Post by kgopalan90 on May 5, 2020 15:20:03 GMT 5.5
ஒருவர் இறந்த பின் செய்ய பட வேண்டிய காரியங்கள்.
பலர் அசுப காரியங்கள் பற்றி பேசுவது, தெரிந்து கொள்வது கூட தவறாக நினைக்கிறார்கள். எவரும் இதை பற்றி தெரியாமல், தப்பித்து கொள்ள முடியாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பிண ஊர்தி ஓட்டுபவர்கள். பிணம் தூக்கி கொண்டு செல்பவர்கள், இதை செய்து வைக்கும் வாத்யார்கள் இல்லங்களில் அவர்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் நன்றாக தான் இருக்கிறார்கள்.
ஒருவர் தக்ஷிணாயனத்தில், க்ருஷ்ண பக்ஷத்தில், இரவில் இறந்தால் இவை ஒவ்வொன்றிர்க்கும் ப்ராயசித்தம் செய்தாக வேண்டும். ஒருவர் உத்திராயணத்தில், சுக்ல பக்ஷத்தில், பகலில் இறந்தால் ப்ராயசித்த ஹோமம் கிடையாது.
பர்யுஷிதம்=பழையதானது இறந்த 6 மணி நேரத்திற்கு பிறகு தஹனம் செய்ய வேண்டுமானால் பர்யுஷித ஹோமம் மாத்திரம் செய்தால் போதும். இறந்த 4 மணி நேரத்திற்குள் தஹனம் செய்தால் பர்யுஷித ஹோமமும் தேவை யில்லை.
இந்த விஷயம் தெரியாமல் என் அப்பாவிற்கு எங்காத்து வாத்தியார் நிறைய ஹோமம் செய்தார். உங்கள் வீட்டில் உங்கள் வாத்தியார் ஹோமம் ஒன்று மட்டும் செய்து ஏமாற்றி விட்டார் என்று பேசுகிறார்கள். மற்றும் சிலர் உண்மையில் இவ்வளவு காரியம் உள்ளதா அல்லது வாத்தியார் ஏமாற்றுகிறாரா தெரியவில்லை எங்கிறார்கள்.
இம்மாதிரி விவரமாக எழுதி கொடுத்தாலும் படிப்பது இல்லை. முன்னதாக தெரிந்து கொள்வதில் எந்த தவறுமில்லை.
கர்ண மந்திரம் சொல்ல வேண்டும். பிறகு தஹனத்திற்கு வேண்டிய சாமாங்கள், ஆதார் கார்டு ஜெராக்ஸ் காப்பி, மருத்துவ சான்று, ஆஸ்பத்திரி யில் இறந்தால் எல்லாம் அவர்களே கொடுத்து விடுவார்கள். அதை ஜெரொக்ஸ் காப்பி எடுத்து கொண்டு செல்ல வேண்டும்.
ஒரிஜனலும் கையில் எடுத்து சென்று தஹனம் செய்யுமிடத்தில் காண்பித்து அங்கு தஹனம் செய்ய பணம் கட்ட வேன்டும். பிறகு ஸஞ்சயனம், பிறகு தடாக தீரம், கிருஹ த்வாரம் என இரு இடங்களில் குண்டம் அமைத்து ஆன்மாவை கல்லில் ஆவாஹனம் செய்ய வேண்டும்.
பிறகு நக்ன சிராத்தம் நித்ய விதி; ஏகோத்திர விருத்தி சிராத்தம், நவ சிராத்தம், பத்தாம் நாள் பங்காளி தர்ப்பணம், க்ஷவரம், ப்ரபூத பலி,பாஷான உத்தாபனம், உயிருடன் இருக்கும் மனைவிக்கு கணவன் இறந்த பத்தாம் நாள் புடவை சாற்றுதல். சாந்தி ஆனந்த ஹோமம். அப்பம், பொரி ஓதி யிடுதல், சரம ஸ்லோகம் வாசித்தல்.
வ்ருஷப உத்ஸர்ஜனம், ஏகாதச ப்ராஹ்மண போஜனம், ஆத்ய மாசிகம், ஆவ்ருத் தாத்ய மாசிகம், ஹோமம், சபிண்டீகரணம்; ஆத்ய சோதகும்பம்; தானங்கள், ஐயங்கார்களுக்கு சேவா காலம். வேத ப்ரபந்த பாராயணங்கள். சேவை, சாற்று முறை. உபன்யாசம் ஐயங்கார்களுக்கு, உதக சாந்தி, நவ கிரஹ ஹோமம். ஸோதகும்பம், மாசிகம், ஊனம் ஒரு வருடத்திற்கு நாள் குறித்தல்.
பெண்கள் கசப்பு எண்ணய் தேய்த்து குளித்தல் ;பத்திய சாப்பாடு, அவரவர் ஊருக்கு கிளம்புதல்.
நக்ன சிராத்தம்:- இறந்தவர்களுக்கு ஏற்படும் ஐந்து விதமான பாதிப்புகளிலிருந்து விடுபட செய்ய படுகிறது.
நித்ய விதி:- கல்லில் ஆவாஹனம் செய்ய பட்ட ஆன்மாவிற்கு தினமும் ஆகாரம் வாஸ உதகம். தில உதகம்.பிண்டங்கள் போடுவது.
ஏகோத்திர வ்ருத்தி சிராத்தம்:-பத்தாம் நாள் வரை தினமும் செய்ய வேண்டிய சிராத்தம்.
நவ சிராத்தம்:- 11 ம் நாள் வரை ஒற்றை படை நாட்களில் செய்ய வேண்டிய சிராத்தம். 1,3,5,7,9,11 நாட்களில் செய்ய வேண்டும்.
பாஷான உத்தாபனம்:- ஆன்மாவை யதா ஸ்தானம் செய்து கல்லை எடுப்பது.
தஹனம்:- இறந்தவருக்கு செய்ய படும் முதல் நாள் கிரியை. மரணத்தால் ஆன்மாவை விட்டு பிறிந்த சரீரத்திற்கு செய்ய படும் கர்மா.
அக்னி நிர்னயம்:- ப்ரேதாக்னி, உத்தபனாக்னி,கபாலாக்னி,பைத்ரு மேதித ப்ராயசித்த ஹோமங்கள்;
தஹனம் செய்ய சுடுகாடு அல்லது நகரமானால் எலக்ட்ரிக் கிரிமடோரியம் சென்று பணம் கட்டி இறப்பு சான்றிதழ் , ஆங்கிலத்திலும், தமிழிலும் பெற்று கொள்ள வேண்டி இருக்கிறது. தமிழ் நாட்டில்.
உதல் நாள் தேவையான சாமாங்கள்:- ஆஸந்தி (பாடை) பச்சை மூங்கில் ஒன்பது அடி நீளத்தில் இரண்டு, பச்சை தென்னங்கீற்று இரண்டு, குறுக்கு கொம்புகள் 12; கப்பானி கயிறு 2 முடி; நெல் பொறி 100 கிராம்; நெய் 200 கிராம்; கருப்பு எள்ளு 50 கிராம்; கற்பூரம் 4 கட்டி; தீபெட்டி 1;
வெற்றிலை 12; பாக்கு 6; பழம் 2; புஷ்பம் 2 முழம்; கரை இல்லாத வெள்ளை மல் 2 மீட்டர்; சுமங்கலி ஆனால் சிவப்பு துணி 2 மீட்டர்; விராட்டி 8; சுள்ளி 12; அத்தி இலை ஒரு கொத்து; மண் பானை மீடியம் சைஸ்-1; பெரிய மண் மடக்கு 2; சிறிய மடக்கு-4;
இரண்டு பழைய துண்டுகள் அல்லது டவல். சந்தன கட்டை-1. சுடு காடு என்றால் சவுக்கு கட்டை, வெட்டியானுக்கு பணம், விராட்டியும் அதிகம் வேன்டும். வாய்க்கரிசி போட அரிசி, 500 கிராம்;
ஆஸ்பத்திரியில் மரணம் என்றால் அவர்களே வீட்டிற்கு ப்ரீஸர் பெட்டி வைத்து அனுப்பு கிறார்கள். இக்காலத்தில் வெளி நாட்டிலிருந்து இங்கு கர்த்தா வர மூன்று நாட்கள் ஆகிறது. கர்த்தாவின் சகோதரர் இங்கு இருந்தால் சகோதரர் தஹனம் செய்து விட வேண்டும்.
வீட்டில் மரணம் என்றால் கர்த்தாவும் இங்கே இருந்தால் கர்ண மந்திரம் ஜபம் செய்யலாம்.
உடலை குளிப்பாட்ட வேண்டும். இந்த தண்ணீர் வெளியே ஒடி விட வேண்டும். அம்மாதிரி உள்ள இடத்தில் உடலை தெற்கு பக்கம் தலை வைத்து வைக்க வேண்டும்.
தெற்கு நோக்கி தீபம் ஏற்றி வைக்க வேண்டும். தர்ப்பம் வீட்டில் இருந்தால் உடலுக்கு அடியில் வைக்கலாம். துளசி இலையும் கங்கை ஜலமும் பக்கத்தில் வைக்க வேன்டும்.
அந்த காலத்தில் ரேழியில் உடலை வைப்பார்கள். குளிப்பாட்டும் தண்ணீர் வாசலுக்கு ஓடி விடும்.
உயிர் பிறிய போவது தெரிந்தால் பூஜை அறை அல்லது பூஜை அலமாரியில் இருந்து கங்கை தண்ணீர், தர்ப்பம் எடுத்து வைத்து கொண்டு, பூஜை அறை விளக்கையும் அனைத்து விட்டு கதவை சாற்றி வைக்க வேண்டும்.
கர்த்தாவிற்கு ஒன்பது ஐந்து வேட்டிகளும், ஒன்பது கஜ புடவை, உள்ளாடைகள் கர்த்தாவின் மனைவிக்கும் பீரோவிலிருந்து எடுத்து வைத்து கொண்டு பிரோவை மூடி விடவும். வாத்தியாருக்கு சொல்லி அனுப்பவும். தானம் கொடுக்க மணி, தீபம், பித்தளை சொம்பு இத்யாதிகள் எடுத்து வைத்து கொள்ளவும்.
நகரத்தில் எலக்டிரிக் கிரிமடோரியத்தில் தஹனம் ஆன ஒரு மணி நேரத்தில் ஒரு மண் பானையில் அவர்களே எலும்பும் சாம்பலும் கொடுத்து விடுகிறார்கள். அதை வாங்கி கொண்டு நேரே ஸமுத்திரத்திற்கோ அல்லது ஆற்றிர்கோ சென்று அங்கு போட்டு விட்டு குளித்து விட்டு வீட்டிற்கு வந்து விடலாம்.
இங்கு வந்து பாஷாண ஸ்தாபனம் செய்து விடலாம். தற்காலத்தில் பல செளகரியங்களை உத்தேசித்து 3,5,7,9 ம் நாள் தான் பாசாண ஸ்தாபனம் செய்கிறார்கள். தாய் தந்தை காரியம் ஆரம்பிக்க ஒற்றைபடை நாள் பார்க்க தேவையில்லை.
பிள்ளை இல்லாதவர்கள் கணவனுக்கு மனைவி செய்வதாயின் எந்த ஒரு ஆணிடம் வேன்டுமானாலும் பில் கொடுத்து பண்ண சொல்லலாம். பங்காளிகளாக இருப்பின் ப்ராசீனா வீத துடன் செய்யலாம்.
என்று ஆரம்பித்தாலும் தேவையான சாமான் கள்:- நக்னத்திற்கு வெங்கல பானை, சிப்பல், கரண்டி
விளக்கு, குள பாத்திரம், பத்தாறு வேஷ்டி ஒரு ஜோடி; அரிசி, வாழைக்காய், சொம்பு, பயற்றம் பருப்பு, வெல்லம், வெற்றிலை பாக்கு, தக்ஷிணை.
செங்கல்லால் கட்ட பட்ட குண்டம்-2; அல்லது பூந்தொட்டி 2; கிருஹ த்வார குண்டத்தில் கட்ட ஓலை, மண் பானை, தீப்பெட்டி, திரி நூல், எண்ணைய்; காஸ் அடுப்பு அல்லது குமுட்டி, கரி,
நாள் ஒன்றுக்கு 50 கிராம் அரிசி போட்டு பொங்கிய சாதம் கொண்டு ஒரு பெரிய பிண்டமும், ஒரு சிறிய பிண்டமும் தேவை. தினமும் இள நீர்-1; வெல்லம், எள்ளு, நெய், தயிர், சிறிதளவு தொன்னயில் எடுத்து வைத்து கொள்ளவும்.
பத்து நாட்களுக்கு குண்டம் கார் ஷெட்டில் வைத்து கொள்ளலாம். இல்லாவிட்டால் சிட் ஔட் அல்லது பின்புறம் தென்னை மரம் இருந்தால் அதன் அடியிலும் வைத்து கொள்ளலாம். இறந்தவரின் பெண் அல்லது மருமகள் ஸ் நானம் செய்துவிட்டு சொட்ட சொட்ட ஈரத்துடன் குமுட்டி அடுப்பு மூட்டி பிண்டம் தயாரித்து கொடுத்து விட்டு அந்த அடுப்பையும் பாத்திரங்களையும் தேய்த்து அலம்பி அங்கேயே வைக்க வேண்டும்.
மறுபடியும் ஸ்நானம் செய்து விட்டு தான் வீட்டிற்குள் செல்ல வேண்டும். ஒரு விளக்கு அங்கு பத்து நாட்களும் 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்க வேன்டும். நாய், பூனை எதுவும் அங்கு வராமல் பார்த்து கொள்ள வேண்டும்.கிரஹ த்வார் குன்டத்தின் மேலே இறந்தவரின் பழைய வேட்டியோ, புடவையோ போட்டு வைக்க வேண்டும்.
ஏகோத்திர வ்ருத்தி சிராத்தத்திற்கு முதல் நாள் முதல் அல்லது ஆரம்ப நாள் முதல் அரிசி, வாழைக்காய்; சேம்பு, வெல்லம், பயற்றம் பருப்பு, வெற்றிலை பாக்கு தக்ஷிணை , வாத்தியார், அசிஸ்டென்ட் வாத்தியார் தக்ஷிணை தர வேண்டும். பழைய ப்லாஸ்டிக் கேரி பேக்குகளில் போட்டு கொடுக்கலாம்.