Post by radha on Jul 30, 2015 14:21:04 GMT 5.5
OM SRI GURUPYONAMAHA,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
Sarma Sastrigal
”....ச்ராத்தத்தை தனித் தனியாக அவரவர்கள் ஊரிலேயே செய்தால் ஒற்றுமை குலையுமல்லவா?. அண்ணந்தம்பிகள் சேர்ந்து இருப்பதே ஒரு அழகுதானே...”
சென்னை பெசண்ட் நகரில் கூட்டத்தில் எழுப்பட்ட ஒரு கேள்வி:
”ச்ராத்தத்தை பற்றி உங்களது பதிவை சில நாட்களுக்கு முன்பு பார்த்தேன். ஆனால் எங்கள் இல்லத்தில் இது சரிவராது. என் மச்சினர்கள் அனைவரும் ச்ராத்தத்திற்காகவே வெளி ஊரிலிருந்து வருகிறார்கள். எங்காத்துகாரர் ச்ராத்தம் செய்வார். மற்றவர்கள் அனைவரும் கூட இருப்பார்கள். ஒருவேலை நீங்கள் சொல்லுவதுபோல் இவர்கள் தனித் தனியாக அவரவர்கள் ஊரிலேயே செய்தால் ஒற்றுமை குலையுமல்லவா?. அண்ணந்தம்பிகள் சேர்ந்து இருப்பதே ஒரு அழகுதானே...”
சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பெசண்ட் நகரில் ஒரு கூட்டத்தில் பங்குபெற சென்றிருந்தபோது ஒரு அம்மையார் என்னிடம் சொன்ன கருத்து இது. இந்த அபிப்ராயம் பலரிடமும் உள்ளது என்பது வாஸ்தவம்தான்.
இதில் அடிப்படை நியாயம் இருக்கா இல்லையா என்பது வேறு விஷயம்.
அண்ணந்தம்பிகள் சேர்ந்து இருக்கவேண்டும் என்றால் வருஷத்தில் வாய்ப்புகள் நிறைய இருக்கே. ச்ராத்தம் மட்டும்தான் ‘அக்கேஷனா’ என்ன? ஏன் நாம் அதை மட்டும் எடுத்துக் கொள்ளுகிறோம் புரியவில்லை. யோசிப்போம். ஆவணிஅவிட்டம் போன்றவைகள், தீபாவளி போன்ற எண்ணற்ற பண்டிகைகள் வைகுண்ட ஏகாதசி, சிவராத்ரி போன்ற விரதங்கள் என பட்டியல் நீண்டுக்கொண்டே போகும்.
ச்ராத்த விதியும் புத்திரனின் கடமையும் தெளிவாக நமது பெரியோர்களால் வழிகாட்டப்பட்டுள்ளது.
முதலிலேயே ஜாக்கிரதையாக இருந்து விட்டால் பிறகு ‘பித்ரு தோஷம்’ போன்ற பல விஷயங்களுக்காக அலையவேண்டிய நிர்பந்தம் யாருக்கும் வராது. ச்ராத்தம் செய்யாமல் விட்டவர்கள் எவ்வாறு பாதிக்கப்படலாம் என்று விபரமாக இங்கு எடுத்துக்கூற அபிப்ராயமில்லை. சுருக்கமாக பித்ருசாபத்திற்கு அப்பேர்பட்டவர்கள் ஆளாகலாம் என்பதை மட்டுமாவது ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் நல்லது.
புத்திரர்கள் சேர்ந்து செய்யலாமா?
(’வேதமும் பண்பாடும்’ புஸ்தகத்திலிருந்து ஒரி சில வரிகள்)
பங்கு பிரிக்கப்பட்டிருந்தாலும், பிரிக்கப்படாமல் தனித்
தனியாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்தாலும் தனித்தே ச்ராத்தம் செய்யவேண்டும். எல்லோரும் ஒரே குடும்பமாக இருந்தால் தனித்தனி ச்ராத்தம் தேவையில்லை.
தனித்தனியே வாழ்ந்து கொண்டு ச்ராத்தத் தினத்தன்று ஒன்று சேர்ந்து ஒரே ச்ராத்தமாக (ஒரே ஹோமம்) இருந்தால் அது ஏற்புடையதல்ல.
மூத்தவர் பண்ணினால் அவரருகில் இருந்தால்போதும் என்பது எப்போதும் சேர்ந்து இருப்பவர்களுக்கு மட்டுமே. (தாயார் உயிருடனிருந்தால் அவள் இருக்குமிடத்தில் பித்ரு ச்ராத்தம் எல்லோரும் சேர்ந்து செய்வதில் தவறில்லை என்பது பெரியோர்களது வாக்கு).
தனித்தனியே ஹோமத்துடன் ச்ராத்தம் செய்வதால் பித்ருக்களுக்கு அதிக திருப்தி. பித்ருக்கள் பல இடங்களிலும் ஒரே சமயத்தில் இருக்க முடியும்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
Source:- FROM FACEBOOK POSTINGS.