Post by Sumi on Apr 11, 2012 8:16:19 GMT 5.5
கடற்கரையில் ஒதுங்கிய ரத்னகிரீஸ்வரர்!
சென்னை- பெசன்ட்நகர் கடற்கரை பகுதியில், கரை ஒதுங்கிய லிங்கத் திருமேனியைக் கண்ட அன்பர்களுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. மகாபெரியவருக்கு மனதார நன்றியை சமர்ப்பித்தவர்கள், 'சம்போ மகாதேவா' என்று ஈசனை கைதொழுதார்கள்!
காஞ்சி மகாபெரியவரின் வாக்கும் பலித்தது!
ஆமாம்! சுமார் 45 வருடங்களுக்கு முன் சென்னை- பெசன்ட்நகருக்கு விஜயம் செய்திருந்தார் மகா ஸ்வாமிகள். அப்போது, அய்யன் மலை (திருச்சி மாவட்டம், குளித்தலைக்கு அருகே உள்ள இந்தத் தலத்தை ரத்தினமலை என்றும் அழைப்பர்) ஸ்ரீரத்னகிரீஸ்வரரை குலதெய்வமாகக் கொண்ட அன்பர்கள் சிலர் அவரிடம், ''ஸ்வாமி... பெசன்ட்நகரில் ரத்னகிரீஸ்வரருக்கு ஒரு கோயில் கட்ட எண்ணியுள்ளோம். அதற்கு நீங்கள் அனுக்கிரஹம் செய்ய வேண்டும்!'' என்று வேண்டினர்.
அவர்களிடம், ''பெசன்ட் நகர் சமுத்திரத்தில் ரத்னகிரீஸ்வரர் கிடைப்பார். அவரை ஸ்தாபிச்சி கோயில் கட்டுங்கோ!'' என்று அருள் புரிந்திருந்தார் ஸ்வாமிகள்.
அவரது வாக்குப்படியே சிவலிங்கம் ஒன்று கரை ஒதுங்க... அன்பர்களுக்கு ஆனந்தம்! 1.10.1968- அன்று (புரட்டாசி மாதம்) சிருங்கேரி ஆச்சார்யர் ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளால் பூமி பூஜை செய்யப்பட்டு, ஓலைக்குடிசையில் குடியேறினார் ஸ்ரீரத்னகிரீஸ்வரர். காலப்போக்கில், இறையருளாலும் அன்பர்களது முயற்சியாலும் குடிசை, அழகிய திருக்கோயிலாகப் பரிணமிக்க... ஸ்ரீரத்னகிரீஸ்வரரின் அருட்கடாட்சம் இன்றும் தொடர்கிறது!
காஞ்சி காமகோடி பீடாதிபதிகளான ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் முன்னிலையில், 1998-ஆம் ஆண்டு இந்தக் கோயிலுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் உள்ள ஸ்ரீசத்ய விநாயகர், ஸ்ரீரமணரால் பூஜிக்கப்பட்ட மூர்த்தியாம்! இங்கே பிரதோஷ வழிபாடுகள் விமரிசையாக நடைபெறுகின்றன. பிரதோஷத் திருநாளில், ஸ்ரீபிரதோஷ நாயகருக்கு பிரார்த்தனை மாலை சாற்றி வழிபட்டால், விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இன்னும் பிற வேண்டுதல்களுக்காக 'பிடி அரிசி' காணிக்கை செலுத்தியும், வில்வ மாலை சமர்ப்பித்தும் ஸ்ரீரத்னகிரீஸ்வரரை வணங்கிச் செல்கிறார்கள்.
பக்தர்கள் செலுத்தும் பிடி அரிசியை, பிரதோஷம் மற்றும் பிற பண்டிகை நாட்களில் தயிர்சாதமாகவும், வெண்பொங்கலாகவும் சமைத்து ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து பிரசாதமாக விநியோகிக்கிறார்கள்.
உற்ஸவ மூர்த்தியும் மூலவருடன் கருவறையிலேயே அமைந்திருப்பது இந்தக் கோயிலின் சிறப்பு. இங்கே அருள்பாலிக்கும் அம்பிகை சுருண்ட கேசம் கொண்டவள் ஆதலால், ஸ்ரீஅராளகேசி என்ற திருநாமத்துடன் திகழ்கிறாள்.
ஸ்ரீராமர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீதுர்கை ஆகியோரும் தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள். நவக்கிரகங்களையும் தரிசிக்கலாம். பிராகாரத்தின் உள்ளேயே நான்கு வில்வ மரங்களும், அரசமரமும் உள்ளன. நினைத்ததை நிறைவேற்றும் ஸ்ரீரத்னகிரீஸ்வரரை கார்த்திகை சோமவாரத்தில் தரிசித்து, கவலைகள் நீங்கப் பெறலாம்.