Post by radha on Apr 18, 2014 1:58:59 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
வெள்ளிமணி--Dinamani
அங்காரகச் சதுர்த்தியின் அளப்பரிய பலன்கள்!
By கே.சி. பகவான்ஜி
சதுர்த்தி திதி விநாயகப் பெருமானுக்குரிய விரத தினங்களுள் முக்கியமானதாகும். அதில் தேய்பிறை சதுர்த்தியில் அனுசரிக்கப்படும் "சங்கடஹர சதுர்த்தி' விரதம் தலை சிறந்தது என்று போற்றப்படுகிறது. நவக்கிரகங்களில் ஒன்றான அங்காரகனுக்கு செவ்வாய்க் கிழமை உகந்த நாள். அதிலும், செவ்வாய்க் கிழமைகளில் வரும் சதுர்த்தி நாள் மிகவும் விசேஷமானதாகச் சொல்லப்படுகிறது.
பூமிகாரகன் என்று அழைக்கப்படும் அங்காரக பகவானுக்கு சதுர்த்தி நாள் எப்படி விசேஷமானது? இதற்கான காரணம் என்ன என்பதை அறிந்துக் கொள்ளலாம். இதை பார்க்கவ புராணம் நமக்கு விளக்குகிறது.
புத்திரப்பேறு வேண்டி காட்டில் தவமிருந்த கிருதவீரியன் என்னும் அரசனின் தந்தைக்குப் பிரம்ம தேவன் கூறுவதுபோல் அமைந்திருக்கிறது இந்தப் புராணக்கதை!
பரத்வாஜ முனிவரால் கைவிடப்பட்ட குழந்தை பூமியில் கிடந்தது. அதை அதிசயத்துடன் பார்த்த பூமிதேவி வாரி அணைத்துக் கொண்டாள். தனக்கு ஆண்டவனால் அளிக்கப்பட்ட வரப்பிரசாதம் என்று மகிழ்ந்தாள். அந்தக் குழந்தையின் உடல் மாலை நேரத்தில் செவ்வானம்போல் சிவந்து ஒளியுடன் விளங்கியதால் அங்காரகன் என்று பெயரிட்டு பிரியமுடன் வளர்த்து வந்தாள். குழந்தைக்கு பூமகன் (பூமிகாரகன்) என்று பெயரிட்டாள்.
குழந்தை அங்காரகன் வளர்ந்து சிறுவனானான். தனது தந்தையைப் பார்க்க விரும்பினான். பூமிதேவி பரத்துவாஜரிடம் கொண்டுபோய் ஒப்படைத்தாள். அழகு பொருந்திய தன் மைந்தனை அன்போடு அணைத்துக் கொண்டார் மகரிஷி.
உரிய காலத்தில் அங்காரகனுக்கு உபநயனம் செய்வித்து, வேதத்தை அவனுக்குப் போதித்தார். மேலும் தனது இஷ்ட தெய்வமான விநாயகப்பெருமானின் மூலமந்திரத்தையும் உபதேசம் செய்தார்.
அங்காரகன் தந்தை காட்டிய வழியில் தனித்திருந்து தவ வாழ்க்கை மேற்கொண்டான். விநாயகப்பெருமானின் பாதகமலங்களையே சரணம் என்று தியானித்து ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக கடுந்தவம் புரிந்தான்.
அங்காரகனின் தவம் பலித்தது. அங்காரகனுக்கு விநாயகப் பெருமான் காட்சியளித்து அருள்புரிந்தார். வானில் சந்திரன் உதயமாகும் நேரம் அது! செவ்வாய்க்கிழமை, மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி நாள்.
அங்காரகன் அருள் பெற்ற அந்தப் புனித நாளில் விரதம் அனுஷ்டித்து விநாயகப் பெருமானை வணங்கித் துதிப்பவருக்கு அவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறவும் சங்கடங்களெல்லாம் பறந்தோடும்படியாகவும் அருள்புரிய வேண்டும் என்று அங்காரகப் பெருமான், விநாயகரிடம் கோரிக்கைகளைச் சமர்பிக்கிறார். இதனால் பக்தர்களது துயர் நீங்கும். வாழ்க்கை வளம் பெருகும்.
எனவே, அங்காரகனின் நாளான செவ்வாய்க் கிழமைகளில் வரும் சதுர்த்தி மற்ற சதுர்த்திகளை விட, விநாயகருக்கு மிகவும் மகிழ்ச்சித் தரவல்லதாகக் கருதப்படுகிறது.
அங்காரகனால் துவங்கப்பட்ட இந்த சங்கடஹர சதுர்த்தி விரதத்தைக் கடைபிடித்து வருபவர்கள் அடையும் நற்பலன்கள் ஏராளம்.
கடன், வியாதி, பகை அகலும். செல்வச் செழிப்பு, வித்தை, செல்வாக்கு ஓங்கும். மகப்பேறு கிடைக்கும்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM