Post by radha on May 12, 2012 9:37:40 GMT 5.5
Sri Gurupyo Namaha:,
RESPECTFUL PRANAMS TO SRI MAHA PERIVA.RESPECTS TO SRI RAMANA MAHARISHI
ஒரு முறை பால் ப்ரண்டன் ரமண மகரிஷியிடம் பேசும் போது சொன்னார். "குருவே இந்த ஆன்மீகப் பாதை மிகவும் கடினமானது. சில நேரங்களில் என்னுடைய பலவீனங்களை நான் நன்றாக உணர்கிறேன்..."
"அப்படி பலவீனமானவன் என்று நினைப்பதே பல சமயங்களில் நமது குறைபாடு"
"ஒருவேளை அது உண்மையாக இருந்தால்....?."
"அது உண்மையல்ல" மிகவும் உறுதியுடன் வந்தது மகரிஷியின் பதில். "மனிதன் இயற்கையிலேயே பலம் வாயந்தவன். தெய்வீகத் தன்மை கொண்டவன். தீமையும் பலவீனமும் அவன் எண்ணங்களால் ஏற்படுகின்றனவே ஒழிய உண்மையான இயல்பால் அல்ல"
இதை அவர் உண்மையாகவே நம்பினார் என்பதற்கு ஆதாரம் அவர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி. அவரைப் போன்ற ஒரு சித்தர் செல்வத்தை நிறைய குவித்து வைத்திருக்கலாம் என்று நம்பிய ஒரு கொள்ளைக் கூட்டம் ஒரு இரவு அவர் ஆசிரமத்திற்குள் நுழைந்து தேட எந்த செல்வமும் அங்கு இல்லை என்றறிந்தவுடன் ஏற்பட்ட கோபத்தில் ரமணரையும் மற்ற ஆசிரமவாசிகளையும் அடித்து உதைத்திருக்கிறார்கள்.
அட, ஒருவேளை இந்த மாதிரி வர்ற திருடர்கள் கூட ஏமாந்து போகக்கூடாதுன்னு நினைச்சித்தான் , இந்த கால (ஆ) சாமிகள் நிறைய பணத்தை சேர்த்து வைக்கிறாங்களோ.. (# டவுட்டு)
ரமண மகரிஷி அந்த கொள்ளையர்கள் செல்லும் போது வந்ததற்கு உணவாவது உண்டு விட்டுச் செல்லுமாறு அவர்களை வேண்டியிருக்கிறார். ஒரு உண்மையான யோகிக்குத் தான் இது இயலும் என்பதில் சந்தேகமென்ன?
பால் ப்ரண்டன் ரமண மகரிஷியைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார். "ரமண மகரிஷியுடன் பேசுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.
காரணம் ரமண மகரிஷி யாரையும் தன் பக்தர்களாகவோ, தன்னைப் பின்பற்றுபவர்களாகவோ மாற்ற எண்ணியதில்லை. மற்றவர்களுடைய நம்பிக்கைகளைப் பற்றியோ, கருத்துகளைப் பற்றியோ அவர் பொருட்படுத்தவில்லை. உண்மை தனி மனித அபிப்பிராயங்களுக்கு அப்பாற்பட்டது என்பது அவர் ஞானமாக இருந்தது... அதனாலேயே அவர் மற்றவர்களுடன் விவாதங்களில் ஈடுபட்டதில்லை. மற்றவர்களைக் கவர முனைந்ததில்லை. தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ள முயன்றதில்லை...."
எப்பேர்ப்பட்ட மகான் பிறந்த பூமியில் நாம் இருக்கிறோம் பார்த்தீர்களா? உடனே இப்போ இருக்கிற ஆளுங்களை நினைச்சு கோபப்படாதீங்க. சாதாரண வேங்கட ரமணன் என்னும் சிறுவன், ரமண மகரிஷியாக மாறும்போது, நம்மால் அந்த அளவு முடியவில்லை என்றாலும், குறைந்த பட்சம் நாம் யார் என்பதாவது உணர முற்படுவோமே..!
நாம், நம்ம வீடு, நம்ம ஊர், நம்ம நாடு, பூமி, சூரிய மண்டலம், பால் வெளி, அண்ட பேரண்டம் - பற்றியெல்லாம் பார்க்கிறப்போ - அட போய்யா... இதுல கடவுளாவது ஒன்னாவது ... ... இதுல கடவுள் எங்கே இருக்க முடியும்? அப்படி ஒருத்தர் இருந்தா, நம்மளை பார்க்கிறது தான் வேலையா அவருக்குன்னு ஒரு கேள்வி வரலாம்....
உங்களுக்கு வருதோ , இல்லையோ - எனக்கு வருது....
இதோ , நாளைக்கு சித்ரா பௌர்ணமி. சித்திர குப்தன் பிறந்த நாள்னு ஒரு சிலர் சொல்றாங்க. அதுக்கு ஒரு கதை வேற.நம்ம செய்ற பாவ புண்ணியம் எல்லாம், அவர் கணக்கு வைப்பாராம். பயங்கர காமெடியா இருக்கு ... என்று தான் தோன்றுகிறது இல்லையா..?
ஆனா, சத்தமே இல்லாம சில மந்திர ஜெபங்கள் ஜெபித்து , நினைத்ததும் அகத்தியர் போன்ற சித்தர்களை தரிசனம் செய்பவர்களும் ஒரு பக்கம் இருக்கிறார்களே..! தீராத சில பிரச்சினைகளுக்கு அவர்கள் மூலம் தீர்வும் பெறுகிறார்களே.. சித்தர் இருப்பது உண்மையெனில், அந்த இறைவன் ஒருவர் இருப்பது நிஜம் தானோ..? வள்ளலாருக்கும், ரமணருக்கும், ராமக்ருஷ்ணருக்கும் கடவுள் காட்சி கொடுத்தது உண்மையென்றால், நமக்கும் அந்த பாக்கியம் ஏன் கிடைக்காது , முழுமையாக நம்பி, அவன் இடத்தில் நம் தீர்வு தேடுவோம்... வெற்றி நிச்சயம்.
இறைவனுக்குக்கு அருகில் நம்மை அழைத்துச் செல்ல குரு ஒருவர் இருந்தால் நம் வேலையும் எளிது. தேடல் ஆத்மார்த்தமாக இருந்தால், தேடுபவர் தயார் நிலையில் இருந்தால் குரு கண்டிப்பாக தென்படுவார். பெரும்பாலான நேரங்களில் தேடுபவர் குருவிற்காகத் தயாராக இருப்பதில்லை, எனவே தான் காண்பதில்லை.. ஆனால் என்னதான் இருந்தாலும், ரமண மகரிஷி கூறியது போல அவரவர் தனிப்பட்ட அனுபவம் வேண்டும். அது கிடைக்க நாம் நம்முள்ளே தேடுவோம்...
.......................... தேடுவோமா?
Read more: www.livingextra.com/2012/05/blog-post.html#ixzz1ucnobZ3I