Post by radha on Apr 21, 2015 1:34:42 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
அட்சய திருதியை 21.04.2015
க்ஷயம் என்றால் சமஸ்க்ருதத்தில் "குறைந்து வருதல்' என்று பொருள். அக்ஷயம் என்றால் "குன்றாது வளருதல்' என்பதாகும். ஒவ்வொரு ஆண்டும் சாந்திரமான அடிப்படையில், வைகாசி மாத வளர்பிறையில் வரும் மூன்றாம் நாள், அட்சய திருதியையாகக் கொண்டாடப்படுகிறது. அந்தச் சமயத்தில் சூரியனும், சந்திரனும் மிக உயர்ந்த இடத்தில் சேர்ந்து அமைந்து உன்னத ஒளி வீசிப் பிரகாசிக்கின்றனஎன்கிறது வானவியல்.
அப்படிப்பட்ட அவ்வமைப்பு இருக்கும்போது நாம் தொட்டது துலங்கும். நட்டது தழைக்கும். ஒன்று நூறாகும். எடுக்க எடுக்கக் குன்றாமல் செழித்து வளரும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
செய்யவேண்டியது என்ன?
அட்சய திருதியை தினத்தில் எது செய்தாலும் குறைவினறி வளர்ந்து கொண்டேயிருக்கும் என்பதுவேதம் காட்டும் வழி.
இன்று ஒரு தானம் செய்தால், அதன் பலன் பன்மடங்கு பெருகும். இன்று ஒரு புது வித்தையைத் தொடங்கினால், அது தடங்கலின்றி வளரும். இன்று எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும், அதன் பலன் எண்ணிலடங்காது.
ஏழைப்பெண்ணிற்கு குந்துமணி அளவு தங்கம் வாங்கிக் கொடுத்தாலும் பல மடங்கு புண்ணியம் கிடைக்கும்.
இன்று செய்யப்படுகிற யாகங்களுக்கும் பெரும் பலன் உண்டு. வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சிநடக்க இருக்குமானால் அதற்குரிய முன்னேற்பாடுகளை இன்று தொடங்கலாம்.
நம்முடைய கையில் தங்கம் வாங்கும் அளவு சேமிப்பு இல்லையென்றாலும் கவலைப்பட வேண்டியது இல்லை. நம்மால் முடிந்த ஒரு ஏழைக்கு அன்னதானம் செய்யலாம். படிக்க வசதியில்லாத ஏழை மாணவனின் படிப்புக்கு உதவலாம். ஒரு ஏழைக்கு திருமணம் நடத்தி வைக்கலாம். ஒவ்வொருவரும் ஒரு மரம்நடலாம். இன்று நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியமும் பல மடங்குநமக்கு நன்மை தரும்.
அட்சய திருதியை (அன்று)
* ஸ்ரீ மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமரின் ஜெயந்தி தினம்.
* வியாசர் கூறக்கூற விநாயகர் தம் ஒரு தந்தத்தை உடைத்து மகாபாரதம் எழுதிய நாள்.
* த்ரேதா யுகத்தில் கங்கை நதி தேவலோகத்திலிருந்து பூமிக்கு வந்த நாள் இதுதான்.
* ஸ்ரீமகாலட்சுமி குபேரனைச் செல்வத்திற்கு பாதுகாவலனாக நியமித்த நாளும் இதுவே.
* அகில உலகத்துக்கும் பசியாற்றும் அன்னபூரணி பிறந்த நாளும் இதுவே.
* பஞ்ச பாண்டவர்களுள் மூத்தவரான யுதிஷ்டிரருக்கு அள்ள அள்ள குறையாத அக்ஷய பாத்திரம் கிட்டியதும் இந்த நாளில்தான்.
* குசேலர் தன் பால்யகால நண்பன் கண்ணனை காணச்சென்று அவல் கொடுத்து தன் பெரும் பஞ்சம் நீக்கப் பெற்றதும் இந்நாளில் தான்.
* பஞ்சாலியின் துயில் உரியப்பட்டதும். அவள் கண்ணனை நினைத்து கைகூப்பித் தொழுத போது, "அக்ஷய அக்ஷய' எனமுடிவில்லாமல் ஆடைகள் பெருகி அவள் மானம் காத்ததும் இந்நாளில் தான்.
அட்சய திருதியை (இன்று)
* நாம் கொண்டாடுவதற்கு எத்தனையோ பண்டிகைகள், விசேஷங்கள் இருந்தாலும், இந்தக் காலத்தில் அட்சய திருதியைக்கு கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பு போல வேறுஎந்தப் பண்டிகைக்கும் கிடைக்கவில்லை.
* இந்த நாளில் ஒரு பொட்டுத் தங்கமாவது வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடனை உடனை வாங்கியாவது நகைக்கடைகளை நாடும் போக்கு அதிகரித்து வருகிறது.
* சென்னை உட்பட பல்வேற நகரங்களில் நகைக்கடைகளில் மக்கள்கூட்டம் அலைமோதுவதும் இந்த நாளில்தான். கூட்டநெரிசலைத் தடுக்க சில கடைகளில் அட்வான்ஸ் புக்கிங் வசதியும் செய்யப்படுகிறது. எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு தம்பதியர் கால்கடுக்க நகைக்கடை வாசலில் காத்திருக்கும் வைபவம் அரங்கேறுவதும் இன்றுதான்.
* டி.வி., ரேடியோக்கள், செய்தித்தாள்களில் நகைக்கடை விளம்பரங்களே அணிவகுத்து நிற்கும் நாள் இது.
* பல குடும்பங்களில் நகை வாங்கித் தராததால் கணவன் மனைவிக்கிடையே சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்படுவது இந்த நாளில் தவிர்க்க முடியாததாகி வருகிறது.
- ராஜீ மணி
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARAN