Post by radha on Oct 12, 2012 6:49:37 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
Source:- Dinamani News Paper- Vallimani
குறிப்பாக தாத்தாவின் குணாதிசயங்கள் பேரனிடம் நிரம்ப காணப்படும். அதனால் பல குடும்பங்களில் தாத்தாவின் பெயரை பேரனுக்கு வைப்பார்கள். இதனால் "பேரை உடையவன் பேரன்' என்ற வழக்கு உண்டானது. எங்களுக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்து 23 வருடங்கள் கழித்து ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் ஜாதகமும் 23 வருடங்களுக்கு முன்பு இறந்தவரின் ஜாதகமும் ஒன்றாகவே அமைந்திருந்தன. இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
நம் புராணங்களில் இதைப் பற்றி பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. இதற்குச் சான்றாக கருட புராணம், கடோப நிஷத்து, நசிகேதனின் வரலாறு ஆகியவற்றில் உதாரணங்கள் உள்ளன. நாம் மூதாதையர்களுக்கு தவறாமல் திதி கொடுக்க வேண்டும். அப்படிச் செய்து வந்தால் அவர்களின் ஆசி கிடைத்து, தக்க காலத்தில் நம் குடும்பத்திலேயே பிறப்பார்கள். இல்லையேல் நம்மை வெறுத்து நம் குடும்பத்தை சபித்து விடுவார்கள்.
அதனால் நாம் பித்ருக்களுக்கு கொடுக்கும் பிண்டம் (அன்னம், எள் கலந்த உருண்டை) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பூமியைத் தன் கொம்பால் தாங்கிய திருமால் (வராக அவதாரம்) தன் கொம்பில் மூன்று மண் கட்டிகளைக் கொண்டு பூமியின் மேல் வைத்து, அதில் தம்மை உத்தேசித்து, தன் வியர்வையில் உண்டான எள்ளை இறைத்து "நானே பித்ருக் கடன் செய்கிறேன்' என்றார். உடனே திருமாலுடைய கோரைப் பற்களிலிருந்து உண்டான அந்தப் பிண்டங்கள் தென் திசையை அடைந்தன. இந்தப் பிண்டங்களை பிதா(தந்தை), பிதாமஹர் (தாத்தா), பிரபிதாமஹர் (தாத்தாவின் தந்தை) என்று கொண்டு, "தானே இந்தப் பிண்டங்களில் உறைகிறேன்' என்றார்.
இந்தக் காரணத்தால் பித்ருக்கள் பிண்டமென்ற பெயரை அடைந்தனர். அதனால் தர்ப்பணம், சிரார்த்தம் செய்ய வேண்டிய நாட்களை "பிண்ட பிதுரு' என்று குறிப்பிடுவார்கள். மேலும் பிரம்மா பிதுர் தேவர்களாக எழுவரைப் படைத்தார். அவர்கள் 1. கவ்யவாகனன், 2. அனலன், 3.சோமன் 4. யாமன் 5. அரியமான் 6. அக்னிஷ்வர்த்தன் மற்றும் பர்ஹிஷதன். இவர்களில் நால்வர் தேகத்தோடும், மற்றவர்கள் தேகமின்றியும் இருப்பர். இவர்கள் எழுவர்க்கும் ஸ்வதா என்பவள் தேவியாகிறாள். இந்த எழுவரின் பெயரில் சிலரின் பெயரைக் குறிப்பிட்டு நம் குடும்ப வழக்கப்படி சிரார்த்தம்
செய்கிறோம்.
அதனால் நாம் தவறாமல் திதி, சிரார்த்தம் ஆகியவைகளை பிண்டம், எள், தண்ணீர் தெளித்து கொடுத்து வர நம் பித்ரு தோஷங்கள் நீங்கி குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும் என்பது உண்மை. எள்ளைக் கண்டால் அசுரரும், பூதப் பிரேத பிசாசங்களும் ஓடி விடுவர். பிதுர் சிரார்தத்தில் கருப்பு எள்ளைச் சேர்த்தால் பிதுர் தேவர்கள் அதிகக் களிப்படைவர் என்று கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. தாய், தந்தையர்க்கு சிரார்த்தம் செய்யாமல் இறந்தவர்கள், பிரேத ஜென்மத்தை அடைவர் என்று கூறப்பட்டுள்ளது.
சில குடும்பங்களில் மூதாதையர்கள் இறந்த திதி தெரியாமல் போய்விடக் கூடிய நிலை உண்டாகியிருக்கலாம். புரட்டாசி மாதம், தேய் பிறையில் சூரிய பகவான் கன்னி ராசியில் பிரவேசிப்பது மகாளயம் எனப்படும். இதில் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரை பதினைந்து நாட்களும் சிரார்த்தம் செய்தால் வருடம் முழுவதும் சிரார்த்தம் செய்த பலன் உண்டாகும்.
இக்காலத்தில் யமப்பட்டினத்திலிருந்து பித்ருக்கள் பூமியில் வந்து வசிப்பார்கள். அந்த நேரத்தில் எமலோகமே காலியாகிவிடும். அதனால் பதினைந்து நாட்கள் சிரார்த்தம் செய்ய முடியாதவர்கள், பரணி நட்சத்திரத்திலும், அஷ்டமி திதி மற்றும் திரயோதசி திதியிலும் சிரார்த்தம் செய்தால் கயாவுக்கு சென்று சிரார்த்தம் செய்த பலன் உண்டு.
மகாளய அமாவாசை அன்று சிரார்த்தம், பிண்ட பித்ரு பூஜை, எள் தண்ணீர் இறைத்தல் ஆகியவற்றை செய்வது அவசியம். இந்த ஆண்டு மகாளய அமாவாசை 15.10.2012 திங்கள் கிழமை அன்று வருகிறது
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam