Post by radha on Apr 26, 2014 15:16:13 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
இன்று சகல நன்மைகளும் தரும் சனிபிரதோஷம்!
ஏப்ரல் 26,2014
நித்ய பிரதோஷம், பட்சப் பிரதோஷம், மாச பிரதோஷம், மஹா பிரதோஷம், ப்ரளய பிரதோஷம் என்று ஐந்து வகையாக பிரதோஷத்தைப் பிரித்துள்ளனர். பிரதோஷம் என்றால் அனைத்துக் குற்றங்களும் பாவங்களும் சிவபெருமானால் பொறுத்து மன்னிக்கக்கூடிய காலம் என்று பொருள். ஜாதகத்தில் ஏதாவது குற்றங்கள் இருந்தால் திருமணத் தடை, புத்திரப்பேறின்மை, கடன் போன்ற கஷ்டங்கள் ஏற்படுகின்றன. பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதக குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். பிரதோஷ விரதம், இவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வல்லது. தினமும் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு 24 நிமிடங்கள், பின்பு 24 நிமிடங்கள் ஆக 48 நிமிடங்கள் பிரதோஷகாலமாகும். இது நித்ய ப்ரதோஷம். வளர்பிறைதிரயோதசி திதி மாலைப்பொழுது பட்ச பிரதோஷமாகும். தேய்பிறைத் திரயோதசி திதியின் மாலைப்பொழுது மாச பிரதோஷமாகும். சனிக்கிழமையன்று தேய்பிறைத் திரயோதசி திதி கூடிவருவது தான் மஹா பிரதோஷம் என்று குறிப்பிடப்படுகிறது. இதனை சனி மஹாபிரதோஷம் என்றும் கூறுவர். தேவர்கள் பாற்கடலைக் கடைந்த பொழுது ஏற்பட்ட விஷத்தை சிவபெருமான் தாமே உட்கொண்டு உலகைக் காப்பாற்றிய நாள் இது. மற்றைய பிரதோஷங்களில் உபவாசம் (சாப்பிடாமல் இருப்பது) இருக்க இயலாதவர்கள் சனி பிரதோஷத்தன்றாவது உபவாசம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை கால மாற்றதில்
அவர் அவர் கர்ம வினைக்கு ஏற்ப இன்பங்களும் துன்பங்களும்
மாறி வரும் . அதன் படி இன்பம் வரும்போது சந்தோஷ படுவதும்
துன்பம் வரும்போது வருத்த படுவதும் நமக்கு இயற்கை சுபாவமாக
உள்ளது / ஆனால் இன்பமும் துன்பம் இரெண்டும் நாம் செய்யும்
வினைக்கு ஏற்ப வரையறுக்க பட்டது . என்பது நம் புரிந்து கொண்டால்
எல்லாவற்றையும் ஏற்றுகொள்ளும் மனம் நமக்கு வந்து விடும்
கர்மவினை தீர்ப்பு என்பது எப்போதும் சனி பகவான்
கையில் கொடுக்கப்பட்டுள்ளது . ஒவொவொரு மனிதனின் கால சுழற்சியில் , ஏழரை சனி . அட்டமத்து சனி என்ற கோட்பாடுகள்
வந்து போகும் இவை இரெண்டும் . நம் கர்ம வினை நிர்ணயம் செய்யப்பட்டவை .. சிலர் அட்டமத்து சனி எனக்கு கஷ்ட்டத்தை மட்டும் கொடுக்கிறார் . என்று கூறுவார் . சிலர் ஏழரை என்னை பாடாய் படுத்தி விட்டது என்று கூறுவார் / இவை இரெண்டும் நாம் செய்த பூர்வ வினைகளே என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்,
இவை நம் பிறவியின் நிச்சயக்க பட்ட தீர்ப்பாகும்
இதை நாம் அனுபவித்து தீரவேண்டும் . ஆனால் அதை தாங்கும் சக்தி
நம் உடலுக்கும் மனதிற்கும் கிடைத்து விட்டால் இந்த துன்ம்ப காலங்கள் யாவும் . பெரும் கஷ்டங்கலாக நமக்கு தெரியாது . அதற்கான தீர்வு
சனி யன்று வரும் பிரதோஷம் அன்று சிவபெருமானை நினைத்து
வழிபட்டு . பிரதோஷ காலமான ( மாலை 5.30 லிருந்து 6.30 ) சிவன் கோவில் சென்று சிவன் , நந்திபெருமனை . வழிபாடு செய்தால்
அதற்கான நல பலன் கிடைப்பது உறுதி .
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM