Post by kgopalan90 on Feb 22, 2021 11:13:12 GMT 5.5
09/02/2021*
*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் கர்ப்பாதானம் பற்றி மேலும் தொடர்கிறார்.*
*கர்ப்பாதானம் ஆனது எந்த காலத்தில் எந்த இடத்தில் செய்யப்பட வேண்டும், அதில் சொல்லப்பட்ட மந்திரங்களின் பெருமைகள், அதற்காக புராணங்களில் உள்ள சரித்திரங்கள் என்கின்ற வரிசையில் பார்த்துக்கொண்டு வருகிறோம்.*
*அப்படி சொல்லிக்கொண்டு வருகின்ற வரிசையில் மகாபாரதத்தில் இந்த கர்ப்பாதானம் பற்றிய ஒரு சம்பவத்தை நமக்கு காண்பிக்கிறது. நான் அடிக்கடி சொல்வது வழக்கம் புராணங்களை எப்படி பார்க்கவேண்டும் என்றால், பகவத் சரித்திரம்/பகவான் நாமாவை சொல்கிறது என்று பார்ப்பது அல்லாமல், நம்முடைய கடமைகளையும் வலியுறுத்துகிறது புராணங்கள் என்று அடிக்கடி சொல்வதுண்டு.*
*ஏனென்றால் தர்ம சாஸ்திரம் என்ன சொல்கிறது வேதத்தில் சொல்லப்படுகின்ற ஒவ்வொரு தர்மங்களையும், தூக்கி நிறுத்தி காண்பிக்கின்றது. இதை மனதில் வைத்துதான் மகா பெரியவாளும், வேதத்தின் பூதக்கண்ணாடி புராணங்கள் என்று காண்பிக்கின்றார்.*
*அப்படி வேதத்தில் சொல்லப்படுகின்ற ஒவ்வொரு கர்மாக்களையும், நமக்கு சரித்திர மூலமாக புராணங்கள் காண்பிக்கின்றன. ஆங்காங்கு நடக்கக்கூடிய சம்பவங்களை நமக்கு எடுத்துக்காட்டாக காண்பிக்கிறது.*
*_மகாபாரதத்தில் ஒரு சம்பவம் விரிவாக நமக்கு காண்பிக்கின்றது கர்பா தானத்தை பற்றி. கூர்ம புராணமும் இதை எடுத்துக்காட்டாக சொல்கிறது. கூர்ம புராணத்தில் உள்ள வாக்கியத்தை தான் மகரிஷிகளும் ஜோதிடத்தில் நமக்கு கற்பித்துள்ளனர். இதைப் பற்றி சொல்லும் பொழுது கர்ப்பாதானம் எந்த தினத்தில் செய்ய வேண்டும் அதனால் என்னவிதமான குழந்தைகள் நமக்கு பிறக்கும் என்பதை காண்பித்து, எந்த தினங்களில் செய்யக்கூடாது என்பதையும் காண்பித்து, செய்யக்கூடாத ஒரு தினத்தில் செய்ததினால் நடந்த சம்பவத்தை மகாபாரதத்தில் இருந்து எடுத்துக் காண்பித்து, கூர்ம புராணம் வாக்கியம் காண்பிக்கிறது._*
*_ஒரு பெண்ணானவள் திருமணமான பிறகு, தூரமாக வேண்டும் (பகீஷ்டை), மூன்று நாட்கள் விரதமாக இருந்து, நான்காவது நாள் ஸ்நானம் ஆனபிறகு, 16 ஆவது நாள் வரையிலும் ருது காலம் என்று பெயர். அதற்குள் இந்த கர்ப்பாதானம் ஆனது செய்யப்படவேண்டும். அப்படி எந்த தினங்களில் அதை செய்ய வேண்டும் என்றால், இரட்டைப்படை நாட்களில், நாம் கர்பா தானத்தை செய்தால், ஆண் குழந்தையையும், ஒற்றைப்படை நாளில் கர்பா தானத்தை செய்தால், பெண் குழந்தையையும், நாம் அடைகிறோம்._*
*அந்த தம்பதிகள் இருவருக்கும் பொருத்தமான நட்சத்திரமாக அந்த தினம் இருக்க வேண்டும். அந்தநாள் இரட்டைப்படையா ஒற்றைப்படையா என்று பார்க்கவேண்டும். அதற்கு தகுந்தார் போல் நாம் கர்பா தானத்தை செய்ய வேண்டும். ஆண்வாரிசு வேண்டுமானால் இரட்ட படையிலும், பெண் வாரிசு வேண்டுமென்றால் ஒத்த படையிலும் வைக்க வேண்டும் என்பதை இந்த வாக்கியம் காண்பித்து, இந்த தம்பதிகள் இருவருக்கும் எந்த நட்சத்திரம் ஆனது பொருத்தமாக இருக்கிறது, முக்கியமாக அந்தப் பெண்ணிற்கு எந்த தினம் பொருத்தமாக இருக்கிறது என்பதை பார்த்து, நாளுக்குள் அந்த கர்பாதானத்தை செய்யவேண்டும்.*
*நாம் எதிர் பார்க்கும் படியான தினம் அமையவில்லை என்றால், அடுத்த தூரம் வரையிலும் காத்திருக்க வேண்டும். அடுத்த முறை தூரமாக இருந்து மூன்று நாள் கழித்து நான்காவது நாளிலிருந்து 16 வது நாளுக்குள் செய்ய வேண்டும். இப்படி எந்த மாதிரியான குழந்தை வேண்டும் என்று நாம் தீர்மானிக்கிறோமோ, அதுமாதிரியான நாளை நமக்கு சொல்லி, இந்த கூர்மபுராணம் வாக்கியமானது காண்பிக்கின்றது.*
*அதாவது மூல/மகா/ நட்சத்திரம் கூடாது. பருவ தினங்கள் என்று ஐந்து தினங்கள் சொல்லப்படுகிறது அதிலும் கூடாது. சதுர்தசி அஷ்டமி அமாவாஸ்யா பௌர்ணமி சங்கராந்தி அதாவது மாச பிறப்பு சங்கர மனம் என்று பெயர், இந்த ஐந்து தினங்களுக்கும் பஞ்ச பர்வா என்று பெயர் கூர்ம புராணத்தில் இதை காண்பித்துள்ளது.*
*மூலம் மற்றும் மகா நட்சத்திரங்களில் உங்களுக்கு பொருத்தமான தினமாக வந்தாலும் இந்த இரண்டு நக்ஷத்திரங்களில் கூடாது. அதேபோல, தம்பதிகளின் உடைய ஜென்ம நட்சத்திரம், அனுஜென்ம திரிஜென்ம நட்சத்திரம் இந்த தினங்களிலும் தவிர்க்கப்படவேண்டும் கர்ப்பாதானம்.*
*இந்த தினங்களில் செய்தால் என்னவாகும் என்பதைத்தான் மகாபாரதத்தில் உள்ள இந்த சம்பவம் நமக்கு காண்பிக்கிறது. ஆதி பர்வாவில் ஒரு சம்பவம் மகாபாரதத்தில் சொல்லப்படுகிறது இது விஷயமாக, கர்ப்பாதானம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த சரித்திரம் நமக்கு காண்பிக்கிறது. வியாசர் முதலில் உள்ள இந்த ஆதி பர்வாவில் தான் நிறைய தகவல்களை நமக்கு காண்பித்துள்ளார்.*
*வைசம்பாயனர் என்கின்ற ரிஷி ஜனமேஜயனுக்கு இதை உபதேசிப்பதாக அமைந்துள்ளது என்று வியாசர் காண்பிக்கிறார். நான் உன்னுடைய முன்னோர்களின் வம்சத்தைச் சொல்லிண்டு வரக்கூடிய வரிசையில், காந்தாரியின் இடத்திலே திருதராஷ்டிரனுக்கு 100 பிள்ளைகள் கிடைத்தார்கள். பாண்டுவிற்கு குந்தியின் இடத்திலும் மாத்திரியின் இடத்திலும், ஐந்து குழந்தைகளை அடைந்தார். இந்த குழந்தைகள் எல்லாம் தேவர்களுடைய அம்சமாக இவர்களுக்கு கிடைத்தார்கள். நல்ல சந்ததிகள் ஆகவும் தன்னுடைய குலத்தை மேன்மை அடைய செய்பவர்களாகவும், இந்த குழந்தைகளை அடைந்தார்கள் இன்று வைசம்பாயனர்
சொன்னவுடன், ஜனமேஜயன் இது விஷயமாக எனக்கு சில கேள்விகள் இருக்கிறது என்று சொன்னவுடன், மேலும் தொடர்கிறார். இதைப் பற்றி அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*