Post by kgopalan90 on Dec 6, 2021 16:46:07 GMT 5.5
மார்கசீர்ஷ சுக்ல பக்ஷ சதுர்தி திதி;-07-12-2021 பத.ரீ கெளரி வ்ருதம். இலந்தை மரத்தினடியில் அம்மனை பூஜிக்கவும்..இலந்தை பழம் நிறய நிவேத்யம் செய்து தானும் உண்டு பிறருக்கும் கொடுக்கவும்.
இதனால் சிறந்த ஞானம் கிட்டும்.வாழ்க்கை இறுதியில் ஆத்ம தரிசனம் கிட்டும். உபநிஷத் கருத்துக்கள் நன்கு புலப்படும்.
09-12-2021. மார்கசீர்ஷ சஷ்டி திதி சிவலிங்கம் தரிசனம் செய்ய வேண்டும் என்கிறது ஸ்ம்ருதி கெளஸ்துபம் பக்கம் 430.
மார்கசீர்ஷே (அ)மலே பக்ஷே சஷ்டியாம் வாரே (அ) ம்ஸு மாலின: சத தாரா கதே சந்த்ரே லிங்கம் ஸ்யாத் த்ருஷ்டி கோசரம்
மார்கசீர்ஷ மாத சுக்ல பக்ஷ சஷ்டி திதியன்று நூறு நக்ஷதிரங்கள் ஒன்றாக சேர்ந்ததால் சத தாரா என்ற பெயருடைய சதய நக்ஷத்திரத்தில் சிவாலயத்தில் முறையாக ப்ரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்க படும் சிவலிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டும்.
இதனால் குடும்பத்தில் முன்னோர் காலத்து நிகழ்ந்த சிவாபசார தோஷங்கள் நீங்கும். குடும்பத்திலுள்ளவர்களின் மனோ புத்தி தோஷங்கள் விலகும். மனநிம்மதி அறிவு திறன் வளரும்…
10-12-2021;- சூரிய வ்ருதம்.- மித்ர ஸப்தமி அல்லது நந்த ஸப்தமி..
மார்கசிர மாதம் சுக்ல பக்ஷ ஸப்தமி திதியில் தான் அதிதிக்கும் கச்யப மஹரிஷிக்கும் ஶ்ரீ ஸூர்யன் புத்ரனாக பிறந்தார். அதித்யாம் கச்யபாஜ் ஜக்ஞே மித்ரோ நாம திவாகர: ஸப்தம்யாம் தேந ஸாக்யாதா லோகேஸ்மின் மித்ர சப்தமி.
ஸ்ம்ருதி கெளஸ்துபம்-பக்கம்-430.
பகல் முழுவதும் பூமிக்கு வெளிச்சம் கொடுப்பதால் திவாகரன் எனப்பெயர்.
அனைவருக்கும் நெருங்கிய நண்பனாவதால் மித்ரன் எனப்பெயர்.
இன்றைய தினம் பலவித புஷ்பங்களால் சூரியனை பூஜை செய்ய வேண்டும்
சூரிய காயத்ரி, சூரிய நமஸ்காரம், ஆதித்ய ஹ்ருத்யம், கோளறு பதிகம். போன்ற ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்யலாம்.
“”நாநா குஸும ஸம்பாரைர் பக்ஷ்யை: பிஷ்டமயை: சுபை: மது நா ச ப்ரசஸ்தேந ---போஜயேத்….தீநாநாதாம்ஸ்ச மாநவான் என்பதாக ஸூர்யனின் ப்ரீதிக்காக மாவினால் நெய்யுடன் சேர்ந்து செய்யப்பட்ட பக்ஷணங்களை ஸூர்யனுக்கு தேனுடன் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு கொடுத்து சாப்பிட செய்து ஸந்தோஷிக்க செய்ய வேண்டும்.
இதனால் ஆரோக்கியம் பாஸ்கராதிச்சேத் என்பதாக தீராத அனைத்து நோய்களும் தீரும். ,ஆரோக்கியம், ஆயுஸும் ஏற்படும்.