் கொண்டவர்களுக்கு அருள்புரிபவள் இந்த அன்னை. பரந்தமனம் கொண்டவர்கள் விரும்பும் வரங்களை தானமாக வழங்குவதால் இவள் ஸ்ரீ வரதான கௌரி என்று போற்றப்படுகிறாள். திருவையாற்றில் அருள்புரியும் அறம்வளர்த்த நாயகியை வரதான கௌரி என்று போற்றுவர். இந்த தேவியை வழிபட்டால் கருமி கூட கொடைவள்ளல் ஆவான் என்பர்.
13 ஸ்ரீ சுவர்ண கௌரி
ஒரு பிரளய காலத்தின் முடிவில் கடலின் நடுவே சுவர்ணலிங்கம் தோன்றியது. இதனைக் கண்ட தேவர்கள் அதனைப் பூஜித்தார்கள். அப்போது அதிலிருந்து பொன்மயமாக ஈசனும், பொற்கொடியாக பராசக்தியும் தோன்றினர். எனவே, தேவியை சுவர்ணவல்லி என்று போற்றினார்கள். கும்பகோணம் ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலய மங்களாம்பிகையே சுவர்ண கௌரியாக விளங்குகிறாள். இவளை வழிபட குபேர வாழ்வு கிட்டும். குலதெய்வத்தின் அருளும் கிட்டும். இல்லத்தில் தங்க நகைகள் சேரும். தொழிலில் லாபம் கிடைக்க அருள்பவள்.
14 ஸ்ரீ சாம்ராஜ்ய மகாகௌரி
அன்பையும் வீரத்தையும் ஒருங்கே அருளும் தேவியாவாள். தலைமைப் பதவியைத் தரும் இவள் ராஜராஜேஸ்வரியாகவும் வழிபடப்படுகிறாள். இந்த தேவியின் அருள் இருந்தால் ராஜயோகம் கிட்டும். உயர் பதவிகள் தேடிவரும். மதுரை மீனாட்சியே சாம்ராஜ்ய மகாகௌரியாகப் போற்றப்படுகிறாள்.
15 ஸ்ரீ அசோக கௌரி
துன்பமற்ற வாழ்வைத் தருபவள் இவள். ஈரோடு மாவட்டம் பவானி திருத்தலத்தில் அருளும் வேதநாயகியே அசோக கௌரியாவாள் மகிழ்ச்சியான வாழ்வைத் தருவதால் அசோக கௌரி எனப்படுகிறாள். இந்த தேவியை வழிபட துன்பங்கள் நீங்கும்; சோகம் மறையும்; சுகமான வாழ்வு கிட்டும்.
16 ஸ்ரீ விஸ்வபுஜா மகாகௌரி
தீய சக்திகளை அழித்து நல்வினைப் பயன்களைத் தருபவள். தூய எண்ணங்களை மனதில் வளரச் செய்து, விருப்பங்களை நிறைவேற்றுவதால் மனோரத பூர்த்தி கௌரி என்றும் போற்றுவர். திருவிடைமருதூர் தலத்தில் விளங்கும் ஒப்பிலாமுலையாள் எனும் அதுல்ய குசலாம்பாள் அன்னையே மேற்சொன்ன கௌரியாகத் திகழ்கிறாள். இந்த தேவியை வழிபட்டால் வேண்டியது கிட்டும்.
“ஓம் ஸுபதாயை வித்மஹே
காம மாலின்யை தீமஹி
தன்னோ கெளரீ ப்ரசோதயாத்”
அம்பிகையான கௌரி பலவித திருப்பெயர்களில் எழுந்தருளியிருந்தாலும், பக்தியுடன் விரதம் மேற்கொண்டு மனதில் எண்ணி வழிபட்டாலே போதும்; பதினாறு செல்வங்களையும் தருவாள்
ஐப்பசி மாத அமாவாசை நாளில் கேதாரகௌரி விரதம் கொண்டாடப்படுகிறது. இந்த விரதம் அனுஷ்டிப்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
ஐப்பசி மாத அமாவாசை நாளில் கேதாரகௌரி விரதம் கொண்டாடப்படுகிறது. ஜோதிடவியலைப் பொறுத்த வரை ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிப்பதால் துலா மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் துலாம் ராசியில் சூரியன் நீசம் பெற்ற நிலையில் அமர்ந்திருப்பார். அதாவது தனது வலிமை முழுவதையும் இழந்த நிலையில் வாசம் செய்யும் காலம் இது. சூரியனை தந்தைக்குரிய கிரகமாக பிதுர்காரகன் என்றும், சந்திரனை தாயாருக்கு உரிய கிரகமாக மாதுர்காரகன் என்றும் அழைப்பார்கள். சூரியனுக்குரிய பிரத்யதி தேவதை பரமேஸ்வரன். சந்திரனுக்குரிய பிரத்யதி தேவதை கௌரி.
நீசம் பெற்ற தந்தையாகிய சூரியனோடு தாயான சந்திரன் இணையும் காலம் ஐப்பசி அமாவாசை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்ற கூற்றினை மெய்ப்பிக்கும் விதமாக பலம் இழந்து நீசம் பெற்ற நிலையில் சஞ்சரிக்கும் பிதுர்காரகன் சூரியனோடு சக்தியாகிய அன்னையின் அம்சமான சந்திரன் வந்து இணையும்போது சிவம் சக்தியைப் பெறுகிறது. சிவசக்தி ஐக்கியமானது நடைபெறுகிறது. அன்றைய தினத்தில் கேதார கௌரி விரதத்தினைப் பூர்த்தி செய்து அன்னை பார்வதியானவள் சிவபெருமானின் உடம்பினில் சரிபாதியைப் பெற்று தனது உரிமையை நிலைநாட்டியதை புராணங்களின் வாயிலாக அறிகிறோம். சிவசக்தி இணைந்திருந்தால் மட்டுமே உலகம் இயங்கும்.
அவ்வாறே குடும்பத்தில் கணவனின் வலிமை குறையும்போது மனைவியானவள் அவருக்குத் துணை நிற்க வேண்டும், அவ்வாறே கணவனும் தனது துணைவிக்கு சரிபாதி உரிமையைத் தரவேண்டும் என்பதை சூசகமாகச் சொல்வதே இந்த கேதார கௌரி விரதம். இதே கருத்தினையே தீபாவளிப் பண்டிகையும் அறிவுறுத்துகிறது. நாம் தீபாவளி கொண்டாடுவதன் அடிப்படை காரணமான நரகாசுர வதத்தினை எண்ணிப் பாருங்கள். கிருஷ்ண பகவான் நரகாசுர யுத்தத்தின் போது மூர்ச்சையாகிவிட்ட நிலையில், தேரை ஓட்டும் சாரதியாக உடனிருந்த பாமா (பூமாதேவியின் மறு அவதாரம் – நரகாசுரனின் தாய்) வில்லெடுத்து போரிட்டு நரகாசுரனை வதம் செய்கிறாள் அல்லவா… அதாவது தந்தையின் வலிமை குறையும்போது தாய் அப்பொறுப்பினை சுமந்து வெற்றி காண்கிறாள்.
குடும்பத்தில் கணவனும், மனைவியும் இணைந்து செயல்பட்டால்தான் வெற்றியைக் காண இயலும் என்பதை புராணங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. கேதார கௌரி விரதம் என்பதே கணவன்-மனைவி ஒற்றுமைக்காகவும், என்றென்றும் தம்பதியர் இணைபிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் கடைபிடிக்கப்படுவதாகும். அதனை நாம் எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நரகாசுர வதம் முந்த தீபாவளியைத் தொடர்ந்து வரும் அமாவாசை நாளில் கேதார கௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
|
|
|
Post by kgopalan90 on Sept 6, 2021 0:25:57 GMT 5.5
ஹரி தாளிகா விருதம்.
09-09-2021 அன்று பாத்ரபத மாதம் சுக்ல பக்ஷம் த்ருதியை திதி காளை மாட்டின் மேல் சிவனும் பார்வதியும் உட்கார்ந்திருக்கும் படம் வைத்து கன்னி பெண்கள் மாலையில் தனது வீட்டில் 16 ட்ரேகளில் தேங்காய் பாக்கு வெற்றிலை, பழம், புஷ்பம் மஞ்சள், குங்குமம்
ரவிக்கை துண்டு ஸெளபாக்கிய திரவ்யங்கள் வைத்து கெளரி ஸஹித மஹேஸ்வராய நம: என்று சொல்லி 16 உபசார பூஜை செய்து ஸ்தோத்ரங்கள் சொல்லி வேண்டி கொண்டு 8 தம்பதிகளை
வரச்சொல்லி அவர்களுக்கு ட்ரேகள் கொடுத்து நமஸ்காரம் செய்து சாஸ்திர ஸம்மதமாந முறையில் தாங்கள்
கல்யாணம் விரும்பும் நபரை செய்து கொண்டு சீரும் சிறப்புமாக ஆநந்தமாக வாழும் படி ஆசீர்வாதம் பெற வேண்டும்.
ஸ்ம்ருதி கெளஸ்துபம் 208 படி மயாபி யேந காமேந பூஜிதாஸி மஹேஸ்வரி ராஜ்யம் தேஹி ச ஸெளபாக்கியம் ப்ரஸன்னா பவ பார்வதி என்னும் ஸ்லோகம் சொல்லவும்.
பவிஷ்யோத்திர புரணத்தில் உள்ளது. பார்வதி பரம சிவனை மணக்க விரும்பினாள். ஆலி என்னும் அவளது தோழிகள் பார்வதியை அழைத்து சென்று இந்த வ்ருதத்தை அநுஷ்டிக்க வைத்தார்கள்.
நல்ல இடத்தில் கல்யாணம் நடை பெற வேண்டிய கன்னி பெண்கள் பெற்றோர் வாழ்த்துகளுடன் இந்த பூஜை செய்யலாம்..
|
|
|
Post by kgopalan90 on Sept 2, 2021 17:23:41 GMT 5.5
தர்பை ஸங்கிரஹம்.
06-09-2021.
அவ்வப்போது தர்பை எனும் நாணல் புல்லை எடுத்து வந்து தான் வைதீக காரியங்களுக்கு உபயோகபடுத்த வேண்டும்.அவ்வாறு இயலாதவர்கள் ஆவணி மாதம் அமாவாசை தினத்தன்று மொத்தமாக தர்ப்பைகளை சேகரித்து வைத்துக்கொண்டு ஒரு வருஷம் வரை அந்த தர்பத்தை சிறிது சிறிதாக உபயோகபடுத்தலாம்.
தர்பங்களை அறுத்து எடுத்து கொண்டு வர மந்திரம். விரிஞ்சினா ஸஹோத்பன்ன பரமேஷ்டீ நிஸர்கஜ: நுத ஸர்வாணி பாபானி தர்ப்ப ஸ்வஸ்திகரோ மம.
ப்ருஹ்ம தேவனுடன் ஒன்றாக தோன்றிய தர்பமே. எனது அனைத்து பாபங்களையும் போக்கி மங்களத்தை செய்பவையாக நீ இரு.
கோகுலாஷ்டமி:-
ஸ்ரீ மத் பாகவதத்தை ஸப்தாஹ விதிப்படி ஏழு நாட்களில் கீழ் கண்டவாறு பாராயணம் செய்யலாம்.
ஸ்ரீ ராம நவமியை கர்போத்ஸவம், ஜனனோத்ஸவம் என கொண்டாடுவது போ கோகுலாஷ்டமியையு ம் கொண்டாடலாமே.
1.முதல் ஸ்கந்தம் முதல் ஸர்கம் முதல் 3வது ஸ்கந்தம் 19 வது ஸர்கம் வரை; யக்ஞ வராஹ சரித்ரம் நிவேதனம்:- சக்கரை வல்லி கிழங்கு; கடலை உருண்டை;
2. 3வது ஸ்கந்தம் 20 சர்க்கம் முதல் 5வது ஸ்கந்தம் 3வது ஸர்கம் முடிய த்ருவ சரித்ரம்; நிவேதனம் பல வகை பழங்கள், இலந்தை பழம்.
3. 5வது ஸ்கந்தம் 4 முதல் 7வது ஸ்கந்தம் 5வது ஸர்க்கம் முடிய ஸ்ரீ நரசிம்மாவதாரம்; நிவேதனம் பானகம் நீர்மோர்.
4. 8வது ஸ்கந்தம் 1 முதல் 10 ஆவது ஸ்கந்தம் 3ஆவது ஸர்கம் முடிய பயோ விரதம் நிவேதனம் பால் பாயசம்
5. 10 ஆவது ஸ்கந்தம் 4 முதல் 10 ஆவது ஸ்கந்தம் 54 ஆவது ஸர்கம் முடிய ருக்மணி கல்யாணம் நிவேதனம் பருப்பு தேங்காய், பக்ஷணங்கள்.
6. 10 ஆவது ஸ்கந்தம் 55 முதல் 11 ஆவது ஸ்கந்தம் 13 ஆவது சர்க்கம் முடிய குசேலோபாகியானம் நிவேதனம் அவல், பழங்கள்.
7.11ஆவது ஸ்கந்தம் 14 முதல் 12 ஆவது ஸ்கந்தம் 13 ஆவது ஸர்க்கம் முடிய நிவேதனம் சக்கரை பொங்கல், வடை. பாகவத பூர்த்தி.
24-08-2021 டு 30-08-2021 கர்போத்சவம். ; 30-08-2021 டு 05-09-2021 முடிய ஜனனோத்ஸவம்.
|
|
|
Post by kgopalan90 on Aug 12, 2021 5:01:51 GMT 5.5
14-08-2021 சீதளா ஸப்தமி.
எப்போதுமே தேவர்களுக்கு அசுரர்கள் தொல்லை கொடுத்து கொண்டு இருப்பார்கள்.அசுர குரு சுக்கிராசாரியாரின் உதவியுடன் அசுரர்கள் தேவர்கள் மீது ஆபிசார ப்ரயோகம் செய்தனர்.
இதனால் தேவர்கள் உடலில் வைசூரி போட்டியது. தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன் தலையிலிருந்த சந்திரனிடமிருந்தும், கங்கை யிடமிருந்தும் ஒரு பேரொலி ஏற்பட்டது. இந்த பேரொலியே சீதளா தேவி என் அழைக்கபடுகிறாள். சிராவண மாத சுக்ல பக்ஷ ஸப்தமி அன்று இது நிகழ்ந்தது.
ஆதலால் சீதளா தேவியை பூஜை செய்து தயிர் சாதம், வெள்ளறிக்காய் மாம்பழம் நிவேதனம் செய்து அதை தானம் செய்து விட வேண்டும்.
ஒரு இலையில் தயிர் சாதம், ஒரு மாம்பழம், ஒரு வெள்ளரிக்காய் வைத்து நைவேத்யம் செய்து மம புத்ர பெளத்ராதி அபிவ்ருத்தி த்வாரா ஸபரிவார சீதளாதேவி ப்ரீத்யர்த்தம்
சிராவண சுக்ல ஸப்தமி புண்ய காலே இதம் ஆம்ர பலம், கர்கடீ பல ஸஹித தத்யோதனம் சீதளா தேவி ப்ரீத்யர்த்தம் தானம் அஹம் கரிஷ்யே என்று சொல்லி தெய்வ ஸன்னிதியில் வைத்து விட்டு ஏழைகளுக்கு தானம் செய்துவிட வேண்டும்.
உடலில் ஏற்படும் கட்டிகள், அம்மை, வைசூரி, முதலான பிணிகள் , நீண்ட நாட்களாக இருக்கும் வியாதிகள் நீங்கும். குடும்பத்திலும் இம்மாதிரி வியாதிகள் ஏற்படாது எங்கிறது கந்த புராணம
12-08-2021- தூர்வா கணபதி விரதம்.
சிராவண மாதம் சுக்ல பக்ஷ சதுர்த்தி அன்று தூர்வா கணபதி வ்ருதம்.
இன்று காலை சுத்தமான ஓரிடத்தில் கோலம் போட்டு தரை முழுவதும் அருஹம் பில்லை=(தூர்வை) ..நிறைய பரப்பி அந்த அருகம்புல்லின் மீது கணபதியின் படமோ அல்லது விக்கிரஹமோ வைத்து 16 உபசார பூஜைகளும்
அருகம் புல்லால் செய்யவும். கொப்பரை தேங்காய் அவல் நிவேதனம் செய்யவும் .கற்பூரம் காட்டி நமஸ்கரித்து முடிவில் கீழ் வரும் பத்து நாமாக்களால் அருகம் புல்லால் அர்ச்சனை செய்து கீழ் வரும் ஸ்லோகம் ப்ரார்தித்து கொள்ளவும்.
1. கணபதயே நம: 2. உமாபுத்ராய நம: 3. அகநாசனாய நம: 4. ஏக தந்தாய நம: 5. இபவக்த்ராய நம: 6. மூஷிக வாஹணாய நம: 7. விநாயகாய நம: 8, ஈச புத்ராய நம: : 9. ஸர்வ ஸித்தி ப்ரதாயகாய நம: 10. குமார குரவே நம:
கணேஸ்வர, கணாத்யக்ஷ கெளரீபுத்ர கஜானன வ்ரதம் ஸம்பூர்ணதாம் யாது த்வத் ப்ரஸ்ஸாதாத் இபாநந..
இவ்வாறு இன்று பிள்ளையாரை அறுகம் புல்லால் நியமத்துடன் பூஜிப்பவர்களுக்கு அனைத்து இடையூறுகளும் விலகி அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
13-08-2021. நாக பஞ்சமி---கருட பஞ்சமி.
கச்யபருக்கு கத்ரூ என்பவளிடம் உண்டானவர் நாகர். தாய் சொல்லை கேட்காததால் தாயே தீயில் விழுந்து இறக்கும்படி சபித்தாள். அந்த சாபத்தால் பல பாம்புகள் தீயில் மாண்டன. அஸ்தீகர் ஜனமேஜயனின் சர்ப்ப யாகத்தை
நிறுத்தி சாபத்தை அகற்றினார். அது இந்த சிராவண சுக்ல பக்ஷ பஞ்சமி திதி அன்று தான். ஆகவே இன்று பாம்புகளை பூஜித்தால் நன்மை உண்டாகும். ஆகவே இன்று பாம்பு புற்றுக்கு பால் ஊற்றி பூஜை செய்யலாம்.
மேலும் வம்சத்தில் நல்ல குழந்தைகள் ஏற்படவும் ஏற்படாமல் செய்யவும் சக்தியுடையவர் நாகராஜா. .. ஸந்தானம் உண்டாக நாகப்ரதிஷ்டை செய்ய சொல்கிறது சாஸ்திர விதி. மஹா விஷ்ணு அனந்தன் என்ற பாம்பாக
இருந்து கொண்டு பூமியை தாங்கி வருகிறார், அவருக்கு உதவியாக தக்ஷன் , வாஸுகி, கார்கோடன் என்ற பாம்புகளும் உள்ளன.
தினசரி ஸந்தியாவந்தனத்தில் அபஸர்ப்ப ஸர்ப்ப பத்ரந்தோ என்று சொல்லி பாம்புகளை ப்ரார்திக்கிறோம்.
வயலில் வேலை செய்து கொண்டு இருந்த ஒரு பெண்மணியின் நான்கு ஸஹோதரர்களை ஸர்ப்பம் தீண்டியது. அந்த பெண்மணி ஸர்ப்ப பூஜை செய்து ப்ரார்தித்து தனது சஹோதரர்களை காப்பாற்றினாள்...
அதுவே நாக பஞ்சமி. ஆகவே இன்று ஸஹோதரிகள் தன் உடன் பிறந்த ஸஹோதரர்களின் நன்மைக்காக வீட்டில் ஏதாவது ஒரு உலோகத்தில் செய்த பாம்பு பிம்பத்தையும், நடுவில் புஷ்பம் கட்டிய ஒரு மஞ்சள் சரட்டையும்
பூஜை செய்து தனது வலது கையில் சரட்டை கட்டி கொள்ள வேண்டும் .வீட்டில் பூஜை முடிந்த பிறகு அருகில் உள்ள பாம்பு புற்றுக்கு சென்று பால் விட்டு தாம்பூலம், பழம் வைத்து நிவேதனம் செய்து கற்பூரம் ஏற்றி விட்டு
வர வேண்டும் .புற்றுக்கு சென்று பால் விட்டு வர வசதி இல்லாதவர்கள் நாக பிம்பத்திற்கே பாலாபிஷேகம் செய்து விட வேண்டும்.
வீட்டிற்கு வந்ததும் வாயிற்படியின் இரு பக்கங்களிலும் மஞ்சள் பூசி , குங்குமத்தால் மேலே வால் தலை கீழே பாம்பு படம் வரைந்து கற்புரம் ஏ ற்றி நமஸ்கரித்து விட்டு உள்ளே செல்ல வேண்டும்.
பாம்பு புற்று மண் எடுத்து வந்து அத்துடன் சிறிது அக்ஷதை சேர்த்து ஸஹோதரர்கள் வெளியூரில் இருந்தால் தபாலில் அனுப்பலாம். உள்ளூரில் இருந்தால் நேரில் சென்று கொடுத்து ஸஹோதரர் வயதில் மூத்தவராக
இருந்தால் நமஸ்காரம் செய்யலாம். சிறியவராக இருந்தால் ஆசீர்வாதம் செய்யலாம். ஸஹோதரர்களும் தன் சக்திக்கு தக்கப்படி ஏதாவது பொருளை அன்பளிப்பாக தாம்பூலத்துடன் ஸஹோதரிக்கு கொடுக்கலாம்..
11-08-2021 ஆடிப்பூரம்..
பொறுமையின் சின்னமான பூமா தேவி பக்தியால் இறைவனை அடையலாம் என்பதை எடுத்துகாட்ட ஆண்டாளாக இந்த பூமியில் அவதரித்த நன்னாள் ஆடிப்புரம்.. துளசி தோட்டத்தில் அவதரித்தாள். கோதை என்று பெயர்சூட்டப்பட்டது.
பெருமாளுக்கு சூட்ட பட வேண்டிய மாலையை தன் கழுத்தில் போட்டு அழகு பார்ர்த்து கோவிலுக்கு அனுப்பிவிடுவாள்.பெருமாள் கோதை சூடிய மாலையையே நான் சூடுவேன். மலரால் மட்டும் அல்லாமல் மனதாலும் உம் பெண் என்னை ஆண்டாள் என்று குரல் எழுப்பினார்.
