Post by radha on Feb 19, 2012 5:35:41 GMT 5.5
OM Namo PARA BRHMANE,OM NAMO NARAYANAYA, OM GURUPYO NAMAHA :
RESPECTFUL NAMASKARAMS TO SRI MAHA PERIVA
விசாகம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: வியாபாரத்தில் விருப்பத்துடன் ஈடுபடுவர். நடக்காததையும் நடத்திக் காட்டும் சாமர்த்தியம் பெற்றவர்கள். சங்கீதம் போன்ற கலைகளில் ஆர்வம் இருக்கும். தன்னைப் பற்றித் தானே புகழ்ந்து கொள்ளும் இவர்கள், திறமைசாலிகளாகவும் இருப்பர். தானதர்மம் செய்வதில் அக்கறை காட்டுவர். இங்குள்ளமூலவருக்கு மூக்கன் என்று ஒரு பெயர் உண்டு. மலைமீது ஏறிச்செல்ல 626 படிக்கட்டுகள் உள்ளன. மலைமீது திருமலைக்காளி அருள்பாலிக்கிறாள். விநாயகர் சன்னதிக்கு 16 படிக்கட்டுகள் உள்ளன. 16 செல்வங்களும் 16 படிக்கட்டுக்களாக இருப்பதாக கூறுகிறார்கள்.
...
அருள்மிகு கிருபாகூபாரேச்வரர் திருக்கோயில்
அஸ்தம் நட்சத்திரக்காரர்களின் பொதுகுணம்: ஆடை, ஆபரணங்களில் பிரியம் கொண்டவர்கள். கல்வியில் ஆர்வம் காட்டுவர். நாட்டியம், சங்கீதம் போன்ற கலைகளில் ரசிகத்தன்மை இருக்கும். வாயடித்தனமாகவும், விகடமாகவும் பேசும் இயல்பு கொண்டவர்கள். யாரிடமும் தானாக வலியச் சென்று பழகும் இவர்கள், தாயாரின் மீது அலாதி அன்பு கொண்டிருப்பர். பார்வதி பசுவாக மாறி இங்கு வழிபாடு செய்ததால் இத்தலம் கோபுரி என்றும் கோமல் என்றும் வழங்கப்படுகிறது. கோயில் பிரகாரத்தில் விநாயகர், முருகன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, நந்தி, சண்டிகேஸ்வரர் அருளுகின்றனர்.
பிரார்த்தனை
அஸ்தம் ...
அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்
மகம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட இவர்கள், கல்வி பயில்வதில் ஆர்வம் கொண்டிருப்பர். தருமம் செய்வதில் வல்லவர்கள். மனத்தூய்மை, நேர்மை மிக்கவர்கள். பிறரை கவுரவமாக நடத்துவர். மதுரமான மொழி பேசுவதோடு பேச்சு சாதுர்யமும் பெற்றிருப்பர். கோயில் முகப்பில் இரண்டு பீடங்கள் உள்ளன. சிவனை தரிசிக்க வரும் அடியார்களின் பாதம், தன் மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜர் இந்த நிலையில் இங்கு இருப்பதாகச் சொல்கிறார்கள்.
பிரார்த்தனை
மகம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். மாசி ...
அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்
புனர்பூசம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: கல்வியில் ஊக்கம் கொண்ட இவர்கள், பேச்சுத் திறமை கொண்டவர்களாக இருப்பர். ஊர் சுற்றும் சுபாவமும் இயல்பும், ஆடம்பர குணமும் கொண்டிருப்பர். மனதில் உள்ளதை வெளிப்படையாகச் சொல்ல விரும்பமாட்டார்கள். பிறரை நன்கு அறிந்து கொள்ளும் ஆற்றல் இவர்களுக்கு இருக்கும். நன்றியுணர்வுடன் உதவி செய்தவர்களைப் போற்றும் குணம் இருக்கும். இக்கோயில் பல்லவப்பேரரசர்களால் கட்டப்பட்டது. மூன்று நிலை மேற்கு ராஜகோபுரமும், ஐந்து நிலை கிழக்கு ராஜகோபுரமும் உள்ளது. சிவன் மேற்கு நோக்கியும், சரஸ்வதி கிழக்கு நோக்கியும் உள்ளது சிறப்பு.
...
அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்
ரோகிணி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: கற்றறிந்தவர்களுடன் நட்பை விரும்புபவராகத் திகழ்வர். பார்ப்பதற்கு கம்பீரமான தோற்றம் கொண்ட இவர்கள் ஊர் சுற்றும் இயல்பைப் பெற்றிருப்பர். ஆசார அனுஷ்டானங்களில் மிகுந்த நம்பிக்கை உண்டு. இசை, நாட்டியம் போன்ற கலைகளில் ஈடுபாடு இருக்கும். மக்கள் செல்வாக்கு சிறப்பாக இருக்கும். மூலவரான கிருஷ்ணர் பத்ர விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.
பிரார்த்தனை
ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து ...
அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்
அசுவினி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: செல்வந்தராகவும், புத்தி சாதுர்யம் கொண்டவர்களாகவும் இருப்பர். விவாதம் செய்வதிலும், ஆடம்பரத்திலும் நாட்டம் இருக்கும். மற்றவர்களை நன்கு புரிந்து கொண்டு அன்புடன் பழகுவர். ஆசிரியரைப் போல நல்ல விஷயங்களைப் பிறருக்குப் போதிப்பர். தெய்வீக வழிபாடு, புராண, ஜோதிட சாஸ்திரங்களில் ஈடுபாட்டுடன் விளங்குவர்.
பிரார்த்தனை
அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
...
அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
மூலவர் சொர்ணபுரீஸ்வரர், பெரியநாயகி அம்மன், வள்ளி, தெய்வானையுடன் முருகன், விநாயகர், மற்றும் காவல் தெய்வம் செல்லியம்மன் சன்னதிகள் உள்ளன.
பிரார்த்தனை
பெண்கள் திருமண வரம் கேட்டு இங்குள்ள காவல் தெய்வமான செல்லியம்மனை பிரார்த்தனை செய்கின்றனர். குழந்தை வரம் வேண்டியும், ராகு, கேது தோஷம் உள்ளவர்களும் அம்மனை வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியவுடன் அம்மனுக்கு தாலி செய்தும், மாவிளக்கு எடுத்தும் காணிக்கை செலுத்துகின்றனர்.
தலபெருமை:
காட்டுப்பகுதியில் கோயில் அமைந்திருப்பதால் அம்மனுக்கு நாகம் காவலாக இருப்பதாக ...
அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில்
சனி பகவானுக்காக அமைந்துள்ள தனிக்கோயில்களில் இதுவும் ஒன்று.
பிரார்த்தனை
விருச்சிக ராசிக்காரர்களின் பரிகார รทக்ஷத்திரமாக இது விளங்குகிறது. சுயம்பு சனீஸ்வரரை வணங்கினால், குழந்தை பாக்கியம் கிட்டும். சனிதிசை, ஏழரைசனி மற்றும் அஷ்டமத்து சனியால் பூமி, செல்வத்தை இழந்தவர்கள், குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் இத்தலத்தில் பூஜை செய்தால் இழந்ததை அனைத்தும் பெறுவர் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
சனிக்கிழமைகளில் நெய்,எள் விளக்கேற்றுதல், எள்சாதம், அன்னதானம் வழங்குதல் ஆகியவற்றால் சனிதோஷம் நீங்கப் பெறலாம்.
தலபெருமை:
மாவலிங்மரத் ...
அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்
முருகனை வழிபட்ட இந்திரனால் உருவாக்கப்பட்ட 'கல்ஹார தீர்த்தம்' மலையில் இருக்கிறது.
வள்ளி மலையிலிருந்து வள்ளியை சிறையெடுத்து வந்து திருமணம் செய்து கொண்ட தலம். 365 படிக்கட்டுகள் கொண்ட மலை மீது அமைந்துள்ள அழகிய முருக தலம். எத்தலத்திலும் காணமுடியாத வழக்கமாக இத்தலத்து ஆபத்சகாய விநாயகரை கடைசியாகத்தான் வணங்குதல் வேண்டுமாம். இத்தலத்தில் வேறெங்கும் காணமுடியாத விஷ்ணு துர்க்கை ஆலயம் உள்ளது. மிகவும் பழமையான முருகன் திருத்தலம் இது.
இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் ஆறு தளங்களைக் கொண்டது. இத்தலத்திற்கு குன்றுதோறாடல் என்ற சிறப்பு பெயரும் உண்டு.
...
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூலஸ்தானத்தில் தம்பதியருடன் காட்சி தரும் கோயில் சோலைமலை மட்டுமே. கந்தசஷ்டி விழாவின் தொடர்ச்சியாக இங்கு திருக்கல்யாணம் நடத்தப்படும். முருகன் அவ்வையாரிடம் 'சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?' என்ற திருவிளையாடலை நிகழ்த்தியது இங்கு தான்.
பிரார்த்தனை
திருமணத் தடை உள்ளவர்களும், புத்திரபாக்கியம் வேண்டுபவர்களும், கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு வழிபாடு செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்து, வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.
தலபெருமை:
...
அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில்
திருப்படி பூஜை : தஞ்சை மாவட்டத்தில் மலைகளே கிடையாது.மலைகளே இல்லாத இப்பகுதியில் இந்த சுவாமி மலை உள்ளது.குன்று தோறும் இருப்பான் முருகக்கடவுள் என்பதற்கிணங்க இம்மலை மீது முருகப்பெருமான் அருள்புரிவது சிறப்பான ஒன்றாகும்.இக்கோயிலின் மேல் தளத்தை அடைய 60 படிக்கட்டுகள் உள்ளன. இவை சபரிமலையில் பதினெட்டு படிகள் எப்படி புனிதமானதாக கருதப்படுகிறதோ அதுபோல் புனிதமாக கருதப்படுகிறது.தமிழ் வருடங்கள் 60 ஆகும். அந்த தமிழ் வருடங்களின் தேவதைகள் சுவாமியை பிரார்த்தனை செய்துபடி படிகளாக உள்ளதாக இங்கு ஐதீகம்.தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களின் போது இந்த படிகளுக்கு ...
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
முருகனின் நைவேத்தியங்கள்:திருச்செந்தூரில் முருகனுக்கு தினமும் 9 கால பூஜை நடக்கிறது. இப்பூஜைகளின்போது சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த உருண்டை என விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகிறது.
தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி வழிபடப்படுகிறது. போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் 'படைவீடு' எனப்படும். அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்யச் சென்ற ...
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
இத்தலவிநாயகர் கற்பக விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள ராஜகோபுரம் 7 நிலைகளைக் கொண்டது.
அம்பாள் ஆவுடைநாயகி தனிச்சன்னதியில் தெற்கு பார்த்தபடி இருக்கிறாள். கொடிமரத்தின் அருகே மலையை நோக்கி, அதன் அளவிற்கேற்ப பெரியநந்தி இருக்கிறது. இதற்கு அருகிலேயே மூஞ்சூறு, மயில் வாகனங்களும் உள்ளது. மகாமண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர், தன் மனைவி காலகண்டியுடன் இருக்கிறார். மகாமண்டபத்தில் நடராஜர், சுற்றிலும் ரிஷிகளுடன் பார்வதியின் அம்சத்தில் அன்னபூரணி, சிவசூரியன், சந்திரன் ஆகியோர் இருக்கின்றனர். குடவறைக்கு வலது புறத்தில் பஞ்சலிங்கங்கள், ...
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில்
திருவண்ணாமலை கிரிவலம் எத்தனை சிறப்போ அத்தனை சிறப்புகளும் இங்கும் உண்டு.குறிப்பாக அக்னிநட்சத்திர காலங்களில் இங்கு கிரிவலம் செய்தல் சிறப்பு. தவிர எல்லா நாட்களிலும் கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சுற்றிவிட்டு படியேறுகின்றனர். 450 மீ. உயரத்தில் உள்ள திருவண்ணாமலை கிரிவலம் எத்தனை சிறப்போ அத்தனை சிறப்புகளும் இங்கும் உண்டு.குறிப்பாக அக்னிநட்சத்திர காலங்களில் இங்கு கிரிவலம் செய்தல் சிறப்பு. தவிர எல்லா நாட்களிலும் கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சுற்றிவிட்டு படியேறுகின்றனர். 450 மீ. உயரத்தில் உள்ள மலைக்கோயிலுக்கு 690 ...
அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில்,
நவகிரகங்களில், குரு தனிச்சிறப்பு மிக்கவர். தேவர்களுக்கு குருவான இவரை பிரகஸ்பதி என்று அழைப்பர். குரு என்கிற சொல்லுக்கே இருட்டை நீக்குபவர் என்று பொருள். அதனாலேயே ஆதி குருவான தட்சிணாமூர்த்தியே அதிபதியாக விளங்குகிறார். கல்வி, கலை, ஆராய்ச்சி, திருமணம், ஆன்மிகம், மரபு சார்ந்த விஷயங்கள், அமைதி, கௌரவப் பதவி, ஒழுக்கம் போன்ற விஷயங்களை குருபகவான்தான் அருளுகிறார். குரு ஜாதகத்தில் சரியான நிலையில் இல்லாதோர், போரூர் ராமநாதீஸ்வரர் தலத்திற்கு வந்தால், நிம்மதியான வாழ்க்கையை மேற்கொள்வர்.
ராமேஸ்வரத்தில் ராமநாதரை தரிசிப்பதற்கு முன்பே, ஈசனை ராமர், ராமநாதர் எனும் ...