Post by radha on Aug 3, 2015 3:09:43 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCOHI MAHA PERIVA
உலக நலனுக்காக எப்போதும் யாத்திரை செய்து கொண்டே இருக்கும் சந்நியாசிகள் துறவிகள் மழைக்காலத்தில் ஜீவராசிகள் பெருகி
அலையுமாதளால் தங்கள் நடமாட்டத்தால் அவற்றுக்குத் துன்பம் நேராதவாறு ஒரே இடத்தில் தங்கி விரதம் மேற்கொள்வார்கள். இந்த
விரதமே சாதுர்மாஸ்ய விரதமாகும்.
மழைக்காலம் தொடங்கினால் எங்கும் உயிரினங்கள் பெருகியிருக்கின்றன. அவற்றுக்கு துறவியாகிய நான் துன்பம்
இக்ஷைக்காம்லிருக்கும் பொருட்டு இவ்விடத்திலேயே நான்கு மாதங்கள் தங்கியிருப்பதற்கு அனுமதி தாருங்கள் ” என்று துறவிகள் ஊர்
பொதுமக்களைக் கேட்க அதற்கு மக்கள் தங்களது விருப்பம் போல் தாங்கள் இங்கேயே சந்தோஷமாகத் தங்கியிருங்கள். தங்களுக்கு
பணிவிடை செய்யக் காத்திருக்கிறோம். என்று பதில் சொல்வதாக சங்கல்பம் செய்துகொன்வது மரபாகும். அப்படித் தங்கியிருந்து விரதம்
மேற்கொள்ளும் காலத்தில் வேதாந்த விசாரத்தில் ஈடுபடுவார்கள்.
சாதுர்மாஸ்ய விரதத்தின் பிரதான அங்கம் வியாச பூஜை. பராசர் முனிவரின் புதல்வரும் ஞானியருள் மிகச் சிறந்தவருமான வேத
வியாசருடைய இயற்பெயர் கிருஷ்ணத்வைபாயனர். இவர்தான் வேதத்தை நான்கு வகைப் படுத்தினார்.ஐந்தாவது வேதம் என்று
சொல்லப்படும் மகாபாரதத்தை இயற்றியவரும் இவர்தான். பத்ம புராணம் ஸ்கந்த புராணம் கருட புராணம் நாரதீய புராணம் எனப்
பெருகும் பதினெட்டு புராணங்களை அருளியவரும் இவர்தான். இவரைச் சிறப்பிக்கும் பொருட்டே வியாச பூஜை அனுஷ்டிக்கப்படுகிறது.
ஸ்ரீமத் பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ரிஷிகளில் நான் வியாசராக இருக்கிறேன் என்று கூறியிருப்பதால் அந்த அடிப்படையில்
கிருஷ்ண பரமாத்மாவை மத்தியில் வைத்து சாதுர்மாஸ்ய வியாச பூஜையை நடத்துவார்கள். வியாச பூஜையில் வியாசரின் நான்கு சீடர்களான பைலர், ஜைமினி, வைசம்பாயனர், சுமந்து ஆகியோரும் ஆதிசங்கரரும் அவரது
சீடர்களான பத்ம பாதர் ஸூரேச்வர் ஹச்தாமலகறம் தோடகர் ஆகியோரும் குரு தட்சிணாமூர்த்தியின் மாணவர்களான சனகர் சனந்தனர்
சனாதனர் சனத்குமாரர் ஆகியோரும் மற்றும் மகா ந்ஜாநியர்கலான நாரதர் சுகர் கௌடபாதர் கோவிந்த பகவத்பாதர் ஆகியோரும்
பூஜிக்கப்படுகிரார்கள் கடைசியாக சுத்த சைதன்யம் என்ற பெயரில் சாளக்கிராமமும் பூஜிக்கப்படுகிறது. இதில் முளையில்லாத
அட்சதையைப் பரப்பி நடுவில் கிருஷ்ண விக்கிரகமும் சாளக்கிராமமும் வைத்து எலுமிச்சம்பழத்தை ஆங்காங்கு வைத்து குரு பரம்பரை
பூஜை நடைபெறும். உலக நலனுக்காக அனைத்து தேவதைகளுக்கும் ப்ரீதி செய்வதுடன் வியாச பூஜையும் அனுஷ்டிப்பது தான்
துறவிகள் மேற்கொள்ளும் சாதுர்மாஸ்ய விரதத்தின் முக்கிய நோக்கமாகும்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM