Post by kgopalan90 on May 31, 2019 15:13:59 GMT 5.5
ஒரு கிரகத்துக்கு மற்ற கிரகங்கள் எப்படி நட்பாக, பகையாக, சமமாக இருக்கிறது என்பதற்கான சித்தாந்த விளக்கம்.
கிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு மூலதிரிகோண வீடு இருக்கும். அந்தந்த கிரக மூலதிரிகோண வீட்டிலிருந்து 2, 12, 4, 5, 8, 9 ஆகிய ஸ்தான அதிபதிகளும், மற்றும் அதன் உச்ச ஸ்தான அதிபதியும் அந்த கிரகத்துக்கு வேண்டிய கிரகமாக இருக்கும். இதை உதாரணத்தோடு விளக்கினால் நன்கு புரியும்.
செவ்வாய் கிரகத்தை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். செவ்வாயின் மூலதிரிகோண வீடு மேஷம் ஆகும். மேஷத்தின்,
2, 12 -ன் அதிபதிகள் சுக்கிரன், குரு.
4, 5 -ன் அதிபதிகள் சந்திரன், சூரியன்.
8, 9 -ன் அதிபதிகள் செவ்வாய், குரு.
அதில் உச்சம் பெறும் கிரகம் சூரியன்.
இதை நன்கு பாருங்கள்.
குரு இரண்டு தடவை வருவதால் செவ்வாயின் மிக வேண்டிய நட்பு கிரகமாக குரு இருக்கிறது.
சந்திரன் ஒரு தடவை வந்துள்ளது. ஆனால் சந்திரனுக்கு ஜாதக கட்டத்தில் ஒரு வீடு மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பதால் அது இரண்டு தடவை வந்ததற்கு சமமாக நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். ஆகவே சந்திரன் செவ்வாயின் நட்பு கிரகமாக செயல்படும். சூரியனையும் இதே அடிப்படையில் அப்படியே பாவிக்க வேண்டும். மேலும் சூரியனுக்கு உச்ச வீடு என்பதால், செவ்வாய் இன்னும் கூடுதல் நெருக்கத்தை சூரியனோடு ஏற்படுத்திக் கொள்ளும்.
ஆனால் இரண்டு வீடுகளை கொண்ட சுக்கிரன் ஒரு தடவை மட்டும் வருவதால் நட்பும் இல்லாமல் பகையும் இல்லாமல் செவ்வாய் கிரகத்துக்கு சுக்கிரன் சம கிரகமாக செயல்படும்.
சனிக்கும் புதனுக்கும் ஒரு ஸ்தானம்கூட வராத காரணத்தால் அவை இரண்டு கிரகங்களும் செவ்வாயின் எதிரியாக செயலாற்றுவார்கள். ஆனால் சனி தன் மகர வீட்டை செவ்வாய் கிரகம் உச்சம் பெறுவதற்கு இடம் கொடுத்துள்ள காரணத்தால் சூழலுக்கு ஏற்ப எதிர்ப்பு தன்மையை குறைத்து சம தன்மையை கடைப்பிடிக்கும். (பாதகாதியாகவும் மேஷத்துக்கு சனி வரும் காரணத்தால் தொழில் படிப்பு போன்றவற்றில் பாதியிலேயே தடங்கலை ஏற்படுத்தும்)
இப்படியே ஒவ்வொரு கிரகத்துக்கும் கண்டுப் பிடித்துக் கொள்ளுங்கள்.
சனி ராஹு கேது தொடரும்.
சனியின் காரகத்வம்:-
ஆறறிவு இல்லாத ஜடங்கள்; தடங்கல்கள்; நொண்டி குதிரை; யானை தோல்;தன லாபத்தின் அளவு; வாணியர்; கைகோளர்; மரம் அறுப்போர்; குரங்கு வேட்டை ஆடுபவர்; அதிக துக்கம், பற்பல வியாதிகள்;சங்கடங்கள், விரோதம், மரணம், நடத்தை கெட்ட ஸ்த்ரீகளது சேர்க்கை அல்லது சினேகிதம்; பணி யாட்கள்; ஒட்டகம்; துஷ்டர்கள்; இழி குலத்தோர்;வன ஜாதியர்கள்;
உடல் ஊனமுற்றோர்; காயம் பட்டவர்கள், மலை ஜாதியினர்; தானம் செய்வதில் தடங்கல்கள்; ஆயுட் காலம், பெண் அலிகள்;பக்ஷிகள், மிருகங்களை வேட்டையாடி உண்பவர்கள்; நெருப்பில் வேலை செய்பவர்கள்; அனாசாரம், வீரியமின்மை; பரை; தம்பட்டம், டமாரம், போன்ற பெரிய வாத்தியங்கள்; புயல்காற்று; வயது முதிர்ந்த குடும்பத்தினர்; அந்தி பொழுது;
சிஷ்யர்களது முன் கோபம், கடுமையான உழைப்பு, சூதாட்டம், துஷ்ட க்ஷேத்திரங்கள், பூமியின் தெற்கு பாகம், அழுக்கான வஸ்த்திரம், இடிந்த வீடு. அருவருப்பான காக்ஷிகள்;கெட்ட சினேகிதம், கொடூரமான சுபாவம், கொடிய செயல்கள்; சாம்பல்; நீல நிற தானியங்கள்;இரும்பு; மெஷின்கள்; கரி; எண்ணெய்கள்; கீழ் தர வியாபாரிகள்; கம்பளம், மேற்கு பாகம். வெளி நாட்டுக்கு யாத்திரை போதல்; வாழ்வின் தரம்; குயுக்தியான திட்டம்; கீழ் நோக்குவது; கூர்மையான ஆயுதங்கள்; வெடி மருந்து;
சதி செயல்; கீழ்தரமான தெய்வங்களிடம் பக்தி; யுத்தம்; வீண் அலைச்சல்; விஷம் தோய்ந்த ஆயுதங்கள்: பராக்கிரமம்;பழகிய எண்ணெய்;விறகு, நீச தொழில் செய்யும் ப்ராஹ்மணர்; தாமச குணம், விஷ மருந்துகள்;தொழிலாளிகளின் பிரதினிதிகள்; மந்திர வாதம்; கொடுமை; பயம், நீளம்; வேட்டையாட்கள்; தலை முடி; விகாரமான தோற்றம்; கற்பனை வியாதிகள்; ஆடு; எருமை மற்றும் வன விலங்குகள்;
கெட்ட எண்ணம் உள்ள ஆண்கள், பெண்கள்; பிறரை மயக்கும் வேலை; ஏமாற்றம், சுடுகாட்டில் உபாசனை; கொள்ளையடித்தல்;
தரித்ரம், நகம், தெருவில் அலைந்து வியாபாரம் செய்பவர்கள்; போக்குவரத்து; நில சம்பந்தமான வழக்குகள்; ஒப்பந்தத்தின் அடிபடையில் பயிர் தொழில் செய்வது; குப்பை கூளம்; எண்ணைய் வியாபாரி;கெட்ட எண்ண காரர்கள்; வலிமை இழந்த ஆண்; கைதி; புலி; பன்றி;
அசுத்தமான இடங்கள்; கூட்டு ப்ரார்த்தனை; தீண்டாமை; காணக்கூடாத வியதியஸ்தர்கள்; எண்பது வயதிற்கு மேற்பட்டவர்கள்; கசப்பும் புளிப்பும் உள்ள பானங்கள்; நாற்றமுள்ள இரசாயன மருந்துகள்;விதவை; விஷமுள்ள பாம்பு; வைக்கோல்; கழுதை; நரி;ஜமீந்தார்கள்; தரித்ரர்கள்;
இராகு:-
