|
Post by pannvalan on Feb 17, 2013 23:14:04 GMT 5.5
இது கனவா, நிஜமா?
காண்பது நிஜமா? பகற்கனவா? கற்பனை உலகின் ஒருவடிவா?
யாரிந்தத் தாத்தா? எங்கேயோ பார்த்தது போலே தெரிகிறதே? காரணம் எதுவும் கூறாமல், கைபற்றி இழுப்பது எதற்காக?
எங்கே என்னை அழைக்கின்றார்? என்ன சொல்ல நினைக்கின்றார் ? மங்கிய ஒளியின் மயக்கத்திலே, மனம்தான் தவிக்குது புரியாமல்!
கண்கள் திறந்தது, அப்போது; காட்சி கிடைத்தது, அப்போது. கண்ணால் கண்ட வேறெதுவும், நினைவில் இல்லை, இப்போது.
'மீண்டும் வருவேன்' எனச்சொல்லிப் போனவர் எவரோ விளங்கவில்லை. மீண்டும் ஒருநாள் சொன்னபடி, வராம லேயா போய்விடுவார்?
துடிக்கும் நெஞ்சம் துவண்டிடவே, விழிகள் சொரிந்தன நீரினையே. நடந்ததை வெளியே சொன்னாலே, பைத்தியம் என்றெனைச் சொல்வாரோ?
|
|
|
Post by Sumi on Feb 18, 2013 8:43:38 GMT 5.5
Beautiful! Thank you for the post.
Members would agree with me that there is no other single place on the Net where you will find so many songs and poems on Maha Periva. Periva is attracting His devotees like a magnet and inspiring them to share their own songs and poetry in our Forum!
Please spread the word around to all other Periva devotees so that they can also enjoy wonderful contributions like this by so many of our respected members.
|
|