Post by radha on Nov 2, 2019 11:37:15 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
வேலில் இருப்பது வெற்றிமுனை; துதிப்போருக்கு நல்ல துணை
DINAMALAR dt.2-11-19
செல்வம் தரும் அழகன்:
முருகனின் சிறப்புகளையும், அவரது அருள் வேண்டியும் அருணகிரிநாதர் பாடியது திருப்புகழ். இதன் முதல் அடியான 'முத்தைத்தரு' என்பதை முருகனே எடுத்துக் கொடுத்தார். 'திரு' என்றால் 'அழகு, செல்வம்'. அழகனாகிய, செல்வம் தருகின்ற முருகனை புகழும் பாடல்கள் 'திருப்புகழ்' என பெயர் ஏற்பட்டது.
வேலுக்கும் ஆறுமுகம்:
குழந்தைகளுக்கு தெய்வங்களின் ஆயுதத்தை பெயராக வைக்கும் வழக்கமில்லை. ஆனால் முருகனின் வெற்றிவேலைச் சிறப்பிக்கும் விதத்தில் வெற்றிவேல், கதிர்வேல், தங்கவேல், சக்திவேல், வடிவேல், முத்துவேல், வேலாயுதம் என பெயரிடுகின்றனர். கந்தபுராணத்தில் 'திருக்கைவேல் போற்றி போற்றி' என போற்றுகிறார் கச்சியப்பர். முருகனை போல வேலுக்கும் ஆறு முகங்கள் உண்டு.
மணமாலை கொடுப்பவர்:
சூரனை சம்ஹாரம் செய்ய வந்த முருகன் திருச்செந்துாரில் சுப்பிரமணியராக நான்கு கைகளுடன் காட்சி தருகிறார். இவர் வலது கையில் மலர் வைத்து, சிவபூஜை செய்தபடி தவக்கோலத்தில் இருக்கிறார். பிரதான உற்ஸவர் சண்முகர், தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். மூலவருக்குரிய பூஜை, மரியாதைகள் இவருக்கும் உண்டு. திருமணத்தடை உள்ளவர்கள் இவரை வேண்ட மணவாழ்க்கை அமையும்.
மழலை தரும் விரதம்:
பார்வதிதேவி தாட்சாயினியாக அவதரித்த போது அவளுக்கு தந்தை தட்சன். ஆணவம் மிக்க அவன் மருமகன் சிவனையே அவமதித்தான். கடவுளை அவமதிப்பவர்கள் மறுபிறவியில் அசுரர்களாக பிறந்து இறைவனால் தண்டிக்கப்படுவர். தட்சன் மறுபிறப்பில் பஸ்மாசுரனாக பிறந்தான். அவனது சகோதரர்கள் கஜமுகாசுரன், சிங்கமுகன், பானுகோபனும் அதர்ம வழியில் வாழ்ந்தனர். அவர்களை அழிக்க சிவன் நெற்றிக்கண்ணில் இருந்து உருவான கந்தன் போருக்கு தயாரானார்.
முதலில் பஸ்மாசுரனின் தம்பியரை அழித்தார். பஸ்மாசுரன் மாமரமாக மாறி நின்றான். வேலால் மரத்தை இருகூறாகக் பிளந்து ஒரு பகுதியை சேவலாக்கி கொடியாகவும், மறு பகுதியை மயிலாக்கி வாகனமாகவும் ஏற்றுக்கொண்டார். சூரசம்ஹார முடிவில் சேவலை பறக்க விடுவதோடு, சூரனின் தலைப்பகுதியில் மாவிலையைக் கட்டி வைப்பர். போரில் மாமரமாக மாறிய சூரனை வேலை ஏவி அழித்ததை நினைவுபடுத்தவே மாவிலை கட்டப்படுகிறது. முருகன் ஆறுமுகம் கொண்டவர். திதிகளில் ஆறாவது நாள் சஷ்டி. இந்நாளில் விரதமிருந்து முருகனை வழிபட்டால் மழலை பாக்கியம் உண்டாகும்.
ஒரு கண்ணிலாவது பார்!
'பன்னிரு விழிகளிலே பரிவுடன் ஒரு விழியால் என்னை நீ பார்த்தாலே போதும்', 'பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும் என்னிரண்டு கண்களிலும் இன்பஒளி உண்டாகும்' என்றெல்லாம் கவிஞர்கள் முருகனை போற்றினர். இந்த வரிகளுக்கு ஆதாரமானவர் ஆதிசங்கரர். இவர் உடல்நலம் குன்றியபோது முருகன் மீது 'சுப்பிரமணிய புஜங்கம்' பாடினார். அதில், 'இரக்கமுள்ள ஆறுமுகனே! உன் தாமரை முகங்கள் ஆறிலும் கருணை பொழியும் பன்னிரண்டு கண்கள் உள்ளன. என் குறைகள் போக்க நீ அத்தனை கண்களாலும் பார்க்கத் தேவையில்லை. ஒருவிழியால் பார்த்தால் போதும்.. அப்படி பார்ப்பதால் உனக்கு என்ன குறை நேரப் போகிறது?' என உரிமையுடன் பாடினார்.
சக்திவேல்... சகலமும் வெற்றி:
சிவனின் மறுவடிவே முருகன். பாம்பன் சுவாமிகள் 'அறுமுகச்சிவனார்' என பாடல்களில் குறிப்பிடுகிறார். தாய் பார்வதியும் முருகனை விட்டு அகலுவதில்லை. சூரபத்மனை வெல்ல போருக்கு புறப்பட்ட போது முருகன் தாயிடம் ஆசி பெற்றார். அப்போது பார்வதி தன் சக்தியை ஒன்று திரட்டி வேலாகத் தந்தாள். சக்திவேல் இன்றி முருகன் தனித்து காட்சி தருவதில்லை. சக்திவேல் தாங்கிய முருகன் சூரசம்ஹாரம் செய்தார். அவரைச் சரண் அடைந்தால் என்றென்றும் வெற்றியே.
தமிழ்க்கிழவன் முருகன்:
முருகனை குமரன் (இளைஞன்) என சொல்வர். முருகனுக்கு 'குறிஞ்சிக்கிழவன், தமிழ்க்கிழவன்' என்றும் பெயர் உண்டு. கிழவன் என்றால் உரிமை கொண்டவன் அல்லது தலைவன் என பொருள். தமிழ் மொழிக்கு உரியவன் என்பதால் தமிழ்க்கிழவன். மலைக்கு உரிய தெய்வம் என்பதால் குறிஞ்சிக்கிழவன் எனப்படுகிறார்.
நாளும் கோளும் நெருங்காது:
நம் பூர்வஜென்ம பாவ, புண்ணியங்களுக்குத் தகுந்தபடி வாழ்க்கை அமைகிறது. ஏழரை, அஷ்டமச்சனி, ஜென்மகுரு காலங்களில் அனுபவிக்கும் துன்பங்களுக்கு பரிகாரங்கள் பல உள்ளன. ஆனால் 'கந்தர் அலங்காரம்' நுாலில் உள்ள இந்தப் பாடலுக்கு இணை இல்லை. அருணகிரிநாதர் பாடிய இப்பாடலைப்பாடி முருகனை வணங்கினால் நாளும் கோளும் ஒன்றும் செய்யாது என்கிறார்.
'நாள் என்செயும் வினைதான் என்செயும்
எனை நாடிவந்த கோள்என் செயும்
கொடுங்கூற்றென் செயும், குமரேசர்
இரு தாளும் (இரண்டு பாதங்கள்),
சிலம்பும் (இரண்டு சிலம்பணிகள்),
சதங்கையும் (இரண்டு சலங்கையும்),
தண்டையும் (இரண்டு தண்டைகள்),
சண்முகமும் (ஆறு முகங்கள்)
தோளும் (12 தோள்கள்)
கடம்பும் (கழுத்திலுள்ள கடம்பு மாலை)
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
முருகனின் 27 உறுப்புகளும் 27 நட்சத்திரங்களைக் குறிக்கின்றன.
கந்தகுரு கவசத்தில் '28'
சாந்தானந்தர் பாடிய கந்தகுரு கவசத்தில் உள்ள முருகன் கோயில்கள்
1.சுவாமிமலை
2. திருச்செந்துார்
3. திருமுருகன்பூண்டி
4. திருமலைக்கோவில் (செங்கோட்டை)
5. திருவண்ணாமலை (கம்பத்திளையனார்)
6. திருப்பரங்குன்றம்
7. திருத்தணி
8. எட்டுக்குடி (நாகை மாவட்டம்)
9. போரூர்
10. திருச்செங்கோடு
11. சிக்கல்
12. குன்றக்குடி (சிவகங்கை)
13. குமரகிரி (சேலம் அம்மாப்பேட்டை அருகில்)
14. பச்சைமலை (கோபிசெட்டிபாளையம் அருகே மொடச்சூர்)
15. பவளமலை (கோபிசெட்டிபாளையம் அருகில்)
16. விராலிமலை
17. வயலுார்
18. வெண்ணெய்மலை (கரூர் அருகில்)
19. கதிர்காமம் (இலங்கை)
20. காந்தமலை (நாமக்கல் மாவட்டம் மோகனுார்)
21. மயிலம் (விழுப்புரம்)
22. கஞ்சமலை (சேலம்)
23. முத்துக்குமரன் மலை (வேலுாரில் இருந்து 13 கி.மீ.,ல் உள்ள ஒக்கனாபுரம்)
24. வள்ளிமலை (வேலுார்)
25. வடபழநி
26. ஏழுமலை (திருப்புகழில் அருணகிரிநாதர் பாடியுள்ளார்)
27. தத்தகிரி (சேலம் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே சாமியார்காடு)
28. கந்தகிரி (நாமக்கல்லில் இருந்து 5 கி.மீ.,ல் உள்ள ரெட்டிப்பட்டி பழநி ஆண்டவர் கோயில்)
தீப்பொறி... பொய்கை... முருகன்:
முருகன் எப்படி அவதரித்தார் என்பது குறித்து காஞ்சிப்பெரியவர் 'திரிபுரா ரகஸ்யம்' என்ற கிரந்தத்தை குறிப்பிட்டு கூறியுள்ளார். பிரம்மாவின் புத்திரர் சனத்குமாரர். இவர் எல்லாப் பொருட்களையும் தெய்வமாக கருதுவார். ஈ, எறும்பு முதல் வானுலக தேவர்கள் வரை அனைவரும் தெய்வம்தான். இவர் ஒருமுறை அசுரர்களுடன் போர் புரிந்து வெல்வது போல கனவு கண்டார். இது பற்றி தந்தை பிரம்மாவிடம் விளக்கம் கேட்டார். 'முற்பிறவியில் அசுரர்களை ஒழிக்க முடிவெடுத்தாய். அந்த நினைவே இப்போது கனவாக வெளிப்பட்டது. இப்பிறவியில் அசுரர்களையும் நீ தெய்வமாகப் பார்ப்பதால் போர் நடக்காது. அடுத்த பிறவியில் இக்கனவு பலிக்கும்' என்றார்.
ஞானியான சனத்குமாரருக்கு சிவபார்வதியே காட்சியளித்து வரம் அருள்வதாக கூறினர். 'வரம் பெற்று பிழைக்கும் தேவை எனக்கில்லை. வேண்டுமானால் நான் வரம் தருகிறேன்' என்றார் சனத்குமாரர். இதனால் சிவன், 'நீ எனக்கு குழந்தையாகப் பிறக்க வேண்டும்' என்றார். ஒப்புக்கொண்ட சனத்குமாரர் அதிலும் ஒரு புள்ளி வைத்தார். 'சிவனே! நீர் மட்டும் தான் என்னை பிள்ளையாகப் பிறக்கக் கேட்டீர். எனவே தாயின் சம்பந்தமின்றியே பிறக்க நான் விரும்புகிறேன்' என்றார். ஆனால் பார்வதி, 'உன்னைப் போன்ற பிள்ளையைப் பெறும் பாக்கியத்தை இழப்பேனே' என வருந்தினாள்.
அதற்கு சிவன், 'பஸ்மாசுரன் என்பவன் யார் மீது கை வைத்தாலும் அவர்கள் சாம்பலாக வேண்டும் என்ற வரம் பெற்றான். அதைச் சோதிக்க என் தலையிலேயே கை வைக்க முயற்சிக்கவே நான் மறைந்தேன். என்னைக் காணாத சோகத்தில் தண்ணீராக உருகிய நீ பொய்கையாக மாறினாய். இப்போதும் அது 'சரவணப்பொய்கை' என்ற பெயரில் இருக்கிறது. நெற்றிக்கண் மூலம் நான் சனத்குமாரனை தீப்பொறிகளாக உண்டாக்குவேன். அத்தீயை தாங்கும் சக்தி அந்த பொய்கைக்கு மட்டுமே உண்டு. சரவணப்பொய்கையில் தாங்கும் போது உனது சம்பந்தமும் பிள்ளைக்கு வந்து விடும்' என்றார். அதன்படியே சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து முருகன் அவதரிக்க சரவணப் பொய்கையாக தாங்கினாள் பார்வதி. இதனால் முருகன் சிவசக்திபாலன் எனப்படுகிறார்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM