Post by kgopalan90 on Aug 12, 2020 16:56:43 GMT 5.5
நமது வேதங்களில் காணப்படும் புத்ரன் என்னும் வார்த்தை மகன், மகள் ஆகிய இருவரையுமே குறிப்பிடுவதாக அமைந்துளது.
ப்ருஹதாரண்யோபனிஷத் சொல்கிறது. அத்யாயம் 1; ப்ராம்ஹணம் 5.
ஆத்ம ஸம்ஸ்கார கர்மாவானது ப்ரம்ஹ ஸம்ப்ரபத்தி; யக்ஞ ஸம்ப்ரபத்தி; லோக ஸம்ப்ரபத்தி என்று மூன்று வித மாக சொல்லபடுகிறது.
அதாவது ஒருவரின் பெற்றோர் அவர்கள் வாழும் போது செய்து வந்த , அல்லது செய்ய வேண்டும் என்று விரும்பிய செயல்களை பெற்றோர் இறந்த பின் பெற்றோருக்காக புத்ரன் செய்ய வேண்டும்.
ப்ரஹ்ம சம்ப்ரபத்தி:- ஒருவர் வாழும் போது வேத அத்யயனம், சாஸ்த்திரம், புராண பாராயனம் ,அல்லது உலக வ்யவஹாரத்திற்கு தேவையான ஏதோ ஒரு படிப்பு கற்றுக்கொண்டு தினமும் செய்ய வேண்டும் என விருப்பபட்டிருப்பார்.
ஆனால் அதை அவரால் முழுமையாக கற்றுகொள்ள முடிந்திருக்காது. அவர் இறந்த பின் அவரது மகனோ,மகளோ
அதை கற்றுக்கொள்வதால் இறந்தவரின் ஆசைகள் நிறைவேறும். இதுவே ப்ருஹ்ம ஸம்ப்ரபத்தி எனப்படும்.
யக்ஞ ஸம்ப்ரபத்தி:- பெற்றோர் ஆசைபட்டு முயற்ச்சி செய்து நிறைவேறாமல் இறந்து விட்டால் அதை மகனோ, மகளோ நிறை வேற்ற வேண்டும்.
அதாவது விரதங்கள்:- ஏகாதசி, ப்ரதோஷம், சஷ்டி, ஸோம வாரம் போன்ற விரதங்கள் அனுஷ்டிக்க வேண்டும் என்றோ,பூஜைகள்,
ஔபாசனம், விசேஷ ஹோமங்கள் செய்ய வேண்டும் என்றோ, மந்திர ஜபம், புரஸ்சரனை செய்து ஸித்தி செய்ய வேண்டும் என்றோ, முயர்ச்சித்து செய்ய முடியாமல் போய் இருந்தால்அதை மகனோ அல்லது மகளோ பூர்த்தி செய்ய வேண்டும்.
லோக ஸம்ப்ரபத்தி :-
க்ஷேத்ராடனம் செய்ய வேண்டும் என்றோ திருப்பணி கைங்கரியங்கள் செய்ய வேண்டும் என்றோ,யாருக்காவது உதவி செய்கிறேன்
என்று வாக்களித்து செய்ய முடியாமல் போய் விட்டாலோ அந்த விருப்பங்களை மகனோ, மகளோ நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு நிறைவேற்றியவர்களே மகன், மகள் என்று சொல்லிக்கொள்ள தகுதி வாய்ந்தவர்கள் எங்கிறது ப்ருஹத் ஆரண்யக உபனிஷத்.
இதுவே இறந்தவருக்கு செய்யும் உதவி.சிஷ்யர்களும் அவரது குருவின் ஆசைகளை பூர்த்தி செய்யலாம்.
பெற்றோரின் அருளால் அந்த குடும்பத்தில் முறையாக திருமணமான அனைவருக்கும் தகுந்த காலத்தில் குழந்தை பிறக்கும்.
தாத்தா பாட்டியின் அருளால் குடும்பத்தில் ஏழ்மை விலகி ஆடு, மாடு முதலான ஸம்வ்ருத்தி ஏற்படும்.
கொள்ளு தாத்தா கொள்ளு பாட்டி அருளால் உணவு ஸம்வ்ருத்தியாக கிடைக்கும்.செல்வ செழிப்பு அதிகம் இருக்கும்.
யம ஸ்ம்ருதி வாக்கிய படி முறையாக சிராத்தம், தர்ப்பணம் ஆகிய வற்றை செய்து பித்ருக்களை பூஜிப்பவர்களுக்கு நீண்ட ஆயுள்
மக்கட் செல்வம், புகழ். செல்வம், தான்யம் சுவர்க்கத்தில் வசிப்பது போல் உள்ள சுகம் கிட்டும் எங்கிறது.
குடும்பத்தில் இருப்பவர்களுக்காக உழைத்து கொண்டிருக்கும் ஒருவர் எப்போது தனது மகனுக்கோ மகளுக்கோ மகன் பிறக்கிறார்க
ளோஅப்போது முதல் இல்லறபொறுப்பு களையும், பற்றுதல்களையும் சிறிது சிறிதாக குறைத்து கொண்டு, குடும்ப பொறுப்புகளை உரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு
ஆன்மீக மான பாதையில் முழுமையாக தன்னை ஒப்படைத்து கொன்டு தனிமையை நாட வேண்டும் என்கிறது மஹா பாரதம்.
தர்ம சிந்து பக்கம் 404 சொல்கிறது. தந்தை இறந்த பிறகு மகளாக பிறந்தவர் மாஸிகங்க ளுக்கு சகோதரர் கூட இருந்து சமையலுக்கு உதவி செய்யலாம்.
சாப்பிடுபவர்களுக்கு ஆபோசன தீர்த்தம் போடலாம். பிண்டம் பிடித்து தர உதவி செய்யலாம்.
அருகிலுள்ள ஆலயத்திற்கு சென்று ந்ருசிம்மர் அல்லது தக்ஷிணாமூர்த்தி சன்னதியில் இறந்த ஒரு வருடம் வரை இறந்தவருக்கு தெற்கு முகமாக நல்லெண்ணைய் தீபம் போடலாம்.
திருமணமானவர்கள் மிகுந்த அக்கரையுடன் சிரத்தையுடன் பஞ்ச கச்சம் கட்டிக்கொண்டு தான் தர்ப்பணம் செய்ய வேண்டும்.ஐந்து முழ மேல் துண்டும் இடுப்பில் இருக்க வேண்டும்.
கபர்த்தி காரிகை சொல்கிறது. 32தர்ப்பங்களால் கூர்ச்சம் செய்வது உத்தமம். 16 தர்பங்களால் கூர்ச்சம் செய்வது மத்திமம். 9அல்லது 7 தர்பைகளால் கூர்ச்சம்செய்வது அதமம் என்று.
பவித்ரம் அபர கார்யங்களுக்கு ஒரு தர்ப்பம். தேவ கார்யங்களுக்கு 2 தர்ப்பம், பித்ரு கார்யங்களுக்கு 3 தர்ப்பம்.
தந்தை இறந்த பிறகு 12 நாட்களுக்கு பிறகு அமாவாசை தர்ப்பணம் செய்ய ஆரம்பிக்க லாம்.ஒரு வருடத்திற்கு பிறகும் ஆரம்பிக்க லாம். தவறேதுமில்லை. மாதாமாதம் மாசிகம், சோதகும்பம் செய்வதால்ஆகாரம் கிடைக்கிறது.
ஒரு வருஷம் வரை பார்வண சிராத்தம் செய்ய க்கூடாது என்று தான் சொல்லி யிருக்கிறது.சபிண்டீகரணம் முடித்து விட்டால் அவர் பித்ருக்களுடன் ஒன்றி கலந்து விடுகிறார்.
சமீபத்தில் கிரஹணம்வந்தாலும் அதிலிருந்து ஆரம்பித்து தர்ப்பணம் செய்யலாம்.
இறப்பு தீட்டு, வ்ருத்தி தீட்டில் இருக்கும் போது அமாவாசை வந்தால் தர்ப்பணம் செய்ய கூடாது. அமாவாசை தர்ப்பணத்திற்கு வேறு காலம் கிடையாது. ஆதலால் வேறு நாட்களில் தீட்டு போன பிறகு செய்ய வேண்டாம். இதனால் தவறு எதுவுமில்லை.
இறப்பு தீட்டு, வ்ருத்தி தீட்டில் கிரஹணம் வந்தால் ,இது காம்ய தர்ப்பணம் ஆவதால் கிரஹண காலத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும்.கிரஹண காலத்தில் தற்கால சுத்தி ஏற்படுகிறது.
வருடாந்திர சிராத்த மல்லது மாசிகம் வந்தால் தீட்டு போகும் நாளன்று காலை 9 மணிக்கு மேல் செய்தாக வேண்டும்.
ஷன்னவதி தர்ப்பணம் செய்பவர்களுக்கு ஒரே நாளில் இரு தர்ப்பணங்கள் செய்ய வேண்டி வரும். அப்போது முதல் தர்ப்பணம் செய்து முடித்த பிறகு
தர்ப்பணம் செய்த பாத்திரங்களை அலம்பி விட்டு புதிதாக ஜலம் பிடித்து கொண்டு வந்து அடுத்த தர்ப்பணத்தை வேறு கருப்பு எள்,
பவித்ரம், கூர்ச்சத்துடன் ஆசமனம் செய்துவிட்டு ஆரம்பித்து செய்யலாம். பிறகு ப்ருஹ்ம யக்ஞம் செய்ய வேண்டும்.
ஸ்ரீ க்ருஷ்ண பகவான் பகவத் கீதையில் சொல்கிறார் ஹே அர்ஜுனா எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்று தீர்மா னிக்கும் விஷயத்தில் உனது மனித புத்திக்கு இடமில்லை.
தொலை நோக்கு பார்வையுடன் இந்த்ரியங்களுக்கு புலப்படாதவைகளையும், தவ வலிமையால் அறிந்து கொண்ட மஹ ரிஷிகள், தெரிவிக்கும் சாஸ்திரத்தையே பிரமாணமாக கொண்டு செயல் பட வேண்டும்.
தஸ்மாத் சாஸ்திரம் ப்ரமாணம் தே கார்யாகார்ய வ்யவஸ்திதெள எங்கிறார். பரலோகம், பித்ருக்கள், தர்மம், புண்ணியம், தெய்வம் போன்ற விஷயங்களில் சாஸ்திரம்
சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு செயல் பட வேண்டும்.இவ்விஷயத்தில் நமது குதர்க்கமான புத்திக்கு இடம் கொடுக்க கூடாது.
பல பிள்ளைகள் , அவரவர் வீட்டில் தனிதனியே தெய்வ வழிபாடு, அன்னதானம், பூஜைகள், போன்ற நல்ல காரியங்கள் செய்வதால் அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஏறாளமான புண்ணியங்கள் அந்த வீட்டிற்கு வந்து சேரும்.
ஒருவர் ஒரு முறை செய்வதால் அந்த குடும்பத்திற்கு குறைவான புண்ணியமே வந்து சேரும்.
விபாகே தர்ம வ்ருத்தி எங்கிறார் ஆபஸ்தம்ப மகரிஷி. பிள்ளைகள் அனைவரும் தனிதனி யே தங்கள் மனைவி மக்களுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த வேண்டும்,
தனி தனியே தெய்வ வழிபாடு, பித்ருக்கள் வழிபாடு செய்ய வேண்டும். இதனால் அந்த குடும்பத்திற்கு ஏறாளமான புண்ணியம் வந்து சேரும்.
மஹாளய தர்ப்பணம் செய்யும்போது ஒவ்வொருவரும் தனிதனியே செய்வதால் அவரவர் இறந்த மாமனார், மாமியார், மைத்துனனுக்கு தர்ப்பணம் செய்ய முடிகிறது
மூத்தவர் மாத்திரம் செய்யும் போது மூத்தவரின் மாமனார், மாமியார், மைத்துனனு
க்கு மாத்திரம் தான் மூத்தவர் செய்வது போகிறது. மற்ற பிள்ளைகளின் காலமான மாமனார், மாமியாருக்கு , மைத்துனனுக்கு மற்ற பிள்ளைகள் செய்யாதது குற்றம். இதனால் யம தர்ம ராஜாவிடம் தண்டனைக்கு ஆளாகிறார்.
மாத பிறப்பு புண்ணிய காலம்.
சித்திரை மாதம் மாத பிறப்பு நேரம் பஞ்சாங்கத்தில் போட்டிருப்பார்கள். இந்த நேரத்திற்கு முன்னதாகவும், பின்பும் 4 மணி நேரம் புண்ணியகாலமாகும்.
வைகாசி மாதத்திற்கு 6 மணி 24 நிமிஷம் முன்பும் பின்பும் புண்ணிய காலம்.
ஆனி மாதத்திற்கு பின்பு 24 மணி நேரம்.
ஆடி மாதத்திற்கு முன்பு 8 மணி நேரம்.
ஆவணி மாதத்திற்கு முன்பும், பின்பும் 6 மணி 24 நிமிடம் புண்ணிய காலம்.
புரட்டாசி மாதத்திற்கு 24 மணி நேரம் பின்பும், ஐப்பசிக்கு 4 மணி நேரம் முன்பும், பின்பும், கார்த்திகைக்கு 6 மணி 24 நிமிடம் முன்பும், பின்பும்.
மார்கழிக்கு 24 மணி நேரம் பின்பு, தை மாதம் 8 மணி நேரம் பின்பும், மாசிக்கு 6மணி 24 நிமிடம் முன்பும், பின்பும் , பங்குனி மாதத்திற்கு 24 மணி நேரம் பின்பும் புண்ணிய கால நேரமாகும்.
12 ராசிகள் உள்ள ராசி சக்கிரத்தை சர ராசி, ஸ்திர ராசி, உபய ராசி என மூன்றாக பிரித்தார்கள்.
உபய ராசிகளான ஆனி, புரட்டாசி
மார்கழி, பங்குனி மாதங்களுக்கு ஷடசீதி என்று பெயர்.
ஸ்திர ராசிகளான வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி என்ற மாதங்களுக்கு விஷ்ணு பதம் என்று பெயர்.
சர ராசிகளான சித்திரை, ஆடி, ஐப்பசி, தை மாதங்களில் சித்திரை, ஐப்பசி மாதங்களுக்கு விசுவம் என்று பெயர்
.
ஆடி மாதம் தக்ஷிணாயன புண்ணிய காலம்.
தை மாதம் உத்திராயண புண்ணிய காலம்.
சடசீதிக்கு 24 மணி நேரம் மாதம் பிறந்த பிறகு புண்ணிய காலம்.
விஷ்ணுபதிக்கு மாதம் பிறக்கும் முன்பும், பின்பும் 6 மணி 24 நிமிஷம் புண்ணிய காலம்.
விசுவம் மாத பிறப்பிற்கு முன்பும், பின்பும் 4 மணி நேரம் புண்ணிய காலம்.
உத்திராயணம் மாதம் பிறந்த பிறகு 8 மணி நேரம் புண்ணிய காலம்.
தக்ஷிணாயனத்திற்கு மாதம் பிறக்கும் முன்னர் 8 மணி நேரம் புண்ணிய காலம்.
இவற்றுள் மாதம் பிறக்கும் நேரத்திற்கு ஸமீபத்தில் உள்ள நேரங்கள் மிகவும் அதிக மான புண்ணியம் தரும் புண்ணிய கால நேரம்
மாத பிறப்பு என்பது சூரியன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு நகரும் நேரமாகும். இது இரவிலும் வரலாம். பகலிலும் வரலாம்.
நமது சாஸ்திர படி ஒரு நாள்=24 மணி நேரம்=60 நாழிகைகள் என்பது முதல் நாள் சூரிய உதயம் முதல் அடுத்த நாள் சூரிய உதயம் வரை உள்ள நேரமாகும்.
மாத பிறப்பு தர்ப்பணம் செய்ய வேண்டிய நேரத்தை வ்ருத்த வசிஷ்டர் எனும் மகரிஷி நிர்ணயம் செய்து உள்ளார்.
16-08-2020 காலை 5-10 மணிக்கு ஆவணி மாத பிறப்பு ஆகும்.முன்பும் ,பின்பும் 6 மணி 24 நிமிடங்கள் புண்ணிய காலமாகும். ஆதலால் சூரிய உதயம் காலை 6-02 மணிக்கு . காலை 7 மணிக்கே மாத பிறப்பு தர்ப்பணம் செய்து விட்டு பிறகு மாத்யானிகம் செய்து கொள்ளலாம் எங்கிறார். நன்னிலம் ராஜ கோபால கனபாடிகள் அவரது பித்ரு கர்மாகள்- சிராத்தம் தர்ப்பணம் என்ற புத்தகத்தில். பக்கம் -33.
அமாவாசை தர்ப்பணத்திற்கு அபராஹ்ணம் என்னும் காலத்தில் தான் செய்ய வேண்டும் என்னும் நியதி உள்ளது. இது நித்திய தர்ப்பண வகையை சேர்ந்தது.
மாத பிறப்பு தர்ப்பணதிற்கு அபராஹ்ண கால நியமம் கிடையாது என்கிறார். இது நைமித்திக தர்ப்பண வகை.
சூரிய உதயம் வைகாசி மாதத்தில் காலை 5-48 மணிக்கும் மாசி மாதத்தில் 6-37 மணி க்கும் உள்ளது. நாம் உத்தேசமாக காலை 6 மணி என்று எடுத்து கொள்கிறோம்.