ஆதலால் ஆண்டாள் எனப்பெயர் பெற்றாள். இறைவனையே துணைவனாக அடைந்த ஆண்டாளின் பிறந்த நாளை நாமும் கொண்டாடுவோம்.
15-8-2021. Bhanu sapthami. 29-08-2021.
பானு ஸப்தமி 15-08-2021 & 29-08-2021. அன்று. இது ஸூர்ய கிரஹணத்திற்கு சமமான நாள். காலை 8-30மணி முதல் 10-30 மணி வரை 1008 காயத்ரி ஜபம் ஸங்கல்பம் செய்து கொண்டு செய்யலாமே.
மஹா சங்கடஹர சதுர்த்தி. 25-08-2021.
சிராவண க்ருஷ்ண சதுர்த்தி.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை ( கிருஷ்ண பக்ஷம்) சதுர்த்தி திதிக்கு ஸங்கட ஹர சதுர்த்தி எனப் பெயர். ஆனால் சிராவண மாத தேய் பிறை சதுர்த்திக்கு மஹா சங்கடஹர சதுர்த்தி எனப்பெயர்
ஒரு வருடம் தம்பதியாக இன்று ஆரம்பித்து ஒவ்வொரு மாதமும் இந்த விருதத்தை அநுஷ்டிக்கலாம்.
“”சிராவணே பகுளே பக்ஷே சதுர்த்யாம் து விதூதயே கணேசம் பூஜயித்வா து சந்த்ராயார்க்யம் ப்ரதாபயேத்””
இன்று பகல் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் கணபதி படம் அல்லது விக்கிரஹம் வைத்து , மம வித்யா-தன- புத்ர- பெளத்ராதி ஸுக ப்ராப்தியர்த்தம் ஸர்வ ஸங்கஷ்ட நிராஹரணார்த்தம் ஸங்கடஹர கணபதி பூஜாம் கரிஷ்யே. என்று ஸங்கல்பித்து கொண்டு
அஸ்மின் படே கஜாஸ்யாய நம: ஆவாஹயாமி; விக்னராஜாய நம: ஆஸனம் சமர்பயாமி. ஏகதந்தாய நம: பாத்யம் ஸமர்பயாமி ;;சங்கர ஸுநவே நம: அர்க்கியம் ஸமர்பயாமி; உமா ஸுதாய நம: ஆசமனீயம்
ஸமர்பயாமி; வக்ரதுண்டாய நம: பஞ்சாம்ருத ஸ்நானம் ஸமர்பயாமி;
ஹேரம்பாய நம: ஸ்நானம் ஸமர்பயாமி; சூர்ப்ப கர்ணாய நம: வஸ்த்ரம் ஸமர்பயாமி; குப்ஜாய நம: யக்ஞோபவீதம் ஸமர்பயாமி;
கெளரீ புத்ராய கணேஸ்வராய நம : கந்தம் ஸமர்பயாமி; உமா புத்ராய நம:
அக்ஷதான் ஸமர்பயாமி; சிவஸுநவே நம: புஷ்ப மாலாம் ஸமர்பயாமி;
விக்ன நாசினே நம: புஷ்பானி பூஜயாமி; விகடாய நம: தூபம் ஆக்ராபயாமி
வாமனாய நம: தீபம் தர்சயாமி; சர்வாய நம: நைவேத்யம் நிவேதயாமி;
21 கொழுக்கட்டை (மோதகம்) –நிவேதனம்; ஸர்வார்த்தி நாசினே நம: பலம் ஸமர்பயாமி( பழங்கள் நிவேதனம் செய்யவும்); விக்ன ஹர்த்தரே நம;
தாம்பூலம் ஸமர்பயாமி; ஸர்வேஸ்வராய நம: தக்ஷிணாம் ஸமர்பயாமி;
ஈச புத்ராய நம: கற்பூர நீராஜனம் ஸமர்பயாமி; என்று சொல்லி உபசார பூஜைகள் முடித்து விட்டு பசும்பால் அல்லது சந்தனம் கலந்த நீரால் கீழ்
கண்ட 4 சுலோகம் சொல்லி கணபதியின் முன்பாக ஒரு கிண்ணத்தில் அர்க்கியம் விடவும்.
1, க்ஷீர ஸாகர ஸம்பூதஸுதா ரூப நிசாகர; க்ருஹாணார்க்யம் மயா தத்தம்
கணேச ப்ரீதி வர்த்தன ரோஹிணி ஸஹித சந்த்ர மஸே நம: இதமர்க்கியம்,
இதமர்க்கியம், இதமர்கியம்;
2. கணேசாய நமஸ்துப்யம் ஸர்வஸித்தி ப்ரதாயக ;ஸங்கஷ்டம் ஹர மே தேவ க்ருஹாணார்கியம் நமோஸ்துதே கணேசாய நம: இதமர்க்கியம்;
இதமர்கியம், இதமர்க்கியம்.
3.கிருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் து பூஜிதஸ் த்வம் விதூதயே க்ஷிப்ரம்
ப்ரஸாதிதோ தேவ க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே ஸங்கஷ்ட ஹர கணேசாய நம: இதமர்கியம்,இதமர்கியம், இதமர்கியம்.
4.திதீ நாம் உத்தமே தேவி கணேச ப்ரிய வல்லபே ஸர்வ ஸங்கஷ்ட நாசாய
சதுர்த்யர்கியம் நமோஸ்துதே; -சதுர்தியை நம; இதமர்கியம்; இதமர்கியம், இதமர்க்கியம்.
கணபதியி “”ஓம் நமோ ஹேரம்ப மத மோதித மம ஸர்வ ஸங்கஷ்டம் நிவாரய நிவாரய ஹூம் பட் ஸ்வாஹா””
என்னும் மந்திரத்தை 4444 அல்லது 444 தடவை ஜபிக்கவும்.
பிறகு கணபதிக்கு நிவேதனம் செய்த 21 கொழுகட்டைகளில் ஒரு ஐந்து கொழுகட்டைகளை ஏதாவது ஒரு குழந்தைக்கு கொடுத்து சாப்பிட சொல்லவும். மீதியை நீங்கள் .கணபதியை ப்ரார்த்திக் கொண்டு, சந்திரனை தரிசித்து விட்டு சாப்பிடலாம்.
இவ்வாறு செய்ய இயலாதவர்கள் அர்க்கியம் மட்டும் தந்து விட்டு சந்திரனை தரிசித்து விட்டு சாப்பிடலாமே. இதனால் அனைத்து இன்னல்களும் விலகும் என்கிறது கணேச புராணம்.
|
|
|
Post by kgopalan90 on Aug 4, 2021 17:05:08 GMT 5.5
உங்கள் உயரம் எடை சரியாக உள்ளதா.ஆகாரம் மாற்றி சரி செய்து கொள்ளுங்கள்.
உணவுகளின் கலோரி 100 கி எடைக்கு பொருந்தும்.
டீ 150 மில்லி 25 கலோரி; காபி 150 மில்லி-30 மில்லி பாலுடன் சக்கரை இல்லாமல் 30 கலோரி;
மோர் 15 கலோரி; இள நீர் 24 கலோரி; தண்டுக்கீரை 45 கிலோ; கீரை தண்டு 19 கலோரி;; சிறுகீரை 33 கலோரி;
முளைக்கீரை 43 கலோரி; அரைகீரை 44 கலோரி; குப்பை கீரை 34 கலோரி; முட்டை கோஸ் 27 கலோரி;
கொத்தமல்லி 44 கலோரி; வெந்தய கீரை 49 கலோரி; புதினா 48 கலோரி;பருப்பு கீரை 28 கலோரி;
பசளைக்கீரை 26 கலோரி; வெள்ளை பூசணி 10 கலோரி; பீன்ஸ் 48 கலோரி; பாகற்காய் 25 கலோரி.
சுரைக்காய் 12 கலோரி; கத்திரிக்காய் 24 கலோரி; அவரைக்காய் 48 கலோரி;காலி ப்ளவர் 30 கலோரி
வெண்டைக்காய் 35 கலோரி; மேரக்காய் 27 கலோரி. கொத்தவரங்காய் 16 கலோரி;வெள்ளரிக்காய் 13 கலோரி;
முருங்ககாய் 26 கலோரி; பீர்க்கங்காய் 17 கலோரி; புடலங்காய் 18 கலோரி;தக்காளிக்காய் 23 கலோரி
தக்காளி பழம் 20 கலோரி; பீட் ரூட் 43 கலோரி;காரட் 48 கலோரி; பெரிய வெங்காயம் 50 கலோரி;
வெள்ளை முள்ளங்கி 17 கலோரி; சிவப்பு முள்ளங்கி 32 கலோரி; குடை மிளகாய் 24 கலோரி;
கோவைக்காய் 18 கலோரி; நூல்கோல் 21 கலோரி; வெங்காய தாள் 11 கலோரி;மஞ்சள் பூசணி 25 கலோரி
வாழைத்தண்டு 42 கலோரி; வாழைப்பூ 34 கலோரி; மாங்காய் 44 கலோரி;பச்சை மிளககாய்29 கலோரி
கொய்யா பழம் 38 கலோரி; சாத்துகுடி43 கலோரி; தர்பூசணி 16 கலோரி; ஆரஞ்ச் 48 கலோரி; பப்பாளி
பழம் 32 கலோரி; அன்னாசி பழம் 46 கலோரி; பச்சபயிறு சுண்டல் 33 கலோரி; பட்டாணி சுண்டல் 33
பால் 100 மில்லி 100 கலோரி; தயிர் 0.5 கப் 60 கலோரி; சாம்பார் 65 கலோரி;ஆப்பிள் 59 கலோரி;
தக்காளி சட்னி 52 கலோரி; வெங்காய சட்னி 65 கலோரி; புதினா சட்னி 64 கலோரி; சிறிய வெங்காயம்
59 கலோரி; பச்சை பட்டாணி 93 கலோரி; உருளைக்கிழங்கு 93கலோரி; சேனை கிழங்கு 79 கலோரி;
கொடி கிழ்ங்கு 97 கலோரி; வாழைக்காய் 64 கலோரி; திராக்ஷை 58 கலோரி; பலாபழம் 88 கலோரி;
எலுமிச்சம் பழம் 57 கலோரி; மாம்பழம் 74 கலோரி; மாதுளை 65 கலோரி; சப்போட்டா 98 கலோரி
அகத்திகீரை 93 கலோரி; ராஜ கீரை 67 கலோரி;சக்கரைவர்த்தி கீரை 57 கலோரி; முருங்கை கீரை 92
கலோரி;மணத்தக்காளி கீரை 68 கலோரி; பொன்னாங்கன்னி கீரை 73 கலோரி; டபிள் பீன்ஸ் 85 கலோரி
இஞ்சி 67 கலோரி; நெல்லிக்காய் 58 கலோரி; கொண்டைகடலை சுண்டல் 63 கலொரி; கருப்பு
கொண்டை கடலை சுண்டல் 67 கலோரி; தட்டை பயிறு சுண்டல் 62 கலொரி;
இட்லி 2 140 கலொரி ; தோசை -2- 200 கலோரி; சப்பாத்தி 2 100 கலோரி; உப்புமா 200 கலொரி; பொங்கல்
138 கலோரி; ஆப்பம் 2 100 கலோரி; இடியாப்பம் 100 கலொரி; அரிசி சாதம் 113 கலோரி; கோதுமை
சாதம் 114 கலோரி; சாம்பார் சாதம் 136 கலோரி; தக்காளி சாதம் 154 கலோரி; புளி சாதம் 125 கலோரி
தயிர் சாதம் 160 கலோரி; எலுமிச்சை சாதம் 124 கலோரி; மீன் குழம்பு 141 கலோரி;ஆம்லெட் 2 190 க
லோரி; வேக வைத்த முட்டை 2- 170 கலோரி; வாழைபழம் 116 கலோரி; சீதாபழம் 104 கலோரி;
மரவள்ளிகிழங்கு 157 கலொரி; ஓவல்டின்/போர்ன்விட்டா 125 கலொரி;கிச்சடி 168 கலொரி;
கருணைக்கிழங்கு 111 கலோரி; சக்கரை வள்ளி கிழங்கு 120 கலொரி; பூண்டு 145 கலோரி;
கருவேப்பிலை 108கலோரி;
மசால் தோசை-2- 220 கலோரி; ஊத்தப்பம்-2-220 கலோரி; தேங்காய் சட்னி 325 கலோரி;
பூரி-2-318 கலோரி; பூரி மசால்-2-418 கலோரி; பரோட்ட-1-310 கலோரி; வெஜிடபுள் பிரியானி
382 கலோரி; நூடுல்ஸ் 375 கலோரி; பிரைடு ரைஸ் 374 கலோரி; கோழி கறி 205 கலோரி;
வறுத்த மீன் 256 கலோரி; ஆட்டு இறைச்சி 374 கலோரி; பன்றி இறைச்சி 375 கலோரி;
பேரீச்சை பழம் 317 கலோரி; ஐஸ் க்ரீம் 217 கலோரி; பர்ஃபி 296 கலோரி; சமோசா-2-256 கலோரி
வடை-2-243 கலொரி; போண்டா-2-223 கலோரி; பஃப் 2- 356 கலோரி; லட்டு/மைசூர் பாகு 387
கலோரி; குலாப் ஜாமூன் 400 கலோரி; ரசகுல்லா 340 கலோரி; கோதுமை பிரட் 244 கலொரி
சாதாபிரட்245 கலோரி; சக்கரை 398 கலோரி; தேன் 319 கலோரி; வெல்லம் 383 கலோரி.
ஜவ்வரிசி 351 கலோரி; கடலை பருப்பு 372 கலோரி; பொட்டு கடலை 369 கலோரி;
கொள்ளு 321 கலோரி; காய்ந்த சுண்டைக்காய் 269 கலோரி; ஏலக்காய் 229 கலோரி;
பெருங்காயம் 297 கலோரி; வர மிளகாய் 246 கலோரி; கிராம்பு 286 கலோரி; தனியா 288 கலோரி
சீரகம் 356 கலோரி; வெந்தயம் 333 கலோரி; மிளகு 304 கலோரி; மஞ்சள் தூள் 349 கலோரி;
புளி 283 கலோரி; பன்னீர் 265 கலோரி;
தேங்காய் பால் 430 கலோரி; பக்கோடா 474 கலோரி; முறுக்கு 529 கலோரி; தட்டை 521 கலோரி;
உருளை கிழங்கு சிப்ஸ் 569 கலோரி; மிக்சர் 500 கலோரி; கேக் 460 கலோரி; பாதாம் 655 கலோரி
முந்திரி 596 கலோரி; வெண்ணைய் 729 கலோரி; நெய் 900 கலோரி; டால்டா 900 கலோரி;
சமையல் எண்ணைய் 900 கலோரி; இறைச்சி உறுப்புகள் 406 கலோரி;மாட்டிரைச்சி 413 கலோரி;
பாதாம் அல்வா 570 கிலோரி;ம்ஜிலேபி 412 கலொரி; சாக்லேட் 499 கலோரி; எள்ளு 563 கலோரி;
நிலக்கடலை 570 கலோரி; பிஸ்தா 626 கலோரி; கசகசா 408 கலோரி; சோயா பீன்ஸ் 432 கலோரி;
கச்சோரி 500 கலோரி; பிஸ்ஸா 580 கலோரி; பர்கர் 540 கலோரி; கொப்பரை தேங்காய் 662 கலோரி.
நெய், டால்டா; தேங்காய் எண்ணைய், நல்ல எண்ணைய், கடலை எண்ணைய், சூரிய காந்தி
எண்ணைய் பாம் ஆயில் இவை எல்லாம் 900 கலோரிகள்;
பாஸ்ட் ஃபுட் ; பிஸ்ஸா, பர்கர்,தேங்காய்,முறுக்கு,மிக்ஸர்; கேக்; சிப்ஸ், சாக்லேட், இனிப்புகள் 400 டு 600 கலோரி;
ஐஸ் க்ரீம், பூரி மசால்;பிரியானி, நூடுல்ஸ்; ஃப்ரைடி ரைஸ், எண்ணையில் பொரித்த பதார்த்தங்கள், அசைவ உணவு 200 டு 400 கலோரி;
இட்லி, தோசை, சப்பாத்தி;சாத வகைகள் ; பாரம்பர்ய உணவுகள் 100 டு 200 கலோரிகள்;
தக்காளி, புதினா, வெங்காய சட்டினி வகைகள்; சாம்பார்; சுண்டல்; பால்;பச்சை காய்கள், கீரைகள்;
சில பழங்கள் 50 டு 100 கலோரி.
கலோரி அளவு தோராயமானதே. மூல பொருட்களை பொருத்து அளவுகள் மாறுபடலாம்.
நீங்கள் இருக்க வேண்டிய எடையை தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் இருக்க வேன்டிய எடை =உயரம் செ.மீ)- 100 தோராயமான மதிப்பீடு.
பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு தேவையான கலோரி 25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு.
நீங்கள் இருக்க வேன்டிய எடையை விட 5-10 கிலோ குறைவாக இருந்தால் உங்களுக்கு
தேவையான கலொரி 35x சரியான எடை.
நீங்கள் இருக்க வேண்டிய எடையில் இருந்தாலுங்களுக்கு தேவையான கலோரி =3௦x சரியான எடை
நீங்கள் இருக்க வேண்டிய எடையை விட 10 கிலோ அதிக மாக இருந்தால் 25x சரியான எடை.
நீங்கள் இருக்க வேண்டிய எடையை விட 20 கிலோ அதிக மாக இருந்தால் உங்களுக்கு
தேவையான கலோரி2௦x சரியான எடை.
குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு தேவையான கலோரி 14 வயதுக்கு கீழ் 1000கலோரிகள்+
வயது x100.
பெண்கள். Medium frame அடி.அங்குலம். செண்டிமீட்டர் இருக்க வேண்டிய எடை கிலோ.
4’10’’ 148 41டு48
4’11’’ 150 44டு49
5’00’’ 152 45டு51
5’01’’ 154 47டு52
5’02’’ 158 48டு54
5’03 160 49டு55
5’04’’ 162 51டு57
5’05’’ 164 52டு59
5’06’’ 168 54டு61
5’07’’ 170 56டு63
5’08’’ 172 58டு64
5’09’’ 176 59டு66
5’10’’ 178 61டு68
5’11’’ 180 63டு70
6’00’’ 182 66டு72
ஆண்கள்:-
ஆண்கள். அடி அங்குலம்.medium frame. செண்டிமீட்டர். இருக்க வேண்டிய எடை கிலோ.
5’2’’ 158 53டு58
5’3’’ 160 54டு60
5’4’’ 162 56டு61
5’5’’ 166 57டு63
5’6’’ 168 59டு64
5’7’’ 170 60டு66
5’8’’ 174 62டு69
5’9’’ 176 64டு70
5’10’’ 178 66டு72
5’11’’ 180 68டு74
6’0’’ 184 69டு77
6’1’’ 186 71டு79
6’2’’ 188 73டு81
6’3’’ 190 75டு83
6’4’’ 192 78டு86
|
|
|
Post by kgopalan90 on Jul 26, 2021 19:14:42 GMT 5.5
27-07-2021. பெளம சதுர்த்தி.
செவ்வாய் கிரஹத்திற்கு பெளமன் என்ற ஒரு பெயரும் உண்டு. செவ்வாய் கிழமையன்று சதுர்த்தி திதி வந்தால் அதற்கு பெளம சதுர்த்தி என்று பெயர்.
இன்று ஒரே படத்திலிருக்கும் முருகன், பிள்ளயார் படத்தினில் இவர்கள் இருவரையும் சேர்த்து 16 உபசார பூஜை செய்து கொழுக்கட்டையும் துவரம் பருப்பு சுண்டலும் நைவேத்யம் செய்து
ஸ்தோத்ரங்கள் சொல்லி பிரார்தித்து கொள்ளவேண்டும்.இதனால் கடன் கொடுத்தவர்கள் தொல்லை தீரும். தீராத கடனும் தீரும்.
|
|
|
Post by kgopalan90 on Jun 17, 2021 14:15:41 GMT 5.5
பாப ஹர தசமி 20-06-2021
கங்காவதாரம். பாபஹர தசமி.20-06-2021
ஜ்யேஷ்ட மாத சுக்ல பக்ஷ தசமி திதியும் ஹஸ்த நக்ஷத்திரம் உள்ள
நாளில் பகீரத மஹா ராஜாவின் கடும் முயற்சியால் கங்கா தேவி ஆகாசத்திலிருந்து பூமிக்கு அழைத்து வரப்பட்டாள்.
இந்த நன்னாளே கங்காவதாரம் என்று அழைக்கபடுகிறது .இதில் சக்தி உள்ளவர்கள் கங்கையில் ஸ்நானம் செய்யலாம். .அல்லது மற்ற நதிகளிலும் கங்கையை ஸ்மரித்து ஸ்நானம் செய்யலாம்.. அல்லது
வீட்டிலோ கங்கையை மனதால் நினைத்துக்கொண்டு முறையாக ஸ்நானம் செய்ய வேண்டும்.
வீட்டில் உள்ள கங்கை சொம்பு ஜலத்தை பூஜித்து கங்கா தீர்தத்தினால் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யலாம் .அனைத்து இன்னல்களும் விலகி மன நிம்மதி ஏற்படும்.
ராமாயணத்திலுள்ள கங்காவதார கட்டம் பாராயணம் செய்யலாம்.
.
தீபாவளி நாள் போல் இன்றும் எல்லா ஜலத்திலும் கங்கையின் ஸான்னித்யம் இருப்பதாக ஸ்காந்த புராணம் கூறுகிறது. கங்கா ஸ்நான பலன் உண்டு,
இன்று முறைப்படி ஸ்நானம் செய்வதால் பத்து விதமான பாபங்களிலிருந்தும் விடுபடுவான்.. ஆகவே இந்த நாளுக்கு பாபஹரா தசமீ என்ற பெயர் உண்டு.
ஜ்யேஷ்டே மாஸி , சுக்ல பக்ஷே தசம்யாம் பானு ஹஸ்தயோ: வ்யதீபாதே கரஜ கரணே கன்யா சந்த்ரே வ்ருஷே ரவெள என்பதாக
ஜ்யேஷ்ட மாதம், சுக்ல பக்ஷம், தசமி திதி புதன் கிழமை, ஹஸ்த நக்ஷத்திரம், வ்யதீபாத யோகம், கரஜ கரணம், கன்யா ராசியில் சந்திரன் இருத்தல், வ்ருஷப ராசியில் சூரியன் இருத்தல்.
ஆனந்த யோகம்(புதனும் ஹஸ்த நக்ஷதிரமும் சேருதல்) ஆகிய பத்தும் ஒன்று சேருகின்றன. ஆண்கள், பெண்கள் என்று ஜாதி மத வேறுபாடின்றி அனைவரும் இன்று காலையில் எழுந்து தினந்தோறும் செய்யும் நித்ய கர்மாகளையும் முடித்து விட்டு சுக்லாம்பரதரம்+++ ஸர்வ விக்ன உப சாந்தயே.
ஆண்களுக்கு மாத்திரம் ப்ராணாயாமம், மமோபாத்த ஸமஸ்த துரியத் க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ருஹ்மன: த்விதீய பரார்த்தே ஶ்வேத வரஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதிதமே கலி யுகே ப்ரதனே பாதே ஜம்பூத்த்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ; தக்ஷிணே பார்ஸ்வே ஷாலி வாஹன சகாப்தே அஸ்மின் வர்த்த
மானே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே ப்லவ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே சுக்ல பக்ஷே தசம்யாம் சுப திதெள, பானு வாஸர, சித்ரா நக்ஷத்ர, பரிசும் நாம யோக வணிஜ கரண யேவங்குண ஸகல விசேஷன விசிஷ்டாயாம்
அஸ்யாம் தசம்யாம் சுப திதெள ஏதஜ் ஜன்மதி, ஜன்மாந்திர ஸமுத்பூத த்ரிவித காயிக, , சதுர்வித
வாசிக, த்ரிவித மாநஸேதி ஸ்காந்தோக்த தசவித பாப நிராஸ, த்ரயஸ் த்ரிம்சத் சத பித்ருத்தார ப்ருஹ்ம லோகா (அ)வாப்த்யாதி பல
ப்ராப்தியர்த்தம், ஜ்யேஷ்ட மாஸ, ஸித பக்ஷ, தசமி, பானு வாஸர, சித்ரா தாரக, வணிஜ கரண, வ்யதீபாதா(ஆ)நந்த யோக கன்யாஸ்த சந்த்ர, வ்ருஷபஸ்த ஸூர்யேதி தச யோக பர்வணி பாபஹர தசமீ
மஹா புண்ய காலே அஸ்யாம் (மஹாநத்யாம்) அல்லது அஸ்மின் கிரஹே ஸ்நானம் அஹம் கரிஷ்யே.
(இவைகளில் தசமியும் வ்யதீபாத யோகமும் மிக முக்ய மானது.. மற்றவை ஒரு சில வருஷங்களில் ஒன்று சேரும். )
என்று சங்கல்பம் செய்து கொண்டு முறைப்படி, நதி அல்லது, குளம், கிணறு, அல்லது ஏரி, அல்லது வீட்டிலேயோ கீழ் கண்ட ஸ்லோகங்கள்
சொல்லி கங்கா தேவ்யை ப்ரார்தனை செய்துகொண்டு பத்து விதமான பாபங்களும் விலகுவதாக மனதில் எண்ணிக்கொண்டு பத்து தடவை ஸ்நானம் செய்ய வேண்டும்.
கங்கா கங்கேதி யோ ப்ரூயாத் யோஜநானாம் சதைரபி முச்யதே ஸர்வ பாபேப்யோ விஷ்ணு லோகம் ஸ கச்சதி.
நமோ பகவத்யை தச பாப ஹராயை கங்காயை நாராயண்யை, ரேவத்யை சிவாயை தக்ஷாயை அம்ருதாயை விச்வரூபிண்யை நந்தின்யை தே நமோ நம:
இவ்வாறு முறைப்படி ஸ்நானம் செய்த பிறகு ஆடை உடுத்தவும். நெற்றி கிட்டு கொள்ளவும். மயாக்ருத தசஹரா ஸ்நானாங்கம் அர்க்ய ப்ரதானம் கரிஷ்யே. கை நிறய சுத்த ஜலம் எடுத்து கிழக்கு நோக்கி கீழ் கண்ட ஸ்லோகங்கள் சொல்லி அர்க்யம் விட வேண்டும்.
நம: கமல நாபாய நமஸ்தே ஜல சாயினே நமஸ்தேஸ்து ஹ்ருஷீகேச க்ருஹானார்க்யம் நமோஸ்துதே. ஜலசாயினே நம: இதமர்க்யம்.
ஏஹி ஸூர்ய ஸஹஸ்ராம்சோ தேஜோராசே ஜகத்பதே
அநுகம்பய மாம் பக்த்யா க்ருஹானார்க்யம் நமோஸ்துதே.
மஹாபல ஜடோத் பூதே க்ருஷ்ணே உபயதோமுகி வேதே ந ப்ரார்திதே கங்கே க்ருஹானார்க்யம் நமோஸ்துதே.க்ருஷ்ணாவேண்யை நம: இதமர்க்யம். இவ்வாறு அர்க்யம் தந்துவிட்டு
மயாக்ருத தசஹரா ஸ்நானாங்கம் யதா சக்தி தானம் அஹம் கரிஷ்யே. என்று சொல்லி பத்து ஏழைகளுக்கு பத்து விதமான பழங்களும்,. அரிசி, பதினாறு கைப்பிடி அளவுக்கு குறையாமல் தானமாக வேண்டும்.
மாலையில் விஷ்ணு ஆலயம் சென்று விஷ்ணு சன்னதியில் பத்து தீபங்கள் ஏற்றி வைத்து விட்டு பத்து விதமான புஷ்பங்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
பிறகு பத்து விதமான உணவு பொருட்களை ஏழைகளுக்கு கொடுத்து
சாப்பிட செய்ய வேண்டும். இவ்வாறு முறையாக இந்த தசஹரா வ்ருதத்தை செய்பவர்கள் பத்து விதமான பாபங்களிலிருந்தும்
விடுபட்டு அனைத்து ஸுகங்களயும் அடைவார்கள் என்கிறது ஹேமாத்ரி என்னும் புத்தகம்.
தவிர்க்க வேண்டிய பத்து பாபங்கள்.
மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் உடலாலும், உள்ளத்தாலும், வாக்காலும் செய்ய படும் பாபங்கள் பத்து விதம்..
உடலால் செய்ய படும் பாபம்.மூன்று.
1. தனக்கென்று கொடுக்கபடாத பொருள்களை தான் எடுத்து உபயோகித்து கொள்வது.2. விசேஷமான விதியில்லாமல் உயிர்களை ஹிம்சிப்பது. 3. மற்றவர்களின் மனைவியினிடத்தில் தவறான எண்ணத்துடன் பழகுவது.
வாக்கால் செய்யபடும் பாபங்கள் நான்கு. 1. கடுஞ் சொற்கள் பேசுதல்.2 பொய் பேசுதல்;3 ஒருவரை பற்றி மற்றவரிடம் கோள் சொல்லுதல். 4. தேவையற்ற சம்பந்தமில்லாத பேச்சுக்களை பேசுதல்.
மனதால் செய்யும் பாபங்கள். மூன்று. மற்றவர்களின் பொருட்களை அடைய வேண்டும் என எண்ணுதல்.2. மற்றவருக்கு கெடுதல் நினைத்தல். 3. காரணமில்லாமல் மற்றவரை வெறுத்து ஒதுக்குதல்.
இந்த பாபங்களே நமக்கு ஏற்படும் துன்பங்களுக்கு காரணமாகிறது..
21-06-2021. நிர்ஜலா ஏகாதசி.
22-06-2021 கவாமயன துவாதசி.
ஜ்யேஷ்ட மாத சுக்ல பக்ஷ துவாதசியன்று காலையில் த்ரிவிக்ரம மூர்த்தியான மஹா விஷ்ணு படத்தை துளசி, மல்லிகை பூ
ஆகியவற்றால் பூஜை ஸஹஸ்ர நாமார்ச்சனை செய்து மாம்பழம் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு சாப்பாடு போட்டு குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும்.
அஹோராத்ரேண துவாதஸ்யாம் ஜ்யேஷ்டே மாஸி த்ரிவிக்ரமம் கவாமயன மாப்நோதி அப்ஸரோபிஸ்ச மோததே.
என்பதாக இன்று த்ரிவிக்ரம மூர்த்தியை பூஜிப்பதால் யாகங்களின் சிறந்ததான கவா மயனம் என்னும் யாகம் செய்த பலன் கிட்டும்.
என்கிறது ஶ்ரீ மஹாபாரதம் தான தர்ம ப்ரகரணம்..
|
|
|
Post by kgopalan90 on Jun 1, 2021 19:52:41 GMT 5.5
Bhudhashtami.
புதாஷ்டமி;- புதன் கிழமையும் அஷ்டமி திதியும் சேர்ந்து வருவது. 02-06-2021.
எந்த மாதத்திலாவது பெளர்ணமிக்கு பிறகு அல்லது அமாவாசைக்கு பிறகு வரும் புதன் கிழமை அன்று அஷ்டமி திதியும் வருமானால் அது புதாஷ்டமி விரதம், அல்லது சற்கதி விரதம் என பெயர்படும். அன்றைய தினம் விரதம் தொடங்க வேண்டும். வெல்ல பாகு மட்டுமே சிறிதளவு உட்கொள்ள வேண்டும். உள்ளங்கையிலே கடைசி மூன்று விரல்கள் கவரும் அளவை போல எட்டு பங்கு சாதம் தான் அவன் உட்கொள்ள வேண்டும்.
மாவிலையை தைத்து அதன் மேல் சாதத்தை கொட்டி , தர்பையால் கிளறி ஆற விட வேண்டும். அம்பிகையை பரிவாரங்களோடு பூஜிக்க வேண்டும். கற்கண்டினால் கலந்து தயாரிக்க பட்ட அன்னத்தை தானம் அளிக்க வேண்டும். விரத கதையை பக்தியுடன் கேட்க வேண்டும்.
புதாஷ்டமி
அக்னி புராணம் 218 ம் பக்கம் உள்ள கதை.
ஒரு சமயம் தீரன் என்னும் அந்தணன் வசித்து வந்தான். அவனது மனைவி ரம்பை . மகன் கெளசிகன், மகள் விஜயை. அவனிடம் ஒரு எருது இருந்தது. அதன் பெயர் தனதன்.
ஒவ்வொரு நாளும் மகன் கெளசிகன் மற்ற பசுக்களுடன் தனது எருதையும் மேய்த்து வர ஓட்டி செல்வான்.
ஒரு நாள் அவன் கங்கையில் நீராடிக்கொண்டிருக்கும் போது திருடர்கள் அங்கு வந்து எருதை கவர்ந்து சென்று விட்டனர். அவன் சகோதரி விஜையையும் அவனும் எருதை தேடி நாற்புரமும் சுற்றி திரிந்தனர்.
அவ்வாறு சுற்றி வரும்போது ஒரு ஏரியை அடைந்தனர். அங்கே தேவ லோக மங்கையர் பலர் வந்து நீராடிக்கொண்டிருந்தனர்.
வெகு நேரமாக காளையை தேடி அலைந்து திரிந்ததால் கெளசிகன் மிகவும் களைப்பும் பசியுடனும் இருந்தான். அங்குள்ள தேவ மங்கையர்களிடம் தனக்கு ஏதாவது உணவு அளிக்குமாறு வேண்டினான்.
அங்குள்ள மங்கையர் நீர் உம்முடைய தகுதிக்கு ஏற்ப விரதம் இருக்க வேண்டும். அப்போது நாங்கள் உணவளிப்போம் என்றனர்.
கெளசிகனும் அவர்களிடம் விரதம் இருக்க வேண்டிய வழி முறைகளை கேட்டு தெரிந்து கொண்டு அதன் படி விரதம் இருந்தான்.
அதன் பலனாக அவனது எருதும் அங்கு வந்தது. உணவும் கிடைத்தது.
பசி நீங்கியதும் தனது எருதுடனும், விஜயையுடனும் வீடு திரும்பினான்.
தீரன் தனது குமாரியை ஒருவனுக்கு மணம் செய்து வைத்தான். காலகிரமத்தில் தீரனின் வாழ்க்கை முடிவடைந்தது .
விரதம் அனுஷ்டித்ததின் பலனாக கெளசிகன் அயோத்தி நகருக்கு அரசனானான்.
தீரனும் அவனது மனைவி ரம்பையும் வாழ் நாள் முழுவதும் வீணடித்து விட்டதால் நரகத்தில் கிடந்து துன்புற்றனர். அதை காண சகிக்காது விஜயை கண்ணீர் விட்டு துக்கித்தாள்.
தன் கணவனிடம் பெற்றோர் துன்பத்தை நீக்கி அருளுமாறு பல முறை வேண்டிக் கொண்டாள். அவள் கணவன் தர்மராஜன் தனக்கு அந்த சக்தி இல்லை என்று கூறி விட்டான். விஜயைக்கு மனம் குமுறுவதை விட வேறு வழி இல்லை.
இவ்விதமிருக்கையில் ஒரு நாள் எதிர் பாரா விதமாக பெற்றோர் நரகத்தை விட்டு நீங்கி செல்வதை பார்த்தாள்.
விஜையைக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. கணவனிடம் கூறினாள். கணவன் கூறினான். இப்போது உன் தமையன் நல்ல நிலையில் உள்ளான்.
புதாஷ்டமி விரதம் இருந்த பலன் அரச பதவி கொடுத்தது. அவன் மறுபடியும் இரு புதாஷ்டமி விரதம் இருந்து அவற்றின் பலனை தன் பெற்றோர்களுக்கு அளித்தான்.
அதன் பலனே உங்கள் பெற்றோர்களின் நரக துன்பத்திலிருந்து கரை ஏற்றியது. என்றான் தர்ம ராஜன்.
இவ்வாறு கணவன் கூறியதை கேட்டதும் விஜயையும் நியமத்தோடு விரதம் இருந்து பூர்த்தி செய்தாள். இதன் பலன் பேரின்ப வாழ்வு பெற்றாள்.
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் அஷ்டமி அன்று புனர்பூசம் நக்ஷத்திரமும் கூடி வந்தால்
அன்றைய தினம் அசோக மரத்தின் வேர்கள் எட்டை ஊற வைத்து நீரை மட்டும் உட்கொண்டு எவனொருவன்
விரதம் இருக்கிறானோ அவன் எல்லாவித துக்கங்க லிருந்து விடுபட்டவனாகிறான். அவனை ஒருபோதும் எந்த துக்கமும் அணுகாது.
அன்றைய தினம் அஷ்ட மாதாக்களை வழிபட்டால் அவனுக்கு எதிரிகள் என்பவர்கள் இருக்க மாட்டார்கள்.
அந்தணர்கள் யாக யக்யங்கள் செய்ய வேன்டும். இதற்கு வசதி இல்லாதவர்கள் இம்மாதிரி விரதங்கள் இருக்க வேண்டும்.
புதாஷ்டமி 29-09-21; 13-10-2021; வருகிறது
|
|