Post by radha on Jul 22, 2012 2:54:40 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
Source:-Tamil Brahmin Site-worship
பல இடங்களில் பயனைப் பெறுபவர் நேரிடையாக பெற்றுக்கொள்ளவர்
சில இடங்களில் பயனைப் பெறுபவர் ஒரு முகவர் மூலமாகப் பெற்றுக் கொள்வர்.
இங்கு,
ஆத்மாவின் பயனுக்காகத்தான் கர்த்தா கர்மா செய்கிறான் என்பது உண்மையானால்
சாஸ்திரம், சம்ப்ரதாயம் அனைத்தும் பொய்துப்போகும்.
சில இடங்களில் சாஸ்திரத்தை சத்யம் செய்வதற்காக, பயனாளர் இடத்தில் எம்பெருமான் இருந்து பெற்றுக்கொள்கிறான்.
ச்ராத்தத்தில் – ச்ராத்த பலனை தத்தம் செய்யும்போது சொல்லும் மந்திரம்
(ஊரறிந்த மந்திரம்) "ஏகோ விஷ்ணு: மஹத் பூதம் ப்ரதக் பூதானி அநேகஸஹ
த்ரீன்லோகான் வ்யாப்ய பூதாத்மா புங்கே விச்வபு: அவ்யய: …
அநேன மம பிது: … ச்ராத்நே ஆராதநேந பகவான்
விச்வேதேவ ஸ்வரூபி
பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹ ஸ்வரூபி
ப்ரத்யக்ஷ விஷ்ணு ஸ்வரூபி
ஸர்வாகார: பகவான் ஸதேவ: ஶ்ரீ ஜநார்தன: ப்ரீயதாம்
ஶ்ரீவிஷ்ணுபாதே தத்தம்"
சுமாரான ஸம்ஸ்கருதம் தெரிந்தவர்களுக்குக்கூட மேற்கண்ட மநத்திரத்தின் பொருள்
எளிமையாகப் புரியும்.
அதாவது:
இந்த என்னுடைய பிதாவின் ச்ராத்தத்தினால் ஆராதிக்கபடுபவன் விச்வேதேவ ரூபமாகவும்,
வசு, ருத்ர, ஆதித்யம் என்னும் பித்ருக்கள் ரூபமாகவும்,
ப்ரத்யக்ஷமாயுள்ள விஷ்ணு ரூபமாகவும்
மற்றும் (ஸர்வாகார எல்லா ரூபமாகவும் இருக்கக்கூடியவனான தேவனான
அந்த ஜகத்ரக்ஷகனான ஜநார்தனனுடைய ப்ரீக்காக இதை தத்தம் செய்கிறேன்
என்றே சொல்லி தத்தம் செய்கிறோம்.
காரணம் – உடம்பைவிட்டுப் பிரிந்த ஆத்மாவானது அதனுடைய கர்ம வினைகளுக்குத்
தக்கவாறும், ஆசார்ய ஸம்பந்தத்தைப் பொருத்தும் மறுபிறவியோ, ஸ்வர்காதி லோகங்களோ,
பித்ருலோகமோ, வைகுண்டமோ என – வெவ்வேறு இடங்களை
அடையக் கூடும்.
ஆனால் அது எந்த இடத்தை அடைந்தால் இதைச் செய்யலாம், எந்த இடத்தை அடைந்தால்
இதை விடலாம் என்று சாஸ்திரத்தில் குறிப்பிட நேரிட்டால் தற்போதுள்ளதைக் காட்டிலும்
பல ஆயிரம் மடங்கு குழப்பமே மிஞ்சும்.
எனவே,
உடலைவிட்டுப் பிரிந்தவன் எந்த கதிக்குப் போகிறான் என்பதை பற்றிய கவலையைக் கர்தா
கொள்ளத் தேவையில்லை, இடையில் நான் (பகவான்) இருந்து அதைப் பெற்றுக்கொண்டு
அவனுக்குக் கிடைக்கவேண்டிய பலனைத் தேவைப்பட்டால் கொடுக்கவேண்டிய இடத்தில்
தக்க விதத்தில் நான் கொடுத்துக்கொள்கிறேன் என்ற முறையில் சாஸ்திரத்தை பகவான்
ஏற்படுத்தியுள்ளான்.
உதாரணமாக: அர்ஜுனன் பாசுபதாஸ்திரத்தைப் பெற கைலாசம் சென்றபோது,
திடீரென்று எனக்குப் பசிக்கிறது உடனே நான் சிவபூஜை முடித்துவிட்டு சாப்பிட
வேண்டும், ஆனால் என்னிடம் சிவலிங்கம் இல்லை விட்டு வந்துவிட்டேன்
என்ன செய்வதென்று அர்ஜுனன் கேட்க, ‘சிவ பூஜையை எனக்கே செய்’ என்று
க்ருஷ்பரமாத்மா கூற, பிறகு, அந்த புஷ்பங்கள் சிவன் தலையில் இருக்க (அர்ஜுனன்)
கண்டான் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா.
ஆக, உடலை விட்டுப் பிரிந்தவர்கள் எந்த நிலையை அடைகிறார்கள், அவர்களுக்கு
பண்ணவேண்டுமா, பண்ணவேண்டாமா என்று ஆராய்ந்து செய்யும் தகுதியும், சுதந்திரமும்
நமக்கில்லை. பண்ணவேண்டும் என்று சாஸ்திரம் பகர்வதால் பண்ணவேண்டும்.
பித்ருக்களே அங்கிருந்து பெற்றுக்கொண்டால் ஏற்படும் மகிழ்சியைவிட,
பித்ருக்கள் வைகுண்டத்திற்குப் போய்விட்டார்கள், நாம் வழங்குவதை
எம்பெருமானே ஏற்றுக்கொள்கிறான் என்பதை உணர்ந்து நாம் முன்னைக்
காட்டிலும் ஆர்வமாக, ஈடுபாட்டுடன் அன்றோ செய்யவேண்டும்?!
இதுவரை கர்மாவை விடாமல் செய்யவேண்டும் என்பதை விளக்கினேன்.
தற்போது ஒருவருடம் பண்டிகைகளை ஏன் பண்ணக்கூடாது என்ற விபரத்திற்கு வருவோம்:
முன் பார்த்தபடி ஆத்மா வைகுண்டம் சென்றதால் பண்டிகை கொண்டாடடலாம் என்பதே
தர்க்க (லாஜிக்) ரீதியான பதில்.
ஆனால் மேலும் அளித்துள்ள விளக்கப்படி, ஆத்மாவுக்கும், கர்தாவுக்கும் தொடர்புபடுத்தக்கூடாது,
சாஸ்திரம் விதித்த கடைமையைச் செய்யவேண்டும் என்பதே தீர்வு.
எனவே, கர்மாவைச் செய்யும் கர்த்தா மாத்திரம், கடமைக்காக ஒரு வருடம் பண்டிகைகளைக்
கொண்டாடாமல் மாஸ்யாதிகளைச் சிரத்தையாகக் செய்யவேண்டும்.
மேலும், பண்டிகைக்களைக் கொண்டாடலாம் என்று கூறிவிட்டால், மக்கள் (கர்தாக்கள்)
மாயையின் தாக்கத்தால், பண்டிகைகளுக்கு முக்கியத்துவம் அளிப்ரே அன்றி, கர்மாக்களுக்கு
முக்கியத்துவம் அளிக்கமாட்டார்கள்.
எனவேதான், மீண்டும், மீண்டும், மீண்டும் கர்மா செய்யவேண்டியதின் அவசியத்தையே வலியுறுத்தி
மற்ற அனைத்தையும் தவிர்க்கும்படி சாஸ்திரம் மூலமாக பகவான் எதிர்பார்கிறார்.
Kanchi Maha Periva Thiruvadigal Saranam