Post by radha on Jun 9, 2014 2:37:38 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
இந்த வருடம் 11.06.2014 அன்று வைகாசி விசாகம்
வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்றே போற்றுவார்கள் ஆன்மிகப் பெரியோர்.
மகாவிஷ்ணுவின் பெயரால் அழைக்கப்படும் இம்மாதத்திற்கு எத்தனையோ பெருமைகள் இருந்தாலும், தேவர்கள் துயர் தீர்க்க முக்கண்ணன் மகனான முருகப் பெருமான் அவதரித்த மாதம் என்பதே இதன் தனிப் பெரும் சிறப்பு.
வைகாசி மாதம் முழுநிலவு நாளில் விசாக நட்சத்திரம் அமையும். அன்றுதான் உலக உயிர்களை உய்விக்கவும், அருந்தமிழை வளர்க்கவும், தேவர் குறைதீர்க்கவும் சிவனாரின் நெற்றிக் கண்ணில் இருந்து தீப்பிழம்பாய்த் தோன்றினார் முருகப் பெருமான்.
அதோடு, சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்கள் அனைவரையும் அழித்து, வெற்றிப் பெருமிதத்தோடு திருச்செந்தூரில் முருகன் கோயில் கொண்ட தினமும் வைகாசி விசாகம்தான். அதனால்தான் திருச்செந்தூரில் வைகாசி விசாகம் மிகச் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.
ஆறுமுகன் கோயில்கள் அனைத்திலுமே வைகாசி விசாகம் விசேஷம்தான். அன்றைய தினம் அலகு குத்தியும், காவடி எடுத்தும் பல்லாயிரம் பக்தர்கள் வேலவனை வேண்டி வணங்குகிறார்கள். இப்படிச் செய்வதால், வந்த துன்பங்கள் தீரும், என்றும் இன்பமே நிலவும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்தது, நம்மாழ்வார் அவதரித்தது, புத்தர் பிறந்தது எல்லாமும் வைகாசியில்தான்.
எல்லா நாட்களுமே தானமும் தவமும் செய்திட ஏற்றவைதான். என்றாலும் வைகாசி மாதத்தில் தானம் செய்வது அதிக அளவு நற்பலனைத் தரும் என்று புராணங்கள் கூறுகின்றன.
இல்லறத்தில் இருப்போர் இம்மாதத்தில் கட்டாயமாக தான தர்மங்கள் செய்ய வேண்டும் என்றும்; அவ்வாறு செய்தால் காசிக்குச் சென்று கங்கையில் முழுகிய புண்ணியம் கிடைக்கும் என்று பத்ம புராணம் கூறுகிறது. தண்ணீர் பந்தல் அமைத்தல், நீர் மோர் அளித்தல், செருப்பு, குடை இவற்றை தானமாக அளித்தல் போன்ற நற்செயல்கள் பல ஜன்மங்களுக்கு முன் செய்த பாவங்களைக் கூட நீக்கி விடும் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது.
இம் மாதத்தினை மாதவ மாதம் என்று கூறக் காரணம், தன் தேவியான திருமகளோடு பூவுலகிற்கு திருமால் விசேஷ வடிவத்துடன் இம்மாதத்தில் விஜயம் செய்வாராம். மிகமிக எளியவர்களின் தோற்றத்தில் அவர்கள் பலரது வீடுகளுக்குச் சென்று தண்ணீர் அல்லது மோர் கேட்பார்கள் எனவும் பத்ம புராணம் சொல்கிறது. எனவே, இம்மாதத்தில் வறியோர், எளியோர்க்கு தானமளிப்பது, நீர், மோர், பானகம் எனத் தருவது எல்லாமே சிறப்பான பலனைத் தரும். எவர் வந்து கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் குறைந்தபட்சம் தண்ணீராவது தருபவர்களுக்கு மகாலட்சுமியின் அருள்கிட்டும். அலைமகள் அகமகிழ்ந்து பூரண நிதியை நல்குவாள் என்றும் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
வைகாசி விசாகத்தன்று மகாலட்சுமிக்கு உகந்த சர்க்கரை பொங்கல், பெருமாளுக்கு உகர்ந்த புளியோதரை, தயிர்சாதம் இவற்றை நிவேதனம் செய்து, ஏழை எளியவர்களுக்கு தண்ணீரோடு சேர்த்து தானம் செய்தால் அவர் மனம் குளிர்ந்து வரங்கள் அருளுவார் எனவும் எடுத்துச் சொல்கிறது பத்ம புராணம்.
