|
Post by radha on Jul 14, 2012 2:57:22 GMT 5.5
OM SRI GURUPYO NAMAHA:'RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA.
அன்பும் அறிவம் நிலைக்கட்டும் - மகாபெரியவர் பொங்கல் ஆசி
* பூமிக்கு ஒரு சூரியன் இருப்பது போல, கடவுளும் ஒருவர் மட்டுமே இருக்கிறார். சூரியனின் பிம்பம் தண்ணீரில் எல்லாம் பிரதிபலித்து பல சூரியன்களாகத் தெரிவது போல,ஒரு கடவுளே உலக உயிர்கள் அனைத்துமாக பிரதி பலித்துக் கொண்டிருக்கிறார். * மனிதன் மனம், வாக்கு, காயத்தின் (உடல்) கூட்டாக இருக்கிறான். மனதால் பகவானை நினைக்கவும், வாக்கால் அவன் திருநாமத்தை ஜெபிக்கவும், உடலால் அவன் திருவடிகளை வணங்கவும் வேண்டும். * எப்போதும் உள்ளத்தில் மகிழ்ச்சி நிலைக்க ஒரே வழி தான் உண்டு. உண்மையாக இருக்கும் ஒருவனின் திருவடிகளை கெட்டியாகப் பிடித்துக் கொள்வது தான். அந்த ஒருவன் கடவுள் மட்டும் தான். * சத்தியம், தரும சிந்தனையை வளர்த்துக் கொண்டால் நாம்ஒருபோதும் பயப்படத் தேவையில்லை. அப்போது நம்மிடம் தைரியம் குடி கொண்டிருக்கும். * ஆடம்பரத்தை கடவுள் விரும்புவதில்லை. எளிமையையும், தூய்மையையுமே இறைவன் எதிர்பார்க்கிறார். காய்ந்த துளசியும், வில்வபத்திரமும் இருந்தால் கூட போதும். * அன்பே சிவம் என்கிறார் திருமூலர். அறிவே தெய்வம் என்கிறார் தாயுமானவர். இவை இரண்டும் மனதில் நிலைத்திருக்க இறைவனிடம் பிரார்த்திப்போம்.
Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam
|
|
|
Post by krsiyer on Jul 14, 2012 11:31:21 GMT 5.5
good stuff. thanks for sharing. jaya jaya sankara, hara hara sankara !
|
|
|
Post by s. padmanabha iyer on Feb 27, 2013 19:21:54 GMT 5.5
good
|
|