Post by Sumi on Oct 16, 2012 8:17:00 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
பொதுவான தர்மங்கள்
என் காரியம்
Part 2 of 11
மற்றவர்களை அதட்டிக் கொண்டு, தனக்கு உயர்த்தி கொண்டாடுவதற்காக ஏற்பட்டதல்ல பிராம்மண்யம். சமூகத்தின் மசால்ஜி (peon) வேத விளக்கைப் பிடித்துக் கொண்டு வழிகாட்டுவதற்காகத்தான் அது இருக்கிறது. விளக்கை அனைத்து லோகம் முழுவதையும், நம்மோடு மட்டுமில்லாமல் எதிர்காலம் முழுவதற்கும் இருட்டாகிவிடாதீர்கள் என்று பிராம்மண சமூகத்தைக் கேட்டுக் கொள்வதற்காகத் தான் நான் நகரங்களுக்கு வந்து கொண்டிருக்கிறேன்.
பட்டனங்களில்தான் இப்படி ஆயிரக்கணக்கில் ஜனங்கள் வருகிறார்கள். அதனால், நான் எங்கேயோ உட்கார்ந்துகொண்டு, யாரோ ஒரு சிலரிடம் சொல்லி, அவர்கள் மற்றவர்களிடம் சொல்லுவது என்று சுற்றி வளைக்காமல், நேராக நானே நிறைய ஜனங்களுக்குத் தெரிவித்துவிட முடிகிறது. இதை உத்தேசித்தே, மடத்து ஆசாரங்களுக்குத் பட்டனங்களில் எத்தனையோ பங்கம் ஏற்பட்ட போதிலும் பட்டணங்களுக்கு வருகிறேன். நான் நினைத்ததை விடவும் ரொம்ப ஜாஸ்தி கூட்டமாக இருக்கிறது. சிரமப்படுகிறேன். உங்களையும் சிரமப்படுத்துகிறேன்.
நீங்கள் எத்தனையோ செலவழித்து பேட்டைக்குப் பேட்டை பெரிதாகக் கொட்டகை, பந்தல் போட்டு என் பேச்சுக் கச்சேரியை கேட்க வேண்டும் என்றே எத்தனையோ கஷ்டங்களுக்கு நடுவே வருகிறார்கள். உங்கள் தப்பைச் சொல்லி மனஸைக் கஷ்டப்படுத்தாமல் கச்சேரி செய்துவிட்டுப் போய்விடலாம் என்றால் அதற்கு மனசு இடம் தரமாட்டேன் என்கிறது. உங்கள் பணத்தை எல்லாம் வாங்கிக் கொண்டு உங்களுக்கும் ஊருக்கும் உலகத்துக்கும் எது நல்லது என்று தோன்றுகிறதோ அதைச் சொல்லாமல் போய்விட்டால் பிரயோஜனமே இல்லை என்று படுகிறது. அதனால்தான் வேதத்தை ரக்ஷியுங்கள், பிராசீன தர்மங்களை அநுஷ்டியுங்கள் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறேன். உங்களை அப்படி செய்யும்படி பண்ணுகிற சக்தி எனக்கு இருக்கிறதோ இல்லையோ. செய்யுங்கள் செய்யுங்கள் என்று உங்கள் காதில் போடவாவது என்னால் முடிகிற மட்டும், இப்படிக் காதில் போட்டுக் கொண்டிருக்கலாமே என்றுதான் வந்திருக்கிறேன்.
எனக்குக் கனகாபிஷேகம், பீடாரோஹண உத்ஸவம் எல்லாம் ரொம்பவும் விமரிசையாகப் பண்ணுகிறார்கள். மிகுந்த அன்பினால் பண்ணிப் பார்க்கிறார்கள். இதற்காகக் கமிட்டி போடுகிறார்கள். வசூலிக்கிறார்கள். ராப்பகல் உழைக்கிறார்கள். ஆனால் இந்தக் கனகாபிஷேகம் மடத்துக்கு இனிமேல் வருகிற ஆச்சாரியர்களுக்கு சாசுவதமாக நடப்பது எப்படி. வேதம் இல்லாவிட்டால் மடம் எதற்கு மடாதிபதி எதற்கு. ஆகவே இப்போது என் கனகாபிஷேகத்துக்கும், பீடாரோகனத்துக்கும் காட்டுகிற உற்சாகத்தை வேத ரக்ஷணத்தில் காட்டி, அதற்காகக் கமிட்டி, திட்டம் எல்லாம் வசூல் செய்யுங்கள் என்கிறேன்.
(to be continued...)
[/b]