Post by radha on Feb 7, 2014 1:06:03 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
தைமாத அமாவாசைக்கு பிறகு வரும் 7வது நாள் ரத சப்தமி என்று போற்றப்படுகிறது. இது ஒரு விரத நாள்.
சூரியன் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிப்பது, பொங்கல விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், உண்மையில் அமாவாசைக்கு அடுத்த வளர்பிறை ஏழாம் நாளான சப்தமி அன்றுதான் சூரியன் தேரானது வடக்கு திசை நோக்கி திரும்புகிறது. இதை ரச சப்தமி, மகா சப்தமி, ஜெயந்தி சப்தமி என்று சொல்வர். அன்று சூரியனுக்கு விசேஷமான ஒளி பிறக்கிறது என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
சூரியனின் தேருக்கு மற்ற ரதங்களில் உள்ளது போல் இரண்டு பக்கங்களிலும் சக்கரங்கள் கிடையாது. ரதத்தின் மையப் பகுதியில் மட்டும் ஒரே ஒரு சக்கரம் உண்டு. இச்சக்கத்தின் குடத்தில் மூன்று மேகலைகள் மட்டும் இருக்கும். அந்த மூன்று மேகலைகள் காலை, நண்பகல், மாலை ஆகியவற்றைக் குறிக்கின்றன. இந்த ஒற்றைச் சக்கரத்தில் ஆரங்கள் இருக்கும். வெளிவட்டத்தில் உள்ள ஆறு பருவங்களைக் குறிக்கின்றன. அவை கார்காலம், இலையுதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் ஆகும்.
சூரிய ரதத்தினை ஏழுகுதிரைகள் இழுக்கின்றன. அவை ஏழு நிறங்களைக் குறிக்கின்றன. ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்ற வானவில்லின் நிறங்களே அவை. சூரியனுடைய ஒளியில் காணப்படும் வண்ணஜாலத்தின் காரணம் இதுவே. ரதசப்தமி நாளை சில திருத்தலங்களில் தீர்த்தவாரி நாளாகக் கொண்டாடுகிறார்கள். ரத சப்தமியன்று சூரிய தேவனை வழிபட்டு விரதம் கடைபிடித்து அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று இறைவனை அர்ச்சித்து வழிபட்டால் நவகிரக தோஷங்கள் விலகும்.
சூரிய தோஷம் நீங்கவும். சூரியனின் அருள் பெறவும், நவகிரகத் தொகுப்பில் உள்ள சூரிய பகவானுக்காவது அல்லது சில கோயில்களில் தனித்துக் காணும் சூரிய பகவான் விக்ரகத்திற்காவது அபிஷேகம் செய்விப்பது சிறப்பு. அன்று அவருக்கு சிவப்பு வஸ்திரம் அணிவித்து, சிவப்பு மலர்களால் அர்ச்சித்து வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
சூரிய தீர்த்தங்கள் பல திருத்தலங்களில் உள்ளன. காஞ்சியில் உள்ள சூரிய தீர்த்தம், பரிதிக் குளம் எனப்படுகிறது. திருமீயச்சூர், திருக்கோலக்கா, திருசெம்பொன்பள்ளி, ஆகிய தலங்களிலும் உள்ள குளங்களில் நீராடினால் சூரிய தோஷம் நீங்கும். இறைவனுடைய ஞானசக்தியான அருள்தான் சூரியன். அந்த ஞானசக்தி ஒரு தை மாத வளர்பிறை சப்தமி திதி நாளில் வெளிப்பட்டதாக புராணம் கூறும். மேலும் சூரியன் தோன்றியபோது அதன் ஒளிக் கதிர்களின் வீச்சு அளவுக்கதிகமான உஷ்ணமும் ஒளியும் கொண்டிருந்தனவாம். அதனை பூலோகவாசிகள் தாங்கமாட்டார்கள் என்பதற்காக இறைவனின் ஆணைப்படி விஸ்வகர்மா கதிர்களின் கூர்மையைக் குறைத்தாராம். அந்த நாள் சப்தமி என்று புராணம் கூறும்.
ரதசப்தமி விரதம் கடைபிடிப்பவர்கள் அன்று அதிகாலையில் நீராட வேண்டும் அப்போது ஏழு எருக்கு இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் மேல் சிறிது அரிசி, அருகம்புல் ஆகியவற்றை வைத்து உச்சந்தலையில் வைத்தக் கொண்டு சூரிய பகவானை நினைத்த நீராட வேண்டும். இது ஆண்களுக்குரிய நீராடல். மேலே சொன்ன பொருட்களுடன் சிறிதளவு மஞ்சள்தூளையும் சேர்த்து கொண்டு பெண்கள் தலைக்குக் குளிக்க வேண்டும். நீராடல் முடிந்ததும் சூரியன் உதிக்கும் கிழக்கு திசை நோக்கி சூரிய வழிபாடு செய்வதால் கண்ணொளி பிரகாசிக்கும். சரும நோய்கள் ஏற்படாது. புத்துணர்ச்சி உண்டாகும். சூரிய தோஷங்கள் நீங்கி சுகமான வாழ்வு கிட்டும்.
ரத சப்தமி அன்று மட்டும் சூரிய வழிபாடு செய்வதுடன் நிறுத்திக் கொள்ளாமல் தினமும் சூரிய நமஸ்காரம் முறைப்படி செய்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்!
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
SOURCE.:Kumudam Bhakthi FebFirst