Post by radha on Apr 20, 2013 10:18:38 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
SOURCE:_ AMMAN DARSANAM,SRINGERI
“ஸம்ஸ்க்ருத ரத்னா” டாக்டர் ஆர். தியாகராஜன்
ரஸிப்பதற்கும், ருசிப்பதற்கும் சுவையான சுருக்கமான கருத்தை அளித்து, உள்ளத்தைக் கவரும் ஸுபாஷிதங்கள் ஸம்ஸ்க்ருத மொழியில் பல உள்ளன. சில சுவையான ஸ்லோகங்களைப் பார்க்கலாம். பொதுவாக கஷ்டங்கள் மனிதர்களுக்கும், பிராணிகளுக்கும் மட்டும்தானா? தெய்வங்களுக்கும் கூட இருக்கிறது என்று புலப்படுத்துவது போல ஒரு சுலோகம். இங்கே பகவான் விஷ்ணு படுகின்ற துயரத்தைப் பாருங்கள்:
ஏகா பார்யா ப்ரக்ருதி முகரா சஞ்சலா ச த்விதீயா
புத்ரஸ்த்வேகோ புவன விஜயீ மன்மதோ துர்நிவார: |
சேஷச்சய்யா சயனமுததைள வாஹனம் பன்னகாரி:
ஸ்மாரம் ஸ்வக்ருஹ சரிதம் தாருபூதோமுராரி: ||
பொருள்: ஒரு மனைவியோ எப்போதும் தொணதொணத்துக் கொண்டே இருக்கிறாள். இன்னொரு மனைவியான லக்ஷ்மியோ மிகவும் சஞ்சலமாக இருப்பவள். உலகத்தையே ஆட்டிப் படைக்கும் ஒரு பிள்ளை. கட்டுக்கடங்காத மன்மதன். படுக்கையோ ஆதி சேஷனாகிய பாம்பு. படுத்திருக்கும் இடமோ கடல். வாஹனமோ பாம்பிற்கு எதிரியான கருடன். இப்படியாக இருக்கின்ற தனது குடும்பத்தின் நிலையை நினைத்து நினைத்து மரம் போல ஒன்றும் பேச இயலாத நிலையில் தவிக்கின்றார். யார் தெரியுமா? முரன் என்ற அசுரனையே வெற்றி கொண்ட விஷ்ணுவுக்கே இந்த கதி.
அது மட்டுமல்ல. உலகத்தை ஆட்டிப் படைக்கும் ஸ்ரீ பரமேஸ்வரனின் கதி என்னவாம்? அதுவும் இப்படித்தான் இருக்கிறது..
அத்தும் வாஞ்சதி வாஹனம் கணபதேராகும் க்ஷுதார்த்த: பணீ
தம் ச க்ரௌஞ்ச பதே: சிகீ ச கிரிஜாஸிம் ஹோபி நாகானனம் |
கௌரீ ஜஹ்னுஸுதா மஸுயதி கலாநாதம் கபாலானலோ
நிர்விண்ண: ஸ பபௌ குடும்ப கலஹாதீ சோபி ஹாலாஹலம் ||
பொருள்: தன்னோடு அமர்ந்துள்ள கணபதியின் வாஹனமான எலியைச் சாப்பிடுவதற்கு சிவனின் உடலில் சுற்றிக் கொண்டிருக்கும் பாம்பானது பசியோடு காத்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பாம்பைத் தின்பதற்காகத் தனது இன்னொரு மகனான முருகனின் மயில் தயாராக உள்ளது. அருகில் அமர்ந்துள்ள பார்வதியின் வாஹனமான சிங்கமோ யானை முகத்தினைக் குறி வைக்கிறது. இதற்கிடையில் பார்வதியோ சிவனின் தலையில் அமர்ந்திருக்கும் கங்கையைப் பொறாமையோடு பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
பரமேச்வரனின் நெற்றியில் உள்ள அக்னியும், தலையில் உள்ள சந்திரனும் ஒன்றுக்கொன்று பொறாமையால் பகைவர்களாக இருக்கிறது. இவ்வாறு உள்ள தனது குடும்பக் கலகத்தைப் பார்த்து வருந்திய பரமேச்வரனே வேறு வழி தெரியாமல் (ஹாலாஹலம்) விஷத்தைக் குடித்துவிட்டாராம்.
ஸ்ரீ பரம சிவனின் பக்தரும், ஸம்ஸ்க்ருதத்தில் 104 நூல்களை எழுதி “அபர சங்கரர்” என்று புகழ் பெற்றவருமாகிய அப்பைய தீக்ஷிதர், ஊமத்தைக் காயை உண்டு உன்மத்த (சித்த மயக்கத்தில்) நிலையிலும் கூட சிவனை மறக்காமல் பாடி எழுதப் பட்ட நூல்தான் “உன்மத்த பஞ்சாசத்”, ஆத்மார்ப்பண ஸ்துதி என்று புகழ்பெற்ற 50 ஸ்லோகங்கள். இத்தகைய பெருமை வாய்ந்த தீக்ஷிதர் சாஸ்திரங்கள் மட்டுமல்லாது அலங்காரத்திலும், சமத்காரத்திலும் கூறப் புகழ்பெற்றவர்.
ஒரு சமயம் தஞ்சாவூர் ப்ருஹதீச்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது நரசிம்ம வர்மன் என்கின்ற மஹாராஜா தனது ஆஸ்தானத்திற்கு அப்பய்ய தீக்ஷிதரையும், தாத்தாசார்யர் என்ற மற்றுமொரு பண்டிதரையும் வரவழைத்து அவர்களோடு பல க்ஷேத்ரங்களைத் தரிசித்து வந்தார். அப்போது ஒரு கோயிலில் ஹரிஹரபுத்ரனான ‘சாஸ்தா’ (ஐயப்பன்) தனது முகவாய்க் கட்டை மீது வலதுகை ஆள்காட்டி விரலை வைத்துக் கொண்டு ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போன்ற விக்ரஹத்தைப் பார்த்தார்.
உடனே அந்த ஊரில் வயது முதிர்ந்த ஒரு பெரியவரைப் பார்த்து இந்த விக்ரஹம் இப்படிக் கவலையோடு இருப்பதன் காரணம் என்ன என்று கேட்டார். அதற்கு அவர், ‘நான் கேள்விப் பட்ட வரையில் இந்த ஊருக்கு ஒரு நாள் ஒரு மஹான் வருவார். அப்போது அவர் இதன் காரணத்தை விளக்கிப் பாடுவார்’ என்றார். உடனே ராஜா, தாத்தாச்சாரியாரிடம் இதன் காரணத்தை விளக்கிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தாத்தாசாரியாரும் இதற்கு சம்மதித்து ஒரு செய்யுள் இயற்றினார்.
விஷ்ணோஸ் ஸுதோஹம் விதினா ஸமோஹம்
தன்யஸ்த தோஹம் ஸுரஸேவிதோஷம் |
ததாமி பூதேச ஸுதோஹ மே தை:
பூதைர் வ்ருதச் சிந்தயதீஹ சாஸ்தா ||
பொருள்: “நான் விஷ்ணுவுக்கு (மோஹினீ ரூபமாய்) இருந்தபோது பிறந்த பிள்ளை. பிரம்மாவுக்குச் சமமானவன். எனவே நான் மிகச் சிறந்தவன். தேவர்கள் என்னைப் போற்றுகிறார்கள். ஆனாலும் என்னைச் சுடுகாட்டில் வாழும் பூதகணங்கள் சூழ்ந்த பரமசிவனின் பிள்ளை என்று சொல்கிறார்களே என்ற வருத்தத்துடன் சாஸ்தா இருக்கிறார்” என்றார் தாத்தாச்சாரியார். இந்த விளக்கும் சரியாக இல்லாததால் சாஸ்தாவின் கை விரலில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை.
உடனே, ராஜா அப்பய்ய தீக்ஷிதரை நோக்கித் தாங்கள் விளக்கம் தர வேண்டும் என்றார். தீக்ஷிதரும் ஒரு ஸ்லோகம் சொன்னார்.
அம்பேதி கௌரீமஹ மாஹவயாமி
பந்த்ய: பிதுர்மாதர ஏவ ஸர்வா: |
கதந்து லக்ஷ்மீதி சிந்தயந்தம்
சாஸ்தாரமீடே ஸகலார்த்த ஸித்யை ||
பொருள்: “நான் பரமசிவனுக்கும் விஷ்ணுவுக்கும் (மோஹினி) பிறந்தவன். ஆகவே எனது தந்தை சிவனைத் தரிசிக்கும் போது அருகிலுள்ள பார்வதீ தேவியை ‘அம்மா’ என்று அழைப்பேன். ஆனால், எனது தாயான விஷ்ணுவைத் தரிசிக்கின்ற போது அருகிலுள்ள அவர் மனைவியான லக்ஷ்மீ தேவியை என்ன சொல்லி அழைப்பேன்? என்று கவலையில் ஆழ்ந்துள்ள சாஸ்தாவை எனது எண்ணங்கள் நிறைவேறப் போற்றுகின்றேன்!”என்று பாடினார்.
உடனே விக்ரஹமாயிருந்த ‘சாஸ்தா’ தனது கைவிரலை முகவாய்க் கட்டையிலிருந்து எடுத்து விட்டாராம்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM