Post by kgopalan90 on Aug 2, 2020 20:33:09 GMT 5.5
சிராத்த சமையலில் கட்டாயம் சேர்க்க வேண்டியது கோதுமை, உளுந்து, பயறு. நல்ல எண்ணையில் செய்ய பட்ட பக்ஷணங்கள் சேர்க்க வேண்டும்.
நிர்ணய சிந்து பக்கம் 288. சொல்கிறது. கோதுமை, உளுந்து, பயறு, நல்ல எண்ணய்யில் செய்த பக்ஷணங்கள் இல்லாமல் செய்யபடும் சிராத்தம், செய்தாலும் கூட, செய்யபடாததை போல் தான் எங்கிறார் மகரிஷி.
ஆகவே கட்டாயம் மேற்கூறிய பொருட்களை ஏதாவது ஒரு வடிவத்தில் சாப்பாட்டில் சேர்க்க வேண்டும். பாசிபருப்பு பாயசம், உளுந்து வடை செய்யலாம். கோதுமை அல்வா செய்து போடலாம்.
ஸ்ரீ வ்யாசர் சொல்கிறார் ( வைத்தினாத தீக்ஷிதீயம் 576) சிராத்ததன்று சாப்பிட்ட உடனேயே எச்சில்களை எடுத்து சுத்தம் செய்ய க்கூடாது.அவைகளிலிருந்து ஸ்வதா காரங்கள் பெருகுகின்றன,.
அவைகளை தர்ப்பணத்தில் த்ருப்தி அடையாத பித்ருக்கள் பருகுகின்றனர் என்று. ஆகவே சாப்பிட்ட இடத்தை உடனே சுத்தி செய்யக்கூடாது.
சிராத்தம் சாப்பிட்ட ப்ரஹ்மணர்கள் கை அலம்பிக்கொ ண்டு , வந்து அமர்ந்து அவர்களுக்கு தக்ஷிணை தந்து ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்து விட்டு , அக்ஷதை ஆசிர் வாதத்திற்கு முன்பாக அந்த எச்சில் இலைகளை சிறிது அசைத்து விட வேண்டும்.
சிராத்தம் சாப்பிடும் ப்ராம்ஹணர்கள் சாப்பிட்டு விட்டு இலையில் இருந்து கை அலம்புவதற்காக எழுந்து சென்ற உடனேயே கண்ணுக்கு தெரியாத சில துஷ்ட தேவதைகள் சாப்பிடுகிறார்கள் எங்கிறது சாஸ்திரம்.
பிறகு அக்ஷதை ஆசீர்வாதம் முடிந்து ப்ராஹ்மணர்கள் வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகு பின்ட ப்ரதானம் ஆன பிறகு சாப்பிட்ட இடத்தை எச்சில் இட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
வைத்தினாத தீக்ஷிதீயம் 577 கூறுகிறது. சாப்பிட்ட இலைகளை சிறிது அசைக்காமல் அக்ஷதை ஆசீர்வாதம் செய்தால் சிராத்த பித்ருக்கள் ஆசையற்றவர்களாக செல்கிறார்கள்.
எச்சில் இலைகளை அசைக்காமல் அக்ஷதை ஆசீர்வாதம் சொல்வதோ ப்ராஹ்மணர்களை வெளியே கிளம்ப அனுமதிப்பதோ கூடாது.
அன்ன சேஷை: கிம் க்ரியதாம் சிராத்த மிகுதியை என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தா சிராத்தம் சாப்பிட்ட ப்ராஹ்மணர்களை கேட்பார். அதற்கு சிராத்தம் சாப்பிட்ட, பித்ருக்கள் ஸ்வரூபமான பிராமணர்கள் இஷ்டை: ஸஹோப புஜ்யதாம் உங்கள் ஞாதிகளுடன் சேர்ந்து அவற்றை சாப்பிடுங்கள் என்பார்.
இவ்வாறு கேள்வி பதில் ஆனவுடனேயே சாப்பிட்ட இலைகளை கர்த்தாவோ அல்லது அவரது மகன், சிஷ்யன், அல்லது ஞாதியோ எச்சில் இலையை கையால் சிறிது இழுத்து விட வேண்டும்.
பெண்களோ, குழந்தைகளோ ஞாதி அல்லாதவரோ எச்சில் இலையை சிறிது இழுத்து விடக்கூடாது.
இதற்கு போஜன பாத்திர சாலனம் என்று பெயர். இதனால் பித்ருக்கள் த்ருப்தி அடைகிறார்கள்.
நித்ய சிராத்த விஷயத்தில் தக்ஷ மஹரிஷி வாக்கியப்படி ஒரே நாளில் ஒரே கர்த்தா ஒரே பித்ருக்களை உத்தேசித்து இரண்டு சிராத்தங்கள் செய்ய
தேவையில்லை. ஒன்றை செய்தாலே ப்ரஸங்காத் மற்ற ஒன்றும் செய்ததாக ஆகிவிடும் என்பது.
நித்ய ஸோதகும்ப சிராத்தமும், நைமித்திக மாசிகமும் ஒரே நாளில் வந்தால் மாசிகம் மாத்திரம் செய்தால் போதும். ஸோதகும்பமும் செய்ததாகி விடும்.
ஆனால் ஒரே நாளில் பல நைமித்திக சிராத்தம் வரும் போது அவைகளை தனி தனி செய்ய வேண்டும், அவை ஒரே பித்ருக்களாக இருந்தாலும்.
அமாவாசை அன்று ஸோத கும்பம் வந்தால் முதலில் ஸோதகும்பம் செய்துவிட்டு பிறகு அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டும்.
மாசிகமும் அமாவாசையும் ஒன்று சேர்ந்தால் மாசிகம் செய்துவிட்டு பிறகு அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பெற்றோர்களின் வருஷ சிராத்தம் அமாவாசை அன்று வந்தால் முதலில் பெற்றோர் சிராத்தம் செய்துவிட்டு பிறகு அமாவாசை தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பெற்றோர்களின் வருஷ சிராத்தமும் மாத பிறப்பு தர்ப்பணமும் ஒரே நாளில் வந்தால் நைமித்தகமான மாத பிறப்பு தர்ப்பணம் முதலில் பிறகு சிராத்தம்.
மஹாளயமும் அமாவாசையும் ஒரே நாளில் வந்தால் முதலில் அமாவாசை தர்ப்பணம் பிறகு மஹாளயம்.
மன்வாதி, யுகாதி தர்ப்பணமும் பெற்றோர்களது சிராத்தமும் வந்தால் முதலில் மன்வாதி யுகாதி தர்ப்பணம் பிறகு வருஷ சிராத்தம் செய்ய வேண்டும்.
தாய், தந்தை இருவரில் ஒருவருக்கு மாசிகமும் மற்ற ஒருவருக்கு வருடாந்திர சிராத்தமும் ஒரே நாளில் வந்தால் முதலில் வருஷ சிராத்தம், பிறகு வேறு சமையல் செய்து மாசிகம் செய்ய வேண்டும்.
தாய் தந்தயர் இருவருக்கும் சிராத்தம் ஒரே நாளில் வந்தால் முதலில் தந்தைக்கு பிறகு தாய்க்கு.அதே நாளில் செய்ய வேண்டும்.
இங்கு யார் முதலில் இறந்தார்கள் என்பதை கவனிக்க வேண்டாம்.அன்னம், பாயசம் தவிர மற்றவைகளை ஒரே சமையலில் செய்யலாம்.
ஆனால் திதி த்வயத்தாலோ, தீட்டு முதலியவற்றால் நின்று போய் பிறகு ஒரே நாளில் செய்யும்படி நேரும் போது, தாய் தந்தை சிராதத்தை தனி தனி சமையலாக தான் செய்ய வேண்டும். முதலில் தந்தைக்கு, பிறகு தாய்க்கு சிராத்தம்.
அமாவாசை ( நித்திய கர்மா) மாத பிறப்பு ( நைமித்திகம்)
இரண்டும் ஒரே நாளில் வந்தால் இரன்டையும் செய்வது முக்கிய பக்ஷம்.
சக்தியற்றவர்கள் ஏதாவது ஒன்று செய்தாலும் போதும் .
இது கெளண பக்ஷம்.சக்தி அற்றவர்கள் மட்டும் தான் கெளண பக்ஷம் கடை பிடிக்க வேண்டும்.
சிராத்த நாளன்று இறப்பு தீட்டு அல்லது வ்ருத்தி தீட்டு வந்தால் 10 நாள் தீட்டில் 11 ஆவது நாளும், 3 நாள் தீட்டில் 4ஆவது நாளும் புண்யாவசனம் செய்து விட்டு,
விட்டு போன சிராத்தம் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு வருஷமும் பெற்றோர் இறந்த தமிழ் மாதம், பக்ஷ, திதியில் கட்டாயம் செய்ய வேண்டிய சிராத்தம் =ப்ரத்யாப்தீக சிரத்தம். இதை செய்யாமல் விவாஹம்,
உப நயனம் போன்ற சுப கார்யங்களும், நாந்தி, தீர்த்த சிராத்தம் போன்ற பித்ரு கார்யங்களும் செய்ய கூடாது என்பது சாஸ்திர விதி. இது நித்ய கர்மா.
ராமேஸ்வரம், ப்ரயாகை, காசி, கயா திருபுல்லானி போன்ற க்ஷேத்திரங்களுக்கு தீர்த்தம் என ஒரு பெயர்.
நமக்கு வசதி உள்ள போது, நாம் அங்கு செல்வதே தீர்த்த சிராத்தம் செய்ய வேண்டும் என்ற நோக்கதுடன் தான். ஆதலாலும் இது நைமித்திக கர்மா.
இந்த ஊர்களுக்கு ஒருவர் சென்றால், சென்ற உடனேயே தலை மொட்டை அடித்து கொண்டு, தீர்த்த சிராத்தம் தான் செய்ய வேண்டும் என்பது நியதி.
தீர்த்த சிராத்தம் 5 ப்ராஹ்மணர்களை வைத்துக்கொண்டு பார்வணமாகவோ, ஸங்கல்பமாகவோ செய்யலாம்.
ப்ரத்யாப்தீக சிராத்தம் 2 ப்ராஹ்மணர்கள் வைத்துகொண்டு பார்வணமாக தான் செய்ய வேண்டும்.
காசி, ராமேஸ்வரம் சென்றால் முதலில் ப்ரத்யாப்தீக சிராத்தம் செய்தால் நியதிபடி குற்றம்.
முதலில் தீர்த்த சிராத்தம் செய்யலாம் என்றால் ப்ரத்யாப்தீக சிராத்தம் செய்யாமல் தீர்த்த சிராத்தம் செய்ய முடியாது.
ஆகவே ப்ரத்யாப்தீக சிராத்தம், தீர்த்த சிராத்தம் ஆகிய இரண்டிற்கும் அன்யோயாஶ்ரயம் தோஷம் ஏற்படுகிறது.
ஆகவே அவரவர் வசிக்கும் ஊரிலேயே ப்ரத்யாப்தீக சிராத்தம் செய்து முடித்து விட்டு, காசி, ராமேஸ்வரம் சென்று தீர்த்த சிராத்தம் சிரத்தையுடன் செய்வதே சால சிறந்தது.