சிவபெருமானும் வைகாசியும்: முகுந்தனுக்கு உகர்ந்த இந்த மாதம் முக்கண்ணனான சிவனுக்கும் ஏற்றதாகவே திகழ்கிறது. வைகாசி விசாகத்தினை ஒட்டி பல சிவாலயங்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அதோடு மிக முக்கியமான விரதமான ரிஷப விரதம் இம்மாதம் அனுஷ்டிக்கப்படுகிறது. வாகனம் வாங்க நினைத்தும் வாங்க முடியாமல் இருப்போர், வாகனத்தில் செல்லும்போது அடிக்கடி விபத்துக்குள்ளாவோர், வாகனத்தால் அனுகூலம் பெற விரும்புவோர் அனுஷ்டிக்க வேண்டிய விரதம், ரிஷப விரதம்.
வைகாசி மாதம் வளர்பிறையில் எந்தத் திங்கட்கிழமையிலும் இவ்விரதத்தை அனுசரிக்கலாம். அதிகாலையில் எழுந்து நீராடி நெற்றியில் விபூதி இட்டுக் கொண்டு, ருத்திராட்சம் அணியும் பழக்கம் உள்ளவர்கள் அதையும் அணிந்து கொள்ள வேண்டும். சிவபெருமான் படத்திற்கு பூக்கள் வைத்து, பஞ்சாட்சர மந்திரத்தை 12 முறை ஜபிக்க வேண்டும். பின்னர் வெறும் நெய் சேர்த்த சாதத்தை நிவேதனம் செய்ய வேண்டும்.
விரதமிருப்பவர்கள் அந்த சாதத்தில் சிறிது பருப்பு சேர்த்து ஒருவேளை மட்டுமே உண்ண வேண்டும். மாலையில் சிவன் கோயிலுக்குச் சென்று அங்கு அபிகையையும், ஈசனையும் வணங்கி, ரிஷப வாகனத்தையும் வழிபட்டு நந்தியின் முன் நின்று, வாங்க நினைக்கும் வாகனத்தில் பெயரை அமைதியாக மனத்துக்குள் மூன்று முறை சொல்ல வேண்டும். விபத்துகள் இல்லாமல் இருக்க விரதமிருப்பவர்கள், விபத்துகள் நீங்க வேண்டும் என்று மூன்று முறை நந்தியின் முன் நின்று மனதாரச் சொல்ல வேண்டும்.
அன்று முழுவதும் வேறு ஒன்றும் சாப்பிடக் கூடாது. உடல் நலம் குறைந்த அல்லது வயது முதிர்ந்தவர்கள் சிறிது பழரசம் அல்லது கரும்புச் சாறு அருந்தலாம். அரிசி, பால், கலந்த பொருட்களை குடிக்கவோ, உண்ணவோ கூடாது. மறுநாள் அதிகாலை எழுந்து மனதால் இறைவனை வணங்கி, தன் பிரார்த்தனையை மீண்டும் ஒருமுறை சிவ பெருமானிடம் சொல்ல வேண்டும்.
பின்னர், சர்க்கரை சேர்த்த பால் கொஞ்சம் அருந்தி விரதத்தை முடிக்க வேண்டும். இந்த விரதத்தை முறையோடு செய்தால் சிறந்த வாகன யோகமும், விபத்துகள் இல்லா பயணமும் அமையும்.
அட்சய பாத்திரம்: பசிப்பிணி தீர்க்கும் அட்சய பாத்திரம் சூரியனால் தர்மருக்கு அளிக்கப்பட்டது. அவர்களது தேவை தீர்ந்தவுடன் அது மீண்டும் வானுலகம் சென்றது. அதை பூலோகத்துக்கு வரவழைக்கும் தகுதி இங்குள்ளவர்கள் ஒருவருக்ம் இல்லாததால் அது அங்கேயே இருந்தது.
ஒருமுறை இந்திரன் பாண்டிய நாட்டின் மீது கோபம் கொண்டு மழை பொழியாமல் செய்து விட்டான். அதனால் நாட்டில் பஞ்சம் தலை விரித்து ஆடியது. மக்கள் உணவும் நீரும் இன்றி கஷ்டப்பட்டனர். இந்நிலை பொறுக்காத ஆபுத்திரன் என்ற அந்தணன், அட்சய பாத்திரம் வேண்டி சிந்தா தேவி என்ற அம்பிகையை நோக்கிக் கடும்தவம் இருந்தான்.
அவனது தவத்தையும், உயரிய நோக்கத்தையும் கண்ட அன்னை அவனுக்கு தரிசனம் அளித்து அட்சய பாத்திரத்தைக் கொடுத்து ஒரு நிபந்தனையும் விதித்தாள். "நீ பிறர் நிலனுக்கு அல்லாமல் உன் நலனுக்கு இந்தப் பாத்திரத்தைப் பயன்படுத்தினால் இது சக்தி இழந்து விடும். அதே போல இதற்கு வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்' என்றும் கட்டளையிட்டு மறைந்தாள்.
ஆபுத்திரனும் அந்தப் பாத்திரத்தைக் கொண்டு மக்களின் பசிப்பிணி தீர்த்து பெரும் புகழ் பெற்றான். பொறாமை கொண்ட இந்திரன் மழையைப் பொழிவித்து பஞ்சம் நீக்கினான். அதனால் விவசாயம் செழித்து மக்கள் நிம்மதியாக வாழத் துவங்கினர். அட்சய பாத்திரத்திற்கு வேலை இல்லாமல் போனது. செய்வதறியாது திகைத்த ஆபுத்திரன் பண்டைய காலத்தில் கடாரம் என்றும், இன்று ஜாவா என்றும் அழைக்கப்படுகிற தீவில் கடும் பஞ்சம் நிலவுவதாகக் கேள்விப் பட்டு அங்கு செல்லக் கப்பலேறினான்.
வழியில் மணி பல்லவம் என்ற தீவில் இளைப்பாறுவதற்காக இறங்கியபோது, கப்பல் அவனை விட்டு விட்டுப் புறப்பட்டு விட்டது. அத்தீவில் மனிதர் யாருமில்லை. யாருக்கும் பயன்படாத அட்சய பாத்திரம் வீணாகப் போகிறதே என்று எண்ணி எண்ணி ஏங்கியது அவனது உள்ளம். வேறுவழியின்றி அங்கு இருக்கும் புனிதத்தன்மை வாய்ந்த பொய்கையான கோமுகி என்ற பொய்கையில் பாத்திரத்தை வீசி விட்டு கடலில் விழுந்து மாய்ந்தான்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு வந்த மணிமேகலை, புத்தரின் காலடியில் விழுந்து வணங்கி தன்னுடைய முற்பிறவியையும், இப்பிறவியில் தான் ஆற்ற வேண்டிய பணியையும் அறிந்து கொண்டாள். அந்த அரிய பணிக்கு ஆட்சய பாத்திரம் இன்றியமையாதது என்று உணர்ந்தவள், அதை அடையும் வழியை புத்தரின் அருளால் அறிந்து கொண்டாள்.
ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாகத்தன்று கோமுகிப் பொய்கையில் இருந்து அட்சயப் பாத்திர் மேலே வரும் என்றும், அதைத் தகுதியற்றவர் கையில் ஏந்தினால் மாயமாக மறைந்து விடும் தன்மை உள்ளது என்றும் தெரிய வந்தது.
மணிமேகலை விரதமிருந்து வைகாசி விசாகத்துக்காகக் காத்திருந்தாள். முழு நிலவு உதிக்கும் நேரம் தகதகவென மின்னியபடி அப்பாத்திரம் வெளியே வந்தது. அதை கையில் ஏந்தினாள் மணிமேகலை. அது மறையாமல் மேலும் சுடர் விட்டுப் பிரகாசித்தது.
அப்பாத்திரத்தைக் கொண்டு தான் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்த பல நோயாளிகளின் பசியைத் தீர்த்தாள் மணிமேகலை.
வைகாசி மாதம் விரதமிருக்கவும் மிகச் சிறந்த மாதமாக கருதப்படுகிறது. குறிப்பாக வைகாசி விசாக நாளில் விரதம் இருப்பது தடைகள் அனைத்தும் நீங்கி, நிம்மதியான வாழ்வு, மனம் விரும்பும் மணவாழ்க்கை, குறை இல்லா குழந்தை பாக்யம், தீராத செல்வம், நிலையான ஆரோக்யம் கிட்டச் செய்யும் என்பது நம்பிக்கை.
வைகாசிவிசாக நாளில் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, "ஓம் சரவணபவா' என்று சொல்லி, நெற்றியில் திருநீறு தரிக்க வேண்டும். முருகன் படத்தின் முன் தீபம் ஏற்றிவைத்து திருப்புகழ், கந்தசஷ்டி கவசம், ஸ்கந்த குரு கவசம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம் இப்படி தெரிந்த முருகன் துதிகளைச் சொல்ல அல்லது படிக்க வேண்டும்.
எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ
சிந்தாகுலமானவை தீர்த்தெனையாள்
கந்தா கதிர்வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறைநாயகனே!
என்று துதியைச் சொல்லுங்கள்.
முருகா! நீயே எங்களுக்குத் தாய், தந்தை, உன் பிள்ளைகளான எங்களது பிழைகளைப் பொறுத்தருள். உன்னையன்றி வேறொருவரையும் நாங்கள் அறிநததில்லை. எளியோர்க்கும் அருளும் ஏறுமயில் வாகனனே! நீண்ட ஆயுள், நிலைத்த ஆரோக்கியம், தீங்கில்லா செல்வம் ஆகிய ஆனைத்தும் தந்து எம்மைக் காத்து அருள்வாயாக என மனமுருகி வேண்டுங்கள்.
காலையில் கந்தக் கடவுளை வீட்டில் வழிபட்ட பிறகு மாலையில் அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் செல்வது அவசியம். முடிந்த அளவுக்கு உணவும் நீரும் தானமாக அளியுங்கள். அன்று ஒருவேளை மட்டும் உணவு எடுத்துக் கொள்ளுங்கள். ஆறுமுகன் உங்களுக்கு ஆறுதலும் மாறுதலும் தந்து, ஆனந்த வாழ்வு அளிப்பான்.
வைகாசி மாதத்தில் முருகனை வணங்குவதோடு, கிருஷ்ணபட்ச ஏகாதசி, சுக்லபட்ச ஏகாதசி நாட்களில் விரதம் இரந்து திருமாலை வணங்குவதும் சிறப்பான பலன்களைத் தரும். இம்மாத அஷ்டமி தினத்திற்கு சதாசிவாஷ்டமி என்று பெயர். அன்றைய தினம் சிவபூஜை செய்து, முழு விரதம் இருந்து, வெறும் நீரை மட்டுமே நிவேதனம் செய்வர். அந்த நீரை மட்டுமே அருந்தி விரதம் இருப்பர். இந்த விரதத்தினால் சிவன் அருள் சித்திக்கும். சீரான வாழ்வு அமையும் என்கின்றன புராணங்கள்.
வைகாசியில் விரதம் இருப்போர் வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வர் என்பது நிச்சயம். மாதம் முழுவதும் விரதம் இருக்க இயலாவிட்டாலும் வைகாசி விசாக நாளில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலன் தரும்.
விசாகத்தில் உதித்த வேலவனை நினைத்து வேண்டுங்கள். கவலை எல்லாம் போக்கி வேண்டிய யாவும் தருவான் கந்த பெருமான்.
- ஸ்ரீஜா வெங்கடேஷ்-in KUMUDAM BHAKTHI
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM