|
Biravar
Mar 15, 2012 10:45:39 GMT 5.5
Post by kramans on Mar 15, 2012 10:45:39 GMT 5.5
பைரவர் என்ற பெயரின் பொருள்
சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் என்றும்,என்றும் இருப்பது என்றும் பொருள் உண்டு.முருகன் என்பதற்கு அழகு,இளமை என்று பொருள் உண்டு.அது போலவே பைரவர் என்ற சொல்லுக்கும் பொருள் உண்டு.
“ப” என்பது காத்தலைக் குறிக்கும்; “ர” என்பது அச்சத்தால் உணர்த்து தலைக் குறிக்கும்; “வ” என்பது படைத்தலைக் குறிக்கும். முத்தொழிலையும்(படைத்தல்,காத்தல்,அழித்தல்) இச்சொல் உணர்த்துகிறது.
இதேபோல் “ப” என்பது பரணத்தை(உயிர்களைப் படைக்கும் தொழிலை)க் குறிக்கும்; “ர” என்பது ரமணத்தை(உயிர்களைக் காப்பதை)க் குறிப்பிடுகிறது; “வ” என்பது வமனத்தை(உயிர்கலின் இயக்கத்தை அழித்து,பின் தன்னுள் ஒடுக்கிக் கொள்வதை) உணர்த்துகிறது.
பைரவம் என்னும் சொல்லுக்கு தன்னை உபாசிப்பவனைக் காப்பவன் என்ற பொருளையும், தன் அடியார்களை துன்புறுத்துவோர்களை பயமுறுத்தி அழிப்பவன் என்ற இருவேறுபட்ட பொருள்களையும் குறிக்கும்.
மூவர்க்கும் தேவர்க்கும் காண்பதற்கரிய இறைவன்,காதலாகிக் கசிந்துருகி,அன்புருவாய் மாறும் அடியவர்க்கு,இறங்கி வந்து காட்சி தந்து கருணை புரியும் சிவ வடிவமே மஹாபைரவர் ஆகும். கலியுகத்தில் பேசும் தெய்வமே காலபைரவர் ஆவார்.
நன்றி:பைரவ ரகசியம்,பக்கம்2,எழுதியவர்:கொல்லிமலை சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர் தருமலிங்க சுவாமிகள்
|
|
|
Biravar
Mar 16, 2012 17:44:07 GMT 5.5
Post by krsiyer on Mar 16, 2012 17:44:07 GMT 5.5
excellent definition of the word "bhairava" Thanks for sharing Jaya Jaya Sankara, Hara Hara Sankara
|
|
|
Biravar
Feb 19, 2013 12:33:17 GMT 5.5
Post by s. padmanabha iyer on Feb 19, 2013 12:33:17 GMT 5.5
thank u
|
|