|
Post by Kanchi Periva on Sept 16, 2013 8:08:23 GMT 5.5
Our special thanks to our respected member Shri senzkumar and our respected moderator Smt Sumi for getting this wonderful card done.
|
|
|
Post by radha on Sept 16, 2013 8:29:47 GMT 5.5
Happy Onam
கேரளாவை மகாபலி என்ற மன்னன் ஆண்டு வந்தான். மன்னனின் புகழ் தேவலோகத்திற்கும் பரவியது. தேவர்கள் கலக்கமடைந்தனர். மகாவிஷ்ணுவிடம், மகாபலி மன்னனின் புகழ் மேலும் பரவாமல் இருக்க வேண்டிக் கொண்டனர். ஒரு நாள் மகாபலி மன்னன் யாகம் நடத்தினான். மகாவிஷ்ணு 3 அடி மட்டுமே உருவம் கொண்ட வாமனனாக அவதரித்தார். மகாபலியிடம் தனக்கு 3 அடி மண் வேண்டும் என கேட்டார். விபரீதத்தை உணராமல் சுக்ராச்சாரியார் தடுத்தும், தானம் தர வாமனனின் கையில் தண்ணீரை ஊற்ற முயன்றபோது சுக்ராச்சாரியார் ஒரு வண்டின் உருவத்தில் அந்த பாத்திரத்தின் மூடியை அடைத்துக் கொண்டார்.
ஆனால் இதை தெரிந்து கொண்ட வாமனன் ஒரு தர்ப்பப் புல்லால் அந்த வண்டின் கண்ணில் குத்தினார். வலி தாங்க முடியாமல் வண்டின் உருவத்தில் இருந்த சுக்ராச்சாரியார் அந்த பாத்திரத்திலிருந்து பறந்து சென்றார். வாமனனின் கையில் மகாபலி தண்ணீரை ஊற்றினார். உடனே தனது விஸ்வரூபத்தை காண்பித்த மகாவிஷ்ணு, ஒரு அடியாக பூமியையும், அடுத்த அடியாக வானத்தையும் அளந்தார்.
3வது அடியை எங்கே அளப்பது என வாமனன் கேட்டபோது விபரீதத்தை உணர்ந்து கொண்ட மகாபலி, தனது தலையில் வைக்குமாறு கூறினார். பாதாளத்திற்குள் செல்வதற்கு முன்னால் எல்லா வருடமும் இந்த நாளில் மக்களைப் பார்க்க வரவேண்டும்; வரவேற்க வாசலில் பூக்கோலமிட வேண்டும் என்று வரம் கேட்க விஷ்ணுவும் தந்தார்; அதுவே ஓணம்.
‘காணம் விற்றாவது ஓணம் உண்’
* ஓணம் பண்டிகை என்றாலே பூக்கோலத்திற்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது ‘ஓண சத்யா‘ என அழைக்கப்படும் விருந்துதான். * ‘காணம் விற்றாவது ஓணம் உண்‘ என பழமொழி உண்டு. * திருவோண நாளன்று தலைவாழை இலையில் இஞ்சி, காலன், ஓலன், கிச்சடி, பச்சடி, தோரன், அவியல், கூட்டுகறி என பலவகை குழம்புகளுடன் உணவு பறிமாறப்படும். * வயிறு நிறைய சாப்பிட்ட பின்னர் உணவு செரிப்பதற்காக கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். * கயிறு இழுத்தல், படகுப் போட்டிகள் என பலவகை விளையாட்டுகள் நடத்தப்படுவது உண்டு. * இது தவிர ‘புலிக்களி‘ என்ற ஒரு நிகழ்ச்சியும் ஓணத்தை முன்னிட்டு நடத்தப்படுகிறது. * உடலில் பலவண்ணங்களில் சாயம் பூசி வயிற்றில் புலி போல வரைந்து நடனமாடுவார்கள். * இதை பார்க்கும்போது ஊர் முழுவதும் புலிகள் இறங்கியதைப் போல தோன்றும். * மொத்தத்தில் ஓணம் பண்டிகை என்பது மலையாள மக்களின் தவிர்க்க முடியாத ஒரு பண்டிகையாகும். * சாதி, மத வேறுபாடின்றி இந்தப் பண்டிகை கொண்டாடப்படுவதால் இன்றைய ‘கலவர‘ காலகட்டத்தில் உலக மக்கள் அனைவருக்கும் இந்த பண்டிகை ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.
10 நாள் கோலாகலம்
பொதுவாக மலையாளிகளைப் பற்றி தமாஷாக ஒரு பழமொழி சொல்வார்கள். அதாவது சந்திரனின் முதலில் காலடி எடுத்து வைத்து மகிழ்ச்சியில் நீல் ஆம்ஸ்ட்ராங் இருந்தார். அப்போது தற்செயலாக பார்த்தபோது அங்கு ஒரு நாயர் கடையில் டீ ஆற்றிக்கொண்டிருந்தாராம். நமக்கு முன்னாடியே இங்கு ஒரு மலையாளி வந்துவிட்டாரா என நீல் ஆம்ஸ்ட்ராங் ஆச்சரியப்பட்டாராம். இப்படி தமாஷாக சொல்வதுண்டு.
அந்த மலையாளி எந்த மூலையில் இருந்தாலும் தங்களது பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகையை கொண்டாட தவறுவது கிடையாது. அந்த அளவிற்கு ஓணம் மலையாளிகளின் மூச்சோடு கலந்திருக்கிறது என்றால் மிகையல்ல. ஓணம் என்பது மலையாளிகள் சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் இணைந்து கொண்டாடும் ஒரு திருநாள் ஆகும். இதற்கு ‘வசந்த திருவிழா‘ என்ற பெயரும் உண்டு.
மலையாளத்தின் முதல் மாதமான ‘சிங்ஙம்‘ மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நடசத்திரம் வரை 10 நாட்கள் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த 10 நாட்களிலும் மலையாளிகள் தங்களது வீட்டின் முன் பூக்கோலம் இடுவார்கள். முதல் நாளில் சிறிதாக தொடங்கும் இந்த பூக்கோலம் கடைசி நாளில் மிகப்பெரிய கோலமாகும். இதற்கு ‘அத்தப் பூக்கோலம்‘ என அழைக்கின்றனர்.
|
|
|
Post by kahanam on Sept 17, 2013 23:28:29 GMT 5.5
Happy ONam Greetings!
|
|