Post by kgopalan90 on Nov 17, 2018 20:01:37 GMT 5.5
பரணி தீபம். 21-11-2018.
இன்று ஒரு வருடத்திற்குள்ள 365 நாட்களுக்கு 365 பஞ்சு திரிகள் செய்து, அதை 6X 30=180 திரிகள், மற்றும் 6X 31=186 திரிகள் என இரண்டாக கட்டி, இந்த 12 கட்டுகளையும்
ஒரு பெரிய மண் அகலில் வைத்து , நெய் விட்டு, விளக்கேற்றி இதில் மஹா விஷ்ணு லக்ஷ்மி தேவியை த்யானம், ஆவாஹனம் செய்து 16 உபசார பூஜை செய்து
ஒரு சாஸ்திரிகளுக்கு வடை, பாயசத்துடன் சாப்பாடு போட்டு, தக்ஷிணை பித்தளை விளக்கில் நெய் விட்டு ஏற்றி ஜ்வாலை உங்கள் பக்கம் இருக்கும்படியாக தாம்பூலம், பழம், புஷ்பத்துடன் தானம் செய்ய வேண்டும்.
இம்மாதிரி கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் செய்யலாம். அல்லது ஒரே நாளில் முப்பது பேருக்கு சாப்பாடு போட்டு 30 விளக்குகள் தானம் செய்யலாம். வசதி இல்லாதவர்கள் ஒரு நாள் மட்டுமும் செய்யலாம்.
22-11-2019 . ஸர்வாலய தீபம். இன்று 1000 திரிகள் கட்டி ஒரு பெரிய மண் அகலில் தீபம் ஏற்றி அதில் உண்ணாமுலையம்மன் ஸமேத அருணா சலேஸ்வரர்
த்யானம், ஆவாஹனம் 16 உபசார பூஜை செய்து ஒரு சாஸ்திரிகளுக்கு சாப்பாடு போட்டு எரியும் பித்தளை விளக்கு தக்ஷினை ,தாம்பூலம், பழம், புஷ்பம் தானம் செய்யலாம்.
22-11-2018 . இன்று மாலை வீட்டில் தீபம் ஏற்றியவுடன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்.
கீடா: பதங்கா: மஶகாஸ்ச வ்ருக்ஷா: ஜலே ஸ்தலே யே விசரந்தி ஜீவா: த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்மபாகின: பவந்தி நித்யம் ஶ்வபசாஹி விப்ரா:
இதன் அர்த்தம்:- இந்த தினத்தில் தண்ணீரிலும், தரையிலும் வாழும் புழு, பூச்சிகள் பறவைகள்,, மரங்கள், மனிதர்கள் ,இந்த தீபத்தை காண நேர்ந்தால் அவர்களுக்கு மறு பிறவி உடனே இல்லை . என் மனதில் உள்ள பேராசை, கோபம், லோபம், மதம், மாத்ஸர்யம் ஆகியவைகள் எரிக்கப்பட்டு ஞான ஒளி ஏற்படவேண்டும்.
சொக்கபானை எரியும் இடங்களுக்கு நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் குங்குலியம் வாங்கி சென்று கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி போடலாமே.
உஜ்ஜ்வல ஜ்யோதிராகாசே தீப்யமானே விபாவஸெள குக்லூம் ப்ரக்ஷிபாம்யத்ர ப்ரீதோ பவ மஹாபலே.