Post by radha on Aug 23, 2020 12:39:57 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHIMMAHA PERIVA
Madambakkam Shankar
1h ·
*மஹாளய பட்சமும் பித்ரு வழிபாடும் !*
நமக்கு இந்த உடலைக் கொடுத்தவர்கள் தாய்,
தந்தையர். நம்மை ஆளாக்க, தாங்கள்
அனுபவித்த கஷ்டங்களைப்
பொருட்படுத்தாமல் நற்கதி அடைந்த
அவர்களுக்கும், முன்னோர்களுக்கும்
வருடத்தில் 365 நாட்களும் செய்ய வேண்டிய
தர்ப்பணங்களை சரிவரச் செய்யாததற்கான
பிராயச்சித்தமாகவும் மஹாளயபட்ச தர்ப்பண
முறை அமைந்துள்ளது.
தென்புலத்தார் என்போர் இறந்த எமது
மூதாதையினராவர். அவர்கள் எம்மை விட்டுப்
பிரிந்தாலும் அவர்களின் ஆசி எம்மை
வாழவைக்கும் என்றும், அவர்களை வாழ்த்தி
அவர்களின் ஆசியைப் பெறுவது மானிடனாகப் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எமது கடமை என்றும் வள்ளுவப் பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.
இல்லறம் சிறக்க தெய்வப்புலவர்;
"தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல்
தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை''
பிதிரர்க்கும், தெய்வத்திற்கும், விருந்தினற்கும், இனத்திற்கும், தனக்கும் தருமம் செய்தல் தலைமையான தருமம். என்று கூறி இல்லறத்தானின் கடமைகளுள் ஒன்றாக பித்ருக்களுக்கு தானம் செய்வது கடமை என வலியுறுத்தியுள்ளார். பித்துறு வழிபாடு இல்லற வாழ்க்கைக்கு பித்ருக்களின் ஆசியும், ஆசீர்வாதங்களும் கிடைக்கப்பெற்று
சிறப்பளிக்கின்றன என்பதனால் எம்
முன்னோரால் பின்பற்றப்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. பித்ருக்களை நாம் அவமதித்தால் அல்லது அவர்களை உதாசீனம் செய்தால் அவர்கள் எம்மை சபித்து விடுவார்கள் என்பதும், ஆதனால் நாம் குடும்ப வாழ்கையில் பல துன்பங்களை அனுபவிக்கன் நேரிடும் என்பதும் இந்துகளின் ஐதீகம்.
இவ்வருடம் இம் மஹாளயம் செய்யும்
காலமாக 02.09.2020 முதல் 17.09.2020 வரை
உள்ள 15 தினங்கள் அமைவதாக சோதிடம்
கூறுகின்றது. இக் காலங்களில் நவராத்திரி
விரதம் கும்பம் வைத்து செய்யப் பெறுவதால்
அவை தவிர்ந்த மற்றைய நாட்களில் பித்ரு
தர்பணமாக மஹளையம் செய்வது வழக்கமாக உள்ளது.
இறந்தோரின் (பித்ருக்களின்) ஆசி வேண்டி
பித்ரு வழிபாடு செய்யும் வழக்கம் எமது
முன்னோர்களால் பின்பற்றப்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. அவை
இரண்டு விதமாக அமைகின்றன. ஒன்று இறந்த எமது நெருங்கிய உறவினர்கள் இறந்த மாதத்தில் வரும் திதியில் ஒரு புரோகிதர் மூலம் எள்ளு நீர் இறைத்து அவர்களை நினைந்து வழிபடுவது.
இறந்த திதியைச் சிரத்தையுடன் செய்வதால்
சிரார்த்தம் அல்லது திவசம் என்று
அழைக்கப்பெறுகின்றது. ஒவ்வொரு மாதமும்
அமாவாசையில்/பூரணையில் எள்ளும் நீரும்
இறைத்து வழிபடுவது, புரோகிதருக்கு அரிசி
காய்கறி கொடுத்து மோக்ஷ அர்ச்சனை
செய்வதும் ஒரு வகை பிதிர் வழிபாடாகும்.
இது, எம்மை விட்டுப் பிரிந்த எல்லா
உறவினர்க்கும் விருந்தளிப்பது போன்ற ஒரு
ஆராதனையாகும். இங்கே குறிக்கப்பெற்ற
மஹாளய தினத்தில் சைவ உணவு ஆக்கிப்
படைத்து அவர்களை மகிழ்வித்து அவர்களின்
ஆசிகளைப் பெறுவதாக அமைகின்றது.
படைத்த உணவின் சிறு பகுதியை
மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் உணவாக கொடுப்பதும், மிகுதியை, உற்றார்,
உறவினர்களுடன் பகிர்ந்து உண்பதும்
வழக்கமாக நடைபெறும் மஹாளய
ஆராதனையாகும்,
இவை தவிர, அமாவாசை, பௌர்ணமி திதிகளில் உரியவர்கள் விரதம் அனுஷ்டிப்பதும், விளகீடு, தீபாவளி போன்ற விஷேச தினங்களுக்கு முதல் நாள் அவர்களுக்கு விருந்து படைப்பதும் நம்
முன்னோரால் பின்பற்றி வந்த சில சமய
அனுட்டானங்களாகும்.
மானிட வாழ்க்கையில் மக்கள் செல்வம்
முக்கியமானதாகும். பிள்ளைப் பாக்கியம்
இல்லாத குடும்ப வாழ்க்கை அர்த்தமற்றதாகி
விடுகின்றது. அதனால் விவாகமாகியும் அதிக நாட்களுக்கு பிள்ளைச் செல்லவம்
இல்லாதவர்களும், வலது குறைந்த
பிள்ளைகளைப் பெற்றவர்களும் சோதிடரை
நாடிச் செல்வது வழக்கம். சோதிடர் அவர்களின் ஜாதகத்தைப் பார்த்து உங்களுக்கு பிதிர்தோஷம் இருக்கு அதை நிவர்த்தி செய்தால் பிள்ளைப் பாக்கியம் கிடைக்கும்.
அல்லது குறைபாடு உள்ள பிள்ளையின்
குறைகள் நீங்கும் என அறிவுறுத்தி
அனுப்புவதை பார்த்திருக்கின்றோம்.
இந்த பித்ரு தோஷமானது நாம் முற்பிறப்பிலோ அல்லது இப்பிறப்பிலோ எம்மை அறியாது பித்ருக்களை அவமதித்தமையால் ஏற்பட்டவையே ஆகும். அவ்வாறான குறைபாடுகள் வாழ்க்கையில்
ஏற்படாதிருக்கவே பித்ரு வழிபாடு
செய்யப்பெறுகின்றது.
ஒரு வருடத்தை தேவ, ப்ரஹ்ம, பூத, பித்ரு,
மநுஷ்ய என்னும் ஐந்து பாகங்களாக வகுத்து;
புரட்டாதிமாதம் (மஹாளய பக்ஷம்)
பித்ருக்களுக்கு உரிய மாதமாக
கணிக்கப்பெற்றுள்ளது. எனவே அந்தக்
காலத்தில் மஹாளய-பித்ரு வழிபாட்டுகள்
செய்து பித்ருக்களை மகிழ்வித்து அவர்களின் ஆசிகளை பெறுகின்றோம்.
மனிதர்கள் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து என இந்து மதம் வலியுறுத்துகிறது. அவை பிதுர்யக்ஞம்(மூதாதையினர்), தேவரயக்ஞம் (தேவர்கள்), பூதயக்ஞம் (பசு, காக்கைக்கு உணவு அளிப்பது) மனித யக்ஞம் (சுற்றத்தார், பிச்சைக்காரர்கள், துறவிகள் ஆகியோருக்கு உணவு அளிப்பது), வேத சாஸ்திரங்களைப் பயில்வது ஆகியவை. இவற்றுள் பிதுர் யக்ஞம்
மிகவும் புனிதமானது எனக் கருதி முன்னோர்
அதனைக் கடைபிடித்து வந்ததுடன்
நம்மையும் மேற்கொள்ள அறிவுறுத்தினர்.
இறந்த எமது முன்னோர்களுக்காகச்
செய்யப்படுவது பிதிர் வழிபாடு.
இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு எங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர்.
எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ அல்லது எள்ளும்
தண்ணீருமாகவோ (தர்ப்பணம்) அளிக்க
வேண்டும் என்றார்கள்.
அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து,
நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற
வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தகுந்த குருமார்களை வைத்து முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய்,
தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது
பித்ருக்களை இந்த மஹாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும்.
சிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை
மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய
வேண்டும் என்கிறது சாஸ்திரம். வசிஷ்ட
மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன்,
அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள்.
பிதிர் வழிபாட்டில் பிண்டம் போட்டு சமைத்த
உணவு, பழங்களை நைவேதிக்கின்றேம்.
பிதிர்கள் திருப்தியடைய எள்ளுந் தண்ணீரும் இறைக்கின்றோம். புரோகிதருக்கு அரிசி, காய்கறி, வேட்டி சால்வை, தட்சணை கொடுக்கின்றோம். இவ்வழிபாட்டால் எமக்குப் பிதிர் ஆசியும் குரு ஆசியும் கிடைக்கின்றது.
மேலும் நாம் கோவிலில் நெய் விளக்கு ஏற்றி
மோக்ஷ அர்ச்சனை செய்து வழிபடுவதால்
தேவ ஆசியும் கிடைக்கின்றது.
நமது வாழ்வில் வரும் இன்ப துன்பங்கள்
யாவும் நாம் எமது முற்பிறப்பில் செய்த பாப
புண்ணியத்துக்கு அமையவே நடைபெறும்.
அதிலே பிதிர் காரியமும் ஒன்றாகும். அதனை
நாம் கிரமமாக சிரத்தையுடன் செய்ய
வேண்டும். அது தவறின் பிதிர்களின்
கோபத்துக்கு ஆளாவோம் என ஜோதிஷ
சாஸ்திரம் கூறுகின்றது.
நாம் பிறக்கும் போது நமது ஜாதகத்தைக்
கணிப்பர். அதனைப் பார்த்து ஜோதித்தர் கிரக தோஷம் உள்ளதால் பிள்ளைப் பாக்கியம் குறைவு என கூறுவார். இத்தகைய
கிரகதோஷம் உள்ளதால் பிதிர் வழிபாடு
செய்யுங்கள் என கூறுவார்.
இதனால் நமக்குப் பிள்ளை இல்லையே என்ற
குறைபாடு கண்டவிடத்து பிதிர் வழிபாட்டை
சிரமமாகச் செய்தல் வேண்டும். வீட்டிலே
மேலே கூறியவாறு செய்கின்றோம்.
கீரிமலையில் செய்கின்றோம். வசதியானோர் இராமேஸ்வரம், திருவாலங்காடு, காசி, காயா
சென்று பிதிர் வழிபாடு, தேவ வழிபாடுகளைச் செய்வதை நாம் அறிவோம்.
ஆகவே பிதிர் வழிபாடு மிக முக்கியமானது.
அதிலும் மஹாளயஞ் செய்து பிதிர் வழிபாடு
செய்து பிதிர் ஆசி, குரு ஆசி, தேவ ஆசி
பெற்று வாழ்வது மிக மிக மேலானது. இதனை வீட்டில் செய்ய முடியாதோர் புரட்டாதி
அமாவாசையில் புரோகிதருக்கு அரிசி, காய்கறி கொடுத்து மோக்ஷ அர்ச்சனை செய்யலாம்.
யாபெரும் தவறாது மஹாளயம் செய்து பிதிர்
ஆசி பெறுவோம்
*மஹாளய பட்ச தர்ப்பண பலன்கள்!*
***************************************
பிரதமை: செல்வம் பெருகும் (தனலாபம்)
துவிதியை: வாரிசு வளர்ச்சி (வம்ச விருத்தி)
திருதியை: திருப்திகரமான இல்வாழ்க்கை
(வரன்) அமையும்
சதுர்த்தி: பகை விலகும் (எதிரிகள் தொல்லை
நீங்கும்)
பஞ்சமி: விரும்பிய பொருள் சேரும் (ஸம்பத்து
விருத்தி)
சஷ்டி: தெய்வீகத் தன்மை ஓங்கும் (மற்றவர்
மதிப்பர்)
சப்தமி: மேலுலகோர் ஆசி
அஷ்டமி: நல்லறிவு வளரும்
நவமி: ஏழுபிறவிக்கும் நல்ல வாழ்க்கைத்
துணை
தசமி: தடைகள் நீங்கி விருப்பங்கள்
நிறைவேறும்
ஏகாதசி: வேதவித்யை, கல்வி, கலைகளில்
சிறக்கலாம்
துவாதசி: தங்கம், வைர ஆபரணங்கள் சேரும்
திரியோதசி: நல்ல குழந்தைகள், கால்நடைச்
செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும்
சதுர்த்தசி: முழுமையான இல்லறம் (கணவன் -மனைவி ஒற்றுமை)
அமாவாசை: மூதாதையர், ரிஷிகள்,
தேவர்களின் ஆசி கிட்டும்.
*விளக்கங்கள்:*
***************
1. பித்ரு தோஷம் என்றால் என்ன?
நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த
முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம்.
அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால்
வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.
2. அதை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி?
ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன்
ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த
இடத்தில் சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம்
உண்டு.
3. அதற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்?
ராமேஸ்வரம் சென்று தில ஹோமம்
செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி,
அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம்
செய்வதும், திருவெண்காடு சென்று திதி
கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம்.
குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில்
இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை
செய்துகொண்டிருந்தாலோ மட்டுமே தில
ஹோமம் செய்யவேண்டும். அனைவரும்
இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில
ஹோமம் செய்யவேண்டியதில்லை.
4. அந்த தோஷத்தினால் ஏற்படும் தீய
விளைவுகள் என்ன?
இந்த தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம்
நடக்காது. அல்லது மிகவும் தாமதமாக
நடக்கும். விவாக ரத்து ஏற்படலாம். அல்லது
தம்பதியரிடையே அன்னியோன்னியம்
இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம்
இருக்காது. ஒரு சிலருக்கு கடுமையான உடல்
உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத்
திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத்
தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும்
வாய்ப்புண்டு .இந்த தோஷம் உள்ள சில
தம்பதிகள் ஒருவருக்கொருவர்
உண்மையானவர்களாக நடந்துகொள்வதில்லை.
5. எத்தகைய பாவங்கள் செய்திருந்தால், இந்த தோஷம் வரும்?
இந்த தோஷம் வருவதற்கான கரணங்கள்:
கருச்சிதைவு செய்துகொண்டால், இந்த
தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி
நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல்
இருந்து அதனால் அவர்கள் மன வேதனை
அடைந்தால், பித்ரு தோஷம் வரும். ஒருவரின்
இளைய தாரத்துப் பிள்ளைகள் மூத்த
அன்னைக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும்.
தந்தைக்கு எத்தனை தாரங்கள் இருந்தாலும்
அவர்கள் அனைவருக்கும் தவறாமல், திவசம்
செய்யவேண்டும். ஆண்வாரிசு இல்லாத
சித்தப்பா, பெரியப்பா, அத்தை , சகோதரர்
ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டால் வரும்.
துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி
கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று
கூப சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம்
வரும்.
6. ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் இது
வருவது ஏன்?
ஒரே குடும்பத்தில் சிலருக்கு மட்டும் இந்த
தோஷம் வரலாம். திருமணம் ஆன பிறகும்
பிறந்த வீட்டு வழியில் சில பெண்களுக்கு
பித்ரு தோஷம் தொடரும். இந்த தோஷம்
கடுமையாக உள்ள சில குடும்பங்களில்
மூளை வளர்ச்சி இல்லாத மாற்றுத் திறனாளி
குழந்தை பிறக்கலாம். தெய்வத்தை
வணங்காவிட்டால், சாமி கோபித்துக்கொள்ள
மாட்டார். ஆனால், தென்புலத்தாருக்கு
ஆற்றவேண்டிய கடமைகளை தவறாமல்
செய்யவேண்டும். அவற்றைச் செய்யத்
தவறினால் வருவதுதான் பித்ரு தோஷம்.
பிதுர் தோஷம் நீக்கும் ஆடிமாத வழிபாடு:-
தட்சிணாய காலத்தின் முதல் மாதமான
ஆடிமாதம் இறைவழிபாட்டுக்கு மிகவும்
உகந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில்
ஆடிமாத அமாவாசை பிதுர்களாகிய மறைந்த
நம் முன்னோர்கள் பூஜைக்கு ஏற்றதாக
போற்றப்படுகின்றது. ஆடி அமாவாசை அன்று
நீர்நிலைகளிலும், சில கோவில்களிலும்
மறைந்த மூதாதையர்களுக்கும்
உறவினர்களுக்கும் முறையாக பூஜை செய்து
வழிபட்டால், எடுத்த காரியங்கள் நிறைவேறும்.
பிதுர்தோஷம் இருந்தால் நீங்கும். இடையூறு
இல்லாமல் சுகமாக வாழலாம் என்பது
நம்பிக்கை.
பெற்றோருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களை சரியாக கவனிக்க முடியாதவர்கள்கூட பிதுர் பூஜை செய்து வழிபட்டால், மனச்சுமைகள்
குறையும். பெற்ற பிள்ளைகளை எந்த
சூழ்நிலையிலும் மன்னித்தே பழக்கப்பட்ட
பெற்றோர், இந்த விஷயத்திலும் மன்னித்து
அருள்புரிவார்கள்.
காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா
மண்டபம் படித்துறை திருச்சி முக்கொம்பு,
மயிலாடுதுறை நந்திக்கட்டம், பவானி
முக்கூடல், உள்பட பல நீர்நிலைகளில்
பக்தர்கள் அதிக அளவில் தர்ப்பணம் மற்றும்
சிரார்த்தம் செய்வார்கள். நதிக்கரைகள்
மட்டுமின்றி , கடற்கரை ஸ்தலங்களன
ராமேஸ்வரம், தனுஷ்கோடி , முக்கடல்
சங்கமிக்கும் கன்னியாகுமரி, பூம்புஹார்,
வேதாரண்யம், கொடியக்கரை ஆகிய கடற்கரைப் பகுதிகளும் பிதுர் பூஜைகளுக்கு ஏற்றவை.
சில கோவில்களும் பிதுர் பூஜை செய்ய
உகந்ததாக சொல்லப்படுகின்றன. அந்த
வகையில், சமயபுரம் மாரியம்மன் கோவிலில்
ஆடி அமாவாசை அன்று மூதாதையர்களுக்காக சிறப்பு பூஜை செய்வது சிறப்பானது.
அப்போது மூங்கில் தட்டில் வெற்றிலைபாக்கு , தேங்காய் , பழங்கள், மலர்ச் சரங்கள்,
வாழைக்காய், பூசணிக்காய் வைத்து, அதனைக் கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து அம்மன் சன்னிதியில் சமர்ப்பிக்கிறார்கள். மறைந்த தங்கள் பெற்றோரின் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொல்கிறார்கள்.
பிறகு பூஜை செய்யப்பட்ட அந்தத் தட்டினை
வயதான ஒரு அந்தணரிடம் தட்சிணை
கொடுத்து சமர்ப்பிக்கிறார்கள். அல்லது
வயதான சுமங்கலிப் பெண்ணிடம் கொடுத்து
அவர்கள் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்கள்.
வசதி படைத்தோர் அன்றைய தினம்
அன்னதானம் செய்வதுடன் ஆடைதானமும்
செய்கிறார்கள்.
தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச்
செல்லும் பாதையில் கண்டியூரில் இருந்து
3கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம்
திருப்பந்துருத்தி. இந்த தலமும் ஆடி
அமாவாசைக்கு ஏற்ற இடம்தான்.
நம்மை நிம்மதியாக வாழ வைக்கும் பித்ரு
தர்ப்பணம் ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம்குறைந்தவருக்கு சுகமாக வாழ
துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய
முன்னோர்கள் தான்.இவர்களை வழிபடும்
முறைக்கு பிதுர்தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர்.
நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி,
பட்சம், தமிழ்மாதம் அறிந்து, ஒவ்வொரு
தமிழ்வருடமும் அதே திதியன்று(ஆங்கிலத்
தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும்
மாறிவரும்)குடும்பத்தார்கள் பிண்டம் செய்து
வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும்
நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை
இதேபோல அமாவாசைத் திதிகளிலும்செய்து
வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.
ஒருவேளை முன்னோர்களின் இறந்தத் திதி
தெரியாதவர்கள், ஆடி அமாவாசை அல்லது
தை அமாவாசையன்று இராமேஸ்வரம் அல்லது சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்று. அதுவும் முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசையன்று (ஆண்டுக்கு ஒரு அமாவாசை என நமது ஆயுள் முழுக்கவும்) செய்து வருவது மிகவும் நன்மையளையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும்.
சாதாரணமான அமாவாசையானது அனுஷம்,
விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை
உண்டாக்குகிறது.
திருவாதிரை, புனர்பூசம்,பூசம்
நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று
செய்யப்படும் பிதுர்தர்ப்பணம் பனிரெண்டு
ஆண்டுகள் பிதுர்திருப்தி ஏற்படுத்தும்.
அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில்
வரும் அமாவாசையன்று செய்யப்படும்
பித்ருபூஜையானது, பித்ருக்களுக்கு
தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய
காலத்தைத் தரும்.
மாசி மாதத்து அமாவாசையானது சதய
நட்சத்திரத்தன்று வருமானால், அது
பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை
அளிக்ககூடிய காலமாகும்.
மாசி மாத அமாவாசை அவிட்டம்
நட்சத்திரத்தில் வருமானால், அதுவும்
பித்ருக்களுக்கு அளவற்ற மனமகிழ்ச்சியைத்
தரும். அன்று நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால்!!!
மாசி மாதம் அமாவாசை அவிட்டம் நட்சத்திரம்
வரும் நாளில் பித்ருக்களை நினைத்து அன்னம் அல்லது தண்ணீர் தானம் செய்தால் பதினாயிரம் ஆண்டுகள் பிதுர்களைத் திருப்தி செய்த பலன் கிடைக்கும்.
மாசி மாதம் வரும் அமாவாசை பூரட்டாதி
நட்சத்திரத்தில் வந்து,அப்போது
அந்தநன்னாளில் சிரார்த்தம் செய்தால்,
பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம்
யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என
விஷ்ணுபுராணம் கூறுகிறது.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM