Post by Kanchi Periva on Jul 21, 2012 12:40:41 GMT 5.5
ஆவணி அவிட்டம் (இயற்றியவர் ஸ்ரீ சர்மா சாஸ்திரிகள் )
ஆவணி அவிட்டம் என்ற உடனே புது பூணூல் மாற்றி கொள்வது என்றுதான் நம்மில் பலர் நினைத்து கொண்டிருக்கலாம். ஓரளவிற்கு இதில் உண்மை இருந்தாலும், உபகர்மா என்றும் அழைக்கப்படுகின்ற இந்த அருமையான பண்டிகை பல அபூர்வமான வேதோக்த அங்கங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
ஆவணி அவிட்டத்தில் அடங்கியுள்ள முக்கியமான அங்கங்கள்:
* காமோகார்ஷீத் ஜபம்
* பிரம்ம யக்ஞம்
* மகா சங்கல்பம்
* யஜ்நோபவீத தாரணம்
* காண்டரிஷி தர்ப்பணம்
* காண்டரிஷி ஹோமம்
* ஆச்சார்ய சம்பாவனை
தலை ஆவணி அவிட்டம்:
தலை ஆவணி அவிட்டம் நடத்திக் கொள்பவர்களுக்கு மேலே குறிப்பிட்டவைகளைத் தவிர மேலும் சில சடங்குகள் உண்டு. இதில் நாந்தி ஸ்ராத்தமும் அடங்கும். சாஸ்திரிகளிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டால் அவர் கவனித்துக்கொள்வார்.
பூணூலைப் பற்றி..:
* பிரமச்சாரி ஒன்று.
* க்ரஹஸ்தர் இரண்டு. சிலர் மூன்றும் அணிந்துக்கொள்ளும் சம்ப்ரதாயம் உண்டு. த்ருதீய வஸ்த்ரத்திற்கு பதிலாக இந்த மூன்றாவது பூணூல்.
* பூணூல் நமது நாபிற்கு கீழே தொங்காமல் இருக்க வேண்டும்.
* பூணூலில் சாவி, டாலர், பின் முதலியவைகளை முடிந்துக் கொள்வதை நாம் சிலரிடம் பார்க்கின்றோம். இதை தவிர்க்கவேண்டும்.
* காரணமேதுமில்லாமல் பூணூலை மாற்றிக்கொள்ளக் கூடாது.
* ஆவணி அவிட்டம், கல்யாணம், க்ருஹப்பிரவேசம், விசேஷ ஹோமங்கள், ஸ்ராத்த கார்யங்கள் போன்றவைகளில் அன்று கர்மா துவங்குவதற்கு முன்பு புது பூணூல் மாற்றிக்கொள்ள வேண்டும்.
* தீட்டு ஏற்ப்பட்டால், அது கழிந்தவுடன் புதிது போட்டுக்கொள்ளவேண்டும்.
* அறுந்து போனாலோ, மிகவும் அழுக்காகி சிக்கலாகி போனாலோ புது பூணூல் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது நியதி.
ஸந்த்யாவந்தனம்:
உபநயனம் ஆன பிறகு எல்லோரும் ஸந்த்யாவந்தனம் செய்துதான் ஆக வேண்டும்.
"ஸந்த்யாவந்தனம் செய்யாதவன் அசுத்தமானவன் , அவன் எந்தக் கர்மாவும் செய்யத் தகுதியற்றவன்" என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது.
எல்லா கர்மாக்களுக்கும் ஆணி வேர் போன்றது ஸந்த்யாவந்தனம். "நேரமில்லை' என்று கூறுபவர்கள் குறைந்தது இதில் ஜீவ நாடியாக விளங்கும் அர்க்கியம், பிராணாயாமம், மார்ஜனம், பிராசனம், காயத்ரி ஜபம் போன்ற பக்திகளையாவது செய்யலாமே!
இதை செய்வதற்கு சுமார் 15 நிமிடங்கள் போதுமானது. இவற்றைக் கற்றுக் கொள்வதற்கும் மிகவும் எளிது.
இதைத் தொடர்ந்து செய்து வந்தால் போகப் போக ஆர்வம் ஏற்பட்டு ஸந்த்யாவந்தனத்தை முழுமையாக செய்ய ச்ரத்தை நமக்கு நிச்சயம் தோன்றும்.
ஒன்றை நாம் நன்கு புரிந்துக் கொள்வோம். ஒரு பிரதான அடிப்படை கர்மா. ஆணி வேர்.
ஸந்த்யாவந்தனம் - சிறப்புகள்
ஸந்த்யாவந்தனம்
- ஒரு உபாசன முறை
- ஒரு யோகா சாதன முறை
- ஒரு தின முறை
- ஆத்ம சாதனத்திற்கு ஒரு வழி.
- ஆரோக்யத்தை தருவது
- ஐஸ்வர்யத்தை தருவது
- உலக நன்மைக்கு பிரார்த்தனை
- நமக்கு நித்ய கர்மா