|
Nelli
Apr 23, 2012 9:14:51 GMT 5.5
Post by Sumi on Apr 23, 2012 9:14:51 GMT 5.5
'அரி' நெல்லி * அட்சய திருதியை தினம் ஒன்றில் தான் அம்பிகையை போற்றி, கனகதாரா துதியினை பாடி தங்க நெல்லிக்கனி மழையை பொழிய செய்தாராம் ஆதிசங்கர மகான். * நெல்லி மரத்தில், திருமாலும், திருமகளும் சேர்ந்து உறைவதாக சொல்கின்றன புராணங்கள். * நெல்லி மரம் வளரும் வீட்டினை தீய சக்திகள் நெருங்காது. அங்கே துர்மரணம் நிகழாது. அந்த வீடு லட்சுமி கடாட்சத்துடன் விளங்கும் * நெல்லி கனியை நிவேதனம் செய்வதாலும், அதன் இலைகளால் அர்சிப்பதாலும் மகாவிஷ்ணு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார் . * ஏகாதசியன்று நெல்லி இலை மற்றும் நெல்லி முள்ளி (காய்ந்த நெல்லிக்காய் போடி) இடப்பட்ட நீரில் குளித்து, விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பு . * துவாதசி நாளில் ஏகாதசிவிரதத்தினை பூர்த்தி செய்து, நெல்லிக்கணியை உண்பது அவசியம். இதனால் கங்கையில் நீராடிய பலனும், காசியில் வசித்த பலனும் கிட்டும். * வெள்ளி கிழமைகளில் நெல்லி மரத்தினை வலம் வந்து வழிபடுபவர் திருமகளின் திரூவருளை பெறுவர். * அமாவாசை தினங்களிலும், இரவு நேரத்திலும் நெல்லிக்கணியை உண்பது கூடாது. * நெல்லிக்கு ஹரிப்ரியா என்றும் பெயர் உண்டு. Source: Kumudham Bhakhi issue dated April 2012
|
|
|
Nelli
Apr 23, 2012 11:20:50 GMT 5.5
Post by krsiyer on Apr 23, 2012 11:20:50 GMT 5.5
very good definition ! Thanks for sharing ! Jaya Jaya Sankara, Hara Hara Sankara,
|
|