Post by radha on Feb 12, 2014 6:49:03 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA;,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
SOURCE:-AMMAN DARSANAM-FEB.2014
சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீசங்கராச்சார்யாள் அனந்தஸ்ரீ விபூஷித அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள்
ஒரு சமயம் பிரம்மாவும் விஷ்ணுவும், தங்களுக்குள் மிகப் பெருமை வாய்ந்தவர் யார் என்ற சர்ச்சையில் ஈடுபட்டார்கள். அப்பொழுது அவர்கள் எதிரில், லிங்க வடிவத்தில் ஒரு பெருஞ்ஜோதியாக சிவன் தோன்றினார். அவ்வடிவம் விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து காணப்பட்டது. சிவனின் பாதங்களைக் கண்டு பிடிப்பதற்காக விஷ்ணு, ஒரு பன்றியின் உருவத்தை எடுத்துக் கொண்டு, பூமியைத் தோண்டிக்கொண்டே சென்றார். பிரம்மா ஓர் அன்னப் பறவையாக உருமாறி, சிவனின் தலையைத் தேடி, ஆகாசத்தில் உயர உயரப் பறந்து சென்றார். இருவருக்குமே அவர்கள் நினைத்த காரியம் கைகூடவில்லை. அதனால் அவர்கள் அகந்தை அகன்றது. எங்கும் நிறைந்துள்ள பரம்பொருள்தான் எல்லோரைக் காட்டிலும் மிகப் பெரியவர் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.
மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவனை வேறுபடுத்தவோ அல்லது விஷ்ணு, சிவனைக் காட்டிலும் தாழ்ந்தவர் என்று கூறவோ இக்கதை சொல்லப்படவில்லை. அண்டசராசரங்களின் தலைவரான, எல்லாம்வல்ல, எங்கும் நிறைந்த, சர்வக்ஞரான இறைவனே முதன்மையானவர் என்ற கருத்தை வெளிப்படுத்துவதே இக்கதையின் முக்கிய நோக்கமாகும். மேற்கூறிய ஜோதிர்லிங்க வடிவம் தோன்றிய திருநாளே சிவராத்திரியாகும். மாசி மாதத்தில் வரும் தேய்பிறையின் பதினான்காவது நாளில்தான் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் முழுவதும் ஒன்றும் சாப்பிடாமல் உபவாசமிருந்து, இரவு முழுவதும் தூங்காமல் சிவனைப் பூஜிக்க வேண்டும். வெறுமென தூக்கத்தை மட்டும் கைவிட்டு, சிவனை நினைக்காமலிருந்தால் அது அர்த்தமற்ற செயலாகும்.
சிவனை இரவு முழுவதும் ஆராதிப்பதனால் என்ன பலன் கிடைக்கும்? இக்கேள்விக்கான பதில் ஒரு சுலோகத்தில் கூறப்பட்டுள்ளது. “ஓ கண்களே! மிகவும் புனிதமான, மங்களமான சிவராத்திரியன்று நீங்கள் (இரு கண்களும்) இருவரும் மிக ஜாக்கிரதையுடனிருந்து விழித்திருந்தால், உங்களுக்குத் துணையாக, உங்களைப் போலவே இருக்கும் மற்றொரு கண் உங்கள் இருவருக்கும் நடுவில் தோன்றும்” என்பதே அச்சுலோகத்தின் பொருள். சிவராத்திரி நாளன்று விரதமிருந்து சிவனைப் பூஜிப்பவர்கள் சிவனாகவே ஆகிவிடுகிறார்கள் எனபதுதான் இதன் உட்கருத்தாகும்.
(நன்றி: ஜகத்குரு ஸ்ரீஅபிநவவித்யாதீர்த்தர் சொன்ன “அறிவூட்டும் சிறுகதைகள்” நூலிலிருந்து தொகுக்கப்பட்டது)
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM