Post by radha on Dec 29, 2013 0:51:32 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
அருள்வாக்கு: காம்போஜி
KALKI டிசம்பர் 29,2013,
காம்போஜம் என்கிறது கம்போடியான்னு பல பேருக்கு தெரிஞ்சிருக்கும். அங்கே பாரத கலாசாரம் ரொம்ப அழமாப் பரவியிருக்கிறதும் தெரிஞ்சிருக்கலாம். ஒரு வேளை அந்ததேசத்திலிருந்து இறக்குமதி பண்ணிண்ட ராகம்தான் காம்போஜியோன்னா, அப்படியில்லைன்னு ஸாம்பமூர்த்தி மாதிரியான ரிஸர்ச்காரா சொல்றா. நம்மகிட்டேயிருந்து தான் அவா அநேக ஸமாச்சாரம் கடன் வாங்கிண்டாளே தவிர, நாம அந்த காலத்திலே நாகரிகத்திலே ரொம்ப பின்தங்கியிருந்த அவாகிட்டேயிருந்து எதுவும் எடுக்கலை. நிச்சயமா, ஸங்கீதத்திலே ரொம்ப முன்னேணியிருந்த நாம ஏதோ போக் மியூசிக் தான் இருந்த கிழக்காசிய தேசங்களிலிருந்து எதுவும் கடன் வாங்கலைன்னு சொல்றா. பின்னே ஏன் காம்போஜின்னு பேருன்னா இன்னொண்ணு தோணறது. கம்போடியாவை மாத்திரம் காம்போஜம்னு சொல்லலை. இந்தியாவோட வடக்கத்தி எல்லையை ஒட்டினாப்பல இருக்கிற ஒரு பிரதேசத்தையும் காம்போஜம்னே சொல்லியிருக்கான்னு தெரியறது. காளிதாஸன் ரொம்ப விஷயம் தெரிஞ்சவர். மேக ஸந்தேசத்துல இந்தந்த வழியா போன்னு மேகத்துங்கிட்ட யக்ஷன் சொல்லிண்டு போறதை வெச்சே கரெக்டா மேப் போட்டுடலாம். அவ்வளவு ஸரியா சொல்லியிருப்பார். அவர் ரகுவம்சத்துல ரகு தேசம் தேசமாப்படை எடுத்துண்டு போய் ஜயிச்சதை வரிசையாக சொல்லிண்டு போறச்சே ஸிந்து நதியை தாண்டி வடக்கே இமய மலையை ஒட்டினாப்போலயே காம்போஜத்தை சொல்லியிருக்கார். இதிலேருந்து அண்ட பாரதம்னும் விசால இந்தியான்னும் சொல்ற தேசத்துக்குள்ளேயே ஹிண்டுகுஷ் பிராந்தியத்திலே ஒரு காம்போஜம் இருந்திருக்கிறதா தெரியறது. அங்கே விசேஷமாயிருந்த ஒரு ராகத்திலேயிருந்து காம்போஜி உண்டாச்சு போலேயிருக்கு.
-ஸகத்குரு காஞ்சிகாமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM