Post by kgopalan90 on Mar 16, 2019 14:23:28 GMT 5.5
ஹோலி பன்டிகை. 20-03-2019.
பவிஷ்யோத்திர புராணமும் ஸ்ம்ருதி கெளஸ்துபம் 517,518 ம் சொல்கிறது.
மாக மாதம் பெளர்ணமி அன்று ப்ரதோஷ காலத்தில் டுண்டிகா என்னும் ராக்ஷஸி அனைத்து குழந்தைகளுக்கும் கெடுதலை செய்ய தயாராக இருக்கிறாள் என்றும்,
கண்ணுக்கு தெரியாத அந்த ராக்ஷஸியிடமிருந்து குழந்தைகளை காப்பாற்ற ஊருக்கு பொதுவான இடத்தில் அல்லது வீட்டு வாசலிலோ அல்லது வீட்டுக்கொல்லையிலோ படுத்து கொண்டு இருக்கும் அரக்கியை போல் கட்டைகளையும். விராட்டிகளையும் தரையில் பரப்பி( கொடும்பாவி) நெருப்பு வைத்து எறிய விட வேண்டும்.
குடும்பத்தில் உள்ள எல்லோரும் இந்த தீயை மூன்று முறை கீழ் காணும் மந்திரம் சொல்லி வலம் வர வேண்டும்.
அஸ்மாபிர் பய ஸ்ந்த்ரஸ்தைஹி க்ருதா த்வம் ஹோலிகே யத: அதஸ்த்வாம் பூஜயிஷ்யாமோ பூதே பூதிப்ரதா பவ.
பிறகு எல்லோரும் சப்தம், ஆரவாரம் செய்து கொண்டும், சிரித்து கொண்டு, பாட்டு பாடிக்கொண்டு பல நிறமுள்ள தண்ணிரை வாரி இறைத்து கொண்டும் மகிழ்ச்சி யுடன் இருக்க வேண்டும்.
அன்று இரவு அல்லது மறு நாள் காலை குளித்து விட்டு எரிந்த சாம்பலை பார்த்து கீழ் கண்ட ஸ்லோகம் சொல்ல வேண்டும்.
வந்திதாஸி ஸுரேந்த்ரேண ப்ருஹ்மணா சங்கரேண ச அதஸ்த்வம் பாஹி நோ தேவி பூதே பூதிப்ரதா பவ.
இவ்வாறு செய்வதால் குழந்தைகளுக்கு உண்டாகும் எல்லா வியாதிகளும் அபம்ருத்யு ,மட்டமான புத்தியும் நீங்கும். ஆரோக்கியம், தீர்காயுஸு நல்ல புத்தியும் உண்டாகும் எங்கிறது.
இதையே தான் வட இந்தியாவில் ஹோலி பண்டிகை என்று கொண்டாடுகிறார்கள்.
காம தஹனம்:- மன் மதனை எரித்த நாள்:- 20-03-2019.
இன்று கரும்பில் ரதியையும், மன்மதனையும் ஆவாஹனம் செய்து பூஜிப்பதால் தம்பதிகளிடையே அன்பும் ஆதரவும் பெருகும்.
மனதினில் எழும் பேராசையும், கோபமும் எல்லா துன்பங்களுக்கும் வித்து. இன்று பார்வதி பரமேஸ்வரனை வணங்கலாம். ஸ்தோத்ரங்கள், பாடல்கள் , 16 உபசார பூஜை செய்யலாம். சிவன் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். ரதி தேவியின் வேண்டு கோளுக்கு இணங்க உடல் உறுப்புகள் இல்லாமல் மன்மதனை உயிர்பித்தார்.