Post by radha on Jan 6, 2020 5:25:55 GMT 5.5
OM Sri GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
முரன் என்ற அரக்கன், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் கொடுமைகள் செய்தான். அவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். அரக்கனை அழிக்க திருமால் சக்கராயுதத்துடன் புறப்பட்டார். கடும்போர் நடந்தது. சக்கராயுதத்தின் முன் அரக்கன் சக்தியற்றுப் போனான். இருந்தாலும் பல மாய வடிவங்களில் போர் புரிந்து வந்தான். தினமும் காலையில் சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனம் ஆகும்வரை போர் நடக்கும். போர் முடிந்ததும் திருமால் பத்திரிகாசிரமத்தில் உள்ள ஒரு குகைக்கு சென்று இளைப்பாறுவார். பொழுது விடிந்ததும், அரக்கனுடன் போர் புரிய போர்களத்திற்கு செல்வார்.
யார் இந்த ஏகாதசி?
ஒருநாள், போர் விதிமுறைக்கு மாறாக, ஆஸ்ரமத்திற்கு வந்த முரன், அங்கு படுத்திருந்த திருமாலைத் தாக்கினான். அப்போது பெருமாளின் உடலில் இருந்து ஒரு மகத்தான சக்தி, பெண் வடிவில் எழுந்து அரக்கன் முன் வந்து நின்றாள். அவளது அழகில் அரக்கன் மயங்கினான். ஆனால் படைக்கலங்களுடன் விஸ்வரூபத்துடன் தோற்றமளித்த அந்தப் பெண் ஆங்காரத்துடன் அரக்கனை அழித்தாள். திருமால் மனம் மகிழ்ந்தார். ""சக்தியே, அசுரனை அழித்த உனக்கு, ஏகாதசி என்று திருநாமம் சூட்டுகிறேன். திதிகளில் ஒன்றாக ஆக்குகிறேன். அரக்கன் முரனை அழித்த இந்த மார்கழி மாதத்தில், உன்னை விரதம் இருந்து வழிபடுவோருக்கு, வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வேன்.'' என்று கூறினார்.
ஏகாதசி விரத மகிமை
வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் உயர்ந்து சிறந்து விளங்குகிறது. ''மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வேன்'' என்பது திருமால் வாக்கு. இதனால் இவ்விரதம் மகிமை வாய்ந்ததாகிறது. ஆண், பெண் அனைவரும் பின்பற்ற வேண்டிய பெருமைமிக்க விரதமானது வைகுண்ட ஏகாதசி விரதம். பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியை பட்சம் என்கிறோம். கிருஷ்ண பட்சம் (தேய்பிறை), சுக்லபட்சம் (வளர்பிறை) ஆகிய இவற்றின் 11வது நாள் (திதி) வருவது ஏகாதசி.
இதில் மார்கழி வளர்பிறை ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி. பல வகையிலும் நாம் அறிந்தும் அறியாமலும் செய்யும் தீவினைகள், ஏகாதசி விரதம் இருந்தால் அழியும்.. காயத்ரியை காட்டிலும் சிறந்த மந்திரம் இல்லை. தாயை மிஞ்சிய தெய்வம் இல்லை. காசியை விஞ்சிய புண்ணிய தீர்த்தம் இல்லை. ஏகாதசியை விஞ்சிய விரதம் இல்லை என்பர். அந்தளவிற்கு ஏகாதசி மகத்துவம் வாய்ந்தது.
இரண்டையும் மறந்துடாதீங்க!
ஏகாதசியில் எல்லோரும் செய்ய வேண்டிய செயல்கள் இரண்டு. ஒன்று உபவாசம் என்னும் விரதம். மற்றொன்று ஹரிகதை(பக்திக்கதை) கேட்பது. 'உபவாசம்' என்றால் 'பட்டினியாக இருத்தல்' என்பது மட்டுமல்ல. “கூட வசிப்பது” என்றும் ஒரு பொருள் உண்டு. கடவுளுடன் வசிப்பது..அதாவது அவனுடன் ஒட்டிக் கொண்டு அவனோடு வசிப்பது தான் நிஜமான உபவாசம். 15 நாட்களுக்கு ஒருமுறை முழுமையாக நம் வயிற்றுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற ஆரோக்கிய விதியைப் பின்பற்றவும் ஏகாதசி விரதத்தை பின்பற்றினர். உயிர் வாழ உணவு அவசியம் என்றாலும், அளவுக்கு மீறி சாப்பிடும் போது அதுவே வயிற்றுக்கு எதிரியாகி விடுகிறது.
பல வியாதிகளுக்கு உணவு காரணமாக இருப்பதைக் காணலாம். இன்று டாக்டர்கள் உணவு கட்டுப் பாட்டை மருத்துவ ரீதியாக கடைபிடிக்கச் சொல்வதன் காரணம் இதுவே. மற்றொரு செயல் பக்திக்கதைகளைக் கேட்பதாகும். தாயின் வயிற்றில் இருக்கும்போதே நாராயணனின் கதையைப் பிரகலாதன் கேட்டதால் பக்தியில் சிறந்து விளங்கினான். பக்திகதைகளைக் கேட்பது, திருமாலின் நாமங்களை பாடுவது, தோத்திரங்களைப் பாராயணம் செய்வது புண்ணிய பலன் தரும்.
விரதம் இருப்பது எப்படி
ஏகாதசியன்று அதிகாலையில் பூஜை செய்து விரதத்தை தொடங்க வேண்டும். அன்று இரவு முழுவதும் கண்விழித்து புராண நுால்களை படிப்பதும், திருமாலின் பெயர்களைச் சொல்வதுமாக இருக்க வேண்டும். ஏகாதசிக்கு மறுதினம் துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு இல்லாத சுவையற்ற உணவாக சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக்கீரை சேர்த்து ""கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!!'' என்று மூன்று முறை கூறி, இலையில் உணவிட்டு, தானம் அளிக்க வேண்டும்.
எஞ்சிய உணவை சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். அன்று பகலில் துாங்கக்கூடாது. எட்டு வயதிற்கு உட்பட்டவர்களும், 80 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்களும் விரதம் மேற்கொள்ளத் தேவையில்லை. நோயால் சிரமப்படுபவர்கள் ளிய உணவு எடுத்துக் கொள்ளலாம்.
தண்ணீர் இல்லா விரதம்
தர்மரி்ன் தம்பி பீமன், வியாசரின் அறிவுரைப்படி ஏகாதசி விரதமிருக்க ஆசைப்பட்டான். ஏகாதசியன்று சாப்பிட முடியாது. பீமனோ சாப்பாட்டு ராமன். அவனது வயிற்றில் 'விருகம்' என்னும் அக்னி இருந்ததால் பசி தாங்க முடியாது. எனவே ஒரு ஆண்டில் வரும் 24 ஏகாதசிகளில், ஒருநாள் மட்டும் விரதமிருக்க வழிகாட்டும்படி வேண்டினான். ஆனி வளர்பிறை ஏகாதசியில் நீர் அருந்தாமல் விரதமிருந்தால், சகல ஏகாதசி விரதங்களும் இருந்த பலன் கிடைக்கும் என்று அவர் கூறினார். பீமனும் விரதமிருந்து பலன் பெற்றான். இதை நிர்ஜலா ஏகாதசி, பீம ஏகாதசி என்று அழைப்பர். நிர்ஜலா என்றால் தண்ணீர் குடிக்காமல் இருப்பது என பொருள்.
22 குடம் அபிேஷகம்
ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்று அகில், சந்தனக்கலவையை சாத்தி ரங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம் (தைலாபிஷேகம்) செய்கின்றனர். அன்றைய தினம், உற்ஸவர் பெருமாளுக்கு (வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் வழியே வருபவர்) அணியப்பட்டுள்ள தங்கக்கவசம் களையப்பட்டு, 22 குடங்களில் காவிரித்தீர்த்தம் அபிஷேகம் செய்யப்படும். மற்ற நாட்களில் கவசம் அணிந்த நிலையிலேயே அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்தை காவிரித்தாயே செய்வதாகச் சொல்வர்.
இவருக்கும் கொழுக்கட்டை
ரங்கநாதர் சன்னதியின் எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூபமாக காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், பெருமாள் எப்போது அழைத்தாலும், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். கஜேந்திரன் என்னும் யானை, கூகு என்னும் முதலையிடம் சிக்கித் தவித்து 'ஆதிமூலமே' என கதறிய போது, உடனடியாக பெருமாளைத் தோளில் தாங்கி வந்தவர் இவரே.
பக்தர்களுக்காக பெருமாளை அழைத்து வரும் இந்த கருடாழ்வாருக்கு, 30 மீட்டர் நீள வேட்டி அணிவிக்கின்றனர். இவரைத் தரிசிக்க வியாழக்கிழமை விசேஷ நாள். அன்று கொழுக்கட்டை நைவேத்யமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதியின் முன் சுக்ரீவனும், வாலியின் மகனான அங்கதனும் துவார பாலகர்களாக உள்ளனர்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARAN