Post by kgopalan90 on Feb 17, 2019 19:51:07 GMT 5.5
விதை தான புண்யாஹவசனம். இதை உங்கள் கணினியில் பத்திரபடுத்தி வைத்து கொண்டால் உங்கள் வருங்கால தலை முறையினருக்கு உதவியாக இருக்குமே.
குழந்தை பிறந்த 11 ம் நாள் செய்ய வேண்டியது. விதை தான புண்யாஹ வசனம்.
மாப்பிள்ளைக்கு மோதிர பணம், வேஷ்டி, புடவை, பருப்பு தேங்காய், மஞ்சள், குங்குமம், புஷ்பம் பழம், பெண் வீட்டார் ஓதி இட வேண்டியது. பெண் வீட்டாருக்கு எதிர் மரியாதை அவரவர் சக்திக்கு தக்கவாறு செய்ய வேண்டியது. பெண்ணுக்கு புடவை மாப்பிள்ளை வீட்டார் வாங்குவது வழக்கம். சக்திக்கு தக்கவாறு சாப்பாடு செய்து வைப்பது நல்லது.
மாப்பிள்ளை வீட்டாரை புண்யாஹ வசனத்திற்கு கூப்பிட வேண்டும். டிபன், காப்பி,சாப்பாடு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
புண்யாஹ வசனம் செய்வதால் தீட்டு போவதுடன் குழந்தைக்கு ஆயுள் வ்ருத்தி அடைகிறது. எல்லோருக்கும் நன்மையை கொடுக்கிறது. ஜாத கர்மா, நாமகரணம் புண்யாவசனத் தன்றே செய்வது வழக்கமும், சாஸ்திரமும். விதை தானம், சின்னவர், பெரியவர், ஆண், பெண் எல்லோருக்கும் கொடுக்கலாம். நெல்லுடன் ஒரு ரூபாய் நாணயமும் போட்டு கொடுக்க வேண்டும்.
விதை தானத்திற்கு நெல்லும், வைதீக செலவும், மாப்பிள்ளை வீட்டாரை சார்ந்தது வழக்கம்.
5 ஆம் நாள் அல்லது 7ம் நாள் குழந்தைக்கு காப்பு போடுவது வழக்கம்.
அன்று மாலை/ இரவு தொட்டில் போட நல்ல வேளை பார்த்து குழந்தையை தொட்டிலில் போட்டு தொட்டிலின் கீழ் நெல் பரப்பி அதில் பெரியோர்களால் பெயர் எழுத வேண்டியது. குழந்தைக்கு அத்தை காப்பு இடுவது வழக்கம். சுபர் பார்த்த லக்னத்தில், 8ஆம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். ராகு காலம் யம கண்டம் இல்லாத வேளையில் தொட்டிலில் குழந்தயை இட வேண்டும்.
பெண்டுகளை அழைத்து தாலாட்டு முதலியவை பாடச்செய்து சந்தனம், மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுப்பது வழக்கம்.
தேவையான சாமான்கள்:- மஞ்சள் பொடி 50 கிராம், குங்குமம் 50 கிராம், சந்தனம் 50 கிராம், தேங்காய்-2; வெற்றிலை-50; பாக்கு-50 கிராம்; அல்லது சீவல் 50 கிராம்; வாழை பழம்-12; தொடுத்த புஷ்பம் 4 முழம்; வாழை இலை-2; பச்சரிசி-1 கிலோ; மாவிலை கொத்து-2; பித்தளை சொம்பு-1; தாம்பாளம்-2; மணி1;ஊதுபத்தி 1 பாக்கெட்; கற்பூரம் 1 பாக்கெட்; கற்பூரகரண்டி1, உதிரிப்பூ-100 கிராம்; வாசனை சுண்ணாம்பு- பாட்டில்.ஆரத்தி எடுக்க தாம்பாளம், ஆரத்தி கரைசல்.
தீபம்-1; தீபத்திற்கு நல்ல எண்ணை; திரி, தீப்பெட்டி; பஞ்ச பாத்திர உத்திரிணி-1; தடுக்கு அல்லது ஆஸன பலகை1; சக்கரை-1 கிலோ; கற்கண்டு-200கிராம்; தேன் -50 கிராம்; தயிர்-50 கிராம், நெய்-50 கிராம்; நெல் 1 கிலோ.பஞ்ச கவ்யம் செய்ய பசுஞ்சாணம், பசு மூத்திரம், பசு நெய்; பசுந்தயிர், பசும்பால்.ஒவ்வொன்றும் 50 கிராம்.
தனி தனி பாத்திரங்களில் வைக்க வேண்டும்.
வைதீக விவரம்:- அனுக்ஞை=பர்மிஷன்; விக்னேஸ்வர பூஜை; கிரஹ ப்ரீதி; புண்யாஹ வசன ஜப தக்ஷிணை; வாத்தியார் சம்பாவனை. பவமான சூக்தம் நான்கு முறை ஜபிக்க வேண்டும். ஒருவரே நான்கு முறை ஜபிக்கலாம். அல்லது இருவர் இரு முறை ஜபிக்கலாம். இன்னும் மூன்று ப்ராஹ்மணர்கள் வாத்தியார் அழைத்து வந்து ஒரு முறை வீதம் ஜபிக்கலாம். அவரவர் சக்திக்கு தகுந்தவாறு செய்து கொள்ளவும்.
நாந்தி உத்தராங்க நாந்தி புண்யாஹவசனம். ; கடுகு ஹோமத்திற்கு செங்கல் 4; விராட்டி-4; ஹோம குச்சி 2 கட்டு. கடுகு 50 கிராம் தேவை. விசிறி-1; மணல்-1 சட்டி; அல்லது ஹோம குண்டம்-1; நெய் 100 கிராம்.
மற்ற ஸூத்திர காரர்கள் ஜாத கர்மா முதலே நாந்தி செய்கின்றனர்.ஆபஸ்தம்ப ஸூத்திர காரர்கள் நாந்தி செய்வதில்லை.அந்தந்த கர்மாவுக்கு ஏற்பட்ட காலத்தில் அதை அதை செய்தால் தான் பூர்ண பயனுடையதாகும். இந்த கர்மா ஜீவனுக்கு பர லோக ஸாதன மாத்திரமல்ல.
குழந்தைக்கு ஏற்பட க்கூடிய ஸகல அரிஷ்டங்களையும் போக்குகிறது.பாலாரிஷ்டம் வராமல் காக்கும்.துஷ்ட க்ரஹங்கள் அக்குழந்தயை பக்கம் வராமல் காக்கிறது.செய்ய பட்ட ஜாத கர்மாவினால் தந்தையின் தோஷங்களும் , தாயின் கர்பத்தில் ஏற்படக்கூடிய கெடுதல்களும் குழந்தைக்கு ஏற்படாமல் தடுப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.புத்ரன் பிறந்த உடனேயே நக்ஷத்ர வாராதிகள் பாராமல் அவன் முகத்தை பார்த்தால் பிதா, பித்ரு கடனிலிருந்து விடுபடுகிறார்.
மாதே என்ற மந்திரத்தால் குழந்தையை தாய் மடியில் விட வேண்டும். அயம் குமார; என்ற மந்திரத்தால் தாயின் வலது ஸ்தனத்தை குழந்தை தாய் பால் குடிக்க விட வேண்டும். இந்த மந்திரத்தை கூறி விதிப்படி குழந்தைக்கு தாய் பாலூட்டி மற்ற பாக்கியங்களையும் வேண்டுகிறோம். 16 வயதில் உப நயனத்தின் போது ஜாத கர்மா செய்தால் அப்போது எப்படி இந்த மந்திரம் கூறி தாய் பால் அருந்த வைப்பது.
இந்த வேத மந்திரத்தை சொல்லாமல் விட்டு விட வேண்டி இருக்கிறது. மீமாம்ஸ சாஸ்திரம் இது ஓர் அபூர்வ மந்திரம் புண்யம் எங்கிறது.. இதை நாம் சொல்லாமல் இழக்க வேண்டாம். காலத்தில் கர்மாவை செய்து இந்த மந்திரத்தை ஸபல மாக்கி கொள்ள வேண்டும். நாம் காலத்தில் செய்து , நமக்கு ஸ்வாதீன மானவர்களையும் செய்யும் படி தூண்டினால் , அது பிறர்க்கு நிதர்சனமாகும்.