Post by kgopalan90 on Aug 16, 2018 16:34:51 GMT 5.5
thalai avani avittam.
காண்ட ரிஷி ஹோமம்_-
(வேதி) ஹோம குண்டம் அமைக்கும் முறை.:
ஹோமம் செய்ய இருக்கும் இடத்தில் கோலம் போட்டு அதன் மேல் ஹோமகுண்டத்தை வைக்கவும்.ஹோமகுண்டம் இல்லை என்றல் மணலை
சதுரமாக பரப்பி சுற்றிலும் செங்கல்லைக்கொண்டு வேதி அமைத்துக்கொள்ளலாம்.
கிண்ணத்தில் ஜலம் வைத்துக்கொள்ளவும் .இன்னொரு கிண்ணத்தில் அக்ஷதை எடுத்து வைத்துக்கொள்ளவும்
.
நுனி தர்பை அடங்கிய கட்டு ஒன்றை வலது பக்கத்தில் வைத்துக்கொள்ளவும்.
ஹோம குண்டத்தின் அடி பாகத்தில் தர்பை கட்டின் அடி பாகத்தால் அல்லது ஹோம குச்சியினால் மேற்கிலிருந்து கிழக்கு திசையை நோக்கியவாறு
முதலில் தெற்கிலும், இரண்டாவது நடு பாகத்திலும் மூன்றாவதாக வடக்கிலும் என மூன்று கோடுகள் போடவும்.
அதை போலவே தெற்கிலிருந்து வடக்கே முடிவதாக மேற்கு நடு பாகம் கிழக்கு என்ற வரிசையில் மூன்று கோடுகள் போடவும்.
கையில் இருக்கும் தர்பையின் அடி பாகத்தை அல்லது ஹோம குச்சியை வேதியில் வைத்து ஜலத்தால் ப்ரோக்ஷிக்கவும். ஹோம குச்சியை அல்லது தர்பையினடி பாகத்தை தென் மேற்கு மூலையில் போடவும்.
பிறகு ஜலத்தை தொடவும்.. பாக்கி ஜலத்தை கீழே கிழக்கு பாகத்தில் கொட்டிவிடவும்.. ப்ரஹ்மசாரி செய்வதாக இருந்தால் அக்னி குண்டத்திலேயே கற்பூரத்தை கொண்டு அக்னி வளர்த்த வேண்டும்.
கிரஹஸ்தனாக இருந்தால் வீட்டிலுள்ள பெண்மணி பித்தளை தட்டில் அக்னி தணல் கொண்டு வர வேண்டும். அந்த தட்டை கையில் ஏந்தியபடி கிழக்கு திசையில் மேற்கு முகமாக நின்று கொண்டு பூர்புவஸ்ஸுவரோம்
என்று சொல்லி அக்னியை மெதுவாக ப்ரதிஷ்டை செய்யவும். அக்னி கொண்டு வந்த தட்டில் அக்ஷதை, ஜலம் சேர்க்கவும். ஒரு கிண்ணத்தில் ஜலம் நிரப்பி ஹோம குண்டத்தின் கிழக்கே வைக்கவும். அக்னிமித்வா என்று
சொல்லி ஒரு சமித்தை அக்னியில் வைக்கவும். அக்னி ப்ரஜ்வால்ய என்று சொல்லி அக்னியை ஜ்வாலையாக ப்ரகாசிக்கும்படி செய்யவும்.
ஹோம குண்டத்திற்கு கிழக்கு திசையில் வடக்கு நுனியாக 16 தர்பைகளையும், தெற்கே கிழக்கு நுனியாக 16 தர்பைகளையும் மேற்கே வடக்கு நுனியாக 16 தர்பைகளையும் வடக்கே கிழக்கு நுனியாக 16 தர்பைகளை போடவும்.
தர்பைகளை இம்மாதிரி போடுவதற்கு பரிஸ்தரணம் என்று பெயர். கிழக்கு மற்றும் மேற்கு பக்கத்திலிருக்கும் தர்பைகளின் அடி பாகத்தின் மேல் தெற்கு பாகத்திலிருக்கும் தர்பைகள் அமையும் படி போடவும்.மேற்கிலும் தெற்கிலும் உள்ள தர்பைகள் ,
வடக்கே கிழக்கு நுனியாக போடபட்டிருக்கும் பரிஸ்தரண தர்பைகளின் அடியில் அமைய வேண்டும். வடக்கு பரிஸ்தரணத்திற்கு சற்று வடக்கே 12;:12 தர்பைகளை இரண்டு வரிசையில் கிழக்கு நுனியாக நன்றாக பரப்பி போடவும் இதற்கு பாத்ர ஸாதன தர்பைகள்; ப்ரணீதா பாத்ர ஸாதன தர்பைகள் என பெயர்.
. நமக்கு எதிரே , வேதிக்கு மேற்கே 6 தர்பைகளை வடக்கு நுனியாக பரப்பி போடவும். வேதிக்கு தெற்கே ப்ரஹ்மாவிற்காக கிழக்கு நுனியாக 4 தர்பைகளை போடவும்.
பெறிய புரஸ இலை அல்லது பெரிய மரக்கரண்டி =இதற்கு தர்வீ என்று பெயர். நெய் வைக்கும் கிண்ணத்திற்கு =ஆஜ்ய ஸ்தாலி என்று பெயர்.. ப்ரோக்ஷண பாத்திரம்=இதற்கு ப்ரோக்ஷணீம் என்று பெயர்..
ஜல பாத்ரம்= இதற்கு ப்ரணீதா என்று பெயர். சின்ன புரச இலை அல்லது சின்ன மரக்கரண்டி =இதற்கு இதர தர்வீ என்று பெயர்.; இத்மம்=விஷேசமான ஸமித்து எனறு பெயர் .
இந்த ஆறு பொருட்களையும் (தர்வீ, ஆஜ்யஸ்தாலி, ப்ரோக்ஷணீம், ப்ரணீதா, இதர தர்வீ, இத்மம்) வடக்கு பரிஸ்தரணத்திற்கு சற்று வடக்கே பரப்பி வைத்திருக்கும் ((பாத்ர ஸாதன தர்பைகள்)) தர்பைகளின் மேல் மேற்கிலிருந்து வரிசையாக கவிழ்த்து வைக்கவும்.
ஆயாமத தர்பைகள்=ஆறு அங்குலம் அளவில் செய்துகொள்ளப்படும் தர்பைகள்.
இரண்டு ஆயாமத தர்பைகள் எடுத்து பவித்ரம் செய்து அதை கையில் வைத்தபடி கவிழ்த்து வைத்திருக்கும் பொருட்களை .மூன்று தடவை. தொடவும்.
ப்ரோக்ஷணீ பாத்திரத்தை எடுத்து தனக்கு எதிரில் தர்பையின் மேல் வைக்கவும். அந்த பாத்திரத்தில் சிறிது ஜலத்தையும், அக்ஷதையையும் சேர்க்கவும்.
அதன் மேல் ஆயாமத பவித்திரத்தை வடக்கு நுனியாக வைக்கவும். பிறகு இந்த ஆயாமத பவித்திரத்தை இரண்டு கைகளின் கட்டை விரல் மற்றும் மோதிர விரல்களால் மேற்கிலிருந்து கிழக்காக மூன்று தடவை நகர்த்தவும்.
பிறகு வடக்கு பக்கம் கவிழ்த்து வைத்திருக்கும் பாத்திரங்களை நிமிர்த்தவும். ஸமித்து கட்டை அவிழ்த்து வைக்கவும். ஆயாமத பவித்திரத்தினால்
வடக்கில் நிமிர்த்தி வைத்திருக்கும் பொருட்களை மூண்று தடவை ப்ரோக்ஷிக்கவும்.. ப்ரோக்ஷணீ பாத்திரத்தை தெற்கில் வைக்கவும்..
வடக்கிலிருந்து ப்ரணீதா பாத்திரத்தை எடுத்து தன்க்கு எதிறில் தர்பையின் மேல் வைத்துக்கொண்டு அதில் அக்ஷதை ஜலம் சேர்த்து மேற்கிலிருந்து கிழக்கே மூன்று தடவை ஆயாமத பவித்ரத்தால் நகர்த்தவும்.
ப்ரணீதா பாத்ரத்தை தனது மூக்கிற்கு நேராக தூக்கி நிறுத்தி வடக்கே ப்ரணீதா பாத்ரதிற்காக போடப்பட்ட தர்பைகளின் மேல் வைத்து வருணாய நம: சகல ஆராதனை: சுவர்ச்சிதம் என்று கூறி அக்ஷதை போட்டு தர்பைகள் போட்டு வைக்கவும்..
வேதிக்கு வடக்கில் ஒரு இலை போட்டு அதன் மேல் பச்சரிசி பரப்பி அஷ்ட்தள பத்மம் வரயவும்.. அதன் மேல் நூல் சுற்றிய கலசத்தில் ஜலம் நிரப்பி ஏலக்காய், பச்சை கர்பூரப்பொடி போட்டு கீழ் காணும் மந்திரங்களை உச்சரித்தவாறே வைக்கவும்.
ப்ரஹ்ம ஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விசீமத: ஸுருசோ வேனஆவ: ஸ புத்னியா உபமா அஸ்ய விஷ்டா: ஸதஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ:
தர்பைகளால் கலசத்தை தொட்டவாறே பின் வரும் மந்திரங்களை சொல்க.
ஆபோவா இதகும் ஸர்வம் விஸ்வா பூதான்யாபஹ் ப்ராணா வா ஆப:பசவ ஆப: அன்னமாப: .அம்ருத்மாப: ஸம்ராடாப: விராடாப: ஸ்வராடாப: சந்தாகும்ஸீ ஆப: ஜ்யோதிகும்ஷி ஆப: யஜூகும்ஷீ ஆப: ஸத்யமாப: ஸர்வாதேவதா ஆப: பூர்புவஸ்ஸுவ: ஆப ஒம்.
கீழ் வரும் மந்திரங்களில் ப்ரணயதே என்று சொல்லும் போதெல்லாம் உத்தரணியால் ஜலம் எடுத்து கும்பத்தில் விடவும்.
அப: ப்ரணயதி ஸ்ரத்தா வா ஆப: ஸ்ரத்தா-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி, அப: ப்ரணயதி யஜ்ஞோ வா ஆப: யஜ்ஞ-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி வஜ்ரோ வா ஆப: வஜ்ர மேவ ப்ராத்ருவேப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணீய
ப்ரசரதி. அப: ப்ரணயதி ஆபோ வை ரக்ஷோக்நீ:; ரக்ஷஸா –மபஹத்யை; அப: ப்ரணயதி; ஆபோ வை தேவாநாம் ப்ரியந்தாம; தேவாநாமேவ ப்ரியந் தாம ப்ரணிய ப்ரசரதி; அப: ப்ரணயதி; ஆபோ வை ஸர்வா தேவதா: தேவதா
ஏவாரப்ய ப்ரணிய ப்ரசரதி.; அப: ப்ரணயதி; ஆபோ வை சாந்தா: ஷாந்தாபி ரேவாஸ்ய ஷுசகும் ஷமயதி;
இம் மந்திரங்களின் ஒவ்வொரு வார்த்தயின் முடிவிலும் கும்பத்திலுள்ள ஜலத்தை பவித்ரத்தினால் மேற்கிலிருந்து கிழக்காக தள்ளவும்.
தேவோவ:--ஸவிதா---உத்புநாது—அச்சித்ரேண—பவித்ரேண—வஸோ:--ஸூர்யஸ்ய ரஸ்மிபி:
பின் வரும் மந்திரங்களை சொல்லி கும்பத்தில் ரத்தினங்களை போடவும்.
ஸ ஹி ரத்நாநி தாஸுஷே ஸூவாதி ஸவிதா பக: தம் பாகம் சித்ரமீமஹே.
கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்ச்சாக்ரை: ராக்ஷஸான் கோரான் சிந்தி கர்ம விகாதிந: த்வாமர்பயாமி கும்பே அஸ்மின் ஸாபல்யம் குரு கர்மணி;
கும்பத்தில் மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: ஷாகயா: பல்லவத்வச: யுஷ்மாந் கும்பேத் ஸ்வர்ப்பயாமி ஸர்வ தோஷாபநுத்தயே.
கும்பத்தில் தேங்காய் வைக்க;
நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மித; ஷிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாம் ச மே நுத;
தீர்த்த ப்ரார்தனை: ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தாநி ச நதா ஹ்ரதா: ஆயாந்து மம ஸஹ குடும்பஸ்ய// தேவ பூஜார்த்தம்/ துரிதக்ஷய காரகா:
வருண ஆவாஹனம்: இமம்மே வருண: ஷ்ருதி ஹவ மத்யா ச ம்ருடயா; த்வாமவஸ்யு ராசகே. தத்வாயாமி ப்ருஹ்மண வந்தமாநஸ் ததாசாஸ்தே;
யஜமானோ ஹவிர் பி: அஹேட மானோ வருணேஹ போத்த்யுருஷகும்ஸமாந: ஆயு: ப்ரமோஷி: பூர்புவஸுவரோம்.:
அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதிபதிம் வருணம் த்யாயாமி; வருணம் ஆவாஹயாமி;
ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: சஹஸ்ராக்ஷஸ் ஸஹஸ்ர பாத், ஸ பூமிம் விச்வதோ வ்ருத்வா அத்யதிஷ்ட தஸாங்குலம் அஸ்மின் கும்பே வேதவ்யாஸம் ஸ பரிவாரம் த்யாயாமி. வருண ஸஹிதம் வேத வ்யாஸம் ஆவாஹயாமி.
வருண ஸஹிதம் வேத வ்யாஸாய நம: ஆஸனம் ஸமர்பயாமி; பாத்யம் ஸமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமநீயம் சமர்பயாமி; ஸ்நாநம் ஸமர்பயாமி;
ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி; வஸ்த்ரோத்தரீயம் சமர்பயாமி;
உபவீத ஆபரணானி சமர்பயாமி; கந்தாந் தாரயாமி; அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பமாலாம் ஸமர்பயாமி; புஷ்பை: பூஜயாமி;
அர்ச்சனை நாமாவளி: வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுருபிணே நம: அபாம்பதயே நம: மகர வாஹநாய நம: ஜலாதிபதயே நம: பாச ஹஸ்தாய நம: ஓம் தீர்த்த ராஜாய நம: ஓம் பச்சிமாதிபதயே நம: வருணாய நம:
ஓம் கேசவாய நம: ஓம் நாராயணய நம: ஒம் மாதவாய நம; ஒம். கோவிந்தாய நம: ஒம் விஷ்ணவே நம: ஓம் மதுசூதனாய நம:
ஒம். த்ரிவிக்ரமாய நம: ஓம் வாமனாய நம: ஓம் ஶ்ரீதராய நம: ஓம்.ஹ்ருஷீகேசாய நம: ஓம் பத்மநாபாய நம: ஓம். தாமோதராய நம: ஓம் வருண ஸஹித வேத வ்யாஸாய நம:
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி சமர்பயாமி.
தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; நைவேத்யம்: கதலி பலம் நிவேதயாமி. நிவேதநாந்திரம் ஆசமணியம் ஸமர்பயாமி;
பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தலைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதி க்ருஹ்யதாம். கற்பூர தாம்பூலம் ஸமர்பயாமி. கற்பூர நீராஜனம் சமர்பயாமி. ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி.
ஸமஸ்தோபசார பூஜாந் ஸமர்பயாமி; அஸ்மின் அத்யாய உபாகர்ம ஹோம கர்மணி ப்ருஹ்மாணம் த்வாம் வ்ருணே, ப்ருஹ்மணே நம: ஸகல ஆராதனை: ஸுவர்சிதம்.
ஜயாதி ஹோமம் முடிந்த பிறகு கும்பத்தை யதாஸ்தானம் செய்து கும்ப ஜலத்தை அனைவர் மீதும் ப்ரோக்ஷித்து உட்கொள்ள அளிக்கவும்.
ஜபத்தின் நிறைவாக புந: பூஜை; வருண ஸஹித வேத வ்யாஸ மூர்தயே நம: ஆஸனாதி சோடஷோபசாரான் ஸமர்பயாமி. தூபதீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி
. நைவேத்யம் நிவேதயாமி, தாம்பூலம் ஸமர்பயாமி. ( அப்பம்,, சுண்டல், தேங்காய், வெற்றிலை, பாக்கு.வாழைப்பழம் நைவேத்யம் செய்யவும்.)
கற்பூர் நீராஜனம் ஸமர்பயாமி. மந்த்ர புஷ்பம் ஸமர்பயாமி .ஸ்வர்ண புஷ்பம் ஸமர்பயாமி. ஸமஸ்தோபசாரான் ஸமர்பயாமி.
தத்வா யாமி ப்ருஹ்மணா வந்தமாநஸ் ததா சாஸ்தே யஜ மானோ ஹவிர்பிஹி அகேட மானோ வருணேஹ போத்த்யுருசகும் ஸமாந ஆயு:ப்ரமோஷீ:
யஜ்ஞேன யஜ்ஞ-மயஜந்த தேவா: தானி தர்மானி ப்ரதமாந்யாஸன் தேஹ நாகம் மஹிமாநஸ்ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்யா ஸந்தி தேவா: இதை சொல்லி நமஸ்காரம் செய்யவும்.
அஸ்மாத் கும்பாத் ஆவாஹிதம் வேதவ்யாஸம் வருணம் ச யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.
ஷோபநார்தே க்ஷேமாய புநராகமநாய ச கும்பத்தை வடக்கே நகர்த்தவும்.
ப்ராசநம்:
அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம், ஸர்வ பாப க்ஷயகரம்
வருண பாதோதகம் சுபம்..
ஆஜ்ய ஸம்ஸ்காரம்.ஹோமத்திற்காக பயன்படுத்த இருக்கும் நெய்யை சுத்தபடுத்துவதே ஆஜ்ய ஸம்ஸ்காரம் எனப்படுகிறது.
நமக்கு எதிரில் உள்ள தர்பைகளின் மேல் , வடக்கிலிருக்கும் நெய் பாத்திரத்தை வைக்க வெண்டும். நெய் பாத்திரத்தின் மேல் ஆயாமத பவித்ரத்தை வைத்து நெய்யை அக்னியில் காண்பித்து , உருக்கிய பின் அதை நெய் பாத்திரத்தில் ஊற்றவும்.
அக்னியின் வடக்கிலிருந்து மூன்று தணல்களை எடுத்து நமக்கு இடப்புறமாக , பரிஸ்தரணத்திற்கு வெளியில் வைக்கப்பட்ட விராட்டியின் மேல் வைக்கவும். அதன் மேல் நெய் பாத்திரத்தை வைக்கவும்.
ஒரு தர்பையை எடுத்து ஹோம அக்னியில் காண்பிக்கவும். ஜ்வாலையோடு இருக்கும் அந்த தர்பையை நெய் பாத்திரத்தை பிரதக்ஷிணமாக சுற்றி வடக்கில் போடவும்.
இரண்டு தர்பை நுனிகளை கத்தியால் ஒரு அங்குல நீளத்திற்கு வெட்டி ஜலத்தில் நனைத்து நுனி கிழக்காக நெய்யில் போடவும்.
மறுபடியும் ஒரு தர்பையை அக்னியில் காண்பித்து ஜ்வாலையுடன் நெய்யை மூன்று தடவை ப்ரதக்ஷிணமாக சுற்றி வடக்கில் போடவும்.
வரட்டியின் மேல் அக்னி தணலின் மேல் வைத்த நெய் பாத்திரத்தை வடக்கில் இறக்கி வைத்து அந்த அக்னி தணல்கலை ஹோம அக்னி குண்டத்தில் சேர்க்கவும்.
நெய் பாத்திரத்தை நமக்கு எதிரில் உள்ள பரப்பிய தர்பைமேல் வைத்து ஆயாமத பவித்ரத்தை வடக்கு நுனியாக அதில் வைக்கவும்.
இரு கைகளின் கட்டை விரல் மற்றும் மோதிர விரல்களால் ஆயாமத பவித்ரத்தை நுனி வடக்காக பிடித்துக்கொண்டு நெய்யை கிழக்கிலிருந்து மேற்காகவும் மறுபடியும் கிழக்காகவும் ,
இவ்வாறு மூன்று முறை செய்த பிறகு ஆயாமத பவித்ரத்தை முடிச்சை அவிழ்த்து ஜலத்தில் தொட்டு நுனி கிழக்காக அக்னியில் பவித்ரத்தை போடவும்.
மரக்கரண்டிகள் அல்லது காய்ந்த புரச இலைகளை சுத்தப்படுத்துவதே தர்வீ ஸம்ஸ்காரம் எனப்படும்.
இரண்டு தர்வீகளையும் உட்புறமாக அக்னியில் காண்பித்து இடது கையில் வைத்துக்கொள்ளவும். இரண்டு தர்பைகளை வலது கையில் வைத்துக்கொண்டு தர்வியின் உள் புறமும் வெளிப்புறமும் துடைக்கவும்.
மறுபடியும் தர்விகளை அக்னியில் காண்பிக்கவும். மறுபடியும் தர்பைகளால் உட்புறமும் வெளிப்புறமும் துடைக்கவும். தர்விகளை நெய் பாத்திரத்தின் வடக்கே வைத்துவிட்டு துடைத்த தர்பைகளை ஜலத்தில் தொட்டு அக்னியில் வைக்கவும்.
பரிதி வைக்க வேண்டும். அதாவது ஹோம குண்டத்தின் பக்கங்களில் ஸமித்து வைப்பதே பரிதி என்று பெயர். புரஸு ஸமித்தில் நடுவில் தடியாக இருக்கும் ஸமித்தை அக்னியின் மேற்கிலும், நீளமான சமித்தை தெற்கேயும் மெல்லிய குட்டையான ஸமித்தை வடக்கேயும் வைக்க வேண்டும். .
நமக்கு எதிரில் ந்டுவிலுள்ள ஸமித்தை கையால் தொடவும். வேறு இரண்டு ஸமித்து எடுத்து ஒன்றை வேதியின் தென் கிழக்கு மூலையிலும் மற்றொன்றை வட கிழக்கு மூலையிலும் அக்னிக்கு அருகில் சொருகவும். இது ஆகார ஸமித்தாகும்.
அக்னி பரிசேஷனம்.: அக்னிக்கு தெற்கில் மேற்கிலிருந்து கிழக்காக அதிதேனு மந்யஸ்வ என்று சொல்லிவலது கை யில் ஜலத்தை விட்டு கட்டை விரல் மேல் நோக்கிய வாறு சுண்டு விரல் அடி வழியாக ஜலம் வேதிக்கு பக்கங்களில் விடவும். ஏற்கில் தெற்கிலிருந்து வடக்காக
அனுமதே அனுமந்யஸ்வ என்றும், வடக்கில் மேற்கிலிருந்து கிழக்காக ஸரஸ்வதே அனுமந்யஸ்வ என்று சொல்லியும் ஜலம் பரிசேஷனம் செய்யவும்.
பிறகு வடகிழக்கு மூலையில் ஆரம்பித்து ப்ரதக்ஷிணமாக மறுபடியும் வடகிழக்கு மூலையில் முடியுமாறு தேவ ஸவித: ப்ரஸுவ:என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும்.
இத்ம தானம்: ஸமித்து கட்டுக்கு இத்மம் என்று பெயர். வடக்கே வைத்த சமித்து கட்டை எடுத்து சுற்றிய கட்டை அவிழ்த்து நெய்யால் இரு தடவை அபிகாரம் செய்து (நெய் கீழே வழியாதவாறு) “அஸ்மின் உபாகர்ம ஹோம கர்மணி ப்ரஹ்மன் இத்ம மாதாஸ்யே என்று
சொல்லி சாஸ்த்ரிகளை பார்த்து அல்லது தர்ப்பை கூர்ச்சத்தில் ப்ருஹ்மாவை ஆவாஹனம் செய்திருந்தால் அந்த ப்ருஹ்ம கூர்ச்சத்தை பார்த்து அக்னியில் வைக்கவும். இத்மத்தை நெய் பாத்ரத்திற்குள் முக்காதீர்கள்.
இதற்கு ப்ருஹ்மா ஒம் ஆதாத்ஸ்வ என்று ப்ரதி வசனம் சொல்ல வேண்டும்.
சொன்ன பிறகு இத்மத்தை அக்னியில் வைக்க வேண்டும்.
சின்ன இலையினால் நெய் எடுத்து வடமேற்கு மூலையிலிருந்து தென் கிழக்கு மூலை வரையிலும் ப்ரஜாபதியை மனதில் நினைத்து நெய்யை தாரையாக ஹோமாக்னியில் விட வேண்டும். பிறகு ப்ரஜாபதயே இதம் ந மம என்று சொல்ல வேண்டும்.
பிறகு பெரிய இலையினால் நெய் எடுத்து தென் மேற்கு மூலையிலிருந்து வட கிழக்கு மூலை வரை தாரையாக விடவும். இந்த்ராய இதம் ந மம என்று சொல்லவும்.
மறுபடியும் பெரிய தர்வீ யினால் அக்னயே ஸ்வாஹா என்று சொல்லிய படியே நெய்யை அக்னியில் வலப்புறமாக விட்டு அக்னயே இதம் ந மம என்று சொல்லவும்.
பிறகு தெற்கு பாகத்தில் ஸோமாய ஸ்வாஹா என்று சொல்லிய படியே நெய் ஊற்றவும். ஸோமாய இதம் ந மம.என்று சொல்லவும்.
மத்தியில் அக்னயே ஸ்வாஹா என்று ஜபித்தவாரே நெய்யை வலப்புறமாக ஹோமத்தில் விட்டு அக்னயே இதம் ந மம என்று சொல்லவும்.
பிராயசித்த ஹோமம். : பிறகு ஆரம்ப ப்ரப்ருதி ஏதத் க்ஷண பர்யந்தம் மத்யே ஸம்பாவிதே ஸமஸ்த தோஷ ப்ராயஸ்சித்தார்த்தம் ஸர்வ
ப்ராயஸ்சித்த ஆஹூதிம் ஹோஷ்யாமி---ஓம் பூர்புவஸுவஸ் ஸ்வாஹா.என்று கூறி ஹோமம் செய்யவும். ப்ரஜாபதயே இதம் ந மம என்று சொல்லவும்.
இதற்கு மேல் அவரவர் ஸம்ப்ரதாயதிற்கு ஏற்றார் போல் ஹோமம் செய்யவும்.
இங்கு முதல் ஆவணி அவிட்ட ப்ருஹ்மசாரிகள் சாஸ்த்ரிகள் அருகில் உட்கார்ந்து தர்பையினால் அவரை தொட்டவாறே மந்திரங்களை சொல்லவும்.
கீழ் வரும் ஒவ்வொரு மந்திரத்திலும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு நெய் விடவும்
ப்ரஜாபதயே காண்டரிஷயே ஸ்வாஹா---ப்ரஜாபதயே காண்டரிஷயே இதம் ந மம.
ஸோமாய காண்டரிஷயே ஸ்வாஹா ஸோமாய காண்டரிஷயே ந மம.
அக்னயே காண்டரிஷயே ஸ்வாஹா—அக்னயே காண்டரிஷய இதம் ந மம
விச்வேப்யோ தேவேப்ய:காண்டரிஷிப்ய:ஸ்வாஹா—விச்வேப்யோ தேவேப்ய: காண்டரிஷிப்ய: இதம் ந மம
ஸாம்ஹிதிப்யோ தேவதாப்ய: உபநிஷத்ப்ய:ஸ்வாஹா--. ஸாம்ஹிதீப்யோ தேவதாப்ய: உபநிஷத்ப்ய: இதம் ந மம
யாஜ்ஞிகீப்யோ தேவதாப்ய: உபநிஷத்ப்ய: ஸ்வாஹா---யாஜ்ஞிகீப்யோ தேவதாப்ய: உபநிஷத்ப்ய: இதம் ந மம.
வாருணீப்யோ தேவதாப்ய: உபநிஷத்ப்ய: ஸ்வாஹா---வாருணீப்யோ தேவதாப்ய; உபநிஷத்ப்ய: இதம் நமம
ப்ரஹ்மணே ஸ்வயம்புவே ஸ்வாஹா; .—ப்ருஹ்மணே ஸ்வயம்புவே ந மம
ஸதஸஸ்பதிம் அத்புதம் ப்ரியம் இந்த்ரஸ்ய காம்யம் ஸநி மேதாம் ஆயாஸிஷம் ஸ்வாஹா---ஸதஸஸ்பதய இதம் ந மம
ஹோம குண்டம் அருகில் தர்வீயை வைக்கவும்..
தலை ஆவணி அவிட்டகாரர்கள் மட்டும் சங்கல்பம் செய்ய வேண்டும்.
மற்றவர்கள் மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்தம் அத்யாயோபக்ரம கர்மணி வேதாரம்பம் கரிஷ்யே என்று சொல்லவும்.
தலை ஆவணி அவிட்ட குழந்தைகள் மமோபாத்த ஸமஸ்த துரித்யக்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் அத்யாயோபக்ரம கர்மணி ததங்கம் க்ரகப்ரீதி தாநம், ஆப்யுதயிகம், ஹிரண்யரூபேன ச கரிஷ்யே ததங்கம் புண்யாகாவாசனம் ச கரிஷ்யே. அப உப ஸ்ப்ருச்ய.. .
க்ரஹப்ரீதி:------ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயஸ்சமே.------------நக்ஷத்ரே---------ராஸெள----------ஜாதஸ்ய ------------சர்மண: அஸ்ய குமாரஸ்ய
வேதாரம்ப முஹூர்த்த லக்னாபேக்ஷயா ஆதித்யானாம் நவாநாம் க்ரஹானாம் ஆனுகூல்ய ஸித்தியர்த்தம் ஆதித்யாதி நவகிரஹ தேவதா ப்ரீதிம் காம்யமான: இதம் ஹிரண்யம் ப்ராஹ்மணேப்ய: ஸம்ப்ரத்தே ந மம.
நாந்தி----------ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ அனந்த புன்ய பலதம் அத:சாந்திம் ப்ரயஸ்சமே. இதம் ஆக்னேயம் ஹிரண்யம் --------நக்ஷத்ரே ---------ராஸெள ஜாதஸ்ய அஸ்ய குமாரஸ்ய ப்ரதமோபா கர்மாங்க பூதே அஸ்மின் அப்யுதயே ஸத்யவஸு –ஸம்ஜ்ஞக விச்வதேவ, விஷ்ணு ஸஹிதாம் யே யே விஹிதா: நாந்தி முகா: பிதர: தேஷாம் தேஷாம் த்ருப்தியர்த்தம் யத்தேயமன்னம் தத் ப்ரதிநிதி இதம் ஆக்னேயம் ஹிரண்யம்
ஸ தக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஸத்யவஸு ஸம்ஜ்ஞகானாம் விஷ்வேஷாம் தேவானாம் விஷ்ணு ஸஹித வர்கத்வய பித்ரு ப்ரீதிம் காம்யமான: ப்ராஹ்மணேப்ய: ஸம்ப்ரத்தே ந மம.
எனறு சொல்லி தக்ஷிணையில் சிறிதளவு ஜலம் விட்டு பூமியில் விடவும். பிறகு சாஸ்த்ரிகளுக்கு கொடுக்கவும்.
ஸ்வாமின: மயா ஹிரண்ய ரூபேன க்ருதம் அப்யுதயம் ஸம்பன்னம் . வைதீகர்கள் ஸு ஸம்பன்னம் என்று சொல்வார்கள்.
இடா தே வஹூ: மனு: யஜ்ஞ்நீ: ப்ரஹஸ்பதி: உக்தாமதானி சகும்ஸிஷத் – விஸ்வேதேவா: ஸூக்த வாச: ப்ருத்வீமாத: மாமாஹிகும்ஸீ: மது மனிஷ்யே –மதுஜனிஷ்யே- மதுவக்ஷயாமி, மதூவதிஷ்யாமி-மதுமதீம்-தேவேப்ய:
வாசமுத்யாசம் சிச்ரூஷேண்யாம் மனுஷ்யேப்ய: தம் மா தேவா: அவந்து –சோபாயே பிதரோனுமதந்து. இட ஏஹி, அதித ஏஹி, ஸரஸ்வத்யேஹி, சோபனம், சோபனம், மனஸ்சமாதீயதாம் ( ஸமாஹிதமனஸஸ்ம
ப்ரஸீதந்து பவந்த: ப்ரஸந்நாஸ்ம; ஶ்ரீரஸ்த்விதி பவந்தோ ப்ருவந்து, புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து அஸ்துஶ்ரீ: பெரியவர்களின் அக்ஷதையை ஏற்றுக்கொள்ளவும்.
புண்யாஹ வாசனம்.
இப்போது வாத்யார் சங்கல்பம் செய்து கொண்டு புண்யாஹவாசனம் செய்து கொள்ள வேண்டும். ஆசார்யார் செய்ய வேண்டிய ஸங்கல்பம்.
சுக்லாம்பரதரம் +++=விக்னோபஸாந்த்தயே. ப்ராணாயாமம்.. மமோபாத்த ஸமஸ்த ======ப்ரீத்யர்த்தம் அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ---------சுப திதெள யஜமானேன ஸங்கல்பித
, க்ருஹ சுத்யர்த்தம், ஆத்ம சுத்யர்த்தம் ஸர்வ த்ரவ்ய உபகரண சுத்யர்த்தம் ஸ்வஸ்தி புண்யாஹ வாசணஞ் ச கரிஷ்யே. ( அப உபஸ்ப்ருஸ்ய).)
ஸ்தண்டிலத்தின் மீது அருகம் புல், தர்ப்பம் பரப்பி, சந்தன நீர் தெளித்து புஷ்பங்களை தூவி, கும்பத்தை அமர்த்தும் போது ஜபிக்கவே\ண்டிய மந்த்ரம்.
ப்ருஹ்மஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விசீமதஸ் ஸுருசோ வேண ஆவ: ஸபுத்நீ யா உபமா அஸ்ய விஷ்டா: சதஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ;
கும்பத்தின் மேல் குறுக்காக . வடக்கு முனையாக ஒரு ஆயாமத்தை வைக்கவும். ஆயாமத்தை வைக்கும் போது ஜபிக்க வேண்டிய மந்த்ரம். காயத்ரி மந்த்ரம்.
கும்பத்துள் நீர் நிரப்பி , பின் வரும் மந்திரங்களை ஜபிக்கவும்.
ஆபோ வா இதகும் ஸர்வம் விஷ்வா பூதான்யாபஹ் ப்ராணா வா ஆப: பசவ ஆபோ அந்நமாபோ அம்ருதமாபஸ் ஸம்ராடாபோ விராடாபஸ் ஸ்வராடாபச் சந்தாஸ்யாபோ ஜ்யோதிஷ்யாபோ யஜூஷ்யாபஸ், ஸத்ய மாபஸ்-ஸர்வா தேவதா ஆபோ பூர்புவஸ்ஸுவ ராப ஓம்.
அப: ப்ரணயதி ஸ்ரத்தா வா ஆப: ஸ்ரத்தா-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி, அப: ப்ரணயதி யஜ்ஞோ வா ஆப: யஜ்ஞ-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி வஜ்ரோ வா ஆப: வஜ்ர மேவ ப்ராத்ருவேப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணீய
ப்ரசரதி. அப: ப்ரணயதி ஆபோ வை ரக்ஷோக்நீ:; ரக்ஷஸா –மபஹத்யை; அப: ப்ரணயதி; ஆபோ வை தேவாநாம் ப்ரியந்தாம; தேவாநாமேவ ப்ரியந் தாம ப்ரணிய ப்ரசரதி; அப: ப்ரணயதி; ஆபோ வை ஸர்வா தேவதா: தேவதா
ஏவாரப்ய ப்ரணிய ப்ரசரதி.; அப: ப்ரணயதி; ஆபோ வை சாந்தா: ஷாந்தாபிரேவாஸ்ய ஷுசகும் ஷமயதி;
பின் வரும் மந்திரத்தை மூன்று முறை சொல்லி சுத்தி செய்க.
தேவோ வஸ்ஸவி தோத்புநாத் வச்சித்ரேண பவித்ரேண வஸோஸ்-ஸூர்யஸ்ய ரஷ்மிபி:
பின் வரும் மந்திரங்களை சொல்லி கும்பத்தில் ரத்தினங்களை போடவும்.
ஸ ஹி ரத்நாநி தாஸுஷே ஸூவாதி ஸவிதா பக: தம் பாகம் சித்ரமீமஹே.
கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்ச்சாக்ரை: ராக்ஷஸான் கோரான் சிந்தி கர்ம விகாதிந: த்வாமர்பயாமி கும்பே அஸ்மின் ஸாபல்யம் குரு கர்மணி;
கும்பத்தில் மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: ஷாகயா: பல்லவத்வச: யுஷ்மாந் கும்பேத் ஸ்வர்ப்பயாமி ஸர்வ தோஷாபநுத்தயே.
கும்பத்தில் தேங்காய் வைக்க;
நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மித; ஷிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாம் ச மே நுத;
தீர்த்த ப்ரார்தனை: ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தாநி ச நத ஹ்ரதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:
வருண ஆவாஹனம்: இமம்மே வருண: ஷ்ருதி ஹவ மத்யா ச ம்ருடயா; த்வாமவஸ்யு ராசகே. தத்வாயாமி ப்ருஹ்மண வந்தமாநஸ் ததாசாஸ்தே;
யஜமானோ ஹவிர் பி: அஹேட மானோ வருணேஹ போத்த்யுருஷகும்ஸமாந: ஆயு: ப்ரமோஷி: பூர்புவஸுவரோம்.:
அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதிபதிம் வருணம் த்யாயாமி; வருணம் ஆவாஹயாமி; வருணாய நம: ஆஸனம் ஸமர்பயாமி; பாத்யம் ஸமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமநீயம் சமர்பயாமி; ஸ்நாநம் ஸமர்பயாமி;
ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி; வஸ்த்ரோத்தரீயம் சமர்பயாமி;
உபவீத ஆபரணானி சமர்பயாமி; கந்தாந் தாரயாமி; அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பமாலாம் ஸமர்பயாமி; புஷ்பை: பூஜயாமி;
அர்ச்சனை நாமாவளி: வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுருபிணே நம: அபாம்பதயே நம: மகர வாஹநாய நம: ஜலாதிபதயே நம: பாஷ ஹஸ்தாய நம: வருணாய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி.
தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; நைவேத்யம்: கதலி பலம் நிவேதயாமி. நிவேதநாந்திரம் ஆசமணியம் ஸமர்பயாமி;
பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீதலைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் ஸமர்பயாமி.
ஸமஸ்தோபசார பூஜாந் ஸமர்பயாமி;
ஜபம் செய்ய உள்ளவர்களை நோக்கி ப்ரார்தனை.: அஸ்மிந் புண்யாஹவாசண ஜப கர்மணி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம: அக்ஷதை போடவும்.
கையில் தர்ப்பையுடன் , ஜபத்திற்கு அநுமதி கேட்டல்.
ஓம் பவத்பி: அநுஜ்ஞாத: புண்யாஹம் வாசயிஷ்யே. (ப்ரதி வசனம்: ஓம் வாச்யதாம்). கர்மண: புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து. ( புண்யாஹம் கர்மணோஸ்து). ஸர்வ உப்கரண ஷுத்தி கர்மணே மண்டபாதி ஷுத்தி
கர்மணே ச ஸ்வஸ்தி பவந்தோ ப்ருவந்து: ( கர்மணே ஸ்வஸ்தி) ருத்திம்
பவந்தோ ப்ருவந்து; ( கர்ம ருத்யதாம்) ருத்தி: ஸன்ருத்திரஸ்து; புண்யாஹாம் ஸம்ருத்திரஸ்து; ஷிவம் கர்மாஸ்து. ப்ரஜாபதி: ப்ரீயதாம். . ஷாந்திரஸ்து;
புஷ்டிரஸ்து; துஷ்டிரஸ்து; ருத்திரஸ்து; அவிக்னமஸ்து; ஆயுஷ்யமஸ்து; ஆரோக்யமஸ்து; தந தான்ய ஸம்ருத்திரஸ்து; கோ ப்ராஹ்மணேப்ய: ஸுபம் பவது; ஈஷாந்யாம் பஹிர்தேஸே அரிஷ்ட நிரஸ நமஸ்து; ஆக்நேய்யாம்
யத்பாபம் தத்ப்ரதிஹதமஸ்து; ஸர்வா: ஸம்பத: ஸந்து ஸர்வ ஷோபனமஸ்து; ஓம் ஷாந்தி:ஷாந்தி: ஷாந்தி:
ஜபம் தொடங்க ப்ரார்தனை: ததிக்ராவிண்ணோ அகாரிஷம் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜின: ஸுரபி நோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷி தாரிஷத்.
ஆபோ ஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்ஷசே யோவஷ் சிவதமோ ரஸஸ் தஸ்ய பாஜயதேஹந;: உசதீரிவ மாதர: தஸ்மா அரங்கமாம வோ யஸ் யக்ஷயாய ஜிந்வத: ஆபோ ஜநயதா ச ந:
ஜபம்: பவமாந ஸூக்தம். நான்கு பேர் ஒரு முறை. சொல்ல வேண்டும். அல்லது இரண்டு பேர் இரு தடவைகள் அல்லது ஒருவர் நான்கு முறை சொல்ல வேண்டும்.
ஜபத்தின் நிறைவாக புந: பூஜை; வருணாய நம: ஸகல ஆராதனை: ஸுவர்ச்சிதம். பின் வரும் மந்திரங்களை கூறி வருணனை யதாஸ்தானம் செய்க.
தத்வா யாமி ப்ருஹ்மணா வந்தமாநஸ் ததா சாஸ்தே யஜ மானோ ஹவிர்பிஹி அகேட மானோ வருணேஹ போத்த்யுருசகும் ஸமாந ஆயு:ப்ரமோஷீ:
ஷோபநார்தே க்ஷேமாய புநராகமநாய ச கும்பத்தை வடக்கே நகர்த்தவும்.
ப்ராசனம்:
அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம், ஸர்வ பாப க்ஷயகரம்
வருண பாதோதகம் சுபம்..
ஜயாதி ஹோமம்
ஏதத் கர்ம ஸம்ருத்யர்த்தம் ஜயாதி ஹோமம் கரிஷ்யே.
சித்தம் ச ஸ்வாஹா, சித்தாயேதம் ந மம.
சித்திச் ச ஸ்வாஹா, சித்யா இதம் ந மம.
ஆகூதம் ச ஸ்வாஹா, ஆகூதாயேதம் ந மம.
ஆகூதிஸ் ச ஸ்வாஹா, ஆகூத்யா இதம் ந மம.
விஜ்ஞாதம் ச ஸ்வாஹா, விஜ்ஞாதாயேதம் ந மம.
விஜ்ஞானம் ச ஸ்வாஹா விஜ்ஞானாயேதம் ந மம.
மநஸ் ச ஸ்வாஹா, மநஸ இதம் ந மம.
சக்வரீச் ச ஸ்வாஹா, சக்வ்ரீப்ய இதம் ந மம.
தர்ச ச் ச ஸ்வாஹா தர்சாயேதம் ந மம.
பூர்ணமாஸஸ் ச ஸ்வாஹா, பூர்ணமாசாயேதம் ந மம
ப்ருஹஸ் ச ஸ்வாஹா, ப்ருஹத இதம் ந மம.
ரதந்தரம் ச ஸ்வாஹா, ரதந்தராயேதம் ந மம
ப்ரஜாபதி: ஜயாநிந்தராய வ்ருஷ்ணே ப்ராயச்சதுக்ர: ப்ருத நாஜ்யேஷூ தஸ்மை விச: ஸமநமந்த ஸர்வாஸ்ஸ : உக்ர: ஸ ஹி ஹவ்யோ பபூவ ஸ்வாஹா. ப்ரஜாபதயே இதம் ந மம.
அக்நிர்பூதாநாம் –அதிபதி:-ஸமாவது-அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, அக்னய இதம் ந மம
இந்த்ரோஜ்யேஷ்ட்டாநாம் – அதிபதி:-ஸமாவது-- அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, இந்த்ராயேதம் ந மம.
யம:ப்ருதிவ்யா:-அதிபதி: ஸமாவது- அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, யமாயேதம் ந மம
வாயுரந்தரிக்ஷஸ்ய அதிபதி;-ஸமாவது- அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா,-வாயவ இதம் ந மம
ஸூர்யோ திவ: அதிபதி:-ஸமாவது- அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா,
ஸூர்யாய இதம் ந மம அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, சந்த்ரமஸ இதம் ந மம
ப்ருஹஸ்பதி: ப்ரஹ்மண: அதிபதி: ஸமாவது- அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, ப்ருஹஸ்பதய இதம் ந மம
மித்ர: ஸத்யாநாம்- அதிபதி: ஸமாவது அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா,, மித்ராய இதம் ந மம
வரூணோபாம் –அதிபதி: ஸமாவது- அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயம் அஸ்மின் கர்மன் அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, வருணாய இதம் ந மம
ஸமுத்ரஸ்த்ரோத்யாநாம் –அதிபதி: ஸமாவது அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, ஸமுத்ராய இதம் ந மம
அந்நம் –ஸாம்ராஜ்யாநாம் அதிபதி: தந்மாவது அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, அந்நாய இதம் ந மம
ஸோம ஓஷதீநாம் –அதிபதி:-ஸமாவது அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, ஸோமாய இதம் ந மம.
ஸவிதாப்ரஸவானாம் –அதிபதி; ஸமாவது அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, ஸவித்ர இதம் ந மம.
ருத்ரபசுநாம்-அதிபதி: ஸமாவது அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம்
ருத்ரபசுநாம்-அதிபதி: ஸமாவது அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, ருத்ராய இதம் ந மம ஜலத்தை தொடவும்.
த்வஷ்டா ரூபானாம் –அதிபதி: ஸமாவது அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, த்வஷ்ட்ர இதம் ந மம
விஷ்ணு:பர்வதாநாம் அதிபதி: ஸமாவது அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, விஷ்ணவ இதம் ந மம
மருதோ கணாநாம்-அதிபத்ய:-தேமாவந்து .அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, மருத்ப்ய: இதம் ந மம
பிதர: பிதாமஹா:-பரேவரே-ததா: ததாமஹா: இஹமாவத: அஸ்மிந் ப்ரஹ்மன் அஸ்மின் க்ஷத்ரே-அஸ்யாமாசிஷி-அஸ்யாம் புரோதாயம் அஸ்மின் கர்மந் –அஸ்யாம் தேவஹூத்யாம்-ஸ்வாஹா, பித்ருப்ய இதம் ந மம ஜலத்தை தொடவும்.
ருதாஷாட்-ருததாமா –அக்னிர் கந்தர்வ: தஸ்யோஷதய:-அப்ஸரஸ: -ஊர்ஜோ-நாம ஸ இதம் ப்ருஹ்மக்ஷத்ரம்-பாது தா இதம் ப்ருஹ்மக்ஷத்ரம்-பாந்து தஸ்மை ஸ்வாஹா,
அக்நயே கந்தர்வாய இதம் ந மம தாப்யஸ் ஸ்வாஹா ஓஷதீப்ய: அப்ஸரோப்ய: இதம் ந மம
சகும்ஹிதோ விச்வஸாமா –ஸூர்யோ கந்தர்வ: தஸ்ய மரீசய: -அப்ஸரஸ: ஆயுவோ நாம-ஸ இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம் பாது தா இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம் பாந்து தஸ்மை ஸ்வாஹா.ஸூர்யாய கந்தர்வாய இதம் ந மம தாப்யஸ் ஸ்வாஹா மரீசிப்ய: அப்ஸரோப்ய: இதம் ந மம.
ஸுஷும்ந: ஸூர்யரஷ்மி:சந்த்ரமா கந்தர்வ: -தஸ்ய நக்ஷத்ராணி அப்ஸரஸ: பேகுரயோ நாம ஸ இதம் ப்ர்ஹ்ம க்ஷத்ரம்- பாது தா இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம் –பாந்து
தஸ்மை ஸ்வாஹா:சந்த்ரமஸே கந்தர்வாய இதம் ந மம தாப்யஸ் ஸ்வாஹா நக்ஷத்ரேப்ய: அப்ஸரோப்ய: இதம் ந மம
புஜ்யு: ஸுபர்ண: யஜ்ஞோ கந்தர்வ: தஸ்ய தக்ஷிணா: அப்சரஸ: ஸ்தவா நாம –ஸ இதம் ப்ரஹ்ம க்ஷத்ரம் பாது தா இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம் பாந்து தஸ்மை ஸ்வாஹா,
யஜ்ஞாய கந்தர்வாய இதம் ந மம தாப்யஸ் ஸ்வாஹா; தக்ஷிணாப்ய: அப்ஸரோப்ய: இதம் ந மம
ப்ரஜாபதிர்விசுவகர்மா-மநோ கந்தர்வ:-தஸ்ய-ரிக் ஸாமானி அப்சரஸ: வஹ்னயோ நாம ஸ இதம் ப்ரஹ்மக்ஷத்ரம் –பாது தா இதம் ப்ருஹ்மக்ஷத்ரம் பாந்து தஸ்மை ஸ்வாஹா .மநஸே கந்தர்வாய இதம் ந மம.
தாப்யஸ்ஸுவாஹா. , ரிக் சாமேப்யஹ அப்சரோப்ய: இதம் ந மம
இஷிர: விச்வவ்யஸா:- வாதோ கந்தர்வ:-தஸ்யாப: அப்ஸரஸ: -முதா நாம- ஸ- இதம் ப்ருஹ்மக்ஷத்ரம் பாது தா இதம் ப்ருஹ்மக்ஷத்ரம்,
பாந்து தஸ்மை ஸ்வாஹா வாதாய கந்தர்வாய இதம் ந மம. தாப்ய: ஸ்வாஹா. அத்ப்ய: அப்ஸரோப்ய: இதம் ந மம.
புவநஸ்யபதே –யஸ்யதே –உபரிக்ருஹா: இஹ ச ஸநோராஸ்வ அஜ்யானி-ராயஸ்போஷம்-ஸுவீர்யம் ஸம்வத்ஸரீணாம் கும்ஸ் ஸ்வஸ்திம்
புவநஸ்யபதே –யஸ்யதே –உபரிக்ருஹா: இஹ ச ஸநோராஸ்வ அஜ்யானி-ராயஸ்போஷம்-ஸுவீர்யம் ஸம்வத்ஸரீணாம் கும்ஸ் ஸ்வஸ்திம்
ஸ்வாஹா,.பூவனஸ்ய பத்ய இதம் ந மம
பரமஷ்டீ அதிபதி ம்ருத்யுர்கந்தர்வ: தஸ்ய விஸ்வம்-அப்ஸரஸ: -புவோநாம-ஸ இதம் ப்ரஹ்மக்ஷத்ரம்-பாது தா இதம் ப்ருஹ்மக்ஷத்ரம்பாந்து தஸ்மை ஸ்வாஹா.ம்ருத்யவே கந்தர்வாய இதம்ந மம. தாப்ய: ஸ்வாஹா. : விச்வஸ்மை அப்ஸரோப்ய: இதம் ந மம.
ஸூக்ஷிதி: ஸூபூதி: பத்ரக்ருத்-ஸுவர்வாந்-பர்ஜந்யோ கந்தர்வ:-தஸ்ய வித்யுத: -அப்ஸரஸ: ருசோநாம ஸ இதம் ப்ருஹ்ம: க்ஷத்ரம்-பாது- தா இதம் ப்ருஹ்ம
க்ஷத்ரம் பாந்து தஸ்மை ஸ்வாஹா. பர்ஜந்யாய கந்தர்வாய இதம் ந மம தாப்ய: ஸ்வாஹா. வித்யுத்ப்யோ அப்ஸரோப்ய: இதம் ந மம..
தூரேஹேதி: அம்ருட்ய: ம்ருத்யுர்கந்தர்வ:-தஸ்ய-ப்ரஜா- அப்ஸரஸ: பீருவோ நாம –ஸ இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம்—பாது தா இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம் பாந்து
தஸ்மை ஸ்வாஹா. ப்ருத்யவே கந்தர்வாய இதம் ந மம தாப்யஸ்வாஹா ப்ரஜாப்ய: அப்ஸரோப்ய: இதம் ந மம
சாரு: க்ருபண்காசீ-காமோகந்தர்வ: தஸ்யாதய: அப்ஸரஸ: சோசயந்தீர்நாம – ஸ இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம் பாது தா இதம் ப்ருஹ்ம க்ஷத்ரம் பாந்து
தஸ்மை ஸ்வாஹா. காமாய கந்தர்வாய இதம் ந மம. தாப்ய: ஸ்வாஹா ஆதிப்ய: அப்ஸரோப்ய: இதம் ந மம
ஸ ந: -புவநஸ்ய பதே-யஸ்யதே –உபரி-க்ருஹா: இஹ ச உருப்ருஹ்மணேஅஸ்மை –க்ஷத்ராய –மஹி-சர்ம:-யச்சஸ்வாஹா, புவநஸ்ய பத்யே இதம் ந மம.:
ப்ரஜாபதே-நத்வத்-ஏதானிஅந்யோர்விச்வா-ஜாதானி- பரிதாப பூவ-யத்காமாஸ்தே –ஜுஹும- தன்னோ அஸ்து வயகும்ஸ்யாம பதயோ ரயீணாம் ஸ்வாஹா; ப்ரஜாபதய இதம் ந மம.
பூஸ்வாஹா: அக்னயே இதம் ந மம புவஸ்வாஹா, வாயவ இதம் ந மம, ஸுவஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம.
யதஸ்ய- கர்மண: -அத்யரீரிசம்-யத்வாந்யூநம்-இஹாகரம்-அக்னிஷ்டத்-ஸ்விஷ்டக்ருத்-வித்வாந்- ஸர்வகும் ஸ்விஷ்டம் ஸுஹ்ருதம்-கரோது ஸ்வாஹா, அக்னயே ஸ்விஷ்டக்ருத இதம் ந மம.
பிறகு வடக்கு, தெற்கு, மேற்கு பக்கங்களில் வைக்கப்பட்டுள்ள ஸமித்துகளின் மேல் பெரிய தர்வீயினால் ஒவ்வொரு சொட்டு நெய் விடவும்.
ஸமித்துகளின் நுனி, மத்தி அடி பக்கம் துடைப்பது போல் பாவனை செய்யவும். மேற்கிலுள்ள சமித்தை அக்னியில் வைக்கவும். வடக்கு, தெற்கிலுள்ள சமித்துகளை சேர்த்து அக்னியில் வைக்கவும்.
இரண்டு இலைகளால் நெய்யை எடுத்து ஹோமத்தில் விடவும். பிறகு அஸ்மின் ஹோம கர்மணி அவிஜ்ஞாத ப்ராயஸ்சித்த ஹோமம் கரிஷ்யே.
ஸ்வாஹா என்னும் போது ஹோமம் செய்யவும்.
ததஸ்ய கல்பய –த்வகும்ஹி வேத்த யதாததம் ஸ்வாஹா.அக்னய இதம் ந மம
யத் பாகத்ரா மநஸா தீநதக்ஷாந-யஜ்ஞஸ்ய-மந்வதே-மர்தாஸ: அக்நிஷ்டத்தோதா-ருதுவித்விஜானன்-யஜிஷ்டோ தேவாந்ருதுசோய ஜாதி ஸ்வாஹா அக்னய இதம் ந மம
பூஸ்ஸ்வாஹா, அக்னய இதம் ந மம புவஸ்ஸுவாஹா வாயவ இதம் ந மம, ஸுவஸ்ஸ்வாஹா ஸூர்யாய இதம் ந மம ஓம் பூர்புவஸ்ஸுவஸ் ஸ்வாஹா ப்ரஜாபதய இதம் ந மம
அஸ்மின் அத்யாயோபக்ரம ஹோம கர்மணி மத்யே ஸம்பாவித ஸமஸ்த தோஷ ப்ராயஸ்சித்தார்த்தம் ஸர்வ ப்ராயஸ்சித்த ஹோமம் ஹோஷ்யாமி
ஓம் பூர்புவஸ் ஸுவஸ் ஸ்வா ஹா ப்ரஜாபதயே இதம் ந மம .ஶ்ரீவிஷ்ணவேஸ்வாஹா விஷ்ணவே பரமாத்மணே இதம் ந மம
நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா, ருத்ராய பசுபதயே இதம் ந மம
ஜலத்தை தொடவும்.
இரண்டு தர்வீகளையும் சேர்த்து வைத்துக்கொண்டு கீழேயுள்ள மந்திரம் சொல்லவும்.
ஸப்ததே அக்னே சமித; சப்தஜிஹ்வா: ஸப்தரிஷய: சப்த தாம ப்ரியாணி- ஸப்த ஹோத்ரா: ஸப்த்தாத்வா-யஜந்தி- ஸப்தயோனீ: ஆப்ருணஸ்வ க்ருதே ந ஸ்வாஹா. அக்னயே சப்தபத இதம் ந மம.
நெய் பாத்திரத்தை வடக்கே வைக்கவும். ஜலத்தில் கை அலம்பவும். ப்ராணாயாமம் செய்யவும். ஹோம குண்டத்தின் தெற்கு பக்கத்தில் ஜலத்தால் பரிசேஷணம் செய்யவும்.
அதிதே அந்வமகும்ஸ்தா. மேற்கில் அனுமதே அன்வமகும்ஸ்தா வடக்கில் ஸரஸ்வதே அந்வமகும்ஸ்தா வடகிழக்கில் ஆரப்ம்பித்து வட கிழக்கில் முடிக்கவும் தேவ ஸவித: ப்ராஸாவீ:
வடக்கில் இருக்கும் ப்ரணீதா பாத்ரத்தை பார்த்து வருணாய நம: ஸகல ஆராதனை: ஸுவர்சிதம். என்று சொல்லி அக்ஷதை போட்டு அதை எடுத்து நமக்கு எதிரே வைத்துக்கொண்டு , அதில் சிறிது ஜலமும் அக்ஷதையும் சேர்க்கவும்.
பாத்திரத்தை இடது கையால் பிடித்துக்கொண்டு வலது கையால்
அந்த பாத்திரத்தின் கிழக்கு, தெற்க்கு; மேற்கு.வடக்கு பக்கங்களில் இரண்டு தடவை பூமியில் அந்த பாத்திரத்திலிருந்து ஜலம் விடவும்
.பிறகு அந்த பாத்திரதிலேயே இரண்டு தடவை ஜலம் உயரே எடுத்து அதிலேயே விடவும். .அந்த பாத்திர ஜலத்தை கிழக்கு பக்கமாக பூமியில் விடவும். பூமியில் விட்ட ஜலத்தை எடுத்து எல்லோருக்கும் ப்ரோக்ஷிக்கவும்.
அவப்ருத ஸ்நானம் என்று இதற்கு பெயர்.
ப்ரஹ்மன் வரம் தே ததாமி ப்ரஹ்மணே நம: ஸகலஆராதனை: சுவர்சிதம்.. கூர்சத்தை அவிழ்த்து போடவும் அல்லது வைதீகருக்கு தக்ஷிணை கொடுக்கவும்.
பிறகு கும்பத்திற்கு புனர் பூஜை செய்யவும். .
27-08-2018. காயத்ரி ஜபம்.