குடிசைகள்; ரஹஸ்யமான விஷயங்கள்;வீண் வாக்குவாதம்; கடுமையான பேச்சு; பிணம் தூக்குபவர்; கெட்ட தொழிலில் ஈடு பட்ட பெண்கள்; சுடுகாட்டில் பணி புரிபவர்; அகங்காரம் உள்ளவர்; சூதாடுதல்; திருட்டு தனமான திட்டங்கள்; மற்றும் வேலைகள்; தீட்டு; பெண்களால் ஏற்படும் வியாதி; குன்ம வியாதி; வெளி நாடு செல்வது; எலும்பு; சதி செயல்கள்; நாவிதன்
தூக்கிலிடுபவன்; திருட்டுதன மான பார்வை; அடர்த்தியான பசுமை இல்லாத காடு; மிலேச்சர்கள்; கருடன்; காடுகள், மற்றும் மலைகளில் ஏற்படும் கொடுமைகள்; வீட்டுக்கு வெளியில் உள்ள காலியிடம்; துஷ்ட தனமாக பேசுபவர்கள்; வாதம் கபம் இவற்றால் ஏற்படும் தொல்லைகள்; பேய் காற்று; கொலை; கொள்ளை;தீ வைத்தல்; பாம்புகள்;உடன் பிறந்தவருடன் பாலுறவு;
அமங்கள வஸ்துக்கள்; பாம்பு கடி; விஷ வைத்தியம்; பழைய வாஹனங்கள்; தாயிடம் கள்ள உறவு உடையவர்; மிருகங்களை புணர்வது; கட்டுக்கு அடங்காத காம வெறி; காச நோய்; மூச்சு முட்டுதல்; கெட்டவர்களின் தலைவன்; கெட்ட வழியில் பணம் சம்பாதித்தல் இங்கும், தூர தேசத்திலும்; வன துர்கை உபாசனை; விபரிதமான எழுத்துக்கள்; ஆடு மாடு மந்தை; தோல்; மலை உச்சி
குரங்கு; நதி கரையில் வாழ்பவர்கள்; கோமயம்; ஜாதியிலிருந்து விலக்கபட்டவர்; தீட்டு உள்ளவர்; மாதவிடாயில் இருக்கும் ஸ்த்ரீ; மல் யுத்த காரர்; அளவுக்கு மேல் தூங்குபவர்; தொழு நோயாளி; நாஸ்திகர்கள்; குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க விரும்புவர்கள்; நர மாமிசம் சாப்பிடுபவர்; விஷ ஜந்து; நாஸ்திகர்கள்; தர்மத்தை விரும்பாதவர்கள்;
கேது:-
செவிடர்; முடமானவர்; கணபதி; சண்டிகேஸ்வரர்; காட்டு மருந்தை உபயோகிக்கும் வைத்தியர்; வெறி பிடித்த நாய்; கோழி; சேவல்; சித்தர்கள்; பாம்பாட்டிகள்; சிறை சாலை ஊழியர்கள்; மோக்ஷ ஸாதனம்; சொத்துக்கள் நஷ்டமடைவது; ஆறாத துக்கம்; பல வித ஜுரங்கள்; கடுமையாக தவம் புரிதல்; அல்ப சிநேகிதம், புண் ஏற்படுதல்; வயிறு, கண் இவற்றில் வியாதி; கல் வகைகள்; பிறருக்கு உதவுதலில் வெறுப்பு; மான்; பல வித முட்கள்;ஞானம், மெளன விருதம், சித்தாந்தம்; அளவை நூல்
தர்க்க சாஸ்திரம், வழக்கத்திற்கு மாறான சுக போகம்; சத்ருக்களால் செய்ய படும் செய்வினை; வைராக்கியம்; வெடி குண்டு; சூலம், பல வித வெறுக்க தக்க வியாதிகள்; நல்ல விளையாட்டு;கட்டடங்கள்; குழப்பங்கள்; கற்பழிப்பு; வாழ்வில் வெறுப்பு; தற்கொலை முயர்ச்சி; மலைச்சாரல்கள்; உள் நாட்டு கலகம், மிக பெரிய வியாபாரிகள்; தைரிய சாலியான பெண்கள்;
கட்டுக்கு அடங்காத உணர்ச்சிகள் மற்றும் மன விகாரங்கள்; மத பற்று இல்லாத ஜனங்கள்;பிறர் மனைவியை துன்புறுத்துபவர்; அல்ப சந்தோஷம்; பிறர் கஷ்டத்தை கண்டு சந்தோஷம் அடையும் மன முடையவர்; தன்னிச்சைபடி நடப்பவர்; முட்டாள்கள்; மத பைத்தியம்; கட்டுபாடான உணவு; நல்ல விளையாட்டு;