Post by radha on Apr 19, 2015 1:37:01 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA,RESPECTFUL PRANAMS TO SRI KANVHI MAHA PERIVA.
எல்லா செல்வ வளமும் பெறுக! DINAMALAR
ஏப்., 21 அட்சய திரிதியை
ஒருவர் நினைத்ததை எல்லாம் வாங்குகிறார் என்றால், 'உனக்கு என்னப்பா சுக்கிர திசை அடிச்சிருக்கு...' என்பர். இது, உண்மை. ஒருவரது லக்னத்தில், 11ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால், அவர் தனவானாக இருப்பார் என்கிறது ஜோதிட சாஸ்திரம். ஆனால், அப்படி சம்பாதிப்பவர், நல்ல உழைப்பாளியாகவும், சம்பாதித்த செல்வத்தை காப்பாற்றுகிற புத்திசாலியாகவும் இருப்பர் என்பதை பலரும் உணர மறுக்கின்றனர்.
எப்படியிருப்பினும், சுக்கிரனின் அருள் வேண்டுமானால், அட்சய திரிதியையை ஒட்டி, கும்பகோணம் அருகிலுள்ள கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோவிலுக்கு சென்று வரலாம். இங்கே சுக்கிரனுக்கு தனி சன்னிதி உள்ளது. இக்கோவில், ஒரு குட்டி மதுரையாகும். ஏனெனில், இங்கே அம்பிகைக்கே சக்தி அதிகம். மதுரையில், மீனாட்சியம்மன் சுவாமியின் வலப்புறம் இருப்பது போன்று, இங்கு கற்பகநாயகியும், சுவாமியின் வலப்புறம் இருக்கிறாள்.
அத்துடன், மானக் கஞ்சாற நாயனார் இவ்வூரில் பிறந்தவர். சிவனுக்காக, புதுப்பெண்ணான தன் மகளின் கூந்தலையே அறுத்து, சிவனின் அருள் பெற்றவர். இக்கோவிலுக்குச் சென்றால் சனிதோஷம் நீங்கிவிடும். காரணம், இக்கோவிலில், மூன்று சனீஸ்வரர் சிலைகள் உள்ளன. ஒருமுறை சனீஸ்வரருக்கே தோஷம் பற்றிக் கொள்ள, மூன்று முறை இங்கு வந்து, அக்னீஸ்வரரை வணங்கி, விமோசனம் பெற்றதாக வரலாறு கூறுகிறது.
இங்குள்ள சிவனை, சுக்கிரன் வழிபட்டுள்ளார். அந்தகாசுரன் என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்க முற்பட்டனர் தேவர்கள். அசுரர்கள் தரப்பில் உயிர்ச்சேதம் கடுமையாக இருந்தது. அதனால், அசுரர்களின் குருவான பார்க்கவ முனிவர், சிவபெருமானை நோக்கி தவமிருந்து, இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை தெரிந்து கொண்டார். இதன் மூலம், இறந்த அசுரர்களை உயிர்ப்பித்ததால், அவர்களின் அட்டகாசம் அதிகரித்தது.
தேவர்கள் சிவனை சரணடைய, சிவன் பார்க்கவரை விழுங்கி விட்டார். வயிற்றுக்குள் சென்ற பார்க்கவர், அங்கு தவமிருந்ததன் விளைவாக வெளியே வந்தார். வயிற்றுக்குள்ளேயே கிடந்ததால், அவரது உடல் வெள்ளை நிறமாக ஆயிற்று. எனவே, அவர், 'சுக்கிரன்' எனப்பட்டார். சுக்கிரன் என்றால், வெள்ளை நிறத்தவன் என்று பொருள். மீண்டும் அசுர குருவாக பதவி ஏற்றார்.
மகாபலி மன்னனுக்காக தன் ஒரு கண்ணை இழந்தவர், காசிவிஸ்வநாதரை வழிபட்டு, நவக்கிரக மண்டலத்தில் இடம் பெற்றார்.
மூலவர் அக்னீஸ்வரருக்குள் சுக்கிரன் அடக்கமாக இருக்கிறார். இருப்பினும், சுக்கிரனுக்கு அவரது தேவியருடன் தனி சன்னிதி சமீப காலத்தில் அமைக்கப்பட்டது.
அட்சய திரிதியையை ஒட்டி, கஞ்சனூர் சென்று சுக்கிரனின் அருள் பெறுங்கள்; செல்வ வளத்தோடு வாழுங்கள். கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் வழியாக கஞ்சனூரை அடையலாம்.
தி.செல்லப்பா
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM .