Post by radha on Nov 24, 2021 9:04:04 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
SOURCE :- AMRITHA VAHINI
Nov 10, 2021,
ஏழு நாட்களில் அர்ச்சுனரின் பேரன் பரீட்சித்து மன்னருக்கு பாகவத சப்தாஹம் உபதேசித்து மோட்சம்
கிடைக்க செய்த
ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி!
சுகஹாஎன்னும் வடமொழி சொல்லுக்கு கிளி என்று பொருள்!
ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி
பிறப்பு நிகழ்வு 1
ஒரு முறை ஜனன-மரண ரகசியங்களை உமையன்னைக்கு ஈசன் சொல்லிக்கொண்டிருந்தபோது உமை கண்கள் அசர,
அருகே மரத்தில் அமர்ந்திருந்த கிளிக்குஞ்சு ஈசனின் உபதேசத்தை 'ம்' கொட்டிக் கேட்டதாம்
'ம்' கொட்டியது கிளி என்பதை அறிந்த ஈசன், அதைப் பிடிக்க முற்பட, அது வியாசரின் மனைவியின் கர்ப்பத்தில் அடைக்கலமானது.
ஈசன் 'கிளியே வெளியே வா' என அழைக்க கிளி முகத்தோடு சுகர் தோன்றினார்.
தான் உபதேசித்த ஜனன-மரண சிவ ரகசியத்தை*எவரிடமும் கூறாமல் பிரம்மமாக இரு.
உன் ஜன்ம தினத்தன்று என்னையும் உன்னையும் வணங்குபவர்கள் வாழ்வு சிறக்கும்'' என ஆசி வழங்கினார் ஈசன்.
ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி
பிறப்பு நிகழ்வு 2
ஸ்ரீ கிருஷ்ணர், முனிகளுள் நான் வியாசராக இருக்கிறேன் என்கிறார்.
மஹாபாரதக் கதை மற்றும்
நம் தமிழ் கடவுள் பற்றி கந்தபுராணம் எழுதிய
வியாசர் அவர்களின்
மகன்தான் ஸ்ரீ சுகப் பிரம்மம்.
கிருதாசீஎன்ற தேவமங்கையின் அழகில் மயங்கிய வியாசர், அவளிடம் மனதைப் பறி கொடுத்தார்.
அவரிடம் இருந்து தப்பிக்க கிருதாசீகிளியாக மாறினாள்.
ஆனாலும் முனிவரின் தபோ பலத்தால்கிருதாசீகர்ப்பம் தரித்தாள்..
ரிஷியின் கர்ப்பம் ராத்தங்காது என்பதால் உடனடியாக அவர்களுக்கு ஓர் மகன் பிறந்தான்.
குழந்தைக்கு முகம் கிளி போன்றும், உடல் மனிதனைப் போன்றும் இருந்தது.
கிளியாக மாறிய தனது தாய் கிருதாசியின்சாயலான கிளி வடிவத்தை முகத்தில் தாங்கி பிறந்தவர்.
பொதுவாக தாயின் சாயலைப் பெற்ற மகனும்,தந்தையின் சாயலைப் பெற்ற பெண்ணும் பெரும் அதிர்ஷ்டசாலிகள்
என்பார்கள்.
எனவே சுகர் உலகிலேயே மிகச்
சிறந்த ஞானவான் என்ற தகுதியைப் பெற்ற அதிர்ஷ்டசாலிதான்.
இவர் தனது அதிர்ஷ்டத்தைக்
கூட உணர வேண்டிய
அவசியமில்லாத பிரம்ம ஞானி.
வடமொழியில் சுகா என்றால் கிளி என்ற அர்த்தம்.
அதனால் கிளி முகம் கொண்டு பிறந்த அக்குழந்தைக்கு சுகர் என்று பெயரிட்டனர்.
குழந்தையை தேவலோகத்திற்கு எடுத்துச் செல்ல இயலாததால், வியாசரிடமே கொடுத்துவிட்டாள் தேவ மங்கை கிருதாசி
வியாசரும் அக்குழந்தையைப் புனித நீராட்ட, சிறுவனாக உருமாறிய சுகர்
பிறப்பிலேயே ஞானியாக
விளங்கினார்.
வேதவியாசரின் பிள்ளை என்பதால் தேவர்கள் பூமாரி பொழிந்து குழந்தையை வாழ்த்தினர்.
சுகருக்கு உரிய வயது வந்ததும் உபநயனம் செய்வித்தனர்.
பால பிரம்மச்சாரியான சுகருக்கு வேண்டிய தண்டமும் மான் தோலும் வான் வெளியிலிருந்து வந்து விழுந்தன.
வியாசர் மகாபாரதத்தை சுகருக்கு உபதேசித்த பிறகே தம் சிஷ்யர்களான வைசம்பாயனர் போன்றோருக்கு
உபதேசித்தார்.
இவரது குரு பிரகஸ்பதி ஆவார்.
குரு பிரகஸ்பதியிடம் கற்க வேண்டியது அனைத்தையும் கற்றார்.
மிகச் சிறந்த ஞானமும் அடக்கமும் பெற்றிருந்த போதிலும் சுகர், தம்மை ஞானமில்லாத ஒருவராகவே நினைத்துக் கொண்டிருந்தார்.
ஒருநாள் ஸ்ரீ வியாசர் சுகப்பிரம்மா இங்கே வா என்றார்.
வருகிறேன் என்று சுகப்பிரம்மர் மட்டுமல்ல அங்கே நின்ற மரம் மட்டை செடி கொடி எல்லாம் வருகிறேன் என்றது
இதைக்கண்டு சுகப்பிரம்மருக்கு பெருமை பிடிபடவில்லை!
அப்படி என்றால் அனைத்திலும் நான் இருக்கிறேனா?
நான் எவ்வளவு பெரிய ஆள் என்று நினைத்தாரோ
இல்லையோ அவருடைய ஞானம் அக்கணமே அவரை விட்டுப் போய்விட்டது.
உடனே ஸ்ரீ வியாசர் மகனிடம் சுகா தற்பெருமையால் உனது ஞானம் அனைத்தையும் இழந்தாய் .
நீ உடனே சென்று ஜனகரை பார்த்து உபதேசம் பெற்று வா என்று கூறினார்.
சுகரும் உடனே தந்தை சொல் கேட்டு ஜனகரை பார்க்க மிதிலைக்கு சென்றார்.
மகாராஜாவாக இருந்தும் ஜனகர் தாமரை இலைத் தண்ணீர் போல் ராஜாங்கத்தில் குடும்ப வாழ்வில் பட்டும் படாமல் இருந்தார்.
அவரை சந்திப்பதற்காக வாயிற்காப்போனிடம் அனுமதி கேட்டார் .
அதற்கு அவன் சுவாமி இங்கே நில்லுங்கள் நான் போய் அரசரிடம் அனுமதி பெற்று வருகிறேன்.
நீங்கள் யார் என்று கேட்டால் என்ன சொல்ல வேண்டும் என்று கேட்டான்.
அதற்கு உடனே சுகப்பிரம்ம மகரிஷி அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று
உன் மன்னனிடம் சொல் என்று கூறினார் .
அவனும் .உடனே சென்று மன்னனிடம் அவர் கூறியபடியே கூறினான்.
உடனே மன்னர் ஜனகர் அவர் நாலைந்து பேர்களுடன் வந்து இருக்கிறார் .
அவரை மட்டும் தனியாக வரச்சொல் என்று கூறினார் .
ஏன் மன்னர் இவ்வாறு கூறினார்?என்று குழம்பிப்போய் ,மன்னர் கூறியதை வந்து அப்படியே சுகப்பிரம்மரிடம் கூறினான்.
அவர் உடனே சரி சுகப்பிரம்மம் வந்திருக்கிறது என்று சொல் என்று கூற காவலனும் மன்னனிடம் அவ்வாறே சொல்ல இன்னும் ஒரு ஆள்
கூட இருக்கிறார்,அவரையும் விட்டுவிட்டு வரச்சொல் என்று கூறினார்.
இன்னுமொருவர் தங்களுடன் உள்ளாராம். அவரையும் விட்டு விட்டு வர சொன்னார் மன்னர் என்று சுக முனிவரிடம் கூறினார்.
சரியப்பா,சுகப்பிரம்மன் வந்திருக்கிறான் என்று சொல் என்று சொன்னதும் அவனும் அவ்வாறு சொல்ல அவரை உடனே உள்ளே வரச் சொல் என்று ஜனக மகாராஜா அனுமதி கொடுத்தார்.
அவரைக் கண்டதும் ஜனக மகாராஜா அவரிடம் பேசவில்லை .
எழுந்து அவருக்கு ஆசனம்வழங்கவில்லை .
அதற்கு பதிலாக அங்குள்ள மொட்டை அடித்த தலையுடன் உள்ள ஒருவனை அழைத்து அவனை அமர வைத்து அவன் தலையில் ஒரு தட்டை வைத்து தட்டில் நிறைய எண்ணையை ஊற்றினார்.
டேய்!நீ உடனே புறப்பட்டு ரத வீதிகள் அனைத்தையும் சுற்றிவிட்டு இங்குவா.
தட்டு கீழே விழக்கூடாது .
மேலும் தட்டிலிருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட கீழே சிந்தக் கூடாது.
அவ்வாறு சிந்தினால் உன் தலையை வாங்கி விடுவேன் என்று எச்சரித்தார்.
அவனும் கிளம்பினான்.
அவன் வேறு எதிலும் கவனம் செலுத்தவில்லை.
தனது தலையிலிருந்த தட்டிலும் எண்ணெயிலேயேயுமே
கவனம் செலுத்தி அனைத்து வீதிகளையும் சுற்றி விட்டு மன்னனிடம் வந்தான்.
மன்னனும் ஒரு சொட்டு கூட சிந்தாமல் இருப்பதைக் கண்டு அவனை மன்னிக்க, அவன் மகிழ்ச்சியுடன் சென்றான்.
அப்போதும் அவர் சுகரிடம் பேசவில்லை .
ஆனால் இதை அனைத்தையும் நன்கு கவனித்துக் கொண்டிருந்த சுகர்
அதிலிருந்து ஒரு விஷயத்தை புரிந்து கொண்டார்.
ஒரு மனிதனுக்கு உயிர் போய்விடும் என்ற நிலை ஏற்பட்டால் சுற்றுப்புறத்தில் என்ன நடந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் , நாமும் மனதை அடக்கி கடவுளின் மீது மட்டும் பக்தியை செலுத்தினால் அகங்காரம் தானே அடங்கும்.
மீண்டும் ஞானம் பிறக்கும் என்ற உபதேசத்தை ஜனகர் உபதேசிக்காமலேயே அவரிடம் பெற்று அங்கிருந்து மிக மகிழ்ச்சியுடன் கிளம்பினார்.
கிளி முகம் கொண்ட இவருக்கு நாரதர் உபதேசம் செய்தார்.
தவவாழ்வில் ஈடுபட்ட இவர், எல்லா உயிர்களிலும் கடவுள் வியாபித்து இருப்பதை உணர்ந்தார்.
ஒரு நதிக்கரை வழியே சுகப்பிரம்மர் முன்னே செல்ல சிறிது இடைவெளியில் வியாசர்
சென்றபோது,
தெய்வப்பெண்கள் நதியில் நீராடி கொண்டு இருந்தனர்.
சுகப்பிரம்மர் வந்த போது அவர்கள் அவரை கண்டுகொள்ளாமல் அரைகுறை ஆடையுடன் குளித்தபடி இருந்தனர்.
சிறிது நேரத்தில் வயதான வியாசர் வருவதை பார்த்தவுடன் நாணப்பட்டு அரக்க பரக்க தங்கள்
ஆடைகளை எடுத்து தங்களது உடலை மூடினர்.
ஆனால், வர்கள் வாலிபரான சுகரைக் கண்டு வெட்கப்படவில்லை.
உங்களின் இந்த மாறுபாடான செயலுக்கு என்ன காரணம்? என வியாசர் கேட்க,
அதோ பாருங்கள் உங்கள் மகன் எதனையும் காணாது சென்று கொண்டு இருக்கின்றார்.
அவர் கண்களுக்கு அனைத்தும் பிரம்மமாய்த் தோன்றுகின்றன.
உமக்கு அப்படி இல்லையே! ஆண் பெண் என்னும் வேறுபாடுகள் உமக்கு தெரிகின்றன.
அதனால் உங்களைக் கண்டவுடன் வெட்கமுற்றோம் என்றனர் தேவப் பெண்கள்.
பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் நடத்திய ராஜசூய யாகத்தில் அன்னதானம் நடத்தப்பட்டது.
அதில் ஒருலட்சம் பேர் சாப்பிட்டால் அதைதெரிவிக்கும் வகையில் ஒரு தெய்வீக மணி ஒலிக்கும்.
அதைக் கொண்டு ஒருநாளைக்கு எத்தனை பேர் சாப்பிட்டார்கள் என்று கணக்கிடுவார்கள்.
திடீரென்று ஒருநாள் அந்த மணி மிக வேகமாக ஒலிக்கத் தொடங்கியது.
ஒரு தரம் அடித்தால் ஒருலட்சம் தானே கணக்கு!
இதென்ன இப்படி தொடர்ந்து அடிக்கிறதே. அதிசயம்!
வேகம் தாளாமல் மணி
அறுந்து விழுந்துவிட்டது.
தெய்வீகமணியில் எவ்விதமான கோளாறும் இருக்க வாய்ப்பில்லை.
அனைவரும் திகைத்து நின்ற வேளையில், பச்சைக்கிளி முகம் கொண்ட சுகர் இலையில் இருந்த ஒரு சில பருக்கைகளைக் கொத்திவிட்டுப் போனது தான் இதற்கு காரணம் என்பது பின்னால் தெரிய வந்தது.
எனவே ஸ்ரீ சுகப்பிரம்மரின் பெயரால் அன்னதானம் நடத்தினால் நமக்கு அளவற்ற செல்வமும், புண்ணியமும் கிடைக்கும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.
அர்ச்சுனனின் மகன் அபிமன்யுவின் மனைவி உத்தரை. இவள் கருவுற்றாள்.
இவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. அஸ்வத்தாமன் சாபத்தால் இறந்து பிறந்த இந்தக் குழந்தையை உயிர்ப்பித்துப் பாண்டவ வம்சத்தைக் காத்தவர் கிருஷ்ணர்.
அப்படி இறந்து பிறந்து
ஸ்ரீ கிருஷணரால் உயிப்பிக்கபட்ட குழந்தையான அர்ச்சுனரின் பேரன்
பரீட்சித்து மன்னர்.
பரீட்சித்து பின்னாளில் ஹஸ்தினாபுரத்து மகாராஜாவாக ஆனபோது, வேட்டையாடக் காட்டுக்குச் சென்றார்.
அங்கு முனிவர் குடிலொன்றைக் கண்டார்.
தாகத்திற்கு நீர் கேட்டு நின்றார்.
தவ சிரேஷ்ட்டரான சமீகர் முனிவர் காதில் அவரது குரல் விழவில்லை.
கோபமுற்ற மன்னர் பரீட்சித்து, அருகில் செத்துக் கிடந்த பாம்பை எடுத்து முனிவருக்கு மாலையாக்கினார்.
இதனைக் கண்ட முனிவரின் மகன் சிரிங்கி,
மன்னர் பரீட்சித.து ஏழே நாட்களில் பாம்பு கடித்து இறந்துவிடுவார் எனச் சாபமிடுகிறான்.
சாபம் பற்றி தெரிந்து கொண்ட பரீட்சித்து, உடனடியாகத் தன் மகன் ஜனமேஜயனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்தார்.
பொறுப்புகளை அவனிடம் ஒப்படைத்துவிட்டு,
கங்கைக் கரையில் வடக்கு முகமாக உட்கார்ந்து தவம் புரிந்து உயிர் விட ஏற்பாடு செய்தார்.
தகவல் அறிந்த அத்ரி, வசிஷ்டர், பிருகு, ஆங்கிரசர், பராசரர், தேவலர், பரத்வாஜர், கவுதமர், அகத்தியர், வியாசர் என்ற தவசிரேஷ்டர்கள் எல்லாம் அங்கு வந்து சேர்ந்தனர்.
அவர்கள் அனைவரையும் பரீட்சித்து வணங்கினார்..
இந்த சமயத்தில் சுகபிரம்மர் பல தலங்களிலும் சிவபூஜை செய்தபடியே கங்கைக்கரைக்கு வந்து சேர்ந்தார்.
சுகபிரம்மத்தைக் கண்ட ரிஷிகள் கூட தம்மை மறந்து எழுந்து நின்றனர்.
சுகபிரம்மரின் வருகை பரீட்சித்திற்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஈடுஇணையற்ற ஒரு பாக்கியம் கிடைத்து விட்டதாக கருதினார்.
ஒருவன் வாழ்வில் இறைவனை சற்று கூட நினைக்காத நிலையில்,அவனுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற நிலை ஏற்பட்டால், அந்த குறிப்பிட்ட காலத்திற்குள்ளாவது, கிருஷ்ணனின் பால பருவ லீலைகளைக் கூறும் பாகவதம் கேட்டால் முக்தி கிடைக்கும் என்ற சுகப்பிரம்மர், அந்த பரந்தாமனின் திவ்ய லீலைகளை அவனுக்கு எடுத்துரைத்தார்.
பரீஷத்து ராஜாவும், பக்தி சிரத்தையுடன் அதைக் கேட்டார்.
சாபத்தின்படியே பாம்பரசன் தட்சகன் பரிட்சித்தை ஏழாம் நாளில் கடிக்க,
மோட்சம் அடைந்தார் -
இந்த நிகழ்வின் காரணமாகவே ஸ்ரீமத் பாகவதம் சப்தாகமாக, அதாவது ஏழு நாட்களுக்கு உபன்னியாசமாகக் கூறப்படும் வழக்கம் உண்டானது
ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி
ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும்
தூது சென்று வந்த கிளியிடம் என்ன வரம் வேண்டும் என்று ஆண்டாள் கேட்க சுகப்பிரம்மம் இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள்புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.
இங்கு ஆண்டாள் உலா வரும்போது நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாடப்படுகிறது.
செங்கோல் ஏந்தி அரசாளும் மதுரை ஸ்ரீமீனாட்சிக்கு வலத் தோளில் கிளி. அன்பால் இறையாட்சி புரியும் ஸ்ரீஆண்டாளுக்கு இடத் தோளில் கிளி.
இந்த கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது.
கிளி மூக்கு - மாதுளம்பூ; மரவல்லி இலை - கிளியின் உடல்; இறக்கைகள் - நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும்; கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள். கட்டுவதற்கு வாழை நார்; கிளியின் கண்களுக்கு காக்காய்ப்பொன் போன்றவற்றை பயன்படுத்தி கிளியை உருவாக்குகின்றனர்.
ஸ்ரீ சுகப்பிரம்ம முனிவரது
காயத்ரி மந்திரம்!
ஓம் வேதாத்மஹாய வித்மஹே
வியாச புத்ராய தீமஹி;
தந்நோ சுகர் ப்ரசோதயாத்!
சதா ப்ரம்மத்தோடு ஒன்றிய நிலையில் இருந்ததால்
எப்போதும் சுகமாக இருந்ததால்
இவர் சுக ப்ரம்ம மஹரிஷி என்று அழைக்கப்பட்டார்.
சுகப்பிரம்ம மகரிஷி அருளியதுதான் "ஸ்ரீமத் பாகவதம்."
என்றும் பதினாறு வரம் பெற்ற மார்க்கண்டேயன் இவரது சீடன்.
இவரது மற்றொரு சீடர் கௌடபாதர்.
அவரது சீடர் கோவிந்த
பகவத் பாதர்.
அவரது நேர் சீடர்தான் ஆதி சங்கரர்.
🌴🙏🌴
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM