Post by Sumi on Sept 11, 2012 8:51:28 GMT 5.5
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
வைதிக மதம்
பொறுப்பாளி யார் ? பரிகாரம் எனன
Part 1 of 9
ஜாதி என்றாலே மகா அநாகரிகமான ஏற்பாடு என்று இப்போது அரசியல் கட்சிக்காரர்கள், படித்தவர்கள் எல்லோரும் கரித்துக் கொட்டும்படியாயிருப்பதற்கு யார் காரணம்?ஒரு நல்ல அமைப்பு சீர்குலைந்து விழுவதற்கு யார் பொறுப்பாளி?
என்று ஒரு கேள்வியை எழுப்பினேன் அல்லவா?.
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறேன். வர்ண தர்மத்தைப் பற்றி தப்பான அபிப்ராயம் உண்டாக்கியிருப்பதற்குப் பிராமணன்தான் காரணம். யுகாந்தரமாக ஆத்ம சிரேயஸும், தேச க்ஷேமமும், லோக க்ஷேமமும் தந்து வந்த தர்மம் குலைத்து போனதற்கு பிராம்மணன்தான் பொருப்பாளி.
பிராம்மணன் தன் கடமையாகிய வேத அத்யயனத்தையும், கர்மாநுஷ்டானத்தையும் கைவிட்டான். கடமையை விட்டான். அப்புறம் ஊரை விட்டான். கிராமங்களை விட்டுப் பட்டணத்துக்கு வந்தான். தனக்குறிய ஆசாரங்களை, அதன் வெளி அடையாளங்களை விட்டான். கிராப் வைத்துக் கொண்டான். ஃபுல்ஸுட் போட்டுக் கொண்டான். தனக்கு ஏற்பட்ட வேதப்படிப்பை விட்டு வெள்ளைக்காரர்களின் லௌகிகப் படிப்பில்போய் விழுந்தான். அவன் அவன் தருகிற உத்தியோகங்களில் போய் விழுந்தான். அதோடு, அவனுடைய நடை உடை பாவனை எல்லாவற்றையும் காபி அடித்தான். வழிவழியாக வேத ரிஷிகளிலிருந்து பாட்டன், அப்பன்வரை ரக்ஷித்து வந்த மகோந்நதமான தர்மத்தைக் காற்றிலே விட்டுவிட்டு, வெறும் பணத்தாசைக்காகவும் இந்திரிய சௌக்கியத்துக்காகவும், புதிய மேல் படிப்பு, மேல் நாட்டுப் படிப்பு, ஸயன்ஸ், உத்தியோகம், வாழ்க்கை முறை, கேளிக்கை இவற்றில் போய் விழுந்து விட்டான்.
சாஸ்திரங்கள் இவனுக்குப் பணத்தாசையே கூடாது. இவன் சொத்தே சேர்க்கக்கூடாது என்கின்றன. அதன் பிரகாரமே இவன் வாழ்க்கை நடத்தி, வேத சகாப்தத்தாலும் யக்ஞங்களாலும் லோக க்ஷேமத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த வரையில், இவனிடம் மற்ற எல்லா ஜாதியாரும் குறைவில்லாத அன்பும் மரியாதையும் காட்டிவந்தனர். இவனையே உதாரணமாக, வழிகாட்டியாக, முன்மாதிரியாக (example, guide , model) வைத்துக் கொண்டார்கள்.
(to be continued....)