tks
New Member
Posts: 20
|
Post by tks on Feb 15, 2013 6:55:17 GMT 5.5
தீராத விளையாட்டுப்பிள்ளை
தீராத விளையாட்டுப்பிள்ளை - இவர் நாடியே வருவோர்க்கு புரியாத புதிராம். முக்காலம் உணர்ந்திட்ட மாமுனிவர் -ஆனால் எக்காலமும் எவரையும் கேள்விகள் கேட்பார்!
1.குழந்தை போலவே சிரிப்பார் - அவர் அழஅழ செய்துபின் அனுக்ரஹம் செய்வார் பிததனைப்போலவே நடிப்பார் -ஐயா இத்தரை மீதினில் இவர்போல் உண்டோ 2.மதம்கொண்ட மனிதருக்கு இடமில்லை இங்கே இதம்ஏதும் அவருக்கு தந்திட மாட்டார் பதவிக்கும் பணத்துக்கும் மதிப்பில்லை இங்கே பக்திக்கும் பண்புக்கும் இடமுண்டு இங்கே
3.நெறிகெட்ட அடியாரை கண்டால் மிக வெறிபோல சினம்கொண்டு சீறிடுவார் அறியாது பிழைசெய்த அன்பரை வெகு பரிவோடு வழிகாட்டி தேற்றிடுவார்
4.முன்வந்து சீருடன் உரிமையாய் நின்றால் ஏனென்று காணாமல் கேளாமல் இருப்பார் பினநின்று தயங்கியே பணிந்து நிற்போரை முன்வர அழைக்க பணித்து அருள்வார்
5.பொருள்நாடி வருவோரை சாடியே நகைப்பார் மருள்தீர கருத்துகள் முத்தாக உதிர்ப்பார் அருளாசி கண்ணாலே கரத்தாலே அளிப்பார் குருவாக காஞ்சியில் குடிகொண்ட தெய்வம்
வேடிக்கையாக எழுதி பெரியவரின் சிரிப்பை பார்க்க வேண்டுமென்று ஆசையால் மடத்தில் வணங்கி பெரியவா பாதங்களின் முன் சமர்ப்பித்தேன்.மாலை இருள். அடியார்கள் அதிகம் இல்லை. இடது கையில் காகிதத்தை எடுத்து வலது கரத்தில் டார்ச் வெளிச்சத்தில் வரிவரியாக அவர் படிப்பதை பார்த்த எனக்கு கண்களில் கண்ணீர் வர வருந்தினேன். எடுத்து வைக்கலாம். யாரையாவது படிக்க சொல்லலாம், கருணாமூர்த்தி கண்பட்டாலே போதுமே..அவருக்கு படிக்காமலே தெரியுமே! படித்து முடித்த வைத்தபின் கைதூக்கி தலையசைத்து அருளாசி! வருந்திய குறும்பனுக்கும் அனுக்ரஹமா! மனம் நிரம்ப ஆசியுடன் திரும்பினேன.
|
|
|
Post by madambakkamshanks on Feb 15, 2013 7:46:23 GMT 5.5
Very nice Words... Simple and expressive about Periyavaa BEST qualities...! Hats off (for periyavaa has read ur poem...)
|
|
|
Post by Sumi on Feb 15, 2013 9:05:08 GMT 5.5
Simply beautiful. Excellent composition!
This Forum is blessed to have such ardent devotees of Periva contributing such wonderful poetry on our Mahaswami.
You are blessed to have had HIS darshan and blessings.
My humble pranams to you Sir.
|
|
|
Post by nyogeshwaran on Feb 15, 2013 9:37:30 GMT 5.5
Excellent poem.
|
|
|
Post by kramans on Feb 17, 2013 13:18:28 GMT 5.5
Very meaningful one
|
|