Post by radha on Feb 28, 2014 0:12:03 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
இன்று சிவராத்திரி Date.27.02.2014
சிவன் சந்நிதியில் அமர்ந்து பக்தியுடன் இந்த ஸ்தோத்திரத்தை படித்தால் எல்லா நலங்களும் உண்டாகும்.
* தேவர்கள் போற்றும் மகாதேவனே! பரமசிவனே! கவுரி மணாளனே! பஞ்சமுகம் கொண்டவனே! நெற்றிக்கண் உடையவனே! கங்கையைத் தலையில் தாங்கியவனே! எப்போதும் என்னைக் காத்தருளவேண்டும்.
* பிறைநிலவைச் சூடிய பெருமானே! மன்மதனை எரித்தவனே! திரிபுரங்களைச் சம்ஹாரம் செய்தவனே! நாகாபரணம் அணிந்தவனே! நீலகண்டனே! என் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பாயாக.
* கைலாய நாதனே! பஞ்ச பூதங்களைப் படைத்தவனே! அண்ணா மலையானே! தென்னாடுடைய சிவனே! எந்நாட்டவர்க்கும் இறைவனே! சங்கரனே! சதா சிவனே! நோயற்ற வாழ்வைத் தந்தருளவேண்டும்.
* காலனை உதைத்தவனே! சம்சாரக் கடலில் இருந்து காப்பவனே! நள்ளிருளில் சுடலையில் ஆடுபவனே!. கங்காதரனே! ஜடாபாரம் கொண்டவனே! திரிசூலம் தாங்கியவனே! வாழ்வில் எல்லா நன்மையும் பெருகட்டும்.
* மங்கல மூர்த்தியே! காளை வாகனனே! புலித்தோலை ஆடையாக உடுத்தவனே! பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றுபவனே! நமசிவாயனே! அபிஷேகப் பிரியனே! ஆதியந்தம் இல்லாதவனே! உன்னருளால் உலகில் எல்லா வளமும் செழிந்தோங்கட்டும்.
இருளில், சிவனின் அருளில்!
கஷ்டப்பட்டு கண் விழித்து காணக் கிடைக்காத சிவனைக் காண உலகெங்கும் இத்தனை பிரயத்தனமா? எது பிரபலமோ இல்லையோ இன்று விரதங்களும் பூஜைகளும் சடங்குகளும் மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்று வருகின்றன. ஒன்று நமக்கு என்னாகி விடுமோ என்கிற பயம் மற்றொன்று நான் மற்றவர்களை விட சிறப்பானவனாகி விட வேண்டும் என்கிற போட்டி. இன்றைய நவீன உலகம் நம்மை எத்திசையில் அழைத்துச் செல்கிறது என்று தெரியாமலேயே குருட்டுத்தனமாக பயணித்துக் கொண்டிருக்கும் நமக்கு மகாசிவராத்திரியின் இருள் ஒளியைத் தருமா? மகாசிவராத்திரி என்றால் கஷ்டப்பட்டு கண்விழித்து, ஸ்ட்ராங்கான காபியுடன் ஹிட்டான படம் ஒன்றை பார்க்கும் நாளாகத்தான் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் அதனை மாற்றியமைத்து அதன் அறிவியல் மகத்துவங்களை உணர்த்தி மக்களை தங்கள் விழிப்புணர்வினால் உயர்வடையச் செய்து வருகிறது ஈஷா யோகா மையம் நிகழ்த்தி வரும் மகாசிவராத்திரி கொண்டாட்டங்கள்.
சிவராத்திரி என்றால் சிவன் கோவில்களிலெல்லாம் ஆறுகால பூஜை நடைபெறும். சிவனுக்கு வில்வம் அர்பணித்தால் அந்நாளில் புண்ணியம் கிடைக்கும். அன்று விரதம் இருந்தால் வேண்டியதை சிவன் அருள்வார் என்றே பெரும்பாலும் அறியப்பட்டாலும், இயற்கையாகவே அன்றைய கோள்களின் அமைப்பு மனிதனின் சக்தி நிலையை மேல்நோக்கி செலுத்துகிறது. மேலும் ஒருவர் சுலபமாக தியான நிலையை அடைவதற்கு இந்த நாள் உறுதுணையாக உள்ளது. தன்னுடைய 20 வது ஆண்டில் நுழைந்திருக்கும் ஈஷா மகாசிவராத்திரி, ஒவ்வொரு வருடமும் தன்பால் ஈர்க்கும் மக்களின் எண்ணிக்கையை மட்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கு சத்குரு இவ்விழாவினை நிகழ்த்திக் கொண்டிருக்கும் விதத்தினை மட்டுமே காரணமாகச் சொல்ல முடியும். முழுக்க முழுக்க யோக அறிவியலின் அடிப்படையில் சத்குரு நிகழ்த்திக் கொண்டிருக்கும் இந்த விஞ்ஞானம், முறையான விஞ்ஞானமாக இருப்பதால் மக்களுக்கு மிகச் சுலபமானதாகி விடுகிறது.உலகப் புகழ் பெற்ற இசைக் கலைஞர்கள், தியானத் தன்மைக்கு நம்மை இயல்பாய் அழைத்துச் செல்லும் பாரம்பரிய சங்கீதம், பரவசத்தின் உச்சத்திற்கே நம்மைக் கூட்டிச் செல்லும் சவண்ட்ஸ் ஆப் ஈஷா என நாம் பிரயத்தனப் படாமலேயே நம்மை விழிப்பாய் வைத்திருக்கும் சில செய்கைகளுடன் நம் உயிரையே உலுக்கிச் செல்லும் நள்ளிரவு மகா மந்திர உச்சாடனை. வேறென்ன வேண்டும் கொண்டாட, வேறெங்கு செல்ல வேண்டும் விழிப்பாய் இருக்க?
காணும் இடம் எங்கிலும் துடிப்பு, உற்சாகம், உயிரோட்டம் கரைபுரளும் இந்த கொண்டாட்டங்களில் லட்சோப லட்சம் மக்களுடன் நீங்களும் தியானத்தில் சங்கமிக்க முடியும். புனிதம் வாய்ந்த வெள்ளியங்கிரி நிழலில், தியானலிங்க ஷேத்திரத்தில், சத்குருவின் அருளில் இவ்வருடமும் மகா சிவராத்திரி விழா மிகுந்த கோலாகலத்துடன் நடைபெற இருக்கிறது.இவ்வருட இசைக்கு சிறப்பு செய்ய பத்மவிபூஷண் பண்டிட் ஜெஸ்ராஜ், ராஜஸ்தான் ரூட்ஸ் உட்பட பல பிரபல கலைஞர்களும் வரவுள்ளார்கள். "நான் இதுவரை சிவராத்திரியன்று இரவு விழித்திருந்ததே இல்லை. சத்குரு முதுகு தண்டை நேராக வைக்கும்படி சொன்னவுடன், எனக்கு என் முதுகுவலிதான் ஞாபகத்திற்கு வந்தது. ஆனால் அன்று இரவு முழுக்க எனக்கு தூக்கமே வராதது ஆச்சர்யமானது. முதுகு வலி மறந்துபோய், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் இருந்தேன். மறுநாள் காலை விடுப்பு எடுக்க தேவைப்படாததால் வேலைக்கும் சென்றுவிட்டேன்," என்று சென்னை பல்லாவரத்தை சேர்ந்த திருமதி. அமுதா அவர்கள் சொல்ல... வார்த்தைகளால் விளக்க இயலாத இந்த அனுபவத்தை நீங்களும் வந்து உணர்ந்துதான் பாருங்களேன்! ஈஷா மகாசிவராத்திரி நிகழ்ச்சிகள் ராஜ், பாலிமர், ஆஸ்தா தொலைகாட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இன்றிரவு எங்களுடன் இணைந்திருங்கள்
மகாசிவராத்திரி
நாள்: பிப்ரவரி 27, 2014
இடம்: ஈஷா யோகா மையம், கோவை
நேரம்: மாலை 6 மணி முதல் மறுநாள்
காலை 6 மணி வரை
இருக்கைப் பதிவிற்கு 83000 83000, 83000 11111
யார் இந்த சிவன்?
சிவனை எது இல்லையோ, அது என்ற அர்த்தத்தில் குறிப்பிடும்போதும், அல்லது ஆதியோகி என்று குறிப்பிடும்போதும் அவை ஒரு வகையில் ஒன்றுதான் என்றாலும், அவை முற்றிலும் மாறுபட்ட இரு கோணங்கள். இந்தியக் கலாசாரம் இவ்விரண்டு வாதங்களையுமே அரவணைப்பதால், இதிலிருந்து அதற்கும், அதிலிருந்து இதற்கும் எளிதாக மாறிக் கொள்வோம். ஒரு கணத்தில் சிவனை பரந்து விரிந்த உண்மை என்ற அர்த்தத்தில் பேசுவோம், அடுத்த நொடியே அவர் யோக வழிமுறைகளை வழங்கிய ஆதியோகி என்ற அர்த்தத்தில் குறிப்பிடுவோம்.
துரதிர்ஷ்டவசமாக, பலருக்கு சிவன் அறிமுகமாவது இந்தியக் காலண்டர் வரைபடங்கள் மூலம்தான். அதில் சிவனைக் கொழு கொழு கன்னத்தோடு, நீல நிற மனிதராக வரைந்திருப்பார் ஓவியர். அவரிடம் ஒரேயொரு முகம் மட்டுமே இருக்கும் போலும். அவரிடம் கிருஷ்ணரின் வரைபடம் கேட்டால், அதே உருவத்தில் ஒரு புல்லாங்குழலை தீட்டித் தருவார். இராமரின் படம் கேட்டால் அதே முகத்தோடு, கையில் ஒரு வில்லை மட்டும் வரைந்து தருவார். சிவனின் படம் கேட்டால், தலையில் ஒரு நிலாவை வரைந்து, இதுதான் சிவன் என்று தந்துவிடுவார்! இதைப் பார்க்கும்போது, எக்காரணம் கொண்டும் ஓவியரின் முன் மட்டும் உட்கார்ந்து விடக்கூடாது என்று எண்ணுவேன். புகைப்படங்கள் பரவாயில்லை, அவை நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அவ்வாறே உங்களை படம் பிடித்துவிடும். பார்ப்பதற்கு வில்லன்போல் நீங்கள் இருந்தால், புகைப்படமும் அவ்வாறே வரும். அட! சிவனைப் போன்ற ஒரு யோகி ஏன் கொழு கொழுவென்று இருக்க வேண்டும்? அவரை எலும்பும் தோலுமாக, பட்டினி கிடப்பவராய் சித்தரித்தால் கூடப் பரவாயில்லை, ஆனால் கொழு கொழு சிவனை எப்படி ஏற்க முடியும்?
யோகக் கலாசாரத்தில், சிவனை கடவுளாகப் பார்க்க மாட்டார்கள். அவர் இப்பூமியில், இமாலய மலை அருகே வாழ்ந்த ஒரு மனிதர். யோகப் பாரம்பரியங்களை உருவாக்கியவர் என்ற முறையில், மனிதகுலத்தின் விழிப்புணர்வுநிலைக்கு அவரது பங்களிப்பு நிகரில்லாதது. மதங்கள் எல்லாம் பிறப்பதற்கு முன்பே யோகா தோன்றிவிட்டது. இனி ஒன்று சேர்வதென்பது நடக்காத காரியம் என்பதுபோல், மனிதர்களை பிளவுபடுத்தி வைத்திருக்கும் இந்த வழிகளை மனிதர்கள் உருவாக்கும் முன்பே, மனித விழிப்புணர்வை மேம்படுத்தும் சக்திவாய்ந்த கருவிகள் உருவாக்கப்பட்டு, பூமியெங்கும் பரப்பப்பட்டன. இந்த மனித யந்திரம், அதன் உச்சபட்ச சாத்தியத்தை அடைவதற்கு இருக்கக் கூடிய எல்லா வழிகளையுமே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆராய்ந்துவிட்டார்கள். அதன் ஆழமும் நுணுக்கமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. "நம்முடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் அப்படி என்ன நுண்ணறிவுடன் வாழ்ந்துவிட்டார்கள்?" என்ற கேள்வி அர்த்தமற்றது. காரணம், இது ஏதோ உயரிய சிந்தனையினாலோ, ஒரு குறிப்பிட்ட பண்பாட்டினாலோ, நாகரிகத்தாலோ உருவானதல்ல, உள்நிலையில் பிறந்த ஞானத்தால் உருவானது. அவரைச் சுற்றி நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அவர் ஞான ஊற்றாகி, தன்னையே வெளிக் கொட்டினார். மிக விரிவாக, மனித யந்திரம் எப்படிப்பட்டது, மனித உடலினுடைய ஒவ்வொரு புள்ளியிலும் என்னவெல்லாம் செய்யமுடியும், அதனால் எவ்வெவ்வகையான சாத்தியங்கள் கிட்டும் என்று தெள்ளத் தெளிவாக விளக்கம் கொடுத்தார். அதில் இன்றளவிலும் எவ்வித திருத்தமும் செய்ய முடியாத அளவிற்கு, எதை எல்லாம் சொல்லமுடியுமோ, அவை எல்லாவற்றையும், அதை எவ்வளவு அழகாக எவ்வளவு நேர்த்தியாக வெளிப்படுத்த முடியுமோ, அப்படியே அவர் வெளிப்படுத்தி விட்டார். அதனை புரிந்து கொள்வதற்கு உங்கள் வாழ்நாள் போதாது. இந்த யோக விஞ்ஞானம், முதன்முதலில், இமாலய மலையின் கேதார்நாத் அருகே இருக்கும் பனிக்கட்டி ஏரி காந்தி சரோவரின் கரையோரத்தில் வழங்கப்பட்டது.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM