Post by kgopalan90 on Mar 7, 2020 2:54:36 GMT 5.5
இதன் பின்னர் பரத்வா முஞ்சாமி என்ற மந்திரங்களை கூறி கன்னிகையின் இடுப்பில் முன்பு கட்ட பட்ட தர்ப்பை கயிற்றை அவிழ்த்து
மேற்கு திக்கில் வைத்து கை அலம்பனும்.
பொருள்:- ஓ பெண்ணே இந்த தர்பை கயிற்றின் மூலமாக ஸவிதா உன்னை வருண பாசத்தினால் கட்டினார்.இதை அவிழ்பதின் மூலமாக அந்த
பாசத்திலிருந்து உன்னை விடுவிக்கிறேன். இருவரும் இவ்வுலகில் சுகமாக வாழ்ந்து , நல்ல புண்ய கர்மாக்களை செய்து ப்ருஹ்ம லோகம்
செல்வோம். என்பதாகும்.
லாஜ ஹோமம் முடிந்த பிறகு பொரி இட்ட சகோதரனுக்கு, அவரவர் வசதிப்படி தாம்பூல த்துடன், பணமோ, மோதிரம் அல்லது வஸ்திரம் கொடுக்க வேண்டும்.
பிள்ளை வீட்டை சேர்ந்தவர் மரியாதை செய்ய வேண்டும். பொரி இட்ட சகோதரனுக்கு.
இப்போது சம்பந்தி மரியாதையும் செய்யலாம்.
பெண் வீட்டு சம்பந்திக்கு பிள்ளை வீட்டினரும், பிள்ளை வீட்டு சம்பந்திக்கு பெண் வீட்டினரும்.
தாம்பூலம், சந்தனம்,குங்குமம், புஷ்பம்,பழம், புடவை, வேஷ்டி, சக்கரை கல்கண்டு கொடுப்பது வழக்கம். சம்பாவனையும் கொடுக்கலாம்.
ப்ரவேஸ ஹோமம்;-
ப்ரவேச என்றால் நுழைதல் என்று பொருள்.
அதாவது மணமகள் முதன் முதலாக தனது கணவன் வீட்டில் நுழைந்து அங்கு செய்ய பட வேண்டிய ஹோமம்.
விவாஹம் முடிந்ததுமே, பிள்ளை, பெண் இருவரும் பலகாரமாக ஏதாவது சாப்பிட்டு விட்டு,
பிள்ளை வீட்டிற்கு வந்த பின்னர், இதை செய்வார்கள். ஆனால் இப்போது பிள்ளை தங்கி இருக்கும் கல்யாண மண்டப அறையிலேயே செய்கிறார்கள்.
பிள்ளை தங்கி இருக்கும் இடத்திலேயே பெண்ணையும், பிள்ளையையும் அழைத்து வந்து
கிரஹ ப்ரவேசம் என செய்து, கோல மிட்ட இடத்தில் பட்டு பாயில் கிழக்கு முகமாக உட்
கார வைத்து பாலும் பழமும் கொடுத்து, சிலர் எள்ளூம், வெல்லமும் கொடுக்கின்றனர். பெண்ணுக்கு புடவை, பிள்ளைக்கு உடை என ஓதி கொடுத்து,பிள்ளை வீட்டினர், பெண் வீட்டினரை
உபசரித்து பானகம், கொடுத்து, தாம்பூலம்,பழம், புஷ்பம், சந்தனம் குங்குமம் கொடுத்து ஏதாவது பணம் வைத்து கொடுப்பார்கள்.
இந்த சமயத்தில் பெண் வீட்டினர் ஒரு ஜோடி பருப்பு தேங்காய் கொண்டு வந்து வைக்க வேணும். இம்மாதிரி செய்த பிறகு ஹோமம் செய்ய பழைய இடத்திகு வர வேண்டும்.
அதன் படி மணமகன், மணமகள், இருவரும் பட்டு பாயில் வந்து அமர வேண்டும். பதி மூன்று மந்திரங்கள் சொல்லி, பதிமூன்று ஆஹூதிகள்
செய்ய வேண்டும். ஹோம மந்திரத்தின் பொருள்.
என் மனைவி சொர்கத்தை அடைவிக்கும் நல்ல சந்ததியுடன் செல்வங்கள் உடையவளாக இருக்கட்டும்.இந்த அக்னி தேவன் வீட்டை ரக்ஷிப் பவர்.
எங்களுக்கு செல்வத்தையும், வளர்ச்சியையும் கொடுத்தருள வேண்டும். நாங்கள் இருவரும் இந்த வீட்டில் பிரியாமல் சேர்ந்திருக்க வேண்டும்.
நீண்ட ஆயுளை பெற வேண்டும்.இப்படியான எல்லா நலங்களையும் அளிப்பீராக.
பிறகு மனைவியை பார்த்து இந்த வீட்டில், உனக்கு, ஸந்ததி ,சம்பத்துக்களால் ஆனந்தம்
உண்டாகும்படி தேவர்கள் அருள் புரியட்டும்.வீட்டிற்கு யஜமானியாக இரு.
ஜாக்கிரதையாக இருந்து, உடலை ரக்ஷித்து ஸுகத்தை அனுபவி. என்றும் பொருள் கொண்ட மந்திரங்கள் கூறபடுகின்றன.
ப்ரவேஸ ஹோமம் முடிந்த பிறகு அருந்ததி யையும், துருவனையும் பார்க்க வேண்டும்.
நக்ஷதிரங்கள் உதிக்கும் வரை மெளனமாயிருந்து
உதித்த பின் கிழக்கு நோக்கியோ, வடக்கு நோக்கியோ வெளியே சென்று த்ருவக்ஷிதி த்ருவ யோனி என்ற இரு மந்திரங்கள் சொல்லி அடையாளங்கினால் துருவ நக்ஷத்திரத்தையும்,
அருந்ததி நக்ஷத்திரத்தையும் பார்க்க வேண்டும்.
இவர்களது தாம்பத்ய வாழ்க்கை துருவ நக்ஷத்திரம் போல் நிலை பிறழாதவாறும் ,தருமத்திலிருந்து வழுவாததாக இருக்க வேண்டும். என பொருள்.
ஆக்னேய ஸ்தாலி பாகம்.
தேவர்களுக்கு அக்னியே முகம். அவர் மூலமாக மந்திரங்களை கூறி ஹோமம் செய்தால் தான் தேவர்களிடம் ஹவிஸ்ஸை சேர்க்க இயலும்.
இந்த அக்னியும் சாதாரண தீயாக இல்லாமல், விதிப்படி ப்ரதிஷ்டை செய்தால் தான் தேவர்களிடம் ஹவிஸ்ஸை சேர்க்க இயலும்.
விவாஹத்திற்கான அக்னியிலேயே ஒரு சிறிய பாத்திரத்தில், சிறிது அரிசியை எடுத்து இரண்டு மூன்று முறை நீர் விட்டு கலைந்து வைத்து ,அது நன்றாக வெந்து
சாதமானபின் , அதை அக்னியில் இட்டு ஹோமம் செய்வதே ஸ்தாலீ பாகம் எனப்படும்.
ஆக்னேய என்றால் அக்னியை ஆராதித்து என்று பொருள்.
விவாஹம் செய்து கொன்ட பெண்ணுடன் முதலில் சங்கல்பம் செய்து கொண்டு, மணப்பெண்
அரிசி குத்துவது போல் பாவனை செய்து, அரிசியை மூன்று முறை கலைந்து, அந்த விவாஹ அக்னியில் தண்ணீரையும்,
அரிசியையும் கொதிக்க விட வேண்டும். அரிசி நன்றாக வெந்து சாதமான பின், வடக்கு அல்லது கிழக்கு முகமாக இறக்கி,அதில் சிறிது நெய்யை விட்டு வைக்க வேண்டும்.
பொரச இலையில் அபிகாரம் செய்து ( சிறிது நெய் விட்டு) அந்த அன்னத்தை இரண்டு முறை எடுத்து வைத்து ,இந்த இலையின் அன்னத்தின்
மீதும் நெய் விட்டு, பாத்திரத்தில் மீதியுள்ள அன்னத்தின் மீதும், ஒவ்வொரு முறை அபிகாரம் செய்ய வேண்டும்.
பிள்ளை வீட்டார் ஸ்ரீ வத்ஸ கோத்திரமாக இருந்தால் மூன்று முறை அன்னம் எடுத்து வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதற்கு அவதானம் என்று பெயர்.
பாத்திரத்தின் நடுவில் இருந்து ஒர் முறையும்,
கிழக்கிலிருந்து இரண்டாவது முறையும், மேற்கிலிருந்து மூன்றாவது முறையும் என்றபடி அவதானம் செய்ய வேண்டும்.ஒவ்வொரு
முறையும், நமது கட்டை விரலின் முதல் கோடு அளவிற்கு அன்னம் எடுக்க வேண்டும். அதிகமாக வோ குறைவாகவோ எடுக்க கூடாது.
அன்ன பாத்திரத்தை இடது கையால் பிடித்து கொண்டு, அக்னயே ஸ்வாஹா என்று முதல் ஹோமம் செய்து, அக்னயே இதம் ந மம என்று சொல்ல வேண்டும்.
பின்னர் பொரச இலையில் அபிகாரம் செய்து , அன்ன பாத்திரத்தின் வடக்கு பகுதியிருந்து,முன்பு எடுத்த அளவை விட சிறிது அதிகம் ஒரு முறை
எடுத்து. ( ஸ்ரீ வத்ஸம் என்றால் இரண்டு முறை ) அன்னத்தை எடுத்து வைத்து அபிகாரம் இரண்டு முறை செய்து , முன் போல் அன்ன பாத்திரத்தை
இடது கரத்தால் தொட்டு கொண்டு உறக்க அக்னயே ஸ்வஷ்ட க்ருதே ஸ்வாஹா என்று அக்னியில் வடகிழக்கே ஹோமம் செய்யனும்.
பின்னர் அக்னியின் வடக்கு பகுதியில் அக்னியை தூண்டி விட்டுஅதில் இரண்டு பொரச இலைகளினாலும் நெய்யை எடுத்து,ஒரே
சமயத்தில் ஸ்வாஹா என்று சொல்லி ஹோமம் செய்ய வேண்டும். இங்கே 33 தேவதைகள் ஆராதிக்க படுகிறார்கள்.இதுதான் ஸ்தாலி பாகம்.
ஒளபாஸனம்.:-
ஒருவனுக்கு உப நயனம் ஆன பிறகு தினமும் இரு வேளையும் ஸமிதா தானம் மிக முக்கியம்.
விவாஹ மான பிறகு தினமும் இரு வேளை ஒளபாஸனம் முக்கிய மாகிறது. காலையில்
ஸூரியனை குறித்தும், மாலையில் அக்னியை குறித்தும் பச்சை அரிசியினால் செய்ய படும் ஹோமமே ஒளபாஸனம் எனப்படும்.
தம்பதிகள் ஜீவித்திருக்கும் வரை தினந்தோறும் இரு வேளை ஆராதிக்க வேண்டும்.
அக்னி ஹோத்ரி எனப்படுபவர்கள், தமது இல்லங்களில் ஒரு சிறிய பானையில் இந்த
அக்னி அணையாமல் வைத்திருந்து , தினமும் காலையில் இந்த அக்னியை மூட்டி,அக்ஷதையை போட்டு ஒளபாஸனம் செய்வது வழக்கம்.
ஆடவர் வெளியூர் சென்றாலும் இதை வீட்டு பெண்டிர்களும் மந்திரம் இல்லாமல் செய்யலாம்.
அக்னி தேவனுக்கு உண்ண உணவு அளிப்பதே ஒளபாஸனம். கடவுளுக்கு உண்ணும் உணவு வகை களை தினமும் நைவேத்யம் செய்து பகவானுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்.
நன்கு களைந்து ஈரமில்லாத அக்ஷதையை, கையில் எடுத்து கொண்டு, அதை இரண்டாக பிறித்து , இடது கையில் சிறிது அதிகம் எடுத்து கொண்டு,வலது கை நுனியால் அக்னயே ஸ்வாஹா என ஹோமம் செய்ய வேண்டும்.
அக்னய இதம் நமம என்று கூறிய பின் , இடது கரத்தில் உள்ளதை வலது கரத்தில் மாற்றி கொண்டு,
அக்னயே ஸ்வஷ்ட க்ருதே ஸ்வாஹா என உறக்க கூறி வட கிழக்கில் ஹோமம் செய்ய வேண்டும்.
அக்னியே எங்கள் செயலால் உண்டான செல்வத்தை அனுபவிப்பதற்கு நல்ல மார்கத்தில் எங்களை அழைத்து செல்வீர்களாக. எங்களது எல்ல எண்ணங்களையும் நீங்கள் அறிவீர்,
மறைந்திருந்து கெடுக்கும் பாவத்தை நாசம் செய்ய கூடியவர். நமஸ்காரங்களை வெகுவாக சமர்ப்பித்து உம்மை பூஜிகிறோம்.
இந்த ஒளபாஸன கர்மா நன்கு அனுஷ்டிக்க பட்டதாக அமைவதற்காக அநாக்ஞாதாதி மந்திர ஜபமும் ஜபிக்க படுகிறது.
இதன் பொருள்;- ஓ அக்னியே உமது பூஜையான யக்ஞத்திற்கு எவ்வளவு அங்கங்கள் என அறிய மாட்டோம். தெரிந்தோ தெரியாமலோ தவறுதலாக
நாங்கள் ஏதாவது செய்திருந்தால் அவற்றை எல்லாம் ஒழுங்காக்கி பூர்ண பலனை தரும் படி செய்வீராக.குழந்தைகளை பெரியவர் ரக்ஷிப்பது
போல் தாங்கள் எங்களை ரக்ஷிக்க வேண்டும். நாங்கள் அறியாமல் விட்டதெல்லாம் தாங்கள் அறிவீர்.
அந்தந்த தேவர்களை அழைத்து, அந்தந்த காலத்தில், அவரவர்களுக்கு ஏற்றபடி தாங்கள் தான் பூஜை செய்து எங்களுக்கு பலனை தர வேண்டும். என்ற அர்த்தத்தில் மந்திரம் உள்ளது.
மஹா விஷ்ணு த்ரிவிக்கிரம அவதாரம் எடுத்து தமது திருவடிகளால் உலகை அளந்தார். அவரது பாதத்தினால் கர்ம பூமி புண்ணியமாகி கர்மா விற்கு ஏற்ற இடமாகவும் ஆயிற்று.
அவரது திருவடி ஸ்மரணத்தினால் எல்லா வித தோஷமு மகன்று புண்ணியமேற்படும். ஆகையினால் ஒவ்வொரு வைதீக கார்யத்திலும்,
ஹோமத்திலும், ஜபத்திலும்,இதம் விஷ்ணு விச க்ரமே த்ரேதா நிததே பதம் ஸமூடமஸ்ய பாகும் ஸுரே என்ற மந்திரம் சொல்லபடுகிறது.
ஒளபாஸனம் பகலில் ஸூரியனை குறித்தும், மாலையில் அக்னியை குறித்தும் செய்ய படுகிறது.
கந்தர்வ பூஜை;-
ஒளபாஸனம் ஆனதும் கந்தர்வ பூஜை செய்ய படுகிறது. ஒரு அரசு,ஆல்,அத்தி இதில் ஏதோ ஒன்று வகையை சேர்ந்த ஒரு சமித்து எடுத்து
சந்தனம் பூசி, மணமகன் வேஷ்டியிலிருது ஒரு நூல் எடுத்து, மனமகள் புடவையிலிருந்து ஒரு நூல் எடுத்து இதை சமித்தில் சுற்றி, புஷ்பம் சேர்த்து அலங்காரம் செய்து, அதில் விசுவாவசு
என்னும் கந்தர்வனை ஆவாஹனம் செய்து பூஜை செய்வார்கள்.இந்த கன்னி பெண்ணை இது வரை காத்து வந்த கந்தர்வனுக்கு நன்றி செலுத்தி, வழி அனுப்பி வைப்பதாக இந் நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது.
சேஷ ஹோமம்.
இது நான்காவது நாள் பின் ராத்திரியில் எழுந்து செய்ய வேண்டிய ஹோமம். இது தான் வைதீக சடங்குகளில் நிறைவு பகுதி. இதை விடியற்கா லையில் செய்வார்கள்.
ஏற்கெனவே ஒரு ஸமித்தில் சந்தனம் தடவி, பூஜித்த விசுவாவசு என்னும் கந்தர்வனை உதீர்ஷ்வாத்த என்ற இரண்டு மந்திரங்களினால் எழுப்பி, யதாஸ்தானம் செய்வதாக இந்த நிகழ்ச்சி அமைகிறது.
அதாவது தண்டத்தில் ஆவாஹனம் செய்ய பட்ட
கந்தர்வ ராஜனை துயில் எழுப்பி தண்டத்தை அலம்பி வேறு இடத்தில் வைக்க வேண்டும்.
சேஷ ஹோமத்திற்கு முன்பாக இதை செய்வர்.
இது நாள் வரை மணப்பெண்ணை காத்து வந்த அந்த தேவனை வணங்கி இது வரை இவளை ரக்ஷித்து வந்த தாங்கள் எனது தகப்பன் வீட்டி
லிருப்பவளும், திருமணமாகாதவளுமான வேறு கன்னிகைகளுக்கு காவலாக இருப்பீர்களாக.
என்னும் கருத்துக்கள் அமைந்த மந்திரங்களை கூறி வழி அனுப்புகிறார்கள்.
இதன் பின்னர் குண்டத்தில் உள்ள அக்னியை எதிரில் வைத்துகொண்டு ஏழு மந்திரங்கள் சொல்லி நெய்யினால் ஹோமம் செய்ய படுகிறது.
நானறியாது ஏதேனும் தோஷங்கள் இவளிடம் இருந்து அது எங்களுக்கு நாசம் விளைவிக்க முற்படுமானால் அவை செல்லட்டும்
ஆதித்யனும், வாயுவும், ப்ரஜாபதியும் இதற்கு உதவு வார்களாக.என்னை வெறுப்பவர்களும் இல்லாமல் போகட்டும்.பன்னிரன்டு மாதங்களுக்கு
உரிய தேவதைகளும் எங்களது சத்ருக்களை அழிக்கட்டும்.என்னும் பொருள் பட மந்திரங்கள் கூறப்பட்டு, இந்த ஹோமம் செய்ய படுகிறது.
சத்துருக்கள் என்பது உங்கள் உடலிலுள்ள காமம், க்ரோதம்,மதம்,மார்ச்சரியம், பொறாமை, பேராசை போன்ற கெட்ட எண்ணங்களே.
இந்த ஹோமங்கள் யாவும் நிறைவு பெற்றபின் ஜயாதி ஹோமம் செய்ய படுகிறது. இதுவரை நாம் செய்த ஹோமங்கள் யாவும் முழுமை பெற இது செய்ய பட வேண்டும்.
சுமார் அறுபது தேவர்களையும், அவர்களது பத்னிகளையும் ஆராதித்து பூஜிக்கிறோம். இதில் சில தேவதைகள் மனோ வ்ருத்திக்கும்,சிலர்
காலத்திற்கும், சிலர் நக்ஷத்திரங்களுக்கும், சிலர் கந்தர்வர்களுக்கும் அதிஷ்டான தேவதை ஆவர்.
ஒரு தேவர்களுடன் இன்னொரு தேவதையை சேர்த்தால் அவரே தனியாக ஒருவராகவும், சேர்க்கையால் ,வேறு ஒருவராகவும் ஆகிறார்.
ஆதலால் முக்கிய தேவதைகளுக்கு ஹோமம் செய்த பின்னர் இவர்களுக்கு ஹோமம் செய்வதும் , இவர்களை ஆராதிப்பதும் ,
முக்கிய தேவதைகளையே பூஜிப்பதாக அமைந்து, மேலும் நல்ல பலன்களை அளிப்பதாக அமையும்.
பின்னர் ஹோமம் செய்து மிகுதியுள்ள நெய்யிலிருந்து மணப்பெண்ணின் சிரத்தில் பூ: ஸ்வாஹா;புவ; ஸ்வாஹா: ஸுவஸ்ஸுவாஹா
;ஒம் ஸ்வாஹா என 4 சொட்டுக்கள் தெளிக்க வேண்டும்.இதனால் மூன்று லோகத்திற்கு அதிபதிகளான தேவதைகள் மனமுவந்து
மணமகளை அவளது கணவனுடன் காப்பாற்று வதாக கருத படுகிறது.
நாந்தி ஸ்ராத்தம்.
குல தெய்வங்களுக்கு, பூஜை, ஸுமங்கலி ப்ரார்த்தனை, சமாராதனை செய்வது போல் ஸுத்ர காரர்கள், சில கர்மாவின் முடிவிலும் நா ந்தி சிராத்தம் செய்யுமாறு விதித்திருக்கிறார்கள்.
பித்ருக்களில் பல வகை உண்டு. அதில் ஒரு வகை நாந்தீ முக என்பவர். ஸுப காலத்தில் ஆராதிக்க தக்கவர்.
எள்ளீற்கு பதில் ஸோபன அக்ஷதை. ஸத்ய வசு என்ற பெயர் கொண்ட விசுவே தேவர்களே வரிக்க படுகின்றனர்.முதலில் ஸ்த்ரீ வர்கங்களுக்கே வரணம். பூஜை முதலியன.
இப்படி விதி வத்தாக ஹோமம் செய்து, அந்தணர்களை வரித்து, அன்னம் அளித்து சிராத்தமாக செய்வது உத்தமம்.
விதிப்படி அந்தணர்களை வரித்து , வாழை இலையில் அரிசி வாழைக்காய், வைத்து, தக்ஷிணை தாம்பூலம்,
வேஷ்டி, வைத்து, த்ருப்தி ஆசிர்வாதம் கூறும்படி செய்ய வேண்டும். இது மத்திமம். ஆம சிராத்தம் என இதற்கு பெயர்.
இதுவும் செய்ய இயலாதவர்கள் ஹிரண்ய சிராத்தம் என்ற பெயரில் தாராளமாக தக்ஷிணை தர வேண்டும்.
எப்படி செய்தாலும் இதன் பின்னர் இதற்கு அங்கமாக புன்யாஹ வசனம் செய்ய வேண்டும்.
பல தானம்;-
ஹோமங்கள் யாவும் நிறைவு பெற்ற பின் அக்னி உபஸ்தானம் செய்து எங்களுக்கு தக்க காலத்தில் தீர்காயுஸ் உள்ள புத்திரன்
பிறப்பதற்காக பல தான தாம்பூல தானம் செய்கிறேன் என்று ஸங்கல்பம் செய்து கொண்டு பல தானம் பெறுபவரை உமா மஹேஸ்வர
லக்ஷ்மி நாராயணர் வடிவமாக கருதி , ஆஸனம் முதலிய உபசாரங்கள் செய்து,, மனைவி தீர்த்தம் போட, தக்ஷிணையுடன் அனைவருக்கும்பல
தானம் செய்ய வேண்டும். தட்டில் தாம்பூலம் வைத்து அதில் ஐந்து ரூபாய் நாணயம் வைத்து முதலில் வைதீகர்களுக்கும், அதன் பின்னர் பெண் வீட்டார், பிள்ளை வீட்டார், நெருங்கிய உறவினர்
அனைவரையும் தம்பதி ஸமேதராக அழைத்து ஒவ்வொருவருக்கும்மிதை அளிக்க வேண்டும். மந்திரத்தின் அர்த்தம்:- பலமானது எப்போதும் தானம் செய்பவரது விருப்பத்தை நிறைவு
செய்கிறது. அது புத்ர, பெளத்ர வ்ருத்தி, செல்வம், நன்மை, புஷ்டி, ஆகியவற்றை எல்லாம் எங்களு க்கு தரட்டும். என்பதாகும்.
தாம்பூல சர்வணம்:-
கிரஹஸ்தன் ஆன பிறகு தான் தாம்பூலம் போடலாம். முதன் முதலாக தம்பதிகள் தரிக்கும் நிகழ்ச்சி தான் இது.
மணப்பெண்ணின் சகோதரன் தம்பதிகள் இருவருக்கும், வெற்றிலையில்சிறிது சுண்ணாம்பு தடவி பாக்கு வைத்து மடித்து கொடுக்க வேண்டும்.
மணமக்கள் பிள்ளை செல்வம் பெற்று சீறும், சிறப்புமாக பல்லாண்டு காலம் , மகிழ்ச்சி யாக வாழ ப்ரார்த்தித்து கொண்டு இந்த தாம்பூலம் அளிக்க படுகிறது.
மழ நாட்டு பிரஹசரண பிரிவை சேர்ந்தவர்கள்
. பெண்ணின் நாத்தனார் ஒரு பித்தளை படியில் ஒரு முழு கொட்டை பாக்கை வைத்து, முழுவதுமாக நிரப்பி, அதில் பணம் வைத்து,
கைகளில் ஏந்தி,மணமக்களை மூன்று முறை சுற்றி வர வேண்டும். இதற்கான ஏற்பாட்டை பெண் வீட்டார் செய்து தர வேண்டும். அதில் வைக்க பட்ட பணம் நாத்தனாரை சேரும்.
மஹதாசீர் வாதம்.
விவாஹத்தின் வைதீக நிகழ்ச்சிகள் யாவும் முடிவுற்ற பின்னர் மஹதாசீர்வாதம் நடக்கிறது.
இச்சமயத்தில் பெண்டிர் கெளரி கல்யாணம் பாடி கொண்டு,பொட்டுகடலை வெல்லத்தினால்
செய்ய பட்ட ஐந்து பருப்பு தேங்காய் களை கொண்டு வந்து வைக்க வேண்டும்.இப்போது மணமகள் மணமகனது இடது புறமாக நின்று
இருவரும் மணமகனது மேல் அங்க வஸ்த்ர துணியை விரித்த வண்ணமிருக்க வேத மந்திரங்க ளை ,உச்சரித்து அந்தணர்கள் மங்களாக்ஷதையை தம்பதி மேல் தூவ ஆசீர்வாதம் நடக்கிறது.
வட ஆற்காட்டை சேர்ந்தவர்களானால் தம்பதிகள் எதிரும் புதிருமாக நின்று துணியை பிடித்திருப்பர். பின்னர் மணமக்கள் நமஸ்காரம் செய்து பழைய நிலையில் அமர வேண்டும்.
பின்னர் பிள்ளையின் மாமனார் மோதிர பணம் ஓதியதும் , நாகவல்லி ஆசீர்வாதம் என மணமக்களுக்கு புடவை, வேஷ்டி ஓதபடுகிறது.
பெண்ணின் மாமா, பிள்ளையின் மாமா பெயர் சொல்லி மந்திரம் சொல்லி ஆசீர்வாத பணமோது வார்கள். அதன் பிறகு மற்ற உறவினர்கள், நண்பர்கள் , தங்களது அன்பளிப்பை அளிப்பார்கள்.
இந்த சமயத்தில் எல்லோரும் மேடை ஏறி வாழ்த்தலாம். இதன் பிறகு தம்பதிகளுக்கு ஆரத்தி எடுக்க படும்.பிள்ளை வீட்டிலிருந்து ஒருவரும், பெண் வீட்டிலிருந்து ஒருவரும் ஆரத்தி எடுக்க வேண்டும்.
சிலர் ஆரத்தி தட்டின் நடுவில் ஐந்து முக குத்து விளக்கின் மேற்பகுதியின் ஐந்து முகங்களையும் ஏற்றி வைப்பார்கள்.
ஆரத்தி எடுத்து விட்டு, அந்த ஐந்து முக தீபத்தை எடுத்து விட்டு, ஆரத்தி கரைசலை வாசல் கோலத்தில் கொட்டுவார்கள்.
சிலர் ஆரத்தி கரைசலின் மீது ஒரு வெற்றிலை வைத்து அதன் மேல் சூடம் ஏற்றி வைத்து ஆரத்தி சுற்றி த்ருஷ்டி கழிப்பதும் உண்டு.
திருமணம் பதிவு செய்ய ரிஜிஸ்டிரார் அலுவலகம் செல்ல முன் கூட்டிய ஏற்பாடுகள் செய்து வைக்க வேண்டும். இப்போது இருவரையும் அழைத்து சென்று பதிவு திருமணம் செய்து கொண்டு வர வேண்டும்.
பது மண தம்பதிகள் இருவரையும் அவரவர் இல்லங்களுக்கு ( உள்ளூரிலேயே இருந்தால்)
ராகு காலம், யம கண்டம் இல்லாத நல்ல நேரத்தில் மணக்கோலத்துடனேயே அழைத்து செல்ல வேண்டும்.
பட்டு பாய், பாலும், பழமும், சந்தனம், குங்குமம்.வெற்றிலை பாக்கு, சக்கரை எல்லாம் எடுத்து செல்ல வேண்டும்.
இவ்வாறு செய்வதற்கு முன்பாகவே ஒருவர் அங்கு சென்று,வீட்டின் வாசலில் கல்யாண கோலம் போட்டு, வர வேற்க ஆரத்தி கரைசல் தயாராக வைக்க வேண்டும்.
மணமக்கள் வாசலில் வந்ததும், அவர்கள் இருவரையும் வாசலில் கிழக்கு பார்க்க நிற்க வைத்து,பெண் வீட்டார் ஒருவர், ஆண் வீட்டார் ஒருவர் என ஆரத்தி எடுத்து உள்ளே வர சொல்ல வேண்டும்.
உள்ளே மணமக்கள் வந்ததும் , வரவேற்பு அறையில் கிழக்கு முகமாக பட்டு பாயில் அமர வைக்க வேண்டும். பெண்டிர் ஒவ்வொருவரும் மணமக்களுக்கு பாலும் பழமும் தர வேண்டும்.
மணப்பெண்ணை பிள்ளை வீட்டில் வலது காலை முதலில் எடுத்து வைத்து உள்ளே வர சொல்ல வேண்டும்.
வந்திருக்குமனைவருக்கும் குடிக்க பானம் கொடுக்க வேண்டும்.பெண்டிர்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம்,மஞ்சள் , கொடுக்கலாம்.
இதை பெண் வீட்டில் பிள்ளை வீட்டாரும், பிள்ளை வீட்டில் பெண் வீட்டாரும் செய்ய வேண்டும். இதன் பிறகு தம்பதிகள் ஆகாரம் உட்கொள்ளலாம்.
கன்னிகாதானம் செய்தவரும், பூர்ண பலன் பெற ஆகார நியமத்துடன் இருக்க வேண்டும்.
அந்த காலத்தில் இரவு, ஒளபாஸனம், ஸ்தாலீ பாகம் செய்து வந்தார்கள். ஆதலால் பகலிலும் பலகாரம் சாப்பிட்டு வந்தனர்.
திருமணதன்று மதியம் ராகு காலம், யம கண்டம் இல்லாத நேரத்தில் மணபெண்ணின் சகோதரி மணமகனிடம், சென்று வேறு வேட்டி
உடுத்தி கொள்ள கொடுத்து, அவர் கட்டியிருந்த வேட்டியை கொண்டு வந்து மஞ்சள் தூள் கலந்த தண்ணிரில் முக்கி பிழிந்து உலர்த்தி மணமகனி
டம் கொடுப்பார்கள். இதனால் மணமகன் தனது மனைவியின் குடும்பத்துடன் சுமுகமான உறவை நிலை நிறுத்தி கொள்ள வேண்டும்.என்பதை தெளிவு படுத்து கிறது.
இதற்கு பதில் மரியாதையாக பிள்ளை வீட்டார் அந்த பெண்ணுக்கு தாம்பூலம், பழம், புஷ்பம், தக்ஷிணையுடன் கொடுப்பார்கள்.
தற்காலத்தில் வேட்டியை முழுவதும் நனைக்காமல் ஒரு ஓரத்தில் மட்டும், மஞ்சள் தண்ணீர் தெளித்து திருப்பி அனுப்ப படுகிறது.